Friday, January 15, 2010

பிதற்றல்கள் 1/15/2009

அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்

வருடாந்திர கணக்கு முடிக்கவேண்டியிருப்பதால் எங்கள் அலுவலகத்தின் ஃபைனான்ஸ் பிரிவு அவர்கள் க்யூபிக்கிளின் வெளியே ஒரு நோட்டிஸ் - YEAR END IN PROGRESS. PLEASE BE QUIET - ஒட்டியிருந்தார்கள். அதைப் பார்த்து கடுப்பான எங்கள் நெட்வொர்க் ஸ்பெஷலிஸ்ட் அவர் க்யூபிக்கிளின் வெளியே இப்படி ஒரு நோட்டிஸ் ஒட்டி விட்டார் - Shh.. QUIET PLEASE. INFORMATION TECHNOLOGY WORKS ALL YEAR -

(நன்றி: ரீடர்ஸ் டைஜஸ்ட்)
**********************************************************************************
போன வருடம் தமிழக அரசு தை ஒண்ணாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார்கள். எத்தனை பேர் அதை பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படிப் பின்பற்றுபவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.

எல்லோரும் பொங்கல் வைத்தோ, கரும்பு சாப்பிட்டோ, மாட்டைக் குளிப்பாட்டி, அலங்காரம் செய்து அதற்கு பொங்கல் ஊட்டியோ, ஜல்லிக்கட்டில் மாட்டை அடக்கியோ, அதை வேடிக்கைப் பார்த்தோ, முட்டாள் பெட்டியின் முன் உட்கார்ந்தோ, திரையரங்கிற்குப் போய் படம் பார்த்தோ பொங்கல் கொண்டாடி முடித்திருப்பீர்கள். நாங்களும் குக்கரில் பொங்கல் வைத்து சாப்பிட்டும் சாப்பிடாமலும் அலுவலகம் போய் அங்கு நண்பர்களுடன் பொங்கலைப் பகிர்ந்து கொண்டாடிவிட்டோம்.
***************************************************************************************
சமீபத்தில் படித்த இரண்டு விஷயங்கள் மனதை மிகவும் பாதித்தது.  மதுரையில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க மறுத்திருக்கிறார்கள். கடைசியில் அந்தப் பெண்ணுக்கு சுயபிரசவம் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) ஆகியிருக்கிறது. அதன் பின் வந்து குழந்தையை எடுத்துக் கொண்டு போய் குளிப்பாட்டி குழந்தையைக் கொடுப்பதற்கு ரூ.1500/- கேட்டிருக்கிறார்கள். கொடுக்க காசில்லை என்று சொன்னதற்கு தரக்குறைவாகப் பேசியிருக்கிறார்கள். மருத்துவத் தொழில் புனிதமானது. அதை சேவை என்று நினைத்து செய்யக்கூடியவர்கள் அதிகமானால் தான் இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற செயல்கள் தொடராது.

இன்னொரு கொடுமையான சம்பவம் - மனநிலை சரியில்லாததால் எண்ணை என்று நினைத்து விஷத்தை ஊற்றி தோசை சுட்டு மரணமடைந்த சம்பவம். வேதாரண்யம் அருகில் ஒரு கிராமத்தில் ஒரே வீட்டில் நான்கு குழந்தைகளுக்கும் பிறவியிலிருந்தே மன நிலை சரியில்லையாம் - அநேகமாக ஆட்டிஸம்? - நான்கு பேரும் வாலிப வயதை எட்டினாலும் மனதால் குழந்தையாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களின் அம்மாவும் மறைந்த பின்னர் அப்பா மட்டுமே அவர்களை பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறார்.

சம்பவ தினத்தன்று அவர் ஏதோ வேலையாகச் சென்று விட்டிருக்கிறார். மூத்த மகள் உடன் பிறந்தவர்களுக்கு தோசை சுட்டுத்தர எண்ணெய் என்று நினைத்து பயிருக்கு அடிக்க வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை உபயோகப் படுத்தி இருக்கிறார். இதனால் அவரும் இன்னொரு சகோதரரும் மரணம் அடைந்த்துவிட்டார்கள். மற்ற இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இவர்களின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்குப் பிறகு பேக் செய்து தர ஆயிரம் ரூபாய் பேரம் பேசியிருக்கிறார்கள் பிணவறை ஊழியர்கள். ஊர்க்காரர்கள் சேர்ந்து அந்தக் காசைக் கொடுத்தபின் தான் உடல்களைப் பெற முடிந்திருக்கிறது

இவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.
*************************************************************************************
ஃபாலோ-அப்: தினமலர் வீடியோ உண்மையா இல்லையா என்று கண்டுபிடித்துச் சொல்லவேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்கு இருப்பதாக வானம்பாடிகள் சொல்லிவிட்டதால் இந்த ஃபாலோ-அப். அமைச்சர்கள் மற்றும் அங்கே இருந்த காவல்துறை அதிகாரிகள் சொல்வது என்னவென்றால் - ஆம்புலன்ஸ் வந்தால் அதில் முதலுதவிக்கான வசதிகள் இருக்கும் என்பதால் ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்தார்களாம். அதுவர லேட்டாகும் என்று தெரிந்ததும் அமைச்சரின் காவலுக்கு வந்திருந்த ஒரு வேனில் ஏற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அம்பாசமுத்திரம் மருத்துவமனையில் முதலுதவி செய்துவிட்டு பாளையங்கோட்டை ஜி.எச்சுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். 4:00 மணி சுமாருக்கு உயிர் பிரிந்திருக்கிறது.

இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், அமைச்சர்கள் மற்றும் அங்கே கூடியிருந்தவர்களின் மேல் தவறு இருக்கிறது என்றாலும், அதை மீடியா ஊதிப் பெரிதாக்கிவிட்டிருக்கிறது. அதிலும் வட இந்திய மீடியாக்களுக்கு - வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரியாகிவிட்டது. கோவை அருகே ராணுவ வாகனத்தைத் தாக்கிய சம்பவத்தை கவர் செய்த என்.டி.டி.வி செய்தியை நினைவில் கொள்ளுங்கள். இதில் கொடுமை என்னவென்றால், வளைத்து வளைத்து படமாக்கிய அந்த கேமராமேன் உதவி செய்யாததைப் பற்றி ஒருவரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள். அவரும் தானே குற்றவாளியாகிறார்?
*********************************************************************************
நான் இந்தியாவில் லைப்ரரிக்கு அவ்வளவாகப் போனதே இல்லை. சிறு வயதில் ஆர்வக் கோளாரில் ஸ்கூல் லைப்ரரியில் டின் டின் காமிக் புக் எடுத்து ஒரு வருடமாகத் திருப்பி தராமல் போனதால் கட்டிய ஃபைன் காரணமோ தெரியவில்லை. கல்லூரியில் ஒவ்வொரு வருடக் கடைசியிலும் லைப்ரரியனிடம் நோ ட்யூ சர்டிஃபிக்கேட் பெற போயிருக்கிறேன். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது எக்ஸாம் எழுதப் போயிருக்கிறேன். மற்ற படி லைப்ரரி பக்கம் போனதில்லை.

அமெரிக்கா வந்த பின் என்னுடன் வேலை பார்த்த அக்கட பூமிக்காரன் லைப்ரரியில் டி.வி.டி ஃப்ரீயாக ரெண்ட் எடுக்கலாம் என்று சொன்னதால் போய்ப் பார்த்தேன். என் தாத்தா காலப் படங்களாக இருந்ததால் வெறும் கார்டு மட்டும் விண்ணப்பித்துவிட்டு வந்துவிட்டேன். ஆனால் ஒரு வருடம் தினமும் காலையில் 90 மைல் மாலையில் 90 மைல் பயணம் செய்ய வேண்டி இருந்த போது ஆடியோ-புக் லைப்ரரியில் எடுத்து கேட்டுக் கொண்டே செல்வது வழக்கமாகிப் போன போது லைப்ரரி போகும் பழக்கம் அதிகமானது. அந்தப் பயணம் தேவை இல்லாமல் ஆனபோது லைப்ரரிக்கு வழியும் மறந்து போனது.

ஆனால் இந்த புதன்கிழமை இங்கே லோக்கல் லைப்ரரியில் குழந்தைகளுக்கு ஸ்டோரி டெல்லிங்க் என்று ஒரு (ஃப்ரீ தான்) ப்ரொக்ராம் இருப்பதாகத் தெரிய வந்ததும் தங்கமணி படுத்தியதால் போனோம். உள்ளே நுழைந்ததும் ஆனந்த அதிர்ச்சி. ஒரு பலகையில் பல மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள். அதில் தமிழும் இருந்தது. இனி அடிக்கடி அந்த லைப்ரரிக்குப் போக வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.




11 comments:

பின்னோக்கி said...

ரொம்ப கனமான பிதற்றல்கள்

பின்னோக்கி said...

ரொம்ப கனமான பிதற்றல்கள்

vasu balaji said...

இந்த பிரசவ ஆஸ்பத்திரி கொடுமை சொல்லி மாளாது. குழந்தை பிறந்த தகவல் சொல்ல ஒரு ரேட், அதுவும் ஆண் என்றால் அதிகம். 5 ரூ காஃபி கொண்டு போய் கொடுக்க 25ரூ லஞ்சம். இது வரைக்கும் பிரசவ ஆஸ்பத்திரியில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டது படித்த கவனமில்லை.

மார்ச்சுவரி பிணந்தின்னிக் கழுகுகள். அவர்கள் செய்யும் சேவை(?)க்கு தண்ணி அவசியம் என்ற சாக்கு இருந்தாலும் கூட. சுடுக்காட்டில் இலவசம் என்று போர்ட் இருந்தாலும், ஜாதி சங்க தலைவர் பேசணுமா என்று சொல்லாவிடில் அநியாயக் கொள்ளை.

முந்திரிகள் உளறல் உச்சக்கட்டம். ரத்தம் போய்க்கொண்டிருக்க, அங்கு ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் என்று தெரிந்தும் காத்திருந்தோம் என்பது.

அது சரி சொன்னாற்போல் இந்த பரதேசிகள் இல்லாவிடில் மக்கள் எப்படியோ சேர்த்திருப்பார்கள்.

Unknown said...

// பின்னோக்கி said...
ரொம்ப கனமான பிதற்றல்கள்
//

ஐயயோ.. அப்பிடி இருந்துரக்கூடாதுன்னு தான் ரீடர்ஸ் டைஜஸ்ட்ல இருந்து ஜோக்கெல்லாம் காப்பி அடிச்சிப் போட்டேனே...

Unknown said...

// வானம்பாடிகள் said...
இந்த பிரசவ ஆஸ்பத்திரி கொடுமை சொல்லி மாளாது. குழந்தை பிறந்த தகவல் சொல்ல ஒரு ரேட், அதுவும் ஆண் என்றால் அதிகம். 5 ரூ காஃபி கொண்டு போய் கொடுக்க 25ரூ லஞ்சம். இது வரைக்கும் பிரசவ ஆஸ்பத்திரியில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டது படித்த கவனமில்லை.
//
கரெக்ட் சார்

//
மார்ச்சுவரி பிணந்தின்னிக் கழுகுகள். அவர்கள் செய்யும் சேவை(?)க்கு தண்ணி அவசியம் என்ற சாக்கு இருந்தாலும் கூட. சுடுக்காட்டில் இலவசம் என்று போர்ட் இருந்தாலும், ஜாதி சங்க தலைவர் பேசணுமா என்று சொல்லாவிடில் அநியாயக் கொள்ளை.
//

ஆமா நானும் இதைப் பார்த்திருக்கிறேன். பணம் இருப்பவர்கள் கொடுத்து விடுகிறார்கள். மற்றவர்கள்?

//
முந்திரிகள் உளறல் உச்சக்கட்டம். ரத்தம் போய்க்கொண்டிருக்க, அங்கு ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் என்று தெரிந்தும் காத்திருந்தோம் என்பது.

அது சரி சொன்னாற்போல் இந்த பரதேசிகள் இல்லாவிடில் மக்கள் எப்படியோ சேர்த்திருப்பார்கள்
//
ஆமாம். மந்திரிகள் இருந்ததால் மற்றவர்கள் நெருங்க யோசித்திருப்பார்கள். ஆனால் மீடியாக்களும் கொஞ்சம் ஓவராக ஊதிப் பெருதாக்குகிறார்கள் என்று தோன்றுகிறது.

கலகலப்ரியா said...

//நாங்களும் குக்கரில் பொங்கல் வைத்து சாப்பிட்டும் சாப்பிடாமலும் அலுவலகம் போய் அங்கு நண்பர்களுடன் பொங்கலைப் பகிர்ந்து கொண்டாடிவிட்டோம். //

:(.. me.. bread only..

கலகலப்ரியா said...

மொத்தத்தில் எல்லாம் அருமை...=)

Unknown said...

//கலகலப்ரியா said...
//நாங்களும் குக்கரில் பொங்கல் வைத்து சாப்பிட்டும் சாப்பிடாமலும் அலுவலகம் போய் அங்கு நண்பர்களுடன் பொங்கலைப் பகிர்ந்து கொண்டாடிவிட்டோம். //

:(.. me.. bread only..//

ஏன் உடம்பு சரியில்லாததாலா?

Unknown said...

//கலகலப்ரியா said...
மொத்தத்தில் எல்லாம் அருமை...=)
//

நன்றி

சுடுதண்ணி said...

//- Shh.. QUIET PLEASE. INFORMATION TECHNOLOGY WORKS ALL YEAR - //

மிகவும் ரசித்தேன்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

Anonymous said...

நாங்களும் ப்ரஷர் குக்கர் பொங்கல்தான்