Friday, March 19, 2010

சர்வதேச பதிவர் சங்கமம் - முன்னேற்பாடு கூட்டம் நேரலை

உலகெங்கிலும் எங்கள் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் நல்ல உள்ளங்களுக்கு சலம்பல் தொலைக்காட்சி சார்பில் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


சென்னைப் பதிவர்கள் வாரம் ஒரு முறை பதிவர் சந்திப்பு என்ற பெயரில் கடற்கரையிலோ, இல்லை உலகத் திரைப்படம் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகத்தின் மாடியிலோ சந்தித்து அளவளாவி வருகின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பதிவர்கள் இப்படி சந்திப்பதில்லை என்ற பெரும் வருத்தம் அவர்களுக்குள் இருக்கிறது. 


இதை எப்படியாவது நீக்கியே தீருவது என்ற நல்லெண்ணத்தில் அயல்நாட்டுப் பதிவர்கள் ஒரு பிரைவேட் பஸ்ஸில் ஏறி கலந்துரையாடினார்கள். அந்த நிகழ்வை நேரலையாக உங்களுக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு சலம்பல் தொலைக்காட்சியின் எக்ஸ்க்ளூசிவ் நிகழ்ச்சி.


அதுசரி: யோவ் யாருய்யா இந்த டெம்போவுக்கு டிரைவரு?


முகிலன்: வாங்க அதுசரி. நானும் யாருன்னு தெரியாமத்தான் உக்காந்திருக்கேன். 


கலகலப்ரியா: நாந்தான் அது. இப்ப சாம்பார் வச்சிட்டிருக்கேன். நீங்க பேசிக்கிட்டிருங்க.


அதுசரி: ஓ மண்ணு லாரியா இது. அப்ப சரக்கடிச்சிட்டு லேசா சரிஞ்சிக்கலாம்.


குடுகுடுப்பை: என்னய்யா இது, என்னவோ பதிவர் சங்கமம்னு பேசிட்டு சரக்கடி, கொசுக்கடின்னு பேத்திக்கிட்டிருக்கீங்க?


முகிலன்: வாங்க தலைவரே. என்ன ரொம்ப நாளா கடைக்கு லீவு விட்டுட்டீங்க?


குடுகுடுப்பை: ஆஃபீஸ்ல வேலை டவுசர் கிளியுது. ஒட்டுப் போடக்கூட நேரமில்லை.


கலகலப்ரியா: ஆமா.. ஒட்டுப் போட நேரமிருக்காது. ஆனா எதிர்க் கவிதை எழுத மட்டும் நேரம் இருக்கும். நடக்கட்டு நடக்கட்டு


குடுகுடுப்பை: எதிர்கவித எழுதுரதுக்கு யோசிக்க வேண்டாம், உங்க கவிதைய படிச்சா தானா வருது


நசரேயன்: எனக்கொரு துண்டு போடுங்க.


குடுகுடுப்பை: நீர்தானய்யா வழக்கமா துண்டு போடுவ. இப்ப உனக்குப் போடச் சொல்ற?


நசரேயன்: அட எடம் போடச் சொன்னேன்யா.


முகிலன்: வாங்க நசரேயன் இங்கிட்டு உக்காருங்க


நசரேயன்: நன்றி பாண்டியரே. பாத்திங்களாய ஒரு பாண்டியருக்கு ஒன்னொரு பாண்டியாரு தான் உதாவி செய்யறாரு


வானம்பாடி: ஒரு வாக்கியத்துல எத்தன எழுத்துப் பிழை. இதைத் திருத்த மாட்டீரா?


சின்ன அம்மிணி: யாருங்க அது எங்க தளபதியத் தாக்குறது?


நசரேயன்: நன்றி சின்ன அம்மிணி. அதான, சர்வதேச பதிவர் சங்கமத்துல இவர எல்லாம் யாருய்யா உள்ள விட்டது?


அதுசரி: சரி வந்தது வந்துட்டீங்க. ஒரு ரவுண்டு ஏத்துறது.


குடுகுடுப்பை: நான் தான் வரச் சொன்னேன். அவரு பல பதிவர் கூட்டம் பாத்திருப்பாரு. அவர்கிட்ட ஐடியா கேக்கலாம்னு.


முகிலன்: ஆமா நம்ம பழமை பேசியண்ணன என்ன இன்னும் காணோம்?


பழமை பேசி: வந்துவிட்டேன். தொழில் நிமித்தமாக பாசுடன் நகரம் வரை செல்ல வேண்டியிருந்தது. விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திரும்பி வரும் விமானம் தாமதமாகிவிட்டது.


அதுசரி: ஆமா இப்ப என்ன சொன்னீங்க? கொஞ்சம் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் செய்யுங்க?


குடுகுடுப்பை: மப்பு ஏறிட்டா அப்பிடித்தான். 


கலகலப்ரியா: வந்துட்டேன். யாராவது சாம்பார் சாதம் சாப்புடுறீங்களா?


அதுசரி: அதுக்கு நான் விசத்தையே குடிப்பேன்.


முகிலன்: யோவ் எங்கயாவது விசம் ஃப்ரீயா கிடைக்குமா? கிடைக்கும்போது வாங்கி சாத்துரத விட்டுப்புட்டு.


கலகலப்ரியாம்கும். தினம் ஜாவா காஃபின்னு அலட்டிக்கிட்டு குடிக்கறது விசமில்லாம என்ன? இனிமேட்டு நீங்க கேட்டாலும் கிடைக்காது.


பழமை பேசி: சரி தம்பிகளா, நாம இங்க எதுக்குக் கூடியிருக்கோம்?


முகிலன்: அண்ணே, இந்தியாவுல பாத்தீங்கன்னா, சென்னைல தும்முனா பதிவர் சந்திப்பு, இருமுனா பதிவர் சந்திப்புன்னு நடத்துறாங்க. ஈரோட்ல என்னன்னா பதிவர் சங்கமம்னு வச்சி கலக்கிட்டாய்ங்க. நீங்க கூட போய் அமீர்கான் மாதிரி தொப்பி போட்டுட்டு பேசிட்டு வந்தீங்களே?


குடுகுடுப்பை: தொப்பியக் கழட்டிட்டு ஒரு ஃபோட்டோ பப்ளிஷ் பண்ணச் சொன்னா இன்னும் பண்ணலை. நாம எதிர் தொப்பி போட்டுர வேண்டியதுதான்.


நசரேயன்: இந்த அமீரகம், நம்ம நியூ யார்க் சிட்டி சைஸ் இல்ல. அவங்க என்னடான்னா பதிவர் டூர் போராங்க. பிரியாணி சாப்டுராங்க. சினிமா பாக்குறாங்க. நாமும் மீட்டிங் போடலைன்னாலும் பரவாயில்ல பிரியாணியாவது சாப்புடணும்.


கலகலப்ரியா: இந்த சிங்கப்பூர், இத்தனை நாள் இருக்கிற இடம் தெரியாம இருந்தது. இப்ப என்னடான்னா கேபிள் சங்கரக்கூப்பிட்டு பதிவர் சந்திப்பு நடத்திட்டாங்க. என்னை ரௌத்திரப் படுத்தாம சீக்கிரம் ஏதாவது யோசனை சொல்லுங்க.


ஹாலிவுட் பாலா: Steven Speilberg, Jurassic parkla என்ன சொல்றாருன்னா..


நசரேயன்: அந்தப் பார்க்லயே வச்சிக்கலாமே? எனக்குத்தான் லால் பாக்ல வடக்கூர்க்காரிக்கு துண்டு போட முடியாமப் போயிருச்சி. இந்த பார்க்லயாவது எவளாவது வெள்ளக்காரிக்கு துண்டு போட்டுக்கிறேன்


ஹாலிவுட் பாலா: யோவ் நான் சினிமா விமர்சனம் சொல்லிக்கிட்டிருக்கேன்யா.


வானம்பாடிகள்: நம்ம ஈரோடு கதிர் தான் ஈரோடு சங்கமத்த ஏற்பாடு செஞ்சது. அவரக் கூப்பிட்டு யோசனை கேக்கலாமே?


குடுகுடுப்பை: கேளுங்க கேளுங்க. நம்ம சந்திப்பு ஊரெல்லாம் பேசப் படணும். நாம சந்திப்புல சாப்புடுற ஐட்டங்களைப் பாத்து ஊருல இருக்குற எல்லாருக்கும் நாக்குல எச்சி ஊறனும். ஆமா.


பழமை பேசி: நாங்கள் தென்கிழக்கு பதிவர்கள் சந்தித்தோமே? 


குடுகுடுப்பை: இன்னொரு தடவை அத சந்திப்புன்னு சொன்னீங்க கெட்ட கடுப்பாயிரும். நாலு பேரு - வெறும் நாலு பேரு மட்டும் சேந்த்து சரக்கடிச்சிட்டு கோழி பிரியாணி சாப்புடதுக்குப் பேரு சந்திப்பாய்யா?


வில்லன்: யோவ் உமக்கு பிரியாணி குடுக்கலைங்கிற கடுப்புல இப்பிடியெல்லாம் பேசக்கூடாது.


குடுகுடுப்பை: பின்னூட்டம் மட்டும் போடுறவுங்கள எல்லாம் பதிவர் சந்திப்புல சேக்கப்படாது


முகிலன்: அட இருக்கட்டும் தலைவா. கூட்டம் சேக்க வேணாமா?


வானம்பாடிகள்: இந்தா ஈரோடு கதிர் வந்துட்டாரு


ஈரோடு கதிர்: மௌனம் கசிகிற இந்த மாலை வேளையிலே நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்?


அதுசரி: என்ன பாலா சார். கூட்டிட்டு வரும்போதே ஊத்தி விட்டுட்டு ச் சீ விளக்கி விட்டு கூட்டிட்டு வந்திருக்கக்கூடாதா?


வானம்பாடிகள்; அதொண்ணுமில்ல கதிர். நீங்க ஈரோட்டுல பதிவர் சங்கமம் நடத்துன மாதிரி இவங்க சர்வதேச பதிவர் சங்கமம் நடத்தணுமாம். அதுக்கு யோசனை கேக்குறாங்க.


ஈரோடு கதிர்: ஓ அப்பிடியா. அதொண்ணுமில்லீங். ஒரு எடம், ஒரு நாளு ரெண்டையும் முதல்ல குறிச்சிக்கணுங். பொறவு ஒரு விழாக்குழுவ நியமிச்சிக்கணுங். அந்தக் குழுவுல இருக்குற ஓவ்வொருத்தரு அவங்க அவங்க வலைப்பூவுல விளம்பரம் போட்டுரணுங்.


அனைவரும்: சரி


ஈரோடு கதிர்: அப்புறம் மைக் செட்டு, எட வாடகை, சாப்பாட்டுக்கெல்லாம் லோக்கல் பதிவர்கள் மட்டும் பங்கெடுத்துக்கனுமுங். யாராவது லாட்ஜ் வச்சிருக்கிற பதிவராப் பாத்துக்கிட்டீங்க்ன்னா லாட்ஜ் வாடகை மிச்சமுங்.


அனைவரும்: சரி


ஈரோடு கதிர்: அப்புறம் இந்தியாவிலருந்து ஒரு பதிவர், ஈரோட்டுல இருந்து ஒரு பதிவர்னு சிறப்பு விருந்தினரா கூப்டுக்கனுங்.


பழமை பேசி: ஏனுங் மாப்பி. ஈரோடு இந்தியாவுல ஒரு அங்கம் தானுங்?


ஈரோடு கதிர்: அட சும்மாருங் மாப்பி. அப்புறம் நாம எப்ப அமெரிக்கா, ஐரோப்பானு சுத்துரதுங். கேபிள் சங்கரெல்லாம் சிங்கப்பூர் போயிட்டு வந்துட்டாரு.


வானம்பாடி: ஓ அப்பிடி வர்றீரா? சரி சரி


குடுகுடுப்பை: இதெல்லாம் செஞ்சிரலாம். ஆனா எப்பிடி இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்துறது?


ஈரோடு கதிர்: அதுக்கென்னங். நம்ம மாப்பி நாலு பேரு கூடுற கூட்டத்துக்கெல்லாம் பிரமாதமா விளம்பரப் படுத்துறாரு. அவர் கிட்ட உட்டுட்டா விளம்பரம் கலக்கிறப்போறாரு.


முகிலன்: சரி அப்பிடியும் பாப்புலராகலைன்னா?


சின்ன அம்மிணி: நான் எழுதுன அம்மாவுக்கு சாமி வந்திருச்சி கதைய ஒரு குறும்படமா எடுத்து இந்த விழாவ ஒட்டி வெளியிட்டுட்டா??


அனைவரும் சின்ன அம்மிணியை ஒரு பார்வை பார்க்கின்றனர்.


சின்ன அம்மிணி: சரி சரி. வேற எதாவது சொல்லுங்க.


ஈரோடு கதிர்: விழா முடியவும் சுடச்சுட விழா நிகழ்வுகளை படத்தோட எல்லாரும் ஆளுக்கொரு பதிவெழுதிடறதுங்


அதுசரி: அதத் தான் இப்போ நாலு பேரு அகஸ்மாத்தா சந்திச்சிக்கிட்டாக் கூட படமெடுத்து போட்டுராங்களே? அதுல என்ன ஸ்பெசலாகப் போவுது?


வானம்பாடி: நான் என்னோட ரெக்கார்டரை எடுத்துக்கிட்டு வந்து எல்லாரும் பேசுறதை பதிவு செஞ்சி என் ப்ளாக்ல போட்டுடறேன்?


அதுசரி: அதையுந்தான் செய்யறாங்க


பழமை பேசி: நான் காணொளி எடுத்து வெளியிட்டா?


அதுசரி: நீங்களே அதை சலிக்கச்சலிக்க செஞ்சிட்டீங்க


முகிலன்: அப்பிடியும் பரபரப்பாவலைன்னா, நம்ம வில்லன சரக்கடிச்சிட்டு விழாவுல சலம்ப வச்சிரலாம். அதக் கண்டிச்சி ஒரு நாலு பேரு ஆதரிச்சி நாலு பேருன்னு பதிவு போட்ரலாம்.


அதுசரி: ஆமா ஆமா அப்பத்தான் அதுக்கு எதிர் பதிவு, எதிர் பதிவுக்கு எதிர் பதிவு, பின்னூட்டக்கும்மின்னு கொஞ்ச நாளைக்கி பதிவுலகம் பத்திக்கிட்டெரியும்


வில்லன்: நம்ம கெட்ட நேரத்துக்கு அதுவும் ஒர்க் அவுட்டாகலைன்னா?


குடுகுடுப்பை: உம்ம வாயில கொள்ளிக்கட்டையத் தேய்க்க..


நசரேயன்: தேச்சி என்ன புண்ணியம் ஒன்னும் வித்தியாசம் தெரியாது


சங்கர்: அப்பிடி எதுவும் ஒர்க் அவுட் ஆகலைன்னா, இந்த ஆடியோ வீடியோ ஃபோட்டோ போடுற பதிவுகளை குப்பைன்னு சொல்லி நான் ஒரு பதிவு எழுதுறேன்..


அனைவரும்: யாருய்யா அது?


முகிலன்: அட நம்ம சாரு சங்கர்.


அதுசரி: ஐடியா.. பேசாம சாருவை சிறப்பு விருந்தினராக் கூப்பிட்டா என்ன? பதிவுலகமே இதைக் கிண்டல் செஞ்சி எழுதித்தீத்துராது?


குடுகுடுப்பை: நல்ல யோசனையாத்தான் இருக்கு. ஆனா அந்தாளுக்குக் கட்டிங் குடுக்க நாம காசு தேத்த முடியாதே...


பலா பட்டறை ஷங்கர்: நான் உங்க சங்கமத்தை விமர்சனம் செஞ்சி ஒரு பதிவு போடுறேன்.


நசரேயன்: ஆமா ஆமா இவரு நல்லா விமர்சனம் போடுவாரு. கேபிள் சங்கர் புக்குக்கு இவர் எழுதின விமர்சனத்தைப் படிச்சிட்டு அவர் மயங்கி விழுந்துட்டாராம். இப்பிடியெல்லாமா நான் எழுதினேன் அப்பிடின்னு..


முகிலன்: சரி சரி. இது வரைக்கும் ப்ளான் பண்ண திட்டங்களை மட்டும் செயலாக்குவோம்.


நசரேயன்: ஆமா எங்க கூட்டம் நடத்துறது?


அதுசரி: ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொதுவான இடத்துல நடத்தலாம். 


நசரேயன்: அட்லாண்டிக் பெருங்கடல்ல ஆள் நடமாட்டமில்லாத ஒரு தீவு இருக்கு அங்க வச்சிக்கலாம். வரவேற்புக்கு மட்டும் ரெண்டு வடக்கூர்காரிகளைக் கூப்ட்ரணும். (தனக்குள்) அங்கயாச்சும் ரோஜா குடுக்க முடியுதான்னு பாக்குறேன். 


அனைவருக்கும் இந்த யோசனை பிடிக்கவும், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் விழாக் குழுவாக தேர்ந்தெடுத்துவிட்டு கலைந்தனர். 


நிகழ்ச்சியைக் கண்டு களித்த நேயர்களுக்கு நன்றி. நம் சலம்பல் தொலைக்காட்சி பதிவர் சங்கமம் நிகழ்வையும் நேரலையாக உங்களுக்குத் தருவோம் என்ற வாக்குறுதியோடு விடை பெறுகிறோம்.வணக்கம் வணக்கம் வணக்கம்.

58 comments:

vasu balaji said...

ஆமா! இன்னைக்கு தலைவருக்கு பொறந்த நாளா? மாயாவதி ரேஞ்சுக்கு இல்லைன்னாலும் உப்புகண்ட மாலைக்காவது வழி பண்ணீங்களா?

/நசரேயன்: நன்றி சின்ன அம்மிணி. அதான, சர்வதேச பதிவர் சங்கமத்துல இவர எல்லாம் யாருய்யா உள்ள விட்டது?/

படிக்கிறதுக்கு எழுதி வச்சிருக்கிறத பிழை பார்க்க வேணாமா? அதுக்குதான்:))

/அதுசரி: சரி வந்தது வந்துட்டீங்க. ஒரு ரவுண்டு ஏத்துறது./

அப்புறம் 40$ பில்லு, 10$ டாக்ஸு, 15 $ டிப்சும்பாரு உசாரு

/பழமை பேசி: வந்துவிட்டேன். தொழில் நிமித்தமாக பாசுடன் நகரம் வரை செல்ல வேண்டியிருந்தது. விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திரும்பி வரும் விமானம் தாமதமாகிவிட்டது./

விமான=வானூர்தி. இஃகி

/அதுசரி: அதுக்கு நான் விசத்தையே குடிப்பேன்./

கலகலப்ரியா:ஓவரா நக்கலு சொல்லிபுட்டேன். அப்புறம் தூக்கத்துல கூட விண்ணைத்தாண்டி வருவாயா முழு படமும் ஓடக் கடவ

/நசரேயன்: அட்லாண்டிக் பெருங்கடல்ல ஆள் நடமாட்டமில்லாத ஒரு தீவு இருக்கு அங்க வச்சிக்கலாம். வரவேற்புக்கு மட்டும் ரெண்டு வடக்கூர்காரிகளைக் கூப்ட்ரணும். (தனக்குள்) அங்கயாச்சும் ரோஜா குடுக்க முடியுதான்னு பாக்குறேன். /

அண்ணாச்சி. பழமையும் இருப்பாரு. இந்தா வாட்டி சூதானமா இருந்துக்கிருங்க. வடக்கூரா என்ன சொன்னான்னு கேட்டுபுறாதிய.

KarthigaVasudevan said...

:))))

பிரபாகர் said...

//
நல்ல யோசனையாத்தான் இருக்கு. ஆனா அந்தாளுக்குக் கட்டிங் குடுக்க நாம காசு தேத்த முடியாதே...//

இந்த மாதிரியெல்லாம் உண்மைய போட்டு உடைக்கப்படாது...

அருமை தினேஷ்... சிரிச்சி மாளல...

பிரபாகர்.

Paleo God said...

எப்படியோ கூட்டிட்டுபோனா சரி.:))
--
ஆமா இதென்ன தொடர் பதிவா லேபிள் போடாம எல்லாரும் எழுதறீங்க.. நல்லால்ல சொல்லிப்புட்டேன்..:)

VISA said...

//ஆமா இதென்ன தொடர் பதிவா லேபிள் போடாம எல்லாரும் எழுதறீங்க.. நல்லால்ல சொல்லிப்புட்டேன்..:) //

REPEAT...

கலகலப்ரியா said...

பஸ் வாடகைய கொடுக்காம இந்த நிகழ்ச்சிய யாருய்யா பப்ளிஷ் பண்ண அனுமதிச்சது....

யோ அதுசரி.... என்னோட சாம்பார் பத்தி இப்டி பப்ளிக்கா போட்டு உடைச்சிட்டீரா... இதுக்காகவே தனி சேனல் உருவாக்கி.... கங்காரு பத்தி ஒளிபரப்பு நடத்துவேன்.... வந்து பேசிக்கறேன்... வந்து...

vasu balaji said...

நம்மைத் தேடிவந்து தவறாமல் கமுத்தி குத்தும் வண்ணனுக்கு ஒரு பாராட்டுத் தொடர் இடுகை எழுதுவமா:)

கலகலப்ரியா said...

வண்ணன்..><!@#$%^&*\123456789`£\-.,)(&^!#$%!#$%^^&**(((){}?.. ஸ்ஸ்ஸபா... ஒரு கேள்விக்குறி கண்டுபிடிக்க எவ்ளோ டாப்ஸ் வேஸ்ட் பண்ணிட்டேன்... வண்ணன்?????... எவ்வண்ணம்.... கலர்கலரா ஓட்டு போடுறாய்ங்கன்னு சொல்லிக்கலாம்...

நசரேயன் said...

பட்டைய கிளப்பீட்டீங்க ... உள்ளேன் போட்டுகிறேன் அப்புறமா வந்து கும்முறேன்

நசரேயன் said...

//
நசரேயன்: நன்றி பாண்டியரே. பாத்திங்களாய ஒரு பாண்டியருக்கு ஒன்னொரு பாண்டியாரு தான் உதாவி செய்யறாரு//

அடபாவிகளா

Unknown said...

@வானம்பாடிகள்

ஒவ்வொருத்தரும் பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாடி நீங்களே போட்டுட்டுப் போயிட்டீங்களா?

Unknown said...

//KarthigaVasudevan said...
:))))//

சிரிக்கிறீங்களா அழுவுறீங்களான்னே தெரியலை..

ஈரோடு கதிர் said...

சீக்கிரம் டிக்கெட் போடுங்கப்பா

நாங்க எப்போ வெளிநாடு பாக்குறது

Unknown said...

//இந்த மாதிரியெல்லாம் உண்மைய போட்டு உடைக்கப்படாது...

அருமை தினேஷ்... சிரிச்சி மாளல...

பிரபாகர்.//

வருகைக்கு நன்றி பிரபாகர்.

Unknown said...

//ஆமா இதென்ன தொடர் பதிவா லேபிள் போடாம எல்லாரும் எழுதறீங்க.. நல்லால்ல சொல்லிப்புட்டேன்..:)
//

தொடர் பதிவா இருந்தா உங்களக் கூப்புடாம இருப்போமா.. ஜஸ்ட் கோ-இன்சிடன்ஸ்

Unknown said...

//VISA said...
//ஆமா இதென்ன தொடர் பதிவா லேபிள் போடாம எல்லாரும் எழுதறீங்க.. நல்லால்ல சொல்லிப்புட்டேன்..:) //

REPEAT...//

மேல சொன்ன பதில்தான் ரிப்பீட்ட்ட்ட்டேஎய்ய்ய்ய்

Unknown said...

//லகலப்ரியா said...
பஸ் வாடகைய கொடுக்காம இந்த நிகழ்ச்சிய யாருய்யா பப்ளிஷ் பண்ண அனுமதிச்சது....

யோ அதுசரி.... என்னோட சாம்பார் பத்தி இப்டி பப்ளிக்கா போட்டு உடைச்சிட்டீரா... இதுக்காகவே தனி சேனல் உருவாக்கி.... கங்காரு பத்தி ஒளிபரப்பு நடத்துவேன்.... வந்து பேசிக்கறேன்... வந்து...//

எங்க வந்து? யார் கிட்ட. வேதாளத்த அவுத்து விட்டுறப் போறாரு பாத்து

Unknown said...

//வானம்பாடிகள் said...
நம்மைத் தேடிவந்து தவறாமல் கமுத்தி குத்தும் வண்ணனுக்கு ஒரு பாராட்டுத் தொடர் இடுகை எழுதுவமா:)//

யாருங்க அந்தப் புண்ணியவான்?

Unknown said...

//கலகலப்ரியா said...
வண்ணன்..><!@#$%^&*\123456789`£\-.,)(&^!#$%!#$%^^&**(((){}?.. ஸ்ஸ்ஸபா... ஒரு கேள்விக்குறி கண்டுபிடிக்க எவ்ளோ டாப்ஸ் வேஸ்ட் பண்ணிட்டேன்... வண்ணன்?????... எவ்வண்ணம்.... கலர்கலரா ஓட்டு போடுறாய்ங்கன்னு சொல்லிக்கலாம்..//

உங்க பொறுப்புணர்ச்சி புல்லரிக்குது.. கேள்விக்குறியத் தேடித்தான் அடிப்பேன்னு அடம் புடிக்கிறீங்களே?

Unknown said...

//நசரேயன் said...
பட்டைய கிளப்பீட்டீங்க ... உள்ளேன் போட்டுகிறேன் அப்புறமா வந்து கும்முறேன்
//

வாங்க வாங்க

Unknown said...

//நசரேயன் said...
//
நசரேயன்: நன்றி பாண்டியரே. பாத்திங்களாய ஒரு பாண்டியருக்கு ஒன்னொரு பாண்டியாரு தான் உதாவி செய்யறாரு//

அடபாவிகளா
//

இதுக்கே அதிர்ச்சியாகிட்டா எப்புடி? சங்கமத்துக்கு அணுகுண்டெல்லாம் வச்சிருக்கோம்ல?

Unknown said...

//ஈரோடு கதிர் said...
சீக்கிரம் டிக்கெட் போடுங்கப்பா

நாங்க எப்போ வெளிநாடு பாக்குறது//

என்னண்ணே டிக்கெட்டு, தனி விமானமே அனுப்பிருவோம்

ப்ரியமுடன் வசந்த் said...

//அதுசரி: ஐடியா.. பேசாம சாருவை சிறப்பு விருந்தினராக் கூப்பிட்டா என்ன? பதிவுலகமே இதைக் கிண்டல் செஞ்சி எழுதித்தீத்துராது?//

!"£$%^&*()(*&^%$£"

அந்தாள ஏன்யா கூப்பிடுறீக?

:-)

அது சரி(18185106603874041862) said...

//
அதுசரி: ஓ மண்ணு லாரியா இது. அப்ப சரக்கடிச்சிட்டு லேசா சரிஞ்சிக்கலாம்.
//

என்ட இமேஜ் டோட்டல் டேமேஜ்..... எல்லாரும் ஈமெயில் பண்ணி நீங்க அப்பிடியான்னு கேக்குறாங்க...

இதுக்கு மான நஷ்ட ஈடு வழக்கு போடலாம்னு வக்கீல கேட்டா இல்லாதது நஷ்டமானதுக்கெல்லாம் கேஸ் போட முடியாதுங்கிறான்...நான் ஒரு நல்ல வக்கீலா பார்த்துட்டு வந்து வச்சிக்கிறேன்...

முகிலன், காசை ரெடி பண்ணிட்டு தயாரா இருங்க...

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன்: நன்றி பாண்டியரே. பாத்திங்களாய ஒரு பாண்டியருக்கு ஒன்னொரு பாண்டியாரு தான் உதாவி செய்யறாரு.

வானம்பாடி: ஒரு வாக்கியத்துல எத்தன எழுத்துப் பிழை. இதைத் திருத்த மாட்டீரா?
//


யார் அது எங்க தளபதிய கொறை சொல்றது??

தளபதி ஒரு எழுதப்படிக்க தெரியாத எளக்கிய மேதை... "தமிழை நான் தப்பா எழுத மாட்டேன்"னு ஆயிரம் தடவை எழுத சொன்னா "தமிள நன் தாப்பா எலுதமாட்டேன்"னு எழுதுனவரு எங்க தளபதி :0))))

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை: ஆஃபீஸ்ல வேலை டவுசர் கிளியுது. ஒட்டுப் போடக்கூட நேரமில்லை.
//

ஆமா...கடை ஷட்டரை இழுத்து மூடிட்டு ஜக்கம்மா கும்மு கும்முன்னு கும்மினதையெல்லாம் வெளிய சொல்ல முடியாது...

அது சரி(18185106603874041862) said...

//
பழமை பேசி: வந்துவிட்டேன். தொழில் நிமித்தமாக பாசுடன் நகரம் வரை செல்ல வேண்டியிருந்தது. விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திரும்பி வரும் விமானம் தாமதமாகிவிட்டது.
//

பாஸ் கூட ஃப்ளைட்ல போறது கொஞ்சம் கடியாச்சே...ஆமா, எந்த நகரத்துக்கு போனீங்க??

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன்: யோவ் எங்கயாவது விசம் ஃப்ரீயா கிடைக்குமா? கிடைக்கும்போது வாங்கி சாத்துரத விட்டுப்புட்டு.
//

அதெல்லாம் கிடைக்கும்...ப்ரியா ஒரு அண்டா நெறைய கலக்கி வச்சிருக்காங்க...

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன்: அண்ணே, இந்தியாவுல பாத்தீங்கன்னா, சென்னைல தும்முனா பதிவர் சந்திப்பு,
//

அது என்ன சென்னைல தும்முனா மட்டும் பதிவர் சந்திப்பு?? அப்ப மதுரைல தும்முனா?

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை: பின்னூட்டம் மட்டும் போடுறவுங்கள எல்லாம் பதிவர் சந்திப்புல சேக்கப்படாது
//

கரெக்ட்டு....வேணுமினா அவங்க பின்னூட்டர் சந்திப்பு நடத்திக்கட்டும்...:)))

அது சரி(18185106603874041862) said...

//
ஈரோடு கதிர்: மௌனம் கசிகிற இந்த மாலை வேளையிலே நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்?
//

எங்களுக்கு மட்டும் தெரியுமா? சும்மா எல்லாம் கும்பலா நிக்கிறாங்களேன்னு நானும் நிக்கிறேன்...

இங்க இன்னாபா நடந்துகினு கீது???

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன்: அப்பிடியும் பரபரப்பாவலைன்னா, நம்ம வில்லன சரக்கடிச்சிட்டு விழாவுல சலம்ப வச்சிரலாம். அதக் கண்டிச்சி ஒரு நாலு பேரு ஆதரிச்சி நாலு பேருன்னு பதிவு போட்ரலாம்.
//

வில்லனுக்கு எதுக்குய்யா சரக்கு?? ஒல்டு மங்க் அப்பிடின்னு ஒரு பேப்பர்ல எழுதி காமிங்க...அவருக்கு அதுலயே போதை ஏறிடும்...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

யோ அதுசரி.... என்னோட சாம்பார் பத்தி இப்டி பப்ளிக்கா போட்டு உடைச்சிட்டீரா... இதுக்காகவே தனி சேனல் உருவாக்கி.... கங்காரு பத்தி ஒளிபரப்பு நடத்துவேன்.... வந்து பேசிக்கறேன்... வந்து...

//

என்னா அக்கிரமம்...பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா??

உங்க சாம்பாரை பத்தி நான் எங்கயும் சொல்லலை...போன வாரம் "வெப்பன்ஸ் ஆஃப் மாஸ் டெஸ்ட்ரக்ஷ்ன்னு" சி.என்.என்.ல ஒரு ப்ரோக்ராம் வந்திருக்கு...அதுல உங்க சாம்பாரை பத்தி ஒன்றரை மணி நேரம் காமிச்சிருக்காய்ங்க...

அவய்ங்க செஞ்சதுக்கு நான் என்ன பண்றது??

Anonymous said...

//சின்ன அம்மிணி: நான் எழுதுன அம்மாவுக்கு சாமி வந்திருச்சி கதைய ஒரு குறும்படமா எடுத்து இந்த விழாவ ஒட்டி வெளியிட்டுட்டா??//

ஐடியா சூப்பர். உரிமை வேண்டுபவர்கள் என்னைத்தொடர்பு கொள்க

நசரேயன் said...

// சின்ன அம்மிணி said...
//சின்ன அம்மிணி: நான் எழுதுன அம்மாவுக்கு சாமி வந்திருச்சி கதைய ஒரு குறும்படமா எடுத்து இந்த விழாவ ஒட்டி வெளியிட்டுட்டா??//

ஐடியா சூப்பர். உரிமை வேண்டுபவர்கள் என்னைத்தொடர்பு கொள்க

March 19, 2010 4:58 PM//

தயாரிப்பாளர் எல்லாம் என்னைய தொடர்பு கொள்ளுங்க

Chitra said...

கலக்கல் லக லக பதிவு. :)

வில்லன் said...

வந்துட்டோம்ல.... இருங்க அந்த அருவாவ கொஞ்சம் தீட்டிட்டு வந்துர்றேன்......அப்ப தான் சரியாய் போட்டு தாக்க முடியும்......

வாரக்கடைசி தண்ணிய போடுற நேரம்... பின்னுட்டத்த போட்டுட்டு போயி தண்ணி போடலாம்....

வில்லன் said...

//வாரம் ஒரு முறை பதிவர் சந்திப்பு என்ற பெயரில் கடற்கரையிலோ, இல்லை உலகத் திரைப்படம் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகத்தின் மாடியிலோ சந்தித்து அளவளாவி வருகின்றனர். //

குட்டி புட்டியோடவா????? அட்லீஸ்ட் கடிச்சுக்க "சைடு டிஷ்" கோழி, காடை, கவ்தாரி, ஏறா, புறா, நண்டு, சுறா எதாவது கெடைக்குமா???????.....சும்மா சலம்பளுக்கு மட்டும்னா நான் வரல......

வில்லன் said...

//முகிலன்: வாங்க நசரேயன் இங்கிட்டு உக்காருங்க
நசரேயன்: நன்றி பாண்டியரே. பாத்திங்களாய ஒரு பாண்டியருக்கு ஒன்னொரு பாண்டியாரு தான் உதாவி செய்யறாரு//

ரொம்ப பாசமா "அண்ணாச்சி முகிலன்" பக்கத்துல உக்கார கூபிடுரத பாத்தா எதோ "உள்குத்து" இருக்குறாப்புல தெரியுது.... பாத்து.... சம்மணம் போட்டு உக்காராம குத்த வச்சு மட்டும் உக்காரும் நசர்....அப்பத்தான் எந்திரிச்சு ஓட வசதியா இருக்கும்.....

வில்லன் said...

//குடுகுடுப்பை: நான் தான் வரச் சொன்னேன். அவரு பல பதிவர் கூட்டம் பாத்திருப்பாரு. அவர்கிட்ட ஐடியா கேக்கலாம்னு.//

ஓ!!!!!!!!!!!!!! அது "ஐடியா"வா நான் தப்பா "ஜட்டி கேக்கலாம்னு" படிச்சுட்டேன்........அதான் ஒரே கொழப்பம் கோவணம் கட்டுறவங்க எல்லாம் ஏன் ஜட்டிய பத்தி பேசுராங்கன்னு.....

வில்லன் said...

//பழமை பேசி: வந்துவிட்டேன். தொழில் நிமித்தமாக பாசுடன் நகரம் வரை செல்ல வேண்டியிருந்தது. விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திரும்பி வரும் விமானம் தாமதமாகிவிட்டது.


அதுசரி: ஆமா இப்ப என்ன சொன்னீங்க? கொஞ்சம் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் செய்யுங்க?//

சரியா கேட்டிங்க அதுசரி!!!! இதேதான் நான் பண்ணினேன்..... அண்ணாச்சி "பழமை" கூட பேசுறப்ப மொழிபெயர்க்க என்னோட வேலை செய்யுற இலங்கை நண்பரை கூட்டியாந்துட்டேன்.....ஸ்பீக்கர் போன்ல போட்டு இலங்கை நண்பர் எனக்கு மொழிபெயர்த்து சொன்னாரு.....

வில்லன் said...

//அதுசரி: ஆமா இப்ப என்ன சொன்னீங்க? கொஞ்சம் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் செய்யுங்க?


குடுகுடுப்பை: மப்பு ஏறிட்டா அப்பிடித்தான். //

குடுகுடுப்பைக்கு ஊத்திகொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.... பாட்டில் தெறந்து காட்டினாலே போதும்..... மூடிய மோந்து பாத்தாலே அவரு கவுந்துருவாறு.......

வில்லன் said...

//பழமை பேசி: சரி தம்பிகளா, நாம இங்க எதுக்குக் கூடியிருக்கோம்?//

குடிச்சுட்டு கூத்தடிக்க கூடி இருக்கோம்.......இதுகூட தெரியாம "பிளைட்" ஏறி வந்துட்டாரு "பழமை"........ நல்ல காமெடி போங்க........

வில்லன் said...

//குடுகுடுப்பை: கேளுங்க கேளுங்க. நம்ம சந்திப்பு ஊரெல்லாம் பேசப் படணும். நாம சந்திப்புல சாப்புடுற ஐட்டங்களைப் பாத்து ஊருல இருக்குற எல்லாருக்கும் நாக்குல எச்சி ஊறனும். ஆமா.//

குடுகுடுப்பையின் சோத்து மேல உள்ள நாட்டம் ம்மேண்டும் நிரூபணம் ஆகிறது..... வாழ்த்துக்கள்.... சோறு கண்ட இடம் சொர்க்கம்....

வில்லன் said...

//குடுகுடுப்பை: இன்னொரு தடவை அத சந்திப்புன்னு சொன்னீங்க கெட்ட கடுப்பாயிரும். நாலு பேரு - வெறும் நாலு பேரு மட்டும் சேந்த்து சரக்கடிச்சிட்டு கோழி பிரியாணி சாப்புடதுக்குப் பேரு சந்திப்பாய்யா?
வில்லன்: யோவ் உமக்கு பிரியாணி குடுக்கலைங்கிற கடுப்புல இப்பிடியெல்லாம் பேசக்கூடாது.//

அவரு (குடுகுடுப்பை) என்னைக்கு வந்துட்டு பிரயாணி சாப்பிடாம போனாருன்னு சொல்ல சொல்லுங்க பாப்போம்....சரக்கு வேணும் அடம் புடிப்பாரு மூடிய தெறந்தவுடனே போதும் போதும் எனக்கு நல்லா ஏறிடுச்சு திரும்ப வண்டிய வீட்டுக்கு ஓட்டிட்டு போகணும் போதுன்னு சொல்லிட்டு கவுந்துருவாறு ....

வில்லன் said...

//குடுகுடுப்பை: பின்னூட்டம் மட்டும் போடுறவுங்கள எல்லாம் பதிவர் சந்திப்புல சேக்கப்படாது
முகிலன்: அட இருக்கட்டும் தலைவா. கூட்டம் சேக்க வேணாமா?//

எதிர் கவுஜ மட்டுமே போட்டு கடைய ஓட்டுற அவரு மட்டும் வரலாமோ......?????? எதிர் கவுஜ மட்டுமே போடுற அவர சேக்கலாம்னா என்னையும் சேத்துதான் ஆகணும்.....இல்ல கொலை விழும்...

வில்லன் said...

//ஈரோடு கதிர்: மௌனம் கசிகிற இந்த மாலை வேளையிலே நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்?//

ஹும் சரசம் ஆடி சல்லாபம் பண்ண....வந்துட்டாருய்யா நிதியானந்தரோட வாரிசு.....

வில்லன் said...

//ஈரோடு கதிர்: அப்புறம் மைக் செட்டு, எட வாடகை, சாப்பாட்டுக்கெல்லாம் லோக்கல் பதிவர்கள் மட்டும் பங்கெடுத்துக்கனுமுங். யாராவது லாட்ஜ் வச்சிருக்கிற பதிவராப் பாத்துக்கிட்டீங்க்ன்னா லாட்ஜ் வாடகை மிச்சமுங்.///

நல்ல பெரிய கதவு இருக்குற எடமா பாருங்க...... அப்பத்தான் காத்து வரும்... வாத்து எல்லாம் வரமுடியும்......வாத்து வந்தா தான் "ஆத்தி இது வாத்து கூட்டம்" ரஞ்சிதா வருவாங்க.....

வில்லன் said...

/குடுகுடுப்பை: இதெல்லாம் செஞ்சிரலாம். ஆனா எப்பிடி இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்துறது?//

ரொம்ப ஈஸி....பதிவர் கூட்டத்துக்கு நிதியானந்தரையும் ரஞ்சிதாவையும் "சிறப்பு விருந்தினரா" கூப்பிட்டா கூட்டம் அலைமோதும்....

வில்லன் said...

///
முகிலன்: அப்பிடியும் பரபரப்பாவலைன்னா, நம்ம வில்லன சரக்கடிச்சிட்டு விழாவுல சலம்ப வச்சிரலாம். அதக் கண்டிச்சி ஒரு நாலு பேரு ஆதரிச்சி நாலு பேருன்னு பதிவு போட்ரலாம்.
//

வில்லனுக்கு எதுக்குய்யா சரக்கு?? ஒல்டு மங்க் அப்பிடின்னு ஒரு பேப்பர்ல எழுதி காமிங்க...அவருக்கு அதுலயே போதை ஏறிடும்... ///

நான் என்ன குடுகுடுப்பையா???? மோந்து பாத்ததுமே கவுந்தடிக்க.......

புலவன் புலிகேசி said...

உஷ்........

க.பாலாசி said...

//அதுசரி: அதுக்கு நான் விசத்தையே குடிப்பேன்//

குட்... டிஸிசன்...

கும்முறதுக்கு டைம் இல்ல... வரேன்...

Thenammai Lakshmanan said...

முகிலன் ரொம்ப நல்ல இருக்கு சிரிச்சு சிரிச்சு மாளல..:)))))

பனித்துளி சங்கர் said...

என்ன நம்ம பெயரைகாணமே நான் கோபமா போறேன் போங்க !

வில்லன் said...

//
அது சரி said...

//
அதுசரி: ஓ மண்ணு லாரியா இது. அப்ப சரக்கடிச்சிட்டு லேசா சரிஞ்சிக்கலாம்.
//

என்ட இமேஜ் டோட்டல் டேமேஜ்..... எல்லாரும் ஈமெயில் பண்ணி நீங்க அப்பிடியான்னு கேக்குறாங்க...

இதுக்கு மான நஷ்ட ஈடு வழக்கு போடலாம்னு வக்கீல கேட்டா இல்லாதது நஷ்டமானதுக்கெல்லாம் கேஸ் போட முடியாதுங்கிறான்...நான் ஒரு நல்ல வக்கீலா பார்த்துட்டு வந்து வச்சிக்கிறேன்...

முகிலன், காசை ரெடி பண்ணிட்டு தயாரா இருங்க... //





அதான டாஸ்மார்க்ள மருந்தடிசுட்டு ரோட்டோரம் இல்ல தெருவுல கெடக்குற நம்மள போயி மண்ணு லாரில சரிய சொன்ன எப்படி..... நமக்கு புடிச்ச ரோட்டோரம் இல்ல தெருவுல சரிஞ்சா தான நமக்கு பெரும!!!!! என்ன அதுசரி சரிதான....இதுக்காகவாவது நாம கேஸ் போட்டே ஆகணும்.... விட்டுராதிங்க....

வில்லன் said...

/

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

என்ன நம்ம பெயரைகாணமே நான் கோபமா போறேன் போங்க ! //
அதான் சொன்னோம்ல........ இங்க நல்ல வெயில் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு அதுல பனித்துளி காணாம போச்சுன்னு.....சொன்ன கேட்டுக்குங்க.... திரும்ப திரும்ப உயிரை வாங்காதிங்க....

பித்தனின் வாக்கு said...

// இதுக்கே அதிர்ச்சியாகிட்டா எப்புடி? சங்கமத்துக்கு அணுகுண்டெல்லாம் வச்சிருக்கோம்ல? //

நல்ல பதிவு, ஒரு மூனு ரூவா இருந்தா கொடுங்க. ஜெலுசில் மாத்திரை வாங்கனும். (என்னது டாலர் தர்றீங்களா? அது எல்லாம் கழுத்துல மாட்டுற பழக்கம் இல்லிங்க). சிரிச்சு சிரிச்சு வயித்து வலி வந்துருச்சுங்க. பதிவு சூப்பர்ன்னா அதை வீட பின்னூட்டங்கள் ஜீப்பருங்க.

முடியல்லை, வேணாம், வலிக்குது, இதுக்கு மேல சிரிக்க முடியாது. சொல்லிட்டன்.

சங்கம நேரடி ஒளிபரப்புக்கு வெயிட்டிங். ஆமா அதுல இடைவேளை விளம்பரத்துல நம்ம ஜெனிபர் லோபஸ் எல்லாம் வருவாங்களா?

குடுகுடுப்பை said...

என்ன நடக்குது இங்கே, அதுவும் வில்லன் ரொம்ப ஓவரா போறாரு.