கி.பி. 2003ல பெங்களூர்ல குப்பை கொட்டிட்டிருந்த காலம். நாம கொட்டின குப்பை அளவப் பாத்து அசந்து போன நம்ம கிளயண்ட், யப்பா வருசக் கடேசியாகப் போகுது. இங்க குப்பை ரொம்ப சேர்ற காலம். அதுனால நீ இங்க வந்து கொட்டுன்னு கூப்புட்டாய்ங்க.
சரி ஏற்கனவே ஒரு தடவ போய் வந்த ஊருதானன்னு நம்ம கூட குப்ப கொட்டுற ரெண்டு பேரோட பி-1 விசா வாங்கி கெளம்பியாச்சி. பெங்களூர்ல இருந்து பாம்பே போய் அங்கயிருந்து பாரிஸ், பாரிஸ்ல இருந்து அட்லாண்டா, அட்லாண்டால இருந்து அல்பெனி. இது தான் நம்ம ப்ளேனோட ப்ளான்.
அட்லாண்டா வந்து இறங்கியாச்சு. அட்லாண்டா ஏர்போர்ட் இருக்கே அது ஒரு கேனத்தனமான ஏர்போர்ட். எந்த ஏர்போர்ட்லயாவது ஏர்போர்ட் விட்டு வெளிய போறதுக்கு செக்யூரிட்டி செக் வச்சிருப்பாய்ங்களா? இங்க இருந்திச்சி. அது சரி, பாமு கீமு ஏதாவது கொண்டு வந்திருந்தா ஊருக்குள்ள கொண்டு போயிராத ஏர்போர்ட்டுக்குள்ளயே வச்சிட்டுப்போன்னு சொல்றாய்ங்க போல.
நாம மேட்டருக்கு வருவோம். டிசம்பர் மாசம். பாழாப்போன அல்பெனில பனிப் பொழிவுன்னு அங்க போற ஃப்ளைட்டக் கேன்சல் பண்ணிப்புட்டாய்ங்க. வேற வழியில்லாம அட்லாண்டால தங்கிட்டு அடுத்த நாள் ரெட் ஐ பிடிச்சி அல்பெனி போய் சேந்தோம்.
அதுக்கு முன்னாடி அமெரிக்கா வந்த அனுபவம் இருக்கிறதால பந்தாவா ஒரு ரெண்டல் கார் எடுத்திட்டு நடு ராத்திரி பன்னெண்டு மணிக்கு எக்ஸ்டெண்டட் ஸ்டேக்குப் போய் நின்னா, “சாரி பாஸ் கடைய பத்து மணிக்கே மூடிருவோம். அதுக்கு மேல செக்-இன் பண்ண முடியாது”ன்னு கைய விரிச்சிட்டாய்ங்க. நெலமைய நெனச்சி நொந்துக்கிட்டே ஏர்போர்ட்டுக்குத் திரும்பப் போயி பக்கத்துல இருந்த இன்னொரு ஓட்டல்ல தங்கி காலைல இங்க வந்து செக்-இன் பண்ணோம்.
அங்க இருந்த ரெண்டு மாசத்துல பனிக்கு நடுவுல எங்க எல்லாம் போக முடியுமோ அங்க எல்லாம் போயிட்டு வந்துட்டோம். வெள்ளிப் பனிமலையப் பாத்ததும் எனக்கும் என் கூட வந்த இன்னொரு ஃப்ரண்டுக்கும் பனிச் சறுக்கணும்னு ஆசை வந்திடுச்சி.
அங்க இருந்த மத்த (வெள்ளக்கார) ஃப்ரண்ட்ஸ்க கிட்ட இந்த ஆசையத் தயங்கித் தயங்கி சொல்லவும், அட அதுனால என்ன போகலாம்னு சொல்லி, அவிங்களே எங்களுக்கு ஸ்னோ சூட் குடுத்து பக்கத்துல இருந்த ஒரு பனிச்சறுக்கு ரிசார்ட்டுக்குக் கூட்டிட்டுப் போனாய்ங்க. போயி காசு கட்டி ஸ்கியிங் கிட் வாடகைக்கு எடுத்துக்கிட்டு ஒரு மணி நேர பயிற்சிக்கும் காசு கட்டிட்டு தெகிரியமா வெளிய போயிட்டோம்.
க்ளாஸ் எடுத்தவரும் வாங்குன காசுக்கு வஞ்சன இல்லாம நல்லாத்தான் சொல்லிக் குடுத்தாரு. அதுவும் நம்ம மண்டைல நல்லாத்தேன் ஏறிச்சி. ஆனா சறுக்கணும்னு விட்டப்பத்தான், ரொம்ப சாரியாடுச்சி.
நம்ம நேரம் பாருங்க அப்பப் பாத்து பக்கத்து பள்ளிக்கோடத்துல இருந்து ஒரு குரூப்பு பொடிப் பயலுக - அதிகப் பட்சம் அஞ்சி வயசு தான் இருக்கும் - வந்தாய்ங்க. ரொம்ப நாளாப் பழகியிருப்பாய்ங்க போல இருக்கு சும்மா சல் சல்லுனு சறுக்குறாய்ங்க. அவிங்களப் பாக்க நமக்குக் கொஞ்சம் ஒதறல் தான். ஆனாலும் தைரியமா படிச்சத செஞ்சிப் பாக்க சின்ன (50 அடி) மேட்டுல இருந்து சறுக்கிட்டுப் போயி நிக்க முடியாம தவறி விழுந்த இடம் ஒரு சின்னப் பையனோட காலடி. அந்தக் குரூப்பு சிரிச்ச சிரிப்பு இருக்கே, கிரி படத்து வடிவேலுவப் பாத்துக்கூட நான் அம்புட்டு சிரிச்சிருக்க மாட்டேன்.
இத விடக் கொடுமையான விசயம் என்ன தெரியுமா? அந்த அம்பதடி மேட்டு மேல ஏற ஒரு மெக்கானிசம் வச்சிருந்தாய்ங்க. ரோப் டோ - ஒரு கயறு சக்கரத்துல சுத்தி சுத்தி - எஸ்கலேட்டர் மாதிரி - போயிட்டே இருக்கும். அந்தக் கயத்துல மூணு அடி இடைவெளியில ஒரு அடி குச்சிகள் கட்டி இருக்கும். மேல ஏறனும்னு நினைக்கிறவிங்க அந்த குச்சிகள்ல ஒண்ணப் பிடிச்சிக்கிட்டா, கயறு மேல போகும்போது நீங்களும் போகலாம். ஆனா சரியா பேலன்ஸ் பண்ணலைன்னா தடுமாறி கீழ விழுகுறதோட உங்க பின்னாடி வர்றவங்களையும் வாரி விட்டுருவீங்க. இதுக்கு மேல நான் அதுல எப்பிடி மேல போனேங்கிறதப் பத்தி சொல்ல வேணாமுன்னு நினைக்கிறேன்.
அதோட ஒரு முடிவு எடுத்தேன். பனிச்சறுக்கு செய்ய ஆசப் பட்டோம். ஒரு வழியா நெறவேத்திட்டோம். இனிமே பனிச்சறுக்கை எல்லாம் தூரத்தில இருந்து பாக்குறதோட நிறுத்திக்கணும்னு.
விதி யார விட்டது? இன்னிக்குக் காலையில ஆபீஸுக்கு போயிட்டு இருக்கும்போது நம்ம காருக்கு பனிச் சறுக்கனும்னு ஆசை வந்திருச்சு. பாழாப்போன காரு ஹைவேல போகும்போதா ஆசப் படணும். திடீர்னு சறுக்க ஆரம்பிச்சதும் பிரேக் போட முயற்சி செஞ்சும் கார் சுத்தி பக்கத்து லேன்ல போயிட்டிருந்த ஒரு ட்ரக்ல லேசா இடிச்சிருச்சி. வலது பக்க பம்பர்ல ஒரு ஓட்டை. வேற எதுவும் ஆகல. இன்ஸ்யூரன்சுக்கு கூப்பிட்டா, கொலிஷன் க்ளைமுக்கு உன் பங்குக்கு ஐநூறு டாலர் அழனும்டா செல்லம்னு சொல்லிட்டாய்ங்க.
ஒரு வேள மொத்த செலவே ஐநூறு டாலருக்குள்ள இருந்தா நாம தேவை இல்லாம க்ளெயிம் பண்ண வேண்டாமேன்னு ஒரு கடையில போயி எஸ்டிமேட் கேட்டா $1392 எஸ்டிமேட் குடுக்குறான். இதுல பாதி பார்ட்ஸ், மீதி லேபர். சரி மாசா மாசம் இன்ஸ்யூரன்ஸ்க்கு அழுகுறோமே, இதையாவது அவன் குடுக்கட்டும்னு அவன் மூலமாவே போறேன். வேற என்ன செய்யிறது? கார அப்பிடியே ஓட்ட முடியாதே. போகும்போது திடுதிப்புனு பம்பர் கழண்டு விழுந்துரிச்சின்னா?
என்னவோ பனிச் சறுக்குனாலே எனக்கும் ஆவறதில்ல. என் காருக்கும் ஆவறதில்ல. நான் எப்பிடி ஒரு தடவ பட்டுக்கிட்டு பனிச்சறுக்க நெனக்காம இருக்கேனோ அப்பிடி என் காரும் இருந்திட்டா பிரச்சனை இல்லை.

17 comments:
இன்னும் ரெண்டு கடை பாருங்க.
இன்சூரன்ஸ் இல்லைன்னா குறைப்பான்
நாங்களும் தூரத்தில இருந்து சறுக்குறத பாக்கறதோட சரி. ரிஸ்க்-ரஸ்க்கெல்லாம் எடுக்கறதில்லை.
என் கத உங்களுக்கு எப்படி தெரியும் முகிலன்? நான் அந்த கார வித்துட்டேன்....ஹீ ஹீ..
அடப்பாவமே ! பாத்து ஓட்டுங்க.
இந்த ABSன்னு சொல்றாங்களே ப்ரேக்ல அது எல்லாம் வேலைக்காகாதா பனியில ?
excellent...
// குடுகுடுப்பை said...
இன்னும் ரெண்டு கடை பாருங்க.
இன்சூரன்ஸ் இல்லைன்னா குறைப்பான்
//
கேட்டேன் பாஸ். எங்கயும் ஆயிரம் டாலருக்கு கீழ போக மாட்டேங்குறான். கனடாவுக்குப் போனா சீப்பா முடியும்னு சொல்றாங்க. ஆனா கனடா போற வரைக்கும் பம்பர் தாங்குமான்னு தெரியல.
// சின்ன அம்மிணி said...
நாங்களும் தூரத்தில இருந்து சறுக்குறத பாக்கறதோட சரி. ரிஸ்க்-ரஸ்க்கெல்லாம் எடுக்கறதில்லை.
//
நல்ல முடிவு
//செந்தில் நாதன் said...
என் கத உங்களுக்கு எப்படி தெரியும் முகிலன்? நான் அந்த கார வித்துட்டேன்....ஹீ ஹீ..
//
ஹி ஹி ஹி
// பின்னோக்கி said...
அடப்பாவமே ! பாத்து ஓட்டுங்க.
இந்த ABSன்னு சொல்றாங்களே ப்ரேக்ல அது எல்லாம் வேலைக்காகாதா பனியில ?//
ABS வேலைக்காவும். ஆனா அது என் கார்ல இல்ல.
//அமுதா கிருஷ்ணா said...
excellent...//
எதுங்க எக்ஸலெண்ட்?
//என்னவோ பனிச் சறுக்குனாலே எனக்கும் ஆவறதில்ல. என் காருக்கும் ஆவறதில்ல. //
நமக்கும் அது ஆவறதில்லைங்கோ :)
காரை மாத்துங்க முகிலன்
நசரேயன் said...
காரை மாத்துங்க முகிலன்
//
எனக்கும் அதுதான் ஆசை. ஆனா வாங்கி 5 வருசந்தான் ஆகுது, அதுக்குள்ள மாத்துறதான்னு...
driver-a maathunga =))...
//எஸ்டிமேட் கேட்டா $1392//
அந்தக் கொடுமைய ஏன் சொல்லுறீங்க.. அவ்வ்வ்வ்..
//கலகலப்ரியா said...
driver-a maathunga =))...//
தங்கமணிக்கூட இதத்தான் சொன்னாங்க..
இதெப்படி என் கண்ணுல படாம சறுக்கிச்சி:))
வானம்பாடிகள்
Post a Comment