முன் குறிப்பு: நான் கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் வித்தகன் இல்லை. ஏதோ எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ள எழுந்த அவாவே இந்தப் பதிவு. வரவேற்பைப் பொறுத்து தொடர்வேன்.
கிரிக்கெட் - “பதினோரு முட்டாள்கள் விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்” - ஜார்ஜ் பெர்னாட் ஷா சொன்ன பொன்மொழி.
கிரிக்கெட் ஒரு டீம் கேம். ஒரு ஆள் தப்பு செஞ்சிட்டாக்கூட அத்தனை பேரோட உழைப்பும் வீணாப் போயிரும் (நன்றி நர்சிம்).
கிரிக்கெட்ல நிறைய தெரியாத, அறியாத விசயம் இருக்கு. நிறைய விசயங்கள்ல அறிவியலும் இருக்கு.
பவுலிங் - பந்துவீச்சு
ஃபீல்டிங் செய்யும் அணியின் முக்கியமான ஆயுதம் பந்து வீச்சு. பந்து வீச்சு சரியில்லைன்னா பேட்ஸ்மேனோட உழைப்பு வேஸ்டாப் போயிரும்.
பவுலிங்க்ல fast, medium fast, spin - வேகம், மித வேகம், சுழல் - அப்பிடின்னு மூணு வகை சொல்லலாம். வேகத்துலயும் மித வேகத்துலயும் ஸ்விங்க் (swing) அப்பிடின்னு ஒரு வித்தை இருக்கு. அதைப் பத்தி கொஞ்சம் பாப்போம்.
காத்துலயே பந்தை திரும்ப வைக்கிறது தான் ஸ்விங்க். பேட்ஸ்மேன் பந்து நேரா வரும்னு நினைச்சிட்டு இருக்கும்போது பந்து அப்பிடியே காத்துல ஸ்விங்க் ஆகி அவரை விட்டு விலகிப் போச்சின்னா - அதுக்குப் பேரு அவுட்ஸ்விங்.
உதாரணத்துக்கு இந்த வீடியோ பாருங்க
இஷாந்த் சர்மா பாண்டிங்குக்கு போட்ட அவுட்ஸ்விங்க். பந்து நேரா வரும்னு பாண்டிங்க் எதிர்பாத்து இருக்க, அது லேசா வெளிய போனதால பேட்டோட எட்ஜ்ல பட்டு ராகுல் ட்ராவிட் கைல கேட்சாப் போயிருச்சி.
அதே மாதிரி வெளிய போகும் இல்ல நேரா வரும்னு நெனச்சிக்கிட்டு இருக்கும் போது பந்து திடீர்னு உள்ள திரும்பிச்சின்னா அதுக்குப் பேரு இன்ஸ்விங். அதுக்கு உதாரணமா இந்த வீடியோவப் பாருங்க
அதே இஷாந்த் அதே பாண்டிங். இந்தத் தடவை இன்ஸ்விங். க்ளீன் போல்டு. இது மாதிரி ரெண்டு விதமான ஸ்விங்கையும் கலந்து வீசுறது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.
சரி பந்து எப்பிடி ஸ்விங்க் ஆகுது? நீங்க கிரிக்கெட் விளையாட்டுல பாத்துருப்பீங்க. பந்தை விடாம பேண்ட்ல தேச்சிட்டே இருப்பாங்க. நல்லா கவனிச்சிருந்தீங்கன்னா, ஒரு பக்கத்தை மட்டும் தான் தேய்ப்பாங்க. இன்னொரு பக்கத்தை தேய்க்க மாட்டாங்க. அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. அதைப் பாக்குறதுக்கு முன்னால பெர்னோலீ விளைவு பத்திப் பாப்போம்.
பெர்னோலி தியரம் என்ன சொல்லுதுன்னா - அதிக ஒட்டுந்தன்மை இல்லாத (low-viscous) பாய்மத்தின் (FLUID) வேகம் அதிகரிக்கும்போது அதன் அழுத்தம் குறையும்.
இதை சுலபமா விளக்கணும்னா, ஒரு ப்ளாஸ்டிக் பாட்டில் எடுத்துக்கிட்டு அதோட அடிப்பக்கத்தை வெட்டி எடுத்துருங்க. அதுக்குள்ள இப்ப ஒரு டேபிள் டென்னிஸ் பந்தைப் போட்டுக்குங்க.
இப்ப மேல இருக்குற படத்துல இருக்குற மாதிரி வச்சிக்கிட்டு கீழ இருந்து ஊதி அந்தப் பந்தை வெளிய தள்ள முயற்சி பண்ணுங்க. முடியாது. நீங்க வேகமா ஊத ஊத பந்து பாட்டிலோட ஒட்டிக்கும்.
இந்த விளைவின் காரணமாகத்தான் விமானம் பறக்கிறது, பறவைகள் பறக்கின்றன, புயலின் போது வீட்டுக் கூரைகள் அடித்துச் செல்லப்படுகின்றன.
இதே தத்துவத்தில் தான் பந்தும் ஸ்விங்க் ஆகுதுன்னு சொன்னா ஆச்சரியமா இருக்கா?
நான் முதல்லயே சொன்ன மாதிரி ஒரு பக்கம் பளபளப்பாவும் (shining) இன்னொரு பக்கம் பளபளப்பு மங்கியும் இருக்கும். இந்தப் பந்து நேரா வீசும் போது பளபளப்பான பக்கம் காத்து வழுக்கிட்டு போறதால வேகமாவும், சொரசொரப்பான பக்கத்துல காத்தோட வேகம் கொஞ்சம் மட்டுப்பட்டும் இருக்கும். இதால, பளபளப்பான பக்கத்துல அழுத்தம் குறைஞ்சிடும். இந்தப் பக்கம் அழுத்தம் அதிகமா இருக்கிறதால, காத்து அழுத்தம் அதிகமான இடத்துல இருந்து அழுத்தம் குறைஞ்ச இடத்துக்கு போக முயற்சி பண்ணும். அந்த முயற்சில பந்தையும் இழுத்துக்கிட்டு போயிடும்.
அதுனால அவுட் ஸ்விங்க் போடணும்னா பளபளப்பான பக்கம் வலது பக்கமும், இன்ஸ்விங்க் போடணும்னா பளபளப்பான பக்கம் இடது பக்கமும் இருக்கணும்.
சுலபமா எழுதிட்டேன். ஆனா பந்து வீசுறது சுலபம் இல்லை. அதோட சரியான இடத்துல பந்தை பிட்ச் செய்யறதும் முக்கியம். இந்தியா மாதிரி ட்ரையான காத்து இருக்குற ஊருல பந்து அவ்வளவா ஸ்விங் ஆகாது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மாதிரி க்ளைமேட்ல பந்து நல்லா ஸ்விங்க் ஆகும்.
அதோட பந்து பளபளப்பா இருக்கணும் அப்பிடிங்கிறதும் முக்கியம்ங்கறதால பந்து புதுசா இருக்கும்போது தான் ஸ்விங்க் நல்லா ஆகும். பழசாக ஆக, பந்தோட ஸ்விங்க் குறைஞ்சிடும். அதுலயும் ஒன் - டே விளையாடுற வெள்ளைப் பந்து சீக்கிரமா பழசாகிடும்.
(இந்தியால முன்னாடி (பிஷன் சிங் பேடி காலத்துல) ஃபாஸ்ட் பவுலர் அவ்வளவா கிடையாது. ஸ்பின் பவுலிங்தான். ஸ்பின் க்வார்டெட் (spin quartet) அப்பிடின்னு - எர்ரபள்ளி பிரசன்னா, வெங்கட்ராகவன் (அம்பயரா நிப்பாரே அவரே தான்), சந்திரசேகர், பிஷன் சிங் பேடி - இவங்க நாலு பேரையும் கூப்பிடுவாங்க. புது பந்துல ஸ்பின் போடுறது கஷ்டம் அப்பிடிங்கிறதால, பந்த தரையில உருட்டி உருட்டி விட்டு வேகமா பழசாக்குவாங்க. கபில்தேவ் வர்ற வரைக்கும் இதுதான் நடந்தது)
பேட்ஸ்மேன் ஸ்விங்க் விளையாடுறதுக்கு பழகிட்டா ஈஸி தான். ஆனா அதுக்கு அந்த பவுலரையும் அவர் பவுலிங்க் போடுற ஸ்டைலையும் நல்லா தெரிஞ்சி வச்சிருக்கணும். அவுட் ஸ்விங் போடும்போது எப்பிடி பந்தை க்ரிப் பண்ணியிருப்பான். இன் ஸ்விங் போடும்போது எப்பிடி க்ரிப் பண்ணியிருப்பான்னு. இன்னைக்கி டெக்னாலஜி ரொம்ப முன்னேறி இருக்கறதால வீடியோ க்ளிப்பிங்க்ஸ் வச்சி புரிஞ்சிக்கிறாங்க.
(ஆனா இந்த வாசிம் அக்ரம் மட்டும் கொஞ்சம் கஷ்டம் தான். அந்த ஆள் பந்து போட வர்ற கடைசி நிமிசம் வரைக்கும் வலது கைல தான் பந்தை வச்சிருப்பாரு. பந்து வீச கைய சுத்துர முன்னாடி இடது கைக்கு மாத்திக்கிட்டு வீசுவாரு)
சரி பந்து பழசாயிட்டா அப்போ ஸ்பின் பவுலிங் மட்டும் தான் ஒரே வழியான்னா. இல்லை. அப்பவும் ஒரு ஸ்விங்க் ஸ்டைல் இருக்கு. அதுதான் ரிவர்ஸ் ஸ்விங்க்.
ரிவர்ஸ் ஸ்விங்கை கண்டு பிடிச்சது நம்ம பங்காளி பாகிஸ்தான்காரங்க. சர்ஃப்ராஸ் நவாஸும், சிக்கந்தர் பக்த்தும். இவங்க இம்ரான் கானுக்கு சொல்லிக் குடுத்துட்டுப் போனாங்க. அதை அவர் வாசிம் அக்ரமுக்கும் வக்கார் யூனுஸுக்கும் சொல்லிக் குடுத்தார். ரொம்ப நாள் இது ஒரு ப்ளாக் மேஜிக் மாதிரியே இருந்து வந்திச்சி. இப்ப கிட்டத்தட்ட எல்லாரும் ரிவர்ஸ் ஸ்விங் பண்றாங்க. அதிலயும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி க்ளைமேட்ல ரிவர்ஸ் ஸ்விங் நல்லாவே வரும்.
ரிவர்ஸ் ஸ்விங் உதாரணத்துக்கு இந்த வீடியோ பாருங்க.
வக்கார் யூனுஸ், பேட்டிங் ஜாம்பவான் லாராவையே திணறித் தண்ணி குடிக்க வைக்கிறார் பாருங்க.
(ரொம்ப வருசம் பாகிஸ்தான் காரங்க பந்த சிதைச்சி - tamper - த்தான் ரிவர்ஸ் ஸ்விங் போடுறாங்கன்னு குத்தம் சொல்லிட்டு இருந்தாங்க. இங்கிலாந்து ஒரு படி மேல போய் ரிவர்ஸ் ஸ்விங்கைத் தடை பண்ணனும்னெல்லாம் சொன்னாங்க. கடைசியில 2005ல அதே ரிவர்ஸ் ஸ்விங்க் வச்சித்தான் ஆஸ்திரேலியாவை ஆஷஸ் தொடர்ல ஜெயிச்சாங்க)
சரி ரிவர்ஸ் ஸ்விங் எப்பிடி ஆகுது? பேட்டால அடிக்கப்பட்ட பந்து லேசா வடிவம் இழந்து (ரொம்ப இழந்தா பந்தை மாத்திருவாங்க) ஒருபக்கம் ஹெவியா இருக்கும். அதோட சீம் (பந்துக்கு நடுவுல இருக்குற தையல்) மேல வர ஆரம்பிச்சிருக்கும். பந்தை சீம் ஒரு சாய்வா இருக்கிற மாதிரி பிடிச்சுப் போட்டா, காத்து அந்த சீம்ல பட்டு வேகம் மட்டுப் பட்டுடும். அதே பெர்னோலி தியர அடிப்படையில பந்து காத்துல நகர ஆரம்பிக்கும்.
இந்த ஸ்டைல் ஸ்விங்க் விளையாடுறது பேட்ஸ்மேனுக்கு கொஞ்சம் கஷ்டம்.ஏன்?
ரிவர்ஸ் ஸ்விங்ல முதல்ல பந்து இன்ஸ்விங்க் ஆகுறது மாதிரி உள்ள திரும்பி அடுத்து அப்பிடியே வெளிய திரும்பிடும் (பெக்காம் அடிக்கிற ஃப்ரீ கிக் மாதிரி). இன்ஸ்விங்க்னு நினைச்சி ஆடப் போன பேட்ஸ்மேன் கேட்ச் அவுட் ஆகிடுவான். அல்லது அவுட் ஸ்விங்க் மாதிரி போய் இன்ஸ்விங்க் ஆகும். வெளிய போயிடும்னு நினைச்ச பந்து உள்ள வந்து அந்த வீடியோல லாரா ஆன மாதிரி ஸ்டம்பத் தட்டிட்டுப் போயிடும். இதுல வக்கார் யூனிஸ் போடுறது டபுள் இன்ஸ்விங்க் ஆகும் - பனானா ஸ்விங்க்னு கூப்பிடுவாங்க. வக்கார் தவிர வேற யார் போட்டும் பாத்ததில்லை.
இந்தப் பதிவுக்கு இது போதும்னு நினைக்கிறேன். இனி இதுக்கு வரவேற்பு நல்லா இருந்தா அடுத்தடுத்து எனக்குத் தெரிஞ்சதைப் பகிர்ந்துக்கிறேன்.
26 comments:
நான் ஆட்டைக்கு வரலை
இந்தப் இடுகையைப் படிச்சிட்டு ஓட்டுப்போடம போறவங்களுக்கு ஓட்டே இல்லாமல் போகக் கடவது
தலைவா...காலை காட்டுங்க... சாஷ்டாங்கமா விழுந்துட்டேன்னு நினைச்சுக்கோங்க...
சூப்பர் மேட்டரு போட்டீங்க... வாக்கர் யூனுஸ், கபில்தேவ்க்கே இவ்வளவு மேட்டரு தெரியுமான்னு தெரில.
நானும் இந்த பால் எப்படி ஏர்ல ஸ்விங் ஆகுதுன்ன பலதடவை யோசிச்சுருக்கேன், இதுல பெர்னோலி தியரி இருக்கிறது இப்பத்தான் தெரியும்... தொடர்ந்து எழுதுங்க...
வாக்குகள் சேர்க்கப்பபட்டன.
/கிரிக்கெட் - “பதினோரு முட்டாள்கள் விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்” - ஜார்ஜ் பெர்னாட் ஷா சொன்ன பொன்மொழி. //
அதான் அண்ணாத்த ஜார்ஜ் பெர்னாட்சா சொலிட்டாருள்ள..... அப்புறம் என்ன கத்துக்க வேண்டி கெடக்கு....... மூடிட்டு போங்க....
சொம்மா நிர்த்துப்பா..
இந்த சுந்தர்னு ஒருத்தன் இன்னிக்கும் ஆட்றான் தெரியுமா??
டெண்டுல்கர்லாம் பிசாத்து..
இங்கிலீஸ் காரன் கண்டி இல்லன்னா இன்னிக்கு அவந்தான் டாப்பு..
ஹிந்தில கேட்டுப்பார்.. சும்மா இன்னாமா சாட் அடிக்கிறான் தெரியுமா??
எப்ப கேளு சுந்தர் சாட்,சுந்தர் சாட்,சுந்தர் சாட்,சுந்தர் சாட்,சுந்தர் சாட்,சுந்தர் சாட்
வரலாறு முக்குயம் இன்னா..
வர்ட்டா..
:))
///இந்தப் இடுகையைப் படிச்சிட்டு ஓட்டுப்போடம போறவங்களுக்கு ஓட்டே இல்லாமல் போகக் கடவது///
ஏங்க... படிக்காமயே ஓட்டு போட்ட எங்களுக்கு என்னங்க சாபம்??! :) :)
--
////எப்ப கேளு சுந்தர் சாட்,சுந்தர் சாட்,சுந்தர் சாட்,சுந்தர் சாட்,சுந்தர் சாட்,சுந்தர் சாட்///
நைனா.. சுந்தரு.. நம்ம தோஸ்திதான்!! ஒர் தபா.. காலை புட்சி கெஞ்சினான்னு... சும்மாங்காட்டி.. 1-2 ட்ரிக்கு சொல்லி கொட்தேன்.
இன்னீக்கு... ‘சுந்தர் ஷாட்’னே சொல்றா அள்வுக்கு அது ஹெல்பிங்கா...!! குட் குட்..!
ம்ம். அடுத்த மேச் எப்ப? அருமை.
I agree. Great Information. Please Continure.
சூப்பர் மேட்டர் பாஸ்.
இனி இதுக்கு வரவேற்பு நல்லா இருந்தா அடுத்தடுத்து எனக்குத் தெரிஞ்சதைப் பகிர்ந்துக்கிறேன்.
............. welcome! welcome! welcome!
தொடர்ந்து எழுதுங்க. வரவேற்கிறோம்.
அய்யா ராஸா பெர்னோலி தியரத்தை ஸ்விங்கோடு சேர்த்து யப்பா சூப்பரு அருமையா சொல்லியிருக்கீங்க இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன்...
கிரிக்கெட்ட வச்சி எப்பிடி சூதாடுறதுன்னு சொல்லி குடுங்க பாஸூ...எதுனா பொழப்புக்கு ஆகும்...
ஏதோ ஒரு தொடர் எழுதினீங்களே, அது அம்போவா
அத எப்படி பொறுமையா உட்காந்து பாக்கன்னும் சொல்லித் தந்தீங்கன்னா உபயோகமா இருக்கும் :)
Good one.. continue
அருமையான துவக்கம். தொடருங்க நண்பரே.... http://thanacitycricket.blogspot.com
@நசரேயன் - வரலைன்னா விடுவோமா?
@சுரேஷ் - நன்றி டாக்டர் சார் :)
@நாஞ்சில் பிரதாப் - நன்றி :)
@வில்லன் - தி.கு.ஜ.மு.க வுல பதவி கிடைக்கலைன்னு வயித்தெரிச்சல் படாதீங்க வில்லன்
@ஷங்கர் - ரெம்ப நாளா ஆடுறாம்போலக்கீதே? ஆமா அண்ணாத்த இந்த இங்கிலிபீசுல கமெண்டரி குடுக்குற கசுமாலமெல்லா ஏன் இவம்ப்பேர சொல்றதே இல்ல?
@ஹாலிவுட் பாலா - முதல்லயே நெனச்சேன் தல.. நீ கத்துக் குடுக்காம எப்பிடி பேரு வாங்க மிடியும்? அக்காங்க்..
@வானம்பாடிகள் - கூடிய விரைவில் சார்
@அனானி - நன்றி
@க.இராமசாமி - நன்றி பாஸ்
@சித்ரா - நன்றியக்கா
@வசந்த் - நன்றி வசந்த்
@அது சரி - போற போக்குல அதையும் தொட்டுட்டுப் போவோம்..
@எல் போர்டு - கிரிக்கெட் ஃபார் டம்மீஸ்னு ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான்
@ராஜலக்ஷ்மி பக்கிரிசாமி - நன்றி
@விஎஸ்பி - நன்றி..
//சின்ன அம்மிணி said...
ஏதோ ஒரு தொடர் எழுதினீங்களே, அது அம்போவா
//
அது இண்ட்ரஸ்டிங்கா இல்லையோன்னு நெனச்சி தொடரலை. இப்போ கேட்டுட்டிங்கள்ல, தொடர்ந்துட வேண்டியதுதான்.. :))
very gud post
very useful
thans
karurkirukkan.blogspot.com
தல
செம ஆரம்பம் தல..தொடருங்கள்..
நானும் நெல்லை 28 ல் ஓரு மெம்பர்.... கொஞ்சம் டார்ட்டாய்ஸ் சுத்துன மாதிரி இருந்திச்சி....
:)
arumai.. please continue
நானும் இந்த பால் எப்படி ஏர்ல ஸ்விங் ஆகுதுன்ன பலதடவை யோசிச்சுருக்கேன், இதுல பெர்னோலி தியரி இருக்கிறது இப்பத்தான் தெரியும்...
///////
அமாங்க
நல்லது தொடர்க
அப்படியே அடிச்சு ஆடுங்க... :))
Friend,
The second ball by ishant sharma was not inswing....it was off cutt or off turn
good..good..keep going.
கலக்கல்... தொடர்ந்து எழுதுங்க பாஸ்
Post a Comment