Tuesday, January 12, 2010

கனவு

விஜய் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

அலாரம் அடித்த சத்தம் கேட்டதும் எழுந்த விஜய் மணியைப் பார்த்தான். 6:30. இன்று எட்டு மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். பர பரவென கிளம்பி தூங்கிக் கொண்டிருந்த ஹரிக்கும் ஹரியின் அம்மாவுக்கும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு சாண்ட்விச்சைக் கடித்துக் கொண்டே காரைக் கிளப்பினான்.

சடுதியில் மெயின்ரோட்டை அடைந்து காரை வேகப் படுத்தினான்.

ரெட் சிக்னல்.

வேறு வழியின்றி காரை நிறுத்தினான். ஆற்றாமையால் காரின் ஸ்டிரியங்கைக் கையால் குத்தினான்.

“அய்யா சாமீ பிச்ச போடுங்கய்யா...”

குரல் கேட்டு கோபத்துடன் திரும்பினான். அழுக்கு பிச்சைக்காரி இடுப்பில் குழந்தையுடன் கையில் இருந்த நசுங்கிய அலுமினியத்தட்டை அவன் முகம் நோக்கி நீட்டினாள்.

வெறுப்புடன் “ச்சீ போ அந்தாண்ட. வந்துட்டா காலங்காத்தால” என்று சொல்லி கார்க்கண்ணாடியை ஏற்றினான். கண்ணாடி முழுதும் மூடும் கடைசி விநாடியில் அந்தப் பிச்சைக்காரியின் கையில் இருந்த குழந்தையின் முகத்தைப் பார்த்தான் -

ஹரி...

அதிர்ச்சியில் திடுக்கிட்டு எழுந்தான்..

முகமெல்லாம் குப்பென்று வேர்த்திருந்தது. பக்கத்தில் பார்த்தான். ஹரி அவன் அம்மாவைக் கட்டிக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான். மனம் மெதுவாக நிஜத்திற்கு வந்து கொண்டிருந்தது. எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு மறுபடி வந்து படுத்துக் கொண்டான். எப்போது தூங்கினான் என்றே தெரியாமல் தூங்கிப் போனான்.

***************************************************************

ஹரி அம்மாவின் இடுப்பில் இருந்து டாடா காட்டினான். கையை அசைத்துக் கொண்டே காரை ரிவர்ஸில் எடுத்தான் விஜய். கார் கண்ணில் இருந்து மறையும் வரை கையசைத்துக் கொண்டே இருந்த ஹரியை ரியர்வ்யூ மிரர்ரில் பார்த்துக்கொண்டே காரை செலுத்தினான்.

ரெட் சிக்னல். கார் நின்றது.

“அய்யா சாமீ பிச்ச போடுங்கய்யா”

முன்னால் நின்றிருந்த பைக்காரனிடம் தட்டேந்திக் கொண்டிருந்தாள் அந்த அழுக்குப் பிச்சைக்காரி. அவன் அவளை விரட்டிக் கொண்டிருந்தான்.

பர்ஸில் இருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை உருவி, “இந்தாம்மா இங்க வா” என்று அவளை அழைத்தான் விஜய்.

15 comments:

vasu balaji said...

நல்லாருக்கு. இப்புடித்தான் கொஞ்சமாவது தருமம் இருக்கு.

Anonymous said...

எல்லாருக்கும் இந்த மாதிரி கனவு வரணும்னு சாபம் குடுக்கலாமா :)
நல்ல கதை முகிலன்.

Chitra said...

very nice short story.

கலையரசன் said...

எல்லோரையும் சொந்தமாக பார்த்தால், இந்த கனவே தேவையிருக்காது!!!

நர்சிம் said...

பிடித்திருந்தது பாஸ்

கலகலப்ரியா said...

:)... நல்லாருக்கு முகிலன்...

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

angel said...

a short story with a good concept .

Unknown said...

@வானம்பாடிகள் - எஸ்.ஐ சம்பவத்தை வச்சித்தான் எழுதினேன் :)

@சின்ன அம்மிணி :))

@சித்ரா - Thanks

@கலையரசன் - ஆமாங்க

@நர்சிம் - நன்றி சார்

@கலகலப்ரியா - நன்றிக்கா

@RADAAN - அப்பிடியே செய்யறேங்க

@angel - Thanks

அது சரி(18185106603874041862) said...

நல்ல நடை...ஆனா க்ளைமாக்ஸ் எனக்கு பிடிக்கலை :0)))

Unknown said...

// அது சரி said...
நல்ல நடை...ஆனா க்ளைமாக்ஸ் எனக்கு பிடிக்கலை :0)))
//

திருநெல்வேலியின் அந்த எஸ்.ஐயை துடிக்க விட்டு சுற்றி நின்ற கூட்டத்திற்கு முந்தின நாள் இது மாதிரி ஒரு கனவு வந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தோன்றியதன் விளைவே இக்கதை. மற்றபடி எனக்கும் பிச்சை போட்டு சோம்பேறிகளை உருவாக்குவது பிடிக்காது..

ப்ரியமுடன் வசந்த் said...

good writing style...!

குடுகுடுப்பை said...

நல்லாருக்கு , ஆனா பாதிலேயெ முடிவு தெரிஞ்சு போச்சு.

நசரேயன் said...

//சின்ன அம்மிணி said...

எல்லாருக்கும் இந்த மாதிரி கனவு வரணும்னு சாபம் குடுக்கலாமா :)
நல்ல கதை முகிலன்.
//

அப்படி எல்லாம் கொடுக்கப் புடாது

அது சரி(18185106603874041862) said...

//
// அது சரி said...
நல்ல நடை...ஆனா க்ளைமாக்ஸ் எனக்கு பிடிக்கலை :0)))
//

திருநெல்வேலியின் அந்த எஸ்.ஐயை துடிக்க விட்டு சுற்றி நின்ற கூட்டத்திற்கு முந்தின நாள் இது மாதிரி ஒரு கனவு வந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தோன்றியதன் விளைவே இக்கதை. மற்றபடி எனக்கும் பிச்சை போட்டு சோம்பேறிகளை உருவாக்குவது பிடிக்காது..
//

ச்சேச்சே...நான் அதை சொல்ல வரலை...அந்த மாதிரி கேக்குறவங்களுக்கு ஹெல்ப் பண்றது தப்புன்னு நான் நினைக்கலை...

நானாருந்தா அந்த கனவை நினைச்சிக்கிட்டே போயி காரை பள்ளத்துல எறக்கிட்டான்னு முடிச்சிருப்பேன்...:0)))