Sunday, January 3, 2010

உறவுகள் - 02

முதல் பாகம் இங்கே


கார் தெருமுனையில் திரும்பும்போதே கராஜ் கதவு திறக்க ரிமோட்டின் பொத்தானை அழுத்தினான் ரமேஷ். லாவகமாக ட்ரைவ் வேயில் காரைத் திருப்பி திறந்திருந்த கராஜினுள் காரை செலுத்தி நிறுத்தினான். கதவைத் திறந்து இறங்கி மறுபக்கம் வந்து பாஸஞ்சர் கதவைத் திறந்து மஞ்சு இறங்குவதற்கு உதவி செய்தான்.


மஞ்சுவின் கைப் பிடித்து நடத்தி கதவைத் திறந்து வீட்டினுள் நுழைந்தான்.


“டீ சாப்புடுறியாம்மா?”


“வேணாம் ரமேஷ். ஆலிவ் கார்டன்ல சாப்புட்டதே தொண்டை வரைக்கும் இருக்கு. நீ சாப்புடு”


“எனக்கு வேணாம்.”


“ரமேஷ் நாளைக்கு மாமாவும் அத்தையும் வர்றாங்கள்ல. பாவம் 24 மணி நேரத்துக்கு மேல நல்ல சாப்பாடு இல்லாம கஷ்டப்பட்டிருப்பாங்க. நீ அவங்கள ரிசீவ் பண்ணப் போகும்போது ஏதாவது சாப்புடக் கொண்டு போ”

“ரைட். எனக்குத் தோணவே இல்ல. நான் எதாவது வெரைட்டி ரைஸ் செஞ்சி எடுத்துட்டுப் போறேன்”



“நீ செய்யப்போறியா? அதுக்கு அவங்க ஃப்ளைட்ல சாப்டதே பரவாயில்லனு நெனச்சுருவாங்க”


“ஹேய். அப்போ என் சமையல் அவ்வளவு மோசமா?”


“அதுனால தான சீக்கிரமா உங்கம்மாவையும் அப்பாவையும் வரச் சொன்னேன்”


“அடிங்க”


“நான் சமைக்கிறேன். நீ ரைஸ் மட்டும் வை.”


“இந்த நிலைமைல சமைக்கணுமாடா?”


“பரவாயில்ல ரமேஷ். இன்னிக்கு ஒரு நாள் தான. நாளைல இருந்து அவங்க சமைப்பாங்களே?”


“சரி. என்னவோ செய்யி”


வாஞ்சையாக மஞ்சுவின் தலை தடவினான். ‘பிறந்த வீட்டில் எவ்வளவு செல்லமாக வளர்ந்த பெண்? இன்றும் இவளைத் தாங்குவதற்கு இவள் வீட்டில் எத்தனை பேர். அவ்வளவு சொந்தங்களையும் விட்டு விட்டு என்னுடன் வாழ வரத் துணிந்ததே எவ்வளவு பெரிய தியாகம்? இதே நேரம் நாம் இந்தியாவில் இருந்தால் இவள் வீட்டில் ராணி மாதிரி இருந்திருப்பாளே? என்னால் முடிந்த அளவுக்கு இவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.’ என்று நினைத்த வாறே அரிசியைக் களைந்து குக்கரில் போட்டு அடுப்பைப் பற்ற வைத்தான்.


‘சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே’ என்று பாடிக்கொண்டே புளியைக் கரைத்துக் கொண்டிருந்த மஞ்சுவைப் பார்த்தான். என்னதான் முயற்சி செய்தாலும் சிறு சிறு விசயங்களில் கூட மஞ்சுவின் மேல் கோபப் படுவதைத் தவிர்க்க முடியாமல் கடிந்து பேசி விடுகிறான் ரமேஷ். அதோடு மஞ்சுவின் குணம் எதையும் திட்டம் போட்டு செய்வது. ரமேஷ் அதற்கு நேர் மாறு. எதையுமே வரும்போது எதிர் கொள்வது. இதனாலேயே இருவருக்கும் சிறு சண்டைகளும் சச்சரவுகளும் வருவதை ரமேஷால் தவிர்க்க முடிவதில்லை. எதோ இந்த சில மாதங்களில் ரமேஷ் பொறுப்புடன் இருக்க முயற்சி செய்து வருகிறான்.


ரமேஷின் செல் ஒலித்தது. 


“ஹலோ ரமேஷ் ஹியர்”
----
“சொல்லுடா”
----
“வந்துரும்பா. உங்கப்பா எங்கப்பாக்கிட்ட குடுத்துடாரு. அவரு கொண்டு வந்துட்டு இருக்காருப்பா. வரவும் நானே டோர் டெலிவரி பண்ணிடறேன்”
----
“நீ சொல்றது சரி தாண்டா. மஞ்சுவோட அம்மா இருக்கிற மாதிரி வராது தான். ஆனா என்ன பண்றது. அவங்களுக்கு லீவு கிடைக்காதே?”
----
“எங்கம்மா அவளை நல்லா கவனிச்சுக்குவாங்கன்னு நினைக்கிறேன். எந்தங்கச்சியை வச்சி பிரசவம் பாத்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்குதான”
----
“சரிடா நெக்ஸ்ட் வீக் மீட் பண்ணலாம். கொஞ்ச நாளைக்கு பியர் பிராந்தி எல்லாம் மறந்துட வேண்டியது தான்”


செல்லை அணைத்த ரமேஷ் மஞ்சுவிடம் “பாலா. அவங்கப்பா அவனுக்கு பருப்பு பொடி குடுத்து விட்டிருக்கார்ல. அது வந்துடுமான்னு கன்ஃபர்ம் பண்ணிக்கிறான்”


“எதோ பியர் பிராந்தின்னு கேட்டுச்சி”


“அதுவா. வீக் என்ட் ப்ளான் பத்திக் கேக்குறான். அப்பாவுக்கு பிடிக்குமோ தெரியல. அதான் கொஞ்ச நாளைக்கு நோன்னு சொன்னேன்”


“பொண்டாட்டிக்கு பிடிக்குதான்னு கேக்குறதில்ல?”


“அதான் பெர்மிசன் ஃபைல்ல இருக்கே?”


“இத சொல்லி சொல்லியே குடி”


மஞ்சு சமைத்துக் கொண்டிருக்க ரமேஷ் லேப்டாப்பை எடுத்து ஃப்ளைட் இன்ஃபர்மேஷன் பார்த்தான். லண்டன் ஃப்ளைட் சரியான நேரத்துக்கு பறந்து கொண்டிருக்கிறது. லண்டனின் இரண்டு மணி நேரம் லே ஓவர். சரியாக மாலை 5:00 மணிக்கெல்லாம் ஜே.எஃப்.கேக்கு வந்து விடும். ரமேஷ் காலை 6:30க்கே கிளம்பி 8:00 மணிக்குள் ஜே.எஃப்.கே சென்று விடுவான். 5:00 மணி வரை பொழுதைப் போக்குவதுதான் கடினமான விசயம். வேறு வழியில்லை. 


மஞ்சு சமையல் முடித்ததும் அவளைக் கை பிடித்து பெட் ரூமுக்கு நடத்திச் சென்றான்.


********************************************************************************************
ஞாயிறு காலை 5:00 மணி.

“குட்டிம்மா. நான் ஜே.எஃப்.கே கிளம்புறேன். 6:30க்கு ஃப்ளைட். உனக்கு சாப்பாடு ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன். நேரத்துக்கு சாப்பிடு சரியா?”

“சரிப்பா. பாத்து போயிட்டு வா. ஆண்ட்டி அங்கிளுக்கு சாப்பாடு எடுத்துட்டுப் போறியா?”

“ஆமா. லெமன் ரைஸ்ஸும் புளியோதரையும் எடுத்துட்டுப் போறேன். நைட் வந்துடுவோம். உனக்கு போர் அடிச்சா சாரதாவக் கூப்பிட்டுக்கோ. ஓக்கே?”

“ஓக்கேடா” 



காரில் ஏறி ரிவர்ஸ் எடுத்து சாலையில் திரும்பி மஞ்சுவுக்குக் கை அசைத்து விட்டு ஏர் போர்ட்டை நோக்கி செலுத்தினான்.


லாங் டெர்ம் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு ஜெட் ப்ளூ கயாஸ்க்கில் போர்டிங் பாஸை ப்ரிண்ட் செய்து கொண்டு செக்யூரிட்டி செக்கிங்கில் வரிசையில் நின்றான்.


செக்யூரிட்டி க்ளியரன்ஸ் முடித்துக் கொண்டு தான் ஏற வேண்டிய கேட்டுக்குச் சென்றான். ஃப்ளைட் கிளம்ப இன்னும் அரை மணி இருக்கிறது. லேப் டாப்பை எடுத்து மடியில் வைத்து, ஏர்ப்போர்ட்டின் இலவச இணைய இணைப்பைப் பெற்று இலக்கில்லாமல் மேய்ந்தான்.


போர்டிங்க் அனௌன்ஸ்மெண்ட் கேட்டு லேப்டாப்பை மூடி பைக்குள் வைத்து விட்டு விமானத்துக்குள் சென்று தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் போட்டுக் கொண்டு அமர்ந்தான். 


விமானம் புறப்பட்டு அரை மணிக்குப் பிறகு பைலட் ஒலி பெருக்கியில் விமானத்தில் ஏதோ தொழில் நுட்பக் கோளாறு இருப்பதாகவும் விமானம் அருகில உள்ள ஒரு விமான நிலையத்தில் தரை இறங்குவதாகவும் அறிவித்தார்.


“போச்சுடா” என்று தலையில் கை வைத்தான் ரமேஷ். 


விமானம் தரை இறங்கியதும் செல் ஃபோனில் மஞ்சுவை அழைத்த ரமேஷ் விசயத்தை சொன்னான். 


அது ஒரு சிறிய விமான நிலையம். விமான ஊழியர்கள் விமானம் சரி செய்யப்பட்டதும் ஜே.எஃப்.கேவுக்கு கிளம்பும் என்று சொல்லி ப்ரேக் ஃபாஸ்ட் கூப்பன் கொடுத்தார்கள். பெற்றுக் கொண்டு அங்கிருந்த சிறிய ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தான்.


**********************************************************************
விமானம் ஜே.எஃப்.கேவுக்கு மேலாக பறந்து கொண்டிருந்தது. அப்படி இப்படி என்று அங்கிருந்து கிளம்ப மாலை 5:00 மணி ஆகி விட்டது. இப்போது 6:00. அப்பாவும் அம்மாவும் வந்த விமானம் தரை இறங்கியிருக்கும். என்ன செய்வார்களோ என்ற எண்ணமே வயிற்றைக் கலக்கியது.


விமானம் தரை இறங்கியதும் செல்ஃபோனை சுவிட்ச் ஆன் செய்தான். அதற்காகவே காத்திருந்தது போல ஒலித்தது. நம்பரைப் பார்த்தான். மஞ்சு. 


“என்ன மஞ்சு?”
----
“அப்பாம்மா வந்துட்டாங்களா?”
----
“டெர்மினல்லயே வெயிட் பண்றாங்களா? ஓக்கே. நான் போய் பிக்கப் பண்ணிக்கிறேன்”
----
விமானம் நிலைக்கு வந்ததும் முதல் ஆளாய் வெளியேறி ஓட்டமும் நடையுமாக வெளியேறி டெர்மினல் 7 நோக்கி விரைந்தான்.


வாசலில் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அம்மாவையும் அருகில் நின்று கொண்டிருந்த அப்பாவையும் பார்த்ததும் கை அசைத்தான். அப்பாவின் முகத்தில் ஒரு சந்தோசக் கீற்று. 


“என்னப்பா பிரயாணம் எப்படி இருந்துச்சி?”


“லண்டன்ல தான் ஹெல்ப்புக்கு ஆள் வரவே இல்லை. ரொம்ப கஷ்டமாயிடுச்சி”


“அப்புறம்”


“ரொம்ப நேரம் கழிச்சி அங்க இருந்த ஒருத்தங்கிட்ட சொன்னோம். அவன் தான் ஹெல்ப் பண்ணான்”


“இங்க?”


“இங்க பிரச்சனையே இல்ல. ஃப்ளைட் எறங்கவும் ஆள் வந்து கூட்டிட்டு வந்துட்டா. அம்மாவுக்கு வீல் சேர் இருந்ததால எங்கயுமே க்யூல நிக்கல”


“இம்மிக்ரேசன்ல என்ன கேட்டாங்க?”


“நீ அனுப்புன டாக்குமென்ட்ஸ் கேட்டாங்க”


“குடுத்திங்களா?”


“கொண்டு வரலயே?”


“என்னப்பா கொண்டு வரச் சொன்னேனே?”


“நீ சொல்லல”


“சொன்னேம்பா”


“பொய் சொல்லாத ரமேஷ். நீ சொல்லல. சொல்லியிருந்தா கொண்டு வந்திருப்பேனே?”


“சரி அத விடுங்க. எப்பிடி சமாளிச்சிங்க?”


“ரிட்டன் டிக்கெட் இருக்கான்னு கேட்டான். நல்ல வேளையா நீ அனுப்புன பிரிண்ட் அவுட்ல இருந்திச்சி. அதக் காட்டினதுனால விட்டான்”


“சரி வாங்க அந்த ஏர்ப்போர்ட் போகலாம்”


அம்மா அமர்ந்திருந்த வீல் சேரைத் தள்ளிக் கொண்டு ஐந்தாவது டெர்மினலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அவர்களோடு விதியும்.


(தொடரும்)

5 comments:

கலகலப்ரியா said...

ம்ம்.. ரொம்ப சீரியஸா போகுது கதை... நல்லா இருக்கு... பயமாவும் இருக்கு..

கலகலப்ரியா said...

template nallarukku ..

vasu balaji said...

நல்லா போகுது:)

கலகலப்ரியா said...

intha template innum nallaarukku.. =)))

நசரேயன் said...

//வானம்பாடிகள் said...

நல்லா போகுது:)
//

ஆமா .. ஆமா