Wednesday, March 24, 2010

கனவு தேசம் - 2

முதல் பாகம் இங்கே.

டிஸ்கி: இந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் நான் கடந்துவந்த/பல வலைத்தளங்களில் இருந்து திரட்டிய செய்திகள். இவற்றில் தவறுகள் இருக்கலாம். தவறுகளைக் காண்பவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் சுட்டுங்கள்.

கடந்த பதிவில் அமெரிக்காவுக்குள் நுழைய என்ன என்ன விசா பிரிவுகள் இருக்கின்றன என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். அதை இப்போது பார்ப்போம்.

பொதுவாக அமெரிக்க விசாவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். (நான்கு என்றும் சொல்லலாம், நான்காவதை நேரடியாகப் பெறுவது இந்தியர்களுக்கு சிரமம் என்பதால் அதை விட்டு விடுகிறேன்)

1. விருந்தினர் (Visit)
2. படிப்பு
3. வேலை

  1. விருந்தினர் விசா – B1/B2
விருந்தினர் விசாவை பி1 என்று அழைப்பார்கள். மருத்துவத் தேவைக்காக (ஜீன்ஸ் படத்தில் லட்சுமி வந்தது போல) வருவதற்கு பி2 விசா வழங்குவார்கள்.
பொதுவாக இதை டூரிஸ்ட் விசா அல்லது பிசினஸ் விசா என்று அழைப்பார்கள். சில நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு யாரையாவது அமெரிக்காவுக்கு அனுப்ப இந்த விசாவைப் பயன்படுத்துவார்கள். அதை டெக்னிக்கல் ட்ரெயினிங் என்ற பெயரில் அனுமதிப்பார்கள்.

இந்த விசாவைப் பெற உங்களுக்கு அமெரிக்காவில் இருக்கும் யாராவது அழைப்பு அனுப்ப வேண்டும். அவரே உங்களுக்கு அனுசரணையாளராகவும்(Sponsor) இருக்க வேண்டும்.

அமெரிக்காவிலிருப்போரின் பெற்றோர் தங்கள் மகன்/மகளைச் சந்திக்க இந்த விசாவில் செல்வார்கள்.

இந்த விசாவைப் பெற அமெரிக்க கன்சுலேட்டுக்கு செல்பவர்கள் மனதில் வைக்க வேண்டிய விசயங்கள்.

  1. நீங்கள் அமெரிக்காவுக்கு தற்காலிகமாகத்தான் செல்கிறீர்கள். திரும்பி வந்துவிடுவீர்கள் என்று அந்த விசா அதிகாரியை நம்ப வைக்க வேண்டும்.
  2. அமெரிக்காவில் உங்களுக்காகும் செலவை சமாளிக்கும் அளவுக்கு உங்கள் மகன்/மகளுக்கு போதிய நிதிவசதி இருக்கிறது என்று விசா அதிகாரியை நம்ப வைக்க வேண்டும்.

மேலும் நீங்கள் அமெரிக்காவுக்குள் நுழையும்போது மறந்தும் கூட படிக்கவோ, இல்லை வேலை செய்யவோ வருகிறோம் என்று குடியமர்வில் (immigration) சொன்னால் அடுத்த விமானத்தில் திருப்பி அனுப்பி விடுவார்கள்

  1. படிப்பு – Student Visa
அமெரிக்காவில் மேல் படிப்பு செல்பவர்களுக்கான விசா இது. இது F1 என்று அழைக்கப் படும். இந்த விசாவில் செல்பவர்கள் படிப்பு முடிந்ததும் அமெரிக்காவில் ஒரு வருடம் பணி புரிவதற்கு (OPT) என்று ஒரு வாய்ப்பு உள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு 20 மணி நேரத்திற்கு மிகாமல் தாங்கள் படிக்கும் கல்லூரிக்குள்ளேயே வேலை செய்யவும் அனுமதி உண்டு.

பணி புரிவதற்கான விசாவுக்கு (H1B) இந்த படிப்பு விசா ஒரு குறுக்கு வழி. அது எப்படி என்பதை அடுத்த பிரிவில் பார்ப்போம்.

இந்த படிப்பு சம்மந்தப்பட்ட இன்னொரு விசா – J1. இதை எக்ஸ்சேஞ்ச் விசா என்று சொல்வார்கள். மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்கக் கலாச்சாரத்தை (!?) பகிர்ந்து கொள்ள வருபவர்கள் இந்த விசாவில் வருவார்கள். சில டாக்டரேட் பெற்றவர்களும் இந்த விசாவில் போஸ்ட் டாக்டரேட்டுக்காக வருவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். (இந்தக் கருத்தில் தவறேதும் இருந்தால் தெரிவியுங்கள்)

  1. வேலைக்கான விசா

வேலைக்கான விசா இரண்டு வகைப்படும். (இந்தியர்களுக்கு).

  1. H1-B. இது அமெரிக்க நிறுவனம் தங்கள் நாட்டில் இல்லாத ஒரு திறனுடைய பணியாளை வெளிநாடுகளில் இருந்து பணியமர்த்திக்கொள்ள அமெரிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கும் வழி. இந்த விசாவுக்கு நீங்களாகவே விண்ணப்பிக்க முடியாது. பணியமர்த்தும் நிறுவனம் உங்களுக்காக விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும் முன், தங்கள் நிறுவனத்தால் அந்த நேரத்தில் இந்த திறனுடைய (Skills) ஒருவரை அமெரிக்காவில் கண்டெடுக்க முடியவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இதைத் தான் LCA என்று சொல்வார்கள். இந்த விசா விண்ணப்பத்தை பெட்டிஷன் என்று சொல்வார்கள்.
இந்த  பெட்டிசனை அந்நிறுவனம் 6 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அதாவது அக்டோபர் 1, 2010ல் பணியமர்த்த அவர்கள் ஏப்ரல்,1, 2010லேயே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பெட்டிசனுக்கு உச்ச வரம்பு இருக்கிறது. ஒரு வருடத்திற்கு 65,000 விசாக்களுக்கு மேல் அனுமதிப்பதில்லை. முன்பு first come, first serve அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த விசா வழங்கும் முறை இப்போது லாட்டரி முறையில் நிகழ்த்தப் படுகிறது. அதாவது அத்தனை விசா விண்ணப்பங்களையும் பெற்றுக் கொண்டு அதிலிருந்து 65000 விண்ணப்பங்களை மட்டும் லாட்டரி முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுமதி வழங்குவதே அது.
இந்த 65000 கணக்கில் சில – not for profit – நிறுவனங்கள் விதிவிலக்கு பெற்றவை.
இந்த விசாவுக்கு நிறுவனங்கள் செலவு செய்யும் தொகை $1500 - $5000 வரை.

அமெரிக்காவில் மேற்படிப்பு படித்த மாணவர்கள் (F1 விசா மூலம்) இந்த H1-B விசா பெறுவது எளிது. ஏனென்றால் அவர்கள் இந்த 65000 கோட்டாவில் வர மாட்டார்கள். அவர்களுக்குத் தனியே 20,000 கோட்டா இருக்கிறது. அதோடு அவர்கள் அக்டோபர் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஏப்பிரலில் விண்ணப்பித்ததும் பணிக்குச் செல்லலாம். இதைத் தான் குறுக்கு வழி என்று மேலே சொன்னேன்.

H1-B விசாவில் ஒருவர் வந்தால் அவர் மட்டுமே வேலை பார்க்க முடியும். அவரது குடும்பத்தினர் (dependents) வேலை பார்க்க முடியாது.

  1. L1B விசா – Intracompany Transfer
இந்த விசா அமெரிக்காவிலும் இந்தியாவிலும் கிளைகள் வைத்திருக்கும் நிறுவனம், தங்கள் இந்தியக் கிளையிலிருந்து அமெரிக்கக் கிளைக்கு தற்காலிகமாகப் பணி புரிய ஆட்களை அனுப்புவதற்கு பயன்படுவது. இந்த விசாவுக்கு உச்ச வரம்பு என்று எதுவும் கிடையாது. அதே போல காத்திருப்புக் காலமும் கிடையாது.
இதில் L1 regular, L1 blanket என்று இரு வகை உண்டு.
    • L1 regular – இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர், குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் அந்தத் துறையிலும் அந்த மூன்றில் ஒரு வருடம் இந்தியக் கிளையிலும் பணி புரிந்திருக்க வேண்டும்.
    • L1 Blanket – இந்த விசா தகவல் தொழில்நுட்பத்துக்கு மட்டுமே பொருந்தும். இந்த விசாவைப் பெற விரும்பும் நபர் கணினித் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்த நிறுவனத்தில் குறைந்தது ஆறுமாதம் பணிபுரிந்திருக்க வேண்டும்.
இப்போது இந்த L1 blanketக்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாகக் கேள்வி
L1 விசாவில் வருபவருடைய குடும்பத்தார் (18 வயதுக்கு மேற்பட்டவர்) $385 கொடுத்து EAD பெற்றுக் கொண்டு எந்தப் பணி வேண்டுமானாலும் புரியலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

  1. L1-A – Executive Visa
இதை மேனேஜெரியல் விசா என்றும் சொல்வார்கள். ஆனால் இது எல்லா மேனேஜர்களுக்கும் செல்லாது. இந்தியாவில் இருக்கும் ஒரு நிறுவனம் தனது அமெரிக்கக் கிளைக்கு executive பொறுப்பில் ஒருவரை பணிக்கு அனுப்புவதற்குப் பயன்படும் விசா.
இந்த விசா இருந்தால் க்ரீன் கார்டு எனப்படும் நிரந்தரக் குடியமர்வு அட்டை பெறுவது மிக எளிது.

வேலைக்கான விசா பெற கன்சுலேட் செல்லும்போது கவனிக்க வேண்டிய விசயங்கள் பற்றியும் பச்சை அட்டை பெறும் நெடிய முறை பற்றியும் அடுத்த பதிவில்.

19 comments:

S Maharajan said...

அப்போ அமெரிக்கா வரதுக்கு இவளளவு ப்ரோப்லேம்
இருக்கா,எனக்கு துபாய்யே போதும்
நல்ல தகவல்

Ragavachari B said...

நல்லா விரிவாக சொல்லியிருக்கிறீர்கள்.
இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

vasu balaji said...

இப்புடியே போச்சோ தொங்கலில் விட்ட தொடர்கள்னு நான் இடுகை தேத்திடுவேன்:))

பல்லிருக்கிறவன் பகோடா தின்றான் - பழமொழி

பாஸ்போர்ட் இருக்கிறவன் விசாக்கு அலையுறான் - புது மொழி.

நாம ரெண்டாவதுங்கோ!:))

பிரபாகர் said...

விசா கிடைச்சும் பிலேடனால போக முடியாம போச்சு!

ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்யுது, வரனும்னு!

பாக்கலாம்!

பிரபாகர்.

நாடோடி said...

நல்ல விரிவா எழுதி இருக்கீங்க.. கண்டிப்பா பயனுள்ளதா இருக்கும்

திவ்யாஹரி said...

பயனுள்ள தகவல் நன்றி முகிலன்.

க ரா said...

பயனுள்ள தகவல். நன்றி.

Chitra said...

/////பயனுள்ள தகவல். நன்றி.///

........ராமசாமி கண்ணன் - ப்ளோரிடா வில் இருந்து கொண்டு, அவருக்கு பயனுள்ள தகவல் என்கிறார். அதே .... அதே...... நானும் சொல்லி கொள்கிறேன்.

குடுகுடுப்பை said...

ரைட்டர் விசாவுக்கும் விசா வேணுமாங்க முகிலன்.

குடுகுடுப்பை said...

வந்தாரை அனைத்து உரிமைகளோடும் வாழவைக்கும் அமெரிக்கா நீ வாழ்க.

நசரேயன் said...

//குடுகுடுப்பை said...
ரைட்டர் விசாவுக்கும் விசா வேணுமாங்க முகிலன்.//

இல்லை எதிர் கவுஜ போட விசா வேண்டும்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:) நல்ல பணி முகிலன்! சிறக்க வாழ்த்துக்கள்!!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
ரைட்டர் விசாவுக்கும் விசா வேணுமாங்க முகிலன்//

வேலைக்கு வந்திட்டு, கட்சி நடத்துறது முறைகேடு... இஃகிஃகி!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பிரபாகர் said...
விசா கிடைச்சும் பிலேடனால போக முடியாம போச்சு!
ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்யுது, வரனும்னு!
பாக்கலாம்!
பிரபாகர்.
//

ஏண்ணே.. இந்த வீபரீத ஆசை..

கொஞ்ச நாள் பொறுங்க.. அமெரிக்காவையும், சிங்கப்பூரையும்..இந்தியாவோட இணைச்சிடலாம்..

அதுக்காக.. உயிர கொடுத்து நாங்க பாடுபட்டுட்டு இருக்கோம்..தைரியமாயிருங்க..

Paleo God said...

ஹும்ம் என் ஸ்பான்சரா முகிலனத்தான் நம்பிகிட்டு இருக்கேன்..

:))

வருண் said...

There is another visa called J-1 (exchange visitor)> Usually PhD holders visit using this visa. J-2 dependents are allowed to work. However H-1B is considered as a better visa to go ahead and file I-140 (the first step for getting Permanent residence) together with I-485 (adjustment of status to PR)! :)

Unknown said...

@S Maharajan - ப்ராப்ளம் இல்லாம வாழ்க்கை இல்லையே தலைவா..

@பரதன் - வருகைக்கு நன்றி பரதன்

@வானம்பாடிகள் - கரெக்டா சொன்னீங்க சார்

@பிரபாகர் - பின்லேடனாலயா அண்ணா?

@நாடோடி - நன்றி நாடோடி

@திவ்யாஹரி - நன்றி திவ்யா

@ராமசாமி கண்ணன் - நன்றி ராமசாமி

@சித்ரா - நன்றி சித்ரா டீச்சர்

@குடுகுடுப்பை - விசாவுக்கு விசா வேணாம், ஆனா ரைட்டருக்கு வாங்கணும்

@குடுகுடுப்பை - அதுசரி

@நசரேயன் - கண்டிப்பா வேணும் நசரேயன்

@எல் போர்ட் - நன்றி சந்தனாஅ

@பழமைபேசி - க்ரீன் கார்ட் வாங்கிட்டா போதுமாமே அண்ணே?

@பட்டாபட்டி - யப்பா சீக்கிரம் செய்யுங்கப்பா புண்ணியமாப் போவும்

@ஷங்கர் - அதுக்கென்ன ஷங்கர் ஸ்பான்சர் செஞ்சிட்டாப் போவுது

@வருண் - I have mentioned about J1 visa under Student visas..

வருண் said...

Pardon me, mukilan, YES, you have mentioned about J-1! It was my fault that I overlooked as it was under the F1 visa! :)

Take it easy!

வடுவூர் குமார் said...

அருமை,எளிதில் புரியும் படி சொல்லியுள்ளீர்கள்.