Sunday, August 30, 2009

கந்தசாமி - விவாதம்

உலகெங்கிலுமிருந்து என் வலைப்பூவை படித்து ரசிக்கும் கோடானுகோடி வாசகப்பெருமக்களே!
(என்னவோ இந்த வலைப்பூவை ஒரு நாளைக்கு நானூறு பேரு பாக்குறாங்கன்னு இவனுக்கு மனசுல நெனப்பு)

இப்போது சினிமா சம்மந்தப்பட்ட பதிவுலகத்தில் சூடான விஷயம் கந்தசாமி நொந்த சாமியானதுதான்.

பலர் மிகவும் இலக்கியத்தரமான படங்களை மட்டுமே பார்ப்பவர்கள் என்று நினைத்துக்கொண்டு கந்தசாமியை அடித்துக் கிழித்து கந்தல்சாமியாக்கிவிட்டார்கள்.
இவர்களில் எத்தனை பேர் நாடோடிகள், பசங்க, சுப்ரமணியபுரம், பருத்திவீரன் படங்களை பாராட்டி பதிவு போட்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. இது சம்மந்தமாக பல விவாதங்களும் நடக்கிறது. இதற்கு ஒரு தீர்ப்பு வழங்குங்கள் என்று நமது பட்டிமன்ற நடுவர் பாலமன் ஆப்பையாவை அழைத்துக் கொண்டு வந்துள்ளோம். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
இனி ஓவர் டூ பாலமன் ஆப்பையா.

பெரியோர்களே, தாய்மார்களே. எல்லாருக்கும் வணக்கம். இது ஒரு சிக்கலான விவாதம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணு சொல்லுராங்க. முத குரூப்பு என்ன சொல்லுதுன்னா - சினிமா ஒரு இலக்கியம். ஊடகம். அந்த ஊடகம் மூலமா மக்களுக்கு நல்ல விசயங்க தான் போய் சேரணும். அப்படிப்பட்ட சினிமாவ பணம் சம்பாதிக்க மட்டுமே உபயோகப்படுத்தி மக்கள முட்டாளாக்க முயற்சி செய்றாய்ங்க அப்பிடின்னு இந்த குரூப்பு சொல்லுது.

இவங்க சொல்றதும் நியாயமாத்தான்யா இருக்கு. காசு குடுத்து படம் பாக்க வர்றேன். அப்படி வரும்போது ஏற்கனவே நான் காசு குடுத்து பாத்த நாலு படத்த திரும்பவும் வேற நடிகர்கள வச்சு எடுத்து ஓட்டுனா நான் என்னய்யா பண்ணுவேன்? ஏதோ இந்த ஷ்ரேயா புள்ள மிய்யாவ் மிய்யாவ்னு ஒரு துண்ட கட்டிட்டு பாடிச்சு நான் குடுத்த காசுல 25% சரியாப் போச்சு. மிச்ச காசு எங்கய்யா?

இப்ப இன்னொரு குரூப்பு என்ன சொல்லுது? சினிமாங்கறது பொழுதுபோக்குக்கு. நான் வீட்டுலயும் வேலையிலயும் உளச்சல் தாங்க முடியாம சினிமாவுக்கு வர்றேன். இங்கயும் நண்பன் துரோகம் பண்ணுறான், காலு போக காதல சேத்து வச்சா பிரிஞ்சி போயிடுறாய்ங்க, வீட்ட விட்டு ஓடிப்போன புள்ளகள தேடி கண்டுபிடிச்சி வந்து பிரிச்சுப்புடுறாய்ங்க.. இப்பிடி வெளிய இருக்குற கவலையோட இந்த கவலயும் சேந்துப்புடுது.. இப்பிடி படம் பாக்குறதுக்கு ஏதோ கந்தசாமிக்கு வந்தோமா, விக்ரம் கோழி மாதிரி பறக்குறத பாத்தமா, ஷ்ரேயா புள்ள துண்ட கட்டிட்டு ஆடுறத பாத்தமானு மூணு மணி நேரத்த செலவு பண்ணிப்புட்டு வெளிய வரவும் மறுபடி வீடு வேலைன்னு கவலயப்பட்டுக்கிட்டு போயிட்டே இருப்போம்ல.. இப்பிடின்னு இந்த குரூப்பு சொல்லுது. அதுவும் சரிதானய்யா?

ஆக இவிங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு அவிங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு. அப்ப என்னதான் பண்ணுறது? இப்போ வர்றாய்ங்கய்யா மூணாவது குரூப்பு.. அவிங்க என்ன சொல்றாய்ங்க?
எங்களுக்கு சினிமா பத்திரிக்க மாதிரி. நாங்க ஆனந்த விகடன், குமுதமும் படிப்போம், கணையாழி மற்றும் பல சிற்றிலக்கியங்களையும் படிப்போம், சரோஜாதேவியும் படிப்போம். ரஜினி ஸ்க்ரீன்ல வந்தா விசிலடிச்சு தேங்கா உடச்சு கொண்டாடவும் செய்வோம், விக்ரம் கால இழுத்து இழுத்து பாண்டிமட வேனுல ஏறும்போது மனசுக்குள்ளயே அழுதுக்கிட்டு மௌனமா எந்திரிச்சும் வருவோம், மலையாள படத்துக்குப் போயிட்டு பிட்டு போடலன்னு ஆபரேட்டர திட்டிப்புட்டும் வருவோம். எங்களுக்கு தேவ சினிமா. அத நீ எப்பிடி குடுத்தாலும் நாங்க ஏத்துக்குவோம்னு. இவிங்கள என்னான்னு சொல்லுறது?

இப்ப நம்மள வேற இங்க இழுத்து உட்டுட்டாய்ங்க.. தீர்ப்பு சொல்லுங்கன்னு. என்னத்த சொல்லுறது? எங்க வூட்டு அம்மாக்கிட்ட கேட்டேன். அது சொல்லிச்சி, அடுத்து எடுக்கப்போற படத்துல சான்ஸு குடுக்குறதா சங்கரும் சசிகுமாரும் சொல்லியிருக்காய்ங்க. இந்த நேரத்துல நீங்க யாருக்காவது சாதகமா தீர்ப்பு சொல்லப்போக இன்னொருத்தரு கோவிச்சிக்கிட்டு பொழப்புக்கு பங்கம் வந்துடப்போவுதுன்னு. அது சொல்லுறதும் நியாயமாத்தானய்யா இருக்கு..

அதுனால, பெரியோர்களே தாய்மார்களே, இது உங்க காசு, உங்க நேரம். நீங்க என்ன படத்த பாக்கணும்னு நினைக்கிறீகளே அதப்போயி பாருங்க. யாரு சொல்லுறதயும் கேக்காதீங்க. தியேட்டர்ல பூட்டிட்டு தண்ணி தெளிச்சி, தண்ணி தெளிச்சி அடிச்சாய்ங்கன்னா வாங்கிக்கிங்க. மால போட்டு மரியாத பண்ணா அதயும் வாங்கிக்கிங்க என்று சொல்லி இந்த விவாதத்தை முடித்து வைக்கிறேன். நன்றி வணக்கம்.

4 comments:

ஷங்கி said...

//அதுனால, பெரியோர்களே தாய்மார்களே, இது உங்க காசு, உங்க நேரம். நீங்க என்ன படத்த பாக்கணும்னு நினைக்கிறீகளே அதப்போயி பாருங்க. யாரு சொல்லுறதயும் கேக்காதீங்க.//
சரியில்லையே! தங்கமணிங்க என்ன சொல்றாங்களோ அந்தப் படத்தைப் போய்ப் பாருங்கன்னுல்ல இருக்கணும் அப்பதான் தீர்ப்புக்கு இசப்பாட்டா இருக்கும்!

மந்திரன் said...

பய புள்ள , எப்படி பால் போட்டாலும் கோல் அடிகிறீன்களே !
அரசியலில் அனுபவம் அதிகமோ ?

Unknown said...

சங்கா
மந்திரன் - வருகைக்கு நன்றி.

சங்கா, தங்கமணி அனுமதி இல்லாம நல்ல படமோ நொள்ள படமோ பாக்கத்தான் முடியுமா? இல்ல பாத்துட்டு வூட்டுக்குத்தான் வரமுடியுமா?

Unknown said...

https://www.blogger.com/comment.g?blogID=6412661244877149245&postID=235203535566181244&page=1