Thursday, March 4, 2010

தற்கொலை - சற்றே நீளமான கதை



ஹோவென்ற இரைச்சலுடன் நிமிடத்திற்கு ஆறு லட்சம் கேலன் தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருந்தது நயகரா நீர்வீழ்ச்சி. குளிர் காலத்தில் இதைச் சீண்டுவாரில்லை என்பதற்கு உதாரணமாக அங்கங்கு ஓரிருவரைத் தவிர ஆட்டுத் தீவு (goat island) வெறிச்சோடியிருந்தது.


கைப்பிடியைப் பற்றியபடி, கீழே மெதுவாக நடை பயின்று கொண்டிருக்கும் நயகரா நதியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிரே கனடா பக்கம் சிறு சிறு உருவங்களாக சிலர் குளிர்கால அருவியின் அழகை சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். ஸ்கைலன் கோபுரத்தின் மஞ்சள் மின் தூக்கிகள் மேலும் கீழும் போய் வந்து கொண்டிருந்தன. 





இங்கே தான் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்...


நான் யார்? நான் எதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? இதைப் பற்றி தெரிய வேண்டுமானால் நாம் சில ஆண்டுகள் பின்னால் செல்ல வேண்டும், சில ஆயிரம் மைல்தூரமும் செல்ல வேண்டும்...


வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா.. கடைக்கோடி தமிழகத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை. என் தந்தை தமிழ் படித்துவிட்டு வங்கியில் வேலை செய்ததால் வருத்தமுற்றாரோ என்னவோ எனக்கும் என் தமக்கைக்கும் தமிழில் பெயர் வைத்து அழகு பார்த்தார். இளஞ்செழியன் என்ற என் பெயர், நான் படித்த காலத்தில் செழியனாகவும் பெங்களூரில் வேலை பார்த்த காலத்தில் இளனாகவும், இந்த அமெரிக்காவுக்கு வந்தபின் இலாவாகவும் மாறிப் போனது. என் தந்தையைத் தவிர வேறு யாரும் என்னை இளஞ்செழியன் என்ற முழுப் பெயரைச் சொல்லி அழைத்ததில்லை, அழைக்கவும் போவதில்லை என்று நினைத்திருந்தேன் ஆதிரையைப் பார்க்கும் வரை.


ஆதிரை - அவள் தான் பெங்களூரில் இருண்ட எனது இரு வருடங்களில் வெளிச்சத்தைப் பாய்ச்சியவள். இளஞ்செழியன் என்று என் பெயரை சுருதி சுத்தமாக அழைப்பாள். என் பெயர் முற்பிறவியின் செய்த தவத்தின் பலனை அனுபவித்தது.


ஐஸ்வர்யாவைப் போல அடிக்கின்ற அழகில்லை அவள். ஆனாலும் அவளிடத்து ஒரு அழகு இருந்தது. அவளின் அகன்ற கண்கள் அவள் பேச நினைப்பதை உதடுகளை முந்திக் கொண்டு காட்டிக் கொடுக்கும். அவளின் மெலிதாகச் சிவந்த உதடுகள் இயல்பிலேயே வரைந்ததைப் போலிருக்கும். அவளின் மேலுதட்டுக்கு மேலிருக்கும் சிறிய மச்சம், அவள் சிரிக்கும் போது அவள் கன்னத்தில் விழும் பணக்குழி, நான் பேசிக் கொண்டிருப்பதை அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போது பற்களால் கவ்வப்படும் கீழுதடு.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


எந்த ஒரு நிகழ்வையும் அவள் பார்க்கும் கோணம் வேறு விதமாயிருக்கும். ரோட்டோரமாய் துண்டு விரித்து அமர்ந்திருக்கும் பிச்சைக்காரப் பெரியவருக்கு பிரியாணி பொட்டலம் வாங்கித் தருவாள். “பாவம் முடியாத வயசு. பிள்ளைங்க கவனிக்கல போல. அதான் பிச்சை எடுக்கிறாரு. எங்கப்பாவுக்கு பிரியாணி வாங்கித்தர மாட்டனா? அது மாதிரின்னு வச்சிக்கயேன்”


அக்கா, அக்கா என்று சுற்றி வரும் பிச்சைக்கார சிறுவனை விரட்டி அடிப்பாள் - “இந்த வயசுலயே படிக்காம உழைக்காம சாப்பிடப் பழகிட்டானா பின்னாடி பிக் பாக்கெட்டா மாறிடுவான்” 


நான் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதை அவளிடம் இழந்து வந்தேன். எத்தனை நாட்கள் காதலை மனதில் பூட்டி வைப்பது. அது வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையாக உருண்டு வந்து இம்சித்தது. அவளிடம் என் காதலைச் சொல்ல முடிவெடுத்தேன்.


தனியாகக் கிடைத்த சந்தர்ப்பத்தில் அவளை மொட்டை மாடியில் இருந்த உணவகத்துக்கு அழைத்துச் சென்று என் மனதில் உள்ளதை அவளிடம் கொட்டினேன். 


நான் பேசுவதை முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கூர்ந்து கேட்டுக் கொண்டே வந்தாள். நான் பேசி முடித்ததும், தொண்டையை மெதுவாகக் கனைத்து கொண்டு, முகத்தில் விழுந்த அந்த ஒற்றை முடிக்கற்றையை ஒதுக்கி விட்டாள்.


“இளஞ்செழியன்..”


ஆதிரை இளஞ்செழியனின் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கே சொடுக்குங்கள்.
ஆதிரை இளஞ்செழியனின் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்கள் இங்கே சொடுக்குங்கள்.


30 comments:

Unknown said...

வித்தியாசமான முயற்சி..

இரண்டு கதைகளுமே அருமை..

டெம்ப்ளேட் பின்னூட்டம் போட விரும்புபவர்கள் மேலே உள்ளதை வெட்டி / ஒட்டிக் கொள்ளலாம்

:))

Anonymous said...

வித்தியாசமான முயற்சி..

இரண்டு கதைகளுமே அருமை.

Chitra said...

வித்தியாசமான முயற்சி..

இரண்டு முடிவுகளுமே அருமை.

.......... :-)

vasu balaji said...

இவ்வளவு பண்ணீங்க. முதல், ரெண்ட்டாவது, ரெண்டும்னு 3 சுட்டி வெச்சி, சொடுக்கினா இந்த டெம்ப்ளேட் பின்னூட்டம், தமிழ்மணம் தமிழிஷ் ஓட்டு எல்லாம் முடிக்கறாமாதிரி வைக்கப்படாதா!:))

நல்லாத்தானிருக்கு:)

Paleo God said...

இவ்வளவு பண்ணீங்க. முதல், ரெண்ட்டாவது, ரெண்டும்னு 3 சுட்டி வெச்சி, சொடுக்கினா இந்த டெம்ப்ளேட் பின்னூட்டம், தமிழ்மணம் தமிழிஷ் ஓட்டு எல்லாம் முடிக்கறாமாதிரி வைக்கப்படாதா!:))

நல்லாத்தானிருக்கு:)

சங்கர் said...

நீங்க தான் கவுதம் மேனனுக்கு இந்தக் கதையை சொன்னதா??

:))

சங்கர் said...

இந்தப் பின்னூட்டம் ஓகே வா??

ப்ரியமுடன் வசந்த் said...

வித்தியாசமான முயற்சி..

இரண்டு கதைகளுமே அருமை..

:))

ப்ரியமுடன் வசந்த் said...

ஜோக்ஸ் அபார்ட் முதல் கதையில வர்ற இலாவா நான் இருந்திருந்தா தற்கொலை செய்திருக்க மாட்டேன் கொலைதான்...

ப்ரியமுடன் வசந்த் said...

ரெண்டாவது கதையில வர்ற காதல் நல்லா இருந்தாலும் மனசுல ஒட்டலை


நீங்க தினியா? தினேஷா? குமாரா? தினேஷ்குமாரா?

Unknown said...

@சின்ன அம்மிணி - அவ்வ்வ்வ்வ்

@சித்ரா - அவ்வ்வ்வ்வ்வ்வ்

@வானம்பாடிகள் - நல்ல ஐடியா சார். அடுத்த பதிவுல முயற்சி செய்யலாம்.. :))

@ஷங்கர் - உங்க கூட டூஊஊஊஊஉ

@சங்கர் - நான் இன்னும் விண்ணைத் தாண்டி வருவாயா பாக்கல..
:((

@பிரியமுடன் வசந்த் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முதல் கதையில அவங்கள கொலை பண்ணினது அவன் தான் சார். கொலை பண்ணிட்டு விபத்து மாதிரி செட் செஞ்சிட்டான். அதைத்தான் - சந்தர்ப்பம் வாய்த்தது அப்பிடின்னு எழுதியிருக்கேன். கொலை செஞ்சிட்டு மனசு கேக்காம தற்கொலை செஞ்சிக்கிட்டான்.

அப்புறம் நான் முகிலன் முகிலன் முகிலன்.. :))))

ப்ரியமுடன் வசந்த் said...

//Indian Couple drowned in Niagara. Friend tried in vein.//

யோவ் முகிலன் இதுக்கு பிராக்கெட்ல தமிழ்படுத்தியிருக்கலாம்ல எத்தினி சினிமா பாக்குறீங்க...

க.பாலாசி said...

//இரண்டு கதைகளுமே அருமை..//

ஓ... இதுல ரெண்டு கதையிருக்கா !!!!

இரண்டும் அருமை... (எப்ப்ப்பூடி நாங்க இன்னும் சுருக்குவோம்ல....)

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
நல்லாத்தானிருக்கு:)//

இந்த டெம்ளேட்டையும் நோட் பண்ணிக்கிறேன்...

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நசரேயன் said...

கதைய இன்னும் படிக்கலை .. இது எப்படி இருக்கு

VISA said...

padichitu varea.
ipoathaiku template pinootam.
வித்தியாசமான முயற்சி..

இரண்டு கதைகளுமே அருமை..

பழமைபேசி said...

கதைய இன்னும் படிக்கலை .. இது எப்படி இருக்கு

But I will come back....

தர்ஷன் said...

//ஐஸ்வர்யாவைப் போல அடிக்கின்ற அழகில்லை அவள். ஆனாலும் அவளிடத்து ஒரு அழகு இருந்தது. அவளின் அகன்ற கண்கள் அவள் பேச நினைப்பதை உதடுகளை முந்திக் கொண்டு காட்டிக் கொடுக்கும். அவளின் மெலிதாகச் சிவந்த உதடுகள் இயல்பிலேயே வரைந்ததைப் போலிருக்கும். அவளின் மேலுதட்டுக்கு மேலிருக்கும் சிறிய மச்சம், அவள் சிரிக்கும் போது அவள் கன்னத்தில் விழும் பணக்குழி, நான் பேசிக் கொண்டிருப்பதை அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போது பற்களால் கவ்வப்படும் கீழுதடு.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.//

என்ன ஒரு ரசனை

கெளதம் மேனன் தோத்துட்டார் போங்க

Paleo God said...

சரி சரி கோவிக்காதீக..:)
ரெண்டு முடிவையும் படிச்சிட்டேன். உங்க ஊருங்க பேர் பத்தி நிறைய தெரிஞ்சிது..:)

பட்.... உங்களால இன்னும் நல்லா எழுத முடியும்னு தோணுது முகிலன். ஒரு ஸ்டைல் கொண்டுவாங்க பார்ப்பம்.

for the attempt.. Really great.:))

க ரா said...

அருமையான கதை இரண்டும். நன்றி

Unknown said...

@பிரியமுடன் வசந்த் - போட்ருக்கலாமே

@க.பாலாசி - தப்புத்தாங்கோ மன்னிச்சிருங்கோ

@சசிகுமார் - நன்றி சசி

@நசரேயன் - ரொம்ப அசிங்கமா இருக்கு.. :(((

@விசா - படிச்சிட்டு நல்லா திட்டிட்டுப் போங்க

@பழமை பேசி - இப்பிடித்தான் சொல்லுவீங்க. அப்புறம் எட்டிக்கூட பாக்க மாட்டீங்க

@தர்ஷன் - ஏங்க ரசனைக்கு கவுதம் மேனனை கம்பேர் பண்றீங்க. ஒரு சாண்டில்யன், சுஜாதா இப்பிடி கம்பேர் பண்ணலாமே ;-)

@ஷங்கர் - ஊர்பேரத் தவிர வேற ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டிங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஸ்டைல் இல்லாம எழுதுறதுதான் ஸ்டைல்னு நெனச்சிட்டிருக்கேன், என்னப்போயி...

@இராமசாமி கண்ணன் - நன்றி

கலகலப்ரியா said...

periya kathaiyaa... appuram varen...

நசரேயன் said...

வித்தியாசமான முயற்சி..

இரண்டு கதைகளுமே அருமை..

அது சரி(18185106603874041862) said...

முயற்சிக்கு வாழ்த்து முகிலன்.....ஒரே கதைக்கு இரண்டு முடிவுகள்...நல்லதொரு முயற்சி..

(பட் என்னவோ மிஸ் ஆகுது...நீளமா இருக்குன்னு சுருக்கிட்டீங்களா?)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உண்மையாலுமே நல்ல முயற்சி முகிலன்.. இது சாம்பிள் மாதிரி.. இன்னும் வேற மாதிரி கதைகளும் இந்த வகையில எழுதப் பாருங்க..

காதல் கதைகள் போரடிக்க ஆரம்பிச்சிடுச்சு. :) அதனால கதைகள விட அந்த வித்தியாசம் பிடிச்சிருந்தது..

ஸ்ஸ்ஸ்ஸப்பா.. எப்பிடியோ அதே டெம்ப்ளேட்டை திருப்பிப் போட்டு ஒரு வித்தியாசமான பின்னூட்டம் போட்டாச்சு :))

கலகலப்ரியா said...

superb technique.. superb story/ies.. =)

வினோத் கெளதம் said...

வித்தியாசமான முயற்சி..
இரண்டு கதைகளுமே அருமை..

ரொம்ப தேங்க்ஸ்ங்க..தனியா டைப் பண்ணவேண்டுமே என்று நினைத்தேன்..:)

Ramesh said...

இரண்டு கதைகளுமே அருமை..காதலை ஏத்துக்கிட்டு..பிரிஞ்சு போறது..ஏத்துக்காம விட்டு..சேந்திடறதுன்னு..யோசிச்சதும் நல்லாதான் இருக்கு..வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

Kathai viththiyasamana muyarchi... romba nalla irukku...