Thursday, January 21, 2010

ஆயிரத்தில் ஒருவன் - செல்வராகவன் சதி

கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ஆயிரத்தில் ஒருவனை பார்த்தே தீருவது என்று முடிவெடுத்திருந்தேன். பார்த்தும் விட்டேன்.

படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆங்காங்கே பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும். இடைவேளைக்கு முந்தைய பகுதி  பரபர என்று ஓடியது. இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமான ட்ராப் (trap) களை செட் செய்திருக்கலாம். ஆனாலும் மோசமில்லை. இரண்டாம் பகுதி பிரமிப்பு. ஆங்கிலப் படங்களில் மட்டுமே பார்த்து அதிசயித்த பல காட்சிகளை படமாக்கியிருந்த விதம் அருமை. 2000 நடிகர்களை கட்டி மேய்ப்பது சாமானிய காரியம் இல்லை. இவ்வளவுக்கும் பட்ஜெட் 32 கோடிதான் என்றால் ஆச்சரியம்தான். படத்தில் ஆங்காங்கே செல்வராகவன் “டச்” இருக்கிறது.

ஆதித் தமிழன் கருப்புதான். அதற்காக இவ்வளவு கருப்பாகக் காட்டியிருக்க வேண்டாம் என்று என் அலுவலக நண்பர் சொன்னார். எனக்கு அது கூட அவ்வளவு தப்பாகத் தெரியவில்லை.

லாஜிக் ஓட்டைகளை சுலபமாக அடைத்திருக்கலாம். ஏன் செல்வா உக்காந்து யோசிக்கவில்லை என்று தெரியவில்லை.

ரீமா சென் படம் முழுக்க வியாபித்திருக்கிறார். ஹாட்ஸ் ஆஃப் ரீமா. இந்த பாத்திரத்துக்கு சரியான தேர்வு. பல முறை யோசித்துப் பார்த்தும் வேறு யாரையும் அந்த இடத்தில் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ரீமாவுக்கு இந்தப் படம் ஒரு மைல் கல்.

பார்த்திபனின் பாத்திரம் சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் வழக்கமான பார்த்திபனை பார்க்க நேர்ந்தாலும் ரீமாவுடன் சண்டை போடும் காட்சியிலும், ரீமாவின் துரோகத்தை எண்ணி உயிர் விடும் காட்சியிலும் கலக்கியிருக்கிறார் மனுசன்.

கார்த்தி அண்டர்ப்ளே செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் இவர் ஏதாவது ஹீரோயிசம் செய்வார் என்று எதிர்பார்க்க வைத்து ஏமாற வைக்கிறார். முக்கியத்துவம் குறைவாக இருந்தும் இந்தப் படத்துக்காக இவர் காத்திருந்ததற்காக இவரைப் பாராட்டலாம்.

ஆண்ட்ரியா முதல் பகுதியில் ஆங்காங்கே தெரிகிறார். இரண்டாம் பகுதியில் காணாமல் போகிறார்.

படம் முழுக்க வியாபித்திருந்தது ஒருவர் தான். அவர் செல்வா. நல்ல முயற்சி செல்வா. மூன்று வருட உழைப்பு படம் முழுக்கத் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் யாராவது காசு கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக செய்யுங்கள்.

ஆமாம், தலைப்புக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா?

சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்கும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்த பாண்டியன் முகிலனுக்கும் சண்டை முடிய செல்வா செய்த சதியே இந்தத் திரைப்படம் என்று வெளியில் பேசிக் கொள்கிறார்கள். அது உண்மையா தெரியவில்லை.

41 comments:

குடுகுடுப்பை said...

இன்னும் டாலஸுக்கு பெட்டி வரலையாம். இந்த வாரம் பாக்கனும், குறுநில மைந்தரான உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து பெருமிதம் கொள்கிறேன்.

சோழப்பேரரசின் மைந்தன்.
இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காத தமிழர்

குடுகுடுப்பை.

vasu balaji said...

குடுகுடுப்பையாரை சோழனாக சித்தரித்ததற்கும், ரீமா சென்னை புகழ்ந்து தள்ளியதற்கும் பாண்டியரின் சதி வலை காரணமா? இதைக் கண்டும் காணாதது போன்ற குடுகுடுப்பையாரின் பின்னூட்டத்தின் மர்மம் என்ன? கு.ஜ.மு.க. சம்பந்தப்பட்டிருக்கிறதா என்ற கேள்விகளுக்கு செல்வா போலவே முகிலனும் சே. பாண்டியரும் குழப்பாமல் பதில் சொல்ல வேண்டும்.

பின்னோக்கி said...

படிக்க ஈர்க்கும் தலைப்பு.

Anonymous said...

சோழர் - பாண்டியர் சண்டை பதிவுலகத்திலுமா?
படம் எனக்கு ஒரளவுக்குதான் பிடிச்சதுங்க. பார்த்திபன் மற்றும் சோழர்கள் வாழற இடம், புதைகுழி அந்த மாதிரி மட்டும் பிடிச்சுது.

ப்ரியமுடன் வசந்த் said...

இது மாதிரியான பாஸிடிவ் விமர்சனங்கள் தான் தேவை ஒரு படைப்பாளி தன்னோட உழைப்பு பற்றிய விமர்சனங்கள் தனக்கு பாஸிடிவாக வரவேண்டுமென்றே நினைத்து பணிபுரிகிறான் அதிக சிரத்தையுடன் அதை ஊக்குவிக்குற மாதிரியான விமர்சனம் அடுத்த முறை இன்னும் சிறப்பான படைப்பை தர உதவும்...

MUNI said...

இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காத தமிழர் -
இது தாங்க நல்ல விஷயம். அது ஒரு மொக்கை நாவல். அதை படித்ேன்ணு சொன்னா தான் இங்க மரியாதை.
எனக்கு ரஜணி ஸார், கவுண்தமணி ஸார், செந்தில் ஸார், இடிச்சப்புலி செல்வராஜ் ஸார் நடிப்புன்ணா ரொம்ப பிடிக்கும், சுஜாதா எழுதுங்னா சூபெரா இருக்கும். மாதிரி இதுவும்.

சந்தனமுல்லை said...

ஆகா...கிளம்பிட்ட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க!! :-)

Paleo God said...

ஆக எல்லாரும் ரீமாவுக்காக படம் பாக்க சொல்ரீங்கன்னு புரியிது..:)

Unknown said...

இன்னுமா டாலஸுக்கு வரலை?

//சோழப்பேரரசின் மைந்தன்.
இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காத தமிழர்

குடுகுடுப்பை//

நான் பல தடவை படிச்சிருக்கேன் - தலைப்பை மட்டும்.. :)))

Unknown said...

//வானம்பாடிகள் said...
குடுகுடுப்பையாரை சோழனாக சித்தரித்ததற்கும், ரீமா சென்னை புகழ்ந்து தள்ளியதற்கும் பாண்டியரின் சதி வலை காரணமா? இதைக் கண்டும் காணாதது போன்ற குடுகுடுப்பையாரின் பின்னூட்டத்தின் மர்மம் என்ன? கு.ஜ.மு.க. சம்பந்தப்பட்டிருக்கிறதா என்ற கேள்விகளுக்கு செல்வா போலவே முகிலனும் சே. பாண்டியரும் குழப்பாமல் பதில் சொல்ல வேண்டும்
//

ஒரு படைப்பை பாராட்டுங்க இல்ல திட்டுங்க. அதை விட்டுட்டு உள்குத்து இருக்கா, வெளிகுத்து இருக்கான்னு ஆராயாதீங்க. அடுத்த பாகத்துல கு.ஜ.மு.க வுக்கு இருக்குற சம்மந்தம் பத்தி விளக்கப்படும் ;)))

Unknown said...

//பின்னோக்கி said...
படிக்க ஈர்க்கும் தலைப்பு
//

ஹி ஹி ஹி..

Unknown said...

//சின்ன அம்மிணி said...
சோழர் - பாண்டியர் சண்டை பதிவுலகத்திலுமா?
படம் எனக்கு ஒரளவுக்குதான் பிடிச்சதுங்க. பார்த்திபன் மற்றும் சோழர்கள் வாழற இடம், புதைகுழி அந்த மாதிரி மட்டும் பிடிச்சுது.
//

நல்லது. உங்களுக்கு பிடிச்சே ஆகணும்னு நான் சண்டை போட மாட்டேன். நீங்களும் எனக்கு பிடிக்கக் கூடாதுன்னு சண்டை போடாதீங்க.

Unknown said...

//பிரியமுடன்...வசந்த் said...
இது மாதிரியான பாஸிடிவ் விமர்சனங்கள் தான் தேவை ஒரு படைப்பாளி தன்னோட உழைப்பு பற்றிய விமர்சனங்கள் தனக்கு பாஸிடிவாக வரவேண்டுமென்றே நினைத்து பணிபுரிகிறான் அதிக சிரத்தையுடன் அதை ஊக்குவிக்குற மாதிரியான விமர்சனம் அடுத்த முறை இன்னும் சிறப்பான படைப்பை தர உதவும்...
//

சரியா சொன்னீங்க வசந்த். இனிமே நெகடிவ் விமர்சனம் எழுதறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். அது விஜய் படமாவே இருந்தாலும் :))

Unknown said...

//MUNI said...
இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காத தமிழர் -
இது தாங்க நல்ல விஷயம். அது ஒரு மொக்கை நாவல். அதை படித்ேன்ணு சொன்னா தான் இங்க மரியாதை.
எனக்கு ரஜணி ஸார், கவுண்தமணி ஸார், செந்தில் ஸார், இடிச்சப்புலி செல்வராஜ் ஸார் நடிப்புன்ணா ரொம்ப பிடிக்கும், சுஜாதா எழுதுங்னா சூபெரா இருக்கும். மாதிரி இதுவும்
//

இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே??

Unknown said...

//சந்தனமுல்லை said...
ஆகா...கிளம்பிட்ட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க!! :-)//

நாங்க கிளம்புறது இருக்கட்டும், நீங்க சோழரா பாண்டியரா? அதைச் சொல்லுங்க முதல்ல.

Unknown said...

//பலா பட்டறை said...
ஆக எல்லாரும் ரீமாவுக்காக படம் பாக்க சொல்ரீங்கன்னு புரியிது..:)
//

செல்வாவுக்காகவும் பாக்கலாம். ரீமாவுக்காக ரெண்டாவது தடவை பாக்கலாம். :))

Unknown said...

யாருப்பா அது.. ரெண்டு மைனஸ் ஓட்டு போட்ட ப்ரகஸ்பதிங்க?

எப்பிடியோ நம்மள பாப்புலர் ஆக்காம விடுறதில்லைன்னு முடிவு பண்ணிட்டீங்க.

சூர்யகதிர் said...

"ஆதித் தமிழன் கருப்புதான். அதற்காக இவ்வளவு கருப்பாகக் காட்டியிருக்க வேண்டாம் என்று என் அலுவலக நண்பர் சொன்னார். எனக்கு அது கூட அவ்வளவு தப்பாகத் தெரியவில்லை."

பார்தீபனுக்கு கருப்பு சாயம் பூசுவது உங்களுக்கு அவ்வளவா தப்பா தெரியலையா ? என்ன கொடுமை ஐயா இது ?
ஆதிகால தமிழன் என்ன பார்த்தீபனை விடவா கருப்பாக இருந்திருப்பார்கள்?

rajan said...

படத்தில் பிடித்தவை : 1. புதைகுழி / சூரியன் நிழல் 2 .சோழனின் தமிழ் .3. கிளைமாக்ஸ் சண்டை காட்சி
4.துணை நடிகர்ளின் உழைப்பு . அவதார் படத்தில் லாஜிக் பார்க்காத தமிழன் ஏன் தமிழ் படத்தில் பார்க்கவேண்டும் இது நியாமா ? ஆனால் இரண்டாம் பாகத்தை தவிர்க்கலாம்

Unknown said...

//சூர்யகதிர் said...

தப்பாத் தெரியலைன்னு எழுதியிருக்கக் கூடாது, குறையாத் தெரியலைன்னு எழுதியிருக்கணும்.

Unknown said...

//rajan said...
படத்தில் பிடித்தவை : 1. புதைகுழி / சூரியன் நிழல் 2 .சோழனின் தமிழ் .3. கிளைமாக்ஸ் சண்டை காட்சி
4.துணை நடிகர்ளின் உழைப்பு . அவதார் படத்தில் லாஜிக் பார்க்காத தமிழன் ஏன் தமிழ் படத்தில் பார்க்கவேண்டும் இது நியாமா ? ஆனால் இரண்டாம் பாகத்தை தவிர்க்கலாம்
//

சரியான கேள்வி. இரண்டாம் பாகத்தை வேற தளத்துல குடுப்பாருன்னு எதிர் பாக்கலாம்.

சூர்யகதிர் said...

தப்போ, குறையோ பார்தீபனுக்கு கருப்பு பூசுவது செல்வாவின் தேவை இல்லா கற்பனை என்று தான் எனக்கு படுகிறது. அதற்கான பலனையும் அவர் பெற்று வருகிறார் என்று தான் நினைக்கிறன்.

ஒருதடவை நடிகர், இயக்குனர் சசிகுமாரை, நீங்கள் ஏன் உலக படங்களை பார்த்து படம் பண்ண கூடாது என்று ஒரு மொல்லைமாரி நிருபர் கேட்டதுக்கு , அவர் சொன்னார் என் ஊரிலேயே பல கதைகளும் சம்பவங்களும் இருகின்றன என்று.

கமல் பேச்சு கேட்டு உலக படங்களை பார்த்து பிட் பிட் ஆ சொருகிரவங்களுகேலாம் இது தான் கதி !!!

சூர்யகதிர் said...

"அவதார் படத்தில் லாஜிக் பார்க்காத தமிழன் ஏன் தமிழ் படத்தில் பார்க்கவேண்டும் இது நியாமா ? ஆனால் இரண்டாம் பாகத்தை தவிர்க்கலாம்"

அவதார் ஒரு கற்பனை கதை, அதில் வரும் இடம் கற்பனை, மனிதர்கள் கற்பனை.

இவர்களை போல் சோழன், சேரன், பாண்டியன் என்று ஒரு தனி இனத்தை வைத்து தங்கள் கற்பனைகளை அவிர்த்து விடவில்லை.
சோழர்கள் பார்த்தீபனை விட கருப்பு, மனித மாமிசம் உண்பார்கள் என்பதெல்லாம் டூ மச்.

Prosaic said...

சோழர்கள் காலத்தைதான் தமிழ் நாகரிகத்தின் உச்சமென கூறுவார்கள். அவர்களுக்குப்பிறகு வேற்றினத்தவரின் தமிழ் நாகரிகம் மீதான ஆதிக்கம் இன்றுவரைத் தொடர்கிறது. இவர்களை ஆதித்தமிழன் என்று கூறும் உங்கள் திறமை கண்டு புல்லரிக்குது.

இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் வேறொரு நாட்டிற்கு தப்பித்து செல்லும் அளவிற்கு முன்னேற்றமடைந்த ஒரு சமூகத்தினரை நாகரிகத்தில் மிகவும் பின்தங்கிய ஆதிவாசிகளைப்போன்று காண்பிக்கும் இந்தப்படம் எப்படித்தான் நல்லப்படமாக உங்களுக்கு தெரிகிறதோ?

Prosaic said...

இது ஒரு கற்பனைப்படம் என்று சொல்பவர்களுக்கு ஒரு உதாரணம்.

செல்வராகவன் என்றொரு கதாபாத்திரம்; கதைப்படி அவர் ஒரு இயக்குனர்; அரைவேக்காடு, அறிவுஜீவி, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்றெல்லாம் படம் எடுத்து இருக்கிறார்; அவர் ஒரு பொம்பளை பொறுக்கி; இப்படி கதை சொன்னா அது கற்பனை. யாராலும் குறைகூற முடியாத ஒரு கற்பனை.

அதுவே, செல்வராகவன் என்றொரு கதாபாத்திரம்; கதைப்படி அவர் ஒரு இயக்குனர்; காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி என்று படம் எடுத்து இருக்கிறார்; அவர் ஒரு பொம்பளை பொறுக்கி; இது வெறும் கற்பனை, இதை செல்வராகவன் உண்மைன்னு நினைக்க கூடாதுன்னு சொல்றது எவ்ளோ கேனத்தனமோ அவ்ளோ கேனத்தனம் சோழர்கள் பத்தி ஆயிரத்தில் ஒருவன் படம் கூறும் கற்பனை.

Prosaic said...

மற்றபடி நிழல் விழுந்தா புதைகுழி மூடிக்கும் என்பது போன்ற கற்பனைகளைப்ப்ற்றி எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை.

துபாய் ராஜா said...

சோழன் செல்வராகவனை பதிவிட்டு பழிவாங்கும் பதிவுலக பாண்டியர்கள் பற்றி வருத்தப்பட்டிருக்கும் நடுநிலை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் பதிவு.

Unknown said...

//தப்போ, குறையோ பார்தீபனுக்கு கருப்பு பூசுவது செல்வாவின் தேவை இல்லா கற்பனை என்று தான் எனக்கு படுகிறது. அதற்கான பலனையும் அவர் பெற்று வருகிறார் என்று தான் நினைக்கிறன்.
//
அப்பிடியா நினைக்கிறீங்க?

//
ஒருதடவை நடிகர், இயக்குனர் சசிகுமாரை, நீங்கள் ஏன் உலக படங்களை பார்த்து படம் பண்ண கூடாது என்று ஒரு மொல்லைமாரி நிருபர் கேட்டதுக்கு , அவர் சொன்னார் என் ஊரிலேயே பல கதைகளும் சம்பவங்களும் இருகின்றன என்று.
//

சரிதான். உலகப் படங்களும் அப்படித்தான். அவர்கள் ஊரில் அவர்களைச் சுற்றியுள்ளதை எடுக்கிறார்கள்.

//
கமல் பேச்சு கேட்டு உலக படங்களை பார்த்து பிட் பிட் ஆ சொருகிரவங்களுகேலாம் இது தான் கதி !!!//

இந்த குத்து பிடிச்சிருக்கு..

Unknown said...

//சூர்யகதிர் said...
இவர்களை போல் சோழன், சேரன், பாண்டியன் என்று ஒரு தனி இனத்தை வைத்து தங்கள் கற்பனைகளை அவிர்த்து விடவில்லை.
சோழர்கள் பார்த்தீபனை விட கருப்பு, மனித மாமிசம் உண்பார்கள் என்பதெல்லாம் டூ மச்
//

சோழ, பாண்டிய வரலாறுக்கும் இந்தக் கதைக்கும் சம்மந்தம் இல்லை அப்பிடின்னு போட்ட டிஸ்க்ளைமரை நான் நம்பிட்டேன்.

Unknown said...

//Prosaic said...
சோழர்கள் காலத்தைதான் தமிழ் நாகரிகத்தின் உச்சமென கூறுவார்கள். அவர்களுக்குப்பிறகு வேற்றினத்தவரின் தமிழ் நாகரிகம் மீதான ஆதிக்கம் இன்றுவரைத் தொடர்கிறது. இவர்களை ஆதித்தமிழன் என்று கூறும் உங்கள் திறமை கண்டு புல்லரிக்குது.

இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் வேறொரு நாட்டிற்கு தப்பித்து செல்லும் அளவிற்கு முன்னேற்றமடைந்த ஒரு சமூகத்தினரை நாகரிகத்தில் மிகவும் பின்தங்கிய ஆதிவாசிகளைப்போன்று காண்பிக்கும் இந்தப்படம் எப்படித்தான் நல்லப்படமாக உங்களுக்கு தெரிகிறதோ?
//

உங்கள மாதிரியே எல்லாரையும் வரலாறு புவியியல் தெரிஞ்சவங்களா நினைக்கலாமா ப்ரோசைக்? எனக்கெல்லாம் அந்தளவுக்கு அறிவு இல்லாததால எனக்கு இந்தப் படம் பிடிச்சிச்சி போல..

Unknown said...

//Prosaic said...
இது ஒரு கற்பனைப்படம் என்று சொல்பவர்களுக்கு ஒரு உதாரணம்.

செல்வராகவன் என்றொரு கதாபாத்திரம்; கதைப்படி அவர் ஒரு இயக்குனர்; அரைவேக்காடு, அறிவுஜீவி, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்றெல்லாம் படம் எடுத்து இருக்கிறார்; அவர் ஒரு பொம்பளை பொறுக்கி; இப்படி கதை சொன்னா அது கற்பனை. யாராலும் குறைகூற முடியாத ஒரு கற்பனை.

அதுவே, செல்வராகவன் என்றொரு கதாபாத்திரம்; கதைப்படி அவர் ஒரு இயக்குனர்; காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி என்று படம் எடுத்து இருக்கிறார்; அவர் ஒரு பொம்பளை பொறுக்கி; இது வெறும் கற்பனை, இதை செல்வராகவன் உண்மைன்னு நினைக்க கூடாதுன்னு சொல்றது எவ்ளோ கேனத்தனமோ அவ்ளோ கேனத்தனம் சோழர்கள் பத்தி ஆயிரத்தில் ஒருவன் படம் கூறும் கற்பனை
//

ஐ இந்த லாஜிக் நல்லாருக்கே.. நான் இதை கற்பனை படம்னு சொன்னேனாங்கறத விட, கற்பனைப் படம் இல்லைன்னு சொல்லலங்கறது தான் முக்கியம்.. (அப்பா எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு அவ்வ்வ்வ்)

Unknown said...

//Prosaic said...
மற்றபடி நிழல் விழுந்தா புதைகுழி மூடிக்கும் என்பது போன்ற கற்பனைகளைப்ப்ற்றி எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை.
//

ஹி ஹி ஹி

Unknown said...

//துபாய் ராஜா said...
சோழன் செல்வராகவனை பதிவிட்டு பழிவாங்கும் பதிவுலக பாண்டியர்கள் பற்றி வருத்தப்பட்டிருக்கும் நடுநிலை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் பதிவு
//

துபாய்க்கு ராஜான்னு ப்ரூவ் பண்ணிட்டிங்க.

Anonymous said...

any of u guys have not seen any fantasy english movie before???

1975 english fantasy movies are 100% greater than aayirathil oruvan

நசரேயன் said...

கண்டிப்பா படம் பார்க்கிறேன்

அது சரி(18185106603874041862) said...

//
சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்கும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்த பாண்டியன் முகிலனுக்கும்
//

என்னது நீங்க பாண்டியரா??

குஜமுக கட்சிக்குள் களையெடுக்க வேண்டியது அவரச அவசியமாகிறது! சோழர்களின் கட்சிக்குள் ஒரு பாண்டியர் ஊடுருவியது எப்படி என்பதை கண்டுபிடிக்க உடனடியாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.

கலகலப்ரியா said...

... good one..!!! + =))

@athu sari.. =))))

வில்லன் said...

//சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்கும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்த பாண்டியன் முகிலனுக்கும் சண்டை முடிய செல்வா செய்த சதியே இந்தத் திரைப்படம் என்று வெளியில் பேசிக் கொள்கிறார்கள். அது உண்மையா தெரியவில்லை. //

சோழர் குடுகுடுப்பை சொல்வதெல்லாம் தண்ணில தான் எழுதணும்.....என்னா இன்னும் படபொட்டி டல்லஸ் வரவே இல்ல.... அப்புறம் எப்படி ஜகதலபிரதாபன் பித்தலாட்டதின் மொத உருவம் அண்ணன் குடுகுடுப்பை படம் பாக்க முடியும்.... எல்லாம் அவரு கனவுல தென்பட்டது தான்.......

வில்லன் said...

//சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்கும் //

குடுகுடுப்பை சோழப்பேரரசின் மைந்தன் இல்லை "சொத்தை" பேரரசின் மைந்தன். தையவு செய்து திருத்திக்கொள்ளவும்.......

//" சோழப்பேரரசின் மைந்தன்.
இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காத தமிழர்

குடுகுடுப்பை.//

அண்ணாச்சி குடுகுடுப்பை உண்மைய ஒத்துக்கொண்டதுக்கு ரொம்ப நன்றி..... எதுல துவும் ஊழல் பண்ண முடியாதுல்ல (நாய் பத்திர ஊழல் போல)......

வில்லன் said...

////
சோழ மண்டலத்தைச் சேர்ந்த சோழர் குடுகுடுப்பைக்கும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்த பாண்டியன் முகிலனுக்கும்
//

என்னது நீங்க பாண்டியரா??

குஜமுக கட்சிக்குள் களையெடுக்க வேண்டியது அவரச அவசியமாகிறது! சோழர்களின் கட்சிக்குள் ஒரு பாண்டியர் ஊடுருவியது எப்படி என்பதை கண்டுபிடிக்க உடனடியாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.//

சோழர்களிடம் இருந்து "பாண்டியர்கள்" (நாங்கள்) கட்சியை கைப்பத்தி ரொம்ப நாளாச்சு.... கட்சியின் முன்னால் தலைவர் அண்ணன் குடுகுடுப்பை இப்பொழுது டல்லசில் "வீட்டுக்காவலில்"... சொத்துக்கள் எல்லாம் (அந்த இத்துப்போன கணிணி தவிர எல்லாம்) ஏற்கனவே நாய் பத்திர ஊழல் வழக்கில் முடக்கப்பட்டுவிட்டன....

Unknown said...

//என்னது நீங்க பாண்டியரா??

குஜமுக கட்சிக்குள் களையெடுக்க வேண்டியது அவரச அவசியமாகிறது! சோழர்களின் கட்சிக்குள் ஒரு பாண்டியர் ஊடுருவியது எப்படி என்பதை கண்டுபிடிக்க உடனடியாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.//

வில்லன் சொல்றதை வழிமொழியிறேன்..

பாண்டியர்கள் கை ஓங்கி விட்டது. இனி சோழர்கள் ஏதாவது தீவு தேடி ஓட வேண்டியதுதான்.