Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Monday, February 7, 2011

என் பேரை மாத்த நீ யாரு மேன்?

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வாழும் என்னைப் போன்றோர் பலருக்கு இருக்கும் ஒரு சொல்லவொணாத் துயரம் பெயரை உச்சரிக்கச் சிரமப்படும் வெளிநாட்டினர். ரவியை ராவி என்றும், ஹரியை ஹேரி என்றும் கூசாமல் உச்சரிப்பார்கள்.

இதில் நம் ஆட்களையும் சொல்லவேண்டும். தன் அப்பா அம்மா வைத்த ஒரு பெயரைக் கொலை செய்கிறார்களே என்ற எண்ணம் இல்லாமல் திருஞானசம்மந்தம் என்ற அருமையான பெயரை திரு என்று சுருக்கி அழைக்க வைக்கக் கூட முயற்சிக்காமல் க்ரிஸ் என்று அழைத்தாலும் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது?

என் நண்பர் ஒருவர் அவர் மகனின் விக்னேஷ் என்ற பெயரை vignesh என்று ஸ்பெல்லாமல் viknesh என்று ஸ்பெல்லியிருந்தார். ந்யூமராலஜியா என்று கேட்டதற்கு, இல்லை, இங்கெ பெயரைச் சுருக்கி அழைப்பது இவர்களின் வழக்கம். vig என்று அழைத்தால் நன்றாக இருக்காது, vik என்று அழைத்தால் பரவாயில்லை அல்லவா, அதான் என்றார். இன்னொரு குடும்பம் ஸ்ரீஹரி என்ற பெயரை பையனே ஸ்ரீஹாரி என்று சொல்லவும், ரிதன்யா என்ற பெயரைப் பெண்ணே ரிடான்யா என்று சொல்லவும் பழக்கிக் கொடுத்திருக்கின்றனர்.

நானெல்லாம் என் பெயரை சொல்லத் திணரும் போது பத்து நிமிடம் செலவழித்தாவது தினேஷ் என்று சொல்லவைத்துவிடுவேன். ஓரிருவர் உன்னை டின் என்று அழைக்கலாமா என்று கேட்கும்போதும் இல்லை தினேஷ் என்றே அழையுங்கள் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர். அவர் பெயர் விஜயஹரன். புதிதாகச் சேர்ந்த அவரது மேனேஜர் ஒரு வெள்ளைக்காரன். அவன் பெயர் ஜான். அவன் இவரது பெயரை அழைக்க சிரமப் பட்டுக் கொண்டு “ஐ ஏம் கோயிங் டு ரீனேம் யு டு ஜோ டு மை கன்வீனியன்ஸ்” என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறான். இவரும் ஒன்றும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.

அடுத்த நாள் காலை அவன் இவரிடம் வந்து “குட் மார்னிங் ஜோ” என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கவும், இவர் பதிலுக்கு “குட் மார்னிங் சுப்ரமணியம்” என்று சொல்லியிருக்கிறார். அவன் பேஸ்தடித்து “நோ நோ மை நேம் இஸ் ஜான்” என்று சொல்ல, அதற்கு இவர் “யா ஐ நோ. பட் ஐ ரீனேம்ட் இட் டு மை கன்வீனியன்ஸ்” என்று சிரிக்காமல் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு, அவன் கஷ்டப்பட்டு அவரது பெயரை ப்ராக்டீஸ் செய்து விஜயஹரன் என்றே அழைத்திருக்கிறான்.

டிஸ்கி 1: வெள்ளைக்காரனை அவன் என்றும் நம்மாளை இவர் என்றும் அழைத்தது குழப்பம் வராமலிருக்கவேயன்றி ரேஸிசம் எதுவும் இல்லை என்று அறிக.

டிஸ்கி 2: இது கால் செண்டர் போன்ற வேலை நிமித்தம் பெயர் மாற்றியே ஆகவேண்டியவர்களுக்கானது இல்லை என்றும் அறிக. 

Sunday, December 5, 2010

நானும் தமிழ்மணம் விருதுகளில்..

நான் வலைப்பதிவு ஆரம்பித்த நாள் முதலாய் என்னைப் பின் தொடர்ந்து என் ஆயிரக்கணக்கான பதிவுகளை வாசித்து ஓட்டுப்போடு பின்னூட்டம் போட்டு என்னை குஷிப்படுத்தி வந்த வாசகப் பெருமக்களே.. இப்போது மீண்டும் ஒரு முறை உங்கள் அபிமான எழுத்தாளருக்கு (நான் தாங்க) உங்கள் ஆதரவைத் தெரிவிக்க மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு.

தமிழக வலையுலக வாசகர்களுக்கு வலைப்பதிவுகளைத் திரட்டித் தரும் உன்னதப் பணியை செய்து வரும் தமிழ்மணமானது கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் விருதுகளுக்கான பரிந்துரைகளை ஏற்கத் துவங்கியுள்ளது. இந்தப் பரிந்துரைகளை வாசகர் பார்வைக்கு வைத்து ஓட்டளிக்கும் உரிமையையும் வழங்க உள்ளது. அதில் என் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம் என்றிருக்கிறேன்.

இந்த முடிவை நான் எடுத்ததால் எனக்கு முன்னால் இருப்பது ஒரு இமாலயப் பணி. இந்த ஆண்டில் நான் எழுதிய நூற்றுக்கணக்கான இடுகைகளில் மூன்று பிரிவுகளுக்குச் சிறந்த இடுகைகளைத் தேர்ந்தெடுக்கும் சிரமத்தில் ஆழ்ந்திருக்கிறேன். நான் எழுதிய எல்லா இடுகைகளுமே ஆகச்சிறந்த படைப்புகளாக இருப்பதால் என் அன்பிற்கினிய வாசகர்களாகிய உங்களின் உதவி தேவைப்படுகிறது.

இதோ நான் என் படைப்புகளை சமர்ப்பிக்க இருக்கும் பிரிவுகளும் என் படைப்புகளும் கீழே உங்கள் பார்வைக்கு. இதில் எந்த எந்த படைப்புகளைப் பரிந்துரைக்கலாம் என்று நீங்கள் சொல்லுங்கள். அதிகம் பேர் பரிந்துரைக்கும் படைப்புகளை நானும் சமர்ப்பிக்கலாம் என்று இருக்கிறேன்.

1. நகைச்சுவை / கார்ட்டூன்.

அ. ரஜினியும் முதல்வன் பட வசனமும்
ஆ. சர்வதேச பதிவர் சங்கமம் நிகழ்ச்சி நிரல் மற்றும் அழைப்பிதழ்
இ. இந்தி, போலி டாக்டர் மற்றும் பல்புஸ்ரீ
ஈ. என்.சி.சி குடியரசு தின சிறப்புப் பதிவு
உ. செஷல்ஸ் தீவில் பல்பு (மறுபடியும் முதல்ல இருந்தா அவ்வ்வ்வ்)

2. படைப்பிலக்கியம் (கதை, கவிதை போன்றவை)

a. தற்கொலை - சற்றே நீளமான சிறுகதை
b. களவு
c. ஆயுதம்
d. யார் தீவிரவாதி
e. திரௌபதியின் அட்சயப் பாத்திரம்
f. கம்பரும் மல்டி டாஸ்கிங்கும்

3. விளையாட்டு, உடல் ஆரோக்கியம்
i) ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி மற்றும் கனிஷ்கா பாலச்சந்திரன்
ii) ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு
iii) ஹாக்கியை நேஷனல் கேம்னு எவண்டா சொன்னது? 
iv) கிரிக்கெட் தொடர்பதிவு

எதைச் சமர்ப்பிக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அவற்றுக்கு எதிராக இருக்கும் எண்களை ஒவ்வொரு பிரிவிலும் ஒரு இடுகை என எடுத்து கீழ்க்கண்டவாறு ஆ-a-iv என்பது போல பின்னூட்டத்திலோ, தனி மடலிலோ, பஸ்ஸில் கமெண்டாகவோ அளிக்கவும்.

மறுபடியும் உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி.

Sunday, November 21, 2010

இப்போ இதுதான் ஃபேஷனாம்..

திருமணத்தை ஏற்றுக்கொண்டவர்கள் லிவிங் டுகேதரை எதிர்த்தே ஆக வேண்டுமா? 
லிவிங் டுகேதரை ஆதரிப்பவர்கள் எல்லாம் திருமணத்தை எதிர்ப்பவர்கள் என்ற அர்த்தமா? 
லிவிங் டுகேதரை ஏன் திருமணத்துக்கு மாற்றாகவே கருதுகிறார்கள் - இரண்டு பக்கம் நின்று பேசுபவர்களும்?


******************************************************************************************************


தனி மனிதத் தாக்குதல் என்பது என்ன?

ஒருவரின் பெயர் போட்டு அவரின் கருத்துகளுக்கு எதிர் கருத்து எழுதுவதா?

இல்லை ஒருவர் கூறிய கருத்துகளுக்கு அவர் பிறப்பும் சாதியுமே காரணம் என்று சொல்வதா?

#டவுட்டு



*******************************************************************************************************


ட்விட்டரில் வாந்தியெடுக்கும் அஜீரணக்காரர்கள்

சமீபத்தில் சில “தோழர்”களின் ட்விட்களைப் பார்க்க நேர்ந்தது. பெண்ணுரிமைக்குப் போராடும் போராளிகளான இந்த வீரர்கள் ஒரு பெண்ணை இழிசொற்களால் பகடி செய்து விளையாடுகிறார்கள். இவர்கள் காப்பாற்றும் பெண்ணுரிமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

இதில் இவர்களோடு திடீர் புளியோதரை, திடீர் லெமன் சாதம் போல திடீர் தோழரான இன்னொரு பெண்ணும் சேர்ந்து கும்மியடிக்கிறார். இந்த லட்சணத்தில் அவர் தனக்கொன்று நேர்ந்ததும் என்னைக் கையப் புடிச்சி இழுத்துட்டான் என்று ஊரெல்லாம் ஒப்பாரி வைத்தவர். இவருக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு தக்காளி சாஸ் என்று நினைத்துவிட்டார் போலும்..

யோக்கியன் வரான். சொம்ப எடுத்து ஒளிச்சி வையுங்க..



**********************************************************************************************************


பஸ்ல டிவிட்டர்ல போட்ட போஸ்டை எல்லாம் வெட்டி ப்ளாக்ல ஒட்டுறதுதான் இப்போ லேட்டஸ்ட் ஃபேஷனாமே? மேல இருக்கிறதெல்லாம் நம்ம பஸ்ஸு

Monday, September 20, 2010

தி.கு.ஜ.மு.க (ரகசியப்) பொதுக்குழுக் கூட்டம்

பல முறை சலிக்கச் சலிக்கப் பார்த்த நயகரா. நதியின் இரண்டு புறமிருந்தும் அருவிகளைப் பார்த்து ரசித்தாயிற்று. ஆனாலும் முகிலன் பிறந்த பின்னால் ஒரு முறை கூட போனதில்லை என்பதால் இந்த வருடம் சீசன் முடிந்ததும் (கூட்டம் குறைந்ததும்) போகவேண்டும் என்று முடிவெடுத்திருந்தோம்.

சொல்லி வைத்தாற்போல டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து ஒரு அழைப்பு. நான் நயகரா வருகிறேன். சந்திக்கலாமா? தலைவரிடமிருந்து அழைப்பு வந்ததைத் தட்ட முடியுமா? சரி என்று போக முடிவெடுத்து விட்டோம். 

முதல் நாள் மாலை பஃபலோ (ஊர் பேர்தானுங்க) வந்து சேர்ந்ததும் அழைத்து உறுதிப் படுத்திக்கொண்டார். அடுத்த நாள் காலை எழுந்து கட்டு சோறு கட்டிக் கொண்டு - நயகராவில் சீசன் நேரத்தில் நல்ல சிற்றுண்டி சாலைகள் இல்லை. ஜன்க் ஃபுட் சாப்பிடுவது ஓக்கே என்றால் கவலைப் படாமல் போகலாம். ஆகவே நாங்கள் எப்போது கட்டு சோறு எடுத்துச் சென்று விடுவது - கிளம்பினோம்.மாங்காய் சாதமும், தயிர் சாதமும். எங்களுடன் இன்னொரு ஜோடியும் வருவதாக இருந்தார்கள். அவர்கள் காய்கறிகள் செய்து வந்தார்கள். 

திட்டப்படி காலை 10 மணிக்கு காரில் ஏற வேண்டும். ஆனால் இந்திய பங்க்சுவாலிட்டி படி 11மணிக்குக் காரில் ஏறி கிளம்பினோம். முகிலனுக்கு மோஷன் சிக்னெஸ் உண்டு (பரம்பரை சிக்னெஸ்). சொல்லி வைத்தாற்போல பஃபலோவை நெருங்கும் போது வாயிலெடுத்துவிட்டார். அப்புறம் அங்கேயே ஓரத்தில் காரை நிறுத்தி சுத்தம் செய்து கொண்டு நயகராவை நெருங்கினால் ட்ராஃபிக் ஜாம். அங்கே கிட்டத்தட்ட 45 நிமிடம் வெட்டியாய் செலவு செய்த பின் மணியைப் பார்த்தால் 1:00. 

ஜம்பமாக சாப்பாடு எடுத்து வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டோமே. இப்போது அவர்கள் பசியில் இருப்பார்களே என்று வேகவேகமாக காரை ஓட்டி கோட் ஐலண்டை நெருங்கும்போது மணி 1:30. குடுகுடுப்பைக்கு தொலைபேசினால், கேவ் ஆஃப் த விண்ட்ஸ்ல இருக்கோம். அங்கயே வந்துருங்க என்றார். நாங்களும் அங்கேயே போய் காரை பார்க் செய்து விட்டு அங்கே ஒரு ஓரமாக இருந்த பெஞ்சுகளில் எங்கள் கையிலிருந்த பார்சல்கள அத்தனையையும் வைத்து விட்டு பார்த்தால், அங்கே ஒரு கூட்டம். மறுபடியும் தொலை பேசினேன்.

“குடுகுடு, இங்க ஒரு கூட்டமே இருக்கு. நீங்க எங்க இருக்கீங்க?”

“அந்தக் கூட்டத்துலதான் இருக்கோம்.”

“அடையாளம் சொல்லுங்க.”

“மஞ்சக்கலர்ல பாஞ்சோ (ரெயின் கோட்) போட்டிருக்கோம் பாருங்க”


“அதுக்கு நான் திருப்பதியில போயி மொட்டை போட்டவங்களத் தேடுவேனே?”

“நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க”

“நாங்க இங்கதான் பெஞ்சில உக்காந்திருக்கோம்”

“சரி அப்ப நாங்க போயி கேவ் ஆஃப் த விண்ட்ஸ் பாத்துட்டு வந்துடுறோம்”

“சரி.”

வைத்துவிட்டு பதட்டத்தோடு உட்கார்ந்திருந்தேன். இதுவரை பார்த்திராத முகம். வலையுலகில் மட்டுமே பழக்கம். ஓரிரு முறை தொலைபேசியிருக்கிறோம். தங்கமணிக்கு பெரிய கவலை - ஹரிணியும், குடுகுடுவின் மாமியாரும் சாப்பிடாமல் இருப்பார்களே.

அரைமணி நேர காத்திருப்புக்குப் பின் வந்தனர். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக வந்தார். பார்த்ததும் புன்னகையையும் கைக்குலுக்கல்களையும் பரிமாறிக் கொண்டோம். பரஸ்பர அறிமுகம் முடிந்ததும் சாப்பிட உட்கார்ந்தோம். அவருக்கு நான்கு மணிக்கு ஃப்ளைட் பிடிக்கப் போக வேண்டியிருந்ததால் நிறைய நேரம் இருக்க முடியவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தில் வலையுலக அரசியல் பற்றியும் சமீபத்திய சர்ச்சைகள் பற்றியும் சிறிது நேரம் அலசினோம். என் மனைவி இந்தப் பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொண்டதைப் பற்றி பின்னர் தொலைபேசியில் ஆச்சரியப்பட்டுக் கொண்டார் குடுகுடுப்பை. 

குடுகுடுப்பையின் மாமியார் சளைக்காமல் பேசினார். அவருக்கு இந்தியாவுக்கு திரும்பிவிட வேண்டும். அங்கே குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை. அதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். 

அடுத்ததாக ஹரிணி, தன் நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசு எதாவது வாங்க வேண்டும் என்று சொல்லவும், அழைத்துக் கொண்டு போனோம். கடையையே அலசி கடைசியில் சில பேனாக்களும், கட் செய்த கற்களும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். முகிலன் வெட்கம் விட்டு சகஜமாக ஆரம்பித்தான். ஹரிணியும் முகிலனும் கொஞ்ச நேரத்தில் ஒட்டிக் கொண்டு விளையாட ஆரம்பித்துவிட்டனர். அதிலும் முகிலன் ஓட, நான் துரத்த, என்னை அவனைத் தூக்க விடாமல் ஹரிணி தடுக்க என்று இருவரும் என்னை நன்றாக ட்ரில் வாங்கினர். 

விடை பெறும் நேரம் வந்தது. அடுத்த முறை வரும்போது வீட்டில் தங்குவதைப் போல வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி விடை கொடுத்தோம். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். தலைவர் பகிரக்கூடாது என்று உத்தரவிட்டதால் பகிரவில்லை. (ஆனாலும் ஏன் அவரது அழகு முகத்தை யாருக்கும் காட்டக்கூடாது என்று நினைக்கிறாரோ தெரியவில்லை).

பார்த்த சிறிது நேரத்தில் நிறைய பேச முடியவில்லை தான். ஆனாலும் நீண்ட நாள் பழகிய ஒரு நண்பரைப் பார்த்த ஒரு மகிழ்ச்சி, ஒரு திருப்தி இருந்தது என்பதை மறுக்க முடியாது. இப்படி நல்ல நட்புகளைக் கொடுத்த வலையுலகிற்கு நன்றி. 

(பொதுக்குழுவில் என்ன பேசினீர்கள் என்று கேட்பவர்களுக்கு, அது தான் ரகசியப் பொதுக்குழுன்னு சொல்லியாச்சில்ல. அப்புறம் எப்பிடி அதை வெளிய சொல்வோம். தலைவர் சீக்கிரம் நடவடிக்கைகள் எடுப்பார். ஒன்றிரண்டு தலைகளின் பதவிகள் கைமாறலாம்). 

Thursday, August 19, 2010

புரட்சியாளன் ஆவது எப்படி? - ஒரு சிறு கையேடு

உங்களுக்கு இரண்டு கையேடுகள்.

அ. புரட்சி செய்வது எப்படி - அதை இங்கே பாருங்கள்.


ஆ. புரட்சியாளன் ஆவது எப்படி

1. தினமும் காலையில் செய்தித்தாளைப் பாருங்கள். 

2. அதில் சூடான செய்தி என்ன என்று பார்த்துக் கொள்ளுங்கள் 

3. அந்தச் செய்தியின் நாயகன் என்ன சாதி என்று போட்டிருக்கிறதா பாருங்கள் 

4. போடவில்லையென்றால் யாரையாவது வினவுங்கள் 

5. கணினியைத் திறந்து, இணையத்தை தொடர்பு கொண்டு, ஓசி ப்ளாக்கருக்குள் செல்லுங்கள் 

6. சூடான செய்தியை தலைப்பாகக் கொடுத்து, உங்களுக்குத் தோன்றியதை எழுதுங்கள். 

7. நடு நடுவே மானே தேனே பொன்மானே சேர்க்க மறக்க வேண்டாம். 

8. அந்த செய்தி நாயகனின் சாதியைப் பற்றியும் அந்த சாதித் தனத்தைப் பற்றியும் கடும் கண்டனம் வைக்க மறக்க வேண்டாம். 

9. மற்ற பதிவர்கள் இந்த விசயத்தைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று அவர்கள் பெயரைச் சேர்த்து கண்டியுங்கள் 

10. மறக்காமல் தமிழ்மணம்/இண்ட்லியில் உங்கள் இடுகையைச் சேர்த்து ஓட்டுப் போடுங்கள்.


11. மெய்ம்மறந்து எழுதிவிட்டு அடுத்த ஆளைக் கைகாட்டி விட்டுவிட வேண்டும்


12. நன்றாக காறி துப்பப் பழகிக்கொள்ள வேண்டும். அங்கிங்கெனாதபடி வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் துப்ப வேண்டும்.

புரட்சி

புரட்சி - ஒரு நாட்டின் அல்லது அமைப்பின் கட்டமைப்பில் குறைந்த காலத்தில் ஏற்படும் அடிப்படை மாற்றம் புரட்சி என்றழைக்கப்படும்.

நாம் பல புரட்சிகளை கடந்த நூற்றாண்டில் சந்தித்திருக்கிறோம்.

ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, கியூபப்புரட்சி, தொழில் புரட்சி, பசுமைப் புரட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

புரட்சி வருவதற்கு முக்கிய காரணங்களாவன - வர்க்கப் பேதம், வர்க்கச் சிந்தனை, வர்க்க மூலம் (ஒரு ஃப்ளோல வந்துருச்சி விடுங்க)

டிஸ்கி: புரட்சி பற்றி எழுதினால் ஹிட் கிடைக்காது என்று வெண்ணிற இரவுகள் கார்த்தி சொன்னதால் எழுதப்படும் ஒரு சோதனை முயற்சி. இதற்கு ஹிட் கிடைக்காவிட்டல் ஹிட் கிடைக்கும் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பேன் என்ற எச்சரிக்கையுடன் முடித்துக் கொள்கிறேன்.

Saturday, June 19, 2010

நியூட்டனின் மூன்றாம் விதி

தங்க்லீஷ்/இங்க்லீஷ்

இணையத்தையும் ப்ளாக்கரையும் கண்டுபிடித்தவன் வெள்ளைக்காரன். அதனால் தான் உரலிகள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. ஆனால் நாம் என்ன செய்கிறோம். அந்த ஆங்கில உரலிகளையும் நம் வலைப்பூவின் தலைப்புகளையும் தங்கிலீஷில் வைக்கிறோம். அது சரியா? அது ஆங்கிலத்துக்கு சரியான மரியாதை கொடுப்பதாக இருக்குமா? அதனால் என்னால் முடிந்த அளவுக்கு சில பிரபலப் பதிவர்களின் பதிவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன்.

பிரியமுடன் வசந்த் - வசந்த் - With Love Sprin by Sprin

கசியும் மௌனம் - கதிர் - Leaking Silence by Ray

பாமரன் பக்கங்கள் - வானம்பாடிகள் - Simpleman's Pages by SkySingers


முகிலனின் பிதற்றல்கள் - முகிலன் - Cloudman's blabbering by Cloudman


கலகலப்ரியா - ப்ரியா - Jovial Lovely by Lovely


மணியின் பக்கங்கள் (எழிலாய்ப் பழமைபேச) - பழமைபேசி - Bell's Pages (To beautifully speak about past) PastSpeaker


குமரன் குடில் - சரவணக்குமரன் - Son's Hut - The Son of the Handsome


பொன்னியின் செல்வன் - கார்த்திகைப் பாண்டியன் - Goldie's Son - August Tamilan

அடுத்த செட் மொழிபெயர்ப்பு அடுத்தடுத்த பதிவுகளில்


தீவிரவாதப் பன்னாடைகள்

வணக்கம் தோழர்களே! நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பதிவை எழுதுகிறேன். இந்தியப் பயணம் இரவுபகலாகச் செனறதால் கடந்த பல நாட்களாக செய்தித்தாள் எதையும் படிக்கவில்லை. அதனால் இந்தியாவில் நடந்த பிரச்சனைகள் எனக்குத் தெரியவில்லை. நேற்று என் மைத்துனன் மூலம் “காந்தி” பிரச்சனை தெரியவந்தது. அது குறித்த பதிவுகள் பல இடங்களில் இருந்தாலும் ஒரு படம் பார்த்து அதைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

இந்தியாவும் மற்ற மேலை நாடுகளைப்போலவே சாக்கடையாக்த்தான் மாறிக்கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு பெண்ணைப் பழிவாங்கும் நோக்கிலேயே தீவிரவாதிகள் இந்த செயலை செய்திருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. ஆனால் இது ஒரு பெண்ணைப் பழிவாங்கும் செயல் மட்டுமல்ல. ஒரு இயக்கத்தையே அவமானப்படுத்தும் நிகழ்வு.

அவரின் பாதுகாப்பாளன் என்ற ஒரு மிருகம் ஒரு புண்ணிய ஆத்மாவைக் கொலைசெய்திருக்கிறது. இதுவே என் பார்வை. இதை ஒரு கட்சியின் பிரச்சனை என்று கறை பூசாதீர்கள். நம் அனைவருக்கும் நேர்ந்த இழப்பு என்று எண்ணுங்கள். அவர்கள் தனிப்பட்ட விரோதம் தனி இடத்தில் தாக்கிக் கொண்டார்கள் என்றால் அது பற்றி நாம் கவலை கொள்ளப் போவதில்லை.

ஆனால் இந்தப் பிரச்சினை நடந்திருப்பது நம் நாட்டில் தலைநகரில் ஒரு பொது இடத்தில். அதுவும் சக இந்தியனுக்கு சக இந்தியனால் நிகழ்ந்திருக்கிறது. இதை வெறும் செய்தி போல பாவித்து பலர் தங்கள் அனுதாபங்களையும், எதிர்ப்புகளையும் அரசியல் கட்சிகள் போலவேக் காட்டியிருந்தனர். நன்றாக இருக்கிறது உங்கள் அரசியல்.

இந்திய நாட்டு மக்களாகிய நாமும் நம் தெரு டீக்கடையில் இதைப் பற்றி ஒரு வாரத்துக்குப் பேசிவிட்டு பின் அதைப் பற்றி மறந்து போகிறோம். இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு யார் தீர்வு காண்பது? என்று யாரும் யோசிப்பதில்லை.

இதற்கு உடனடியாக ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும். ஒரு பெண்ணின் மரணத்திற்குப் பதில் வேண்டும்.

Thursday, June 10, 2010

சென்னையில் ஒரு மழைக்காலம்

இந்த விடுமுறையில் இந்தியா வருகை கோடை காலத்தில் இருக்கிறதே எப்படி இருக்குமோ என்று எண்ணி பயந்து கொண்டே வந்தேன். மதுரைக்குப் போனால் மழை, பெங்களூர் போனால் மழை, சென்னைக்கு வந்தால் மழை என்று வானம் குளிர்ந்து போயிருந்தது.

என்ன செய்வது ஔவையே சொல்லிவிட்டாரே -

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் 
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - 
தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு 
எல்லார்க்கும் பெய்யும் மழை

என் பொருட்டு, எஞ்சாய் சென்னை.

இந்த முறை சென்னையில் புதிய தலைமுறை இதழைப் பார்க்க நேர்ந்தது. அந்த இதழின் அமைப்பும் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களும் நான் இந்தியாவில் வசிக்கும்போது இப்படி ஒரு இதழ் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது. அதில் ஒரு தமிழறிஞரின் பேட்டி (ஏய், அந்தப் பேட்டி மாதிரி இல்லப்பா..) இடம்பெற்றிருந்தது. அவரைப் பற்றிய அறிமுகத்தில் அவர் ஒரு தமிழறிஞர் என்றும், இலக்குவனார் அவர்களின் புதல்வர் என்றும், ஆங்கிலப் புலமை பெற்றவர் என்றும், அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் புரஃபெசர் என்றும் சொல்லிவிட்டு அவர் பெயர் என்ன என்பதைச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அவர் யார் என்பதை கூகுள் செய்து கண்டுபிடிக்க வேண்டும் போல. புதிய தலைமுறை?

இந்த முறை சென்னையில் ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிய வாய்ப்புக் கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது. ராயல் என்ஃபீல்டின் மாச்சிஸ்மோ கம்பீரமாகத்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கார் ஓட்டுவது போல. பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சாலையில் புல்லட்டில் சுற்றியது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி. கிண்டியிலிருந்து பாதி ஃப்ரீஸ் ஆன நிலையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு நானும் என் மைத்துனனும் கோயம்பேட்டுக்குப் போனோம். அங்கே கே.பி.என் பஸ் நிறுத்துமிடத்திற்கு அருகில் இறங்கிய போது அந்த தண்ணீர் வெதுவெதுப்பாக மாறியிருந்தது. சென்னை வெயில்?

நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசையாக இருந்த பறக்கும் ரயில் பயணத்தையும் இந்த முறை நிறைவேற்றினேன். கஸ்தூரிபா நகர் நிலையத்திலிருந்து பூங்கா வரை சென்று செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே இரண்டு முக்கிய பிரபலப் பதிவர்களைச் சந்தித்தேன். (அதைப் பற்றி பின்னால்). திரும்பி வரும்போது கோட்டூர்புரம் நிலையத்திலிருந்து கஸ்தூரிபா நகர் நிலையம் வரும் வழியில் ஒரு சாக்கடை (அடையார் கால்வாய்??) ஓடுகிறது. அதன் கரையில் ஐந்தாறு புள்ளிமான்களைப் பார்த்தேன். சல்மான் கான்கள் வேட்டையாடுகிறார்கள், அழிந்துவரும் இனம் என்று கூப்பாடு போடுகிறார்கள். அந்தச் சாக்கடைத் தண்ணீரைக் குடித்து அருகில் உள்ள குப்பையை மேய்ந்து வரும் இந்த மான்களை யார் காப்பாற்றுவது?

ஹோட்டல் சவேராவில் உள்ள மால்குடி ரெஸ்ட்டாரண்டில் ஒரு இரவு உணவு அருந்தினோம். 12 பேர் போயிருந்தோம். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று நான்கு ஸ்டைலிலும் மெனு (நன்றாகப் படியுங்கள் மெனு மட்டும்) வைத்திருக்கிறார்கள். மற்றபடி எல்லா ஸ்டைலும் ஒரே மாதிரிதான் இருந்தது. பெரிய பிழை எதுவும் இல்லை என்றாலும் சாப்பாடு ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால் கடைசியில் வந்தது பாருங்கள் பில் - கிட்டத்தட்ட Rs.12,000/- ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டலுக்கு இந்த பில் தொகை டூ மச். அந்தச் சாப்பாட்டுத் தரத்திற்கு இந்த பில் தொகை த்ரீ மச். விலைவாசி?

ரிச்சி ஸ்ட்ரீட் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றேன். அதே போலத்தான் இருக்கிறது. என்ன இப்போது லேப்டாப்கள், ஆப்பிள் ஐபாடுகள், வி கன்சோல்கள் என்று எல்லாமே கிடைக்கிறது. அமெரிக்காவில் பழுதடைந்த என் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்கில் உள்ள டேட்டாவை பாதுகாப்பாக வெளியே எடுக்க அமெரிக்காவில் $1200/- கேட்டார்கள். இங்கே ரூ.1200/- க்கு முடித்துவிடலாம். கொடுத்திருக்கிறேன். வந்தபின் எவ்வளவானது என்று சொல்கிறேன். உழைப்புக்குக் கூலி?

புதிதாகக் கட்டியெழுப்பியிருக்கும் ஸ்கை வாக் மாலுக்குப் போய் அங்கே இருந்த பி.வி.ஆர் சினிமாவில் “சிங்கம்” படம் பார்த்தேன். தியேட்டருக்குள் நுழையும் முன்பு பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது. ஆடி-3இல் சிங்கம் என்று எங்கள் டிக்கெட் சொன்னது. தியேட்டர் அருகில் இருந்த திரையில் பார்த்தால் ஆடி-1ல் சிங்கம். குழப்பத்துடன் அருகில் சென்ற உடன் நல்ல வேளை ஆடி-1ல் நுழையவில்லை என்று எண்ணிக் கொண்டேன். அங்கே ஓடிக்கொண்டிருந்தது “பெண் சிங்கம்” (ஆணாதிக்கவாதி என்று கம்பு தூக்கிக்கொண்டு வந்துவிடாதீர்கள்). சும்மா சொல்லக் கூடாது. தியேட்டர் நல்ல வசதி. எச் வரிசையில் அமர்ந்திருந்த போதிலும் கழுத்து வலிக்காமல் பார்க்க முடிந்தது. சீட்டும் நல்ல சாய்மானத்தோடு வசதியாக இருந்தது. இடைவேளையில் என் இன்னொரு மைத்துனன் ஒரு ஆனியன் ரிங், ஒரு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், மூன்று ஐஸ்க்ரீம் வாங்கினான். என் பர்ஸில் இருந்த நூறு ரூபாயை எடுத்து நான் கொடுக்கட்டுமா என்று கேட்டேன். இருக்கட்டும் பாவா என்று காசைக் கொடுத்துவிட்டு என் கையில் பில்லைக்கொடுத்தான். ரூ.347/- நூறு ரூபாயை வைத்து குடும்பத்துக்கு ஒன்றுமே வாங்க முடியாதா என்று கேட்டேன். சிரிப்பை மட்டுமே அவனால் பதிலாகத் தரமுடிந்தது. மறுபடியும் விலைவாசி.

இன்னும் நான்கு நாட்கள் சென்னையில் தான். பார்க்க வேண்டிய இடங்கள் பல இருக்கின்றன. அவற்றை பற்றி பிறகு.

Sunday, May 30, 2010

தமிழ்ப் பதிவுலகம் உங்களை வரவேற்கிறது

இந்தியா வந்திறங்கியாகிவிட்டது. என் வாழ்க்கையின் மிக அழுத்தம் தரக்கூடிய 13 மணி நேரப் பயணமாக ஜே.எஃப்.கே முதல் அபுதாபி வரையிலான விமானப் பயணம் அமைந்து விட்டிருந்தது.

நான் அமெரிக்காவிலிருந்து கிளம்பும் நாள் இந்தியாவில் ஜூனியர் முகிலனை கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். தொலைபேசியில் அழுத என் மனைவியின் குரலில் மகனின் நிலையை எண்ணிய வருத்தத்தை விட சாய்ந்து அழ என் தோள் அணுகும் தூரத்தில் இல்லையே என்ற ஆதங்கமே ஓங்கி ஒலித்தது.

நான் ஜே.எஃப்.கேவில் விமானம் ஏறும்போது நான் பஸ்ஸில் இட்ட கமெண்ட் இந்தியாவுக்குப் போய் என் மகனைப் பார்க்கவேண்டும் என்ற என் அவசரத்துக்கு இடிஹாத் ஏர்வேய்ஸ் தடை போடுகிறார்களே என்ற ஆதங்கத்தில்.

அந்த 13மணி நேரம், இந்தியாவில் பகல் நேரம். என்னவெல்லாமோ நேர்ந்து கொண்டிருக்கும். ஆனால் என்ன நிகழ்கிறது என்று தெரியாமல் இருப்பது, வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பது கொடுமை. அந்தக் கொடுமையை அனுபவித்தேன். (இந்த விமானங்களில் இருக்கும் சாட்டிலைட் ஃபோன் எப்படி வேலை செய்கிறது என்று யாராவது இடிஹாத் விமானப் பணியாளர்களுக்குச் சொல்லிக் கொடுங்களேன்? உபயோகப்படுத்த முயன்று தோல்வியே).

அபுதாபியில் இறங்கி மனைவியுடன் பேசி மகன் ஆரோக்கியமாக இருக்கிறான், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகப்போகிறோம் என்ற செய்தியைக் கேட்டதும்தான் நிம்மதி. அபுதாபி விமானநிலையத்தில் பஸ்ஸில் ஏறினால் 100+ பின்னூட்டக் கும்மி. என் மகனின் நிலை பற்றிய செய்தி ஏற்கனவே என்னை ஆசுவாசப்படுத்தி இருந்தமையால் அந்தக் கும்மி என்னைக் காயப்படுத்தவில்லை. மாறாக என் பதிமூன்று மணி நேர அழுத்தத்தை பஞ்சாய்ப் பறக்க வைத்து குஷிப்படுத்தியது. இதற்குத்தான் இருக்கிறார்கள் நண்பர்கள். (சத்தியமாக என் அப்போதைய மனநிலையை அறிந்திருந்தால் அப்படிக் கும்மியிருக்க மாட்டார்கள். மாறாக ஆறுதல் வார்த்தைகள் வெள்ளமாக வந்திருக்கும். ஆனால் அவ்வார்த்தைகளை விட இந்தக்கும்மி என்னை மிகவும் ஆசுவாசப்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை).

இப்போது கூகிளாண்டவர் என்னைப் பார்த்து இந்த இடுகையின் தலைப்பைப் பெருமிதத்துடன் சொல்வதாக எண்ணுகிறேன்.

இந்தக் கும்மியில் நர்சிம் பற்றி அது சரி எழுதிய கமெண்ட்டைப் படித்தேன். அது என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை.

இந்தியாவில் வந்திறங்கியதும் வலையில் மேய அதிக நேரம் இருக்கவில்லை. சென்னையில் ஐந்து மணி நேரத்தைக் கழித்து விட்டு, மதியம் 11:55 மணி பாரமவுண்டில் மதுரையை நோக்கிப் பயணித்தேன். (அருமையான சேவை. வெறும் ஐம்பது நிமிடப் பயணத்திற்குள் அந்த விமானப் பணியாளர்கள் வழங்கிய உணவும் பானங்களும் அருமை. பாரமவுண்ட் மூடப்படலாம் என்று அரசல் புரசலாகச் செய்தி வழிகிறது. தமிழன் ஒருவன் துவக்கிய விமான சேவை. நம்மால் முடிந்த அளவுக்கு - விமானப் பயணம் செய்யும், செய்கின்ற, செய்யப்போகும் அனைவரும் பாரமவுண்ட் விமானம் உங்கள் சேருமிடத்திற்கு சேவை புரியுமானால் அதை உபயோகப் படுத்துங்கள் என்று வேண்டுகிறேன்)

மகனைப் பார்த்து அவனைச் சமாதானப் படுத்தி என்னுடன் விளையாட விட்டு இதிலேயே என் நேற்றைய பொழுது போய்விட்டது. ஜெட் லாகினால் அதி காலையிலேயே விழிப்பு வந்ததும் விட்டுப்போன பதிவுகளைப் படிக்கத் துவங்கினேன்.

நான் வலையுலகிற்கு அறிமுகமாகி வெறும் ஒன்பது மாதங்களேயாகியிருக்கின்றன. அதனால் இந்த வலையுலகப் பஞ்சாயத்துகள் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமாகவில்லை.

ஆதிமூலக்கிருஷ்ணன் நர்சிம்மின் பேட்டி ஒன்றை வெளியிட்டார். நான் நட்சத்திர வாரத்தில் எழுத வேண்டிய பதிவுகளில் ஒன்றாய் நான் நினைத்திருந்தது நான் பிரபலம் என்று எண்ணும் பதிவர்கள் சிலரிடம் சில கேள்விகளை வைத்து அவர்களின் பதிலைப் பெற்றுப் போடலாம் என்று (இப்பப் போய் யாருகிட்டயாவது பேட்டினு கேட்டா என் போட்டிய எடுத்துர மாட்டாங்க?). இதை நான் அந்தப் பதிவின் இரண்டாவது பின்னூட்டமாய் சொல்லியிருந்தேன். (ஆதியும் நல்லா வேணும் என்று சொல்லியிருந்தார்).

அதன் பிறகு மயில் எழுதிய ஹி ஹி நாங்களும் பேட்டி குடுப்போமில்ல என்ற பதிவையும் படித்தேன். மேலோட்டமாகப் படிக்கும் போது அது வழக்கமான பதிவுலகக் குசும்பு என்றுதான் நினைத்தேன். பின்னூட்டமும் இட்டுவிட்டு வந்தேன்.

இன்று காலை அண்ணன் மாதவராஜின் பதிவைப் படிக்கும்போது இந்தப் பதிவிற்கு நர்சிம் எதிர்வினை எழுதியிருப்பதும் கார்க்கி அங்கே ஏதோ சர்ச்சைக்குரிய பின்னூட்டமிட்டதாகவும் அறிய வந்தது. நர்சிம்மின் ப்ளாகில் அந்தப் பதிவைக் காணக்கிடைக்கவில்லை. ஆனால் என் ரீடரில் இருந்தது. (ரீடரில் பின்னூட்டங்களை நான் சப்ஸ்க்ரைப் செய்யாததால் அவற்றைப் படிக்க முடியவில்லை). படித்தேன். மீண்டும் மயிலின் பதிவைப் படித்தேன். மீண்டும் நர்சிம். அதிர்ந்தேன்.

இருவரும் இரண்டு பதிவுகளிலும் வைத்திருக்கும் உள்குத்துகள் ஒன்றல்ல இரண்டல்ல. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி அல்லது கேலி செய்துகொள்வதோடு அவர்களின் ரசிகர்களாய், பின்னுட்டமிடுபவர்களாய் இருக்கும் சில பல வாசகர்களையும் இதில் இழுத்து விட்டது அநாகரீகத்தின் உச்சக்கட்டம். இதில் என்னை அதிகம் பாதித்தது நர்சிம்மின் பதிவே.

முதல் பதிவை எழுதியது மயிலாக இருந்தாலும் பின்னூட்டம் இட்டக் காரணத்திற்காக மட்டும் சந்தனமுல்லையைத் தாக்கியிருக்க மாட்டார் நர்சிம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தப் பதிவின் பின்னணியிலும் முல்லை இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனாலும் முல்லை உங்களின் இந்தக் கேலி உள் மனதில் இருக்கும் ஒரு அசிங்கமானப் பேயை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. உங்களுக்கும் நர்சிமுக்கும் என்ன பிரச்சனை வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை நீங்கள் இப்படி பொது இடத்தில் வைத்து, வாய்ப்புக் கிடைத்ததும் எள்ளி நகையாடியதை என்னக் காரணம் சொல்லப்பட்டாலும் என்னால் நாகரீகமானதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நர்சிம், உங்களுக்கு 500க்கும் மேற்பட்ட வாசகர்கள் இருக்கிறார்கள். உங்களின் இலக்கியம் தோய்ந்த எழுத்துகளையும், மெல்லிய நகைச்சுவை இழையோடும் எழுத்துக்கும் வாசகர்களானவர்கள் இவர்கள். நீங்கள் சந்தனமுல்லையால் எவ்வளவுதான் காயப்பட்டிருக்கட்டும். நீங்கள் அந்தக் காயத்துக்கு மருந்து போட்டுக்கொள்வதாக உங்கள் மீதே சாக்கடையை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறீர்கள். எத்தனையோ குறள்களுக்கும், சங்கப்பாடலுக்கும் எளிமையாக விளக்கம் எழுதும் நீங்கள் இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற அந்தத் தங்கக் குறளுக்கு விளக்கம் தெரியாதவரா என்ன? அல்லது இதுவும் என் ஸ்டைலே என்று எங்களிடம் சொல்ல விரும்புகிறீர்களா? சத்தியமாக நீங்கள் பேட்டியில் சொன்ன “புதிதாய் எழுத வருபவர்கள் எவரும் ஒரு வருடத்திற்கு முன்னர் எழுதிக் கொண்டிருப்பவர்களின் பார்வை, கருத்து, அரசியல் நிலைப்பாடு என எது குறித்தும் தெரிந்துகொள்ள விருப்பமோ, முயற்சியோ எதுவும் எடுப்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து.” நினைவுக்கு வந்து தொலைக்கிறது. உங்கள் பார்வை கருத்து நிலைப்பாடு ஆகியவற்றைத் தெரிந்து கொண்டிருப்பேனோ என்று எண்ணுகிறேன்.


நான் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் போது நிகழ்ந்த சம்பவம் இது. எங்கள் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு வைத்து அவர்களை அறிமுகப் படுத்துவது என்ற பெயரில் மாஸ் ராக்கிங் செய்வது என்பது மரபாக இருந்து வந்தது. நாங்கள் சீனியர்களாக மாறிய அந்த ஆண்டிலிருந்து இந்த அறிமுகப்படலத்திற்கு தடா விழுந்தது. ஆத்திரம் வந்த நானும் என் நண்பனும் ஆசிரியர்களிடம் பெரும் விவாதம் செய்தோம். ஆனால் எங்கள் வாதங்கள் எடுபடவில்லை. ஆசிரியர்கள் நினைத்ததே நடந்தது. பின்னாளில் நான் என் பேராசிரியர் ஒருவரிடம் இதைப் பற்றி பேசியபோது அவர் என்னிடம் சொன்னது - “நீ அன்னிக்குப் பேசினதெல்லாம் நியாயமாத்தான் இருந்திச்சி. ஆனா நீ அதையெல்லாம் தண்ணியடிச்சிட்டுப் பேசின பாரு. அதுனால தான் அதை ஏத்துக்க எங்களால முடியலை. நீ என்ன நல்ல விசயம் பேசினாலும் சரி, அதுக்கு நடுவுல ஒரு சின்ன அநாகரீகமான வார்த்தையோ இல்லை யாரையும் புண்படுத்துற மாதிரி விசயமோ சொல்லிட்டினா, நீ சொன்ன அத்தனை நல்ல விசயங்களும் அடிபட்டுப் போயிடும்” பொட்டில் அறைந்தாற்போல் உறைத்தது.


அண்ணன் மாதவராஜின் பதிவைப் படித்த போது எனக்கு என் பேராசிரியரின் அறிவுரையை அவரிடம் சொல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நீங்கள் உங்கள் பதிவில் சொல்லியிருந்தது அத்தனையும் நியாயம். ஆனால் உங்கள் தலைப்பும் நர்சிம்மையும் கார்க்கியையும் அவன் இவன் என்று விளித்ததும் கண்டிப்பாக அந்தத் தரப்பை உங்கள் வார்த்தைகளில் இருந்த நியாயத்தைப் பின்னுக்குத் தள்ளக்கூடிய, தள்ள வேண்டிய நிலைக்குக் கொண்டு செல்லும்.

என்னவோ.. இந்தப் பதிவுகளும் நிகழ்வுகளும் என்னை பரிகாசத்துடன் பார்த்து இந்த இடுகையின் தலைப்பைச் சொல்வது போல எண்ணுகிறேன்.

Thursday, April 15, 2010

ஷங்கரின் கொலை வெறி..

ஒரே கரு பல முட்டைகள் அப்பிடின்னு நம்ம பலா பட்டறை ஷங்கர் ஒரு பதிவு போட்டுட்டு, அது மாதிரி தொடர வேற செய்யச் சொல்லிட்டாரு. என்னா ஒரு கொலை வெறி.

இதுல அவரே பல மாதிரி எழுதிட்டாரு. மிச்ச சொச்சம் இருக்கிறத மத்தவங்க எழுதனுமாம். அதுலயும் கொறஞ்சது மூணு மாதிரி எழுதனுமாம். நம்ம ஸ்டைல்ல இருக்கவே கூடாதாம்.

சரி முயற்சி செஞ்சி பாப்போமேன்னு ஆரம்பிச்சிட்டேன்..

கரு: ராணின்னு ஒரு பொண்ணு பிள்ளையார் கோவிலுக்குப்போய் சாமி கும்பிட்டுவிட்டு சூரத் தேங்காய் உடைச்சிட்டு குழந்தை பிறக்கனுமேன்னு வேண்டிகிட்டு, திரும்பி வீட்டுக்கு போறா


***


ABMமிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு திரும்பும் போது ராணி மேடம் கண்ணை மூடிக் கொண்டு எதோ முணுமுணுப்பது கேட்டது. அவர்களுக்குத் தெரியாமல் அருகில் சென்று கேட்ட போது ஏதோ சுலோகம் போல இருந்தது. 


என் முகத்தில் தெரிந்த ஆச்சரியத்தைப் பார்த்த பக்கத்து சீட் கல்பனா நான் நினைப்பதைப் புரிந்து கொண்டார்கள். “அது ஒண்ணுமில்ல அகிலா. அவங்களுக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருசமாச்சி. இன்னும் குழந்தை இல்லை. அதான் எதாவது விரதம் இருக்கிறது, சுலோகம் சொல்றதுன்னு செஞ்சிக்கிட்டே இருப்பாங்க” என்றாள்.


குழந்தை இல்லாமலிருப்பது பெரும் குறைதான். மனதால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை அறியாமல் சுற்றுப் புறமும் சொந்தங்களும் காயப்படுத்திப் பார்க்கும். குழந்தை இல்லாமல் போனதற்கு என்ன காரணமாய் இருக்கும்? டாக்டர் யாரையாவது பார்த்தார்களா தெரியவில்லை.


வேலைப் பளுவில் அதை மறந்தே போனேன்.


வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் ஹாஸ்டலுக்கு நடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்போது ராணி மேடம் கோவில் வாசலில் இருந்த கடையில் தேங்காய் வாங்கிக் கொண்டு நின்றிருந்தார்கள். கல்பனாவிடம் சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாகப் போய் ராணி மேடத்தின் முன்னால் நின்றேன். 


“ஹலோ மேடம். என்ன இந்தப் பக்கம்?”


“ஓ.. அகிலா. கோவிலுக்குப் போகலாம்னு..” என்று இழுத்தார். என் வரவை இடைஞ்சலாக நினைத்தாரோ என்னவோ. ஆனாலும், நான் விடவில்லை.


“நானும் கோவிலுக்குத் தான் வந்தேன் மேடம்” என்று அவரோடு சேர்ந்து நடந்தேன். இருவரும் சன்னிதி சுற்றி விட்டு அந்தக் கோவிலின் மூலையில் இருந்த பிள்ளையார் சன்னிதி முன் நின்றோம். கிட்டத்தட்ட பத்து நிமிடம் கண் மூடி வணங்கி விட்டு கையில் இருந்த தேங்காயை சிதறுகாய் போடும் தொட்டியில் அடித்து சிதறடித்தார். 


கோவில் மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்தோம். 


“என்ன மேடம். ஒரே பக்தியா இருக்கு?” என்று நான் கேட்டதுதான் தாமதம், மடை திறந்த வெள்ளம் போல என் தோளில் சாய்ந்து அழுது கொண்டே அத்தனைத் துயரத்தையும் கொட்டினார். நான் உம் கொட்டிக்கொண்டே இருந்தேன்.


கண்களைத் துடைத்துக் கொண்டு “சரி நேரமாயிருச்சி. பஸ் போயிரும்” என்ற அவரோடு நானும் பஸ் ஸ்டாப் வரை நடந்தேன்.


“மேடம் உங்க ஹஸ்பெண்டை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனீங்களா?” என்றேன். 


அதற்குள் அவர் பஸ் தூரத்தில் வந்து விட “இல்லை அகிலா. அவர் பாண்டிச்சேரியில வொர்க் பண்றார். வீட்டுக்கு வர்றதே மாசத்துல ரெண்டு நாள். இதுல எங்கருந்து டாக்டர் கிட்ட போறது?” என்று பஸ்ஸில் ஏற ஓடினார்.


நான் அவர் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தேன்.


****


“எலேய் கருப்பா.. நீ சொன்ன டீ வந்துருச்சிலே. இந்தா பிடி” என்று என்னிடம் டீயை நீட்டினான். என் கண்ணோ அங்கோ பஸ்ஸில் அமர்ந்திருந்த அவளையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. வடக்கூர்காரிகள் போல நல்ல நிறம். பார்துக்கிட்டெ இருக்கலாம் பொல. 


“டேய் டீயப் பிடிடா” சுயநினைவு வந்து டீயை வாங்கினேன். அதர்க்குள் பஸ் போய்விட்டது.


“என்னடா? நானும் போன வாரத்துல இருந்து பாக்குறென். நீ அந்த ஃபிகரயே பாக்க்குற”


“ஆமாண்டா மாப்ள. எனக்கு அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிசிருக்கு”


“அப்ப துண்டு போட்ற வேண்டியதுதன?”


போட்றவேண்டியதுதான்னு மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். இதுவரைக்கும் பல பெண்ட்களுக்கு துண்டு போட்டுஇருக்கிறேன். யரும் சீண்டியது கூட இல்லை. பத்தோடு பதினொன்னாக இதற்கும் போட்டுவிட வேண்டியதுதான்.


இன்னும் ரெண்டு மூனு நாலைக்கு அந்த பஸ்ல அவ டெய்லி வராளான்னு நோட்டம் விட்டேன். சில நாள் சுடிதார்ல வரா. சில நாள் சேலைல. ஆனா எதுல பாத்தாலும் வடக்கூர்க்காரி மாதிரிதான் தெரியிறா. ஒரு வேள வடக்கூர்க்காரியாவே இருந்து அவ பெசுற இந்தி நமக்குப் புரியாம நாம பேசுற தமிழ் அவளுக்குப் புரியாமப் போச்சின்னா? என்ன செய்யறதுன்னு ஒரு தயக்கமா இருந்தது.


அடுத்த நாள் காலேசுக்கு கட்டடிச்சிட்டு அவ போற பஸ்ல ஏறிட்டேன். அவ உக்காந்திருந்த சீட்டுக்கு பக்கத்துல போயி நின்னேன். அவலுக்குப் பக்கத்துல உக்காந்திருந்தவக் கிட்ட அவ பேசிக்கிட்டிருந்தா. நல்ல வேலை. தமிழ்லதான் பேசினா. 


அடுத்த ஸ்டாப்ல அவ இறங்கின. நானும் துண்டு போட்ரலாம்னு அவ பின்னாடியே இறங்கினேன். அவ நேரா அங்கிருந்த ஒரு கோவில் வாசல்ல இருக்கிற கடைல தேங்காப்பழம் வங்கினா. கோவிலுக்குள்ள போயி அங்கிருந்த பிள்ளயார் சன்னிதியை 21 தடவ சுத்தி வந்தா. அப்புறம் சுரத்தேங்காய் உடச்சா. 


அய்யர் உள்ள இருந்து கையில தீபாரதனைத் தடோட வந்தாரு. நான் போய் அவளுக்கு எதிர நின்னுக்கிட்டேன். 


“வாம்மா ரானி. ஆத்துல எல்லாரும் சௌக்கியமா?” அப்பிடின்னு அய்யர் கேட்டாரு. ஆகா அப்ப இவ பேரு ராணியா? 


அய்யர் குங்குமம் குடுக்கவும் அவ ஜாக்கெட்டுக்குள்ள இருந்து தாலிய எடுத்து அதுல குங்குமத்த வச்சிக்கிட்டா. எனக்குள்ள எதோ வெடிக்கிற சத்தம் கேட்டுச்சி.


கடைசியில் இவளும் என் துண்டை தாண்டிப் போனாள்..


****


தோழி பிள்ளையார் முன் தேங்காயை உடைத்தாள். “சுமக்க முடியவில்லையா?” என்றேன். “சுமக்கத்தான் உடைத்தேன்” என்றாள்.


****


அப்பாடி. ஒரு வழியா மூணு மாதிரி எழுதிட்டேன். இந்த சவாலுக்கு அடுத்ததா நான் அழைக்கிறது - சாரு சங்கர்.

Friday, March 26, 2010

சர்வதேச பதிவர் சங்கமம் அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரல்

சர்வதேசப் பதிவர் சங்கமம் நடத்துவது தொடர்பாக சர்வதேசப் பதிவர் சந்தித்து உரையாடியதை நாம் கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அந்த சந்திப்பு தொடர்பாக பல முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிந்தோம்.

தலைவர் குடுகுடுப்பை, தளபதி நசரேயன் மற்றும் அண்ணன் அதுசரி அவர்களின் சீரிய முயற்சியால் கிட்டத்தட்ட சங்கம நிகழ்ச்சிக்கு அனுசரணையாளர்களை(Sponsors)ப் பிடித்து விட்டதாக அறிகிறோம். அந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்/நிகழ்ச்சி நிரல் நம் கையில் சிக்கியது. இங்கே அது உங்கள் பார்வைக்காக.


சர்வதேச பதிவர் சங்கமம் அழைப்பிதழ்

நண்பர்களே, சர்வதேசப் பதிவர்கள் சங்கமம் நடத்துவதென்று தீர்மானம் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் துவங்கிவிட்டன. இந்த விழாவுக்கு நீங்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அழைப்பிதழுடன் நிகழ்ச்சி நிரலையும் இணைத்திருக்கிறோம்.


இடம்: டீ-கூ-வாங்க் தீவு, தென் அமெரிக்காவுக்குத் தெற்கே ஒரு தீவு
நாள்: 4/4/2010 ஞாயிறு


பல்வேறு நாடுகளிலிருந்து இந்த விழாவில் கலந்து கொள்ள சிறப்பு விமானங்கள் (நன்றி: டைகர்வுட் ஏர்லைன்ஸ்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பதிவர்கள் NOREPLY-COMMENT@BLOGGER.COM என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விபரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியா: இந்தியப் பதிவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்காக சென்னையிலிருந்து ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து சனி காலை சரியாக 4:00 மணிக்குப் புறப்படும். இந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்பும் பதிவர்கள், தங்கள் பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இப்படி எதாவது ஒரு அட்டையைக் கொண்டு வர வேண்டும். அப்படி எந்த அட்டையும் இல்லாதவர்கள், தங்கள் பள்ளிக்கூட ரேங்க் அட்டையையாவது கொண்டு வர வேண்டும். இது எதுவும் இல்லாதவர்கள் ஃபுட் போர்ட் அடிக்கக்கூட அனுமதிக்கப் படமாட்டார்கள்.

அமீரகம்: அமீரகத்தைச் சேர்ந்த பதிவர்களுக்காக, துபாய் விமான நிலையத்திலிருந்து சரியாக காலை 10 மணிக்கு இந்த விமானம் புறப்படும். விமானத்தில் மேலே சர்வதேசப் பதிவர் சங்கமம் என்ற போஸ்டர் ஒட்டியிருப்பது விமானத்தை அடையாளம் கண்டு கொள்ள உதவும். மேலும் இந்த விமானத்தில் ஒரு அண்டா பிரியாணியை முதலில் ஏற்றினால் தான் விமானம் புறப்படுமாறு தொழில்நுட்பம் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி இல்லாவிட்டால் பதிவர்கள் யாரும் பிரயாணம் செய்ய முடியாது.

சிங்கப்பூர், மலேசியா: சிங்கை மற்றும் மலேசியப் பதிவர்களுக்காக ஒரு கால் டாக்ஸி (உதவி: வரும் ஆனா வராது கால் டாக்ஸி சர்வீசஸ்) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த டாக்ஸி பிரபாகர் அண்ணன் அவர்களின் அப்பார்ட்மெண்ட் வாசலில் நிற்கும்.

ஐரோப்பா:ஐரோப்பாவைச் சேர்ந்த பதிவர்களுக்காக லண்டனில் இருந்து ஒரு பாய்மரப் படகு (உதவி: டைட்டானிக் கப்பல் கம்பெனி) மதியம் 12 மணிக்கு புறப்படுகிறது. பதிவர்கள் இப் பாய்மரப் படகில் பாய்ந்து ஏறிக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார்கள்.

அமெரிக்கா: அமெரிக்கப் பதிவர்களுக்காக ஒரு ஜெட் விமானம் பல்வேறு நகரங்களைத் தொட்டுச் செல்லும். அந்தந்த ஊரைச் சேர்ந்த பதிவர்கள் விமானம் அவர்கள் ஊரைத் தொட்டுச் செல்லும்போது ஒட்டிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். எந்த நேரம் எந்த ஊருக்கு வரும் என்ற தகவல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப் படும். (தீவிரவாதிகள் தாக்குதல் இருக்கலாம் என்று உளறல்துறை எச்சரிக்கை இருப்பதால் வெளிப்படையாக அறிவிக்க இயலாது)

மற்ற நாடுகளைச் சேர்ந்த பதிவர்கள் அவரவர் சக்திக்கேற்றவாரு, கால் டாக்ஸியோ, அரை டாக்ஸியோ, ஷேர் ஆட்டோவோ பிடித்து வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

நிகழ்ச்சி நிரல்:

சனி மாலை 7:30

டீ-கூ-வாங் தீவில் உள்ள வாட் டைகர், நோ டைகர் ரிசார்ட்டில் (நிதி உதவி: ராஜபிச்சை பிரதர்ஸ் கார்ப்பொரேசன்) நடைபெறும் இந்த விழாவுக்கு வருகை தரும் அத்தனைப் பதிவர்களும் சனி மாலை 7:30 மணிக்குள் இந்த ரிசார்ட்டுக்குள் வந்து விட வேண்டும். சரியாக 8:00 மணிக்கு ரிசார்ட்டின் கதவு இழுத்துச் சாத்தப்படும். உள்ளே சென்றவர்கள் விழா முடியும் வரை வெளியே வர முடியாது என்பதை இங்கே அறிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

சனி இரவு 8:30 இரவு உணவு

வழங்குபவர்கள் கேபிள் சங்கரின் கொத்துபரோட்டா - மூடி வச்சி மூணு நாளானாலும் மணம், குணம் குறையாதது

சனி இரவு 10:00 மணி - தூக்கம்

(உங்களுக்கான பாய், போர்வையை வழங்குபவர்கள் - கிழிசல் பாய் & கந்தல் போர்வை இன்கார்பொரேட்டட்)

ஞாயிறு 

காலை 6:00 மணி - துயிலெழும்புதல்

எச்சரிக்கை: இதற்கு மேலும் தூங்கும் பதிவர்கள் நிரந்தரமாகத் தூங்க வைக்கப் படலாம் - (பாதுகாவலர் உதவி - ராஜபிச்சை-பீத்தபாய செக்யூரிட்டி ஃபர்ம்)

காலை 6:01 - 8:30 மணி - பதிவர்கள் அனைவரும் தங்கள் காலைக்கடன்களை முடித்து குளித்து முடித்திருக்க வேண்டும்.
(நன்றி: செங்கக்கட்டி சோப்பு மற்றும் ஷக்கீலா துண்டுகள்)
குளிக்காத பதிவர்களுக்கு அரங்கத்தின் கடைசியில் இருக்கைகள் ஒதுக்கப்படும்.

காலை 8:30 மணி - காலை உணவு
(நன்றி: ஜெராக்ஸ் காப்பி கடை)

காலை 9:30 மணி - தமிழ்த்தாய் வாழ்த்து
(இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் சித்தனாதன் விபூதி)

காலை 9:35 மணி - வரவேற்புரை - குடுகுடுப்பை
(இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் ஜக்கம்மா ஜமுக்காளம்)

காலை 10:00 மணி - சிறப்புரை - ஓட்டையே இல்லாமால் கசியவிடுவது எப்படி? - சிறப்பு விருந்தினர் ஈரோடு கதிர்
(இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - ஃபெவிகால் - ஓட்டைகளை அடைக்கச் சிறந்த சாதனம்)

காலை 10:30 மணி - சிறப்புரை - கடவுளுக்குக் கத்தி சொறுகுவது எதற்காக? - பிரிட்டன் பேச்சாளர் அதுசரி
(இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - மரங்கொத்தி மார்க் கைக்குட்டைகள்)

காலை 11:30 மணி - சிறப்புரை - தலை முடியும் கைக்கிளிப்பும் - நறுக்குன்னு நாலு வார்த்தை - சிறப்பு விருந்தினர் வானம்பாடிகள்
(இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - கேரக்டர் சீவிளி மற்றும் சிணுக்கொடி)

நண்பகல் 12:30 மணி - மதிய உணவு


இந்த மதிய உணவை உங்களுக்கு வழங்குபவர்கள் பனகல் பார்க் கையேந்தி பவன் உரிமையாளர் சங்கம்


மதிய உணவுக்கு இடையில் சர்வதேச பதிவர் குழுமம் துவங்கி வைக்கப் படும். துவக்கி வைப்பவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தரும் அத்தனைப் பதிவர்களும்


மதியம் 1:30 மணி - பழகு தமிழில் அழகுதமிழ் - பழமை பேசி
(இந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் குந்தித்தூங்கு நெக் பில்லோ)

(மதிய உணவருந்தி மயக்கத்தில் இருக்கும் பதிவர்கள் இந்த சமயத்தில் கண்ணயரலாம்)

மதியம் 2:00 மணி - கலந்துரையாடல் - தங்கமணியிடம் அடிவாங்காமல் இடுகை தேத்துவது எப்படி? - நெறியாளர் முகிலன்
இந்த கலந்துரையாடலில் திருமணமான ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். ஏனையோர் பார்வையாளர்களாக இருந்து பயன்பெறலாம்.


இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - HardRock பூரிக்கட்டைகள்

மதியம் 2:45 மணி - சிறப்பு நிகழ்ச்சி - துண்டு, துண்டு, துண்டு, ஐ ரோஜா - பதிவர் நசரேயன், பின்னூட்டர் வில்லன் மற்றும் சில வடக்கூர்க்காரிகள் இணைந்து மிரட்டும் ஓரங்க நாடகம்.
இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் க்ரீம்

மதியம் 3:00 மணி - கவிதைப் பட்டறை - நடத்துபவர் கலகலப்ரியா. உடன் உதவி செய்பவர் பலா பட்டறை ஷங்கர்.
இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் தெளியும்பித்தம் எலுமிச்சைகள் மற்றும் க்விக்-க்ரோ ஆயுர்வேதிக் ஹேர் க்ரோயிங் க்ரீம்

மாலை 4:00 மணி - எதிர்பட்டறை - நடத்துபவர் குடுகுடுப்பை
இந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் அங்கண்ணன் வயித்தெரிச்சல் மற்றும் வயிற்றுவலி மாத்திரைகள்

மாலை 4:30 மணி - 6:00 மணி - பல நாடுகளில் இருந்து வந்திறங்கும் பதிவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மேடை வழங்கப்படும்.
நிகழ்ச்சிக்கு இடையில் டீ/காபி/சிற்றுண்டி வழங்கப்படும். (அண்ணன் உண்மைத்தமிழனுக்கு மட்டும் இறுதியாகவே அனுமதி வழங்கப்படும்)


இந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் -  மெரீனா பீச்சில் கடலை/சுண்டல்/மாங்கா விற்கும் பொடியர்கள் சங்கம்

மாலை 6:00 மணி - கேள்வி நேரம் - பதிவர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிவர் பட்டாபட்டி அவர்கள் பதில் கூறுவார். யாருக்கும் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.

இந்நிகழ்ச்சியை வழங்குபவர்கள் ப.மு.க. 

மாலை 6:30 மணி - கதை சொல்லி - நான் எழுதிய இரண்டு கதைகள் - சின்ன அம்மிணி தான் எழுதிய கதைகளில் இரண்டை வாசித்துக் காட்டுவார்

இந்த நிகழ்ச்சியை வழங்க யாரும் முன்வராததால் சின்ன அம்மிணி தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறார்.

இரவு 7:30 மணி - இரவு உணவு 

(இந்த உணவை உங்களுக்கு வழங்குபவர்கள் மீண்டும் கேபிள்சங்கர் கொத்துபரோட்டா. தாகசாந்தி வேண்டும் பதிவர்களுக்கு கார்க்கியின் காக்டெயிலும் வழங்கப்படும்)

நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்து இறுதி வரை ரிசார்ட்டின் கேட்டுகள் அடைத்துச் சாத்தப்படும் என்பதை அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை அறிவித்துக் கொள்கிறோம். மீறி வெளியேறியே ஆக வேண்டும் என்பவர்கள் மூன்றாவது வாசலில் வைக்கப் பட்டிருக்கும் கலகலப்ரியா காபி அண்டாவிலிருந்து ஒரு குவளை காப்பியும், பக்கத்து சட்டியில் இருக்கும் கலகலப்ரியா கருப்பு சாம்பாரில் ஒரு கரண்டியும் குடித்துவிட்டு, அதன் பின்னும் உயிரோடு இருந்தால் வெளியேறலாம்.

நிகழ்ச்சி முடிந்ததும் பதிவர்கள் வீடு திரும்ப வாகன ஏற்பாடுகள் எதுவும் செய்யப் படவில்லை. இதற்கான அனுசரணையாளர்கள் கிடைக்காததே காரணம். ஆல்-இன்-ஆல் அழகுராஜா கடையில் சைக்கிள்கள் கேட்டுள்ளோம். அவர்கள் இன்னும் பதில் அனுப்பவில்லை. அவர்களின் பதில் வரவும் பதிவர்களுக்கு மின்னஞ்சல் முறையில் தகவல் தெரிவிக்கப்படும்.

அனைவரும் வருக ஆதரவு தருக.

Friday, March 19, 2010

சர்வதேச பதிவர் சங்கமம் - முன்னேற்பாடு கூட்டம் நேரலை

உலகெங்கிலும் எங்கள் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் நல்ல உள்ளங்களுக்கு சலம்பல் தொலைக்காட்சி சார்பில் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


சென்னைப் பதிவர்கள் வாரம் ஒரு முறை பதிவர் சந்திப்பு என்ற பெயரில் கடற்கரையிலோ, இல்லை உலகத் திரைப்படம் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகத்தின் மாடியிலோ சந்தித்து அளவளாவி வருகின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பதிவர்கள் இப்படி சந்திப்பதில்லை என்ற பெரும் வருத்தம் அவர்களுக்குள் இருக்கிறது. 


இதை எப்படியாவது நீக்கியே தீருவது என்ற நல்லெண்ணத்தில் அயல்நாட்டுப் பதிவர்கள் ஒரு பிரைவேட் பஸ்ஸில் ஏறி கலந்துரையாடினார்கள். அந்த நிகழ்வை நேரலையாக உங்களுக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு சலம்பல் தொலைக்காட்சியின் எக்ஸ்க்ளூசிவ் நிகழ்ச்சி.


அதுசரி: யோவ் யாருய்யா இந்த டெம்போவுக்கு டிரைவரு?


முகிலன்: வாங்க அதுசரி. நானும் யாருன்னு தெரியாமத்தான் உக்காந்திருக்கேன். 


கலகலப்ரியா: நாந்தான் அது. இப்ப சாம்பார் வச்சிட்டிருக்கேன். நீங்க பேசிக்கிட்டிருங்க.


அதுசரி: ஓ மண்ணு லாரியா இது. அப்ப சரக்கடிச்சிட்டு லேசா சரிஞ்சிக்கலாம்.


குடுகுடுப்பை: என்னய்யா இது, என்னவோ பதிவர் சங்கமம்னு பேசிட்டு சரக்கடி, கொசுக்கடின்னு பேத்திக்கிட்டிருக்கீங்க?


முகிலன்: வாங்க தலைவரே. என்ன ரொம்ப நாளா கடைக்கு லீவு விட்டுட்டீங்க?


குடுகுடுப்பை: ஆஃபீஸ்ல வேலை டவுசர் கிளியுது. ஒட்டுப் போடக்கூட நேரமில்லை.


கலகலப்ரியா: ஆமா.. ஒட்டுப் போட நேரமிருக்காது. ஆனா எதிர்க் கவிதை எழுத மட்டும் நேரம் இருக்கும். நடக்கட்டு நடக்கட்டு


குடுகுடுப்பை: எதிர்கவித எழுதுரதுக்கு யோசிக்க வேண்டாம், உங்க கவிதைய படிச்சா தானா வருது


நசரேயன்: எனக்கொரு துண்டு போடுங்க.


குடுகுடுப்பை: நீர்தானய்யா வழக்கமா துண்டு போடுவ. இப்ப உனக்குப் போடச் சொல்ற?


நசரேயன்: அட எடம் போடச் சொன்னேன்யா.


முகிலன்: வாங்க நசரேயன் இங்கிட்டு உக்காருங்க


நசரேயன்: நன்றி பாண்டியரே. பாத்திங்களாய ஒரு பாண்டியருக்கு ஒன்னொரு பாண்டியாரு தான் உதாவி செய்யறாரு


வானம்பாடி: ஒரு வாக்கியத்துல எத்தன எழுத்துப் பிழை. இதைத் திருத்த மாட்டீரா?


சின்ன அம்மிணி: யாருங்க அது எங்க தளபதியத் தாக்குறது?


நசரேயன்: நன்றி சின்ன அம்மிணி. அதான, சர்வதேச பதிவர் சங்கமத்துல இவர எல்லாம் யாருய்யா உள்ள விட்டது?


அதுசரி: சரி வந்தது வந்துட்டீங்க. ஒரு ரவுண்டு ஏத்துறது.


குடுகுடுப்பை: நான் தான் வரச் சொன்னேன். அவரு பல பதிவர் கூட்டம் பாத்திருப்பாரு. அவர்கிட்ட ஐடியா கேக்கலாம்னு.


முகிலன்: ஆமா நம்ம பழமை பேசியண்ணன என்ன இன்னும் காணோம்?


பழமை பேசி: வந்துவிட்டேன். தொழில் நிமித்தமாக பாசுடன் நகரம் வரை செல்ல வேண்டியிருந்தது. விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திரும்பி வரும் விமானம் தாமதமாகிவிட்டது.


அதுசரி: ஆமா இப்ப என்ன சொன்னீங்க? கொஞ்சம் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் செய்யுங்க?


குடுகுடுப்பை: மப்பு ஏறிட்டா அப்பிடித்தான். 


கலகலப்ரியா: வந்துட்டேன். யாராவது சாம்பார் சாதம் சாப்புடுறீங்களா?


அதுசரி: அதுக்கு நான் விசத்தையே குடிப்பேன்.


முகிலன்: யோவ் எங்கயாவது விசம் ஃப்ரீயா கிடைக்குமா? கிடைக்கும்போது வாங்கி சாத்துரத விட்டுப்புட்டு.


கலகலப்ரியாம்கும். தினம் ஜாவா காஃபின்னு அலட்டிக்கிட்டு குடிக்கறது விசமில்லாம என்ன? இனிமேட்டு நீங்க கேட்டாலும் கிடைக்காது.


பழமை பேசி: சரி தம்பிகளா, நாம இங்க எதுக்குக் கூடியிருக்கோம்?


முகிலன்: அண்ணே, இந்தியாவுல பாத்தீங்கன்னா, சென்னைல தும்முனா பதிவர் சந்திப்பு, இருமுனா பதிவர் சந்திப்புன்னு நடத்துறாங்க. ஈரோட்ல என்னன்னா பதிவர் சங்கமம்னு வச்சி கலக்கிட்டாய்ங்க. நீங்க கூட போய் அமீர்கான் மாதிரி தொப்பி போட்டுட்டு பேசிட்டு வந்தீங்களே?


குடுகுடுப்பை: தொப்பியக் கழட்டிட்டு ஒரு ஃபோட்டோ பப்ளிஷ் பண்ணச் சொன்னா இன்னும் பண்ணலை. நாம எதிர் தொப்பி போட்டுர வேண்டியதுதான்.


நசரேயன்: இந்த அமீரகம், நம்ம நியூ யார்க் சிட்டி சைஸ் இல்ல. அவங்க என்னடான்னா பதிவர் டூர் போராங்க. பிரியாணி சாப்டுராங்க. சினிமா பாக்குறாங்க. நாமும் மீட்டிங் போடலைன்னாலும் பரவாயில்ல பிரியாணியாவது சாப்புடணும்.


கலகலப்ரியா: இந்த சிங்கப்பூர், இத்தனை நாள் இருக்கிற இடம் தெரியாம இருந்தது. இப்ப என்னடான்னா கேபிள் சங்கரக்கூப்பிட்டு பதிவர் சந்திப்பு நடத்திட்டாங்க. என்னை ரௌத்திரப் படுத்தாம சீக்கிரம் ஏதாவது யோசனை சொல்லுங்க.


ஹாலிவுட் பாலா: Steven Speilberg, Jurassic parkla என்ன சொல்றாருன்னா..


நசரேயன்: அந்தப் பார்க்லயே வச்சிக்கலாமே? எனக்குத்தான் லால் பாக்ல வடக்கூர்க்காரிக்கு துண்டு போட முடியாமப் போயிருச்சி. இந்த பார்க்லயாவது எவளாவது வெள்ளக்காரிக்கு துண்டு போட்டுக்கிறேன்


ஹாலிவுட் பாலா: யோவ் நான் சினிமா விமர்சனம் சொல்லிக்கிட்டிருக்கேன்யா.


வானம்பாடிகள்: நம்ம ஈரோடு கதிர் தான் ஈரோடு சங்கமத்த ஏற்பாடு செஞ்சது. அவரக் கூப்பிட்டு யோசனை கேக்கலாமே?


குடுகுடுப்பை: கேளுங்க கேளுங்க. நம்ம சந்திப்பு ஊரெல்லாம் பேசப் படணும். நாம சந்திப்புல சாப்புடுற ஐட்டங்களைப் பாத்து ஊருல இருக்குற எல்லாருக்கும் நாக்குல எச்சி ஊறனும். ஆமா.


பழமை பேசி: நாங்கள் தென்கிழக்கு பதிவர்கள் சந்தித்தோமே? 


குடுகுடுப்பை: இன்னொரு தடவை அத சந்திப்புன்னு சொன்னீங்க கெட்ட கடுப்பாயிரும். நாலு பேரு - வெறும் நாலு பேரு மட்டும் சேந்த்து சரக்கடிச்சிட்டு கோழி பிரியாணி சாப்புடதுக்குப் பேரு சந்திப்பாய்யா?


வில்லன்: யோவ் உமக்கு பிரியாணி குடுக்கலைங்கிற கடுப்புல இப்பிடியெல்லாம் பேசக்கூடாது.


குடுகுடுப்பை: பின்னூட்டம் மட்டும் போடுறவுங்கள எல்லாம் பதிவர் சந்திப்புல சேக்கப்படாது


முகிலன்: அட இருக்கட்டும் தலைவா. கூட்டம் சேக்க வேணாமா?


வானம்பாடிகள்: இந்தா ஈரோடு கதிர் வந்துட்டாரு


ஈரோடு கதிர்: மௌனம் கசிகிற இந்த மாலை வேளையிலே நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்?


அதுசரி: என்ன பாலா சார். கூட்டிட்டு வரும்போதே ஊத்தி விட்டுட்டு ச் சீ விளக்கி விட்டு கூட்டிட்டு வந்திருக்கக்கூடாதா?


வானம்பாடிகள்; அதொண்ணுமில்ல கதிர். நீங்க ஈரோட்டுல பதிவர் சங்கமம் நடத்துன மாதிரி இவங்க சர்வதேச பதிவர் சங்கமம் நடத்தணுமாம். அதுக்கு யோசனை கேக்குறாங்க.


ஈரோடு கதிர்: ஓ அப்பிடியா. அதொண்ணுமில்லீங். ஒரு எடம், ஒரு நாளு ரெண்டையும் முதல்ல குறிச்சிக்கணுங். பொறவு ஒரு விழாக்குழுவ நியமிச்சிக்கணுங். அந்தக் குழுவுல இருக்குற ஓவ்வொருத்தரு அவங்க அவங்க வலைப்பூவுல விளம்பரம் போட்டுரணுங்.


அனைவரும்: சரி


ஈரோடு கதிர்: அப்புறம் மைக் செட்டு, எட வாடகை, சாப்பாட்டுக்கெல்லாம் லோக்கல் பதிவர்கள் மட்டும் பங்கெடுத்துக்கனுமுங். யாராவது லாட்ஜ் வச்சிருக்கிற பதிவராப் பாத்துக்கிட்டீங்க்ன்னா லாட்ஜ் வாடகை மிச்சமுங்.


அனைவரும்: சரி


ஈரோடு கதிர்: அப்புறம் இந்தியாவிலருந்து ஒரு பதிவர், ஈரோட்டுல இருந்து ஒரு பதிவர்னு சிறப்பு விருந்தினரா கூப்டுக்கனுங்.


பழமை பேசி: ஏனுங் மாப்பி. ஈரோடு இந்தியாவுல ஒரு அங்கம் தானுங்?


ஈரோடு கதிர்: அட சும்மாருங் மாப்பி. அப்புறம் நாம எப்ப அமெரிக்கா, ஐரோப்பானு சுத்துரதுங். கேபிள் சங்கரெல்லாம் சிங்கப்பூர் போயிட்டு வந்துட்டாரு.


வானம்பாடி: ஓ அப்பிடி வர்றீரா? சரி சரி


குடுகுடுப்பை: இதெல்லாம் செஞ்சிரலாம். ஆனா எப்பிடி இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்துறது?


ஈரோடு கதிர்: அதுக்கென்னங். நம்ம மாப்பி நாலு பேரு கூடுற கூட்டத்துக்கெல்லாம் பிரமாதமா விளம்பரப் படுத்துறாரு. அவர் கிட்ட உட்டுட்டா விளம்பரம் கலக்கிறப்போறாரு.


முகிலன்: சரி அப்பிடியும் பாப்புலராகலைன்னா?


சின்ன அம்மிணி: நான் எழுதுன அம்மாவுக்கு சாமி வந்திருச்சி கதைய ஒரு குறும்படமா எடுத்து இந்த விழாவ ஒட்டி வெளியிட்டுட்டா??


அனைவரும் சின்ன அம்மிணியை ஒரு பார்வை பார்க்கின்றனர்.


சின்ன அம்மிணி: சரி சரி. வேற எதாவது சொல்லுங்க.


ஈரோடு கதிர்: விழா முடியவும் சுடச்சுட விழா நிகழ்வுகளை படத்தோட எல்லாரும் ஆளுக்கொரு பதிவெழுதிடறதுங்


அதுசரி: அதத் தான் இப்போ நாலு பேரு அகஸ்மாத்தா சந்திச்சிக்கிட்டாக் கூட படமெடுத்து போட்டுராங்களே? அதுல என்ன ஸ்பெசலாகப் போவுது?


வானம்பாடி: நான் என்னோட ரெக்கார்டரை எடுத்துக்கிட்டு வந்து எல்லாரும் பேசுறதை பதிவு செஞ்சி என் ப்ளாக்ல போட்டுடறேன்?


அதுசரி: அதையுந்தான் செய்யறாங்க


பழமை பேசி: நான் காணொளி எடுத்து வெளியிட்டா?


அதுசரி: நீங்களே அதை சலிக்கச்சலிக்க செஞ்சிட்டீங்க


முகிலன்: அப்பிடியும் பரபரப்பாவலைன்னா, நம்ம வில்லன சரக்கடிச்சிட்டு விழாவுல சலம்ப வச்சிரலாம். அதக் கண்டிச்சி ஒரு நாலு பேரு ஆதரிச்சி நாலு பேருன்னு பதிவு போட்ரலாம்.


அதுசரி: ஆமா ஆமா அப்பத்தான் அதுக்கு எதிர் பதிவு, எதிர் பதிவுக்கு எதிர் பதிவு, பின்னூட்டக்கும்மின்னு கொஞ்ச நாளைக்கி பதிவுலகம் பத்திக்கிட்டெரியும்


வில்லன்: நம்ம கெட்ட நேரத்துக்கு அதுவும் ஒர்க் அவுட்டாகலைன்னா?


குடுகுடுப்பை: உம்ம வாயில கொள்ளிக்கட்டையத் தேய்க்க..


நசரேயன்: தேச்சி என்ன புண்ணியம் ஒன்னும் வித்தியாசம் தெரியாது


சங்கர்: அப்பிடி எதுவும் ஒர்க் அவுட் ஆகலைன்னா, இந்த ஆடியோ வீடியோ ஃபோட்டோ போடுற பதிவுகளை குப்பைன்னு சொல்லி நான் ஒரு பதிவு எழுதுறேன்..


அனைவரும்: யாருய்யா அது?


முகிலன்: அட நம்ம சாரு சங்கர்.


அதுசரி: ஐடியா.. பேசாம சாருவை சிறப்பு விருந்தினராக் கூப்பிட்டா என்ன? பதிவுலகமே இதைக் கிண்டல் செஞ்சி எழுதித்தீத்துராது?


குடுகுடுப்பை: நல்ல யோசனையாத்தான் இருக்கு. ஆனா அந்தாளுக்குக் கட்டிங் குடுக்க நாம காசு தேத்த முடியாதே...


பலா பட்டறை ஷங்கர்: நான் உங்க சங்கமத்தை விமர்சனம் செஞ்சி ஒரு பதிவு போடுறேன்.


நசரேயன்: ஆமா ஆமா இவரு நல்லா விமர்சனம் போடுவாரு. கேபிள் சங்கர் புக்குக்கு இவர் எழுதின விமர்சனத்தைப் படிச்சிட்டு அவர் மயங்கி விழுந்துட்டாராம். இப்பிடியெல்லாமா நான் எழுதினேன் அப்பிடின்னு..


முகிலன்: சரி சரி. இது வரைக்கும் ப்ளான் பண்ண திட்டங்களை மட்டும் செயலாக்குவோம்.


நசரேயன்: ஆமா எங்க கூட்டம் நடத்துறது?


அதுசரி: ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொதுவான இடத்துல நடத்தலாம். 


நசரேயன்: அட்லாண்டிக் பெருங்கடல்ல ஆள் நடமாட்டமில்லாத ஒரு தீவு இருக்கு அங்க வச்சிக்கலாம். வரவேற்புக்கு மட்டும் ரெண்டு வடக்கூர்காரிகளைக் கூப்ட்ரணும். (தனக்குள்) அங்கயாச்சும் ரோஜா குடுக்க முடியுதான்னு பாக்குறேன். 


அனைவருக்கும் இந்த யோசனை பிடிக்கவும், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் விழாக் குழுவாக தேர்ந்தெடுத்துவிட்டு கலைந்தனர். 


நிகழ்ச்சியைக் கண்டு களித்த நேயர்களுக்கு நன்றி. நம் சலம்பல் தொலைக்காட்சி பதிவர் சங்கமம் நிகழ்வையும் நேரலையாக உங்களுக்குத் தருவோம் என்ற வாக்குறுதியோடு விடை பெறுகிறோம்.வணக்கம் வணக்கம் வணக்கம்.

Saturday, February 6, 2010

பம்பரம் - கிரிக்கெட்டுக்கு எதிரா?? குடுகுடுப்பையின் எதிர்வினை

என் எழுத்துக்களை மிக விரும்பிப் படிக்கும் வாசகர்களில் 99 சதவிகிதம் பேர் குடுகுடுப்பையின் தீவிர விசிறிகள் என்று எனக்குத் தெரியும். தெரிந்தும்தான் அவ்வப்போது குடுகுடுப்பை பற்றி என் விமர்சனங்களை எழுதி வருகிறேன். என் வாசகர்களை குஷிப்படுத்துவதற்காக எழுதுபவன் அல்ல நான் என்று அவர்களுக்கே தெரியும். ஆனால் அவர்கள் மனதில் ஒரு குழப்பம் உண்டாகிறது. ’ தினம் நடமாடும் ரசிகக் குயிலகள் ’ என்ற அற்புதமான எதிர் கவுஜையை உருவாக்கிய ஒரு கவிஞனை, கவிதையை வெகுவாக சிலாகிக்கக் கூடிய முகிலன் ஏன் விமர்சிக்கிறார் என்ற குழப்பமே அது. குடுகுடுப்பை பற்றி நான் அவ்வப்போது எழுதி வரும் கட்டுரைகளைப் படித்தாலே இதற்கான விளக்கம் கிடைக்கும். நான் எப்போதும் இவ்விஷயத்தில் ஒற்றை வரி விமர்சனங்களை எழுதியதில்லை.


சமீபத்தில் பம்பரம் விடுவதைப் பற்றி கு.ஜ.மு.க தளத்தில் குடுகுடுப்பை எழுதிய ஒரு கட்டுரையைப் படித்த பம்பர ரசிகர் ஒருவர் நான் பம்பரத்துக்கு எதிராக எழுதுவதாகவும் அதைக் கண்டித்தே குடுகுடுப்பை எழுதியிருப்பதாகவும் நினைத்துக் கொண்டு என்னை அடிக்க கக்கூஸில் தேடிக் கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டு இரண்டு நாட்களாக அந்தப் பக்கம் போகாமலே இருந்தேன். ஜெ.வைப் போல வேனுக்குள்ளேயே கக்கூஸ் வைத்துக்கொள்ள இந்த ஏழைப் பதிவனால் முடியுமா?






இப்போது குடுகுடுப்பையின் கட்டுரை. ‘பம்பரம் என்பது சோழர்களின் விளையாட்டு. அதை மட்டம் தட்டுமாறு கிரிக்கெட் பற்றி முகிலன் என்ற பாண்டியர் எழுதி வருகிறார்’ என்பதே அந்தக் கட்டுரையின் சாரம். இதன் முதல் வாக்கியத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சோழர்கள் விளையாடினார்கள் என்றால் அது படுக்கை அறையில் மட்டும் தான். எல்லா விளையாட்டுகளிலும் மன்னர்களாக இருந்த பாண்டியர்களைப் பற்றி மட்டும் நாம் ஏன் எப்போதுமே மௌனம் சாதிக்கிறோம் என்பதே என்னுடைய கேள்வி. இதை நான் குடுகுடுப்பையிடம் கேட்கவில்லை. அவர் தொடர்ந்து பல மொக்கைப் பதிவுகளை எழுதி வருகிறார். பம்பர விளையாட்டின் ரசிகர்களைக் கேட்கிறேன். பம்பரம் மட்டுமே விளையாட்டு, மற்றதெல்லாம் வெறும் கூட்டு, என்ற unique-ஆன இடத்தை பம்பரத்துக்கும் அதை எழுதிய குடுகுடுப்பைக்கும் வழங்குவதை மட்டுமே எதிர்க்கிறேன். முந்தைய காலத்தில் விளையாடிய விளையாட்டுக்கள் - கில்லி தாண்டு, கிட்டிப்புல், கபடி, நொண்டி, பாண்டி, அன்னக்கல் - இந்த வரிசையில் வந்ததே பம்பரம் என்பது என் வாதம். துரதிருஷ்டவசமாக அந்த வரிசையில் வந்த பம்பரம் எனக்குப் பிடிக்கவில்லை, அதைப் பற்றி எழுதிய குடுகுடுப்பையையும் எனக்குப் பிடிக்கவில்லை. ஏன்?


இதைப் புரிந்து கொள்ள கும்மாங்குத்து போன்ற சிறப்பான விளையாட்டு வீரர்கள் ஏன் பம்பரத்தை கொண்டாடினார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்கள் எந்தக் காரணத்துக்காக பம்பரத்தைக் கொண்டாடினார்களோ அதே காரணத்தினால்தான் எனக்கு பம்பரத்தைப் பிடிக்கவில்லை. குறிப்பாக சோழர்களுக்கு பம்பரத்தைப் பிடிக்கும். காரணம், பம்பரம் விளையாட்டு கிரிக்கெட்டின் பந்துவீச்சை பந்து இல்லாமல் கிராமப்புரங்களுக்கு எடுத்துச் சென்றது. அதனால்தான் கும்மாங்குத்துவின் கல்லறையில் உள்ள ஒரே சிலை பம்பரத்துனடையதாக இருந்தது. ஆனால் எனக்கு பம்பரம் விடுவது பம்பரம் விடுவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது,  ‘பம்பரக்குத்து’ வெளிவந்து சோழநாட்டையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்த போது நான் இவ்வாறு குறிப்பிட்டேன்: “இந்த விளையாட்டைத்தான் இனிமேல் சோழ நாடு கொண்டாடப் போகிறது; ஆனால் எனக்கு இந்த விளையாட்டு பிடிக்கவில்லை. “பம்பர விளையாட்டு என்றால் இழுப்பு, சாட்டை போன்ற முறைகளில் இடம் பெற்றதைப் போல் சுத்தமான பம்பர விளையாட்டாக இருக்க வேண்டும். நகர்ப்புற ஒப்பனைகளால் அது அலங்கரிக்கப்பட்டிருக்கக் கூடாது. அதேதான் கிரிக்கெட் பந்து வீச்சுக்கும். ஏற்கனவே பம்பர விளையாட்டு கெட்டியான கோந்து மரக் குத்துகளால் உருவாக்கப்பட்டது. அதில் கொண்டு போய் கிரிக்கெட் பந்து வீச்சைக் கலந்தால் சாராயத்தில் பினாயிலைக் கலந்தது போலத்தான் இருக்கும். 2008-இல், டாஸ்மாக் பாரிலிருந்து வெளியில் டீக்கடைக்கு வந்த நான், ‘ஸ்விங் பவுலிங்’ என்ற கிரிக்கெட்டின் அருமையான வித்தை ‘பம்பரக் குத்து ’ என்ற கொடூர ரசாபாசமாக பட்டிதொட்டியெங்கும் பரவியிருப்பதைக் கண்டு மிரண்டு, ஆர்டர் செய்த டீயை ரத்து செய்து விட்டு டாஸ்மாக்குக்கே திரும்பி விட்டேன்.





இந்த இடத்தில் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் விளையாடிய விளையாட்டுக்களில் கிரிக்கெட்டை விட பம்பரம் அதிகம். பம்பரத்தை விட ஐஸ்பாய் அதிகம். இதன் பொருள் பம்பரத்தை விட ஐஸ்பாய் பெரிய விளையாட்டு என்பதல்ல. பம்பரம் வாங்க என்னிடம் காசு இல்லை என்பதே.
கும்மாங்குத்து போன்ற சோழர்கள் பம்பரத்தைக் கொண்டாடுவதற்கு மற்றொரு காரணம், பம்பரம் பற்றி எழுதிய குடுகுடுப்பை தானே ஒரு சோழனாக மாறியது.



குடுகுடுப்பைக்கு அவர் கற்ற பம்பர விளையாட்டு, கிரிக்கெட், கில்லி தாண்டு ஆகியவற்றைத் தவிர சமகாலத்து உலக விளையாட்டுடன் எந்தப் பரிச்சயமும் கிடையாது ; மேலும் அவருக்கு உலக விளையாட்டும் தெரியாது. சமகால விளையாட்டும், உலக விளையாட்டும் தெரியாமல் பம்பரம் பற்றி பதிவெழுதினால் இப்படித்தான் ஆகும்.


உதாரணமாக, கபடி விளையாட்டின் கடவுள் என்று சொல்லத்தக்க மாப்பு சொடலையை குப்பை என்று குறிப்பிட்டார் குடுகுடுப்பை. காரணம், தனக்குத் தெரிந்த விளையாட்டைத் தவிர வேறு எல்லாமே குப்பை என்ற அவரது அறியாமையும், ஆணவமும்தான். 

இவரால் குப்பை என்று சொல்லப்பட்ட சொடலையைப் பின்பற்றி அவர் வாழ்ந்த ஆஸ்திரேலியாவில் 40000 பேர் தினமும் பியர் குடிக்கின்றனர். ஆஸ்திரேலிய மக்கள் தொகை - அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் இன்ன பிற வெளிநாட்டினரைக் கழித்து விட்டால் - 32000 என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட மனித நேயம் கொண்டவர்களால் தான் நன்றாக பம்பரம் விளையாட முடியும் என்பது என் கருத்து.

கடைசியாக தன் பெயருக்குப் பின்னால் சோழன் என்று பெருமையாகப் போட்டுக் கொள்ளும் இந்த்க் குடுகுடுப்பை, சோழனா? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இவர் வாழ்ந்த ஊர், புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்தது. பின்னாளில் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு பல மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டபோது தஞ்சாவூர் மாவட்டத்தில் சேர்ந்து விட்டது. அப்படி பின்னால் சேர்ந்ததால் இவர் சோழனாகி விட முடியுமா? (அகநானூறையும் புறநானூரையும் புரட்டி இந்தத் தகவல்களைப் திரட்டித்தந்த பழமைபேசி அண்ணனுக்கும், புதுக்கோட்டை சமஸ்தானத்தைப் பற்றி எழுதிய எம்.எம்.அப்துல்லாவுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்) 


புதுக்கோட்டை நாடு பாண்டிய நாட்டிலும் சேராமல் சோழ நாட்டிலும் சேராமல் குறுநிலமாக இருந்தது என்பதற்கு இந்த சங்ககாலப் பாடலே சான்று.


“தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமில் பன்னிரு நாடென்"
என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்குத் தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனன உறுதிப்படுத்துகிறது.

ஆக, சோழனாகப் பிறக்காத ஒருவர் ரசிகர்களை இழுப்பதற்காக சோழன் என்று தன் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளலாமா? இதில் உண்மையான சோழன் “அது சரி” வேறு அவருக்கு டெக்ஸாஸ் கொண்ட சோழன் என்ற பட்டத்தை கொடுத்துள்ளார். இப்போதெல்லாம் பட்டம் கொடுக்கப்படுவதில்லை - வாங்கப் படுகிறது என்பதை இந்த சம்பவமே காட்டுகிறது.

அதெல்லாம் இருக்கட்டும். நான் ஒரு ஏழைப் பொட்டி தட்டி. என் பொட்டி தட்டலுக்கு மாதம் 2500 ரூபாய்தான் சம்பளமாகக் கிடைக்கிறது. இதில் நான் குளிக்கும்போது (மட்டும்) கட்டும் கோவணத்துக்கு 1750 ரூபாய் செலவாகிறது. பின் குளித்துவிட்டு நான் துவட்டும் துண்டுக்கு 500 ரூபாய் ஆகிறது. மீதி இருக்கும் 250 ரூபாயில் நானும் என்னுடன் இருக்கும் இரண்டு எலிக்குட்டிகளும் உண்டு உறங்க வேண்டும். ஆகையால், இனி இந்த சோழ-பாண்டிய/கிரிக்கெட்-பம்பரம் போன்ற கேள்விகளுக்கும்/கட்டுரைகளுக்கும் என் பதிலையும்/எதிர் வினைகளையும் எதிர்பார்ப்பவர்கள் எனக்கு 500 ரூபாயை மணி ஆர்டரிலோ, செக்காகவோ அனுப்பி விட்டு எதிர்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் இதைப் பற்றி இலவசமாக பேசுவதாக இல்லை.