பவன் இதை ஆரம்பித்த போதே படித்தேன். நமக்கு மிகவும் பிடித்த விளையாட்டில், மிகவும் பிடித்த விளையாட்டு வீரர்களைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பு என்று நினைத்தேன். நான் பவனுடன் சில முறை கிரிக்கெட் சம்மந்தமான வாதத்தில் ஈடுபட்டதால் எனக்குப் பிடிக்காத பிரிவுகளில் அவருக்குப்பிடித்த இலங்கை வீரர்களைச் சேர்த்துவிடுவேன் என்று நினைத்தாரோ என்னவோ :), அவர் என்னைத் தொடர அழைக்கவில்லை. அவர் அழைத்த ஆட்களுக்கும் எனக்கும் அவ்வளவாக அறிமுகம் இல்லாததால் என்னை யாரும் அழைக்கமாட்டார்கள் என்று (நிஜம்மா) ஏங்கிப் போயிருந்தேன்.
ஆனால் நர்சிம் அழைப்பார் என்பதை சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை. நன்றி நர்சிம். சென்னை வரும்போது உங்களுக்கு ஸ்பெசலாக ஏதாவது வாங்கி வருகிறேன்(சும்மா லுல்லலாயிக்கி).
இத்தொடர்பதிவின் விதிமுறைகள்
1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
*******
1.பிடித்த கிரிக்கெட் வீரர் –
சச்சின் – கிரிக்கெட் கடவுள்
சிறு வயதில் (3 வயதில்) டென்னிஸ் ராக்கெட்டைத்தான் தூக்கிக்கொண்டே சுற்றுவாராம் இவர். பின்னாளில் தான் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் வந்ததாம்.
கபில் தேவ் –இந்திய அணியின் ஒரே உலகக் கோப்பையை பெற்றுத் தந்ததற்காக.
அந்த உலகக்கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய அணியை இவர் 175 அடித்து தூக்கிவிட்ட அந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டி பி.பி.சியின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பதிவு செய்யப்படாமலே போயிற்று.
சனத் ஜெயசூரிய – ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற அணிகளைப் போலப் பார்க்கப்பட்டு வந்த இலங்கை அணியை தனது பேட்டிங்கால் உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்குக் கொண்டு சென்றதற்காக.
இவர் அணியில் பந்து வீச்சாளராக சேர்க்கப் பட்டவர், பின்னால் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு சாதனை பல புரிந்தார்.
2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் –
ஆஸ்திரேலிய அணியின் சீருடையை (டெஸ்ட் போட்டி என்றால் பச்சைத் தொப்பியை) அணிந்திருக்கும் எந்த வீரரும்.
3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் –
அக்ரம் – அக்ரம் கடைசி ஓவர் ஸ்பெசலிஸ்ட் – ஆறு டெலிவரிகளை ஏழு விதங்களில் போடுவதில் வல்லவர் (அதென்ன ஏழு மாதிரி, சில நேரம் வேண்டுமென்றே ஒரு ஒய்ட் போடுவார், அதையும் சேர்த்து)
ஒரு நாள் போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக்குகளும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக்குகளும் எடுத்த ஒரே பவுலர் இவர்தான். அதிலும் இவரது டெஸ்ட் ஹாட்ரிக்குகள் ஒரே (இலங்கை அணிக்கு எதிரான) தொடரில் அடுத்தடுத்து எடுக்கப்பட்டவை.
4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்
மனோஜ் பிரபாகர் – அசாருதீன் ஐந்து ஃபீல்டர்களை ஆஃப் சைடில் நிறுத்தி, ட்ராப் செட் செய்வார். நம்ம அண்ணன் அழகாக பந்தை லெக் சைடில் போடுவார்.
மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக இவர் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டார்.
க்ளென் மெக்ரா - மேற்கிந்தியத் தீவு வீரர் சர்வனைப் பார்த்து - “How is Lara's d**k?" என்று கேட்டு, அதற்கு அவர் - “Ask your wife" என்று சொல்லிவிட பாய்ந்து சர்வனின் சட்டையைப் பிடித்தார். (மெக்ராவின் மனைவி கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தார்). இந்த சம்பவத்தினால் அவரை எனக்குப் பிடிக்காது. (கடைசியில் அபராதம் கட்டியதென்னவோ சர்வன் தான்).
5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர்
ஷேன் வார்னே – சுழல் பந்தின் மன்னன். இவர் வீசிய பால் ஆஃப் த சென்ச்சுரி மறக்க முடியாதது.
இவரை Best Captain Australia Never had என்று சொல்வார்கள். ஸ்டீவ் வாவின் ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணியின் தலைமைக்கு வந்திருக்க வேண்டியவர், கிரிக்கெட் அல்லாத காரணங்களுக்காக தலைமைப் பதவிக்கு வர இயலாமலே போய் விட்டது.
சச்சின் டெண்டுல்கர் – டைட்டன் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஓவர், கொச்சியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த ஐந்து விக்கெட்டுகள், இவை போதாது இவரை இந்த லிஸ்டில் சேர்ப்பதற்கு?
அனில் கும்ப்ளே – தாடையில் பந்து பட்டு சேதமடைந்திருந்த போதிலும் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் தலையையும் தாடையையும் சேர்த்து கட்டுப் போட்டுக்கொண்டு பந்து வீச வந்த ஆர்வம்.
டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே இன்னிங்க்ஸில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையைப் பாராட்டும் வண்ணம் பெங்களூருவில் எம்.ஜி ரோடு, செயிண்ட் மார்க்ஸ் ரோடு, கஸ்தூரி பா ரோடு இணையும் சந்திப்புக்கு அனில் கும்ப்ளே சர்க்கிள் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது கர்னாடக அரசு.
6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர்
ஆஷ்லே கைல்ஸ் – நெகட்டிவ் லைன் பவுலிங் போட்டு வெறுப்பேற்றியதால்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 271 இன்னிங்க்ஸ்களில் 242 முறை அவுட் ஆகியுள்ளார். இந்த 242 முறைகளில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தது ஒரே முறைதான். அப்படி இவரை ஆட்டமிழக்கச் செய்த பெருமை கைல்ஸ்ஸுக்கே.
7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர் –
சச்சின் – கடவுளைச் சொல்லாமல் இருக்க முடியுமா?
சர் விவியன் ரிச்சர்ட்ஸ் – வெறும் தொப்பி மட்டும் போட்டுக் கொண்டு அசால்டாக பந்துகளை சிக்சருக்கும் ஃபோருக்கும் அனுப்பிக் கொண்டிருப்பார்
இவருக்கும் இந்திய நடிகை நீனா குப்தாவுக்கும் (சோளி கே பீச்சே கியா ஹை) ஏற்பட்ட குறுகிய கால தொடர்புக்கு அடையாளமாக நீனாவுக்கு மசாபா என்ற மகள் இருக்கிறார்.
வி.வி.எஸ்.லக்ஷ்மண் – ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனம்
தனது முதல் ஒரு நாள் போட்டியிலும் கடைசி ஒரு நாள் போட்டியிலும் டக் அவுட் ஆன பெருமை இவருக்கு உண்டு. 100 டெஸ்ட் போட்டிகளைக் கடந்து வந்தாலும் ஒரு உலகக்கோப்பை போட்டித் தொடரில் கூட விளையாடியதில்லை.
சமீபத்தில் – ஹஷிம் ஆம்லா.
இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையில் நடை பெற்ற டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ் (கமெண்டேட்டர்) இவரை டெரரிஸ்ட் என்று அழைத்து தன் கமெண்டேட்டர் வேலையை இழந்தார்.
8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர்
க்றிஸ் மார்ட்டின் – நியூசிலாந்தைச் சேர்ந்தவர். “how to bat like Chris Martin” வீடியோவை யூ-ட்யூபில் பாருங்கள்.
ஐம்பத்தி நாலே போட்டிகளில் 27 முட்டைகள் வாங்கிய வீரர் இவர்தான். கூடிய விரைவில் வால்ஷின் (43) சாதனையை முறியடிப்பார் என்று எண்ணுகிறேன்.
9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர்
சவுரவ் கங்குலி – இவரது ஆஃப் ட்ரைவ்களுக்கும், ஸ்பின்னரை இறங்கி வந்து சிக்ஸருக்கு அனுப்பும் ஷாட்டிற்கும் நான் ரசிகன்
1992/93 ஆம் ஆண்டு இந்திய அணியில் சேர்க்கப்பட்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்த போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படாத போது, ட்ரிங்க்ஸ் எடுத்துச் செல்ல மறுத்த காரணத்தால் அணியை விட்டு நீக்கப் பட்டார்.
10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர்
லாரா – சிறந்த வீரர் என்றாலும், சுய சாதனைகளுக்காக(400 ரன்கள்), வெற்றி பெற வேண்டிய போட்டியை (சமன் செய்ய வேண்டிய தொடரை) டிரா செய்து தொடரை இழந்தவர்.
2006ம் ஆண்டு இந்தியாவோடு ஆண்டிகுவாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோனி அடித்த பந்தை டேரன் கங்கா பிடித்தார். ஆனால் அந்த கேட்சை அவர் சரியாகப் பிடித்ததற்கான சரியான சான்று இல்லை. சாதாரணமாக இப்படிப் பட்ட நேரத்தில் பேட்ஸ்மேனுக்கே சாதகமாக தீர்ப்பு வழங்கப்படுவது வழமை. இங்கேயும் அவ்வாறே. ஆனால் லாரா அம்பயர்களோடு கடுமையாக சண்டை போட்டு கடைசியில் தோனியிடம் கிரவுண்டை விட்டு வெளியேறச் சொன்னார். தோனியும் வெளியேறினார்.
ஜிம்மி (பே)ஆடம்ஸ் – இவரைப் பார்த்துத்தான் உள்ளே திரும்பும் பந்துகளை பேட்டில் வாங்கினால் கால் ஸ்டம்புக்கு வெளியே இருந்தாலும் அவுட் கொடுக்கலாம் என்று விதியைத் திருத்தினார்கள் என்று நினைக்கும் அளவுக்கு பேடாலேயே விளையாடியவர்.
கீப்பராக ஆடத்துவங்கி, பின் பந்து வீசவும் செய்தவர்.
11. பிடித்த களத்தடுப்பாளர்
ஜாண்டி ரோட்ஸ் –பாகிஸ்தானுடனான 1992/93 உலககோப்பைப் போட்டியில் பறந்து வந்து ஸ்டம்பைத் தட்டி ரன் அவுட்டாக்கியதை மறக்க முடியுமா?
இவர் தென்னாப்ரிக்க ஹாக்கி அணியிலும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜய் ஜடேஜா – இந்தியர்களாலும் ஸ்டம்பை குறி வைத்து எறிய முடியும் என்று நம்ப வைத்தவர்.
இவர் நவநகர் ராஜ குடும்பத்தில் பிறந்தவர். ரஞ்சித்சிங்ஜி (ரஞ்சி கோப்பை), துலிப்சிங்ஜி (துலிப் ட்ராபி போட்டிகள்) ஆகியோர் இவர் பரம்பரைதான்.
மற்றும் இன்னும் பலர்.
12. பிடிக்காத களத்தடுப்பாளர்
அனில் கும்ப்ளே – இவர் பந்து வீச்சில் இவரே பிடிக்க வேண்டிய கேட்சுகளை மட்டும் பறந்து பறந்து பிடிப்பார்.
13. பிடித்த ஆல்ரவுண்டர் –
கபில்தேவ் – ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட இவரது 175, ஆலன் டொனால்டின் புயல் வேகப் பந்து வீச்சுக்கு எதிராக ஒட்டு மொத்த இந்திய அணியே திணறிக் கொண்டிருக்கும்போது இவர் அடித்த 129, ஃபாலோ ஆனைத் தவிர்க்க 24 ரன்கள் தேவை என்றிருக்கும்போது நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர் பறக்கவிட்ட வேகம், இந்திய அணியிலும் (மித?) வேகப் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று உலகுக்குக் காட்டிய இவரது வேகம், 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்லக் காரணமான அந்த விசேஷ கேட்ச், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இம்ரான் கான் – பந்து வீச்சு, பேட்டிங், தலைமைப் பொறுப்பு – மூன்றிலும் கில்லி அடித்தவர். இன்று வரை பாகிஸ்தானின் சிறந்த கேப்டன்.
1992/93 உலகக் கோப்பை இறுதியாட்டத்துக்குத் தேர்வு பெற்றதும் அணியுடன் சேர்ந்து இவர் கொடுத்த பேட்டியில் இன்சமாம் உல் ஹக் அடித்த 50ஐப் பற்றிக் கேட்ட கேள்விக்கு இவர் பதில் – “நன்றாக விளையாடுகிறான். இன்று அடித்த 50 இவன் தலைக்குப் போய்விடாமல் இருக்க வேண்டும்”.
கேட்ட நிருபர் – “என்ன நீங்கள் அவரை வைத்துக் கொண்டே இப்படி சொல்கிறீர்கள்?”
“பயப்படாதீர்கள் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது” – தெரிந்திருந்தாலும் இன்சமாம் இவரைக் கோபித்திருக்கமாட்டார்.
14. பிடிக்காத ஆல்ரவுண்டர்
இர்ஃபான் படான் – இவர் பவுலராக மட்டுமே இருந்திருக்கலாம். அடுத்த கபில் என்று இவரை ஏற்றி விட்டு உள்ள பவுலிங்கும் போச்சுட நொள்ளக்கண்ணா என்றாகிவிட்டது
இவருக்கும் யூசுப் படானுக்கும் தந்தை ஒன்று தாய் வேறு.
15. பிடித்த நடுவர்
ஷெப்பர்ட் – 111, 222, 333 (நெல்சன் நம்பர்) வரும்போது ஒரு காலை உயர்த்தி குண்டு உடம்பைத் தூக்கி இவர் குதிப்பது வேடிக்கையாக இருக்கும்.
அப்படிக் குதிப்பது மூட நம்பிக்கையால் என்று இவரே சொல்லியிருக்கிறார்.
பில்லி பவுடன் – ஆர்த்ரைட்டீஸால் பாதிக்கப்பட்ட இவரால் உடனே தலைக்கு மேல் கையைத் தூக்கி அவுட் கொடுக்க முடியாது. இந்தக் குறையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வித்தியாசமாக சிக்னல் செய்து தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக் கொண்டவர்.
16. பிடிக்காத நடுவர்
டேரல் ஹேர், குமார் தர்மசேனா, அசோக டி சில்வா, மார்க் பென்சன், ஒரு சில இந்திய அம்பயர்கள் (பெயர் நினைவில்லை) – இப்படி பலர்.
17. பிடித்த நேர்முக வர்ணனையாளர்
ரவி சாஸ்திரி
ஹர்ஷா போக்ளே
டோனி கிரேக்
18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்
அருண்லால், ரமீஸ் ராஜா
19. பிடித்த அணி – இந்தியா
20. பிடிக்காத அணி – ஆஸ்திரேலியா
21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் – இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும்
22. பிடிக்காத அணிகளுக்கான போட்டி – ஆஸ்திரேலியா விளையாடும் மற்றைய நாடுகளுடனான போட்டிகள்
23. பிடித்த அணித் தலைவர்
கங்குலி – அடக்கமாக இருந்த இந்திய அணியை அக்ரசிவ் ஆக மாற்றியவர்
தோனி – வெற்றியோ தோல்வியோ கடைசி நிமிடம் வரை கூலாக இருப்பவர்
இவர் முதல் முதலாக அணித்தலைவர் ஆனது இந்திய அணிக்குத்தான் (அதற்கு முன் தெரு விளையாட்டில் கூட கேப்டனாக இருந்ததில்லையாம் - Managers are born not made).
24. பிடிக்காத அணித் தலைவர்
ரிக்கி பாண்டிங் – காரணம் சொல்லத் தேவையில்லை.
சனத் ஜெயசூர்யா – தெருக் கிரிக்கெட் விளையாடுபவர் போல டாஸ் ஜெயித்ததும் – பிட்ச் எப்படிப்பட்டது என்றெல்லாம் யோசிக்காமல் – பேட்டிங் பேட்டிங் என்று தேர்ந்தெடுப்பவர்
25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி – கங்குலி-சச்சின், ஷேவாக்-சச்சின், சேவாக்-கம்பீர், ஜெயசூர்யா-கலுவித்தரன
26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி
க்ராம் ஸ்மித் – ஹெர்ஷெல் கிப்ஸ் ஜோடி – ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.
27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்
சுனில் கவாஸ்கர்
நீங்கள் கரிபியனைச் சேர்ந்த நாற்பது ஐம்பது வயதுக்காரரை சந்திக்க நேரிட்டால், நீங்கள் இந்தியர் என்று தெரிந்தது அவர் கேட்கும் முதல் கேள்வி கவாஸ்கரைப் பற்றியதாகத்தான் இருக்கும் (என் சொந்த அனுபவம்)
ராகுல் ட்ராவிட் - Great Wall of India.
டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல ஒரு நாள் போட்டிகளிலும் சைட் ஃபிடில் வாசிப்பதில் மன்னன். முதல் இரண்டு highest partnerships in ODI இல் இவர் பெயரும் உண்டு.
டான் ப்ராட்மேன்
இவர் விளையாடிப் பார்த்ததில்லை. ஆனால் 99.98 ஆவரேஜ் வைத்திருக்க வேண்டும் - அதிலும் ஹெல்மெட், க்ரில், தை பேட், ஆர்ம் பேட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இலலாத பாடிலைன் காலங்களிலும் - என்றால் சாதாரண விசயமில்லை.
28. உங்கள் பார்வையில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் - சச்சின் டெண்டுல்கர்
எத்தனை இன்னிங்க்ஸ்களைச் சொல்வது?
29. பிடித்த போட்டி வகை – டெஸ்ட்
கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலங்களில் டெஸ்ட் போட்டிகள் என்பது டைம் லெஸ் - குறிப்பிட்ட நாட்கள் என்றில்லாமல் வெற்றி தோல்வி கணிக்கப்படும் வரை விளையாடப்படுமாம். 1938-39ல் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியே நீளமான டெஸ்ட் போட்டி. இது 9 நாட்களுக்கு நடை பெற்றதாம். அப்படியிருந்து இது ட்ராவில் முடிவடைந்தது - காரணம், இங்கிலாந்து அணி வீரர்கள் இங்கிலாந்து செல்ல கப்பலைப் பிடிக்க நேரமாகிவிட்டது.
30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் – சச்சின்.
யாரையாவது தொடர அழைக்க வேண்டுமே?
கார்க்கி - யாருமே கூப்புடலைன்னு வருத்தப்பட்டிங்களே.. இந்தாங்க புடிச்சிக்குங்க.
அண்ணன் பழமை பேசி - அந்தக் கால கிரிக்கெட் வீரர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆசை
புலவன் புலிகேசி - இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம்.
வருண் - ரிலாக்ஸா எழுதுங்க வருண்.
விசா - தொடர் பதிவுக்கெல்லாம் பதில் சொல்லுவிங்களா தெரியல.
எல் போர்ட்.. பீ சீரியஸ் - கூப்டோம்ல கூப்டோம்ல.. :)

40 comments:
\\18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்\\
பிடிக்காத கோணை முக வர்ணனையாளர் யாருண்ணே..?
ஹிஹிஹி...
அப்ப நீங்களா கூப்பிடல.பின்னூட்டம் பார்த்துதான்.. ரைட்டு
வாங்க ராஜூ
முத தடவ வந்திருக்கீங்க. எதுக்கு கோணை கேணைன்னு எல்லாம் பேசிக்கிட்டு
யப்பா எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு?
மனோஜ் பிரபாகர் – அசாருதீன் ஐந்து ஃபீல்டர்களை ஆஃப் சைடில் நிறுத்தி, ட்ராப் செட் செய்வார். நம்ம அண்ணன் அழகாக பந்தை லெக் சைடில் போடுவார்.
மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக இவர் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டார்.
//
கூட்டுக்களவாணித்தனம்.
// கார்க்கி said...
ஹிஹிஹி...
அப்ப நீங்களா கூப்பிடல.பின்னூட்டம் பார்த்துதான்.. ரைட்டு
//
அப்பிடியில்ல சகா.. நம்ம ப்ளாக் எல்லாம் நீங்க படிப்பீங்களான்னு தெரியாது. நான் எதுக்காவது கூப்பிட்டுட்டு உங்களுக்குத் தெரியாமயே போயிருச்சின்னா?
இப்ப நீங்களே யாராவது கூப்புடுங்கன்னு சொன்னப்பறம், நாம அந்தப் பெருமைய தேடிக்குவோம்னுதான்.. ஹி ஹி ஹி
பி.கு: ராஜுவுக்கு சொன்ன அதே ய......கு?
// குடுகுடுப்பை said...
மனோஜ் பிரபாகர் – அசாருதீன் ஐந்து ஃபீல்டர்களை ஆஃப் சைடில் நிறுத்தி, ட்ராப் செட் செய்வார். நம்ம அண்ணன் அழகாக பந்தை லெக் சைடில் போடுவார்.
மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக இவர் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டார்.
//
கூட்டுக்களவாணித்தனம்.
//
கரெக்டா சொன்னீங்க.. அதைத்தான் கீழ இலை மறை காய் மறையா சொல்லியிருக்கேன்.
ஆமா டீனேஜ் தொடர் என்னாச்சு?
வேலை டவுசர் கிளியுது.
வேற என்ன பேசாலம்..? சொல்லுங்க.
நல்லாருக்கு:). நான் கிரிக்கட் பார்க்குறத விட்டு 15 வருஷத்துக்கு மேல ஆச்சி. நான் என்னத்த எழுதறது..அவ்வ்வ்:((
//kuku said...
வேலை டவுசர் கிளியுது//
ஆணியெல்லாம் புடுங்கிட்டு வேகமா வாங்க வலையுலகத்துக்கு.. உங்கள் சேவை எங்களுக்குத் தேவை.
//♠ ராஜு ♠ said...
வேற என்ன பேசாலம்..? சொல்லுங்க//
சாப்டிங்களா? என்ன சாப்டிங்க?
// வானம்பாடிகள் said...
நல்லாருக்கு:). நான் கிரிக்கட் பார்க்குறத விட்டு 15 வருஷத்துக்கு மேல ஆச்சி. நான் என்னத்த எழுதறது..அவ்வ்வ்:((
//
15 வருசத்துக்கு முன்னாடி விளையாடினவங்களப் பத்தி எழுதுங்க வாத்தியாரே..
பொறிச்ச கோழி..!
2, 26 = போங்காட்டம்.. ஒத்துக்கமாட்டேன்.. (அதுக்காக போன்ல திட்டக்கூடாது..:))
//நான் பவனுடன் சில முறை கிரிக்கெட் சம்மந்தமான வாதத்தில் ஈடுபட்டதால் எனக்குப் பிடிக்காத பிரிவுகளில் அவருக்குப்பிடித்த இலங்கை வீரர்களைச் சேர்த்துவிடுவேன் என்று நினைத்தாரோ என்னவோ :), அவர் என்னைத் தொடர அழைக்கவில்லை//
ஆஹா அப்பிடியெல்லாம் இல்லை, நானே எல்லாரையும் அழைத்துவிட்டால் மற்றவங்களுக்கும் அழைக்க ஆள் இருக்கணுமில்ல..;)
நன்றி தொடர்பதிவிட்டமைக்கு..;)
நான் பதிவிட்ட பிறகுதான் டொன் பிரட்மனைக் கூறவில்லையே என்று நினைத்தேன், நல்லவேளை நீங்க சொல்லிட்டீங்க..;)
ஆனால் என்னுடன் ஒப்பிடுகையில் வேறுபட்ட தெரிவுகள்தான் உங்களுடையது..;)
கிரிக்கெட் தொடர் பதிவுல, புகுந்து விளையாடி "man of the match" ஆயிட்டீங்க. :-)
//பிடிக்காத கிரிக்கெட் வீரர் –
ஆஸ்திரேலிய அணியின் சீருடையை (டெஸ்ட் போட்டி என்றால் பச்சைத் தொப்பியை) அணிந்திருக்கும் எந்த வீரரும். //
நம்ம சங்கத்துக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுதே
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
2, 26 = போங்காட்டம்.. ஒத்துக்கமாட்டேன்.. (அதுக்காக போன்ல திட்டக்கூடாது..:)) //
26 பத்தி நான் ஒண்ணும் சொல்லலை, ஆனா, 2 என்ன தப்பு ??
பதிவு அருமை
ரைட்டு
உங்க பார்வை மிக நேர்மையா இருந்தது.... சில அறிய தகவலும் கிடைத்தது.... பராட்டுக்கள்.
//♠ ராஜு ♠ said...
பொறிச்ச கோழி.//
தனியாவா பன்னுக்கு நடுவுல வச்சா?
/【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
2, 26 = போங்காட்டம்.. ஒத்துக்கமாட்டேன்.. (அதுக்காக போன்ல திட்டக்கூடாது..:))//
எதுக்கு போங்காட்டம்? 26 வேணும்னா காரணம் சொல்லாததுக்காக ஒத்துக்கலாம். ஆனா 2ல என்ன தப்பு?
சத்தியமா சொல்றேன், ஸ்மித்தும் கிப்ஸும் இந்தியாவுக்கு எதிரா இது வரை சாதிக்கலைன்னா கூட எனக்கு இவங்க ஜோடி பிடிக்காது.
/Bavan said...
//நான் பவனுடன் சில முறை கிரிக்கெட் சம்மந்தமான வாதத்தில் ஈடுபட்டதால் எனக்குப் பிடிக்காத பிரிவுகளில் அவருக்குப்பிடித்த இலங்கை வீரர்களைச் சேர்த்துவிடுவேன் என்று நினைத்தாரோ என்னவோ :), அவர் என்னைத் தொடர அழைக்கவில்லை//
ஆஹா அப்பிடியெல்லாம் இல்லை, நானே எல்லாரையும் அழைத்துவிட்டால் மற்றவங்களுக்கும் அழைக்க ஆள் இருக்கணுமில்ல..;)
//
தெரியும்பா சும்மா ஜோக்குக்கு.. :))
//நன்றி தொடர்பதிவிட்டமைக்கு..;)
//
நன்றி துவங்கியதற்கு..
//
நான் பதிவிட்ட பிறகுதான் டொன் பிரட்மனைக் கூறவில்லையே என்று நினைத்தேன், நல்லவேளை நீங்க சொல்லிட்டீங்க..;)
//
எல்லாத்தையும் சொல்லிட்டு இவரைச் சொல்லலைன்னா எப்பிடி?
//ஆனால் என்னுடன் ஒப்பிடுகையில் வேறுபட்ட தெரிவுகள்தான் உங்களுடையது..;)//
//
கண்டிப்பா, நீ 1996 க்குப் பிறகு தான் கிரிக்கெட் பார்க்கவே ஆரம்பித்திருப்பாய். இம்ரான் கான், கபில் தேவ் பற்றியெல்லாம் கேள்வி மட்டுமே பட்டிருப்பாய். :)
/Chitra said...
கிரிக்கெட் தொடர் பதிவுல, புகுந்து விளையாடி "man of the match" ஆயிட்டீங்க. :-)//
நன்றிங்க.. நான் யாரையும் பாத்து காப்பி அடிக்கலை.. :)))
/சங்கர் said...
//பிடிக்காத கிரிக்கெட் வீரர் –
ஆஸ்திரேலிய அணியின் சீருடையை (டெஸ்ட் போட்டி என்றால் பச்சைத் தொப்பியை) அணிந்திருக்கும் எந்த வீரரும். //
நம்ம சங்கத்துக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுதே//
சங்கத்தை சீக்கிரம் ஆரம்பிங்க தலை.. ஆஸ்திரேலியாவக் கிளிச்சிருவோம்.
//சங்கர் said...
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
2, 26 = போங்காட்டம்.. ஒத்துக்கமாட்டேன்.. (அதுக்காக போன்ல திட்டக்கூடாது..:)) //
26 பத்தி நான் ஒண்ணும் சொல்லலை, ஆனா, 2 என்ன தப்பு ??//
அப்பிடிக் கேளுங்க..
/நினைவுகளுடன் -நிகே- said...
பதிவு அருமை//
நன்றி நிகே.. :)
/அண்ணாமலையான் said...
ரைட்டு//
கங்குலி லெஃப்டு.
//சி. கருணாகரசு said...
உங்க பார்வை மிக நேர்மையா இருந்தது.... சில அறிய தகவலும் கிடைத்தது.... பராட்டுக்கள்.//
நன்றி கருணாகரசு. சும்மா பிடிச்ச பெயரை மட்டும் சொல்லிட்டுப் போகாம நமக்குத்தெரிஞ்ச சில விசயங்களையும் சொல்லிட்டுப் போலாமேன்னு தான்.. :))
என்ன காரணம் இருந்தாலும் லாராவை பிடிக்காதுன்னு சொன்னது தாங்க முடிலதல... தாறுமாறா கண்டனங்கள் செய்கிறேன்...
எத்தனை பேரு இந்த தொடர் பதிவை எழுதினாலும் உங்க அளவுக்கு ஜெனியுனா எழுத முடியுமான்னு தெரில....
//நாஞ்சில் பிரதாப் said...
என்ன காரணம் இருந்தாலும் லாராவை பிடிக்காதுன்னு சொன்னது தாங்க முடிலதல... தாறுமாறா கண்டனங்கள் செய்கிறேன்...
//
கண்டனங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தனிப்பட்ட வாழ்க்கையிலயும், கிரிக்கெட் வாழ்க்கையிலயும் பல controversies க்கு உள்ளானவர் தான் லாரா. பேட்டிங் பத்தி கிரிக்கெட் தொடர்ல லாராவுக்கும் இடம் உண்டு. எனக்குப் பிடிக்கலைன்னு தான் சொன்னேனே ஒழிய அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் என்றுமே எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.
//எத்தனை பேரு இந்த தொடர் பதிவை எழுதினாலும் உங்க அளவுக்கு ஜெனியுனா எழுத முடியுமான்னு தெரில....//
அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க. நான் என்னோட விருப்பங்களை எழுதியிருக்கேன். சிலருக்கு - குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்களுக்கு - இது பிடிக்காமல் போகலாம். ஷங்கர் போட்ட கமெண்டே சாட்சி.. :)
??? எ கொ ச இ??? இப்படி சதி பண்ணிட்டீங்களே முகிலன்?? குழி பறிச்சு வச்சிட்டு தான் சொல்லியிருக்கீங்க.. நாந்தான் தெரியாம ஓடி வந்து விழுந்துட்டேன் :)))
நான் கிரிக்கெட் ரொம்ப வருஷமா பாக்கறதில்லயே.. பாத்தவரைக்குங்கூட வெறித்தனமா பாத்ததில்லயே.. ம்ம்.. யோசிக்கறேன்.. தெரிஞ்சவங்க பக்கத்துல ஒருத்தங்க இருக்காங்க.. அவங்கள வேணுன்னா கேட்டுப் பாக்கறேன்.. கொஞ்சம் டைம் கொடுங்க..
டெஸ்ட் மேட்ச் மாதிரி இருக்கு
எப்படி யோசிச்சுப் பாத்தாலும் சச்சின் பேரைத் தவிர வேறெதுவும் தோன மாட்டேங்குது.. மீறி எழுதினா உங்கள சமைக்கச் சொன்ன மாதிரி இருக்கும் :)) என்னால முடியாது சாமீ.. :)) சமாதானமாப் போயிடலாம்.. :)))
//நசரேயன் said...
டெஸ்ட் மேட்ச் மாதிரி இருக்கு//
நல்லாருக்குன்றிங்களா இல்ல நல்லா இல்லைன்றீங்களா?
//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
எப்படி யோசிச்சுப் பாத்தாலும் சச்சின் பேரைத் தவிர வேறெதுவும் தோன மாட்டேங்குது.. மீறி எழுதினா உங்கள சமைக்கச் சொன்ன மாதிரி இருக்கும் :)) என்னால முடியாது சாமீ.. :)) சமாதானமாப் போயிடலாம்.. :)))//
நோ வே..
பை த வே, நான் நல்லா சமைப்பேனாக்கும்.
@எல் போர்ட்
சந்தனா தனியா மெயில் தட்டுங்க.. நான் உங்களுக்கு இந்தத் தொடருக்கு ஒரு ஐடியா தர்றேன்.. ;))
ஆகா என்னையும் மாட்டி உட்டுட்டீங்களே..எற்கனவே 3 தொடர்பதிவு மிச்சமிருக்கு. எப்ப எழுத்ப் போறேன்னு தெரியல...
தொடர் விதிமுறைல உண்மையா எழுதனும், இன்னும் ரெண்டு பேரை கூப்பிட்டு விடனும்ன்னு இருக்கே.. ரெண்டுமே என்னால ஆவாத காரியம்.. சீரியஸா போயிட்டிருக்கற தொடர்ல காமெடி பண்ண விரும்பல.. :))) இத்தோட இத விட்டுடுவோம்..
மெயில் எங்க போறதுன்னு என்னையே திருப்பி கேக்குது :))
Post a Comment