Thursday, January 21, 2010

ஐபிஎல்லும் தமிழீழ அரசியலும்

டிஸ்கி: இது கிரிக்கெட் பதிவு அல்ல. ஐபிஎல் லுக்கு நான் ஆதரவாளனும் அல்ல. நான் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்பது அந்தப் பக்கமிருந்தாலும் ஐபிஎல் உண்மையான கிரிக்கெட் அல்ல என்று நினைப்பவன். 

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவரையும் எந்த முதலாளியும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் கடந்த வருடம் T20 உலக சாம்பியன்கள். இது அந்த நாட்டின் வீரர்களையும் அரசியல்வாதிகளையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது போல. வழக்கம்போல ரசிகர்கள் ஐபிஎல்லின் கொடும்பாவியை எரித்திருக்கிறார்கள்.


சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இந்த ஏலத்தில் இலங்கை வீரர் திஸ்ஸரா பெரேராவை $50,000/-க்கும் தென்னாப்பிரிக்க வீரர் ஜஸ்டின் கெம்ப்-ஐ $100,000/- க்கும் எடுத்துள்ளது.

நாம் தமிழர் பேரியக்கம் திஸ்ஸரா பெரேராவை சென்னை அணி வாங்கியதை கண்டித்து அவர்களது வலைதளத்தில் எதிர்ப்பைப் பதிவு செய்ய கோரியிருக்கிறார்கள். அவர்களது கோரிக்கை கீழே:

Vanakkam Uravugalae,


While we are actively participating in boycott srilanka campaign, our Chennai people have invited our enemy to treat them. Yes, the Chennai Super Kings cricket team has enrolled a new srilankan cricketer to play for their team. They already have quite a few srilankan cricketers signed for Chennai team. Is this not a shame to our people? Is this not a disgrace to our Tamil society? The srilankan people who fired crackers on the fall of Tamil freedom fighters are now invited to share the business in Tamil Nadu.

If you want to show your anger, Tamils please sign up and send in your feedback to Chennai Super Kings stating that Tamils do not like Srilankans here. We can stick to same format given below. Click the link to post.
 
என் கேள்வி இதில் என்ன என்றால், சென்னை சூப்பர் கிங்க்ஸ் என்பது இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் கம்பெனி. அதற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்மந்தம்? அதை தமிழர்களின் அணி என்று எப்படி சொல்ல முடியும்? அணியில் மொத்தம் இருக்கும் தமிழர்களே 5 பேர்தான். அதிலும் விளையாடும் 11 பேரில் இரண்டு தமிழர் வந்தால் பெரிய விசயம். அப்படி இருக்க அங்கே போய் சிங்களவனை எடுக்காதே என்று கோரிக்கை வைத்து என்ன பயன்? 
 
இரண்டாவது, 14 சிங்களவர்கள் விளையாடும் அணி ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி. அந்த அணியையே புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் யாழ்-கொழும்பு வாழ் தமிழர்களும் ரசிக்கிறார்கள் என்றால் விளையாட்டையும் அரசியலையும் வேறு வேறாக அவர்கள் கருதுகிறார்கள் என்று தானே அர்த்தம்? அவர்களே அப்படி இருக்கும் போது நாம் விளையாட்டை அரசியலாகப் பார்ப்பதில் என்ன பயன்? 
 
தமிழர்கள் நமக்குள்ளே இருக்கும் களைகளை களைவதை விட்டு விட்டு இதற்கெல்லாம் போய் நம் சக்தியை விரயம் செய்ய வேண்டுமா? கொஞ்சம் யோசியுங்கள்.
 
பேசாமல் பால் தாக்கரேயைப் போல இலங்கை வீரர்கள் இந்தியாவில் (தமிழ்நாட்டில்) கிரிக்கெட் விளையாட விடமாட்டோம் என்று ஒரு மிரட்டல் அறிக்கை விட்டாலாவது நாடு திரும்பிப் பார்க்கும். வழக்கம் போல என்.டி.டி.வி தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் காட்டு மிராண்டிகள் என்பது போல ஒரு மாயையை ஒளிபரப்பும்.

20 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா மனிக்கவும் ........இந்த IPL என்பது ஏமாற்று வேலை நண்பா ..............
விளையாட்டு எல்லாமே நம்மை மங்க செய்வதற்கு தான் .......... இதில் எத்தனை பணம் புழங்குகிறது தெரியுமா ..........oru பக்கம் மக்களிடம் வறுமை இனொரு பக்கம் இப்படி கோடியில் குளிர் காய்பவர்கள் ...................................

விளையாட்டை சாதாரணமாய் நினைக்காதே ..............அது மக்களை மழுங்கடிக்கும் அரசியல் ......
பொழுதுப்போக்கு எல்லாமே நாம் அரசை குறை சொல்ல கூடாது என்பதற்கே .........................

நீங்கள் ஏன் கிரிக்கெட் என்றவுடன் மட்டும் கொடி பிடுக்கிரீர்கள் ............................அது kooda நம் சக்தியின் விரயமே

Unknown said...

// வெண்ணிற இரவுகள்....! said...
நண்பா மனிக்கவும் ........இந்த IPL என்பது ஏமாற்று வேலை நண்பா ..............
விளையாட்டு எல்லாமே நம்மை மங்க செய்வதற்கு தான் .......... இதில் எத்தனை பணம் புழங்குகிறது தெரியுமா ..........oru பக்கம் மக்களிடம் வறுமை இனொரு பக்கம் இப்படி கோடியில் குளிர் காய்பவர்கள் ...................................

விளையாட்டை சாதாரணமாய் நினைக்காதே ..............அது மக்களை மழுங்கடிக்கும் அரசியல் ......
பொழுதுப்போக்கு எல்லாமே நாம் அரசை குறை சொல்ல கூடாது என்பதற்கே .........................

நீங்கள் ஏன் கிரிக்கெட் என்றவுடன் மட்டும் கொடி பிடுக்கிரீர்கள் ............................அது kooda நம் சக்தியின் விரயமே
//

நண்பா நான் ஐ.பி.எல் லுக்கு ஆதராவகக் கொடி பிடிக்கவில்லை. சிங்களவனைக் காரணம் காட்டி சென்னை சூப்பர் கிங்க்ஸை ஏதோ சென்னையின் சொந்த அணிபோல பேசுவதைத்தான் கண்டித்திருக்கிறேன்.

sathishsangkavi.blogspot.com said...

நண்பரே என்னைப்பொறுத்தவரை இந்த ஐ.பி.எல் பணம் சம்பாதிக்கும் அமைப்பு...

அவர்கள் சம்பாரிக்கிறார்கள், நாம் அடித்துக் கொள்கிறோம்...

சிங்கள வீரரை எடுத்ததற்கு காரணம் சென்னையில் போரட்டம் செய்வார்கள் யார் அந்த வீரர் என்று பார்க்க கூட்டம் வரும் கூட்டம் வந்தால் அது ஐ.பி.எல்க்கு லாபம்.. நமக்கு....?

க.பாலாசி said...

//ஐபிஎல் உண்மையான கிரிக்கெட் அல்ல என்று நினைப்பவன். //

இதுவே எனது பதிலும். மத்தபடி ஏலவியாபாரத்தைப்பற்றி சொல்வறக்கொன்றுமில்லை.

vasu balaji said...

சரியான கருத்துக்கள். :)

வரதராஜலு .பூ said...

ஐபிஎல் - இங்கு பணம்தானே முக்கியம், கிரிக்கெட் முதல் மற்றவை அனைத்து பிறகே.

எந்த விஷயம் கிடைத்தாலும் அதை வைத்து (ஓசி) விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

செல்வராகவனிடம் சொல்லி பதினொன்றில் ஒருவன் படம் எடுக்கச் சொல்லலாம்

Unknown said...

//Sangkavi said...
நண்பரே என்னைப்பொறுத்தவரை இந்த ஐ.பி.எல் பணம் சம்பாதிக்கும் அமைப்பு...

அவர்கள் சம்பாரிக்கிறார்கள், நாம் அடித்துக் கொள்கிறோம்...

சிங்கள வீரரை எடுத்ததற்கு காரணம் சென்னையில் போரட்டம் செய்வார்கள் யார் அந்த வீரர் என்று பார்க்க கூட்டம் வரும் கூட்டம் வந்தால் அது ஐ.பி.எல்க்கு லாபம்.. நமக்கு....//

என் கருத்தும் இதே தான் நண்பரே..

Unknown said...

//க.பாலாசி said...
//ஐபிஎல் உண்மையான கிரிக்கெட் அல்ல என்று நினைப்பவன். //

இதுவே எனது பதிலும். மத்தபடி ஏலவியாபாரத்தைப்பற்றி சொல்வறக்கொன்றுமில்லை//

வருகைக்கு நன்றி பாலாசி..

Unknown said...

//வானம்பாடிகள் said...
சரியான கருத்துக்கள். :)
//

இதோட நிறுத்திட்டீங்க?

Unknown said...

//வரதராஜலு .பூ said...
ஐபிஎல் - இங்கு பணம்தானே முக்கியம், கிரிக்கெட் முதல் மற்றவை அனைத்து பிறகே.

எந்த விஷயம் கிடைத்தாலும் அதை வைத்து (ஓசி) விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்.
//

சரிதான் சார்..

Unknown said...

//’SUREஷ் (பழனியிலிருந்து) said...
செல்வராகவனிடம் சொல்லி பதினொன்றில் ஒருவன் படம் எடுக்கச் சொல்லலாம்
//

கமலஹாசனை நடிக்கச் சொல்லலாம்... :))

நசரேயன் said...

தலைவா அதெல்லாம் காசு சம்பாதிக்க நடக்கிற ௬த்து

KarthigaVasudevan said...

//’SUREஷ் (பழனியிலிருந்து) said...
செல்வராகவனிடம் சொல்லி பதினொன்றில் ஒருவன் படம் எடுக்கச் சொல்லலாம்
//

கமலஹாசனை நடிக்கச் சொல்லலாம்... :))

:))) வேற என்னத்த சொல்றது??!!!

Unknown said...

//நசரேயன் said...
தலைவா அதெல்லாம் காசு சம்பாதிக்க நடக்கிற ௬த்து//

கரெக்கிட்டு.. அதுல போயி நாம எதிர்ப்புன்னு சொன்னா அதையும் யாவாரம் ஆக்கத்தான செய்யுங்க அந்த மொதலாளிக?

Unknown said...

//KarthigaVasudevan said...
//’SUREஷ் (பழனியிலிருந்து) said...
செல்வராகவனிடம் சொல்லி பதினொன்றில் ஒருவன் படம் எடுக்கச் சொல்லலாம்
//

கமலஹாசனை நடிக்கச் சொல்லலாம்... :))

:))) வேற என்னத்த சொல்றது??!//

வாங்க மிஸஸ் டவுட் வருகைக்கு நன்றி.

KarthigaVasudevan said...

இந்தப் பெயரை நான் மறந்தாலும் நீங்க மறக்க விட மாட்டிங்க போல ! அய்யா நாங்க பேரை மாத்திட்டோம்ல கார்த்திகான்னே விளிக்கலாம்

Unknown said...

மன்னிச்சுங்க கார்த்திகா..

இனிமே அப்பிடியே விளிக்கிறேன்.

KarthigaVasudevan said...

நன்றிங்க...

சூர்யகதிர் said...

"சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவரையும் எந்த முதலாளியும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் கடந்த வருடம் T20 உலக சாம்பியன்கள்."

இந்த பதிவின் ஆரம்ப எழுத்துகள் மூலம் நீங்களே ஒத்க்க்கொள்கிரீர்கள் விளையாட்டில் அரசியல் உண்டென்று.

"இரண்டாவது, 14 சிங்களவர்கள் விளையாடும் அணி ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி. அந்த அணியையே புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் யாழ்-கொழும்பு வாழ் தமிழர்களும் ரசிக்கிறார்கள் என்றால் விளையாட்டையும் அரசியலையும் வேறு வேறாக அவர்கள் கருதுகிறார்கள் என்று தானே அர்த்தம்?"

இது தவறு. இலங்கை தமிழர்கள் 1987 வரை இந்திய கிரிக்கெட் அணியையே சப்போர்ட் பண்ணி வந்தார்கள் அதற்கு ஒரே காரணம் ஸ்ரீகாந்த் என்ற ஒரு தமிழ் வீரர். இந்தியா இலங்கை விளயாடிய போதே அவர்கள் இந்தியாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவார்கள். ஆனால் எபொழுது IPKF இலங்கை சென்றதோ எல்லாம் தலை கீழ். அவனுக்கு இவனே பரவாய் இல்லை என்ற நிலை தான். இலங்கை ராணுவம் கொலை செய்வான், இளம் பெண்களை மான பங்க படுத்துவான் அவ்வளவு தான் (!!!???) ஆனால் IPKF காரன் கொலை செய்வான், திருடுவான், 6 வயது முதல் 60 வயது வரை பெண்கள் என்றால் விடமாட்டான். அதுதான் அவனை விட இவன் பரவாய் இல்லை சமாசாரம்!!.