இரண்டாம்
உலகப் போர். நாஜிக்களின் கையில் சிக்கிய யூதர்களை நாஜிகள் எப்படியெல்லாம் கொடுமைப்
படுத்தினார்கள். சித்ரவதை செய்தார்கள் என்பதை ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், லைஃப் இஸ் பியூட்டிஃபுல்
போன்ற பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்.
யூதர்கள்
அறிவு மிகுந்த இனம் மட்டுமல்ல, பணம் செய்வதில் திறமைசாலிகள். லாபி செய்வதில் திறமைசாலிகள்.
ஒட்டுமொத்த உலகையே அமெரிக்கா ஆட்டிப் படைக்கிறதென்றால், அந்த அமெரிக்காவையே ஆட்டிவைப்பவர்கள்
யூதர்கள்.
இரண்டாம்
உலகப்போருக்கு முன்னர் யூதர்கள், ஐரோப்பா முழுவதிலும் பணபலமும், அதிகார பலமும் மிக்கவர்களாக
இருந்துவந்தார்கள். ஹிட்லரின் தலைமையிலான நாஜிக்கள் யூதர்களைக் கான்சண்ட்ரேஷன் கேம்ப்களில்
வைத்து கொடுமைப்படுத்தியது மட்டுமல்ல, அவர்களின் சொத்துகளையும் கொள்ளை அடித்தார்கள்.
அப்படி அடித்துச் சேர்த்து வைத்த பணத்தை அனுபவிக்க ஹிட்லருக்குக் கொடுத்துவைக்கவில்லை.
(அமெரிக்கா அந்தப் பணத்தில் ஒரு பகுதியைக் கைப்பற்றியதாகவும் அந்த நாட்டின் உள்கட்டமைப்புக்கு
செலவிட்டதாகவும் ஒரு கான்ஸ்பிரசி உண்டு). உலகப்போர் சமயத்தில் நாஜிகளுக்கு உதவியவர்கள்
பலர் அந்தப் பணத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
நாஜிகள்
யூதர்களைப் படுத்திய கொடுமை ஐம்பது ஆண்டுகள் ஆன பின்னாலும் பேசப்பட்டு வருவதற்கும்
அவர்கள் இனத்தின் மீது ஒரு இரக்க சிந்தனை அனைவருக்கும் தோன்றுவதற்கும் பின்னாலுள்ள
யூதர்களின் லாபி மிகப் பெரியது. இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களைப் படுகொலை செய்தவர்கள்
மட்டுமில்லை, அவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு அந்தப் படுகொலையை கண்டுகொள்ளாமல் விட்டவர்களும்,
காசு வாங்கிக்கொண்டு யூதர்களைக் காட்டிக் கொடுத்தவர்களும் கூட போர்க்குற்றவாளிகளாக
அடையாளம் காணப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறார்கள். இந்த லாபி திறமை நம்மிடம் இல்லாததாலும்,
சில துரோகிகளாலும் பக்கத்து நாட்டில் கூட இனப்படுகொலை பற்றி பரப்புரை செய்து விழிப்புணர்வு
கொண்டுவர இயலாதவர்களாக நாம் இருக்கிறோம் என்பது இங்கே வருந்தத்தக்க உண்மை.
நிற்க.
பேச வந்தது ஒரு திரைப்படத்தைப் பற்றி. இந்தப் படம் ஒரு ஹெய்ஸ்ட் மூவி. ஹெய்ஸ்ட் திரைப்படங்கள்
எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னேன் அல்லவா? இந்தப் படமும் ஹெய்ஸ்ட் படம் தான்.
டென்ஸெல் வாஷிங்டன், ஜோடி ஃபாஸ்டர் போன்ற ஜாம்பவான்களை வைத்து பின்னிய ஹெய்ஸ்ட் படம்.
மற்ற படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம். திட்டம் என்ன என்பது
முதலிலேயே பார்வையாளர்களுக்குச் சொல்லப் படவில்லை. போலிஸுக்கும் கடத்தல்காரர்களுக்கும்
இடையில் நடக்கும் ஒரு நீயா நானா போராட்டமாகவே இந்தப் படம் விரிகிறது. இந்தப் படம் ஒரு
நான் -லீனியர் வகை.
டால்டன்
ரஸ்ஸல்(Clive Owen) என்பவன் ஒரு பெர்ஃபெக்ட் வங்கிக் கொள்ளை பற்றி விவரிக்க ஆரம்பிப்பதுடன்
படம் துவங்குகிறது. வங்கிக் கொள்ளைக் காட்சிகள் எல்லாம் ஃப்ளாஷ் பேக்கில் நகர்கிறது.
சில கொள்ளையர்கள் நியூயார்க் நகரில், ஒரு வங்கிக்குள் புகுந்து செக்யூரிட்டி கேமராக்களை
செயலிழக்கச் செய்து வங்கியை உள்பக்கமாகப் பூட்டி வங்கிப் பணியாளர்களையும் வாடிக்கையாளர்களையும்
பணயக் கைதிகளாகப் பிடிக்கிறார்கள். அனைவரையும் மிரட்டி கொள்ளையர்களைப் போலவே உடையும்
முகமூடியும் அணியச் செய்கிறார்கள். விசயம் கசிந்து போலிஸ் வங்கியைச் சுற்றி வளைக்கிறது.
இடையில் வங்கியில் பணயக் கைதிகளாக இருந்தவர்களைப் போலீஸ் விசாரிக்கும் காட்சிகளும்
ப்ளாக் அண்ட் வொயிட்டில் வருகிறது. (நான் லீனியர்).
போலிஸ்
அதிகாரி கீய்த் ஃப்ரேஸியர் (Denzel Washington) கொள்ளையர்களோடு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
இடையில் அந்த பேங்கின் நிறுவனர் ஆர்தர் கேஸ், அந்தக் குறிப்பிட்ட கிளை கொள்ளையடிக்கப்படுவதை
அறிந்தவுடன், மேடலின் ஒயிட் (Jodie Foster) என்ற வழக்கறிஞரை நியமித்து கொள்ளையரோடு
பேசி 392ம் லாக்கரில் உள்ளவற்றை மட்டும் கையகப் படுத்திக் கொண்டு வரச் சொல்கிறார்.
ஒயிட்டும், மேயரோடு தனக்குள்ள நட்பைப் பயன்படுத்தி போலிஸின் எதிர்ப்பை மீறி கொள்ளையனோடு
பேசுகிறார். ரஸ்ஸலோ இந்த வங்கியைத் துவக்க ஆர்த்தர் கேஸ் உபயோகப் படுத்தியது நாஜிகளிடமிருந்து
வாங்கிய பணம், Blood Money என்ற உண்மையை ஒயிட்டிடம் சொல்வதோடு அதற்கு அடையாளமாக நாஜிகளின்
சின்னமான ஸ்வஸ்திகாவையும் காட்டுகிறான். அந்த லாக்கரில் உள்ள பொருட்களை வெளியே சொல்லாமல்
இருந்தால் பெரும்பணம் கொடுப்பதாக ரஸ்ஸலிடம் வாக்களித்துவிட்டு வெளியேறுகிறார் ஒயிட்.
ரஸ்ஸல்
வெற்றிகரமாக வங்கியைக் கொள்ளையடித்தானா, கேஸ் விரும்பியது போல அவனது குட்டு வெளிப்படாமல்
இருந்ததா, போலிஸ்காரர் கீய்த் கொள்ளையர்களைப் பிடித்தாரா - என்பது மீதி.
போலிஸ்
தந்திரமாக வங்கியின் உள்ளே இருப்பவர்களுக்கு வழங்கிய பிஸ்ஸா பெட்டியில் மைக்கைப் பொருத்தி
உள்ளே அனுப்புவார்கள். அவர்கள் ஏதோ ஒரு அன்னிய மொழியில் பேசுவது தெரிந்ததும், ஆர்வமாக
அந்த மொழி என்ன (அல்பேனியா) என்பதைக் கண்டறிந்து, அதைப் பேசும் ஒருவரை அழைத்துவந்து
கேட்டால், அது யாரோ ஒரு அல்பேனிய முன்னாள் ஜனாதிபதியின் கம்யூனிசப் பிரச்சார கேசட்
என்று தெரிந்து போலிஸ் முழிக்கும் காட்சி நன்றாக இருக்கும். அது போல கொள்ளையர்கள் கேட்கும்
விமானத்தை தயார்செய்ய நேரம் எடுப்பதாகவும் அதனால் அவகாசம் வேண்டும் என்றும் கேட்கும்போது
ரஸ்ஸல் அவர்களுக்கு ஒரு புதிர் போடுவதும், அதை விடுவிக்க அந்த அறையில் உள்ள போலிஸ்காரர்கள்
சண்டை போட்டுக்கொள்வதும் இன்னொரு சுவாரஸ்யமான காட்சி.
ரஸ்ஸலாக
வரும் க்ளைவ் ஓவன் சலித்துக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். கீய்த்தாக வரும் டென்ஸெலைப்
பற்றியும், ஒயிட்டாக வரும் ஜோடி ஃபாஸ்டரைப் பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. படத்தில்
ரேஸிஸத்தை பற்றி சட்டிலாக அடித்து விளையாடி இருக்கிறார்கள். வங்கி ஊழியரான ஒரு சீக்கியர்
வெளியே விடப்படும்போது போலிஸ் அவரது டர்பனை வைத்து அவரை அரபி என்று நினைத்து, அரபி
என்றால் அவர்கள் தான் தீவிரவாதியாக, கொள்ளைக்காரனாக இருக்க வேண்டும் என்ற சர்வதேசப்
புரிதல் காரணமாக அவரை சந்தேகப் பட்டு தாக்கும் காட்சியில் அமெரிக்க சிந்தனையைப் புட்டு
புட்டு வைக்கிறார்கள்.
ஹெய்ஸ்ட்
படம் என்பதையும் தாண்டி என்னை ரசிக்க வைத்த படம் இது.
http://www.imdb.com/title/tt0454848/
5 comments:
நாசிகளை பத்தி ரொம்ப சுவாரிசியம்மா சொல்ல ஆரம்பிச்சிட்டு, டக்ன்னு நிறுத்திட்டேங்களே பாஸ்..ரொம்ப ரொம்ப அருமையா எழுதறேங்க....
உங்க பழைய பதிவு "போக்கர்" படிச்சேன்..ரொம்ப நல்லா இருந்திச்சு.. பாஸ்
உங்களுக்குப் பிடிச்ச காட்சிகளையும் அழகாக சொல்லி ரொம்ப நல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.
இந்தப் படத்தைப் பற்றி சொல்லவந்து நாசிஸ் பற்றி சொல்ல ஆரம்பித்ததன் காரணம் என்ன?
நன்றி ராஜ். பதிவு இன்சைட் மேன் திரைப்படத்தைப் பற்றி என்பதால் நாஜிகளைப் பற்றி அதிகம் பேசவில்லை
ஹாலிவுட் ரசிகன்,
இந்தப் படத்தில் வங்கி நிறுவனர் ஆர்தர் கேஸ் வங்கியை ஆரம்பிக்க போட்ட முதல் நாஜிகளிடம் லஞ்சமாக வாங்கிய பணம்.
இன ஒழிப்பு நிகழ்ந்து 60 வருடங்களுக்கு மேலாகியும், அதைப் பற்றி இன்னமும் பேச வைப்பதும், நாஜிகளிடம் லஞ்சம் வாங்கியவர்களைக் கூட போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வைத்ததும் யூதர்களின் லாபி. அந்த லாபி தமிழர்களிடம் இல்லாததால் தமிழகத்திலேயே ஹிந்து ராம் போன்றோர் ராஜபக்சேக்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வந்தேன். சரியாகச் சொல்லவில்லை என்று புரிகிறது. நன்றி.
nice review. pona varam parthen:)
Post a Comment