Tuesday, July 31, 2012

ரீபஸ் - புதிர்கள்

இதுபோல புதிர்கள் சின்ன வயசுல நிறைய விளையாடியதுண்டு. கடந்த வருடம் டெர்ரர் கும்மி குரூப் நடத்திய புதிர் போட்டியிலும் நீண்ட நாள் கழித்து விளையாடி மகிழ்ந்தேன். பின்னர் நண்பர் ஜீவ்ஸ் ஐயப்பன் அதே போல ஒரு புதிர் போட்டி ஒன்றை நடத்தலாமே என்று கேட்டதால் ஆர்வத்தோடு சில சுற்றுகள் தயார் செய்தோம். ஆனால் இறுதி வரை அதை வெளிக்கொணர முடியவில்லை.

ஆனால், அப்போதுதான் இந்த மாதிரி படங்களை வைத்துப் போடும் புதிர்களுக்கு ரீபஸ் என்று பெயர் என்பது தெரிய வந்தது. அதற்காக நண்பர் ஜீவ்ஸ்க்கு நன்றி.

சமீபத்தில் ஸ்ரீதர் நாராயணன் அவர்களும் ஒரு பதிவு எழுதியிருந்தார், ரீபஸ் புதிர்களைப் பற்றி. யோசிப்பவர் தனது தளத்தில் அடிக்கடி இது போல போட்டிகளை வைக்கிறார். 

நாமும் இது போல ஏதாவது செய்தால் என்ன என்று யோசித்ததன் (பதிவு போட வேற மேட்டரில்லைன்னு சொல்ல ஈகோ இடம் குடுக்க மாட்டேங்குது பாஸ்) விளைவு இதோ.

எல்லாமே சினிமாப் பெயர்கள் தான். முதல் முயற்சி என்பதால் மிகவும் எளிதாக இருக்கும். ப்பூ இவ்வளவுதானா என்று நினைத்தால் சவாலைத் தீர்த்துவைப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். துப்புவதை (தயவு செய்து) வேறு எங்காவது வைத்துக்கொள்ளவும் (என்று கெஞ்சிக் கதறிக் கேட்டுக் கொள்கிறேன்).

இனி புதிர்கள்.

1.


2.
3.

4.

5.


6.

எல்லாமே தமிழ்ப் படங்கள் தான். விடைகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகின்றன.

விடைகள் சொல்லும் நேரம் வந்துவிட்டது:


1. இதயத்தைத் திருடாதே - பெரும்பாலானவர்கள் சரியாகச் சொல்லிவிட்டார்கள்.
2. இணைந்த துருவங்கள் - பனிக்கரடி வடதுருவத்திலும், பென்குயின் தென் துருவத்திலும் வசிக்கும் விலங்குகள். இரண்டும் இணைந்திருப்பதால் சுலபமாக சொல்லிவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
3. சாவித்ரி 
4. கண்ணாடி
5. வெற்றிவிழா - பார்ன் ஐடெண்டிட்டி புத்தகத்தை வைத்து கமல் எழுதிய திரைக்கதை
6. தர்மம் வெல்லும்.

27 comments:

Thozhirkalam Channel said...

பதிவு எழுத ஆட்களை தேடிட்டு இருக்கோம் சகோ... வாங்க இணைந்து பணியாற்றலாம்..


தொடர்புக்கு :
95 66 66 12 15
95 66 66 12 14
cpedenews@gmail.com

யோசிப்பவர் said...

1 இதயத்தை திருடாதே
5 தர்மம் வெல்லும்?!?!

Unknown said...

யோசிப்பவர்,

1 & 6 ரெண்டும் சரி.

யோசிப்பவர் said...

மீதி இன்னும் யோசிக்கனும். கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்.

Raju said...

1. இதயத்தைத் திருடாதே!

2. இருவர் மட்டும்.

3. சாவித்திரி.

4. உன்னைப் போல் ஒருவன்.

5. கந்தசாமி.

6. தர்மத்தின் தலைவன்.


தப்புன்னாலும் ஓரளவு ஒத்துப் போகும்ன்னு நினைக்கிறேன் தல...
பார்த்துப் போட்டுக் குடுங்க!
:))

sathishsangkavi.blogspot.com said...

நிறைய யோசிக்கனும் போல...

மனு - தமிழ்ப் புதிர்கள் said...

இதயத்தைத் திருடாதே, சில்லுனு ஒரு காதல், உயர்ந்த தர்மம்? , மூன்றுமுடிச்சு?,

யோசிப்பவர் said...

5) வெள்ளி விழா?!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1. இதயத்தை திருடாதே
2.
3. சாவித்திரி
4.
5.
6.
7.
8.
9.
10. தர்மம் தலைகாக்கும்

Elangovan said...

1. இதயத்தை திருடாதே
2. தாய்பாசம் ??
3.
4.
5.
6. தர்மத்தின் தலைவன்

மத்ததெல்லாம் இன்னும் யோசிக்கணும்... இப்போ போயிட்டு அப்புறமா வரேன்...

Unknown said...

Raju N

நீங்க சொன்னதுல 1 & 3 சரி. 4 பக்கத்துல வந்துட்டீங்க.

Unknown said...

Anthony

நீங்க சொன்னதுல 1 மட்டுமே சரி.

Unknown said...

யோசிப்பவர்

5 சரி.

Unknown said...

ரமேஷ் - ரொம்ப நல்லவன்

1 & 3 மட்டுமே சரி.

மொத்தமே ஆறுதான் இருக்கு.

Unknown said...

Elangovan

நீங்க சொன்னதுல 1வது மட்டுமே சரி.

Unknown said...

ரொம்ப சிரமமா இருக்கோ? சுலபமா இருக்கும்னு நினைச்சேன். இதுவரைக்கும் 4 மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. ஒருத்தர் மட்டுமே 4ம் சரியா சொல்லியிருக்கார். அதனால கொஞ்சம் க்ளூ குடுக்கலாம்னு நினைக்கிறேன்.

1. இது எல்லாருக்கும் சுலபமா பிடிபடுது. அதனால நோ க்ளூ

2. அந்தப் படத்துல இணைஞ்சிருக்கிற இரண்டு விலங்குகளும் எங்க இருக்கும்னு யோசிச்சிங்க. விடை கிடைக்கும்.

3. படத்துல என்ன இருக்கு? எத்தனை இருக்கு?

4. மரச்சட்டத்துக்குள்ள YOU தெரியுது.

5. இந்தப் புத்தகத்தை அடிப்படையா வச்சி வந்த திரைப்படம்.

6. இதுவும் சுலபம் தான். ஜெயிக்கப் போவது யாரு?

Muthu said...

3. சாவித்திரி

Unknown said...

இன்னமுதம் சொன்ன வரை சரி

யோசிப்பவர் said...

மூன்று முகம் தெரியும், மூன்று தெய்வங்கள் தெரியும், முத்துக்கள் மூன்று கூடத் தெரியும். ஆனா மூன்று சாவிகள் அப்படின்னு ஏதாவது படம் இருக்கு?!?!

யோசிப்பவர் said...

2 இரு துருவங்கள்?!?! சரியா இருக்காதுன்னு நம்பறேன்!!!:)

யோசிப்பவர் said...

சட்டம் வருதுன்னு புரியுது. யூ தான் இன்னும் புரிய மாட்டேங்குது.

யோசிப்பவர் said...

அடச்சே! சாவித்திரி!!!

தோனவே இல்லையே:)

யோசிப்பவர் said...

இணைந்த துருவங்கள் or துருவங்கள் இணைந்தன?!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

3 சாவி, 5-வெற்றி விழா ,மீதி தெரியல :-)

Unknown said...

கிரேஸ்,

5வது மட்டுமே சரி.

3வது பாதி சரி.

Raju said...

2. அந்தமான் காதலி.
2. அற்புதத்தீவு.

4. உனக்குள் ஒருவன்.

5. வெற்றி விழா.

6. தங்கப்பதக்கம்.

Unknown said...

Raju N

5 வது மட்டும் தான் சரி.