சிவக்க சிவக்க வறுக்க வேண்டுமாம் கோழி
சொல்கிறாள் அம்மா
தொண்டை வரை நிறைந்திருந்தது
பல்லுக்கு இடையிருந்த துணுக்குகள்
உறுத்தியபடி.
மூணு துண்டுதான் அப்புறம் மீன்
வறுத்துக்கலாம்
இம்முறையும் அம்மாதான்
வாசலில் எதையோ கொத்தியபடி
கொக்கரித்துக் கொண்டிருக்கும்
சேவலைப் பார்க்கிறேன்
காலில் படபடத்தது கட்டிய கயிறு
இனிமே தயிரு தானே அண்ணே?
திசை திருப்பியது மூத்த தங்கையின் குரல்
தயிர்சோத்துல உப்பு போடாம
இருக்கக்கூடாது
மனைவியின் கவலை நாக்கில் கரித்தது
கோழி வெட்டியவனை வீட்டுக்கு அனுப்பி
எனை அடுப்பெரிக்க வைத்த
நல்லதொரு நாளில்
வறுத்துப் பொரிக்கப் பட்டது கோழி
விரால் மீனுடன்
சாப்பிட வந்தவர்களை
வழியனுப்பித் திரும்புகையில்
சேவலின்
கண்களின் திசையறிந்து மௌனமாய்
கேட்டுக்கொள்கிறேன்
இந்த சேவலை வறுத்துப் புசிப்பது
யார்??
அசல் இங்கே
நகல் 1
நகல் 2
24 comments:
:))))) அய்யோ...சிரிப்பு தாங்க முடியலை..எல்லாம் அசலை விட சூப்பரா வறுத்து இருக்கீங்க!
கேள்விக்கு விடை குடுகுடுப்பை.
சேவல் மட்டுமல்ல, பெட்டை, ஆடு, காடை, கவுதாரி, மீன் எதுவாக இருந்தாலும் விடை குடுகுடுப்பை என்பது பொருந்தும்.
/கேள்விக்கு விடை குடுகுடுப்பை.
சேவல் மட்டுமல்ல, பெட்டை, ஆடு, காடை, கவுதாரி, மீன் எதுவாக இருந்தாலும் விடை குடுகுடுப்பை என்பது பொருந்தும்./
கட்சிதான் உங்களுது. படையலும் கூடவா:))
தமிழர் திருநாள் வாழ்த்துகள் முகிலன்.
நிறுத்துங்க :)
இதுக்கு நாயகன் ஸ்டைல்ல என்ன பதில் வரும்னு தெரியும். :)
வானம்பாடிகள் said...
/கேள்விக்கு விடை குடுகுடுப்பை.
சேவல் மட்டுமல்ல, பெட்டை, ஆடு, காடை, கவுதாரி, மீன் எதுவாக இருந்தாலும் விடை குடுகுடுப்பை என்பது பொருந்தும்./
கட்சிதான் உங்களுது. படையலும் கூடவா:))
//
கட்சி நடத்துறதே எனக்கு படைச்சிக்கத்தானே அல்லது மக்களுக்கு படைச்சி நான் சாப்பிடறதுக்கு.
சின்ன அம்மிணி said...
நிறுத்துங்க :)
இதுக்கு நாயகன் ஸ்டைல்ல என்ன பதில் வரும்னு தெரியும். ://
நீங்க ஒரு நாராயணி:)
கொஞ்ச நேரம் கடைத்தெருவ சுத்தப் போனா இப்பிடியா??
//சந்தனமுல்லை said...
:))))) அய்யோ...சிரிப்பு தாங்க முடியலை..எல்லாம் அசலை விட சூப்பரா வறுத்து இருக்கீங்க
//
எல்லாம் அண்ணன் குடுகுடுப்பையையே சாரும்.
//குடுகுடுப்பை said...
கேள்விக்கு விடை குடுகுடுப்பை.
சேவல் மட்டுமல்ல, பெட்டை, ஆடு, காடை, கவுதாரி, மீன் எதுவாக இருந்தாலும் விடை குடுகுடுப்பை என்பது பொருந்தும்
//
இதுதான் எல்லாருக்கும் தெரியுமே.. அதான் பதில் எழுதல.. :)))
//வானம்பாடிகள் said...
/கேள்விக்கு விடை குடுகுடுப்பை.
சேவல் மட்டுமல்ல, பெட்டை, ஆடு, காடை, கவுதாரி, மீன் எதுவாக இருந்தாலும் விடை குடுகுடுப்பை என்பது பொருந்தும்./
கட்சிதான் உங்களுது. படையலும் கூடவா:))
//
கட்சி, தலைமை, தொண்டன், வேட்பாளர், வாக்காளர், படையல், படைப்பவர், புசிப்பவர் எல்லாம் அண்ணன் குடுகுடுப்பை மட்டுமே..
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை..
//வானம்பாடிகள் said...
தமிழர் திருநாள் வாழ்த்துகள் முகிலன்
//
நன்றி சார்.
//சின்ன அம்மிணி said...
நிறுத்துங்க :)
இதுக்கு நாயகன் ஸ்டைல்ல என்ன பதில் வரும்னு தெரியும். :)
//
நிறுத்திட்டோம். அடுத்த எதிர் கவுஜ எழுதுற வரைக்கும்... :)))))
//கட்சி நடத்துறதே எனக்கு படைச்சிக்கத்தானே அல்லது மக்களுக்கு படைச்சி நான் சாப்பிடறதுக்கு.
//
மக்களுக்குப் படைச்சி நீங்க சாப்டா பரவாயில்ல. இன்னிக்கு இருக்குறவங்க மக்களையே படைச்சில்ல சாப்புடுறாய்ங்க.
//குடுகுடுப்பை said...
சின்ன அம்மிணி said...
நிறுத்துங்க :)
இதுக்கு நாயகன் ஸ்டைல்ல என்ன பதில் வரும்னு தெரியும். ://
நீங்க ஒரு நாராயணி:)
//
:)))
முகில் கலக்கல்ஸ்...!
பத்த வச்ச பரட்டை நசரேயனை எங்கே காணோம்:)
நல்லா வறுத்துட்டீங்க........ சாரி, கலக்கிட்டீங்க.!
ஒரு கவுஜ்ச வாடை கவுஜயிலே
mudiyalaa......
சுவை(யா) இருந்திச்(சா)சி
@வசந்த் - தேங்க்ஸ்
@ராஜராஜன் - வந்துட்டாரு.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா
@சித்ரா - நன்றிங்கோ
@நசரேயன் - கவுஜ எழுதறத கவுச்சி எழுதறதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்.. ஹி ஹி
@கலகலப்ரியா - இப்பவாவது தெரிஞ்சிச்சா?
@ஜமால் - நன்றிங்க.
/@கலகலப்ரியா - இப்பவாவது தெரிஞ்சிச்சா?/
கொம்பு சீவியாச்சா:)).
வேற யாரு.... ஆறறிவுதான்!
கவிதைக்கு பாராட்டுக்கள்.
Post a Comment