வீட்டுல இருக்குற பேனசானிக் கார்ட்லெஸ் ஃபோன் வாங்கி ரொம்ப நாளாயிடுச்சி. அது பல்லக் காட்ட ஆரம்பிச்சிருச்சி. சரி இப்போ தான் DECT 6.0ன்னு புது டெக்னாலஜியெல்லாம் வந்திருக்கே, ஒன்ன வாங்கிப் போட்றலாம்னு முடிவு செஞ்சோம். வழக்கமா எந்த மாடல் வாங்குறது அப்பிடிங்கிறத ஆராய்ஞ்சி முடிவு செய்யறது நம்ம கடமை. அந்த மாடல் ஃபோனை எங்க சீப்பா வாங்குறது அப்பிடிங்கிறத முடிவு செய்யறது நிதிஅமைச்சர் கடமை.
நானும் பல சைட்டுல தேடி கடைசியா ஒரு மாடல தங்கமணிக்கிட்ட குடுத்துட்டேன். அவங்க பங்குக்கு தேடி ஆஃபிஸ் மேக்ஸ்ல எதோ ஆஃபர் போட்டிருக்கான்னு சொன்னாங்க. சரி, அத வாங்கிப் போட்டுடலாம்னு ரெண்டரை பேரும் ஆஃபிஸ் மேக்ஸ் போனோம்.
அங்க போனா எங்க நேரம் அந்த மாடல் ஸ்டாக் இல்ல. என்ன பண்றது இப்போ அப்பிடின்னு நொந்துக்கிட்டு கிளம்பலாமா அப்பிடின்னு தங்கமணிகிட்ட கேட்டேன். அவங்க, “ஒரு நிமிசம் இரு” அப்பிடின்னு சொல்லிட்டு நேரா அந்த சேல்ஸ் கேர்ள் கிட்ட போயி
“ஐ டோண்ட் சீ திஸ் மாடல் இன் ஸ்டாக். கேன் ஐ ஹாவ் எ ரெயின் செக்?” அப்பிடின்னு கேட்டாங்க.
“ஓ. வீ ஆர் வெரி சாரி அபவ்ட் தட். ஷ்யூர். யூ கேன் ஹாவ் ஒன்” அப்பிடின்னு சொல்லிட்டு ஒரு பேப்பர் எடுத்து சர சரன்னு மாடல் பேரு ஆஃபர் போட்ட விலை எல்லாத்தயும் நோட் பண்ணி குடுத்தாங்க.
நமக்கு ஒண்ணுமே புரியல. தங்கமணிக்கிட்ட “என்னாது இது?” அப்பிடின்னு கேட்டேன்.
“ரெயின் செக்”
“அது கேட்டுச்சி. அப்பிடின்னா என்ன?”
“ஓ அதுவா. இன்னும் ஆஃபர் இருக்கு, ஆனா ஸ்டாகில்ல இல்லயா? அதுனால ஸ்டாக் வந்ததும் இதே ஆஃபருக்கு வாங்கிக்கலாம்னு சொல்லி குடுக்குறதுக்குப் பேருதான் ரெயின் செக்”
“ச்சே. நல்ல சமாச்சாரமா இருக்கே? நம்ம ஊர்லயெல்லாம் இது இல்லயே. இந்த மாரி நல்ல விசயத்தயெல்லாம் கொண்டு போக மாட்டாய்ங்க. அத விட்டுட்டு லிவிங் டுகெதர் மாதிரி தேவையில்லாத கழிசடையெல்லாம் கொண்டு போவாய்ங்க”
“அப்பிடியெல்லாம் இல்லப்பா. இது ராமாயணக் காலத்துலயே இருந்திருக்கு?”
“என்னது ராமாயணக் காலத்துலயேவா?”
“ஆமா. உனக்குத் தெரியாதா?”
“தெரியாதே. கொஞ்சம் விளக்கமா சொல்லேன்?”
கார் கிட்ட வந்துட்டோம். ஜூனியரை கார் சீட்ல கட்டிட்டு கார் முன்கதவைத் திறந்து டிரைவர் சீட்டுல உக்காந்தேன். தங்கமணி ஜூனியர் பக்கத்துல பின் சீட்டுலயே உக்காந்துக்கிட்டாங்க.
பார்க்கிங்க்ல இருந்து காரை எடுத்து ரோட்டுக்கு வந்து ட்ராஃபிக் இல்லாத அந்த ரோட்டுல 40 மைல் வேகத்துல விட்டேன்.
"சரி கதைய கன்ட்டினியூ பண்ணு"
"எங்க விட்டேன்?"
"இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. கம்பராமாயணத்துல ரெயின் செக்"
"ஓ ஓக்கே. நம்ம ராமனோட அப்பா தசரதன் இருக்காரே, அவருக்கு அந்தப் பேரு எப்பிடி வந்ததுன்னு தெரியுமா?"
"அவங்க அப்பா அம்மா வச்சிருப்பாங்க."
"லொள்ளு பண்ணாத. சொல்றதக் கேளு. முந்தி சம்பராசுரன் அப்பிடின்னு ஒரு அசுரன் இருந்தான்”
“அதாவது ஒரு திராவிடன் அப்பிடித்தான?”
“அப்பிடியும் வச்சிக்கலாம். ஆனா இப்போதைக்கு அசுரன்”
“ஓக்கே. மேல சொல்லு”
“நீ எங்க சொல்ல விடுற. குறுக்க குறுக்கக் கேள்வி கேட்டுக்கிட்டு. அவன் என்ன பண்ணான், தேவர்களோட தலைவன் இந்திரனை தோற்கடிச்சி விரட்டி விட்டுட்டு இந்திரலோகத்தைக் கைப்பத்திக்கிட்டான். இந்திரன் பூலோகத்துக்கு ஓடி வந்து தசரதன் கிட்ட ஹெல்ப் கேட்டான்”
“இந்திரன் ஹெல்ப் கேக்குற அளவுக்கு தசரதன் பெரிய ஆளா?”
“அப்பிடித்தான் போல. தசரதனும் இந்திரனுக்கு ஆதரவா சம்பராசுரனோட போருக்குப் போனார். இந்த சம்பராசுரன் பத்து தேரோட போருக்கு வந்தான். தசரதன் கடுமையான போருக்கப்புறம் அந்த அசுரனை ஜெயிச்சிட்டாரு”
“பரவாயில்லையே”
“என் கதை கேக்குற சுவாரசியத்துல நீ க்ரீன் விழுந்த்ததை கவனிக்காம நிக்கிற பாரு. பின்னாடி வர்றவன் ஹாங்க் பண்றான்”
“அய்யோ சாரி சாரி” கையைத் தூக்கி பின்னால் நின்றிருந்த காருக்கு சாரியை சிக்னலாக் குடுத்துட்டு காரை முன்னாடி விட்டேன்.
“இண்ட்ரஸ்டிங்கா இருக்கு. மேல சொல்லு”
“அப்பிடிப் பத்து தேர் கொண்ட அசுரனை வீழ்த்தினதால தான் தசரதனோட பேரு - தச ரதன் ஆச்சு”
“ஓ. அப்போ அதுக்கு முன்னாடி அவர் பேரு என்ன?”
“எனக்குத் தெரியலை. நீ எப்பிடியும் இதை ப்ளாக்ல எழுததான போற. தெரிஞ்சவங்க யாராவது சொல்வாங்க”
“அதுவும் சரிதான்.”
“இந்த போர்ல, தசரதனோட தேர்ச்சக்கரம் கழண்டு விழுக இருந்தப்போ, கைகய நாட்டு இளவரசி கைகேயி, தன் விரலை தேருக்கு அச்சாணியா குடுத்து தசரதனோட வெற்றிக்குத் துணையா இருந்தா.”
“இரு இரு. கிட்டத்தட்ட கிருஷ்ணன் -சத்யபாமாவுக்கும் இதே மாதிரி ஒரு கதை இருக்குல்ல?”
“ஆமா. வியாசர் ஒருவேளை ராமாயணத்தைப் படிச்சிட்டு அதோட இன்ஸ்பிரேஷன்ல கிருஷ்ணர் கதைய எழுதியிருப்பாரோ என்னவோ எனக்குத் தெரியலை. இப்போதைக்கு நம்ம கதைக்கு வா”
“சரி சரி சொல்லு”
“அப்பிடி தன் வெற்றிக்குத் துணையா இருந்ததுக்காக, அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு தசரதன். அதோட அவளுக்கு ரெண்டு வரத்தையும் குடுத்தாரு”
“ஹ்ம்”
“ஆனா கைகேயி, அப்போதைக்கு அந்த வரத்தை வாங்கிக்காம, ரெயின் - செக் எடுத்துக்கிட்டா. அதே ரெண்டு வரத்தை தான் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய தசரதன் முடிவு செய்யும் போது கேட்டு வாங்கி ராமனை காட்டுக்கு அனுப்பிட்டா”
“அடடா இப்பிடியா விசயம்? அப்போ கம்பராமாயணத்தைப் படிச்சித்தான் இந்த ரெயின் - செக்கை அமெரிக்காக்காரனுங்க கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு சொல்ற?”
“அப்பிடியும் சொல்லலாம். இப்போ தான் வியட்நாம் காலனி படத்தைக் காப்பியடிச்சி அவதார் படம் எடுத்திருக்காரு ஜேம்ஸ் காமரூன் அப்பிடின்னு சொல்லிட்டுத் திரியுறாங்களே?”
அதற்குள் வீடு வந்திருச்சி. ஜூனியரை சீட்டுல இருந்து இறக்கி, வீட்டுக்குள்ள தூக்கிக்கிட்டு போனேன்.
39 comments:
ஹா ஹா.. தங்கமணி போட்டுத் தாக்கறாங்க.. :)
டெக்ட்டோ மன்னோ எதுவும் சார்ஜ் தாங்கல்ப்பா, ரெயின் கேஷ் கெடயாதா?
ஹா ஹா..அப்புறம் அந்த ஆப்பர் இன்னும் இருக்கா? ;)
:)) super
அப்ப ஸ்டெப்னி மாத்தணும்னா ஜாக்கி பெடல் பண்ணும்மான்னு தங்கமணிய கேக்கமாட்டாரு முகிலன்:))
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்
அதாவது ஒரு திராவிடன் அப்பிடித்தான?”//
:) தாங்கல சாமி..!
இன்ட்ரஸ்டிங்கா இருக்கே...
இஃகிஃகி.... முகிலன்...பரவாயில்ல, இப்பிடியெல்லாம் இளவலுக்கு ஊர் சொல்லிக் குடுக்குறீங்க.... சபாசு!
//க.பாலாசி said...
இன்ட்ரஸ்டிங்கா இருக்கே...
//
நல்லதுதானே?
/“அடடா இப்பிடியா விசயம்? அப்போ கம்பராமாயணத்தைப் படிச்சித்தான் இந்த ரெயின் - செக்கை அமெரிக்காக்காரனுங்க கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு சொல்ற?”/
ஆகா..நல்லா கிளம்புறீங்கப்பா! :-))
Superrrrrrrrrrr.........
நல்ல பதிவு.....
:) ஹி ஹி ஹி
yov evanya sonnadhu sambarasuran thravidan nu.......
இண்ட்ரஸ்டிங்கா இருக்கு
“அப்பிடியும் சொல்லலாம். இப்போ தான் வியட்நாம் காலனி படத்தைக் காப்பியடிச்சி அவதார் படம் எடுத்திருக்காரு ஜேம்ஸ் காமரூன் அப்பிடின்னு சொல்லிட்டுத் திரியுறாங்களே?”
......... ok, ok, ok......... சரிதான்.
அருமை.
//“அதாவது ஒரு திராவிடன் அப்பிடித்தான?”
//
ஆவ்வ்வ், திராவிடியாய் இதை கண்ணடிக்கிறேன். இல்லை கண்டனம் செய்கிறேன்.
//எல் போர்ட் said...
ஹா ஹா.. தங்கமணி போட்டுத் தாக்கறாங்க.. :)
//
நீங்க தங்கமணி பேசுறதத்தான சொல்றீங்க? வேற எதயும் பாக்கலயே?
//kudups said...
டெக்ட்டோ மன்னோ எதுவும் சார்ஜ் தாங்கல்ப்பா, ரெயின் கேஷ் கெடயாதா?
//
நான் இன்னமும் பழைய 5.8 GHzதான் யூஸ் பண்றேன்.
//செந்தில் நாதன் said...
ஹா ஹா..அப்புறம் அந்த ஆப்பர் இன்னும் இருக்கா? ;)//
தெரியல பாஸு..
//Vidhoosh said...
:)) super//
நன்றிங்க..
//வானம்பாடிகள் said...
அப்ப ஸ்டெப்னி மாத்தணும்னா ஜாக்கி பெடல் பண்ணும்மான்னு தங்கமணிய கேக்கமாட்டாரு முகிலன்:))//
கேட்டுட்டா மட்டும்? காரை விட்டு கீழ இறங்கி நின்னாலே பெரிய விசயம். :((
//VISA said...
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்
//
டெம்ப்ளேட் பின்னூட்டமா விசா?
//ஷங்கர்.. said...
அதாவது ஒரு திராவிடன் அப்பிடித்தான?”//
:) தாங்கல சாமி..!///
இதுக்கே ஓடுனா எப்புடி?
//க.பாலாசி said...
இன்ட்ரஸ்டிங்கா இருக்கே...//
நன்றி பாலாசி
//பழமைபேசி said...
இஃகிஃகி.... முகிலன்...பரவாயில்ல, இப்பிடியெல்லாம் இளவலுக்கு ஊர் சொல்லிக் குடுக்குறீங்க.... சபாசு!
//க.பாலாசி said...
இன்ட்ரஸ்டிங்கா இருக்கே...
//
நல்லதுதானே?
//
வாங்கண்ணே.. இப்பிடியாவது சொல்லிக்குடுக்கலாமேன்னு.. ஹி ஹி ஹி
//சந்தனமுல்லை said...
/“அடடா இப்பிடியா விசயம்? அப்போ கம்பராமாயணத்தைப் படிச்சித்தான் இந்த ரெயின் - செக்கை அமெரிக்காக்காரனுங்க கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு சொல்ற?”/
ஆகா..நல்லா கிளம்புறீங்கப்பா! :-))
//
ஏதோ நம்மால முடிஞ்சது..
//Sangkavi said...
Superrrrrrrrrrr.........//
தேங்க்ஸ்..
//malar said...
நல்ல பதிவு...//
நன்றி மலர்.
//புலவன் புலிகேசி said...
:) ஹி ஹி ஹி
//
நன்றி புலிகேசி..:)
//Anonymous said...
yov evanya sonnadhu sambarasuran thravidan nu.......//
பதிவை நல்லா படிச்சிப் பாருங்கண்ணே, நாந்தான் சொல்லி இருக்கேன்.
//நசரேயன் said...
இண்ட்ரஸ்டிங்கா இருக்கு
//
அப்பிடிங்களா?
//Chitra said...
“அப்பிடியும் சொல்லலாம். இப்போ தான் வியட்நாம் காலனி படத்தைக் காப்பியடிச்சி அவதார் படம் எடுத்திருக்காரு ஜேம்ஸ் காமரூன் அப்பிடின்னு சொல்லிட்டுத் திரியுறாங்களே?”
......... ok, ok, ok......... சரிதான்.
//
வாங்க சித்ராக்கா..
//சின்ன அம்மிணி said...
அருமை.
//“அதாவது ஒரு திராவிடன் அப்பிடித்தான?”
//
ஆவ்வ்வ், திராவிடியாய் இதை கண்ணடிக்கிறேன். இல்லை கண்டனம் செய்கிறேன்.
//
உங்க கண்ணடிப்பு ச்சீ கண்டனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.. :)
ரெயின்செக்-ஐயும், இராமயணத்தையும் பொருத்தியவிதம் அருமை நண்பரே
அதிலும் தங்கமணியுடன் உரையாடலாக அமைத்தவிதம் சுவாரசியத்தைக் கூட்டியது
வாழ்த்துகள் நண்பரே
//நிகழ்காலத்தில்... said...
ரெயின்செக்-ஐயும், இராமயணத்தையும் பொருத்தியவிதம் அருமை நண்பரே
அதிலும் தங்கமணியுடன் உரையாடலாக அமைத்தவிதம் சுவாரசியத்தைக் கூட்டியது
வாழ்த்துகள் நண்பரே
//
நன்றி நண்பரே..
ரெயின் செக் பற்றி அறிந்தேன். தகவலுக்கு நன்றி. உங்கள் ஊரில் இந்த மாதிரி பல வார்த்தைகள் இருக்கு. அங்க வந்த போது கஷ்டப்பட்டேன். பார்சல், கேஸ் மாதிரி ... பல
தங்கமணிக்கா கொழுத்தி எடுக்கிறாங்க.. என்ன பாஸ் ஆம்பளங்க ரொம்ப பின்னாடி போய்க்கிட்டிருக்கமோ?
பல இடங்களை ரசிச்சேன் ப்ளொக்கில எழுதறப்போ கேட்டுக்க, திராவிடன் , ஜீனியரை கட்டி வைக்கிறது etc..நல்லாருந்திச்சு பாஸ்.. வாழ்த்துக்க்ள.
இது எப்படிங்க ரெயின் செக்?
கைகேயி வரம் கேட்டு தசரதன் stock இல்லைன்னு சொல்லி இருந்தா ஒத்துக்கலாம். இது lay away concept மாதிரி இல்ல இருக்கு....என்னமோ போங்க
Srini
Post a Comment