Saturday, May 1, 2010

அஹம் ப்ரம்மாஸ்மி

போன (மீள்!?) பதிவுல அந்தக் கதை எந்தப் படத்தோட இன்ஸ்பிரேஷன்னு ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதுக்கு யாருமே பதில் சொல்லலை. சிலர் இந்தக் கதையே ஒரு ஆங்கிலப் படத்தோட கதைன்னு நினைச்சிட்டாங்க.


CONfidence - அப்பிடின்னு ஒரு படம். அந்தப் படம் வழக்கமான ஒரு Con movie. எனக்கு இந்த மாதிரி படங்கள் ரொம்பப் பிடிக்கும். அந்தப் படத்துல ஹீரோ ஒரு சீன்ல எப்பிடி CON செய்யறதுன்னு விளக்குவாரு. அந்த விளக்கத்தையும், அந்தப் படத்தோட முதல் சீனையும் வச்சி நான் எழுதின கதை இது. படம் பாக்க முடிஞ்சா பாருங்க.

இப்ப இந்தப் பதிவுக்கு வருவோம். சின்ன அம்மிணி ஒரு தொடர்பதிவுக்கு என்னைக் கூப்பிட்டிருந்தாங்க.

நான் ஒண்ணாவதுல இருந்து அஞ்சாவது வரைக்கும் படிச்ச ஸ்கூலுக்குப் பக்கத்துல ஒரு மாரியம்மன் கோவில் இருக்கும். அந்தக் கோவில் நாடார் சமூகத்தவங்களோட கோவில். ஆனா அந்தக் கோவில்ல ஒரு அய்யர் தான் பூசாரியா இருப்பார். எங்க ஸ்கூலுக்கு காலைல இண்டர்வல் விடுற நேரம் அவர் கோவில் நடை சாத்திட்டு வீட்டுக்குப் போயிட்டிருப்பார். நல்ல தாட்டியான உருவம். கோவில் சாவிகளை ஒரு பெரிய கயிறுல ரெண்டு பக்கமும் கட்டி தோள்ல தொங்க விட்டுக்கிட்டுப் போவார். அவரைப் பாத்தாலே தெரியும் இது பாலும் நெய்யுமா சாப்புட்டு சாப்புட்டு ஏறிப்போன உடம்புன்னு.

பரிட்சை நேரத்துல நாங்க அந்தக் கோவிலுக்குப் போயி சாமி கும்புடுவோம். ரொம்ப ஜாக்கிரதையா தன் விரல் நகம் கூட எங்க மேலப் பட்டுடாத மாதிரி விபூதி குங்குமம் குடுப்பார். எங்கக் கூட படிச்சக் கிறிஸ்துவ நண்பன் ஒருத்தனை மட்டும் கோவிலுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிடுவார். அப்ப ஆரம்பிச்சது எனக்குள்ள கேள்விகள்.

1. சாமி எல்லாருக்கும்ன்னா, சாமிக்கும் எனக்கும் நடுவுல எதுக்கு ஒரு புரோக்கர்?
2. ஏன் அந்த ஆள் எங்க மேல விரல் தீண்டாம நடந்துக்குறார்.?
3. அந்த கிறிஸ்துவப் பையனை மட்டும் ஏன் கோவிலுக்குள்ள வர விட மாட்டேங்கிறார்?
4. அவர் சன்னிதிக்குள்ள போய் சாமியைத் தொட்டு பூஜை செய்யும் போது நான் ஏன் சாமியைத் தொடக்கூடாது?
5. அப்பிடி என்னை விட அந்தாள் எந்த விதத்துல ஒசந்துட்டாரு?

இப்பிடியெல்லாம் எனக்குள்ள கேள்விகள் எழுந்த நேரத்துல எனக்கு இந்த பூசாரிகள் யாரு. அவங்க என்ன எல்லாம் சொல்லி நம்மளை விலக்கி வச்சிருக்காங்க அப்பிடிங்கிற விஷயங்களைச் சொல்லிக் குடுத்தாங்க சில நண்பர்கள். இவங்களுக்காக மட்டுமே நான் கோவில் போறதை அறவே வெறுத்தேன்.

எங்க வீட்டுல வத்திராயிருப்பு பக்கத்துல இருக்கிற சுந்தர மகாலிங்கம் கோவில்ல ஏதோ வேண்டுதல் இருந்ததுன்னு அதை நிறைவேத்த ஒரு மண்டலம் - 48 நாள் - வீட்டுல விரதம் இருக்கணும், கவுச்சி சாப்புடக்கூடாதுன்னு சொன்னாங்க. என்ன வேண்டுதல்னு கேட்டேன். கடா வெட்டுறதா வேண்டுதல்னு சொன்னாங்க. சாமிக்கே கடாவை வெட்டப் போறீங்க. அப்புறம் எதுக்கு நான் 48 நாள் கவுச்சி சாப்புடக்கூடாதுன்னு கேட்டுட்டு நான் பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு இருந்தேன். அதுனால கடைசியில என்னைக் கூப்புடாமலே அவங்க மட்டும் கோவிலுக்குப் போயிட்டு வந்துட்டாங்க. அந்தக் கடாவை சாப்புட முடியாமலே போயிடுச்சி.

அப்புறமா சில பல பிராமின் ஃப்ரண்ட்ஸ் கிடைச்சாங்க. அவங்க மூலமா எல்லா பிராமின்ஸும் அப்பிடி இல்ல. ஒரு குரூப்புதான் அப்பிடித் திரியிறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். ஆனாலும், ஒருத்தர் பிராமின்னு தெரிஞ்சா ஒரு அடி வெளிய நின்னு அவங்க எந்த குரூப்புங்கிறத நோட்டம் விட்டுட்டுத்தான் அவங்க கூட பழகுறது. ஆனாலும் கோவிலுக்கு மட்டும் போறதில்லை.

“நட்ட கல்லை சாமியென்று நாலு புட்பம் சாத்தியே,
சுற்றி வந்து முணு முணுவென சொல்லு மந்திரம் ஏதடா,
நட்ட கல்லும் பேசுமோ?…நாதன் உள்ளிருக்கையில்.
சுட்ட சட்டி சட்டுவந்தான், கறிச்சுவை அறியுமோ?.


நான் பி.எஸ்.சி பிசிக்ஸ் படிக்கும் போது எங்க ஹெச்.ஓ.டி எங்களுக்கு முதல் நாள் வகுப்பில் மேல இருக்கிற பாட்டைச் சொல்லிக் குடுத்தார். அவர் எனக்குள்ள மேலும் மேலும் இறை எதிர்ப்பை வளர்த்தார்.

அப்ப இந்திய மாணவர் சங்கத்துல ஈடுபாட்டோட இருந்து வந்தேன். மாவட்டக் கவுன்சில் உறுப்பினராவும் இருந்தேன். அப்போ மார்க்ஸியமும் கடவுள் எதிர்ப்பும் அறிமுகமானது. இந்து மதக் கடவுள்களையும் இந்து மத நம்பிக்கைகளையும் மட்டும் எதிர்க்கும் பெரியாரிஸ்டுகளோட விவாதம் செய்யிற அளவுக்கு ஞானம் வளர்ந்தது. கல்லூரியில அனைத்து மதங்கள்லயும் இருக்குற மூட நம்பிக்கைகளைப் பத்தி பேசி எதிரிகளை சம்பாதிச்சிக்கிட்டேன். சில நண்பர்களும் கோவிச்சிக்கிட்டுப் பிரிஞ்சிட்டாங்க.

2004ல அமெரிக்கா வந்தேன். நியூ ஜெர்சியில இருக்கிற ஒரு கோவில் - ப்ரிட்ஜ் வாட்டர் டெம்பிள் - ல மசால் தோசை(?!) நல்லா இருக்கும்னு சொன்னதைக் கேட்டு அங்க போனோம். என் கூட வந்திருந்த அக்கட தேச நண்பர் $11 குடுத்து அர்ச்சனை செஞ்சார். அங்கயும் அர்ச்சகர்களா பிராமின்ஸ் தான். கோவில் கர்ப்பக்கிரகத்துக்குள்ள அவங்களைத் தவிர யாரும் போகக் கூடாது. சாமி சிலைகளை யாரும் தொடக்கூடாது. சாமியை யாரும் ஃபோட்டோ எடுக்கக் கூடாதுன்னு போர்ட் போட்டிருந்தாங்க. ஆனா வீடியோ கேமிரால உள்ள இருக்கிர வெங்கிடாசலபதியை வெளிய டி.வியில லைவா காட்டிட்டு இருந்தாங்க. அவங்க படம் எடுத்தா கடவுள் பவர் குறையாது போல.
(மசால் தோசை உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்தது)

அடுத்து 2005ல ராச்சஸ்டர்ல இலங்கைத் தமிழர்கள் நடத்துற ஒரு கோவில் இருக்கு. அங்க சாப்பாடு ஃப்ரீ அப்பிடின்னு ஒரு நம்பகமானத் தகவல் கிடைச்சது. சரி ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுவோம்னு நானும் தங்கமணியும் கிளம்பிப் போனோம்.

கோவிலுக்குள்ள போனதும் ப்ரிட்ஜ் வாட்டர் மாதிரி கேண்டீன் எதுவும் இல்லைங்கிறதப் பாத்ததும் கொஞ்சம் ஏமாத்தமா போச்சி. சரின்னு கோவில் சன்னிதிக்குள்ள போனோம். அங்க ஒரு பெண் கழுத்துல ருத்ராட்ச மாலை போட்டுக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தாங்க. எங்களைப் பாத்ததும் “அர்ச்சனை செய்யணுமா?” அப்பிடின்னு கேட்டாங்க. எனக்கு ப்ரிட்ஜ் வாட்டர் டெம்பிள் நினைவுக்கு வரவும் வேண்டாம்னு சொல்லிட்டு கோவிலை சுத்திப் பாத்தோம். நாங்க அப்போ நின்னுக்கிட்டிருந்தது கர்ப்பக் கிரகம். மூலஸ்தானத்தை சுத்தி வந்து எங்க கையால சாமி சிலைகளைத் தொட யாரும் மறுப்பு சொல்லலை. எங்கக்கிட்ட இருந்த கேமிரால சாமியை ஃபோட்டோ எடுக்கலாமான்னு கேட்க, தாராளமான்னு பதில் வந்தது.

ஆச்சரியப்பட்டுக்கிட்டே கர்ப்பக்கிரகத்தை விட்டு வெளிய வந்ததும், ஒருத்தர் எங்களைப் பாத்து - “போங்க போய் சாப்புடுங்க”ன்னு சொன்னாங்க. அதுக்குத்தான வந்தோம்னு நினைச்சிக்கிட்டு உள்ள போயி ஒரு ப்ளேட்ல சாப்பாடு வாங்கிக்கிட்டு வெளிய வந்து உக்காந்து சாப்பிட்டோம். சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது.

அதுக்கப்புறம் அந்தக் கோவிலைப் பத்தி நிறைய கேள்விப்பட்டு அடிக்கடி போக ஆரம்பிச்சோம். எங்களுக்கு அமெரிக்கால சொந்த பந்தங்கள்னு சொல்லிக்க யாரும் இல்லாததால அந்தக் கோவில் தான் எங்களுக்கு தாய் வீடாச்சி. அங்க வரவங்க எல்லாம் சொந்தக் காரவுங்க ஆயிட்டாங்க.

அந்தக் கோவில்ல பூஜை பண்ண அப்பாயிண்டட் அய்யர் யாரும் இல்லை. ஒவ்வொரு நாள், ஒவ்வொரு வேளையும் வாலண்டியர்கள் தான் செய்வாங்க. இன்னைக்கி இவங்க அப்பிடின்னு பிரிச்சி குடுத்துருக்காங்க. இந்த வாலண்டியர்கள்ல எல்லா ஜாதி, மொழி, நாட்டுக்காரவங்களும் இருக்காங்க. நாங்களும் (நான் அல்லது தங்கமணி) ஞாயிற்றுக் கிழமைகள்ல காலை பூஜை செய்யறோம். சமஸ்கிருத மந்திரங்கள் தான் சொல்றோம். சிவ புராணமும் படிப்போம். எங்களை தமிழ்லயே மந்திரங்கள் (திருவாசகம், திருப்புராணம் இதுல இருந்து) சொல்லலாம்னு அனுமதி குடுத்துருக்காங்க. ஆனாலும் அந்தப் பாடல்களைத் திரட்ட வேண்டிய வேலையும் நாங்களே செய்யணுங்கிற சோம்பேறித்தனத்தால அல்ரெடி பிரிண்டடா இருக்கிற சமஸ்கிருத மந்திரங்களைத்தான் வாசிக்கிறோம்.

இந்தக் கோவிலோட நிறுவனர், ஒரு இலங்கைத் தமிழர். அவர் இந்தியாவுல இருக்கிற ஒரு முன்னாள் நியூக்ளியர் சயண்டிஸ்ட்-இன்னாள் கோவில் குரு ஒருத்தர்கிட்ட தீட்சை வாங்கி இந்தக் கோவிலை நிறுவியிருக்கார். சாதி, மதம், இனம், மொழி, நாடு, பாலினம் பாக்காம தீட்சை கேக்கிற எல்லாருக்கும் கொடுப்பார். எங்களுக்கும் கொடுத்தார்.

என்னைப் பொருத்த வரைக்கும் கடவுள் அப்பிடிங்கிறது ஒரு கருத்து, நம்பிக்கை. அதை நான் அந்த அளவிலயே வச்சிருக்கேன். அதை மட்டுமே நம்பி மூடத்தனமாவும் இருக்கிறதில்லை. அங்க போனாத்தான் எனக்கு நிம்மதின்னு போய் அங்க விழவும் இல்லை. அதுக்காக அதை முழுக்க இக்னோர் செஞ்சிடவும் இல்லை. எனக்கு கஷ்டம்னு வரும்போது காப்பாத்தும்மான்னு கேட்டுக்கவும், எதாவது நல்ல விசயம் நடந்தா தேங்க் பண்ணிக்கிறதுக்கும் ஒரு நம்பிக்கையான கருத்து. அவ்வளவுதான்.

இதைத் தொடர நான் கூப்புடுறது

1. கலகலப்ரியா
2. அதுசரி
3. நசரேயன்
4. பட்டாப்பட்டி
5. பிரபாகர்
6. சேட்டைக்காரன்
7. சித்ரா

26 comments:

குடுகுடுப்பை said...

கூப்பிடாமலே எழுதற எல்லாத்தகுதியும் எனக்கிருக்கு. ஆனாலும் எழுத நேரமில்லை தமன்னா ரசிகரே

Chitra said...

////வத்திராயிருப்பு////



.....இது சங்கரன்கோயில் அருகே இருக்கும் வத்திராயிருப்பு ஊரா? என் தந்தை அடிக்கடி அந்த ஊருக்கு பட்டிமன்றம் நடுவராக வந்து இருக்கிறார். அதான் கேட்டேன். :-)

உங்கள் பதிவில் பல கோவில்கள் பற்றியும், உங்களின் தெய்வ நம்பிக்கையை வேறு கோணத்தில் காண உதவியாய் இருந்த நண்பர்கள் பற்றியும், உங்கள் தெய்வ நம்பிக்கை பற்றியும் நன்றாக தொகுத்து சொல்லி இருக்கிறீர்கள்.
தொடர் பதிவுக்கு என்னை அழைத்து இருப்பதுக்கு நன்றி. தொடர் பதிவின் original தலைப்பை/ essence எனக்கு மீண்டும் சொல்ல முடியுமா?
நாம் சென்ற கோவில்கள் பற்றி எழுத வேண்டுமா? இல்லை, நமது தெய்வ நம்பிக்கை பற்றி எழுத வேண்டுமா? இல்லை, நமது கருத்தை பற்றி எழுத வேண்டுமா? இல்லை, நமது religious beliefs or non-beliefs எப்படி உருவாகியது என்று எழுத வேண்டுமா?

Anonymous said...

நீங்க கூப்டாவது நசரேயன் இதை தொடரராரான்னு பாக்கலாம்

Unknown said...

குடுகுடுப்பை - ஊர்லதான் இருக்கீங்களா??

Unknown said...

@சித்ரா

வத்திராயிருப்பு - விருதுநகர் மாவட்டத்தில இருக்கிற ஒரு ஊர். ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பக்கத்துலன்னு கூட சொல்லலாம்.

நம்மோட religious beleifs and non-beliefs பத்திதான் எழுதனும் சித்ராக்கா...

சந்தனமுல்லை said...

நல்ல விவரிப்பு..

பொன் மாலை பொழுது said...

முத்தாய் பாய் நீங்கள் கூறிய கருத்துகள் உண்மை.

ஜெய்லானி said...

நல்ல விளக்கம்

vasu balaji said...

வடக்கூர்ல நிறைய கோவில்கள்ள நாமளே பண்ணலாம். தென்னிந்தியாவில் மட்டும்தான் இப்படி. ஏதாவது கவைக்குதவாத வரலாறு இருக்கும்.

நாடோடி said...

க‌ட‌வுளை ப‌ற்றிய‌ உங்க‌ளின் புரித‌ல் ந‌ல்லா இருக்கு முகில‌ன் சார்..

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

//
1. சாமி எல்லாருக்கும்ன்னா, சாமிக்கும் எனக்கும் நடுவுல எதுக்கு ஒரு புரோக்கர்?
2. ஏன் அந்த ஆள் எங்க மேல விரல் தீண்டாம நடந்துக்குறார்.?
3. அந்த கிறிஸ்துவப் பையனை மட்டும் ஏன் கோவிலுக்குள்ள வர விட மாட்டேங்கிறார்?
4. அவர் சன்னிதிக்குள்ள போய் சாமியைத் தொட்டு பூஜை செய்யும் போது நான் ஏன் சாமியைத் தொடக்கூடாது?
5. அப்பிடி என்னை விட அந்தாள் எந்த விதத்துல ஒசந்துட்டாரு?//

இது நல்லாயிருக்கு..



//எனக்கு கஷ்டம்னு வரும்போது காப்பாத்தும்மான்னு கேட்டுக்கவும், எதாவது நல்ல விசயம் நடந்தா தேங்க் பண்ணிக்கிறதுக்கும் ஒரு நம்பிக்கையான கருத்து. அவ்வளவுதான்//

இது கொஞ்சம் முரண்பாட சுயநலமா
தெரியுதே அய்யா../

பிரபாகர் said...

சின்ன அம்மணி ரொம்ப அருமையா எழுதியிருந்தாங்க! யாராவது அழைச்சா எழுதலாமான்னு எண்ணம் இருக்க அழைச்சிட்டீங்க! கண்டிப்பா எழுதறேன்...

நீங்க சொன்னதுல நிறைய நமக்கு ஒத்துப்போற விஷயங்கள் இருக்கு... ம்... அதை விடுத்து என்ன எழுதலாமென பார்க்கிறேன்...

நன்றி தினேஷ்!

பிரபாகர்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

யாரோ பண்ணின தப்புக்கு ஒட்டு மொத்தமா எல்லாரையும் அப்படி நினைச்சுடாதீங்க. இங்கு யாவரும் ஒன்று தான். ஜாதி..மத..இன..மத .. நிற பேதமெல்லாம் நாம் உருவாக்கியவையே!
நமக்கு பொதுவாய் நூறு வருட முன்னோர் தெரியும்.அதே ஆயிரம் வருடம் முன் போனால், இனம் மாறி விடும்..இரண்டாயிரம்...மூவாயிரம்..ஐயாயிரம் வருடம் முன் போனால் நிறமே மாறி விடும். ஒங்கப்பா,அம்மாவோட சொந்தக் காரங்க ஒபாமாவே கூட இருக்கலாம்!
இதைத் தான் கம்ப்யூட்டர் கண்டுபிடிக்காத காலத்தில ஒரு தமிழன் ஸாரி...ஸாரி... ந்ம் முப்பாட்டன் கணியன் பூங்குன்றன் சொன்னான்: ’யாதும் ஊரே..யாவரும் கேளிர்’ என்று! வேற்று கிரஹத்திலிருந்து கொம்பு முளைத்த ஆட்கள் வந்து நம்மை தாக்கினால் தான் பூமி புத்ரர்கள் அனைவரும் ஒன்று சேருவோம் போல் இருக்கிறது.இல்லாவிட்டால் அவனையும் இங்கு இருக்கிற பிராமினுக்கு தூரத்து உறவு என்று கதை கட்டி விட்டாலும் ஆச்ச ர்யபடுவதிற்கு இல்லை!!!

Unknown said...

@சின்ன அம்மிணி - நசர எப்பிடியாவது தொடர வச்சிரலாம்.. :))

@சந்தன முல்லை - நன்றிங்க

@கக்கு - மாணிக்கம் - நன்றிங்க

@ஜெய்லானி - நன்றிங்க

@வானம்பாடிகள் - அப்பிடித்தான் சார் சொல்றாங்க. நான் இதுவரைக்கும் போனதில்லை.

@நாடோடி - நன்றிங்க

@தமிழ் வெங்கட் - நன்றி. சாமியைக் கும்புடுறதுல என்னங்க பொது நலம்? கோவிலுக்குள்ள போயி அலகு குத்துறது, தீச்சட்டி எடுக்குறது, தீ மிதிக்கிறதுன்னு முட்டாள்தனமான மூடப்பழக்கங்கள் இல்லாம எனக்கு கஷ்டமா இருக்கும் போது சொல்லி அழவும் சந்தோசமா இருக்கும்போது நன்றி சொல்லவும் மட்டும்னு வச்சிருக்கேன். இது கடவுளைப் பத்தி.. மத்த கோவிலுக்குப் போகாம இருந்ததுக்கும் இந்தக் கோவிலுக்குப் போறதுக்கும் நீங்க நல்லாயிருக்குன்னு சொன்னது காரணம்.

@பிரபாகர் - கண்டிப்பா தொடருங்க பிரபா

@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி - அதைத்தான் சார் நானும் சொல்லியிருக்கேன். ஒரு சப்-செட் செய்யிற பிரச்சனைகளால ஒட்டு மொத்த இனத்தையே அப்பிடி நினைக்க வச்சிட்டாங்க..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சார்..முகிலன் உங்கள் எண்ணமும் அப்படியே என்பது தான் என் வருத்தமே!
“அப்புறமா சில பல பிராமின் ஃப்ரண்ட்ஸ் கிடைச்சாங்க. அவங்க மூலமா எல்லா பிராமின்ஸும் அப்பிடி இல்ல. ஒரு குரூப்புதான் அப்பிடித் திரியிறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். ஆனாலும், ஒருத்தர் பிராமின்னு தெரிஞ்சா ஒரு அடி வெளிய நின்னு அவங்க எந்த குரூப்புங்கிறத நோட்டம் விட்டுட்டுத்தான் அவங்க கூட பழகுறது.”

நசரேயன் said...

///சின்ன அம்மிணி said...
நீங்க கூப்டாவது நசரேயன் இதை தொடரராரான்னு பாக்கலாம்//

இதுக்கு முன்னாடி என்னை தொடர் பதிவுக்கு ௬ப்பிட்டு இருந்த அமைதிசாரல், அத்தரி, விதுஷ்,ரம்யா இப்படி நிறைய பேருக்கு என்ன பதில் சொல்லன்னு யோசித்து கொண்டு இருக்கிறேன்.

Anonymous said...

தமிழில் தலைப்பு வைத்திருந்திருக்கலாம்.

VISA said...

பிரபு சத்தியராஜ் நடித்த ஒரு தமிழ் படத்தில் இப்படித்தான் வரும் நான் பில் கொடுக்கிறேன் என்று இருவரும் கடையை அடித்து துவம்சம் செய்வார்களே ....அந்த இன்ஸ்பிரேஷனோ என்று நினைத்திருந்தேன்.

Paleo God said...

’உள்ளே வெளியே’ ன்னு தலைப்பு வெச்சிருக்கலாம்ல, பார்த்திபன் கோச்சிக்க மாட்டார்.

தப்பு சரி
சரி தப்பு

சரி வேணாம் விடுங்க..

ஜம்முனு இருக்கு முகிலன்ஜி!.

-ஷங்கர்ஜி.

;)

சாந்தி மாரியப்பன் said...

மசால்தோசை :-))))))

//இதுக்கு முன்னாடி என்னை தொடர் பதிவுக்கு ௬ப்பிட்டு இருந்த அமைதிசாரல், அத்தரி, விதுஷ்,ரம்யா இப்படி நிறைய பேருக்கு என்ன பதில் சொல்லன்னு யோசித்து கொண்டு இருக்கிறேன்//

மாட்டிவிட்ட சின்னம்மிணிக்கு ஒர் 'ஓஹோ'.

ஈரோடு கதிர் said...

ஆகா.. மிக அருமையான பகிர்வு முகிலன்..

ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
யாராவது அழைச்சா எழுதலாமான்னு எண்ணம் இருக்க அழைச்சிட்டீங்க! கண்டிப்பா எழுதறேன்...//

செல்லம் இன்ன்ன்ன்னும் எழுதலையா நீங்க......

ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
யாராவது அழைச்சா எழுதலாமான்னு எண்ணம் இருக்க அழைச்சிட்டீங்க! கண்டிப்பா எழுதறேன்...//

செல்லம் இன்ன்ன்ன்னும் எழுதலையா நீங்க......

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நம்பிக்கை நல்லாயிருக்கு முகிலன்..

ராச்செஸ்டர் தமிழ்க் கோயில்ல என்னோட அனுபவம் மட்டும் வேறு மாதிரியா அமைஞ்சிடுச்சு முகிலன்.. :( ம்ம்.. சரியாயிடும்ன்னு நினைக்கிறேன்..

கலகலப்ரியா said...

நல்லா சொல்லி இருக்கீங்க முகிலன்...
நம்மள அழைத்ததுக்கு நன்றி ஒரு வார்த்த சொல்லி இருக்கப்டாதா அப்பு.. பணிச்சுமை மிக மிக அதிகம்... அதனால இடைவெளி விழுந்திருக்கலாம்.. விழலாம்.. ஹிஹி..

அது சரி(18185106603874041862) said...

ஸாரி..நான் இப்ப தான் படிச்சேன்....அந்த ப்ரோக்கர் மேட்டர்ல முழு உடன்பாடு..அப்புறம் நிறைய இந்து கோவில்ல இந்துக்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லைன்னு போர்டு இருக்கும். அது தப்புங்கிறது வேற மேட்டர், ஆனா அதுக்கு வரலாற்று ரீதியா ஒரு காரணம் இருக்கு.
(கொஞ்சம் ஹிஸ்டரில உள்ள போய் பாருங்க, இல்லாட்டி அப்புறம் சொல்றேன்).

தொடர்பதிவு தான? எழுதிடலாம் :)))