Monday, January 25, 2010

இந்தி, போலி டாக்டர் மற்றும் பல்புஸ்ரீ

2001ம் வருசம் எம்.சி.ஏ முடிச்சிட்டு ஒரு எம்.என்.சில வேலைக்குச் சேந்த்தேன். வேற என்ன வேலை எல்லாம் பொட்டி தட்டுறது தான். அதான் இந்த சாஃப்ட்வேரு கம்பெனி எல்லாம் சமத்துவம் உலாவும் எடமாச்சே. நம்ம டீமுல கன்னியாகுமரில இருந்து காஷ்மீர் வரைக்கும் இருந்தாய்ங்க.

வட இந்தியால இருந்து வந்தவன் எல்லாம் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நம்மளப் பாத்ததும் இந்தியில தான் பேசுவான். நாம பணிவா - “ஐ டோண்ட் நோ ஹிந்தி” அப்பிடின்னு சொன்னா, தண்ணியடிச்சுட்டு நடுத்தெருவுல வாந்தி எடுக்குறவன அந்தப்பக்கமா போற ஃபிகரு பாக்குற மாதிரி நம்மள ஒரு லுக்கு விடுவாம்பாருங்க.. பத்திக்கிட்டு வரும் எனக்கு.

எங்க டீம்ல நாலு தமிழ்நாட்டுக்காரங்க. அதுனால பேசிக்கும்போது தமிழ்லதான் பேசிக்குவோம் (இங்க்லிப்பிசு பேச வராதுங்கறது வேற கதை). அதுவே அவிங்களுக்குப் பொறுக்காது. ஒரு தடவ மேனேசருக்கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ற அளவுக்குப் போயிட்டாய்ங்க. ஆனா அவனுக மட்டும் ஹிங்க்லீஷ்ல பேசுவானுங்க.

மாசத்துக்கு ஒருதடவ ஏதாவது காரணத்த வச்சி வெளிய டீம் லன்ச்சுக்குப் போவோம். ஒவ்வொருதடவையும் அங்க தமிழ்க்காரங்க தமிழ்ல பேசுனா சண்டைக்கி வருவானுங்க. அவனுங்க ஹிந்தில பேசினா நாம கேக்கக்கூடாது. கேட்டா, இந்தி நம்ம தேசிய மொழி. நீ அதக் கத்துக்கிட்டு இருக்கணும்னு சண்டை போடுவாய்ங்க. சூடா விவாதம் நடக்கும்.

ஒரு தடவ “இந்திய எதுக்கு தேசிய மொழின்னு சொல்றீங்க?” அப்பிடின்னு கேட்டேன்.
அதுக்கு ஒருத்தன் “ஏன்னா அதத்தான் நெறைய பேரு பேசுறாங்க”
“அப்ப ஏன் காக்காவ தேசிய பறவையாக்கல? அதுதான நம்ம நாட்டுல நிறைய இருக்கு?” அப்பிடின்னு நான் கேட்டேன். அவனால பதில் சொல்ல முடியல.

இந்த மாதிரி விவாதத்துல நம்ம பக்கம் நிக்கிற ஒரே வேற மாநிலத்தவங்கன்னா அது கேரளாக்காரங்க தான். கன்னடத்தானும் தெலுங்கனும் ஹிந்தில பேசிட்டு கிட்டத்தட்ட ஹிந்திக்காரனாவே ஆயிடுவாய்ங்க (ஆனாலும் அவிங்க இவிங்கள மதராசின்னு தான் கூப்பிடுவானுங்கங்கறது வேற விசயம்).

இப்ப எதுக்கு இதையெல்லாம் சொல்றேன்னா, அகமதாபாத் ஹை கோர்ட்டு, இன்னிக்கு குடுத்துருக்கு ஒரு தீர்ப்பு - இந்திக்கு வச்சிருச்சி ஆப்பு.

அப்புறம் எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டிக்கு அங்கீகாரத்த ரத்து பண்ணிட்டாங்களாமே? அப்போ அங்க டாக்டர் பட்டம் வாங்கின நம்ம விஜய் இனிமே போலி டாக்டரா?

பத்மஸ்ரீ பட்டம் கிடைக்கும்னு விஜயோட ரசிகர் ஒருத்தர் ரொம்ப ஆசைப்பட்டுக்கிட்டு இருந்தாரு. கடைசில லிஸ்ட்ல பேரு வரலயாமே? அப்ப வட போச்சா? சரி, பரிந்துரை லிஸ்ட்லயாவது இருந்ததுனு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.

22 comments:

கோவி.கண்ணன் said...

//அப்புறம் எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டிக்கு அங்கீகாரத்த ரத்து பண்ணிட்டாங்களாமே? அப்போ அங்க டாக்டர் பட்டம் வாங்கின நம்ம விஜய் இனிமே போலி டாக்டரா?//

மாப்பு வச்சிட்டியே ஆப்பு ! ன்னு சொல்வது தான் நினைவுக்கு வருது !
:)

புலவன் புலிகேசி said...

//தண்ணியடிச்சுட்டு நடுத்தெருவுல வாந்தி எடுக்குறவன அந்தப்பக்கமா போற ஃபிகரு பாக்குற மாதிரி நம்மள ஒரு லுக்கு விடுவாம்பாருங்க//

நல்ல உதாரனமுங்கோ

Chitra said...

“ஐ டோண்ட் நோ ஹிந்தி” அப்பிடின்னு சொன்னா, தண்ணியடிச்சுட்டு நடுத்தெருவுல வாந்தி எடுக்குறவன அந்தப்பக்கமா போற ஃபிகரு பாக்குற மாதிரி நம்மள ஒரு லுக்கு விடுவாம்பாருங்க.. பத்திக்கிட்டு வரும் எனக்கு.
............. ha,ha,ha,ha.....எப்படிங்க, இப்படி எல்லாம் தோணுது? சூப்பர்.

vasu balaji said...

ஏன் சாமி எல்லாரையும் விரலைப் பேர்க்க அகுடியாவா?:)). இந்திக்காரனுங்க அலப்பறை மாறவே மாறாது. எந்த கோர்ட் சொன்னா என்னா?

திவ்யாஹரி said...

//தண்ணியடிச்சுட்டு நடுத்தெருவுல வாந்தி எடுக்குறவன அந்தப்பக்கமா போற ஃபிகரு பாக்குற மாதிரி//

“அப்ப ஏன் காக்காவ தேசிய பறவையாக்கல? அதுதான நம்ம நாட்டுல நிறைய இருக்கு?”

ஆனாலும் அவிங்க இவிங்கள மதராசின்னு தான் கூப்பிடுவானுங்கங்கறது வேற விசயம்).

ஒரு தீர்ப்பு - இந்திக்கு வச்சிருச்சி ஆப்பு.

அப்போ அங்க டாக்டர் பட்டம் வாங்கின நம்ம விஜய் இனிமே போலி டாக்டரா?

அப்ப வட போச்சா?

ஹா.. ஹா.. ஹா.. நல்ல பதிவு முகிலன்.. சிரிச்சிக்கிட்டேதான் படிச்சேன்.. நல்ல நகைச்சுவை உணர்வு.. தலைப்பு கூட நல்லா இருக்கு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஏன் காக்காவ தேசிய பறவையாக்கல?//

தவிர இந்தியாவில்தான் பெரும்பான்மை காகங்கள் இருக்கின்றனவாம்

திவ்யாஹரி said...

குடியரசு தின வாழ்த்துக்கள்..

சொல்லச் சொல்ல said...

நகைச்சுவையுடன் சுடச்சுட செய்திகளை அள்ளி வீசீருகீங்க!!!

சூர்யகதிர் said...

"ஒவ்வொருதடவையும் அங்க தமிழ்க்காரங்க தமிழ்ல பேசுனா சண்டைக்கி வருவானுங்க. அவனுங்க ஹிந்தில பேசினா நாம கேக்கக்கூடாது. கேட்டா, இந்தி நம்ம தேசிய மொழி."

அதே ஹிந்தியை ஆஸ்திரேலியா போய் கத்தி கத்தி பேசித்தான் அவன்கிட்ட இவனுகள் அடி வான்கிரான்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

யோவ் கொலவெறியில இருக்கேன் காலையில இருந்து நானும் 5 தடவ வந்து இப்போதான் ஸ்க்ரோல் பார் இருக்கிறத பார்க்கிறேன்...

ஸ்ஸப்பா.

வித்யாசமான டெம்ப்லேட் நல்லாத்தேன் இருக்கு...!

Unknown said...

@கோவி.கண்ணன் - நன்றி சார்.

@புலவன் புலிகேசி - நன்றி புலிகேசி

@சித்ரா - அனுபவம் தான் அக்கா

@வானம்பாடிகள் - நீங்க சொல்றது சரிதான் சார்

@திவ்யாஹரி - நன்றி திவ்யா

@சுரேஷ் - கரெக்டா சொன்னீங்க டாக்டர் சார். பேசாம அண்ணன் அஞ்சா நெஞ்சனை விட்டு ஒரு தீர்மானம் கொண்டுவரச் சொல்லலாம். :))

@திவ்யாஹரி - நன்றி அண்ட் சேம் டு யு

@சொல்லச்சொல்ல - நன்றி.

@சூர்யகதிர் - சரியா சொன்னீங்க நண்பா

@வசந்த் - மன்னிச்சுக்குங்க வசந்த். அடுத்த பதிவுல ஸ்க்ரோல் பார் இருக்குறத முதல் பாராவுலயே போட்டுடுறேன்.

priyamudanprabu said...

nice post

நசரேயன் said...

நானும் இந்திக்கு எதிர் சொம்பு ஒண்ணு வச்சி இருக்கேன்.. விரைவிலே வெளியிடுறேன்

Paleo God said...

//ஏன் காக்காவ தேசிய பறவையாக்கல?//
தவறு அமைச்சரே..அதன் மொழிதான் ஹிந்தி..(புரியாவிட்டால் பார்லிமெண்ட் நேரடி ஒளிபரப்பு பார்க்கவும்.)
----

@வசந்த்...இந்த லட்சணத்துல படம் காட்டி தாய் நாட்ட காமிச்சு கொடுக்க சொல்றாரு...

-----

ஆமாம் புது வீடு நல்லா இருக்கு அதென்ன ரெண்டு பக்கமும் காலி இடம்..தோட்டம் போட போறீங்களா??

குடுகுடுப்பை said...

இந்திக்கு எதிர்சொம்பு வேண்டாம் , நம் மொழிக்கு ஆதரவு சொம்பாக இருக்கட்டும்.

என்னிடமும் இப்படி இந்திக்காரர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள். மொழி தேவையென்றால் படிக்கலாம், அது இந்தி மொழியோ வாந்தி மொழியோ எதுவாக இருந்தாலும் சரி. தேசிய முழிங்கறத சொல்லியே இவனுங்க பிரிவினையை உருவாக்கிருவானுங்க. ஜெமோ கூட இது பத்தி ஒரு பதிவு எழுதிருந்தார்.

Kumky said...

ஏம்ப்பா முகில்.,
ப்ரோபைல் போட்டோவுல ப்ரீ கேஜுக்கு அட்மிஷன் கேக்கறாப்ல ஒரு போஸ் குடுத்துட்டிருக்க....
இந்த வயசிலேயே ஹிந்தி எதிர்ப்பா...
வெரிகுட்.

Unknown said...

@பிரியமுடன் பிரபு - நன்றி

@நசரேயன் - வெளியிடுங்க வெளியிடுங்க

@பலா பட்டறை - சரிதான்

@குடுகுடுப்பை - வழிமொழிகிறேன்

@கும்க்கி - நாங்கல்லாம் பிஞ்சிலயே பழுத்தவங்க, மத்தபடி முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

வினோத் கெளதம் said...

இங்க நான் ஏன் ரூம்ல ஒரு வருஷத்துக்கு மேல ஒரு ஹிந்திக்காரன் கூட குப்பை கொட்டுறேன்..
அதை ஏன் கேக்குறிங்க இந்த மொழி விஷயத்தில் அவனுங்க பண்ணுற அலும்பு இருக்கே...ஸ்ஸ்ப்ப்பா..தாங்காது..

கலகலப்ரியா said...

ஆஹா.. அருமையா சொல்லி இருக்கீங்க... நம்ம தோஸ்த்து (இது ஹிந்தியோ...) நண்பரு ஒருத்தரு இருக்காரு இதப்பத்தி பேசினா பேசிக்கிட்டே இருப்பாரு... இந்த லிங்க் அனுப்பி வைக்கறேன்... பார்ப்போம்.. =))

Unknown said...

@வினோத் - நீங்க ரொம்ப தைரியசாலி

@கலகலப்ரியா - அக்கா, உடம்பு தேறியாச்சா?

Anonymous said...

//அவிங்க இவிங்கள மதராசின்னு தான் கூப்பிடுவானுங்கங்கறது //
:)

பல்புஸ்ரீ சூப்பர். இந்த முழு இடுகையும் எனக்கு ரொம்பப்புடிச்சுது.

ஆனா இந்தப்புது டெம்ப்ளேட் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு படிக்கறதுக்கு.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//அப்ப ஏன் காக்காவ தேசிய பறவையாக்கல? அதுதான நம்ம நாட்டுல நிறைய இருக்கு?”//

:)) நியாயமான கேள்வி தான்