04
03
02
01
ரமேஷ் லோட்டஸ் நோட்ஸை மூன்றாவது முறையாக ரெஃப்ரெஷ் செய்தான். முக்கியமான ஈ-மெயிலுக்காக வெயிட்டிங். அனுப்பிவிட்டேன் என்றான் மார்க் ஆனால் இன்னும் வரவில்லை. அது வந்து விட்டால் ப்ரசண்டேஷனை முடித்து பார்ட்டிசிபண்ட்ஸ்க்கு அனுப்பி விடலாம்.
பொறுமையிழந்து மார்க்கை ஃபோனில் பிடித்தான்.
“வாஸ்ஸப் மேன்”
...
“ஐ டோண்ட் ஹாவ் இட் யெட்”
...
“செண்ட் டு ராங் ரமேஷ்?”
...
“இட்ஸ் ராகவன் மேன்”
...
“ஐ சீ இட் நவ். தேங்க் யூ”
ரிசீவரை வைத்து விட்டு ஈ-மெயிலை திறந்தான். உள்ளே சேர்க்கப்பட்டிருந்த எக்ஸெல் ஃபைலைத் திறந்து காப்பி பேஸ்ட் செய்ய ஆரம்பித்தான்.
செல்ஃபோன் கூப்பிட்டது. அழைக்கும் எண்ணைப் பார்த்தான். மஞ்சு.
“ஹலோ மஞ்சு”
...
மறுமுனையில் மஞ்சு அவளுக்கும் ரமேஷின் அம்மாவுக்கும் இடையே நடந்த உரையாடலைப் பற்றி அழுகையினூடே சொல்லிக் கொண்டிருந்தாள். பொறுமையாக உம் கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்த ரமேஷின் கைகள் காப்பி-பேஸ்ட்டைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தன.
“இங்க பாரு மஞ்சு. அவங்க வயசானவங்க. இதுவரைக்கும் கிராமத்துலயே கட்டுப்பெட்டியா வளந்துட்டாங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா. ரொம்ப ஓவராப் போச்சின்னா நான் அவங்க கிட்ட பேசறேன். சரியா?”
“எனக்கு இங்க வேலை நெறைய இருக்கு. நைட் பேசுவோம். ஓக்கே? வச்சிடறேன்.”
ஃபோனை வைத்துவிட்டு வேலையில் ஆழ்ந்தான். மனம் வீட்டில் இருந்தது. இதுவரை அவன் பெற்றோர்களும் மஞ்சுவும் சேர்ந்தார்போல இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தது இல்லை. இதுதான் முதல் முறை. அவர்கள் மருமகளிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். மஞ்சு இந்த சமயத்தில் அவர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது ஏமாற்றமாகிறது. இது மஞ்சுவுக்கும் அம்மாவுக்கும் மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும்.
வேலையை முடித்து கிளம்பினான். சடுதியில் காரைக் கிளப்பி ட்ராஃபிக்கில் கலந்தான்.
வீடு வந்து சேர்ந்தான். கீழே யாரும் இல்லை. காஃபி மேக்கரில் காஃபி போட்டு விட்டு மேலே ஏறிச் சென்றான்.
“மஞ்சும்மா. தூங்கறியா?”
“இல்ல ரமேஷ். தூக்கமே வரலை. கவலையா இருக்கு.”
“கவலைப் படாதடா. சரியாயிடும். வா கீழ போலாம்”
இருவரும் கீழே வந்தனர். டி.பி.எஸ் சேனலைத் திருப்பி எவ்ரிபடி லவ்ஸ் ரேமண்ட் போட்டான். இருவரும் காஃபியைச் சிப்பிக் கொண்டே டிவியைப் பார்த்து அவ்வப்போது சிரித்துக் கொண்டு ரசித்தனர்.
அம்மாவும் அப்பாவும் கீழே இறங்கி வரும் சத்தம் கேட்டது.
“என்னப்பா எப்ப வந்த?”
“நான் வந்து அரை மணி நேரமாச்சும்மா”
“காப்பி போட்டுட்டியா?”
“டிக்காக்ஷன் போட்ருக்கு. நீங்க கலந்துக்குங்க”
“சரிப்பா”
“ரமேஷ் நைட்டுக்கு என்ன செய்யப் போற?” - மஞ்சு
“நேத்து கரைச்ச கோதுமை மாவு இருக்கு. அதையே செஞ்சுடலாம்”
“ரமேசு, கோதுமை மாவு எம்புட்டு இருக்கு? நாலு பேருக்கு வருமா?”
“ஏம்மா கேக்குறீங்க?”
“இல்லப்பா மத்தியானம் வச்ச கொளம்பு காலியாயிருச்சி. வேற எதாவது கொளம்பு வக்கிறதுக்கு கோதுமை தோசை மாவு இருந்திச்சின்னா அதை இன்னிக்கி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு”
“நாலு பேருக்கு வரும்னு நினைக்கிறேன்மா. அப்பிடி பத்தலைன்னா கொஞ்சூண்டு தோசை மாவு கூட இருக்கு”
ரமேஷின் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்து எண்ணைப் பார்த்தான். சுகுமார்.
“டேய் மாமா, எப்பிடிடா இருக்க?”
...
“ஆமாண்டா அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க”
...
“இஸிட்? என்ன திடீர்னு இந்தப் பக்கம்?”
...
“ஓக்கே, நோ ப்ராப்ளம்டா. வாங்க”
“யாரு ரமேஷ்?”
“நம்ம சுகு”
“என்ன திடீர்னு? எப்பிடி இருக்கானாம்?”
“இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுக்கு வந்திடுவான். அவன்கிட்டயே கேளு”
“வாட்?”
“ஆமாம்மா. விஜியோட அம்மா அப்பா வந்திருக்காங்க. அவங்களக் கூட்டிக்கிட்டு அவன் விஜியோட சிஸ்டர் வீட்டுக்கு போயிட்டு இருக்கான். ரொம்ப லேட் ஆயிட்டதால நம்ம வீட்டுல நைட் ஸ்டே பண்ணிட்டு போகப் போறாங்க”
“இப்பிடி நம்ம வீட்டுக்கு வந்தாத்தான் உண்டு. ஆமா விஜியும் வராளா?”
“அவ வராமலா?”
இருவர் பேசுவைதையும் கேட்டுக் கொண்டே இருந்த அம்மா ரமேஷிடம் - “யாருப்பா வர்றாங்க?”
“சுகுமார்மா?”
“யாரு விருதுநகர் பையனா?”
“ஆமாப்பா”
“இந்த மதுரைக்காரப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டானே? அவனா?”
“ஆமாப்பா”
“அவனும் லவ் மேரேஜ் தான? உங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் லவ் மேரேஜா?”
“முக்காவாசி..”
“ஏம்பா ரமேஷ். அவங்க சாப்புடுற மாதிரி வருவாங்களா?”
“தெரியலம்மா. அரை மணி நேரத்துல வர்றேன்னு சொன்னான்”
மணி எட்டு. வெளியே கார் வரும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் காலிங் பெல் அழைத்தது. கதவைத் திறந்தான் ரமேஷ்.
“வாடா சுகு. எப்பிடிடா இருக்க?”
சுகுமார், அவன் மனைவி விஜயலக்ஷ்மி மற்றும் விஜியின் அம்மா அப்பா ஆகியோர் நுழைந்தனர்.
விஜி மஞ்சுவைக் கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தினாள்.
சுகுமார், விஜி, ரமேஷ், மஞ்சு - நால்வரும் ஒன்றாகப் படித்தவர்கள். படிக்கும் போது இவர்கள் நால்வரும் தான் ஒன்றாகச் சுற்றுவார்கள். நால்வரின் வீட்டுக்கும் இவர்கள் நால்வரையும் அவர்கள் நட்பையும் தெரியும். படிப்பு முடிந்து வேலைக்குச் சென்ற போது மஞ்சுவும் ரமேஷும் சென்னையிலும், சுகுமார்-விஜி பெங்களூரிலும் சென்று ஒரே நிறுவனத்தில் சேர்ந்தார்கள். மஞ்சு-ரமேஷின் நட்பு காதலாக மாறிய வண்ணமே சுகுமார்-விஜியின் நட்பும். ஆனால் சுகுமார்-விஜி திருமணத்திற்கு அவர்கள் பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை. சுமூகமாக திருமணம் நடந்தது. போன வருடம் தான் இருவரும் இங்கே வந்தார்கள். நியூ ஜெர்சியில் க்ளையண்ட் ப்ளேசில் வேலை செய்கிறார்கள் இருவரும்.
“என்னம்மா மஞ்சு. நல்லா சாப்புடுறியா? இந்த நேரத்துல வாய்க்கு ருசியா நல்லா சாப்புடணும் போல இருக்குமே?” - விஜியின் அம்மா.
“ஆமா ஆண்ட்டி. அத்தை, மாமா ரமேஷ் எல்லாம் நல்லா கவனிச்சிக்கிறாங்க. அத்தை மாமா வர்ற முன்னாடி வரைக்கும் ரமேஷோட போர் சாப்பாடு சாப்டுட்டு இருந்தேன். இப்போ நல்லா வாய்க்கு ருசியா சாப்புடுறேன்”
“நல்லதும்மா”
அவர்கள் பேசிக் கொண்டிருக்க சுகுமார் ரமேஷை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
ஒரு சிகரெட்டை உருவிப் பற்ற வைத்துக் கொண்டே “மச்சி ஒரு முக்கியமான மேட்டர்”
“நீ இந்தச் சனியன இன்னும் விடலயா?”
“நீ மனோதிடமிக்கவனப்பா விட்டுட்ட. நாமெல்லாம் சாதாரண மனுசய்ங்க, விட லேட்டாவும்”
“சரி என்ன முக்கியமான மேட்டர்?”
“ஆக்சுவலி நாங்க இன்னேரம் கொலம்பஸ்ல இருந்திருக்கனும். வர்ற வழியில் கார் ப்ரேக் டவுன். அதான் டீவியேட் ஆகி இங்க நின்னுட்டோம். நாலு பேரு தங்க உங்க வீட்டுல எடம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.”
“ஏய் அப்பிடியெல்லாம் இல்லடா. தங்கிக்கலாம்.”
“இருக்கட்டும்டா. உங்கம்மாப்பா வேற வந்திருக்காங்க. அதுனால, விஜியோட அம்மாப்பா மட்டும் இங்க தங்கிக்கட்டும். நான் வர்ற வழியில ஒரு ஹாலிடே இன் பாத்தேன். அதில நானும் விஜியும் போய் தங்கிக்கிறோம். காலைல வந்து பிக்கப் பண்ணிட்டு போயிடறேன்”
“ஓக்கேடா. உனக்கு எது வசதியோ அப்பிடி பண்ணு.”
“அப்புறம் வர்ற வழியில நானும் விஜியும் சாப்டுட்டோம். அவங்கப்பா அம்மா வழியில எதுவும் வேணாம்னு சொல்லிட்டு சாப்புடலை. சோ அவங்களுக்கு டின்னர் மட்டும் எதாவது..”
“டேய் நாயே. இது கூட செய்ய மாட்டேனாடா?”
“தேங்க்ஸ்டா”
“தேங்க்ஸ் சொல்லி பெரிய மனுசனாகாத. வா உள்ள போலாம்”
கடைசி பஃபை இழுத்து கீழே போட்டு மிதித்தான். பையில் இருந்து ஸ்பியர்மிண்ட் எடுத்து வாயில் போட்டு மென்றான்.
“மவனே ஒழுங்க கை கழுவிட்டு ஹாலுக்கு வா. இல்ல மஞ்சு உன்னக் கொண்டே போட்டுடுவா”
உள்ளே வந்து சிறிது நேரம் கதைத்து விட்டு சுகுமாரும் விஜியும் ஹோட்டலுக்குச் சென்றனர்.
“எல்லாரும் உக்காருங்க. நான் தோசை ஊத்தித் தர்றேன்.”
“இருப்பா ரமேஷ். நீ எதுக்கு? நான் செய்யறேன்” - விஜியின் அம்மா.
“அய்யோ ஆண்ட்டி. நீங்க கெஸ்ட். அப்பிடி டைனிங் டேபிள்ல உக்காருங்க. நான் சுட்டுத் தர்றேன்”
ரமேஷின் அப்பா, மஞ்சு, விஜியின் பெற்றோர் டைனிங் டேபிளில் அமர்ந்தனர். ரமேஷின் அம்மா ரமேஷின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
ரமேஷ் முதல் தோசையை சுட்டு விஜியின் அப்பாவுக்கு வைத்தான். அடுத்த தோசை ரமேஷின் அப்பாவுக்கு. அடுத்த தோசையை விஜியின் அம்மாவுக்கு வைத்தான். அவர் “புள்ளத்தாச்சி பொண்ணுக்கு முதல்ல குடுப்பா” என்று மஞ்சுவின் தட்டில் வைத்தார்.
அடுத்தடுத்து தோசை சுட்டு போட்டுக் கொண்டே இருந்தான். ரமேஷின் அம்மா தோசை மாவின் அளவில் ஒரு கண்ணும் மற்றவர்கள் சாப்பிடும் தோசை எண்ணிக்கையில் ஒரு கண்ணும் வைத்திருந்தார்.
ரமேஷின் அப்பா, அம்மாவைப் பார்த்து - “நீயும் சாப்புடும்மா” என்றார். உடனே ஒரு தட்டை எடுத்துக் கொண்டு வந்தார்.
ரமேஷ் “அம்மா, நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அவங்க சாப்டு முடிச்சப்புறமா, நாம ரெண்டு பேரும் சாப்பிடலாம்” என்று சொல்லி சுட்டெடுத்த தோசையை மஞ்சுவின் தட்டில் வைத்தான்.
அடுத்த தோசையையும் விஜியின் அம்மா மஞ்சுவின் தட்டிலேயே வைத்தார்.
பார்த்துக் கொண்டே இருந்த சுசீலா விடுவிடுவென்று படி ஏறி மேலே சென்றாள்.
(தொடரும்)

10 comments:
சண்டைக்கான களம் நல்லாவே இருக்கு :)
நல்லா இருக்கு
மெகா சீரியல் எழுத ப்ளான் பண்ற மாதிரி தெரியுது
//மெகா சீரியல் எழுத ப்ளான் பண்ற மாதிரி தெரியுது//
சும்மா தான் சொன்னேன் தப்பா எடுத்துக்காதீங்க
// சின்ன அம்மிணி said...
சண்டைக்கான களம் நல்லாவே இருக்கு :)
//
அப்பாடா.. artificiala இருக்குமோன்னு பயந்தேன்..
// angel said...
நல்லா இருக்கு
மெகா சீரியல் எழுத ப்ளான் பண்ற மாதிரி தெரியுது
//
லேபிள் பாக்கலையா? மினி தொடர்னு போடுறதோட உள்குத்தே அதுதானே... :))))
// angel said...
//மெகா சீரியல் எழுத ப்ளான் பண்ற மாதிரி தெரியுது//
சும்மா தான் சொன்னேன் தப்பா எடுத்துக்காதீங்க//
தப்பா எடுத்துக்க வேணாம்னு தான் இருந்தேன்..
இப்ப நீங்க காசு குடுத்து சொல்ற வரைக்கும் தப்பா எடுத்துக்கப் போறேன். :))))
முகிலன் said...
/ லேபிள் பாக்கலையா? மினி தொடர்னு போடுறதோட உள்குத்தே அதுதானே... :))))//
அடங்கொன்னியா. லேபிள்ள கூடவா உள்குத்து:))
இது வேறயா... நடக்கட்டும்...
படிச்சிட்டேன்
எப்படியோ சுசீலா வ வில்லியாக்காம விட மாட்டீங்க போல :))
ஆமா.. அவங்க எப்பவுமே இப்படித் தான இருந்திருப்பாங்க? அதே வீட்டுல வளர்ந்த ரமேஷால அம்மாவோட இயல்பே இதான்னு புரிஞ்சுக்க முடியாதா?
மஞ்சுவும் சுசீலாவும் ஏற்கனவே ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சவங்களா? :))
Post a Comment