Saturday, December 19, 2009

மேக்கிங் ஆஃப் வேட்டைக்காரன்

aஸ்டோரி டிஸ்கஷன்
======================


விஜய்: பாபு, நீங்க தரணியோட அஸிஸ்டண்ட். உங்க டைரக்டரோட ஃபர்ஸ்ட் படம் தில் மாதிரி இதுவும் சூப்பர் ஹிட் ஆகணுங்க்ண்ணா


aபாபு: சரி சார். அதே மாதிரியே செஞ்சிடுவோம்.


விஜய்: இந்த ராகுல் காந்தி என்ன யூத் இல்லன்னு சொல்லிட்டார். அத ஒடக்கிற மாதிரி ஒரு யூத்ஃபுல் ஸ்டோரி சொல்லுங்க்ண்ணா.


பாபு: இந்தப் படத்துல நீங்க ஒரு +2 ஸ்டுடண்ட்.


விஜய்: அதுக்காக இவ்வளவு யூத்தா? மக்கள் நம்புவாங்களாங்க்ண்ணா?


பாபு: அப்ப நாலு வருசம் கோட்டடிச்சு கோட்டடிச்சு பாஸ் பண்றீங்கன்னு வச்சிக்கலாம் சார்.


விஜய்: ஹா. இது நல்லா இருக்கு. அப்புறம் சூப்பர் ஸ்டாருக்கு பாஷா ஹிட் குடுத்த மாதிரி இந்தப் படமும் ஹிட்டடிக்கணும். சொல்லிட்டேங்க்ண்ணா


பாபு: கண்டிப்பா சார். அதே மாதிரியே செஞ்சிடுவோம்.


விஜய்: சரி கதைய சொல்லுங்க்ண்ணா.


பாபு: நீங்க +2 ஃபெயிலாகிட்டு ஊர் சுத்திட்டு இருக்கிங்க. ஆனா உங்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்கு. அது என்னன்னா உங்க ஆதர்ச ஹீரோ ஒரு போலிஸ்காரர். என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்ட். அவர் மாதிரி நீங்களும் போலிஸ் ஆகணும்னு நினைக்கிறீங்க.


விஜய்: இருங்க இருங்க. ஏற்கனவே நான் போக்கிரி படத்துல போலிஸா நடிச்சிட்டேனே? மறுபடியும் போலீஸா நடிச்சா ஒரே மாதிரி நடிக்கிறேன்னு மக்கள் சொல்ல மாட்டாங்களாங்க்ண்ணா?


பாபு: அய்யய்யோ நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. போலீஸ் ஆகணும்னு ஆசதான் படுறீங்க. ஆனா ஆக மாட்டிங்க.


விஜய்: ஓ அப்பிடியா அப்ப ஓக்கேங்க்ண்ணா. மேல சொல்லுங்க்ண்ணா.


பாபு: ஒரு வழியா பாஸ் ஆகி உங்க ஆதர்ச போலிஸ்காரர் படிச்ச காலேஜ்லயே உங்களுக்கும் சீட் கிடைக்கிது. அங்க போயி படிக்கிறீங்க. அப்ப..


எஸ்.ஏ.சி: இருப்பா. எம்மகன் பாட்சா மாதிரி வேணும்னு கேட்டானே. நீ என்ன காலேஜ் கதை சொல்ற?


பாபு: அப்ப இப்பிடி வச்சிக்கலாம் சார். காலேஜ் படிக்கும்போதே ஆட்டோ ஒட்டுறாரு படிப்பு செலவுக்காக.


விஜய்: அப்ப ஆட்டோ ஓட்டுறப்போ ஆயுத பூஜைக்கி ஒரு பாட்டு பாடுறதுல இருந்து ஆரம்பிச்சி ஃப்ளாஷ் பேக்குல +2 கதை சொல்லலாமாங்க்ணா?


பாபு: அய்யோ சார். அது பாட்சா படத்துல வந்திருச்சே. அதுனால உங்களுக்கு ஃப்ளாஷ் பேக் வேணாம்சார். வேணும்னா அந்த போலிஸ் ஆபிசருக்கு வச்சிடலாம்.


விஜய்: அப்பிடிங்கிறீங்களா. சரி. மேல சொல்லுங்க்ணா


பாபு: அப்ப உங்களுக்கும் அந்த ஏரியா தாதாவுக்கும் மாமூல் விசயத்துல பிரச்சனை வந்துடுது. நீங்க அவரைப் போட்டு பொளந்து கட்டிரீங்க.


எஸ்.ஏ.சி: ஏம்ப்பா. இந்த மாமூல் விசயத்துல பிரச்சனைன்னு வக்காம, ஏதாவது லேடிஸ் மேட்டர்னு வச்சா கொஞ்சம் லேடீஸ் செண்டிமெண்ட்டா இருக்கும்ல?


பாபு: ம்ம்ம்ம். அப்ப இப்பிடி வச்சிக்கலாம் சார். காலேஜ்ல உங்க ஃப்ரண்டு ஒரு பொண்ணு. அந்தப் பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்கிறாரு அந்த தாதா.


விஜய்: இது சூப்பருங்க்ண்ணா.


பாபு: அந்த தாதாவுக்கு இருக்குற போலீஸ் பவர வச்சி உங்கள அரெஸ்ட் பண்ண வச்சிடுறாரு. அப்படியே என்கவுண்ட்டர் பண்ணவும் ஏற்பாடு செஞ்சிடுறாரு. நீங்க போலீஸ் கிட்ட இருந்து தப்பிச்சிப் போயிடுறீங்க.


எஸ்.ஏ.சி: தப்பிச்சிப் போகும்போது இண்ட்டர்வல் விட்டுடு.


பாபு: சரி சார். வித்தியாசமா ஏதாவது செய்யரப்போ இண்ட்டர்வல் விட்டா நல்லா இருக்கும்னு..


எஸ்.ஏ.சி: ஹா.. நேத்து ஒரு இங்க்லீஸ் படம் டிவிடி பாத்தேன். அப்போகேலிப்டோ. அதுல ஹீரோ ஒரு பெரிய அருவில குதிச்சி சாகாம எழுந்து வர்றான். அதுமாதிரி ஒரு பெரிய அருவில குதிக்கிறா மாதிரி சீன் வச்சிட்டு இண்ட்டர்வல் விட்டுடு.


பாபு: நல்ல ஐடியா சார். தப்பிச்சி வந்த நீங்க, அந்த போலீஸ் ஆஃபிசரை சந்திக்கிறீங்க. அவரோ உங்களப் பகச்சிக்கிட்ட அதே தாதாவால போலீஸ் வேலையயும் குடும்பத்தையும் இழந்து நிக்கிறாரு. அதப்பாத்து கொதிச்சிப்போன நீங்க அந்த தாதாவப் பழிவாங்குறதுக்காக நீங்களும் தாதாவாகிடுறீங்க.


எஸ்.ஏ.சி: இரு இரு. என்ன ஒரே ஒரு வில்லன் தானா? ரெண்டு மூணு வில்லன் வேணுமேப்பா. ஒண்ணு பண்ணு முதல்ல தகறாரு பண்ண வில்லனோட அப்பாதான் மெயின் தாதா. அவரத்தான் விஜய் சார் எதிக்கிறாரு சரியா?


பாபு: சரி சார். அந்த தாதாவோட வழியில போயி அவரோட சொத்து பவர் எல்லாத்தயும் ஒண்ணொன்னா அழிச்சுட்டு கடைசியில தாதாவையும் அழிக்கிறீங்க.


விஜய்: இது பகவதில நானே செஞ்சிட்டேனேங்க்ண்ணா?


எஸ்.ஏ.சி: தம்பி. பகவதி படம் ஃப்ளாப்பு. அதுனால மக்கள் அத நினைவுல வச்சிருக்க மாட்டங்க.


பாபு: ஆமா சார்.


எஸ்.ஏ.சி: தம்பி. விஜய் சார் அரசியலுக்கு வரணும்னு நினைக்கிறாரு. அதுனால வில்லன் அரசியல்வாதியாவோ இல்ல அரசியல் சம்மந்தப்பட்டவனாவோ இருக்குறது நல்லா இருக்கும்.


பாபு: அவரை மந்திரியாகுறதுக்கு ஆசப்படுறவர் மாதிரி காட்டி அரசியல் பன்ச் வச்சிரலாம் சார். 


எஸ்.ஏ.சி: கதை நல்லாருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு.


விஜய்: அப்பிடின்னா எனக்கும் பிடிச்சிருக்குங்க்ண்னா. ஆமா, இதுல ஹீரோயின் யாரு?


பாபு: அனுஷ்க்கா தான் சார் இன்னிக்கி ஹாட். அவங்களையே போட்டுடலாம்.


விஜய்: அவங்க ரோலு? 


பாபு: அதுக்கென்ன சார் அங்கங்க நுழைச்சிட்டு நாலு பாட்டுக்கு ஆட விட்டா போதும்.


எஸ்.ஏ.சி: ஆமா படத்துக்கு என்ன தலைப்பு?


பாபு: முரட்டுக்காளைன்னு வக்கலாம்னு இருக்கேன் சார்


எஸ்.ஏ.சி: வேண்டாம். ரஜினி அரசியலுக்கு வரலை. அதுனால எம்.ஜி.ஆர் பட டைட்டில் வைக்கலாம்


பாபு: அப்ப வேட்டைக்காரன்னு வக்கலாம் சார்.


************************************************************************************


ஷூட்டிங் ஸ்பாட்:
==================


விஜய்: இன்னிக்கு என்ன சீன்ங்க்ண்ணா?


பாபு: ஃபர்ஸ்ட் ஃபைட் சீன் சார். ஒரு போலீஸ் காரர் அராஜகம் பண்றாரு அத நீங்க தட்டிக் கேக்குறீங்க.


கனல் கண்ணன்: சார் ஒரு ரிகர்சல் பாத்துரலாமா?


விஜய்: வாங்க்ண்ணா. பாட்சா படத்துல தலைவர்க்கு வச்ச ஃபர்ஸ்ட் ஃபைட் மாதிரி இருக்கணுங்க்ண்ணா. 


கனல் கண்ணன்: இருக்கு சார். அதுல அவர் அடிச்சதும் ஒருத்தன் போயி போஸ்ட் மரத்துல விழுகுர மாதிரி இதுல நீங்க ஒரே அடியில ஒரு கல்தூணை நொறுக்குரீங்க. அதப் பாத்ததும் வில்லன் ஆஃப் ஆயிடுறான்.


விஜய்: நல்லா இருக்குங்க்ண்ணா


**************************************************************************************
விஜய்: டைரக்டர்ண்ணா. எல்லாரும் கெட்டப் மாத்துறாங்களே? எனக்கு எதாவது கெட்டப் போடலாமா?


பாபு: போடலாம் சார். வேணும்னா போலீஸ்ல இருந்து தப்பி வந்தப்புறம் வேற கெட்டப்ல நடிக்கிறீங்களா? 


விஜய்: அய்யோ? பாதி படத்துக்கெல்லாம் அப்பிடி நடிக்க முடியாதுங்க்ணா. எதாவது சின்ன சீன்...


பாபு: அப்போ சின்னத் தாமரை பாட்டுல வேற கெட்டப்ல வந்திடுங்க சார்.


விஜய்: சரிங்க்ண்ணா


****************************************************************************************
ஷூட்டிங் முடிந்து ரஷ் பார்த்த டைரக்டர் விஜயிடம்


பாபு: சார், ஒரு ஆர்வத்துல வேட்டைக்காரன்னு தலைப்பு வச்சுட்டு ஃபோட்டோ ஷூட்ல கௌ பாய் வேசம் போட்டு எடுத்துட்டோம். ஆனா படத்துல அப்பிடி எந்த சீனுமே வரலை.


விஜய்: அய்யோ? நம்ம ரசிகரெல்லாம் அப்பிடி ஒரு சீன் எதிர்பாத்து காத்துட்டு இருப்பாங்களேங்க்ண்ணா?


பாபு: இப்பிடி பண்ணிடலாம் சார். ஃபர்ஸ்ட்டு ஃபைட்டுக்கு முன்னால ஒரு சேஸிங்க் வச்சி அதுல நீங்க குதிரைல கௌபாய் ட்ரெஸ்ல சேஸ் பண்றா மாதிரி வச்சிடலாம்.


*****************************************************************************************


எல்லாம் முடிந்து விஜயும் எஸ்.ஏ.சியும் படம் பார்த்துவிட்டு


விஜய்: என்னப்பா இதுவும் குருவி வில்லு மாதிரி ஆயிடுமா?


எஸ்.ஏ.சி: தம்பி பல வெற்றிப்படங்களக் குடுத்த அனுபவத்துல சொல்றேன். இது கண்டிப்பா சூப்பர் ஹிட்டுதான்


விஜய்: என்னவோப்பா எனக்கு கொஞ்சம் கலக்கமாத்தான் இருக்கு


விஜயின் செல்ஃபோன் அடிக்கிறது. எடுத்துப் பேசும் அவர் முகம் கொஞ்ச கொஞ்சமாய் பிரகாசமாகிறது.


விஜய்: அப்பா, ஒரு ஹேப்பு நியூஸ். படம் எப்பிடியும் ஹிட் ஆகிடும்.


எஸ்.ஏ.சி: எப்பித்தம்பி சொல்றிங்க?


விஜய்: படத்த சன் பிக்சர்ஸ் வாங்கிட்டாங்களாம். அவங்க எப்பிடியும் படத்த ஓட வச்சிருவாங்க. எனக்கு இனி நல்லா தூக்கம் வரும்


**************************************************************************************

23 comments:

Chitra said...

ஹா, ஹா, ஹா,...... நிச்சயமா படத்தை விட உங்க கற்பனை காமெடி விமர்சனம் சூப்பர் டோய் .........

Unknown said...

முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

Unknown said...

மைனஸ் ஓட்டு விழுந்திடிச்சி. நான் ஃபேமஸ் ஆகிட்டேன்..

kudukuduppai said...

enakku vadai illai, ini no vijay padam.

Unknown said...

//kudukuduppai said...
enakku vadai illai, ini no vijay padam.
//

நல்ல முடிவு சார்

VISA said...

ஏய் அசத்தல்ப்பா.

Anonymous said...

Unmaiya ippadithan kadhai discussion nadanthurukkum....

கலகலப்ரியா said...

யு டூ முகிலன்..?? =)).. இது கலக்கல் விமர்சனம்... இப்டிதான் பண்ணி இருப்பாய்ங்க போல..ஹிஹி... பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டீங்க போங்க.. நடந்துக்கிட்டே யோசிப்பீங்களோ..? =)) அப்புறம் ஃபேமஸ் ஆனதுக்கு வாழ்த்துகள்... யாரோ வேட்டைக்காரனுக்கு நாக்கு வழிக்கிற ஆளுன்னு நினைக்கிறேன்... =))..

கலகலப்ரியா said...

நெஞ்சில மாஞ்சா இருக்கிறவங்க ப்ளஸ் ஓட்டுப் போட்டு அந்த மைனஸ் உண்டு இல்லைன்னு ஆக்கக் கோரப்படுகிறார்கள்... வெற்றிவேல்... வீரவேல்.. =))

Keddavan said...

சும்மா கலக்கியிருக்கீங்கன்னா...நேரில இருந்து பார்த்த மாதிரி எழுதியிருக்கீங்க..உண்மையிலயே..இது தான் நடந்திருக்கும்...

அண்ணாமலையான் said...

ஹாஹாஹா... பாவம் விஜய்.....

Anonymous said...

//எம்மகன் பாட்சா மாதிரி வேணும்னு கேட்டானே.//

அவரு எத்தினி வருசமாச்சு பாட்ஷா பண்ண, இவரு இப்பவே பண்ணனும் நினைச்சா எப்படி :)

Unknown said...

// VISA said...
ஏய் அசத்தல்ப்பா.
//

நன்றி விசா

Unknown said...

// Anonymous said...
Unmaiya ippadithan kadhai discussion nadanthurukkum....
//

அதக் கேட்டுட்டுத்தான எழுதியிருக்கேன் அனானி

Unknown said...

// கலகலப்ரியா said...
யு டூ முகிலன்..?? =))
//

இஃகி இஃகி ஜோதில ஐக்கியமாகிற வேண்டியதுதானக்கா.

//.. இது கலக்கல் விமர்சனம்... இப்டிதான் பண்ணி இருப்பாய்ங்க போல..ஹிஹி... பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டீங்க போங்க.. நடந்துக்கிட்டே யோசிப்பீங்களோ..? //

படுத்துக்கிட்டே யோசிச்சேன்
=)) அப்புறம் ஃபேமஸ் ஆனதுக்கு வாழ்த்துகள்... யாரோ வேட்டைக்காரனுக்கு நாக்கு வழிக்கிற ஆளுன்னு நினைக்கிறேன்... =))..

ஆமாம்

Unknown said...

rajeepan said...
சும்மா கலக்கியிருக்கீங்கன்னா...நேரில இருந்து பார்த்த மாதிரி எழுதியிருக்கீங்க..உண்மையிலயே..இது தான் நடந்திருக்கும்...


வருகைக்கு நன்றி ராஜீபன்

Unknown said...

// அண்ணாமலையான் said...
ஹாஹாஹா... பாவம் விஜய்.....//

ஆமாங்க, பாவம் அவர்கிட்ட உலக சினிமா தேடலை கில்லி மாதிரி ஒரு எண்ட்டர்ட்டெயின்மெண்ட் கேட்டா அவர் கில்லியவே திருப்பிக் குடுப்பாரு போல

Unknown said...

சின்ன அம்மிணி said...
//எம்மகன் பாட்சா மாதிரி வேணும்னு கேட்டானே.//

அவரு எத்தினி வருசமாச்சு பாட்ஷா பண்ண, இவரு இப்பவே பண்ணனும் நினைச்சா எப்படி :)

உங்களுக்குத் தெரியுது எனக்குத் தெரியுது நேத்து வந்த சுண்டு சுளுவானுக்கெல்லாம் தெரியலயே. ஒரே படத்துல ரஜினி ஆகிரலாம்னு பாக்குறாங்க.

Unknown said...

கலகலப்ரியா said...
நெஞ்சில மாஞ்சா இருக்கிறவங்க ப்ளஸ் ஓட்டுப் போட்டு அந்த மைனஸ் உண்டு இல்லைன்னு ஆக்கக் கோரப்படுகிறார்கள்... வெற்றிவேல்... வீரவேல்.. =))

December 20, 2009 12:14 AM

நீங்க வேற இடைத்தேர்தல் ஞாபகத்துல நம்மாளுங்க காசு கேட்டுறப்போறாங்க

vimal said...

Super appu........

திவ்யாஹரி said...

ஹா ஹா ஹா விஜய் பாவம். ஏன் இப்டி? சரியான காமெடி. உண்மையா இது தான் நடந்திருக்கும்..

மைனஸ் ஒட்டுன்னா என்ன முகிலன்?

Unknown said...

//ஹா ஹா ஹா விஜய் பாவம். ஏன் இப்டி? சரியான காமெடி. உண்மையா இது தான் நடந்திருக்கும்..

மைனஸ் ஒட்டுன்னா என்ன முகிலன்?
//

பதிவுல மேல இருக்குற தமிழ்மணப் பட்டையப் பாருங்க. அதுல மேல தூக்குன மாரி கட்ட விரல தட்டுனிங்கனா + ஓட்டு. கீழ இருக்குற கட்ட விரலத் தட்டுனிங்கன்னா மைனஸ் ஓட்டு.

தமிழ்மணம் பரிந்துரை: 3/4 - அப்பிடின்னு இருக்குல, அப்பிடின்னா விழுந்த நாலு ஓட்டுல மூணு தான் பாசிட்டிவ். இன்னோன்னு மைனஸ்

துபாய் ராஜா said...

உண்மையிலே இப்படித்தான் நடந்திருக்குமோன்னு நினைக்க வச்சுட்டிங்க... :))

அப்புறம் முகிலன், ஒரு தகவல்.

//விஜய்: பாபு, நீங்க தரணியோட அஸிஸ்டண்ட். உங்க டைரக்டரோட ஃபர்ஸ்ட் படம் தில் மாதிரி இதுவும் சூப்பர் ஹிட் ஆகணுங்க்ண்ணா..//

இதை 'உங்க டைரக்டரோட ஃபர்ஸ்ட் சூப்பர் ஹிட் படம் தில் மாதிரின்னு' மாத்திடுங்க. தரணி இயக்கிய முதல் படம் வீரப்பன் கதையை ஒட்டிய 'எதிரும் புதிரும்'. மம்மூட்டி, நெப்போலியன், நாசர் நடித்தது.
அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றி அடையாததால் மறுபடியும் அசிஸ்டெண்ட் டைரக்டரானார் தரணி.

பின் சில ஆண்டுகளூக்கு பின் இயக்கிய படம்தான் தில்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.