Monday, May 17, 2010

ராபின் ஹூட் (2010)

ராபின் ஹூட் என்று சொன்னதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?

பின்னிரவில், சென்னை நகரத் தெருக்களில் கையில் துப்பாக்கியோடு தவறு செய்பவர்களையும் ரவுடிகளையும் வேட்டையாடுவது நினைவுக்கு வந்தால், நீங்கள் தீவிர ரஜினி ரசிகர், கொஞ்சம் ஓரமாக உட்காருங்கள்.

இருப்பவர்களிடம் திருடி இல்லாதவர்களுக்குக் கொடுப்பவர் என்று நினைவுக்கு வந்தால் நீங்கள் பல தமிழ்ப்படங்களைப் பார்த்தவர்.

ராபின் ஹூட் இங்கிலாந்தின் Fairy Tale Hero. வில் வித்தையில் நம் அர்ஜூனனுக்கு ஈடானவன். ஒரு கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு பணக்காரர்களிடம் திருடி ஏழைகளுக்குக் கொடுத்த ஏழைப் பங்காளி. இது தான் நமக்குத் தெரிந்த கதை.

ஆனால் ராபின் ஹூட் எப்படி உருவானான்? இதைத்தான் ரிட்லி ஸ்காட் இயக்கி ஆஸ்கார் ஜெயித்த ரஸல் க்ரோவ் நடிப்பில் வெளிவந்த ராபின் ஹூட் திரைப்படம் சொல்கிறது.



பனிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாம் சிலுவைப்போரில் ஈடுபட்டு வந்த இங்கிலாந்துப் படையில் ஒரு சாதாரண வில் வீரன் ராபின் லாங்க்ஸ்ட்ரைட். அதே போரில் ஈடுபட்டு வந்த இங்கிலாந்து அரசர் ரிச்சர்ட் தி லயன்ஹார்ட் இறந்து போய்விட ராபினும் அவனது மூன்று நண்பர்களும் நாடு திரும்பலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் ஃப்ரெஞ்சு அரசரின் கையாளான காட்ஃப்ரே அரசரைக் கொல்வதாக நினைத்து சில Knightகளைக் கொல்வதைப் பார்த்துவிடுகிறார்கள். அந்த கொலைகாரக் கும்பலை விரட்டியடிக்கிறார்கள்.

நாடு திரும்பும்போது கை நிறைய பணத்தோடு செல்லலாம் என்று அந்த நைட்களிடம் இருந்த பணத்தையும் அவர்களின் உடைகளையும் எடுத்துக் கொண்டு அவர்களுக்கான அவர்களைப் போல வேடமிட்டுக்கொண்டு கப்பலிலேயே நாடு திரும்பலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அப்போது இறந்து கொண்டிருக்கும் நைட் தனது வாளை தன் தந்தையிடம் கொடுக்கச் சொல்கிறார்.

லண்டனுக்குத் திரும்பும் ராபின் அரசர் இறந்த தகவலை அறிவிக்கும் பொறுப்பை ஏற்கவேண்டியாகிறது. அதோடு அரசரின் தம்பி ஜான் அடுத்த அரசராகப் பதவி ஏற்பதையும் பார்த்துவிட்டு வாளை ஒப்படைப்பதற்காக நண்பர்களுடன் நாட்டிங்காம் செல்கிறான்.

அங்கே தன் மகன் இறந்தது தெரிந்தால் நிலத்தை அரசு பிடுங்கிக் கொள்ளும் என்ற பயத்தில் அந்த கிழவர் ராபினை தன் மகனாக நடிக்கச் சொல்கிறார். ராபினும் சம்மதிக்கிறான். முதலில் அவனை அங்கீகரிக்காத கிழவரின் மருமகள் ராபின் வரிக்காக எடுத்துச் செல்லப்பட்ட விதை மணிகளை அவர்களிடம் இருந்து பறித்து வந்தபின் அவனை நம்ப ஆரம்பிக்கிறாள்.

இதே நேரத்தில் அரசன் ஜான் பொறுப்பில்லாமல் போரில் செல்வான பணத்தை மக்களுக்கு அதிக வரி விதிப்பதன் மூலம் வசூல் செய்ய நினக்கிறான். அவன் கட்டளையின் பேரில், புதிய சான்சலராகப் பொறுப்பேற்கும் காட்ஃப்ரே மக்களிடம் வரி வசூல் செய்யப் புறப்படுகிறான். ஆனால் அவன் ப்ரெஞ்சு மன்னனின் உத்தரவின் பேரில் நூறு ஃப்ரெஞ்சுப் படைவீரர்களைச் சேர்த்துக் கொண்டு மக்களை தாக்கியும் கொலை செய்தும் நாட்டில் குழப்பம் விளைவிக்கிறான். நாட்டில் உள்நாட்டுப் போர் நடக்கும் சூழல் வருகிறது.

மன்னனின் நடவடிக்கையால் கோபமுற்ற மற்ற நைட்கள் பாரோனில் சந்தித்து கொதித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் காட்ஃப்ரேயின் துரோகத்தைத் தெரிந்து கொண்ட மன்னன் நாட்டைக்காப்பாற்ற மக்களை ஒன்று திரட்ட வேண்டியதன் கட்டாயத்தைப் புரிந்து கொள்கிறான். பாரோனில் இருக்கும் அனைத்து நைட்டுகளையும் சந்தித்து தன்னுடன் சேர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறான். சேர்ந்து கொள்ள வேண்டுமென்றால் நில உரிமை வேண்டும் என்று கோரிக்கையை ராபின் முன்வைக்கிறான். வேறு வழியின்றி மன்னனும் ஒத்துக் கொள்கிறான்.

பாரோனில் கலந்து கொண்ட அத்தனை பேரும் திரண்டு நாட்டிங்காமில் கும்மாளமிட்டுக்கொண்டிருக்கும் காட்ஃப்ரேயின் படையை அடித்து விரட்டுகின்றனர்.

இந்த நேரத்தில் ஃப்ரெஞ்சுப் படை ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பல கப்பல்களில் இங்கிலாந்தின் கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வரவேற்க காட்ஃப்ரேயும் அங்கே காத்திருக்கிறான்.

நாட்டிங்காமிலிருந்து ஆங்கிலப் படைகள் ஃப்ரெஞ்சுப் படை வந்திறங்க இருக்கும் கடற்கரைக்குச் சென்று அவர்களை எதிர்கொள்கின்றனர். ஒரு சிறிய போருக்குப் பிறகு ஃப்ரெஞ்சு பின்வாங்குகிறது. ராபின் அம்பால் காட்ஃப்ரேயைக் கொல்கிறான்.

ஃப்ரெஞ்சை துரத்தியதும் மன்னன் தான் கொடுத்த வாக்குறுதியை நம் நாட்டு அரசியல்வாதிகளைப் போல காற்றில் பறக்க விட்டுவிடுகிறான். அதோடு ராபினை வழிப்பறிக் கொள்ளைக்காரன் என்று அறிவித்து விடுகிறான்.

ஷெர்வுட் காட்டில் சென்று ஒளிந்து கொள்ளும் ராபின், இங்கிலாந்தின் மிகவும் பிரபலாமான நாட்டுப்புற நாயகனாகிறான்.

(அப்பாடா உண்மைத்தமிழன் மாதிரி கதைய சொல்லியாச்சி)

க்ளாடியேட்டர் படத்தில் க்ளாடியேட்டராக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஆஸ்கரை வென்ற ரஸ்ஸல் குரோவ் இந்தப் படத்தில் பெறும் ஏமாற்றத்தைத் தருகிறார். க்ளாடியேட்டரில் நடித்ததில் 25%கூட இந்தப் படத்தில் நடிக்கவில்லை. மரியானாக (கிழவரின் மருமகள்) நடித்த நடிகை கேட் ப்ளான்செட்டும் ஏமாற்றம் தரும் அளவிலே நடித்திருக்கிறார்.

கிங் ஜானாக நடித்தவரும், அவரது அன்னையாக நடித்தவரும், கிழவர் லாக்ஸ்லியாக நடித்தவரும் அற்புதமாக நடித்திருக்கின்றனர். அது இன்னும் ரஸ்ஸலின் நடிப்பை மங்கச் செய்கிறது.

செட்டிங்க்ஸும் உடை அலங்காரமும் நம்மை 12ம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்கிறது. முதல் போர்க்காட்சியும் கடைசிப் போர் காட்சியும் போர்ப் பட விரும்பிகளைக் கண்டிப்பாக ஏமாற்றாது. கேமராவும் பல இடங்களில் அற்புதமாக இருக்கிறது.

மொத்தத்தில் கிளாடியேட்டர் பார்த்து ரஸ்ஸலின் ரசிகர்களான  என்னைப் போன்றவர்களுக்கு இந்தப் படம் பெருத்த ஏமாற்றம்.

22 comments:

செ.சரவணக்குமார் said...

எதிர்பார்ப்பில் இருந்த படம் இது. கண்டிப்பாக பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி முகிலன்.

S Maharajan said...

//ராபின் ஹூட் என்று சொன்னதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?பின்னிரவில், சென்னை நகரத் தெருக்களில் கையில் துப்பாக்கியோடு தவறு செய்பவர்களையும் ரவுடிகளையும் வேட்டையாடுவது நினைவுக்கு வந்தால், நீங்கள் தீவிர ரஜினி ரசிகர்//

உண்மைதான் என்ன செய்ய அதானே நினைவுக்கு வருகிறது
அப்போ இந்த படம் பார்க்கலாம் அப்படிதானே?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கண்டிப்பா பார்க்கனும் சார்..

Chitra said...

பின்னிரவில், சென்னை நகரத் தெருக்களில் கையில் துப்பாக்கியோடு தவறு செய்பவர்களையும் ரவுடிகளையும் வேட்டையாடுவது நினைவுக்கு வந்தால், நீங்கள் தீவிர ரஜினி ரசிகர், கொஞ்சம் ஓரமாக உட்காருங்கள்.



....... I am escappu!!!

சைவகொத்துப்பரோட்டா said...

எம்மாம் பெரிய கதை!!!! :))

ஜெய்லானி said...

அப்ப பாத்திடுவோம்.

நாடோடி said...

ந‌ல்ல‌ விம‌ர்ச‌ன‌ம்.. க‌ண்டிப்பாக‌ பார்க்கிறேன்..

க.பாலாசி said...

அஹா.... ஒரு வழியா கதைய சொல்லிட்டீங்க... பெறவு எதுக்கு படம் பாக்கணும்...??

யாரோ - ? said...
This comment has been removed by the author.
யாரோ - ? said...

watch online Robin hood 2010 http://digduk.com/

தர்ஷன் said...

நான் எப்படியோ என் தம்பி இந்தப் படத்தை எக்கச்சக்கமாய் எதிர்பார்க்கிறான். ராபின் ஹூத் என்றவுடன் எனக்கு ஞாபகம் வந்தது. சிறுவயதில் பார்த்த டெலிசீரியல். சீன் கோனரியின் மகன் நடித்தது. அப்படியே தலைவரின் நான் சிவப்பு மனிதனும்

Anonymous said...

பாத்தடறோம்

ராஜ நடராஜன் said...

இதென்ன புதுக்கதை சொல்றீங்க?உண்மையான கதை கெவின் காஸ்னர் நடிச்சு 1991ல ஆஸ்கர் நாமினேசனுக்குப் போன ராபின்ஹுட் ன்னுல இதுவரைக்கும் நினைச்சுகிட்டு இருக்கேன்.

இந்த படத்தையும் பார்த்துட்டு யார் போலி ங்கிறத சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//ஷெர்வுட் //

இது காச்சுற பேரலா?

ராஜ நடராஜன் said...

//ஃப்ரெஞ்சை துரத்தியதும் மன்னன் தான் கொடுத்த வாக்குறுதியை நம் நாட்டு அரசியல்வாதிகளைப் போல காற்றில் பறக்க விட்டுவிடுகிறான். அதோடு ராபினை வழிப்பறிக் கொள்ளைக்காரன் என்று அறிவித்து விடுகிறான்.//

ஆனால் மக்கள் மனதில் அவன் திருடர்களின் இளவரசன்(Prince of thieves) என்ற பட்டத்தை சுமந்துகிட்டான்.

சிநேகிதன் அக்பர் said...

கண்டிப்பா இந்த படத்தை பார்க்கணும்.

Cable சங்கர் said...

/(அப்பாடா கேபிள் சங்கர் மாதிரி கதைய சொல்லியாச்சி//

நான் எப்பங்க இவ்வளவு பெரிசா கதை சொன்னேன்.. உ.தான்னு எழுதறதுக்கு பதிலா என் பேரை எழுதிட்டீங்களோ../:(

Unknown said...

செ.சரவணக்குமார்
@எஸ்.மஹராஜன்
@பட்டாபட்டி
@சித்ரா
@சைவக்கொத்துப்பரோட்டா
@ஜெய்லாஅனி
@நாடோடி
@க.பாலாசி
@யாரோ-?
@தர்ஷன்
@சின்ன அம்மிணி
@ராஜநடராஜன்
@அக்பர்
வருகைக்கு நன்றி

@கேபிள் சங்கர் - ஆமா சார். உண்மைத்தமிழன்னு போட நினைச்சி உங்க பேரு போட்டுட்டேன்.. மாத்திடுறேன்.

எல் கே said...

rightu padam paarthachu

அமுதா கிருஷ்ணா said...

பார்க்கணுமே...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சீக்கிரமா பார்த்துடனும்.. கதைய படிக்காம போறேன்.. எனக்கும் ஏமாற்றமாயிருக்குமான்னு தெரியல..

KUTTI said...

HAI MUGILAN,

THANKS FOR VISIT MY PAGE AND YOUR SWEET COMMENTS.

MANO