பாகம் - 1
பாகம் - 2
அமெரிக்காவுக்கு வர என்ன என்ன விதமான விசாக்கள் இருக்கின்றன என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.
இப்போது விசாவை உங்கள் பாஸ்போர்ட்டில் பதிய அமெரிக்க தூதரகத்துக்குப் போகும்போது என்ன என்ன முன்னேற்பாடுகளோடு செல்ல வேண்டும் என்பதை பார்ப்போம்.
விருந்தினர் விசா, படிப்பு விசாவுக்கு செல்பவர்கள் தங்கள் பயணம் முடிந்ததும் இந்தியா திரும்பிவிடுவோம் என்ற எண்ணத்தை விசா வழங்கும் அதிகாரிக்கு உறுதிப்படுத்துமாறு ஆவணங்களை சமர்ப்பிப்பது மிகவும் முக்கியம். அதே போல விருந்தினர் விசாவில் அமெரிக்கா செல்ல இருப்பவர்கள் தங்கள் பிரயாணத்துக்கான செலவுகளுக்கு போதிய பணம் இருப்பதைக் காட்ட வேண்டும். நீங்கள் அமெரிக்கா சென்று அங்கேயே தங்கி விடுவீர்கள் என்ற எண்ணம் விசா அதிகாரிக்குத் தோன்றி விட்டால் உங்களுக்கு விசா வழங்க விசா கணேஷை விட்டால் வேறு வழியே இல்லை.
விருந்தினர் விசாவில் செல்பவர்கள் கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்
1. அமெரிக்காவில் இருக்கும் தங்கள் மகன்/மகள் வேலை பார்ப்பதற்கான அத்தாட்சிக் கடிதம் - அவர்களின் மாத வருமானத்துடன்
2. அவர்களின் வங்கி மூன்று மாத ஸ்டேட்மெண்ட்
3. பே ஸ்லிப்
4. உங்கள் சொத்து விபரம் - யாராவது ஆடிட்டரைப் பிடித்தால் நெட் வொர்த் சர்டிஃபிகேட் என்று ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம்
5. நீங்கள் அரசு/தனியார் பணியில் இருப்பீர்களானால் அதற்கான அத்தாட்சி
ரிட்டயர்ட் ஆனவர்களை விட பணியில் இருப்பவர்களுக்கு விசா கிடைப்பது எளிது. உங்களுக்கு ஆங்கிலம் புரிந்து கொள்வீர்கள் ஆனால் பதில் பேசுவது கொஞ்சம் சிரமம் என்றால் கௌரவம் பார்க்காமல் தமிழில் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் சில கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விசாவை இழப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். உதாரணத்திற்கு, ஒருவரிடம் விசா ஆஃபிசர் கேட்டது - What is your daughter's immigration status? - இந்தக் கேள்விக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் இம்மிக்ரேசன் என்பதன் அர்த்தம் விளங்காவிட்டால் முழித்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான்.
உங்கள் மகன்/மகள் என்ன விசா ஸ்டேட்டஸில் இருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விசா பதிய செல்பவர்கள் முக்கியமாக தங்கள் படிப்பு சம்மந்தமான அத்தனை ஆவணங்களையும் ஒரிஜினல் + 2 காப்பி எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். சில நேரம் அவர்கள் ஒரு செட் கேட்பார்கள். தங்கள் எம்ப்ளாயர் பற்றிய அத்தனை விபரங்களையும் தெளிவாகத் தெரிந்து கொண்டு செல்வது நல்லது.
தங்களின் தற்போதைய வேலையின் மூன்று மாத பே ஸ்லிப், கடந்த இரண்டு வருட வருமான வரி பதிந்த அத்தாட்சி - சரல் ஃபார்ம், கடந்த ஐந்து ஆண்டு வேலை பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர், ஆகியவற்றை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.
முதல் முறை விசா பதிய செல்பவர்களை சில நேரங்களில் டெக்னிக்கல் கேள்விகள் கேட்பதைப் பார்த்திருக்கிறேன்.
Dependent விசா பெறச் செல்பவர்கள் - மனைவி/கணவன் - தங்களின் திருமணப் பதிவு பத்திரம், திருமண அழைப்பிதழ், திருமண ஆல்பம் இவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். குழந்தைகள் - பிறப்புச் சான்றிதழ் எடுத்துச் செல்ல வேண்டும்.
இத்தனை ஆவணங்களை எடுத்துச் சென்றாலும், அத்தனை ஆவணங்களையும் சரி பார்ப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எந்த ஆவணத்தையும் பார்க்காமல் விசா அளிக்கவும் செய்யலாம், எல்லா ஆவணங்களையும் பார்த்தும் விசா அளிக்காமல் போகலாம். ஆக விசா கிடைப்பது அன்று அந்த விசா ஆஃபிசர் எந்த மூடில் இருக்கிறாரோ அதைப் பொறுத்ததே.
பொதுவாக தூதரகத்தில் எந்தக் கேள்வி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்லுங்கள். தெளிவாகவும் சத்தமாகவும் தைரியமாகவும் பேசுங்கள். மென்று முழுங்கிப் பேசினால் வீண் சந்தேகங்கள் வந்து உங்கள் விசாவை பாதிக்கக் கூடும்.
சரி விசா வாங்கியாயிற்று. அடுத்தது பயணம்.
உங்கள் பெட்டிகளை செக்-இன் செய்த பின்பு எமிக்ரேஷன் க்ளியரன்ஸ் செய்ய வேண்டும். இந்திய அரசின் படிவம் ஒன்று இருக்கிறது. அதை நிரப்பி, அங்கே இருக்கும் அதிகாரிகளிடம் உங்கள் பாஸ்போர்ட்டையும் படிவத்தையும் ஒப்படைத்தால் அவர்கள் பாஸ்போர்ட்டில் நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நாளை ஸ்டாம்ப் செய்து விடுவார்கள். உங்கள் பாஸ்போர்ட் முடக்கப் பட்டதாகவோ இல்லை மார்க் செய்யப்பட்டதாகவோ இருந்தால் இந்த சோதனையை மீறி நீங்கள் வெளியேற முடியாது.
முட்டி வலி இருந்து நடக்க சிரமப் படுபவர்கள் கூச்சப்படாமல் சக்கர நாற்காலி உதவியை டிக்கெட் பெறும்போதே கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நடுவில் நீங்கள் ஐரோப்பா அல்லது மத்திய ஆசிய நாடுகளில் மாற்றம் செய்யும் போது கிட்டத்தட்ட 2 கி.மீ நடக்க வேண்டி இருக்கும். இரண்டு விமானங்களுக்கு இடையிலான நேரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஓட வேண்டியதிருக்கும்.
நீங்கள் அமெரிக்காவில் இறங்க வேண்டிய விமானத்தில் தரை இறங்க ஒரு மணி நேரம் இருக்கும் போது இரண்டு படிவங்களை உங்களுக்குத் தருவார்கள்
1. ஐ-94 படிவம்
2. கஸ்டம்ஸ் படிவம் (ஒரு குடும்பத்திற்கு ஒன்று)
இவற்றை எப்படி நிரப்புவது என்பதைத் தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம்.
அதில் அமெரிக்காவில் தங்கப் போகும் முகவரி என்ற இடத்தில் தெளிவான முகவரி முக்கியம். நீங்கள் ஏதாவது ஓட்டலில் தங்கப் போகிறீர்கள் என்றால் அந்த ஓட்டலின் முழு முகவரியையும் எழுத வேண்டும் - any good hotel - என்பது செல்லாது.
விசா வாங்கி, விமானத்தில் ஏறி விட்டால் அமெரிக்கா வந்து விடலாம் என்று நினைக்காதீர்கள். இங்கே இம்மிக்ரேசன் தான் மூன்றாவது மற்றும் மிக மிக முக்கியமான கண்டம். இதைத் தாண்டினால் தான் நீங்கள் அமெரிக்க மண்ணில் கால் பதிக்க முடியும்.
(பஞ்சதந்திரம் பட ஷூட்டிங்கிற்காக வந்த கமல்ஹாசனை உள்ளே விட மாட்டென் என்று சொன்னவர்களும், சமீபத்தில் ஷாருக்கானை ஒரு மணி நேரம் நிறுத்தி விசாரணை செய்தவர்களும் இதே இமிக்ரேஷன் ஆட்கள் தான்)
இங்கேயும் இம்மிக்ரேசன் அதிகாரி எந்த மூடில் இருக்கிறாரோ அதைப் பொறுத்தே உங்களுக்கு அனுமதி கிடைக்கும்.
பொதுவாக விருந்தினர் விசாவில் வருபவர்களுக்கு ஆறு மாதம் தங்கியிருக்க அனுமதி கிடைக்கும். (நீங்கள் கடந்த முறை வந்து திரும்பி ஒரு மாதத்துக்குள் வருவீர்களேயானால் ஒரு மாதமோ இரண்டு மாதமோ மட்டுமே கிடைக்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மறுபடியும் 6 மாதம் கிடைக்கலாம்).
படிப்பு விசாவில் வருபவர்கள் படிப்பு முடியும் வரை இருக்க அனுமதி வழங்கப்படும்.
வேலை விசாவில் வருபவர்களின் பெட்டிஷனில் என்ன முடிவு தேதி இருக்கிறதோ அது வரை தங்க அனுமதிக்கப் படுவர் (விசா எக்ஸ்பயரி தேதி அதற்கு முன்னமே இருந்தாலும்).
மறுபடியும் இம்மிக்ரேஷன் அதிகாரி கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள். சத்தமாகவும் தெளிவாகவும் தைரியமாகவும் பேசுங்கள். இங்கே நீங்கள் தமிழில் பேச வாய்ப்பில்லை. ஆங்கிலத்தில் தான் உரையாடியாக வேண்டும்.
உங்கள் பதில்கள் அதிகாரியைத் திருப்திப் படுத்தினால் பாஸ்போர்ட்டில் நீங்கள் நிரப்பிய ஐ-94 படிவத்தை தேதியிட்டு பின் செய்து தருவார் இம்மிக்ரேசன் அதிகாரி. அந்த படிவத்தில் இருக்கும் தேதி வரை நீங்கள் அமெரிக்காவில் இருக்க அனுமதி உண்டு. ஒரு வேளை அதற்கு மேல் இருக்க வேண்டியிருந்தால் எக்ஸ்டென்ஷனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். எக்ஸ்டென்ஷன் பெறாமல் நீங்கள் அதிக நாள் இருந்து இந்தியா திரும்பியிருந்தால் மறுபடி அமெரிக்கா வருவது கடினமாகிவிடும்.
இந்தப் படிவத்தைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அமெரிக்காவை விட்டு வெளியேறும்போது அதை ஏர்வேஸ் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நீங்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட்டீர்கள் என்பதற்கு அதுவே அத்தாட்சி. இதை ஒப்படைக்கத் தவறினால் அடுத்த முறை அமெரிக்கா வருவது சிரமமாகிவிடும்.
அடுத்த பதிவில் அமெரிக்காவில் இறங்கிய பின் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சொல்கிறேன்.

19 comments:
me the first
ரொம்ப நாள் விட்டு பதிவ போட்டிருக்கிறீர்கள்.. நல்ல பதிவு சார்..
சார்.. அமெரிக்கா விசா இருந்தாலும், கஸ்டம்ஸ் அதிகாரிகள் , சில சமயம் உள்ளே அனுமதிக்க மறுத்திருக்கிறார்களா?..
//சார்.. அமெரிக்கா விசா இருந்தாலும், கஸ்டம்ஸ் அதிகாரிகள் , சில சமயம் உள்ளே அனுமதிக்க மறுத்திருக்கிறார்களா?.//
கஸ்டம்ஸ் இல்லைப்பா இமிக்ரேசன் - கமல்ஹாசனை உள்ள வர விடமாட்டேன்னு சொன்னதும் இவங்க தான், ஷாருக்கைப் பிடிச்சி வச்சவங்களும் இவங்கதான்.. :))
Useful info. :-)
துபாயில இத்தனை கஷ்டம் இல்லை. உசிலம்பட்டி டூ தேனி மாதிரி அவ்வளவு ஈஸி.
ம்... 2001 ல வரவேண்டியது. எல்லாம் ஒசாமா புண்ணியம்! தகவல்கள் அருமை தினேஷ்.
பிரபாகர்...
நல்ல தகவல்கள் கண்டிப்பா பயனுள்ளதாக இருக்கும்....தொடருங்கள்..
மிகவும் பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்
நல்ல விலாவாரியா எழுதியிருக்கீங்க. நான் அமெரிக்கா வர்றதா இருந்தா உபயோகிக்கறேன் :)
நல்ல பதிவு
இருங்க.. ஒரு பிரிண்ட் எடுத்துகிறேன்.. நாளபின்ன ஒசாமாவோ, ஒபாமாவோ... உங்க சேவை எங்கநாட்டுக்கு தேவைன்னு கூப்பிட்டாங்கன்னு வச்சிக்குங்க தேவைப்படும்ல...அதுக்குத்தான்...
பயன்படுற தகவல்கள்...
nalla tagavalgal vaalthukkal
நல்ல பதிவு....
///பஞ்சதந்திரம் பட ஷூட்டிங்கிற்காக வந்த கமல்ஹாசனை உள்ளே விட மாட்டென் என்று சொன்னவர்களும்///
அது ‘கனடா’-ங்க.
‘ஹசன்’-ன்னு பேர் இருந்தனால... எக்ஸ்ட்ரா கேள்வி கேட்டாங்கன்னுதான் கேள்விப்பட்டேன்.
’உள்ளே விட மாட்டேன்’ன்னு சொன்ன மாதிரி படிச்சதா நினைவில்லை.
//உங்கள் பதில்கள் அதிகாரியைத் திருப்திப் படுத்தினால் பாஸ்போர்ட்டில் நீங்கள் நிரப்பிய ஐ-94 படிவத்தை தேதியிட்டு பின் செய்து தருவார் இம்மிக்ரேசன் அதிகாரி. அந்த படிவத்தில் இருக்கும் தேதி வரை நீங்கள் அமெரிக்காவில் இருக்க அனுமதி உண்டு//
இதுதான் முக்கியமான விஷயம் போல! இங்க விசா கிடைச்சாலே ஆல் ஓவர்னு நினைச்சிகிறாங்க, அங்க அவன் தர்றதுதான் ஒரிஜினல் அனுமதி இல்லையா முகிலன்?
--
என்னை மாதிரி கவிஞர்களக்கூடவா செக் பண்ணுவாங்க?? :)
// சின்ன அம்மிணி said...
நல்ல விலாவாரியா எழுதியிருக்கீங்க. நான் அமெரிக்கா வர்றதா இருந்தா உபயோகிக்கறேன் :)//
வரும் போது சொல்லுங்க நான் இடத்தை காலி பண்ணிட்டு ஊருக்கு போறேன்.
@சிதரா - நன்றி
@ஜெய்லானி - மக்களும் அதே மாதிரி நம்ம மக்களா இருக்கிறதப் பாத்திருக்கேன்.
@பிரபாகர் - அதுனால என்ன பிரபா, ஒரு டூரிஸ்ட் விசிட் அடிங்க பையனோட...
@நாடோடி - நன்றி நாடோடி
@பனித்துளி சங்கர் - வாங்க பனித்துளி
@சின்ன அம்மிணி - நசரேயன் சொன்னதக் கேட்டீங்களா?
@கரிசல்காரன் - நன்றிங்க
@க.பாலாசி - ஒபாமா கூப்புட்டாப் பரவாயில்ல. ஒசாமா கூப்புட்டா இந்த வழியிலயா வருவீங்க?
@எல்.கே - நன்றிங்க
@மலர் - நன்றிங்க
@ஹாலிவுட் பாலா - வாங்க பாலா. ரொம்ப நாளாச்சி..
அமெரிக்காவுக்குள்ள விடாததாலதான் கனடாவுலயே ஷூட்டிங் நடத்திட்டுப் போயிட்டாங்களாம். எதுக்கு வந்திருக்கீங்கங்கிற கேள்விக்கு கமல் “ஷூட்டிங்” அப்பிடின்னு பதில் சொன்னாராம். :))
@ஷங்கர் - அதே அதே..
@நசரேயன் - தோடா..
very useful informations..
inga varum pothu patta kastam ellam flash back aa varuthunga.. :)
best wishes to you..
முகிலன் ஒரு வழியா மூன்று பகுதிகளையும் படித்து விட்டேன் :-)
ரொம்ப நல்லா விரிவா எழுதி இருக்கீங்க. எனக்கு இருந்த விசா சம்பந்தமான சில சந்தேகங்கள் தெளிவாகியது நன்றி.
தலைப்பு பொருத்தமானது தான்.. நானும் அப்படி என்ன தான் இருக்குனு ஒருநாள் போகலாம் என்று இருக்கிறேன் வாய்ப்பு கிடைக்கும் போது.
Post a Comment