Sunday, November 21, 2010

இப்போ இதுதான் ஃபேஷனாம்..

திருமணத்தை ஏற்றுக்கொண்டவர்கள் லிவிங் டுகேதரை எதிர்த்தே ஆக வேண்டுமா? 
லிவிங் டுகேதரை ஆதரிப்பவர்கள் எல்லாம் திருமணத்தை எதிர்ப்பவர்கள் என்ற அர்த்தமா? 
லிவிங் டுகேதரை ஏன் திருமணத்துக்கு மாற்றாகவே கருதுகிறார்கள் - இரண்டு பக்கம் நின்று பேசுபவர்களும்?


******************************************************************************************************


தனி மனிதத் தாக்குதல் என்பது என்ன?

ஒருவரின் பெயர் போட்டு அவரின் கருத்துகளுக்கு எதிர் கருத்து எழுதுவதா?

இல்லை ஒருவர் கூறிய கருத்துகளுக்கு அவர் பிறப்பும் சாதியுமே காரணம் என்று சொல்வதா?

#டவுட்டு*******************************************************************************************************


ட்விட்டரில் வாந்தியெடுக்கும் அஜீரணக்காரர்கள்

சமீபத்தில் சில “தோழர்”களின் ட்விட்களைப் பார்க்க நேர்ந்தது. பெண்ணுரிமைக்குப் போராடும் போராளிகளான இந்த வீரர்கள் ஒரு பெண்ணை இழிசொற்களால் பகடி செய்து விளையாடுகிறார்கள். இவர்கள் காப்பாற்றும் பெண்ணுரிமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

இதில் இவர்களோடு திடீர் புளியோதரை, திடீர் லெமன் சாதம் போல திடீர் தோழரான இன்னொரு பெண்ணும் சேர்ந்து கும்மியடிக்கிறார். இந்த லட்சணத்தில் அவர் தனக்கொன்று நேர்ந்ததும் என்னைக் கையப் புடிச்சி இழுத்துட்டான் என்று ஊரெல்லாம் ஒப்பாரி வைத்தவர். இவருக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு தக்காளி சாஸ் என்று நினைத்துவிட்டார் போலும்..

யோக்கியன் வரான். சொம்ப எடுத்து ஒளிச்சி வையுங்க..**********************************************************************************************************


பஸ்ல டிவிட்டர்ல போட்ட போஸ்டை எல்லாம் வெட்டி ப்ளாக்ல ஒட்டுறதுதான் இப்போ லேட்டஸ்ட் ஃபேஷனாமே? மேல இருக்கிறதெல்லாம் நம்ம பஸ்ஸு

Wednesday, November 17, 2010

லிவிங் டுகெதர் - ஏதோ என்னால முடிஞ்சது

ஒவ்வொரு மாசமும் பதிவுலகத்துல சூடா எதைப் பத்தியாவது விவாதம் செஞ்சிக்கிட்டு இருக்கணும்ங்கிற நேத்திக்கடனுக்கு இந்த மாசம் லிவிங் டுகெதர். ஜீப்புல எல்லாம் ஏறி பிரபல பதிவர் ஆனதுக்கப்புறம் நாமும் இதைப் பத்தி ஏதாவது கருத்து சொல்லலைன்னா எப்புடி?

லிவிங் டுகெதர் என்பது என்ன?

ஆணும் பெண்ணும் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை (வீட்டில் பார்த்த பெண்/பையன்) வரும் வரை தங்கள் உடற்பசியைத் தீர்த்துக் கொள்ள சேர்ந்து வாழ்கிறோம் என்ற பெயரில் கூத்தடிப்பதா?

இல்லை. இந்த எண்ணத்துடன் செய்வதற்குப் பெயர் ஸ்லீப்பிங் டுகெதர்.

ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்கின்றனர். பழகியதில் இருவருக்கும் ஒத்த அலைவரிசை இருப்பதாகத் தோன்றுகிறது. தனக்கொரு சிறந்த கம்பானியனாக இருப்பார் என்று ஒருவர் மற்றொருவரைப் பற்றி நினைக்கிறார். ஒத்த அலைவரிசையோடு இருப்பவர்கள் சேர்ந்து வாழலாமே? உனக்கென்று நான் எனக்கென்று நீ என்றிருக்கலாமே? என்று முடிவு செய்து ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பிக்கின்றனர். இங்கே முக்கியமான விடயம் கம்பானியன்ஷிப். செக்ஸ் என்பது அதில் பை ப்ராடக்ட் தான். அதற்குத் திருமணம் செய்து கொள்ளலாமே என்று கேட்கலாம். திருமணம் என்பது கமிட்மெண்ட். நம் ரசனை மாறிக் கொண்டே இருக்கிறது. இன்று நமக்குப் பிடித்தது சில ஆண்டுகள் கழித்துப் பிடிக்காமல் போய்விடலாம். இன்று ஒத்தக்கருத்து உடையவர்கள் பின்னாளில் மாற்றுக் கருத்துடையவர்களாகிவிடலாம். அப்போது பிரிய இந்தத் திருமணம் என்ற கமிட்மெண்ட் தடையாயிருக்கலாம் என்ற எண்ணம் உடையவர்கள் லிவிங் டுகெதரைத் தேர்ந்தெடுப்பார்கள். லிவிங் டுகெதராய் இருப்பவர்கள் சிறிது நாட்களில் திருமணமும் செய்து கொள்வார்கள். இப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் நீண்ட நாட்கள் விவாகரத்து செய்யாமல் வாழ்கிறார்கள்.

பொதுவாக இந்த லிவிங் டுகெதர் மேலை நாடுகளில் பிரசித்தம். அங்கே குழந்தைகளுக்கு 13 வயதிலிருந்து செக்ஸ் கல்வி கற்றுத் தரப்படுகிறது. பாதுகாப்பான முறையில் செக்ஸ் வைத்துக்கொள்ளவும், காதல் தோல்விகளைக் கையாள மனதளவில் குழந்தைகளைத் தயார்ப்படுத்தும் மனநல வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. அந்தச் சூழலில் இன்னொருவருடன் வாழத் துவங்குமுன் எதிர்காலத்தைப் பற்றி சரியான ஒப்பந்தத்துக்கு வந்த பின்பே முடிவெடுக்கிறார்கள்.

அதே போல அங்கே your children and my children are playing with our children என்பது சகஜம். அதை குழந்தைகளும் ஏற்றுக் கொள்ள அவர்கள் தயார்ப்படுத்தப்படுகின்றனர். இப்படி தயார்ப்படுத்தப்படும் குழந்தைகளுக்கு ஸ்டெப் ஃபாதர்/ஸ்டெப் மதரோடு வசிப்பது பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்த அளவுக்கு குழந்தை வளர்ப்பும் பக்குவமும் நம் நாட்டில் வந்துவிட்டதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அப்படியிருக்கும்போது லிவிங் டுகெதர் என்ற கலாச்சாரம் அப்படி வாழ்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்றால் கண்டிப்பாக ஏற்படுத்தும். ஆனால் இந்த பாதிப்பை லிவிங் டுகெதர் மட்டுமில்லை. திருமணத்துக்குப் பிறகு விவாகரத்து பெறுபவதும் ஏற்படுத்தும்.

நான் அமெரிக்கா வந்த புதிதில் ஒரு நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது குழந்தை இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி பேச்சு வந்தது. அப்போது அவர், “எப்பிடி இன்னொருத்தன் பிள்ளையைக் கொஞ்சுறது? என்னால எல்லாம் அப்பிடி இருக்க முடியாது” என்று சொன்னார். “ஏங்க தெருவுல போகும்போது எதாவது குழந்தையை நீங்க கொஞ்சுறதில்லையா? உங்க அக்கா, அண்ணன் பிள்ளைகளைக் கொஞ்சுறதில்லையா? அது மாதிரிதான்” என்று சொன்ன போது அவரால் என் வாதத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

நம் நாட்டில் இருக்கும் ஆண்களில் பெரும்பாலானவர்கள் இந்த நண்பரைப் போன்ற மனநிலையில் இருப்பதால் இந்த லிவிங் டுகெதர் கலாச்சாரம் பெண்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு சாரார் நினைக்கின்றனர்.

ஆனால் அப்படிப் புரிதலும் பக்குவமும் இருக்கும் இரண்டு பேர் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் தப்பா? அதை தப்பு என்றும் அவர்களை விபச்சாரம் செய்கிறவர்கள் என்றும் அழைப்பவர்களுக்கும் காதலர் தினம் கொண்டாடியவர்களை அடித்து விரட்டும் “கலாச்சார காவல்க் காட்டு மிராண்டி”களுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை.

லிவிங் டுகெதரை எதிர்ப்பவர்களுக்கு ஒரு கேள்வி, திருமணம் நடந்த பின் மனமுறிவு வந்து கணவனும் மனைவியும் பிரியக் கூடாதா? அப்படிப் பிரிந்தவர்கள் வேறு திருமணம் செய்துகொள்ளக் கூடாதா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற “புனித” கலாச்சாரம் அங்கே அடிபட்டுப் போகிறதே? இதையும் விபச்சாரம் என்று அழைப்பீர்களா?