Thursday, March 11, 2010

பூ வலி - கடைசி பாகம்



முன் முன் குறிப்பு: தயவு செய்து மன திடம் இல்லாதவர்கள், கர்ப்பிணிகள் இந்தக் கதைத் தொடரைப் படிக்க வேண்டாம்.

அதிகாலை 4:45 மணி

டாக்டர்ஸ் லவுஞ்சில் இருந்து விசயம் கேள்விப்பட்டு என் டாக்டர் வந்தார். வந்ததும் என்னை சோதித்துப் பார்த்து விட்டு, “அந்த டாக்டர் என்ன பார்த்தார்? வுட் சே டயலேஷன் இஸ் 8.5 அண்ட் எஃபேஸ்மெண்ட் 100%. பொசிசன் மட்டும் மைனஸ் 2வுக்குப் போய் விட்டது. அது ஒன்றும் பிரச்சனை இல்லை. நான் உதவி செய்கிறேன்

என்ன உதவி செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. டயலேஷன் 10செ.மீ வருவதற்கு முன்னால் புஷ் செய்தால் செர்விக்ஸில் குழந்தையின் தலை மோதி இன்னும் பின்னால் போய்விடும். மேலும் செர்விக்ஸில் மோதியதால் செர்விக்ஸ் வீங்கி விடும் என்றெல்லாம் இண்டெர்நெட்டில் படித்தது நினைவுக்கு வந்து என் வயிற்றில் ஏதோ செய்தது. ஆனாலும் டாக்டர் 8.5 என்று சொன்னது மனதுக்கு நிம்மதியாக இருந்தது.

சிவாவைப் பார்த்தேன். நான் சொன்னேன் பார்த்தாயா என்று அவர் கண்கள் சொன்னது.

உமா, நான் இப்போது உன் செர்விக்ஸை என் விரல்களால் இழுத்துக் கொள்ளப் போகிறேன். நீ புஷ் செய். பிரஷ்ஷர் செர்விக்ஸில் இருப்பதால் அது விரிவடையும், மேலும் குழந்தையின் தலை செர்விக்ஸில் மோதாமல் நான் பார்த்துக் கொள்வேன்

முயற்சி செய்து பார்த்தால் தவறில்லை என்று தோன்றியது. எனக்குள் இருந்த சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டேன்.

டாக்டர் தன் இரண்டு விரல்களால் என் செர்விக்ஸை இழுத்துக் கொண்டு, “ம்ஹ்ம் புஷ்

மூச்சை நன்றாக இழுத்து வெளியிடும்போது முக்கித் தள்ளினேன்.

குட். லெட்ஸ் டூ இட் அகெய்ன்

மறுபடியும் செய்தேன். சக்தியை இழந்துகொண்டே வருவது போல இருந்தது.

அகெய்ன்

மறுபடி..

மறுபடி...

அதற்குமேல் முடியவில்லை. ஆயாசத்துடன் பின்னால் படுத்துக் கொண்டேன்.

குட் உமா. இப்போது டைலேஷன் 9.5 வந்து விட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள். ஃபைனல் புஷ்க்கு நேரம் வந்து விட்டது

*********************************************************
அதிகாலை 5:30 மணி

ஓக்கே.. ஆர் யு ரெடி உமா?”

யெஸ் டாக்டர்.”

சுலபமாக புஷ் செய்ய இரண்டு யோசனைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகச் செயல் படுத்திப் பார்க்கலாம்

படுக்கையில் என் கால் பக்கம்வடிவக் கம்பிச் சட்டத்தைத் தலைகீழாகப் பொருத்தினார்கள். இரண்டு துணிகளை கம்பியின் மேல் சுற்றி கயறு போலத் திரித்து என் ஒவ்வொரு கையிலும் கொடுத்தார் அந்த நர்ஸ்.

இண்டியன் ஸ்டைல் டாய்லட்டில் உட்காருவது போல உட்கார்ந்து கொண்டு இரண்டு கையாலும் அந்தத் துணியை இழுத்து, மூச்சு விடும்போது புஷ் செய்

எனக்கு என்ன செய்ய வேண்டுமென்பது ஓரளவிற்குப் புரிந்தது. டாக்டர் சொன்னபடி குந்தி உட்கார்ந்தேன். இரு கைகளாலும் அந்தத் துணிக்கயிற்றை இழுத்துக் கொண்டு முக்கினேன். ஒவ்வொரு முறைக்கும் என் உடலின் சக்தி கரைந்து கொண்டே வந்தது.

பத்து தடவைக்கு மேல் செய்ய முடியவில்லை. துணியை விட்டு விட்டு பின்னால் படுத்துக்கொண்டேன்.

சிவா என் தலையைக் கோதிக் கொடுத்தார். “உமா ட்ரை பண்ணுமா. உன்னால முடியும்

முடியல சிவா. கஷ்டமா இருக்கு

ட்ரை பண்ணுடா...”

அம்மா என் கால்களைப் பிடித்து விட்டார். ஈரத்துணியால் என் நெற்றியை ஒற்றி எடுத்தார்.

மறுபடி அதே முயற்சி. இந்த முறை ஐந்து தடவை கூட செய்ய முடியவில்லை.

டாக்டர், “இன்னொரு விதமாக முயற்சி செய். இதே பொசிசன். கயற்றுக்கு பதில் கைகளால் அந்தக் கம்பியைப் பிடித்துக் கொள்”.

அப்படியும் உட்கார்ந்து முயற்சித்தேன். ஒவ்வொரு முறை புஷ் செய்யும் போதும் அடிவயிற்றில் இருந்து இடுப்புக்கு குழந்தை நகருவதை என்னால் உணர முடிந்தது. ஆனால் புஷ் செய்து அதை வெளியே தள்ளிவிடத்தான் என்னால் முடியவில்லை.

இரண்டு விதங்களையும் மாறி மாறி முயற்சி செய்து என் உடலில் கொஞ்சம் நஞ்சமிருந்த சக்தியையும் இழந்து விட்டேன். உடலின் ஒவ்வொரு செல்லும் என்னிடம் கெஞ்சியது.

பரிதாபமாக சிவாவைப் பார்த்தேன். என் கண்களில் கண்ணீர் தானாக வழிந்தது..

சிவா... என்னால முடியல சிவா.. என்னையக் கொன்னுடுங்க.. ப்ளீஸ்.. “

உமா.. இப்பிடியெல்லாம் பேசக் கூடாது. இதுக்கா இவ்வளவு நாள் கஷ்டப்பட்டோம். முயற்சி பண்ணும்மா

ஹேய், நீங்கள் இருவரும் உங்கள் மொழியிலேயே பேசிக் கொண்டிருந்தால் நான் எப்படிப் புரிந்து கொள்வது. ஆங்கிலத்தில் பேசுங்கள் ப்ளீஸ்டாக்டரின் கவலை டாக்டருக்கு.

சாரி டாக்டர். இவளால் முடியாதென்று சொல்கிறாள்

உமா, நீ இப்போது இப்படி சொல்லக்கூடாது. அப்புறம் நான் சி-செக்ஷன் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவேன்

நோ நோ டாக்டர். நான் மறுபடி முயற்சிக்கிறேன்

சி-செக்ஷன் இந்த வார்த்தை எனக்குள் ஒரு புது சக்தியை எங்கிருந்தோ தோண்டியெடுத்துக் கொண்டுவந்தது. உத்வேகத்துடன் புஷ் செய்தேன்.

மறுபடி மறுபடி முயற்சி... ஆனால் குழந்தை தான் வெளியே வருகிற பாடில்லை. வெளியே பனி கொட்டுகிறது. இங்கே எனக்கு வியர்த்துக் கொட்டுகிறது.

அம்மா பயங்கரமா வேர்க்குது. கொஞ்சம் வீசி விடுங்கம்மா

வீசுறதுக்கு எதுவுமே இல்லையேம்மா?”

சிவா ஓடிச் சென்று எதோ பத்திரிக்கையை எடுத்து வந்தார். “இத வச்சி விசிறுங்க அத்தை

அம்மா என் தலைமாட்டில் நின்று கொண்டு கையில் இருந்த பத்திரிக்கையால் விசிற ஆரம்பித்தார்.

*************************************************
அதிகாலை 6:45 மணி

நர்ஸ், “நான் சொல்கிற படி முயற்சி செய்கிறாயா?”

சொல்லுங்கள்எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கிறேன். அதிகம் சக்தியை வீணாக்காமல் எஃபக்டிவாக இருக்குமென்றால் என்ன சொன்னாலும் செய்கிறேன்.

நான் இப்படி உன் வலது பக்கம் நின்று கொண்டு உன் வலது காலை தூக்கிப் பிடித்துக் கொள்கிறேன். உன் கணவர் இதே போல இடது பக்கம் செய்யட்டும். நீ படுத்துக் கொண்டே புஷ் செய்

என் முதுகுக்குப் பின்னால் இரண்டு தலையணைகளை வைத்து கொஞ்சம் உயர்த்தி உட்கார வைத்தார் அந்த நர்ஸ்.

என் கணவரும் நர்ஸும் ஆளுக்கொரு பக்கம் என் கால்களை விரித்து உயர்த்திப் பிடித்துக் கொண்டார்கள்.

என் சக்தியைத் திரட்டி முக்கினேன். இந்த விதம் எனக்கு சுலபமாக இருந்தது. அதிக சக்தி விரயம் இல்லை.

என் கணவரும்

நல்லா புஷ் பண்ணு

உன்னால முடியும்

தலை தெரியுது

இன்னும் கொஞ்சம் தான்

விடாம ட்ரை பண்ணு

என்று என்னை ஊக்குவித்துக் கொண்டே இருந்தார். தலை தெரியுது என்பது பொய் என்று எனக்குப் புரிந்தாலும் எனக்கு அது ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.

ஏய் அம்மாக் கிழவி.... உன்ன என்ன சொன்னேன். எனக்கு விசிர்றதை விட்டுட்டு அங்க போயி என்ன பாக்குற. விசிற மட்டும் செய்...”

இயலாமையை நமக்கு நெருக்கமானவர்களிடம் தானே காட்டுவோம். எனக்கு வேர்வை ஊற்றிக் கொண்டிருந்ததுஇதுவரை யாருடைய பிரசவத்தையும் இப்படிப் பார்த்திருக்காத அம்மாவுக்கு சிவா தலை தெரிகிறது என்று சொன்னதைக் கேட்டு அதைப் பார்ப்பதற்காக எனக்கு விசிறுவதை விட்டு விட்டுப் போய் பார்த்தார்.

என்னதான் நான் என் அம்மாவைத் திட்டினாலும் என் அம்மா என் அருகில் இருந்தது எனக்கு நல்ல மாரல் சப்போர்ட்டாக இருந்தது. நல்ல வேளை என் அம்மாவால் இங்கே வர முடிந்தது.

டாக்டர் என் கால்களுக்கிடையில் எதையாவது பார்த்திருக்க வேண்டும்.

“கால் த பேபி நர்ஸஸ்” என்று லேபர் நர்ஸிடம் சொன்னார். ஆம் இங்கே எனக்கொரு நர்ஸ், பேபிக்கொரு நர்ஸ். குழந்தை பிறந்ததும் எனக்கொரு டாடர் பேபிக்கொரு டாக்டர். டாக்டர் பேபி நர்ஸ்களை வரச் சொன்னதும் எனக்குப் புரிந்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரம்தான் குழந்தை வெளியேறிவிடும். இது எனக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது.

என் கால்களுக்கிடையில் கனமாக ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. மொத்த சக்தியையும் திரட்டி முக்கி ஒரு தள்ளு தள்ளினேன்.

தல வெளிய வந்துருச்சிசந்தோசமாக சிவா கத்தியதும், டாக்டர் லாவகமாக தலையைப் பிடித்து லேசாக திருப்பி மொத்த உடலையும் வெளியே இழுத்ததும், வெளியே வந்து விழுந்து இரண்டொரு விநாடிகளில் "ங்காஎன்று அழும் குரல் கேட்டதும், “அப்பாடாஎன்றிருந்தது.

நர்ஸ் ஒரு கத்திரிக்கோலை சிவாவின் கையில் கொடுத்து தொப்புள் கொடியை வெட்டச் சொன்னாள். உடன் ஒரு டப்பாவில் கார்ட் பிளட்டை சேகரித்தாள்.

இன்னும் இரு நர்ஸ்கள் குழந்தையை எடுத்து தூரமாக இருந்த ஒரு படுக்கையில் போட்டு சில சோதனைகள் செய்தனர்.

உமா, இன்னொரு முறை புஷ் செய். ப்ளாசெண்டா வெளியே வர வேண்டும்

இந்த முறை மிகவும் சுலபமாக இருந்தது. ஒரு தாதி மேலிருந்து என் வயிற்றை அழுத்தி விட ப்ளாசெண்டா சுலபமாக வெளி வந்தது.

அதிகாலை 7:15 மணி

தூரத்தில் சுத்தம் செய்யப்பட்டு உடை மாட்டப்பட்டு, தலையில் ஒரு குல்லாவையும் மாட்டி (கூம்பிய தலையை மறைக்க) கண்களை இடுக்கிக் கொண்டு அசப்பில் சிவாவைப் போலவே இருந்த என் பூக்குவியலை இரு கைகளால் தாங்கி என்னைப் பார்த்த என் ஆசைக் கணவனின் முகத்தில் இருந்த பெருமிதத்தில் கடந்த 39 மணிநேரம் நான் அனுபவித்த வலி அனைத்தும் பஞ்சாய்ப் பறந்தது..

படுக்கையில் நன்றாகச் சாய்ந்து கொண்டு, அயர்ச்சியுடன் சிவாவைப் பார்த்து புன்னகைத்தேன்.

**********************************************
பின்குறிப்பு:

உமாவின் பிரசவத்தில் தொடர்ந்து உடனிருந்த அனைவருக்கும் நன்றி. இந்தக் கதையில் பல மருத்துவ சொற்றொடர்களை உபயோகிக்க வேண்டி வந்தது. அவற்றின் அர்த்தம் இதோ.

1. செர்விக்ஸ் - Cervix - கர்ப்பப்பையின் வாசல்.
2. டைலேஷன் - Dialation - செர்விக்ஸில் விழும் துவாரம். இத் துவாரம் 10 செ.மீ விட்டம் (diameter) வந்தால் தான் குழந்தையால் வெளியே வர முடியும்.
3. எஃபேஸ்மெண்ட் - Effacement - செர்விக்ஸின் தடிமன் குறையும் விதத்தை %ல் சொல்வார்கள். 100% எஃபேஸ்மெண்ட் என்றால் செர்விக்ஸ் முழுக்கக் கரைந்து விட்டது என்று பொருள். 90% வந்து விட்டாலே குழந்தை வெளியே வர ஏதுவானது என்று சொல்வார்கள்
4. பொசிஷன் - Position - இது குழந்தையின் தலை செர்விக்ஸிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைக் குறிக்கும் சொல்லாடல். 0 என்றால் செர்விக்ஸில் இருக்கிறது. -1, -2 என்றால் கொஞ்சம் பின்னால் இருக்கிறது என்று பொருள்.
5. எபிட்யூரல் - Epidural - இது வலி தெரியாமலிருக்க தண்டுவடத்தில் போடப்படும் மருந்து. இதை ட்ரிப்ஸ் போல ஏற்றிக் கொண்டே இருப்பார்கள். தண்டுவடத்திலேயே குத்துவதால் இதில் ரிஸ்க் என்று சொல்வார்கள். ஆனால், ரத்தத்தில் கலக்காமல், குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் வலியை மட்டுப் படுத்த உதவும் ஒரே முறை எபிட்யூரல்தான். (காஸ்ட்லியும் கூட $1200-$1500 ஆகும்)

அமெரிக்காவில், மருத்துவ செலவுகள் இன்ஸ்யூரன்ஸ் இல்லாவிட்டால் சமாளிப்பதென்பது முடியவே முடியாத செயல். இதைப் பற்றி தனியாகவே ஒரு இடுகை போடலாம். அமெரிக்கா கனவு தேசம் என்று அழைக்கப்பட்டு வந்த நாடு. ஆனால் இங்கே வாழ்க்கை நடத்துவதென்பது அவ்வளவு சுலபமல்ல. அதே சமயத்தில் இங்கே வாழ்க்கையை ஆரம்பித்து விட்டு, அதை விட்டுவிட்டு இந்தியா திரும்புவதும் சுலபமல்ல.  புலி வால் பிடித்த கதைதான். அதைப் பற்றி மற்றொரு பதிவில் சொல்கிறேன்

21 comments:

vasu balaji said...

really really superb boss.ஒரு ஆணாக பெண்ணுக்கு மட்டுமேயான இந்த வலிகளும், பெருமிதமும் ஓரளவாவது உணர முடிகிறது உங்கள் எழுத்தில். அந்த ஃபைனல் மொமெண்ட்ஸ் பரபபரப்பு அபாரம்.

Paleo God said...

ஏற்கனவே பேசினபோது எழுத சொல்லலாம்னுதான் நினெச்சேன்.. அழகா எழுதிட்டீங்க. அந்த மற்றொரு பதிவிலும் நான் கேட்ட சில விஷயங்கள் சொல்லப் பாருங்கள் முகிலன்.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

//அமெரிக்காவில், மருத்துவ செலவுகள் இன்ஸ்யூரன்ஸ் இல்லாவிட்டால் சமாளிப்பதென்பது முடியவே முடியாத செயல்//

இந்த பிரசவம் எல்லாம் நியூஸில முழுக்க இலவசம்.

போன கமெண்ட் டெலிட்டிட்டேன்.

Unknown said...

@வானம்பாடிகள் - நன்றி சார்.

@ஷங்கர் - கண்டிப்பா அதை கவர் பண்ண முயற்சி செய்யறேன்.

@சின்ன அம்மிணி - ஆமாங்க. மக்கள் தொகை கொஞ்சமா இருக்கிற மேலை நாடுகள்ல அப்பிடித்தான். ஃபிரான்ஸ், இத்தாலியில எல்லாம் கர்ப்பமா இருந்தா சம்பளமே குடுக்குறாங்க.

Chitra said...

படுக்கையில் நன்றாகச் சாய்ந்து கொண்டு, அயர்ச்சியுடன் சிவாவைப் பார்த்து புன்னகைத்தேன்.

........... Memorable moment!
Very nice write-up.
About American life: well-said!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஆ.. இதென்ன மருத்துவக் கதையா? எனக்கு இந்த மருந்து மருத்துவர் மருத்துவம் எல்ல்லாஆஆஆஆஆமே அலர்ஜி.. இன்னமும் படிக்கவே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள கைய அரிக்க ஆரம்பிச்சிடுச்சு பாருங்க.. :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

குழந்த நார்மலா பிறக்கறதெல்லாம் ஒரு கதையான்னு :)) நினைச்சாலும்... அவங்கவங்களுக்கு இது மிகச் சிறப்பான தருணமில்லயா!! சிவா உமா பாப்பா எல்லாருக்கும் வாழ்த்துக்கள்..

அப்புறம்.. நல்லா எழுதியிருக்கீங்க.. ஒரு ஆணாயிருந்து பொண்ணோட உணர்வுகளச் சொன்னது பாராட்டத்தக்கது!! மருத்துவ வார்த்தைகளுக்கான தெளிவும் அருமை!!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

நேத்து படிச்சதோட இன்னைக்கு அந்த வலியை உணர்ந்து படித்தேன்... அந்த தருணங்களை அப்படியே வடித்துள்ளீர்கள்....

ஹுஸைனம்மா said...

ரொம்ப அருமையா உணர்வுபூர்வமாவும், மருத்துவரீதியாவும் விவரிச்சுருக்கீங்க; நல்லாருக்கு.

இருந்தாலும், //ஏய் அம்மாக் கிழவி.... // இத ஜீரணிக்க முடியல; முதன்முதல் தாய்மைப் பதவியை அடையப்போகும் தருணத்தில்தான் ஒரு பெண் தன் தாயின் பெருமையை அதிகம் உணர்வாள். அந்தத் தருணத்தில் தாயை இப்படி விளிப்பாள் என்பது நம்பமுடியவில்லை.

பெரும்பாலும் அந்த சமயத்தில் பெண்கள் கணவர்மீதுதான் கோபத்தைக் காண்பிப்பார்கள்!! :-))

Unknown said...

//hitra said...
படுக்கையில் நன்றாகச் சாய்ந்து கொண்டு, அயர்ச்சியுடன் சிவாவைப் பார்த்து புன்னகைத்தேன்.

........... Memorable moment!
Very nice write-up.
About American life: well-said!//

நன்றி சித்ரா

Unknown said...

/எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
ஆ.. இதென்ன மருத்துவக் கதையா? எனக்கு இந்த மருந்து மருத்துவர் மருத்துவம் எல்ல்லாஆஆஆஆஆமே அலர்ஜி.. இன்னமும் படிக்கவே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள கைய அரிக்க ஆரம்பிச்சிடுச்சு பாருங்க.. :)//

அப்ப நெஜம்ம்ம்மாவே மத்த ரெண்டு பாகத்தையும் படிக்கலையா..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

/எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
குழந்த நார்மலா பிறக்கறதெல்லாம் ஒரு கதையான்னு :)) நினைச்சாலும்... அவங்கவங்களுக்கு இது மிகச் சிறப்பான தருணமில்லயா!! சிவா உமா பாப்பா எல்லாருக்கும் வாழ்த்துக்கள்..

அப்புறம்.. நல்லா எழுதியிருக்கீங்க.. ஒரு ஆணாயிருந்து பொண்ணோட உணர்வுகளச் சொன்னது பாராட்டத்தக்கது!! மருத்துவ வார்த்தைகளுக்கான தெளிவும் அருமை!!//

நன்றி நன்றி நன்றி (கடைசியா படிச்சதுக்கு)

Unknown said...

//க.பாலாசி said...
நேத்து படிச்சதோட இன்னைக்கு அந்த வலியை உணர்ந்து படித்தேன்... அந்த தருணங்களை அப்படியே வடித்துள்ளீர்கள்.//

நன்றி பாலாசி

Unknown said...

//ஹுஸைனம்மா said...
ரொம்ப அருமையா உணர்வுபூர்வமாவும், மருத்துவரீதியாவும் விவரிச்சுருக்கீங்க; நல்லாருக்கு.

இருந்தாலும், //ஏய் அம்மாக் கிழவி.... // இத ஜீரணிக்க முடியல; முதன்முதல் தாய்மைப் பதவியை அடையப்போகும் தருணத்தில்தான் ஒரு பெண் தன் தாயின் பெருமையை அதிகம் உணர்வாள். அந்தத் தருணத்தில் தாயை இப்படி விளிப்பாள் என்பது நம்பமுடியவில்லை.

பெரும்பாலும் அந்த சமயத்தில் பெண்கள் கணவர்மீதுதான் கோபத்தைக் காண்பிப்பார்கள்!! :-))//

நன்றி ஹுசைனம்மா..

அந்தச் சொற்றொடர் பிரயோகம் ஒரு வார்த்தை கூட பிசகாமல் என் காதால் கேட்டது..

நீங்கள் சொல்வது சரிதான்.. கணவர் மீது தான் கோபம் வரும். இங்கே அம்மா மீது கோபம் வந்ததற்குக் காரணம் அவர்தான் அந்த நேரத்தில் எரிச்சலூட்டியவர் (விசிறாமல் வேடிக்கை பார்க்க போனதால்) என்பதே..

க ரா said...

அருமையான கதை. ஒரு பெண்ணின் பிரசவ விநாடிகளை அப்படியே கண் முன் கொண்டு வந்து காட்டிய மாதிர் இருந்தது.

பிரபாகர் said...

நண்பா!

என்ன சொல்ல! இரு குழந்தைகளின் பிறப்பின் போதும் அருகில் இருக்க கொடுத்து வைக்காதவன் நான்...

படித்து என் கண்கள் குளமானது. பிரசவத்தை இவ்வளவு அழகாய் எழுதியிருக்கிறீர்கள். உங்களின் சிறந்தவைகளில் ஒன்று....

பிரபாகர்.

கலகலப்ரியா said...

comments paartha... romba nallaarukkum polaye.... padichu comment panren... :D

Anonymous said...

ஏன் இந்த வில்லத்தனம். யாரு உங்களை இதை மாதிரி எழுத சொன்னார்கள். வாசிக்கும் போதே யாரோ என்ன வயிற்றை கிழிப்பது மாதிரி ஒரு உணர்வு. முதுகு தண்டு கூசுகிறது. இதை வாசித்து ஒரு மணி நேரம் ஆகியும் கை எல்லாம் நடுங்குகிறது. நீங்களே அனுபவித்து எழுதிய மாதிரி இருக்கு. பட் ஒன் ரிக்குவஸ்ட் பிளீஸ். யாராவது இப்படி எழுதுவதானால் சென்சிடிவானவர்கள் படிக்க வேண்டாம் என்று ஒரு குறிப்பு குடுங்கள். உண்மையிலேயே தலை சுத்துகிறது. எழுந்து நிக்க முடியவில்லை. முதுகு குளிர்வது போல் இருக்கு. முடியல.

malar said...

பூ வலி ரொம்ப அருமயாக எழுதி இருக்குறீர்கள் ..மூன்று பதிவையும் இப்போது தான் படித்தேன்..

முதல் பிரசவத்தில் அதிக கச்டங்களை அன்பவிப்பதால் பெண்கள் அடுத்த குழந்தை பெற பயபடுகிறார்கள்....

இது தவறு 2 வருட இடைவெளி விட்டு பெத்தால் இவ்வளவு கச்டம் இல்லை..

பீரியட் வரல்ல என்று டாக்டர் செக்கப்புக்கு பிறகு கன்சிவ் என்ற வார்த்தையை கேட்டதும் குழந்தை பெறும் வரை உள்ள கவலை அனுபவச்ச வங்கழுக்கு தான் தெரியும்...

எங்க ஊரில் சொல்லுவார்கள் அழுதழுதும் அவள் தான் பெறனும் பிள்ளை என்று ..

எப்படியோ எங்க அம்மாவின் நச்சரிபின் பேரில் 3 பிள்ளைகள் பெற்றேன்.....