Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Wednesday, February 24, 2010

சச்சின்

சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின்



சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின்

வேறு வார்த்தைகள் எதுவும் வரவில்லை..

சச்சின் நாட்டுப் பற்றை ஜட்டிக்குள் வைத்திருப்பாரா என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார் அவருக்காக வட்டம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

Friday, February 19, 2010

கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள் - 4

போன பதிவுல வலது கை சுழல் பந்து வீச்சாளர்களைப் பத்தி பேசினோம். இப்போ இடது கை.


இடது கையினால வீசுறதுனால வலது கையால வீசும்போது என்ன எஃபக்ட் வருமோ அதுக்கு அப்பிடியே ரிவர்ஸா வரும். 


அதாவது, வலது கை ஃபிங்கர் ஸ்பின்ல பால் ஆஃப் ஸ்பின் ஆகும். இடது கைல போட்டா லெக் ஸ்பின் ஆகும்.


இடது கை ஃபிங்கர்ஸ்பின்னர்ஸ் எப்பவும் வலது கை ஆட்டக்காரர்களுக்கு எதிரா ரொம்பவே எஃபக்டிவ்வா இருப்பாங்க.  உதாரணத்துக்கு கீழ இருக்குற வீடியோல யுவராஜ் சிங் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனை க்ளீன் போல்டாக்குறதைப் பாருங்க. 





அதே சமயம் இடது கை ஆட்டக்காரர்கள் இவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடறதும் உண்டு. கீழ இருக்கிற வீடியோல ஜெயசூர்யாவை தாதா கிழிக்கிறதைப் பாருங்க. (அந்த ஸ்ரீலங்கன் கமெண்டேட்டர் ஜெயசூர்யாவுக்குக் குடுக்குற பில்ட்-அப்பையும் அதை தாதா தவிடு பொடியாக்குறது காமெடி.)





இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ் ரொம்ப கம்மி. வலது கைல ரிஸ்ட் ஸ்பின் பண்ணா லெக் ஸ்பின். இடது கைல பண்ணா அது ஆஃப் ஸ்பின்னாகும். ப்ராட் ஹாக் இப்போ அப்பிடி பந்து போடுற ஒருத்தர். இன்னொருத்தர் பால் ஆடம்ஸ். சவுத் ஆஃப்ரிக்கன். இவரோட பவுலிங் ஸ்டைலே வித்தியாசம். ரிஸ்ட் ஸ்பின்னரா இருந்தாலும் ரெண்டு விரலால பந்தைப் பிடிச்சித்தான் சுழட்டுவாரு. இவரோட வீடியோ ஒண்ணு இருக்கு பாருங்க.





இப்போ பந்து வீச்சாளர்களோட சைக்காலஜி.


1. பவுலருக்கு முதல் தேவை கான்ஃபிடன்ஸ். எதிர்ல இருக்குற பேட்ஸ்மேன் பெரிய ஆளு, இவருக்கெல்லாம் நாம பவுலிங் போடுறோமே அப்பிடின்னு நினைச்சா அம்புட்டுத்தான். அப்போவே அந்த பவுலர் அவுட்டு. 


2. ஃபாஸ்ட் பவுலருக்குத் தேவை aggression. பந்தைப் போட்டுட்டு பேட்ஸ்மேனைப் பாத்து ஒரு முறை முறைக்கணும். பால அடிச்சாலும் அடிக்கலைன்னாலும். அது அந்த அக்ரஷனைத் தக்க வைக்க உதவும். இதை இன்னிக்கு நேத்தில்ல பல காலமா பவுலர்ஸ் ஃபாலோ பண்ணிட்டு வர்றாங்க. ஆனா ஏனோ இதை இந்திய/இலங்கை/பங்களாதேஷி பவுலர்கள் செஞ்சா பெரிய கொலைக் குத்தம் மாதிரி எல்லாரும் - கமெண்டேட்டர்கள்ல இருந்து பதிவர்கள் வரை - நினைக்கிறாங்க. 


3. முதல்ல பேட்டிங் செஞ்சிட்டு அடுத்த இன்னிங்க்ஸ்ல பவுலிங் போடும் போது, ஸ்கோர் போர்ட்ல நிறைய ரன் இருந்தா பவுலர்கள் அதிக கான்ஃபிடன்ஸா பவுலிங் போடுவாங்க. அதுவே ரொம்ப குறைஞ்ச ஸ்கோரா இருந்தா அந்த கான்ஃபிடன்ஸ் எதிர் பார்க்க முடியாது. உதாரணத்துக்கு இப்போ ஸ்டெயின் - மோர்க்கல் ஜோடியை உலகத்தின் தற்போதைய சிறந்த வேகப் பந்து ஜோடி அப்பிடின்னு சொல்றாங்க. இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவும் இடையே நடந்த முதல் டெஸ்ட் பாத்திங்கன்னா, SA முதல்ல பேட் பிடிச்சி 500 க்கு மேல ரன் எடுத்தாச்சி. அடுத்த நாள் பொறி பறக்க பந்து வீசுனாங்க ரெண்டு பேரும். இந்தியா இன்னிங்க்ஸ் வித்தியாசத்துல தோல்வியைக் கவ்விச்சி. அதுவே அடுத்த டெஸ்ட்ல, 296 ரன்னுக்கு ஆல் அவுட். முந்தின மேட்ச்ல பவுலிங் போட்ட இந்த ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சி? இந்தியா முதல் இன்னிங்க்ஸ்ல 600+ ரன் வெறும் ஆறு விக்கெட் மட்டும் போயி (அதுல ஒன்னு ரன் அவுட்). இதே தான் ஹர்பஜன் - மிஸ்ராவுக்கும், ஆனா அவங்கள யாரும் உலகின் தற்போதைய தலை சிறந்த சுழல் பந்து ஜோடின்னு சொல்றதில்லைங்கறதால அவங்களை மன்னிச்சி விட்டுடலாம்.


சில நேரம் இதுக்கு எக்ஸெப்சனும் உண்டு. 1984/85 ல ஷார்ஜாவுல இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில ஒரு போட்டி. அதுல பாகிஸ்தான் டாஸ் ஜெயிச்சி இந்தியாவ ஃபர்ஸ்ட் பேட் பண்ண சொல்லிட்டாங்க. இந்தியா 43 ஓவர்ல 125 ரன் எடுத்து ஆல் அவுட் ஆகிடுச்சி. டீமே சோகமா ட்ரஸ்ஸிங் ரூம்ல உக்காந்திருக்கும்போது கேப்டன் கபில் தேவ் டீமைக் கூப்பிட்டு சொன்னாராம் - “ஒரு டீமால நம்மள 125 ரன்னுக்கு ஆல் அவுட் செய்ய முடியும்னா, நம்மளாலயும் அவங்கள அதுக்குள்ள சுருட்ட முடியும் அப்பிடின்னு உலகத்துக்குக் காட்டலாம் வாங்க”. மேட்ச் ரிசல்ட் - பாகிஸ்தான் 87 ஆல் அவுட். இது மாதிரி குறைஞ்ச ஸ்கோர் இருந்தாலும் உத்வேகமா பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தர்ற பவுலர்ஸும் இருக்காங்க.


இந்த பந்து வீச்சாளர்களுக்கு கான்ஃபிடன்ஸ் குடுக்குறதுல கேப்டன் முக்கியமான பங்கு வகிக்கிறார். அவரு குடுக்குற ஊக்கத்துல பவுலர் நல்லா பந்து வீசுவார். எல்லா மேட்ச்லயும் பெஸ்ட் பவுலரா இருக்க யாராலயும் முடியாது. எல்லாருக்கும் பர்ப்பிள் பேட்ச் இருக்கும். அந்த சமயத்துல அவங்கள தூக்கிடாம, தொடர்ந்து வாய்ப்புக் குடுத்துப் பாத்தா அவங்க முன்னை விட சிறப்பா வருவாங்க. இந்த விசயத்துல தோனி தொடர்ந்து பலருக்கு வாய்ப்புக் குடுத்துக்கிட்டே இருக்காரு. பாப்போம் அவரு நம்பிக்கையை அந்த பவுலர்கள் காப்பாத்துறாங்களான்னு.


பவுலிங் பத்தி ஓரளவுக்குப் பாத்திட்டோம். அடுத்த பகுதில பேட்டிங் பத்தி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.

Thursday, February 11, 2010

கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள் - 3

ஸ்விங்க் பவுலிங்கையும், பவுன்சரையும் பார்த்தோம். இப்ப யார்க்கர் பாக்கலாம். 


முதல்ல யார்க்கர் அப்பிடிங்கிறது பேட்ஸ்மேனோட காலுக்கிட்ட பந்தை பிட்ச் செய்யறது. பேட்ஸ்மேன் சுதாரிச்சி பேட்டைக் கீழ கொண்டு வர்றதுக்குள்ள பால் ஸ்டம்பைத் தட்டணும். உயரமான பேட்ஸ்மேனோ இல்லை பேட்டைக் கீழ வைக்காம உயர்த்தி பிடிச்சிட்டு இருக்கிற பேட்ஸ்மேனோ இதுக்கு ஈஸியான இலக்கு. வழக்கமா பவுலர்ஸ் சரியா பேட்டிங் செய்ய மாட்டாங்க. இவங்கள டெயில் அப்பிடின்னு சொல்வாங்க. (சில நேரம் வால் ரொம்ப நேரம் ஆடுறதும் உண்டு). இவங்க எல்லாம் யாக்கருக்கு சுலபமான இலக்கு.


யார்க்கர் போடுறதுல ரொம்ப முக்கியம் பால் பிட்ச் ஆகிற இடம். கொஞ்சம் தப்பினாலும் ஃபுல்டாஸ் ஆகிடும். அதே மாதிரி பந்தை வேகமாவும் வீசணும். பேட்ஸ்மேன் சுதாரிக்கிற அளவுக்கு டைம் குடுக்கக் கூடாது. இந்த ரெண்டும் சரியா இருந்துட்டா விக்கெட் உறுதி - போல்டோ எல்.பி.டபிள்யூவோ.


கீழ இருக்கிற வீடியோல டேல் ஸ்டெயின் பிராவோவ அவுட்டாக்குறார் பாருங்க.





இந்த யார்க்கரையும் ரிவர்ஸ் ஸ்விங்கையும் கலந்து போடுறதுல அக்ரம், வக்கார் யூனிஸ் எல்லாம் பழம் தின்னு கொட்டை போட்டவங்க.


ஒரு பவுலரோட திறமை பந்து வீசுறதுல மட்டும் இல்லை. தன்னோட பந்து வீச்சு ஸ்டைலுக்கு ஏற்ப ஃபீல்ட் செட் செய்யறதும் தான். அவுட் ஸ்விங்கர் போடுற பவுலர் 2 அல்லது 3 ஸ்லிப் ஃபீல்டராவது வச்சிட்டு பவுல் பண்ணனும். இல்லைன்னா எட்ஜ் வாங்கினாக்கூட கேட்ச் பிடிக்கிறதுக்கு ஆள் இருக்க மாட்டாங்க. அதே மாதிரி கேப்டன் செட் பண்ற ஃபீல்டுக்கு பவுலிங் போடுறதும் ஒரு திறமை தான். எல்லா ஃபீல்டரையும் ஆஃப் சைட்ல நிறுத்திட்டு ஸ்ட்ரெயிட்டாவோ லெக் சைட்லயோ - நம்ம மனோஜ் பிரபாகர் மாதிரி - போட்டா போங்கு தான். 


சில புத்திசாலி பவுலர், பேட்ஸ்மேனை ஏமாத்துறதுக்கு வேற ஸ்டைல் பவுலிங்குக்கு ஃபீல்ட் செட் பண்ணிட்டு வேற மாதிரி போடுவாங்க. ரெண்டு உதாரணம் பாக்கலாம்.


1. பவுன்சர் போடுறதுக்கு சில்லி பாயிண்ட்லயோ இல்ல சில்லி மிட்-ஆன்லயோ ஒரு ஃபீல்டரைப் போடுவாங்க. எதுக்குன்னா டாப் எட்ஜ் வாங்குற பாலைக் கேட்ச் பண்றதுக்கு. அப்பிடி ஃபீல்ட் செட் பண்ணிட்டு, யார்க்கர் போடுவாங்க - டேல் ஸ்டெயின் மாதிரி பவுலர்கள். பவுன்சரை எதிர்பாத்து இருப்பாரு பேட்ஸ்மேன். ஆனா யார்க்கர் லெங்க்த்ல வந்தா? 


2. ஸ்பின் பவுலர் பேட்ஸ்மேனுக்கு ரெண்டு பக்கத்துலயும் ரெண்டு பேரை நிக்க சொல்லுவாரு - ஃபார்வர்ட் ஷார்ட் லெக் & பேக்வர்ட் ஷார்ட் லெக். பால் டர்ன் ஆகி பேட்ஸ்மேனோட பேட்ல எட்ஜ் வாங்கி கேட்ச் ஆகுறத பிடிக்கிறதுக்காக. ஆனா பவுலர் டெக்னிக்கலா டர்ன் பண்ணாம போடுவார். டர்ன் எதிர்பாத்த பேட்ஸ் மேன் மிஸ் பண்ணிடுவாரு. 


இப்போ ஸ்பின் பவுலிங் பத்தி பாப்போம். ஸ்பின் பவுலிங்க்ல நாலு டைப் இருக்கு


1. ஆஃப் ஸ்பின் - விரலால பந்தை சுழட்டி விடுறது - உ.தா. முரளிதரன்
2. லெக் ஸ்பின் - மணிக்கட்டால பந்தை சுழட்டி விடுறது - உ.தா ஷேன் வார்ன்
3. லெஃப்ட் ஆர்ம் ஆர்த்தோடாக்ஸ் - இடது கை விரல் சுழட்டல் - உ.தா டேனியல் வெட்டோரி
4. லெஃப்ட் ஆர்ம் அன் ஆர்த்தோடாக்ஸ் - இடது கை மணிக்கட்டு சுழட்டல் - உ.தா. ப்ராட் ஹாக்.



ஆஃப் ஸ்பின்
லெக் ஸ்பின்

ஆஃப் ஸ்பின் வெளயாடுறதைக் காட்டிலும் லெக் ஸ்பின் ஆடுறதுதான் கஷ்டம். அதே நேரம் லெக் ஸ்பின்னர் சரியா போடலைன்னா ரன் நிறைய குடுக்க வேண்டி இருக்கும்.

ஷேன் வார்னோயோட லெக் ஸ்பின் பவுலிங்கைப் பாருங்க.


ஆஃப் ஸ்பின்னர்ஸ்ல முரளியை அடிச்சிக்க இன்னொரு ஆள் பிறந்து தான் வரணும். ஷேன் வார்ன் பாலோட மிரர் இமேஜ் இங்க பாருங்க.




ஸ்பின் பவுலிங் போடுறதுக்கு பால் கொஞ்சம் பழசா இருக்கணும். ஏன்னா பழைய, சொரசொரப்பான பால் தான் தரையில படும்போது நல்லா தரையப் பிடிச்சி திரும்பும். அதோட பிட்ச் பழசாக ஆக விரிசல் விட ஆரம்பிச்சிடும். அந்த விரிசலும் பால் டர்ன் ஆகுறதுக்கு உதவி செய்யும்.

வழக்கமா ஆசிய நாடுகள்ல இருந்துதான் நிறைய ஸ்பின் பவுலர் வருவாங்க. அதுக்கு முக்கியமான காரணம் பிட்ச். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மாதிரி நாட்டுல எல்லாம் புல் நிறைய வளர்ந்து பிட்ச் இறுக்கமா இருக்கும். அந்த மாதிரி பிட்ச்ல எல்லாம் ஸ்பின் ஆகுறதுக்கு அவ்வளவா வாய்ப்பு இருக்காது. 


ஸ்பின் பவுலிங்க்ல முக்கியமானது ஃப்ளைட்டிங். அதாவது பால ஏர்ல டைம் குடுக்குறது. இது பேட்ஸ்மேனுக்கு ஒரு தப்பான நம்பிக்கையைக் குடுத்து இறங்கி விளையாடத் தூண்டும். அப்பிடி இறங்கி வர்ற பேட்ஸ்மேன் 50% அந்த பாலை அடிச்சி நொறுக்கினாலும் இன்னொரு 50% மிஸ் பண்ணிடுவார். 


இப்போ நீங்க ஒரு பேட்ஸ்மேன். ஸ்பின்னர் பந்து போட வர்றார். அவரு விரலை சுழட்டுறாரா இல்லை மணிக்கட்டைச் சுழட்டுறாரான்னு பாத்து - பால் ஆஃப் ஸ்பின் ஆகுமா லெக் ஸ்பின் ஆகுமான்னு கணிச்சிருவீங்க. இல்லையா? இப்ப, பவுலர் வர்ரார். விரலை சுழட்டுறாரு. நீங்க ஆஃப் ஸ்பின் ஆகப்போகுதுன்னு நினைக்கிறீங்க. ஆனா பால் லெக் ஸ்பின் ஆனா? இதைத்தான் தூஸ்ரா அப்பிடின்னு சொல்றாங்க. இந்த வித்தையையும் பாகிஸ்தான் காரங்க தான் கண்டுபிடிச்சாங்க. இதுல பெரிய ஆளு சாக்லைன் முஸ்டாக். கீழ இருக்கிற வீடியோ பாருங்க.





முரளிதரனும் தூஸ்ரால பெரிய ஆள்தான். ஆனா அவர் தூஸ்ரா ஒரு காண்ட்ரவர்சியானது அப்பிடிங்கிறதால (துரோ பண்றாருன்னு நெறைய தடவை ஆஸ்திரேலியாக்காரனுக கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்காங்க, பன்னிப்பயலுவ), அவர் வீடியோ குடுக்கலை.


அதே மாதிரி ஒரு லெக் ஸ்பின்னர் லெக் ஸ்பின் ஆக்‌ஷன்ல ஆஃப் ஸ்பின் போட்டா அதுக்குப் பேரு கூக்ளி. இதுக்கு இந்த ஃபேமஸ் வீடியோவை நான் போடலன்னா கிரிக்கெட்டாத்தா என் கண்ணைக் குத்திருவா..


இப்ப புதுசா பரபரப்பா பேசப்படுற கேரம் பால் பத்தியும், இடது கை பந்து வீச்சாளர்களோட ஸ்பின் ஸ்டைல்ஸை அடுத்த பதிவுல பாக்கலாம். இப்போதைக்கு கிரிக்கெட் கடவுளோட சின்ன வயசு வீடியோவைப் போட்டுட்டு ஜகா வாங்கிக்கிறேன்.







Thursday, February 4, 2010

கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள் - 2

போன பதிவுல ஸ்விங்க் பத்தி பாத்துட்டு இருந்தோம். இப்போ அதைத் தொடர்வோம்.


அவுட் ஸ்விங், இன் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் எல்லாம் பாத்தோம். அதுல எங்க இருந்து பால் டேம்ப்பரிங்க் செய்யறாங்க? அப்பிடி செய்யறதால என்ன நன்மை? இதையெல்லாம் இப்பப் பாப்போம்.


முதல்லயே சொன்ன மாதிரி பால் ஸ்விங் ஆகுறதுக்கு ஒரு பக்கம் ஷைனிங்காவும் இன்னொரு மக்கம் சொரசொரப்பாவும் இருக்கணும். தானா ஆகவேண்டிய சொரசொரப்பையும் ஷைனிங்கையும் வலுக்கட்டாயமா கொண்டு வர்றதுதான் பால் டேம்ப்பரிங்க். 


முதல்ல ஷைனிங் எப்பிடி கொண்டு வர்றது? இதுதான் ரொம்ப ஈஸி. பல ஃபாஸ்ட்/மீடியம் ஃபாஸ்ட் பவுலர்ஸ் பாத்திங்கன்னா, முகம் முழுக்க க்ரீம் பூசியிருப்பாங்க. சரி குளிர் நாட்டுல தான் மாய்ஸ்ச்சுரைஸிங்க் லோஷன் தடவுறாங்கன்னா, இந்தியா, ஷார்ஜா மாதிரி வெப்பமான நாட்டுலயும் இப்பிடித்தான் வருவாங்க. 


இப்பிடி வர்றதுல ரெண்டு பயன் இருக்கு. ஒன்னு, முகமெல்லாம் வெள்ளையடிச்சிட்டு வர்றதால பாக்க கொஞ்சம் பயங்கரமா தெரிவாங்க (சில ஃபாஸ்ட் பவுலர்ஸ் முடி வித்தியாசமா வளர்க்குறதுக்கும் இதே காரணம்). இன்னொன்னு, முகத்துல இருக்குற கிரீமை எடுத்து பாலை ஷைன் பண்ணிக்கலாம். இல்லையா, பபுள்கம் இல்லைன்னா எதாவது மிட்டாய் தின்னுக்கிட்டு, அந்த ஜூஸை எடுத்து இந்த வீடியோல ராகுல் ட்ராவிட் (அட ஆமாங்க அவருதான்) செய்யறமாதிரியும் செய்யலாம்.






சொரசொரப்பாக்குறதுக்கு, பல ப்ளேயர்ஸ் பல வித்தைகளை பயன்படுத்தியிருக்காங்க. ரொம்ப பாப்புலரானது நம்ம இம்ரான் கான் - சோடா பாட்டில் மூடியை பயன்படுத்தினதா அவரே பெருமையா டிவியில சொன்னாரு. 


ரிவர்ஸ் ஸ்விங்க்குக்கு சீம் ரொம்ப முக்கியம்னு சொன்னேன். அந்த சீம் வெளிய தூக்கிக்கிட்டு இருந்தாத்தான் பால் நல்லா ரிவர்ஸ் ஸ்விங்க் ஆகும். அதை வெளிய எடுத்து விடுற வேலையை நெறைய பேரு - நம்ம சச்சின் உட்பட - செய்றவங்க தான். அதிகப்படியா அதைக் கடிச்சி வெளிய எடுக்க முயற்சி செஞ்சது, எப்பிடியும் ஜெயிக்கணும்ங்கற அஃப்ரிடியோட ஆர்வக் கோளாறு. அந்த வீடியோவ கீழ பாருங்க




 ஸ்விங்க் பவுலிங்க்ல வேகம் ரொம்ப முக்கியமான காரணமாயிருக்கறதால, நியூஸிலாந்து மாதிரி நாட்டுல எல்லாம் மீடியம் பேஸ் (pace)  அதாவது மித வேகப் பந்து வீச்சு நல்லா ஸ்விங்க் ஆகும். 



பாஸ்ட் பவுலிங்க்ல ஸ்விங்க் அதிகமா ஆகலைன்னா அந்த ஸ்டைல் பவுலிங்க்ல என்னவெல்லாம் செய்யலாம்?


ஃபாஸ்ட் பவுலிங்ல முக்கியமான ரெண்டு விசயம் - பவுன்சரும் யார்க்கரும்.


ரெண்டும் ரெண்டு விதமான வித்தைகள். நீங்க கிரிக்கெட் பாக்கும்போது கமெண்ட்டேட்டர் சொல்றத கேட்டிடுப்பிங்க - குட் லெங்க்த் பால், ஷார்ட் பிட்ச் டெலிவரி, ஃபுல் டாஸ், யார்க்கர் லெங்க்த் பால் - இப்பிடியெல்லாம். இதெல்லாம் என்ன? 


ஒரு பவுலர் பந்தை பிட்ச்ல எந்த எடத்துல பிட்ச் செய்யறார் அப்படிங்கறதத் தான் இவங்க வேற வேற பேர்ல கூப்புடுறாங்க.


இப்ப கீழ இருக்குற படத்தைப் பாருங்க.




இந்தப் படத்துல மேல இருக்குறதெல்லாம் லெங்க்த், கீழ இருக்குறதெல்லாம் இந்த ஸ்டைல் பாலுக்கு எந்த மாதிரி ஷாட் ஆடலாம் அப்பிடின்னு போட்டிருக்கு. பேட்டிங் பத்தி வரும்போது அதையெல்லாம் பாக்கலாம். இப்போ பவுன்ஸர்.


பவுன்ஸர் எப்பவுமே ஒரு ஃபாஸ்ட் பவுலருக்கு ஸ்டாக் பால். பேட்ஸ்மேன் ஃப்ரண்ட் ஃபுட்ல ஃப்ரீயா ஆடிக்கிட்டு இருக்கும் போது அவனை சர்ப்ரைஸ் செய்யறது இந்த பவுன்சர்தான். 


மேல இருக்குற படத்துல ஷார்ட் அப்பிடின்னு இருக்குற இடத்துல பாலை குத்தி, நெஞ்சு இல்லை அதுக்கும் உயரமா எந்திரிக்க விடுறது தான் பவுன்சர். பேட்ஸ்மேன் இதை எதிர்பார்க்கலைன்னா, அந்தப் பந்தை தொட்டு கீப்பர், ஸ்லிப் இல்லைன்னா மிட் விக்கெட்ல கேட்ச் குடுத்துட்டு அவுட் ஆகி போய்க்கிட்டே இருப்பார், இந்த வீடியோல ஷேவாக் மாதிரி.





ஆனா பாலை சரியான இடத்துல பிட்ச் செய்யலைனாலோ இல்லை எதிர் பாத்த அளவு எந்திரிக்கலைன்னாவோ பால் எங்க போய் விழும்னு சொல்ல முடியாது, கீழ இருக்குற வீடியோ மாதிரி..





இந்த பவுன்சர்ல இன்னொரு ஸ்டைல் ஷார்ட் பிட்ச் பால். இது பவுன்சர் மாதிரி குத்திப் போட்டாலும் இடுப்பு உயரத்துக்கு மட்டுமே எழும். எந்தக் கத்துக் குட்டி பேட்ஸ்மேனும் இந்த பாலை அடிக்க முடியும் (நான் உட்பட). ஆனா, சில பவுலர் அதையும் ஐடியா பாலா யூஸ் பண்ணுவாங்க. 

ஃபாஸ்ட்டா போட்டுட்டு இருக்குற பவுலர் திடீர்னு ஒரு ஸ்லோ பால் - அதாவது பவுலிங் ஆக்‌ஷன் பாத்திங்கன்னா ஃபாஸ்ட் பால் போடுற மாதிரியே இருக்கும். ஆனா பந்து மட்டும் ஸ்லோவா வரும் - போட்டு ஷார்ட் பிட்ச் பண்ணுவாங்க. அதை ஃபாஸ்ட்ட வர்ற பால் மாதிரி நினைச்சிக்கிட்டு அடிக்க முயற்சி செய்யற பேட்ஸ்மேன் பந்தை மிஸ்ஸிடுவாரு இல்லைன்னா எட்ஜ் வாங்கி கேட்ச் மாட்டும். 


மிச்சத்த அடுத்த பகுதியில பாப்போம்...


அப்புறம் கிரிக்கெட் ப்ளேயர் ஆகுறதுக்கு வெளயாட தெரிஞ்சிருக்கோ இல்லையோ, பார்ட்டிக்குப் போய் டான்ஸ் ஆடத் தெரிஞ்சிருக்கணும்னு நான் வெளயாட்டா தங்கமணிக்கிட்ட பேசிட்டிருந்தது ஜூனியர் முகிலன் காதுல விழுந்திருச்சி போல.. 

கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள்

முன் குறிப்பு: நான் கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் வித்தகன் இல்லை. ஏதோ எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ள எழுந்த அவாவே இந்தப் பதிவு. வரவேற்பைப் பொறுத்து தொடர்வேன்.

கிரிக்கெட் - “பதினோரு முட்டாள்கள் விளையாட பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்” - ஜார்ஜ் பெர்னாட் ஷா சொன்ன பொன்மொழி. 

கிரிக்கெட் ஒரு டீம் கேம். ஒரு ஆள் தப்பு செஞ்சிட்டாக்கூட அத்தனை பேரோட உழைப்பும் வீணாப் போயிரும் (நன்றி நர்சிம்).

கிரிக்கெட்ல நிறைய தெரியாத, அறியாத விசயம் இருக்கு. நிறைய விசயங்கள்ல அறிவியலும் இருக்கு.

பவுலிங் - பந்துவீச்சு

ஃபீல்டிங் செய்யும் அணியின் முக்கியமான ஆயுதம் பந்து வீச்சு. பந்து வீச்சு சரியில்லைன்னா பேட்ஸ்மேனோட உழைப்பு வேஸ்டாப் போயிரும்.

பவுலிங்க்ல fast, medium fast, spin - வேகம், மித வேகம், சுழல் - அப்பிடின்னு மூணு வகை சொல்லலாம். வேகத்துலயும் மித வேகத்துலயும் ஸ்விங்க் (swing) அப்பிடின்னு ஒரு வித்தை இருக்கு. அதைப் பத்தி கொஞ்சம் பாப்போம்.

காத்துலயே பந்தை திரும்ப வைக்கிறது தான் ஸ்விங்க். பேட்ஸ்மேன் பந்து நேரா வரும்னு நினைச்சிட்டு இருக்கும்போது பந்து அப்பிடியே காத்துல ஸ்விங்க் ஆகி அவரை விட்டு விலகிப் போச்சின்னா - அதுக்குப் பேரு அவுட்ஸ்விங்.

உதாரணத்துக்கு இந்த வீடியோ பாருங்க



இஷாந்த் சர்மா பாண்டிங்குக்கு போட்ட அவுட்ஸ்விங்க். பந்து நேரா வரும்னு பாண்டிங்க் எதிர்பாத்து இருக்க, அது லேசா வெளிய போனதால பேட்டோட எட்ஜ்ல பட்டு ராகுல் ட்ராவிட் கைல கேட்சாப் போயிருச்சி.

அதே மாதிரி வெளிய போகும் இல்ல நேரா வரும்னு நெனச்சிக்கிட்டு இருக்கும் போது பந்து திடீர்னு உள்ள திரும்பிச்சின்னா அதுக்குப் பேரு இன்ஸ்விங். அதுக்கு உதாரணமா இந்த வீடியோவப் பாருங்க



அதே இஷாந்த் அதே பாண்டிங். இந்தத் தடவை இன்ஸ்விங். க்ளீன் போல்டு. இது மாதிரி ரெண்டு விதமான ஸ்விங்கையும் கலந்து வீசுறது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.

சரி பந்து எப்பிடி ஸ்விங்க் ஆகுது? நீங்க கிரிக்கெட் விளையாட்டுல பாத்துருப்பீங்க. பந்தை விடாம பேண்ட்ல தேச்சிட்டே இருப்பாங்க. நல்லா கவனிச்சிருந்தீங்கன்னா, ஒரு பக்கத்தை மட்டும் தான் தேய்ப்பாங்க. இன்னொரு பக்கத்தை தேய்க்க மாட்டாங்க. அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. அதைப் பாக்குறதுக்கு முன்னால பெர்னோலீ விளைவு பத்திப் பாப்போம்.

பெர்னோலி தியரம் என்ன சொல்லுதுன்னா - அதிக ஒட்டுந்தன்மை இல்லாத (low-viscous) பாய்மத்தின் (FLUID)  வேகம் அதிகரிக்கும்போது அதன் அழுத்தம் குறையும்.

இதை சுலபமா விளக்கணும்னா, ஒரு ப்ளாஸ்டிக் பாட்டில் எடுத்துக்கிட்டு அதோட அடிப்பக்கத்தை வெட்டி எடுத்துருங்க. அதுக்குள்ள இப்ப ஒரு டேபிள் டென்னிஸ் பந்தைப் போட்டுக்குங்க.
இப்ப மேல இருக்குற படத்துல இருக்குற மாதிரி வச்சிக்கிட்டு கீழ இருந்து ஊதி அந்தப் பந்தை வெளிய தள்ள முயற்சி பண்ணுங்க. முடியாது. நீங்க வேகமா ஊத ஊத பந்து பாட்டிலோட ஒட்டிக்கும்.

இந்த விளைவின் காரணமாகத்தான் விமானம் பறக்கிறது, பறவைகள் பறக்கின்றன, புயலின் போது வீட்டுக் கூரைகள் அடித்துச் செல்லப்படுகின்றன.

இதே தத்துவத்தில் தான் பந்தும் ஸ்விங்க் ஆகுதுன்னு சொன்னா ஆச்சரியமா இருக்கா?

நான் முதல்லயே சொன்ன மாதிரி ஒரு பக்கம் பளபளப்பாவும் (shining) இன்னொரு பக்கம் பளபளப்பு மங்கியும் இருக்கும். இந்தப் பந்து நேரா வீசும் போது பளபளப்பான பக்கம் காத்து வழுக்கிட்டு போறதால வேகமாவும், சொரசொரப்பான பக்கத்துல காத்தோட வேகம் கொஞ்சம் மட்டுப்பட்டும் இருக்கும். இதால, பளபளப்பான பக்கத்துல அழுத்தம் குறைஞ்சிடும். இந்தப் பக்கம் அழுத்தம் அதிகமா இருக்கிறதால, காத்து அழுத்தம் அதிகமான இடத்துல இருந்து அழுத்தம் குறைஞ்ச இடத்துக்கு போக முயற்சி பண்ணும். அந்த முயற்சில பந்தையும் இழுத்துக்கிட்டு போயிடும்.

அதுனால அவுட் ஸ்விங்க் போடணும்னா பளபளப்பான பக்கம் வலது பக்கமும், இன்ஸ்விங்க் போடணும்னா பளபளப்பான பக்கம் இடது பக்கமும் இருக்கணும்.

சுலபமா எழுதிட்டேன். ஆனா பந்து வீசுறது சுலபம் இல்லை. அதோட சரியான இடத்துல பந்தை பிட்ச் செய்யறதும் முக்கியம். இந்தியா மாதிரி ட்ரையான காத்து இருக்குற ஊருல பந்து அவ்வளவா ஸ்விங் ஆகாது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மாதிரி க்ளைமேட்ல பந்து நல்லா ஸ்விங்க் ஆகும்.

அதோட பந்து பளபளப்பா இருக்கணும் அப்பிடிங்கிறதும் முக்கியம்ங்கறதால பந்து புதுசா இருக்கும்போது தான் ஸ்விங்க் நல்லா ஆகும். பழசாக ஆக, பந்தோட ஸ்விங்க் குறைஞ்சிடும். அதுலயும் ஒன் - டே விளையாடுற வெள்ளைப் பந்து சீக்கிரமா பழசாகிடும்.

(இந்தியால முன்னாடி (பிஷன் சிங் பேடி காலத்துல) ஃபாஸ்ட் பவுலர் அவ்வளவா கிடையாது. ஸ்பின் பவுலிங்தான். ஸ்பின் க்வார்டெட் (spin quartet) அப்பிடின்னு - எர்ரபள்ளி பிரசன்னா, வெங்கட்ராகவன் (அம்பயரா நிப்பாரே அவரே தான்), சந்திரசேகர், பிஷன் சிங் பேடி - இவங்க நாலு பேரையும் கூப்பிடுவாங்க. புது பந்துல ஸ்பின் போடுறது கஷ்டம் அப்பிடிங்கிறதால, பந்த தரையில உருட்டி உருட்டி விட்டு வேகமா பழசாக்குவாங்க. கபில்தேவ் வர்ற வரைக்கும் இதுதான் நடந்தது)

பேட்ஸ்மேன் ஸ்விங்க் விளையாடுறதுக்கு பழகிட்டா ஈஸி தான். ஆனா அதுக்கு அந்த பவுலரையும் அவர் பவுலிங்க் போடுற ஸ்டைலையும் நல்லா தெரிஞ்சி வச்சிருக்கணும். அவுட் ஸ்விங் போடும்போது எப்பிடி பந்தை க்ரிப் பண்ணியிருப்பான். இன் ஸ்விங் போடும்போது எப்பிடி க்ரிப் பண்ணியிருப்பான்னு. இன்னைக்கி டெக்னாலஜி ரொம்ப முன்னேறி இருக்கறதால வீடியோ க்ளிப்பிங்க்ஸ் வச்சி புரிஞ்சிக்கிறாங்க.

(ஆனா இந்த வாசிம் அக்ரம் மட்டும் கொஞ்சம் கஷ்டம் தான். அந்த ஆள் பந்து போட வர்ற கடைசி நிமிசம் வரைக்கும் வலது கைல தான் பந்தை வச்சிருப்பாரு. பந்து வீச கைய சுத்துர முன்னாடி இடது கைக்கு மாத்திக்கிட்டு வீசுவாரு)

சரி பந்து பழசாயிட்டா அப்போ ஸ்பின் பவுலிங் மட்டும் தான் ஒரே வழியான்னா. இல்லை. அப்பவும் ஒரு ஸ்விங்க் ஸ்டைல் இருக்கு. அதுதான் ரிவர்ஸ் ஸ்விங்க்.

ரிவர்ஸ் ஸ்விங்கை கண்டு பிடிச்சது நம்ம பங்காளி பாகிஸ்தான்காரங்க. சர்ஃப்ராஸ் நவாஸும், சிக்கந்தர் பக்த்தும். இவங்க இம்ரான் கானுக்கு சொல்லிக் குடுத்துட்டுப் போனாங்க. அதை அவர் வாசிம் அக்ரமுக்கும் வக்கார் யூனுஸுக்கும் சொல்லிக் குடுத்தார். ரொம்ப நாள் இது ஒரு ப்ளாக் மேஜிக் மாதிரியே இருந்து வந்திச்சி. இப்ப கிட்டத்தட்ட எல்லாரும் ரிவர்ஸ் ஸ்விங் பண்றாங்க. அதிலயும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி க்ளைமேட்ல ரிவர்ஸ் ஸ்விங் நல்லாவே வரும்.

ரிவர்ஸ் ஸ்விங் உதாரணத்துக்கு இந்த வீடியோ பாருங்க.



வக்கார் யூனுஸ், பேட்டிங் ஜாம்பவான் லாராவையே திணறித் தண்ணி குடிக்க வைக்கிறார் பாருங்க.

(ரொம்ப வருசம் பாகிஸ்தான் காரங்க பந்த சிதைச்சி - tamper - த்தான் ரிவர்ஸ் ஸ்விங் போடுறாங்கன்னு குத்தம் சொல்லிட்டு இருந்தாங்க. இங்கிலாந்து ஒரு படி மேல போய் ரிவர்ஸ் ஸ்விங்கைத் தடை பண்ணனும்னெல்லாம் சொன்னாங்க. கடைசியில 2005ல அதே ரிவர்ஸ் ஸ்விங்க் வச்சித்தான் ஆஸ்திரேலியாவை ஆஷஸ் தொடர்ல ஜெயிச்சாங்க)

சரி ரிவர்ஸ் ஸ்விங் எப்பிடி ஆகுது? பேட்டால அடிக்கப்பட்ட பந்து லேசா வடிவம் இழந்து (ரொம்ப இழந்தா பந்தை மாத்திருவாங்க) ஒருபக்கம் ஹெவியா இருக்கும். அதோட சீம் (பந்துக்கு நடுவுல இருக்குற தையல்) மேல வர ஆரம்பிச்சிருக்கும். பந்தை சீம் ஒரு சாய்வா இருக்கிற மாதிரி பிடிச்சுப் போட்டா, காத்து அந்த சீம்ல பட்டு வேகம் மட்டுப் பட்டுடும். அதே பெர்னோலி தியர அடிப்படையில பந்து காத்துல நகர ஆரம்பிக்கும்.

இந்த ஸ்டைல் ஸ்விங்க் விளையாடுறது பேட்ஸ்மேனுக்கு கொஞ்சம் கஷ்டம்.ஏன்?

ரிவர்ஸ் ஸ்விங்ல முதல்ல பந்து இன்ஸ்விங்க் ஆகுறது மாதிரி உள்ள திரும்பி அடுத்து அப்பிடியே வெளிய திரும்பிடும் (பெக்காம் அடிக்கிற ஃப்ரீ கிக் மாதிரி). இன்ஸ்விங்க்னு நினைச்சி ஆடப் போன பேட்ஸ்மேன் கேட்ச் அவுட் ஆகிடுவான். அல்லது அவுட் ஸ்விங்க் மாதிரி போய் இன்ஸ்விங்க் ஆகும். வெளிய போயிடும்னு நினைச்ச பந்து உள்ள வந்து அந்த வீடியோல லாரா ஆன மாதிரி ஸ்டம்பத் தட்டிட்டுப் போயிடும். இதுல வக்கார் யூனிஸ் போடுறது டபுள் இன்ஸ்விங்க் ஆகும் - பனானா ஸ்விங்க்னு கூப்பிடுவாங்க. வக்கார் தவிர வேற யார் போட்டும் பாத்ததில்லை.

இந்தப் பதிவுக்கு இது போதும்னு நினைக்கிறேன். இனி இதுக்கு வரவேற்பு நல்லா இருந்தா அடுத்தடுத்து எனக்குத் தெரிஞ்சதைப் பகிர்ந்துக்கிறேன்.