Wednesday, July 11, 2012

Unstoppable(2010) - என் பார்வை


நாம் வேலை பார்க்கும் நிறுவனம் ஆட்குறைப்பு செய்து ஏர்லி ரிட்டையர்மெண்ட் என்று இனிப்புத் தடவி 90 நாள் நோட்டிஸ் கொடுத்து இன்னும் 18 நாளில் வேலையை விட்டு நிற்கப் போகும் நிலையில் அந்த நிறுவனத்தின் சொத்துக்கும், பொதுமக்களுக்கும் சேதம் வரும் என்ற நிலையில் உயிரைப் பணயம் வைத்து அந்த சேதத்தைத் தடுக்க நம்மில் எத்தனை பேர் முயற்சி செய்வோம்?

வேலையில் சேர்ந்து ட்ரெயினிங் முடித்து இப்போது on the job training. முதல் அசைன்மெண்டிலேயே ஆபத்தான ஒரு situation. நம்மில் எத்தனை பேர் இந்த சூழ்நிலையில் ரிஸ்க் எடுக்கத் துணிவோம்?

அப்படி இரண்டு பேரைப் பற்றிய படம் தான் Unstoppable. Speed பட வரிசையில் வேகமாகப் போகும் ஒரு கூட்ஸ் ரயில் (அமெரிக்காவில் Freight Train)ஐத் தடுத்து நிறுத்தும்  பரபரப்பான படம். 



ஃப்ராங்க்(Denzel Washington) ஒரு ரயில் நிறுவனத்தில் எஞ்சினியர் (அதாவது ட்ரெயினை ஓட்டுபவர்). புதிதாக அந்த நிறுவனத்தில் சேர்ந்த வில்(Chris Pine)க்கு on the job training தரும் பொறுப்பு ஃப்ராங்க்குக்கு அளிக்கப் படுகிறது. இருவரும் 1206 என்ற எஞ்சினை எடுத்துக் கொண்டு ஒரு zinc ஃபேக்டரியில் 20 ரயில் பெட்டிகளை எடுத்துக் கொண்டு யார்டில் சேர்க்க வேண்டும். 

அதே நேரம் இன்னொரு யார்டில் 777 என்ற ரயில் 29 பெட்டிகளோடு (அதில் ஐந்தில் molten benzol) மெயின் லைனில் நின்று கொண்டிருக்கிறது. ஒரு பள்ளிக் குழந்தைகள் சுற்றுலா வரும் ரயிலுக்கு வழி விடுவதற்காக அந்த 777ஐ சைடிங்கில் போடுமாறு டிஸ்பாட்சர் உத்தரவிட, இரண்டு எஞ்சினியர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு எஞ்சினியரின் கவனக் குறைவால் சைடிங்கில் போவதற்குப் பதிலாக மெயின் லைனில் வேகமெடுத்துப் போய்விடுகிறது 777. கேபினில் யாருமில்லாது வேகமெடுத்துப் போய்க்கொண்டிருக்கிறது 777. கடைசி நேரத்தில் யார்ட் டிஸ்பாட்சர் பள்ளிக்குழந்தைகள் வரும் ரயிலை சைடிங்கில் போட உத்தரவிடுகிறார். அதனால் மயிரிழையில் உயிர்பிழைக்கிறார்கள் குழந்தைகள்.

யார்ட்மாஸ்டர் கான்னீ (Roasario Dawson), மக்கள் நிறைந்த நகரங்களுக்குள் நுழையும் முன்பு வரும் ஒரு ஃபார்ம் நிலத்தில் ரயிலை தடம்புரளச் செய்துவிடலாம் என்று நிறுவனத்தின் வைஸ் பிரசிடெண்ட் கால்வினிடம் யோசனை கூறுகிறார். ஆனால், நூறு மில்லியன் டாலர்கள் நஷ்டம் வரும் என்பதால் அதை மறுத்துவிடுகிறார் வி.பி. அவரது யோசனைப் படி Dead man Switch என்ற முறையில் ரயிலை நிறுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் அந்தத் திட்டம் தோல்வியடைவதோடு ஒரு ரயில் எஞ்சினியரும் உயிரை விடுகிறார். 

இந்த நேரத்தில் ஃப்ராங்கும் வில்லும் வரும் 1206, 777க்கு எதிராக வந்து கொண்டிருக்கிறது. அதையும் ஓரம் கட்டச் சொல்லி யார்ட் டிஸ்பாட்சர் சொன்னாலும், அதிக பெட்டிகள் இருப்பதால் சைடிங் நீளம் பத்தாது என்று சொல்லி அடுத்த சைடிங் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் ஃப்ரான்ங்கும் வில்லும். நம்மை நகம் கடிக்க வைத்து அதிக சேதாரம் இல்லாமல் 1206 சைடிங்கிற்குப் போய்விடுகிறது. மிகவும் வேகமாகப் போகும் ரயில், ஸ்டாண்டன் என்ற ஊரில் வரும் Elevated Curveல் திரும்ப முடியாமல் கவிழ்ந்து அதிக சேதத்தை ஏற்படுத்திவிடும் என்ற பயத்தால் 1206ன் எஞ்சினை மட்டும் எடுத்துக்கொண்டு 777ஐ துரத்திக் கொண்டு செல்கிறார்கள் வில்லும் ஃப்ராங்கும். 

இடையில் ரயிலை நிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த கால்வின், போலீஸ் உதவியோடு ஒரு ஊரின் பொதுமக்களை அப்புறப் படுத்திவிட்டு, அங்கே ரயிலைக் கவிழ்க்க ஏற்பாடு செய்கிறார். ஃப்ராங்கும், வில்லும் 777ஐ துரத்திக் கொண்டு போவதை அறிந்து இரண்டு எஞ்சின்களை இழக்க விரும்பாத கால்வின், ஃப்ராங்கையும் வில்லையும் முயற்சியைக் கைவிடச் சொல்கிறார். ஆனால், கான்னி ஃப்ராங்கின் திட்டத்தை ஊக்குவிக்கிறார். 

கால்வினின் ரயிலைக் கவிழ்க்கும் திட்டம் வெற்றியடைந்ததா, ஃப்ராங்கின் மாற்றுத் திட்டம் வெற்றியடைந்ததா, ரயில் ஸ்டாண்டன் எலிவேட்டட் கர்வை ஆபத்தில்லாமல் கடந்ததா? என்ற கேள்விகளுக்கு பரபரப்பாக பதில் அளித்திருக்கிறார்கள்.

நான் 2004ம் ஆண்டு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காரணம், இங்கே வேலை செய்யும் அமெரிக்கர்கள் மூன்று பேரிடம் (அதில் இரண்டு பேர் பார்ட் டைம் பணி) நாலெட்ஜ் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு, பின்னர் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைப்பது. இவன் தான் என் வேலையை என்னிடம் பறிக்கப் போகிறான் என்று தெரிந்த அவர்களிடமிருந்து நான் நாலெட்ஜ் ட்ரான்ஸ்ஃபர் வாங்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்குத் தான் தெரியும். அட்லீஸ்ட் எனக்காவது தெரிந்துவிட்டது. இந்தப் படத்தில் முதலில் கிறிஸ் பைன் ட்யூட்டிக்கு உள்ளே வரும்போது அங்கே உட்கார்ந்திருக்கும் சீனியர் பணியாளர்கள் அவரைக் குழந்தை என்று சொல்லி கேலி செய்யும்போதும், டென்ஸல் வாஷிங்டன் தொட்டதற்கெல்லாம் சீறி விழும்போதும் புரியவில்லை. ஆனால் பின்னால் ஒரு காட்சியில் 777ஐத் துரத்துவதை நிறுத்தாவிட்டால் வேலையை விட்டு தூக்கிவிடுவேன் என்று சொல்லும்போது “you already fired me. I received my 90 days notice for early retirement with half the benefits and 72 days are already over” என்று சொல்லும்போது க்றிஸ் பைன் உணர்ந்தாரோ இல்லையோ நான் உணர்ந்துகொண்டேன். 

டென்ஸல் பற்றி பேசிக்கொண்டே போகலாம். ஒரு எள்ளலோடு க்றிஸ் பைனை டீல் செய்வதிலாகட்டும். கிறிஸ் செய்யும் ஒவ்வொரு தவறையும் சுட்டிக்காட்டுவதிலாகட்டும், மகள்களைப் பற்றிப் பேசும்போது கண்ணில் ஒரு ஸ்பார்க் காட்டுவதிலாகட்டும், பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளாகட்டும், எல்லாவற்றிலும் மின்னுகிறார். 

கிறிஸ் பைன், சாக்லேட் பாய் வேஷத்தில் பிரின்ஸஸ் டைரீஸ் படத்தில் நடித்தவரை இந்தப் படத்தில் ஒரு குழந்தைக்குத் தந்தையாக, திருமண வாழ்வில் பிரச்சனை இருப்பவராகப் பார்த்தது புது அனுபவம் தான். நன்றாக செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். 

இந்தப் படம் 2001ம் ஆண்டு ஒஹாயோ மாகாணத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாம். ஆக்‌ஷன் பிரியர்கள் பார்க்கவேண்டிய படம்.



3 comments:

க ரா said...

Really a good movie and good review too :)

ராஜ் said...

நல்ல விறுவிறுப்பான படம்....எனக்கு பிடித்து இருந்தது....

Unknown said...

நன்றி கே.கே.ஆர் மாப்ஸ்.

வருகைக்கு நன்றி ராஜ்.