Saturday, February 20, 2010

வெளிசம் - பாகம் இரண்டு


முதல் பாகம் இங்கே

ப்போதுதான் கவனித்தேன், அவள் வலது கையில் அந்த ஆறாவது விரல். அதிலிருந்த தக்குனியூண்டு நகத்துக்கும் பெயர் சொல்ல இயலா நிறத்தில் ஒரு வர்ணம் பூசி இருந்தாள். அந்த் லிஃப்ட் என்னையும் அவளையும் அப்படியே மேலே பிய்த்துக்கொண்டு போய் விடாதா என்றபடிக்கு அவள் வாசம் என்னை நாய்க்குட்டி ஆக்கி இருந்தது. 

அவள் வாசத்தை என் நுரையீரல் தாங்கிக் கொண்டாலும் என் இதயம் வெடித்துவிடுமே என்பது போல என் இதயத்துடிப்பின் ஓசை என் காதுகளுக்கே தெளிவாகக் கேட்டது. நல்ல வேளை லிஃப்ட் நின்று விட்டது. இன்னும் கொஞ்ச நேரமாகியிருந்தால் ஸ்வா கொலைகாரியாகியிருப்பாள்.

லிஃப்டில் இருந்து வெளியேறி என் பைக் நிறுத்தியிருந்த டூ-வீலர் பகுதியை நோக்கித் திரும்பிய என்னை ஒரு தெரு நாயைப் பார்ப்பது போலப் பார்த்தாள். 

“யூ டோண்ட் ஹாவ் எ கார்?”

“எனக்கு எதிர்க்காத்து முகத்துல அடிக்க பைக்ல வேகமா போறதுதான் பிடிக்கும். அதுனால தான் கார் வாங்கல”

“பட் என்னால இந்த சென்னை வெயில்ல பைக்ல போக முடியாது. வா என் கார்ல போவோம்”

இருவரும் திரும்பி கார் பார்க்கிங் பிரிவு நோக்கி நடந்தோம். 

“ஹேய் ஷான்.. ஹவ் ஆர் யூ மேன்” பரிச்சயமான குரல் கேட்டுத் திரும்பினேன்.

ஷ்ருதி, இரு கைகளையும் ஏசுநாதரைப் போல விரித்து என்னைப் பார்த்து சிரித்தாள்.

“ஹாய் ஷ்ருதி. ஹவ் ஆர் யூ?” என்று அவளின் விரித்த கைகளுக்குள் என்னை சிறை சேர்த்தேன். கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்து - “லாங்க் டைம் நோ சீ”

“யா.”

“ஹூஸ் திஸ். நியூ கேர்ள் ஃப்ரண்ட்?”

“நோ நோ. வீ ஜஸ்ட் மெட். ஷீ இஸ் ஸ்வாதி. ஸ்வாதி, திஸ் இஸ் ஷ்ருதி. மை ஃப்ரண்ட்”

இருவரும் பரஸ்பரம் வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டதும் ஷ்ருதியிடம் இருந்து விடை பெற்று ஸ்வாதியின் ஹோண்டா சிவிக்கில் ஏறினோம். 

இந்த இடத்தில் ஷ்ருதியைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். 

“சுப்பையாத் தேவர் மகனா? அவன் பெண்டுக வந்தாகன்னா அதுக்கு எதிர் திசையிலல்லா ஓடிருவான்”

“எலே சம்முவம் இங்கிட்டு வாலே? என்னா சடங்கான பிள்ள மாரி தலயக் குனிஞ்சிக்கிட்டே போற? ஒன் அயித்த மவதானடே நானு”

இப்பிடி திருநெல்வேலி அருகே அந்தக் குக்கிராமத்தில் சம்முவமாகவும் சென்னையில் S.சண்முக வடிவேலனாகவும் இருந்த என்னை ஷான் ஆக மாற்றியவள் இவளே. என்னுடைய முதல் டீமில் சீனியர் சாஃப்ட்வேர் இஞ்சினியராக இருந்தாள். ஆறே மாதத்தில் வேலையின் என் சின்சியாரிட்டியை மெச்சி ப்ராஜக்ட் மேனேஜரிடம் ஆன் சைட் போக சான்ஸ் தேடிக் கொடுத்தாள்.

என்னுடன் அவளும் நியூ யார்க் வர அங்கே இவளின் இன்னொரு பக்கம் தெரிய வந்தது. ஆன்சைட் கோ-ஆர்டினேட்டராக இருந்த தினேஷும் இவளும் அடித்த கும்மாளங்களில் முதலில் விலகியே இருந்த என்னை ஊக்கப்படுத்தி சேர்த்துக் கொண்டவள் இவளே. கன்னிப் பையனாக இருந்த கழித்துப் பார்த்தவளும் இவளே. எல்லாம் முடிந்ததும் இவளையே திருமணம் செய்ய வேண்டியிருக்குமோ என்று கலங்கிப் போயிருந்தவனை இரண்டே வார்த்தைகளில் இதுவும் கடந்து போகும் என்று உணர வைத்தவளும் இவளே. ஆக இவளுக்கு நான் நிறையவே கடமைப் பட்டிருக்கிறேன்.

உங்களுடன் பேசிக் கொண்டே அருகில் இருந்த தேவதையைக் கவனிக்க மறந்து விட்டேன். அவள் காரின் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்ததைப் பார்க்கும் போது அவள் ஸ்டியரிங்காக இருக்கக் கூடாதா என்று ஏங்கும் அளவுக்கு ஸ்டியரிங்குடன் ஒட்டி உட்கார்ந்து ஓட்டினாள். அவள் முந்தும், அவளை முந்தும் வாகனங்களுக்கு ஏற்ப அவள் உதடுகள் குவிந்து, மலர்ந்து, சிரித்து, புன்னகைத்து பல பாவங்களைக் கொட்டிக் கொண்டே வந்தன. அவள் உதடுகளையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போல நினைத்துக் கொண்டிருக்கும் போது தாஜ் வந்து விட்டது.

இவ்வளவு அருகில் தாஜைக் கட்டிய ஜாம்ஷெட்ஜி டாட்டாவை மனதில் திட்டியபடி காரில் இருந்து இறங்கினேன். காரைச் சுற்றி ஓடிச் சென்று ஸ்வா இறங்கும் முன் அவள் கதவைத் திறந்து பிடித்தேன்.

ஒயிலாக அவள் கையை நீட்டினாள். வலிக்காமல் பிடித்து எழுப்பி கை கோர்த்தபடி ரிசப்ஷன் நோக்கி நடந்தோம்.

இப்படித்தானே நேற்று இரவு பல்லவியின் கை பிடித்து புதுப்பிக்கப்பட்ட மெரினாவில் நடந்தேன்? ஆமாம், இப்போது எதற்கு பல்லவியின் நினைவு வருகிறது எனக்கு? வரத்தானே செய்யும். 

ஏனென்றால் இப்போதைக்கு அவள் என்னுடைய ஒரே காதலி. 

இந்தக் கதையின் அடுத்த பாகம் சிங்கை சிங்கம் பிரபாகரின் வாழ்க்கை வாழ்வதற்கேவில்.

18 comments:

செ.சரவணக்குமார் said...

கதையை அருமையாக நகர்த்திச் செல்கிறீர்கள் முகிலன். ஆட்டம் களை கட்டுகிறது. அடுத்து பிரபாவா, சூப்பரு.

Paleo God said...

கலக்கல் முகிலன்..:) அடுத்தது பிரபா என்ன பண்றார்னு பார்ப்போம்..:)

அடுத்தது ஒரு பரதேசியின் கதை ஆன்மீக தொடர்கதை போடலாமா?? :)

டிஸ்கி: அதேதான்.

Chitra said...

தளம் தளம் விட்டு மாறினாலும், கதை களம் விறுவிறுப்பாக இருக்குது. :-)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இதென்ன தொடற விளையாட்டு நடக்குது இங்க?? :)) அல்லாரும் அவுட் ஆன பின்னாடி சொல்லிவிடுங்க.. வந்து முழு விளையாட்டையும் ரீவைண்ட் பண்ணிப் பாத்துக்கறோம்.

பேரு மாத்தம் சும்மா ஒரு கெட்டப் காகத் தான் :)

vasu balaji said...

mm.next

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நா தட்டிட்டுப் போகலாம்னு...

காதல் கதையா?க்ரைமா?

அன்புடன் அருணா said...

தொடர் தொடர் கதையா?????நல்லாருக்கு!

திவ்யாஹரி said...

//இவ்வளவு அருகில் தாஜைக் கட்டிய ஜாம்ஷெட்ஜி டாட்டாவை மனதில் திட்டியபடி//

நல்லா கொண்டு போறீங்க முகிலன்.. பிரபாகர் இன்னும் எழுதலையே.. எப்போ எழுதுவார்..

பிரபாகர் said...

கலக்கல் முகிலன்! நாளைக்கு நான் போஸ்ட் பண்றேன்...

பிரபாகர்.

க ரா said...

நல்லா போகுது கதை.

நசரேயன் said...

ம்.. அடுத்து ?

வருண் said...

இதென்ன ரிலே கதையா, முகிலன்? :)

வெளிசம்??? வெளிச்சமா? இல்லனா என்ன?

சரி நானே முதல்ப்பகுதியப் பார்க்கிறேன்

வருண் said...

***குறிப்பு : வெளிசம் என்றால் தூண்டில்.***

பாருங்க, இதுகூடத் தெரியாமல் இருக்கு! :-)))

புலவன் புலிகேசி said...

அடக் கொடுமையே சுவரஸ்யமா கொண்டு போயி கதைய ஆளாலுக்கு பந்தாடுறீங்களே...

Unknown said...

@செ.சரவணக்குமார் - நன்றி சரவணக்குமார். தொடருங்கள்

@ஷங்கர் - ஒப்புக்கு கலக்கல்னு சொல்லீட்டிங்க. சாரு ஏற்கனவே எழுதிக்கிட்டு இருக்காரே?

@சித்ரா - வார்த்தை இடம்மாறி இருந்தாலும் புரிஞ்சிக்க முடியுது

@எல் போர்ட் - இப்பிடியே பேசிட்டு இருந்தா அப்புறம் எதாவது தொடர் பதிவுக்கு இழுத்து விட்ருவோம்.
எல் போர்ட்....பீ கேர்ஃபுல் - அப்பிடின்னு மாத்திக்குங்க.

@வானம்பாடிகள் - சேஞ்ச்.

@க.நா.சாந்தி லெட்சுமணன் - காதல் தான் சாந்தி.

@அன்புடன் அருணா - ஆமாங்க. நன்றிங்க.

@திவ்யாஹரி - நன்றி திவ்யா. பிரபா இன்னிக்கு ரிலீஸ் பண்ணிடுவார்

@பிரபாகர் - மெயில் அடிச்சுட்டேன். :)

@க.இராமசாமி - நன்றி இராமசாமி

@நசரேயன் - அடுத்து - பிரபாகர்.

@வருண் - ஆமா வருண் நீங்களே உங்க கேள்விக்கு பதில் கண்டுபிடிச்சிட்டிங்க போல..:)

@புலவன் புலிகேசி - இது சுவாரசியமா இருக்கா இல்லையா. அதுதான் முக்கியம். :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எப்பிடியெப்பிடியெல்லாம் பூச்சாண்டி காட்டுறாங்கடா சாமீ.. :))

Vidhoosh said...

:)) சரி ஓ.கே.

ஜோதிஜி said...

முதலில் வெளிச்சம் நிறைந்த அறைக்கு நுழைந்தது போல் இருக்கும் உங்கள் இடுகைக்கு வாழ்த்துக்கள். படிப்பதற்குண்டான எழுத்துரு, மற்ற எல்லா விதங்களிலும் இத்தனை நாள் நாம் இதை பார்க்காமல் இழந்துள்ளது நிறைய என்று வருத்தம் தந்துள்ளது. வாழ்த்துகள் தோழா.
நியூயார்க் சூழ்நிலையை சற்று விவரிங்களேன்?