Sunday, February 28, 2010

பிதற்றல்கள் - 02/28/2010

பல வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கிரிக்கெட் சம்மந்தப்பட்ட பதிவுகள் இந்த வலைப்பூவுக்கு மாற்றப்பட்டுள்ளது. உங்கள் மேலான ஆதரவை அங்கேயும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கிரிக்கெட் பிதற்றல்கள்
=======================
ரொம்ப நாளா நான் எழுதுற கிரிக்கெட் பதிவுகள் பிடிக்காத ஒருத்தர் இனிமே நீ கிரிக்கெட் பத்தி எழுதினா உன் ப்ளாக் பக்கமே வர மாட்டேன். ஸ்விட்சர்லாந்திலயே இருந்திருவேன்னு சொன்னதால, வேற வழியே இல்லாம என்னோட கிரிக்கெட் அரிப்பைத் தணிச்சிக்கிறதுக்காக கிரிக்கெட் பதிவுகளை தனியா ஒரு ப்ளாக்ல போட்டுட்டேன் - கிரிக்கெட் பிதற்றல்கள் .

இனிமே என்னோட கிரிக்கெட் பத்தின இடுகைகளைப் பாக்க வேண்டாம் அப்பிடின்னு நினைக்கிறவங்க இங்கயே நின்னுக்கலாம். கிரிக்கெட் இடுகைக்கு மட்டும் தான் வர்றோம்னு சொல்றவங்க அங்க மட்டும் நின்னுக்கலாம். ரெண்டுமே பாப்போம்னு சொல்றவங்க வேற வழியில்ல ரெண்டு வீட்டுக்கும் வந்து தான் ஆகணும். ரெண்டுமே வேணாம்டான்னு சொல்றவங்க வேற நல்ல ப்ளாக் பாத்து போங்க.. :)) இப்ப நான் எழுதுற இந்த கிரிக்கெட் தான் இந்த ப்ளாக்ல நான் கடைசியா எழுதுற அந்த விளையாட்டப் பத்தின வார்த்தை.

இந்தியா - பாகிஸ்தான்
======================
ரொம்ப சந்தோசம்ங்க. இந்தியா இன்னிக்கி பாகிஸ்தானை தோறகடிச்சிருச்சி. அதான் கிரிக்கெட் பத்தி எழுத மாட்டேன்னு சொல்லிட்டேன்ல. இது ஹாக்கி மேட்டர். 4-1 அப்பிடிங்கிற கோல் கணக்குல வெற்றிக்கனியைத் தட்டிப் பறிச்சிருக்கு. இதே வேகத்தோட உலகக் கோப்பையையும் பிடிங்கிட்டு வந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்.

அனோமா பொன்சேகா
======================
எனக்கு வந்த ஆத்திரத்துக்கு இந்தம்மா பேரை எழுதி அந்தப் பேப்பரை சுக்கு நூறா கிழிச்சி எறிஞ்சேன். அப்புறம் என்னங்க. அந்தாளு செயில்ல இருந்துக்கிட்டே தேர்தல்ல நிக்கிறதுக்கு மனு தாக்கல் செஞ்சாராம். காந்தி, மண்டேலாவுக்கு அப்புறம் இவருக்குத்தான் அந்தக் குடுப்பினை கெடச்சிருக்காம். யார யாரு கூட கம்ப்பேர் பண்றதுன்னு ஒரு விவஸ்தை வேணாம்? இவங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.

த்ரீ இடியட்ஸ்
=============
ஓப்பனிங் சீன். காலேஜ்ல சீனியர்ஸ் எல்லாம் ஜூனியர்ஸ ராக்கிங் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அப்ப ஜூனியர்ஸ் எல்லாம் ரொம்ப கஷ்டப் படுறாங்க. ஒருத்தர் சொல்றாரு “இதை எல்லாம் யாரு கேக்கப்போறாங்க?”
“அதுக்குன்னு ஒருத்தன் பொறந்திருப்பான்”
உடனே கட் பண்ணி வெளிய காட்டுறாங்க. ஷூ போட்ட ரெண்டு கால் மட்டும் வேகமா ஓடி வருது. அப்பிடியே மேல கேமரா போகுது. முதுகுல ஒரு பேக்பாக் மாட்டிக்கிட்டு ஒரு உருவம் வேகமா ஒடுது. அப்பிடியே ஓடி ஒரு பஸ்ஸை ஓவர் டேக் பண்ணி திரும்பி அந்த டிரைவரைப் பாத்து ஒரு லுக்கு விடுது. அப்பிடியே அந்த பஸ்ஸோட கண்ணாடி வழியாக் காட்டுறாங்க. கையச் சுழட்டி ஒரு சல்யூட் வக்கிது. அப்பிடியே ஒரு குத்து ஓப்பனிங் சாங்.

அப்புறம் அந்தக் காலேஜுக்குள்ள நுழையிறாரு. சீனியர்ஸ் அவரையும் ராக்கிங் பண்ணப் பாக்குறாங்க. அப்ப சொல்றாரு - “என்ன ராக்கிங்க் பண்ணனும்னா நானா பண்ணிக்கிட்டாத்தான் உண்டு. வேற வேற வேற எவனாலயும் பண்ண முடியாது”

இப்பிடித்தான் இருக்கப் போவுது தமிழ்ல.. ஏன்னா அதுல விஜய் நடிக்கப்போறாராம். இந்த விசயம் கேள்விப் பட்டதுல இருந்து சரியா தூக்கமே வர மாட்டேங்குது. தமிழ் கூறும் நல்லுலகம் இன்னும் என்ன எல்லாம் சோதனைய அனுபவிக்கனுமோ தெரியலை.

பனிப் பொழிவு
==============
கடந்த நாலு நாளா இங்க சரியான பனிப் பொழிவு. வீட்டச் சுத்தி ஒரே பனி. நம்ம ஜூனியர் இதுவரைக்கும் பல தடவை பனிப் பொழிவைப் பாத்திருந்தாலும், இதுவரைக்கும் அதுல விளையாடினது இல்ல. இந்தத் தடவை கொஞ்சம் அதிகமாவே இருக்கவும் அவருக்கு ஸ்னோ ஜாக்கெட் போட்டு விட்டு வெளிய இறக்கி விட்டோம். நல்லா எஞ்சாய் செஞ்சாரு. அதுக்கப்புறம் அடிக்கடி வெளிய போகணும்னு அடம்புடிக்க ஆரம்பிச்சிட்டாரு.

Wednesday, February 24, 2010

சச்சின்

சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின்



சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின்

வேறு வார்த்தைகள் எதுவும் வரவில்லை..

சச்சின் நாட்டுப் பற்றை ஜட்டிக்குள் வைத்திருப்பாரா என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார் அவருக்காக வட்டம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

Tuesday, February 23, 2010

கிரிக்கெட் - ஸ்லெட்ஜிங்

இது கிரிக்கெட் கற்றுக்கொள்ளலாம் வாருங்கள் பதிவு அல்ல..

சில நாட்களுக்கு முன் இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்கிறார்கள் என்பதைப் பற்றி யாரோ எழுதியிருந்தார்கள். இதைப் பற்றி யூ ட்யூபில் தேடிக் கொண்டிருந்த போது சில பல வீடியோக்கள் சிக்கின. ஆஸ்திரேலியர்கள்/இங்கிலாந்து வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்வது எல்லாருக்கும் தெரியும். அவர்களது வீடியோ தேவையில்லை. இது நாம் எதிர்பார்க்காத சில நபர்கள் செய்யும் ஸ்லெட்ஜிங்.

1. தென்னாப்ரிக்காவின் மார்க் பவுச்சர் - ஜிம்பாப்வேயின் தாய்புவை - சப்டைட்டிலோடு இருக்கிறது.



2. இலங்கையின் குமார சங்கக்கர - தென்னாப்ரிக்காவின் ஷான் பொல்லாக்கை



3. இலங்கையின் ரோஷன் மகானமா - ஆஸ்திரேலியாவின் இயன் ஹீலியை.
இதில் ட்ராப் வைத்தது ஹீலி, விழுந்தது மகானமா. விழுந்துவிட்டார் என்பது அடுத்த பந்திலேயே தெரிகிறது.



4. தென்னாப்ரிக்காவின் ஹெர்ஷெல் கிப்ஸ் - பாகிஸ்தானிகளை மிகவும் மோசமான வார்த்தைகளால்..

கிரிக்கெட் தொடர் பதிவு

பவன் இதை ஆரம்பித்த போதே படித்தேன். நமக்கு மிகவும் பிடித்த விளையாட்டில், மிகவும் பிடித்த விளையாட்டு வீரர்களைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பு என்று நினைத்தேன். நான் பவனுடன் சில முறை கிரிக்கெட் சம்மந்தமான வாதத்தில் ஈடுபட்டதால் எனக்குப் பிடிக்காத பிரிவுகளில் அவருக்குப்பிடித்த இலங்கை வீரர்களைச் சேர்த்துவிடுவேன் என்று நினைத்தாரோ என்னவோ :), அவர் என்னைத் தொடர அழைக்கவில்லை. அவர் அழைத்த ஆட்களுக்கும் எனக்கும் அவ்வளவாக அறிமுகம் இல்லாததால் என்னை யாரும் அழைக்கமாட்டார்கள் என்று (நிஜம்மா) ஏங்கிப் போயிருந்தேன்.


ஆனால் நர்சிம் அழைப்பார் என்பதை சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை. நன்றி நர்சிம். சென்னை வரும்போது உங்களுக்கு ஸ்பெசலாக ஏதாவது வாங்கி வருகிறேன்(சும்மா லுல்லலாயிக்கி).


இத்தொடர்பதிவின் விதிமுறைகள்


1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
*******

1.பிடித்த கிரிக்கெட் வீரர்

சச்சின் – கிரிக்கெட் கடவுள்
சிறு வயதில் (3 வயதில்) டென்னிஸ் ராக்கெட்டைத்தான் தூக்கிக்கொண்டே சுற்றுவாராம் இவர். பின்னாளில் தான் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் வந்ததாம்.

கபில் தேவ் –இந்திய அணியின் ஒரே உலகக் கோப்பையை பெற்றுத் தந்ததற்காக.
அந்த உலகக்கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய அணியை இவர் 175 அடித்து தூக்கிவிட்ட அந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டி பி.பி.சியின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பதிவு செய்யப்படாமலே போயிற்று.

சனத் ஜெயசூரிய – ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற அணிகளைப் போலப் பார்க்கப்பட்டு வந்த இலங்கை அணியை தனது பேட்டிங்கால் உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்குக் கொண்டு சென்றதற்காக.
இவர் அணியில் பந்து வீச்சாளராக சேர்க்கப் பட்டவர், பின்னால் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு சாதனை பல புரிந்தார்.

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் –

ஆஸ்திரேலிய அணியின் சீருடையை (டெஸ்ட் போட்டி என்றால் பச்சைத் தொப்பியை) அணிந்திருக்கும் எந்த வீரரும்.

3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் –

அக்ரம் – அக்ரம் கடைசி ஓவர் ஸ்பெசலிஸ்ட் – ஆறு டெலிவரிகளை ஏழு விதங்களில் போடுவதில் வல்லவர் (அதென்ன ஏழு மாதிரி, சில நேரம் வேண்டுமென்றே ஒரு ஒய்ட் போடுவார், அதையும் சேர்த்து)
ஒரு நாள் போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக்குகளும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக்குகளும் எடுத்த ஒரே பவுலர் இவர்தான். அதிலும் இவரது டெஸ்ட் ஹாட்ரிக்குகள் ஒரே (இலங்கை அணிக்கு எதிரான) தொடரில் அடுத்தடுத்து எடுக்கப்பட்டவை.

4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்

மனோஜ் பிரபாகர் – அசாருதீன் ஐந்து ஃபீல்டர்களை ஆஃப் சைடில் நிறுத்தி, ட்ராப் செட் செய்வார். நம்ம அண்ணன் அழகாக பந்தை லெக் சைடில் போடுவார்.
மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக இவர் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்டார்.

க்ளென் மெக்ரா - மேற்கிந்தியத் தீவு வீரர் சர்வனைப் பார்த்து - “How is Lara's d**k?" என்று கேட்டு, அதற்கு அவர் - “Ask your wife" என்று சொல்லிவிட பாய்ந்து சர்வனின் சட்டையைப் பிடித்தார். (மெக்ராவின் மனைவி கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தார்). இந்த சம்பவத்தினால் அவரை எனக்குப் பிடிக்காது. (கடைசியில் அபராதம் கட்டியதென்னவோ சர்வன் தான்).

5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர்

ஷேன் வார்னே – சுழல் பந்தின் மன்னன். இவர் வீசிய பால் ஆஃப் த சென்ச்சுரி மறக்க முடியாதது.
இவரை Best Captain Australia Never had என்று சொல்வார்கள். ஸ்டீவ் வாவின் ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணியின் தலைமைக்கு வந்திருக்க வேண்டியவர், கிரிக்கெட் அல்லாத காரணங்களுக்காக தலைமைப் பதவிக்கு வர இயலாமலே போய் விட்டது.

சச்சின் டெண்டுல்கர் – டைட்டன் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஓவர், கொச்சியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த ஐந்து விக்கெட்டுகள், இவை போதாது இவரை இந்த லிஸ்டில் சேர்ப்பதற்கு?

அனில் கும்ப்ளே – தாடையில் பந்து பட்டு சேதமடைந்திருந்த போதிலும் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் தலையையும் தாடையையும் சேர்த்து கட்டுப் போட்டுக்கொண்டு பந்து வீச வந்த ஆர்வம்.
டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே இன்னிங்க்ஸில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையைப் பாராட்டும் வண்ணம் பெங்களூருவில் எம்.ஜி ரோடு, செயிண்ட் மார்க்ஸ் ரோடு, கஸ்தூரி பா ரோடு இணையும் சந்திப்புக்கு அனில் கும்ப்ளே சர்க்கிள் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது கர்னாடக அரசு.

6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர்

ஆஷ்லே கைல்ஸ் – நெகட்டிவ் லைன் பவுலிங் போட்டு வெறுப்பேற்றியதால்.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 271 இன்னிங்க்ஸ்களில் 242 முறை அவுட் ஆகியுள்ளார். இந்த 242 முறைகளில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தது ஒரே முறைதான். அப்படி இவரை ஆட்டமிழக்கச் செய்த பெருமை கைல்ஸ்ஸுக்கே.

7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர் –

சச்சின் – கடவுளைச் சொல்லாமல் இருக்க முடியுமா?

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் – வெறும் தொப்பி மட்டும் போட்டுக் கொண்டு அசால்டாக பந்துகளை சிக்சருக்கும் ஃபோருக்கும் அனுப்பிக் கொண்டிருப்பார்
இவருக்கும் இந்திய நடிகை நீனா குப்தாவுக்கும் (சோளி கே பீச்சே கியா ஹை) ஏற்பட்ட குறுகிய கால தொடர்புக்கு அடையாளமாக நீனாவுக்கு மசாபா என்ற மகள் இருக்கிறார்.

வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் – ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனம்
தனது முதல் ஒரு நாள் போட்டியிலும் கடைசி ஒரு நாள் போட்டியிலும் டக் அவுட் ஆன பெருமை இவருக்கு உண்டு. 100 டெஸ்ட் போட்டிகளைக் கடந்து வந்தாலும் ஒரு உலகக்கோப்பை போட்டித் தொடரில் கூட விளையாடியதில்லை.

சமீபத்தில் – ஹஷிம் ஆம்லா.
இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையில் நடை பெற்ற டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ் (கமெண்டேட்டர்) இவரை டெரரிஸ்ட் என்று அழைத்து தன் கமெண்டேட்டர் வேலையை இழந்தார்.

8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர்

க்றிஸ் மார்ட்டின் – நியூசிலாந்தைச் சேர்ந்தவர். “how to bat like Chris Martin” வீடியோவை யூ-ட்யூபில் பாருங்கள்.
ஐம்பத்தி நாலே போட்டிகளில் 27 முட்டைகள் வாங்கிய வீரர் இவர்தான். கூடிய விரைவில் வால்ஷின் (43) சாதனையை முறியடிப்பார் என்று எண்ணுகிறேன்.

9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர்

சவுரவ் கங்குலி – இவரது ஆஃப் ட்ரைவ்களுக்கும், ஸ்பின்னரை இறங்கி வந்து சிக்ஸருக்கு அனுப்பும் ஷாட்டிற்கும் நான் ரசிகன்
1992/93 ஆம் ஆண்டு இந்திய அணியில் சேர்க்கப்பட்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்த போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படாத போது, ட்ரிங்க்ஸ் எடுத்துச் செல்ல மறுத்த காரணத்தால் அணியை விட்டு நீக்கப் பட்டார். 

10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர்

லாரா – சிறந்த வீரர் என்றாலும், சுய சாதனைகளுக்காக(400 ரன்கள்), வெற்றி பெற வேண்டிய போட்டியை (சமன் செய்ய வேண்டிய தொடரை) டிரா செய்து தொடரை இழந்தவர்.
2006ம் ஆண்டு இந்தியாவோடு ஆண்டிகுவாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோனி அடித்த பந்தை டேரன் கங்கா பிடித்தார். ஆனால் அந்த கேட்சை அவர் சரியாகப் பிடித்ததற்கான சரியான சான்று இல்லை. சாதாரணமாக இப்படிப் பட்ட நேரத்தில் பேட்ஸ்மேனுக்கே சாதகமாக தீர்ப்பு வழங்கப்படுவது வழமை. இங்கேயும் அவ்வாறே. ஆனால் லாரா அம்பயர்களோடு கடுமையாக சண்டை போட்டு கடைசியில் தோனியிடம் கிரவுண்டை விட்டு வெளியேறச் சொன்னார். தோனியும் வெளியேறினார்.

ஜிம்மி (பே)ஆடம்ஸ் – இவரைப் பார்த்துத்தான் உள்ளே திரும்பும் பந்துகளை பேட்டில் வாங்கினால் கால் ஸ்டம்புக்கு வெளியே இருந்தாலும் அவுட் கொடுக்கலாம் என்று விதியைத் திருத்தினார்கள் என்று நினைக்கும் அளவுக்கு பேடாலேயே விளையாடியவர்.
கீப்பராக ஆடத்துவங்கி, பின் பந்து வீசவும் செய்தவர். 

11. பிடித்த களத்தடுப்பாளர்

ஜாண்டி ரோட்ஸ் –பாகிஸ்தானுடனான 1992/93 உலககோப்பைப் போட்டியில் பறந்து வந்து ஸ்டம்பைத் தட்டி ரன் அவுட்டாக்கியதை மறக்க முடியுமா?
இவர் தென்னாப்ரிக்க ஹாக்கி அணியிலும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜய் ஜடேஜா – இந்தியர்களாலும் ஸ்டம்பை குறி வைத்து எறிய முடியும் என்று நம்ப வைத்தவர்.
இவர் நவநகர் ராஜ குடும்பத்தில் பிறந்தவர். ரஞ்சித்சிங்ஜி (ரஞ்சி கோப்பை), துலிப்சிங்ஜி (துலிப் ட்ராபி போட்டிகள்) ஆகியோர் இவர் பரம்பரைதான். 

மற்றும் இன்னும் பலர்.

12. பிடிக்காத களத்தடுப்பாளர்

அனில் கும்ப்ளே – இவர் பந்து வீச்சில் இவரே பிடிக்க வேண்டிய கேட்சுகளை மட்டும் பறந்து பறந்து பிடிப்பார்.

13. பிடித்த ஆல்ரவுண்டர் –

கபில்தேவ் – ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட இவரது 175, ஆலன் டொனால்டின் புயல் வேகப் பந்து வீச்சுக்கு எதிராக ஒட்டு மொத்த இந்திய அணியே திணறிக் கொண்டிருக்கும்போது இவர் அடித்த 129, ஃபாலோ ஆனைத் தவிர்க்க 24 ரன்கள் தேவை என்றிருக்கும்போது நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர் பறக்கவிட்ட வேகம், இந்திய அணியிலும் (மித?) வேகப் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று உலகுக்குக் காட்டிய இவரது வேகம், 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்லக் காரணமான அந்த விசேஷ கேட்ச், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இம்ரான் கான் – பந்து வீச்சு, பேட்டிங், தலைமைப் பொறுப்பு – மூன்றிலும் கில்லி அடித்தவர். இன்று வரை பாகிஸ்தானின் சிறந்த கேப்டன்.

1992/93 உலகக் கோப்பை இறுதியாட்டத்துக்குத் தேர்வு பெற்றதும் அணியுடன் சேர்ந்து இவர் கொடுத்த பேட்டியில் இன்சமாம் உல் ஹக் அடித்த 50ஐப் பற்றிக் கேட்ட கேள்விக்கு இவர் பதில் – “நன்றாக விளையாடுகிறான். இன்று அடித்த 50 இவன் தலைக்குப் போய்விடாமல் இருக்க வேண்டும்”.


கேட்ட நிருபர் – “என்ன நீங்கள் அவரை வைத்துக் கொண்டே இப்படி சொல்கிறீர்கள்?”


“பயப்படாதீர்கள் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது” – தெரிந்திருந்தாலும் இன்சமாம் இவரைக் கோபித்திருக்கமாட்டார்.

14. பிடிக்காத ஆல்ரவுண்டர்

இர்ஃபான் படான் – இவர் பவுலராக மட்டுமே இருந்திருக்கலாம். அடுத்த கபில் என்று இவரை ஏற்றி விட்டு உள்ள பவுலிங்கும் போச்சுட நொள்ளக்கண்ணா என்றாகிவிட்டது
இவருக்கும் யூசுப் படானுக்கும் தந்தை ஒன்று தாய் வேறு.

15. பிடித்த நடுவர்

ஷெப்பர்ட் – 111, 222, 333 (நெல்சன் நம்பர்) வரும்போது ஒரு காலை உயர்த்தி குண்டு உடம்பைத் தூக்கி இவர் குதிப்பது வேடிக்கையாக இருக்கும்.
அப்படிக் குதிப்பது மூட நம்பிக்கையால் என்று இவரே சொல்லியிருக்கிறார்.

பில்லி பவுடன் – ஆர்த்ரைட்டீஸால் பாதிக்கப்பட்ட இவரால் உடனே தலைக்கு மேல் கையைத் தூக்கி அவுட் கொடுக்க முடியாது. இந்தக் குறையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வித்தியாசமாக சிக்னல் செய்து தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக் கொண்டவர்.

16. பிடிக்காத நடுவர்

டேரல் ஹேர், குமார் தர்மசேனா, அசோக டி சில்வா, மார்க் பென்சன், ஒரு சில இந்திய அம்பயர்கள் (பெயர் நினைவில்லை) – இப்படி பலர்.

17. பிடித்த நேர்முக வர்ணனையாளர்

ரவி சாஸ்திரி
ஹர்ஷா போக்ளே
டோனி கிரேக்

18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்

அருண்லால், ரமீஸ் ராஜா

19. பிடித்த அணி இந்தியா

20. பிடிக்காத அணிஆஸ்திரேலியா

21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் – இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும்

22. பிடிக்காத அணிகளுக்கான போட்டி – ஆஸ்திரேலியா விளையாடும் மற்றைய நாடுகளுடனான போட்டிகள்

23. பிடித்த அணித் தலைவர்

கங்குலி – அடக்கமாக இருந்த இந்திய அணியை அக்ரசிவ் ஆக மாற்றியவர்

தோனி – வெற்றியோ தோல்வியோ கடைசி நிமிடம் வரை கூலாக இருப்பவர்
இவர் முதல் முதலாக அணித்தலைவர் ஆனது இந்திய அணிக்குத்தான் (அதற்கு முன் தெரு விளையாட்டில் கூட கேப்டனாக இருந்ததில்லையாம் - Managers are born not made).

24. பிடிக்காத அணித் தலைவர்

ரிக்கி பாண்டிங் – காரணம் சொல்லத் தேவையில்லை.

சனத் ஜெயசூர்யா – தெருக் கிரிக்கெட் விளையாடுபவர் போல டாஸ் ஜெயித்ததும் – பிட்ச் எப்படிப்பட்டது என்றெல்லாம் யோசிக்காமல் – பேட்டிங் பேட்டிங் என்று தேர்ந்தெடுப்பவர்

25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி – கங்குலி-சச்சின், ஷேவாக்-சச்சின், சேவாக்-கம்பீர், ஜெயசூர்யா-கலுவித்தரன

26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி

க்ராம் ஸ்மித் – ஹெர்ஷெல் கிப்ஸ் ஜோடி – ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்
சுனில் கவாஸ்கர் 
நீங்கள் கரிபியனைச் சேர்ந்த நாற்பது ஐம்பது வயதுக்காரரை சந்திக்க நேரிட்டால், நீங்கள் இந்தியர் என்று தெரிந்தது அவர் கேட்கும் முதல் கேள்வி கவாஸ்கரைப் பற்றியதாகத்தான் இருக்கும் (என் சொந்த அனுபவம்)
ராகுல் ட்ராவிட் - Great Wall of India.
டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல ஒரு நாள் போட்டிகளிலும் சைட் ஃபிடில் வாசிப்பதில் மன்னன். முதல் இரண்டு highest partnerships in ODI இல் இவர் பெயரும் உண்டு.
டான் ப்ராட்மேன்
இவர் விளையாடிப் பார்த்ததில்லை. ஆனால் 99.98 ஆவரேஜ் வைத்திருக்க வேண்டும் - அதிலும் ஹெல்மெட், க்ரில், தை பேட், ஆர்ம் பேட்  போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இலலாத பாடிலைன் காலங்களிலும் - என்றால் சாதாரண விசயமில்லை.

28. உங்கள் பார்வையில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் - சச்சின் டெண்டுல்கர்
எத்தனை இன்னிங்க்ஸ்களைச் சொல்வது?

29. பிடித்த போட்டி வகைடெஸ்ட்
கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலங்களில் டெஸ்ட் போட்டிகள் என்பது டைம் லெஸ் - குறிப்பிட்ட நாட்கள் என்றில்லாமல் வெற்றி தோல்வி கணிக்கப்படும் வரை விளையாடப்படுமாம். 1938-39ல் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியே நீளமான டெஸ்ட் போட்டி. இது 9 நாட்களுக்கு நடை பெற்றதாம். அப்படியிருந்து இது ட்ராவில் முடிவடைந்தது - காரணம், இங்கிலாந்து அணி வீரர்கள் இங்கிலாந்து செல்ல கப்பலைப் பிடிக்க நேரமாகிவிட்டது. 

30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் – சச்சின்.


யாரையாவது தொடர அழைக்க வேண்டுமே?


கார்க்கி - யாருமே கூப்புடலைன்னு வருத்தப்பட்டிங்களே.. இந்தாங்க புடிச்சிக்குங்க.
அண்ணன் பழமை பேசி - அந்தக் கால கிரிக்கெட் வீரர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆசை
புலவன் புலிகேசி - இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம்.
வருண் - ரிலாக்ஸா எழுதுங்க வருண்.
விசா - தொடர் பதிவுக்கெல்லாம் பதில் சொல்லுவிங்களா தெரியல.
எல் போர்ட்.. பீ சீரியஸ் - கூப்டோம்ல கூப்டோம்ல.. :)

Saturday, February 20, 2010

வெளிசம் - பாகம் இரண்டு


முதல் பாகம் இங்கே

ப்போதுதான் கவனித்தேன், அவள் வலது கையில் அந்த ஆறாவது விரல். அதிலிருந்த தக்குனியூண்டு நகத்துக்கும் பெயர் சொல்ல இயலா நிறத்தில் ஒரு வர்ணம் பூசி இருந்தாள். அந்த் லிஃப்ட் என்னையும் அவளையும் அப்படியே மேலே பிய்த்துக்கொண்டு போய் விடாதா என்றபடிக்கு அவள் வாசம் என்னை நாய்க்குட்டி ஆக்கி இருந்தது. 

அவள் வாசத்தை என் நுரையீரல் தாங்கிக் கொண்டாலும் என் இதயம் வெடித்துவிடுமே என்பது போல என் இதயத்துடிப்பின் ஓசை என் காதுகளுக்கே தெளிவாகக் கேட்டது. நல்ல வேளை லிஃப்ட் நின்று விட்டது. இன்னும் கொஞ்ச நேரமாகியிருந்தால் ஸ்வா கொலைகாரியாகியிருப்பாள்.

லிஃப்டில் இருந்து வெளியேறி என் பைக் நிறுத்தியிருந்த டூ-வீலர் பகுதியை நோக்கித் திரும்பிய என்னை ஒரு தெரு நாயைப் பார்ப்பது போலப் பார்த்தாள். 

“யூ டோண்ட் ஹாவ் எ கார்?”

“எனக்கு எதிர்க்காத்து முகத்துல அடிக்க பைக்ல வேகமா போறதுதான் பிடிக்கும். அதுனால தான் கார் வாங்கல”

“பட் என்னால இந்த சென்னை வெயில்ல பைக்ல போக முடியாது. வா என் கார்ல போவோம்”

இருவரும் திரும்பி கார் பார்க்கிங் பிரிவு நோக்கி நடந்தோம். 

“ஹேய் ஷான்.. ஹவ் ஆர் யூ மேன்” பரிச்சயமான குரல் கேட்டுத் திரும்பினேன்.

ஷ்ருதி, இரு கைகளையும் ஏசுநாதரைப் போல விரித்து என்னைப் பார்த்து சிரித்தாள்.

“ஹாய் ஷ்ருதி. ஹவ் ஆர் யூ?” என்று அவளின் விரித்த கைகளுக்குள் என்னை சிறை சேர்த்தேன். கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்து - “லாங்க் டைம் நோ சீ”

“யா.”

“ஹூஸ் திஸ். நியூ கேர்ள் ஃப்ரண்ட்?”

“நோ நோ. வீ ஜஸ்ட் மெட். ஷீ இஸ் ஸ்வாதி. ஸ்வாதி, திஸ் இஸ் ஷ்ருதி. மை ஃப்ரண்ட்”

இருவரும் பரஸ்பரம் வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டதும் ஷ்ருதியிடம் இருந்து விடை பெற்று ஸ்வாதியின் ஹோண்டா சிவிக்கில் ஏறினோம். 

இந்த இடத்தில் ஷ்ருதியைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். 

“சுப்பையாத் தேவர் மகனா? அவன் பெண்டுக வந்தாகன்னா அதுக்கு எதிர் திசையிலல்லா ஓடிருவான்”

“எலே சம்முவம் இங்கிட்டு வாலே? என்னா சடங்கான பிள்ள மாரி தலயக் குனிஞ்சிக்கிட்டே போற? ஒன் அயித்த மவதானடே நானு”

இப்பிடி திருநெல்வேலி அருகே அந்தக் குக்கிராமத்தில் சம்முவமாகவும் சென்னையில் S.சண்முக வடிவேலனாகவும் இருந்த என்னை ஷான் ஆக மாற்றியவள் இவளே. என்னுடைய முதல் டீமில் சீனியர் சாஃப்ட்வேர் இஞ்சினியராக இருந்தாள். ஆறே மாதத்தில் வேலையின் என் சின்சியாரிட்டியை மெச்சி ப்ராஜக்ட் மேனேஜரிடம் ஆன் சைட் போக சான்ஸ் தேடிக் கொடுத்தாள்.

என்னுடன் அவளும் நியூ யார்க் வர அங்கே இவளின் இன்னொரு பக்கம் தெரிய வந்தது. ஆன்சைட் கோ-ஆர்டினேட்டராக இருந்த தினேஷும் இவளும் அடித்த கும்மாளங்களில் முதலில் விலகியே இருந்த என்னை ஊக்கப்படுத்தி சேர்த்துக் கொண்டவள் இவளே. கன்னிப் பையனாக இருந்த கழித்துப் பார்த்தவளும் இவளே. எல்லாம் முடிந்ததும் இவளையே திருமணம் செய்ய வேண்டியிருக்குமோ என்று கலங்கிப் போயிருந்தவனை இரண்டே வார்த்தைகளில் இதுவும் கடந்து போகும் என்று உணர வைத்தவளும் இவளே. ஆக இவளுக்கு நான் நிறையவே கடமைப் பட்டிருக்கிறேன்.

உங்களுடன் பேசிக் கொண்டே அருகில் இருந்த தேவதையைக் கவனிக்க மறந்து விட்டேன். அவள் காரின் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்ததைப் பார்க்கும் போது அவள் ஸ்டியரிங்காக இருக்கக் கூடாதா என்று ஏங்கும் அளவுக்கு ஸ்டியரிங்குடன் ஒட்டி உட்கார்ந்து ஓட்டினாள். அவள் முந்தும், அவளை முந்தும் வாகனங்களுக்கு ஏற்ப அவள் உதடுகள் குவிந்து, மலர்ந்து, சிரித்து, புன்னகைத்து பல பாவங்களைக் கொட்டிக் கொண்டே வந்தன. அவள் உதடுகளையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போல நினைத்துக் கொண்டிருக்கும் போது தாஜ் வந்து விட்டது.

இவ்வளவு அருகில் தாஜைக் கட்டிய ஜாம்ஷெட்ஜி டாட்டாவை மனதில் திட்டியபடி காரில் இருந்து இறங்கினேன். காரைச் சுற்றி ஓடிச் சென்று ஸ்வா இறங்கும் முன் அவள் கதவைத் திறந்து பிடித்தேன்.

ஒயிலாக அவள் கையை நீட்டினாள். வலிக்காமல் பிடித்து எழுப்பி கை கோர்த்தபடி ரிசப்ஷன் நோக்கி நடந்தோம்.

இப்படித்தானே நேற்று இரவு பல்லவியின் கை பிடித்து புதுப்பிக்கப்பட்ட மெரினாவில் நடந்தேன்? ஆமாம், இப்போது எதற்கு பல்லவியின் நினைவு வருகிறது எனக்கு? வரத்தானே செய்யும். 

ஏனென்றால் இப்போதைக்கு அவள் என்னுடைய ஒரே காதலி. 

இந்தக் கதையின் அடுத்த பாகம் சிங்கை சிங்கம் பிரபாகரின் வாழ்க்கை வாழ்வதற்கேவில்.

பிதற்றல்கள் - 2/21/2010

மறுபடியும் ஒரு குண்டு வெடிப்பு. இந்த முறை புனே. ஜெர்மன் பேக்கரி என்ற ஒரு முக்கியமான வெளிநாட்டவர் கூடும் இடத்தை குறிவைத்துத் தாக்கியிருக்கிறார்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர். இவர்கள் தாலிபனுக்கு ஆதராவாக இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்கிறது மீடியா. வெளிநாட்டவரைத் தாக்குவதன் மூலம் இந்தியாவுக்குக் கெட்ட பெயரையும், வெளிநாட்டவருக்கு எச்சரிக்கையையும் விடுக்கும் வண்ணம் செய்திருக்கலாம் என்கின்றனர். 


குண்டு வெடிப்பில் மரணமடைந்த/காயமுற்றவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல்கள்.


எனக்கு எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட் என்ற எண்ணம் உண்டு. அதை மீண்டும் நிரூபித்தது கல்கத்தாவில் நடந்த இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி.


20-20 போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு அணி தவறு செய்து விட்டால் அதை திருத்த அவர்களுக்கு நேரம் கிடைக்காது. அதே போல ஒரு அணி டாமினேட் செய்யத் துவங்கிவிட்டால் அதற்கு அணை போட நேரமிருக்காது. ஆனால் டெஸ்ட் போட்டி அப்படியல்ல. செய்த தவறை திருத்திக் கொள்ள நேரம் இருக்கும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு டாமினேட் செய்வதும் சுலபமான காரியம் இல்லை.

இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடி இந்தப் போட்டியை வென்றதன் மூலம் தொடரைச் சமன் செய்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது மேலும் சிறப்பு. கடைசி நிமிடம் வரை சீட்டின் நுனியில் (மெத்தையின் ?!) உட்கார்ந்து என் எந்த விரலிலும் நகமே இல்லை. 


வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், கடைசி நாளில் சிறப்பாக பந்து வீசிய ஹர்பஜன் சிங், மிஸ்ரா மற்றும் இஷாந்த் சர்மாவுக்கும் வாழ்த்துகள். 


அஜித் முதல்வரின் பாராட்டு விழாவில் பேசினாலும் பேசினார், அந்த அரசியல் வெப்பத்தில் குளிர் காய பலர் புறப்பட்டு விட்டனர். குறிப்பாக ஜாக்குவார் தங்கம். இவர் அஜீத்தை ஒருமையில் பேசி மிரட்டியதும், ரஜினி ஒரு ஜோக்கர் என்று தாக்கியதும் எதற்காக? சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நடிகையைக் கற்பழித்த வழக்கில் கிடைத்த கெட்ட பெயரைப் போக்கிக் கொள்ளவா?


இது இப்படி இருக்க வி.சி.குகநாதன் ஊரோடு ஒத்து வாழாவிட்டால் மிரட்டத்தான் செய்வோம் என்று சொல்லியிருப்பது அநாகரீகத்தின் உச்சம். தனி மனிதனுக்கு சுதந்திரமே இல்லையா?


கம்பராமாயணத்தில் ரெயின் - செக் பதிவில் ஸ்ரீ என்று ஒருவர் பின்னூட்டம் போட்டு, அது எப்பிடி ரெயின் செக் ஆகும், தசரதன் தான் ஸ்டாக் இல்லைன்னு சொல்லலையே என்று கேட்டிருந்தார். அமெரிக்கர்கள் சாதாரணமாக பேசும்போது நிறைய துறை (குறிப்பாக விளையாட்டு) சார்ந்த வார்த்தைகளை உபயோகிப்பார்கள். பால் பார்க் எஸ்டிமேட், பிட்ச், ஹோம் ரன், ரன் அப், டச் டவுன் இப்படி. அதில் ஒன்று இந்த ரெயின் செக். யாருக்காவது நீங்கள் காஃபி வாங்கித் தருவதாக சொல்கிறீர்கள். அந்நபர் அப்போதைக்கு காஃபி அருந்த மனமில்லை, ஆனால் நீங்கள் வாங்கித் தருவதாக சொன்னதையும் விட முடியாது. இந்த சந்தர்ப்பத்தில் அவர் - “I am not interested to have a coffee now, but let me take a rain check" என்று சொல்வார். இந்த கோணத்தில் தான் அந்தப் பதிவை எழுதினேன். இதே சம்பவத்தையே எழுதியிருக்க முடியும், ஆனால் தங்கமணியை எப்படி உள்ளே நுழைப்பது? அதனால்தான் ஆஃபிஸ் மேக்ஸ். 


இந்திய ஆங்கிலத்துக்கும், பிரித்தானிய ஆங்கிலத்துக்கும், அமெரிக்க ஆங்கிலத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை நம்மில் பலர் அறிவோம்.


குறிப்பாக நம்மிடம் இருக்கும் பல உறவுகளுக்கு அவர்களிடத்தில் பெயர்கள் இல்லை. கீழே ???? குறியிட்ட உறவுகளுக்கு ஆங்கிலத்தில் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?


மனைவியின் தங்கை - மைத்துனி - sister-in-law
மனைவியின் தங்கையின் கணவர் - சகலை - ???
கணவரின் தம்பி - கொழுந்தன் - Brother -in - law
கணவரின் தம்பி மனைவி - ஓரகத்தி - ???


நாம் இந்திய ஆங்கிலத்தில் உறவுகளுக்கு இல்லாத பல வார்த்தைகளைச் சேர்த்து புதிய வார்த்தைகளை உருவாக்குகிறோம். உதாரணத்திற்கு சித்தி, அத்தை இரண்டுமே ஆங்கிலத்தில் aunty தான். அத்தையின் மகளை - கசின் cousin - என்றும், சித்தியின் மகளை - கசின் சிஸ்டர் - cousin sister - என்றும் சொல்கிறோம். உண்மையில் சித்தி/சித்தப்பா/பெரியம்மா/பெரியப்பாவின் மகனோ/மகளோ அல்லது அத்தை/மாமா/மாமியின் மகனோ/மகளோ தான்.


இப்படி நாம் உருவாக்கிய இன்னும் சில வார்த்தைகள் கோ-பிரதர், லவ்-அஃபயர் போன்றவை. உங்களுக்குத் தெரிந்த இப்படிப்பட்ட வார்த்தைகள் சிலவற்றை பட்டியலிடுங்களேன்?


பிறகு பார்க்கலாம்.

Friday, February 19, 2010

கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள் - 4

போன பதிவுல வலது கை சுழல் பந்து வீச்சாளர்களைப் பத்தி பேசினோம். இப்போ இடது கை.


இடது கையினால வீசுறதுனால வலது கையால வீசும்போது என்ன எஃபக்ட் வருமோ அதுக்கு அப்பிடியே ரிவர்ஸா வரும். 


அதாவது, வலது கை ஃபிங்கர் ஸ்பின்ல பால் ஆஃப் ஸ்பின் ஆகும். இடது கைல போட்டா லெக் ஸ்பின் ஆகும்.


இடது கை ஃபிங்கர்ஸ்பின்னர்ஸ் எப்பவும் வலது கை ஆட்டக்காரர்களுக்கு எதிரா ரொம்பவே எஃபக்டிவ்வா இருப்பாங்க.  உதாரணத்துக்கு கீழ இருக்குற வீடியோல யுவராஜ் சிங் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனை க்ளீன் போல்டாக்குறதைப் பாருங்க. 





அதே சமயம் இடது கை ஆட்டக்காரர்கள் இவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடறதும் உண்டு. கீழ இருக்கிற வீடியோல ஜெயசூர்யாவை தாதா கிழிக்கிறதைப் பாருங்க. (அந்த ஸ்ரீலங்கன் கமெண்டேட்டர் ஜெயசூர்யாவுக்குக் குடுக்குற பில்ட்-அப்பையும் அதை தாதா தவிடு பொடியாக்குறது காமெடி.)





இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ் ரொம்ப கம்மி. வலது கைல ரிஸ்ட் ஸ்பின் பண்ணா லெக் ஸ்பின். இடது கைல பண்ணா அது ஆஃப் ஸ்பின்னாகும். ப்ராட் ஹாக் இப்போ அப்பிடி பந்து போடுற ஒருத்தர். இன்னொருத்தர் பால் ஆடம்ஸ். சவுத் ஆஃப்ரிக்கன். இவரோட பவுலிங் ஸ்டைலே வித்தியாசம். ரிஸ்ட் ஸ்பின்னரா இருந்தாலும் ரெண்டு விரலால பந்தைப் பிடிச்சித்தான் சுழட்டுவாரு. இவரோட வீடியோ ஒண்ணு இருக்கு பாருங்க.





இப்போ பந்து வீச்சாளர்களோட சைக்காலஜி.


1. பவுலருக்கு முதல் தேவை கான்ஃபிடன்ஸ். எதிர்ல இருக்குற பேட்ஸ்மேன் பெரிய ஆளு, இவருக்கெல்லாம் நாம பவுலிங் போடுறோமே அப்பிடின்னு நினைச்சா அம்புட்டுத்தான். அப்போவே அந்த பவுலர் அவுட்டு. 


2. ஃபாஸ்ட் பவுலருக்குத் தேவை aggression. பந்தைப் போட்டுட்டு பேட்ஸ்மேனைப் பாத்து ஒரு முறை முறைக்கணும். பால அடிச்சாலும் அடிக்கலைன்னாலும். அது அந்த அக்ரஷனைத் தக்க வைக்க உதவும். இதை இன்னிக்கு நேத்தில்ல பல காலமா பவுலர்ஸ் ஃபாலோ பண்ணிட்டு வர்றாங்க. ஆனா ஏனோ இதை இந்திய/இலங்கை/பங்களாதேஷி பவுலர்கள் செஞ்சா பெரிய கொலைக் குத்தம் மாதிரி எல்லாரும் - கமெண்டேட்டர்கள்ல இருந்து பதிவர்கள் வரை - நினைக்கிறாங்க. 


3. முதல்ல பேட்டிங் செஞ்சிட்டு அடுத்த இன்னிங்க்ஸ்ல பவுலிங் போடும் போது, ஸ்கோர் போர்ட்ல நிறைய ரன் இருந்தா பவுலர்கள் அதிக கான்ஃபிடன்ஸா பவுலிங் போடுவாங்க. அதுவே ரொம்ப குறைஞ்ச ஸ்கோரா இருந்தா அந்த கான்ஃபிடன்ஸ் எதிர் பார்க்க முடியாது. உதாரணத்துக்கு இப்போ ஸ்டெயின் - மோர்க்கல் ஜோடியை உலகத்தின் தற்போதைய சிறந்த வேகப் பந்து ஜோடி அப்பிடின்னு சொல்றாங்க. இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவும் இடையே நடந்த முதல் டெஸ்ட் பாத்திங்கன்னா, SA முதல்ல பேட் பிடிச்சி 500 க்கு மேல ரன் எடுத்தாச்சி. அடுத்த நாள் பொறி பறக்க பந்து வீசுனாங்க ரெண்டு பேரும். இந்தியா இன்னிங்க்ஸ் வித்தியாசத்துல தோல்வியைக் கவ்விச்சி. அதுவே அடுத்த டெஸ்ட்ல, 296 ரன்னுக்கு ஆல் அவுட். முந்தின மேட்ச்ல பவுலிங் போட்ட இந்த ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சி? இந்தியா முதல் இன்னிங்க்ஸ்ல 600+ ரன் வெறும் ஆறு விக்கெட் மட்டும் போயி (அதுல ஒன்னு ரன் அவுட்). இதே தான் ஹர்பஜன் - மிஸ்ராவுக்கும், ஆனா அவங்கள யாரும் உலகின் தற்போதைய தலை சிறந்த சுழல் பந்து ஜோடின்னு சொல்றதில்லைங்கறதால அவங்களை மன்னிச்சி விட்டுடலாம்.


சில நேரம் இதுக்கு எக்ஸெப்சனும் உண்டு. 1984/85 ல ஷார்ஜாவுல இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில ஒரு போட்டி. அதுல பாகிஸ்தான் டாஸ் ஜெயிச்சி இந்தியாவ ஃபர்ஸ்ட் பேட் பண்ண சொல்லிட்டாங்க. இந்தியா 43 ஓவர்ல 125 ரன் எடுத்து ஆல் அவுட் ஆகிடுச்சி. டீமே சோகமா ட்ரஸ்ஸிங் ரூம்ல உக்காந்திருக்கும்போது கேப்டன் கபில் தேவ் டீமைக் கூப்பிட்டு சொன்னாராம் - “ஒரு டீமால நம்மள 125 ரன்னுக்கு ஆல் அவுட் செய்ய முடியும்னா, நம்மளாலயும் அவங்கள அதுக்குள்ள சுருட்ட முடியும் அப்பிடின்னு உலகத்துக்குக் காட்டலாம் வாங்க”. மேட்ச் ரிசல்ட் - பாகிஸ்தான் 87 ஆல் அவுட். இது மாதிரி குறைஞ்ச ஸ்கோர் இருந்தாலும் உத்வேகமா பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தர்ற பவுலர்ஸும் இருக்காங்க.


இந்த பந்து வீச்சாளர்களுக்கு கான்ஃபிடன்ஸ் குடுக்குறதுல கேப்டன் முக்கியமான பங்கு வகிக்கிறார். அவரு குடுக்குற ஊக்கத்துல பவுலர் நல்லா பந்து வீசுவார். எல்லா மேட்ச்லயும் பெஸ்ட் பவுலரா இருக்க யாராலயும் முடியாது. எல்லாருக்கும் பர்ப்பிள் பேட்ச் இருக்கும். அந்த சமயத்துல அவங்கள தூக்கிடாம, தொடர்ந்து வாய்ப்புக் குடுத்துப் பாத்தா அவங்க முன்னை விட சிறப்பா வருவாங்க. இந்த விசயத்துல தோனி தொடர்ந்து பலருக்கு வாய்ப்புக் குடுத்துக்கிட்டே இருக்காரு. பாப்போம் அவரு நம்பிக்கையை அந்த பவுலர்கள் காப்பாத்துறாங்களான்னு.


பவுலிங் பத்தி ஓரளவுக்குப் பாத்திட்டோம். அடுத்த பகுதில பேட்டிங் பத்தி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.

Sunday, February 14, 2010

என் காதல்கள் - காதலர் தின சிறப்புப் பதிவு

இதை எல்லாம் டீன் - ஏஜ் கொசுவத்தி பதிவுலயே எழுதியிருக்கலாம். ஆனா அது ரொம்ப பெருசாயிடும் அப்பிடிங்கிறதாலயும், காதலர் தினத்துக்கு எழுத ஒண்ணும் இல்லாமப் போயிரும்ங்கிறதாலயும், இப்போ வெளிவருது.


என் முதல் காதல் - சைக்கிள். சின்ன வயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுவது என்றால் எனக்கு அலாதி பிரியம். நான் வாடகை சைக்கிள் ஓட்ட செலவழித்த காசில் இரண்டு புது சைக்கிள்கள் வாங்கியே இருக்கலாம். ஆனாலும் என் அப்பா எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுக்கவில்லை. ஒரே பையனாம். நான் ஹைஸ்கூல் சேர்ந்ததும் பக்கத்து கேர்ள்ஸ் ஸ்கூலில் படித்த என் அக்காவுக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்து என்னை ஸ்கூலுக்கு கூட்டிச் செல்லும் ரிக்‌ஷாவாக்கிவிட்டார். 


பின்னாளில் ஏழாம் வகுப்பு வந்ததும் ஒரு நாள் அப்பாவின் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்கு வந்து, திரும்பும்போது சைக்கிள் செயின் கழன்று, ஃப்ரீவீல் பிடிக்காமல் போய் வீட்டில் கொண்டு வைத்ததும், அப்பா செய்த முதல் காரியம் சைக்கிள் வாங்கிக் கொடுத்தது - சிவப்பு கலர் ஹெர்குலிஸ் கேப்டன் (விஜயகாந்த் இல்லை)


ஸ்கூல் ப்ரேயரில் உயரம் குறைவாக இருந்த காரணத்தால் முதல் வரிசையில் நின்றாக வேண்டிய கட்டாயம். பிரேயரில் மேடையில் நின்று பாடும் அந்தப் பெண்கள் குழுவில் ஒருத்தியான அவளை விடாமல் பார்த்து வந்திருக்கிறேன். பின்னால் ஒரு நாள் அந்தப் பெண் எனக்கு தூரத்துச் சொந்தம் என்று தெரிய வந்த நாளில் என்னை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்த அந்தப் புண்ணியவானிடம் - ஓ நான் பாத்துருக்கேன். ப்ரேயர்ல மேடைல நின்னு பாடுவா என்று சொன்னதும், நானும் உங்களப் பாத்திருக்கேன், முத வரிசைல நிப்பிங்களே? - என்று அவள் சொன்னதும் பாரதிராஜா படம் போல ஆயிரம் வீணைகளை எனக்குள் யாரோ மீட்டினார்கள். இதை காதல் என்று நான் அப்போது நினைத்தாலும், இந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு இருவருக்கும் வேறு எதுவும் தோன்றவில்லை. 


கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம் இந்த மூன்று வகுப்புகளுக்கும் கெமிஸ்ட்ரி மேஜர் வகுப்போடு கம்பைண்ட் க்ளாஸ். கெமிஸ்ட்ரியில் படித்த அவளை சும்மா இல்லாமல் நண்பனோடு பெட் கட்டி விடாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருப்பேன். காதலாகவும் இல்லை கத்திரிக்காயாகவும் இல்லை. போகப் போக அவளும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தாள்.


ஒருநாள் - வழக்கமாக கரண்ட் கட்டான மதியம் - என் வீட்டு வராந்தாவில் சட்டையில்லாமல் படுத்திருந்த போது யாரோ என் அக்காவின் பேரைச் சொல்லி அழைப்பது கேட்டு எழுந்து பார்த்தால் - என் பக்கத்து வீட்டுப் பெண் (அவளும் என் காலேஜ் தான் சீனியர்) உம், அவளுடன் அந்த கெமிஸ்ட்ரி ஃபிகரும். அதிர்ச்சியில் உள்ளே இருந்த என் அக்காவை கை காட்டிவிட்டு நான் சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டே போய்விட்டேன். 


பின்னர் அவள் என் அக்கா-அம்மாவுடன் நட்பு பேணிக்கொண்டு அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து போக ஆரம்பித்தாள். ஒரு நாள் என் வீட்டில் அனைவரும் வெளியூருக்குப் போயிருந்த அந்த சமயத்தில் என் சீனியர்கள் - ஆண் பெண் இருபாலரும் - சிலரோடு லன்ச் சமைக்க திட்டம் தீட்டியிருந்தோம். ஆனால் என் சீனியர்கள் வருமுன் அவள் வந்து விட்டாள். புத்தகம் எடுக்க வந்ததாக சாக்கு சொல்லி. சிறிது நேரம் அவளுடன் பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கும் சமயம் என் சீனியர்கள் வந்துவிட சிறிது நேரம் பேசிச் சென்றபின் அவர்கள் என்னை ஓட்டிய ஓட்டு இன்னமும் மறக்க முடியாது.


அதன் பிறகு இது போல சில சந்தர்ப்பங்கள். ஒவ்வொரு முறையும் யாராவது தடை. ஒரு நாள் அவள் என்னை மதியம் ஒரு மணிக்கு அவள் வீட்டுக்கு வரச்சொல்லி என் வகுப்புத் தோழனிடம் செய்தி விட்டுப் போயிருந்தாள். என்னால் ஏனோ போக முடியவில்லை. இதையும் - ஒரு மணி அடித்தால்.. என்று என் நண்பர்கள் கேலி செய்து திரிந்தனர். 


எனக்கு அவள் மீது காதல் என்று எதுவுமில்லை. ஆனால் அவளுக்கு இருந்ததா என்று எனக்குத்தெரியாமலே போய் விட்டது. 


அடுத்தது என் தோழி ஒருத்தியிடம் தென்னை மரத்தில் தேள் கொட்டி பனை மரத்தில் நெறி கட்டியது போல எதற்காகவோ ஒரு அவசர முடிவெடுத்து இல்லாத என் காதலை அறிவிக்க, அவளும் அதற்காகக் காத்திருந்தது போல அதை ஏற்றுக் கொண்டாள். சில நாட்களிலேயே அது உண்மைக் காதல் அல்ல, அது தொடரவும் முடியாது என்பதை உணர்ந்து கொண்ட நான் - நான் மட்டுமே, நாங்கள் இல்லை - என்னால் முடிந்த அளவுக்கு அவளுக்கும் உணர வைக்க முயற்சி செய்தேன். நான் பிரிந்து விட்டேன். அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில காலம் என்னிடம் சாம, பேத, தண்ட முறைகளில் காதலை புதுப்பிக்க முயற்சி செய்தாள். என்னிடம் மறுப்பு மட்டுமே பதிலாக இருந்தது.


சென்னையில் என்னுடைய கடைசி செமஸ்டர் ப்ராஜக்ட் முடிந்து ஜூலை 2ம் தேதிக்காக - பெங்களூரில் உள்ள அந்த மென்பொருள் நிறுவனத்தில் சேர வேண்டிய நாள் - காத்திருந்த போது ஜூன் 15ம் தேதியே இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்த என்னுயிர்த்தோழி - இதுவரை பெற்றோரைப் பிரிந்திராத அவள், அந்த ஏக்கத்தில் என்னை அழைத்தாள், அழுதாள். அவள் அழைப்பிற்காக அந்த சனிக்கிழமையே கிளம்பி அவளைப் பார்க்க பெங்களூர் சென்றேன். அன்றைய தினத்தை அவளுடன் கமர்சியல் ஸ்ட்ரீட்டிலும், பிரிகேட் ரோட்டிலும், எம்.ஜி.ரோட்டிலும், கப்பன் பூங்காவிலும் செலவழித்து அடுத்த நாள் திரும்பி என் ஊர் சென்றேன்.


பின்னர் நானும் பெங்களூரில் சேர்ந்ததும், பிரிகேட் ரோடும், கமர்சியல் ஸ்ட்ரீட்டும் எங்களைப் பார்க்காத வாரக்கடைசி நாட்களே இல்லை எனலாம்.


திடீரென்று அவளை சென்னையில் உள்ள கிளைக்கு மாற்றம் செய்ததும் அவளும் பிரிந்து போனாள். அந்தப் பிரிவு எங்களுக்குள் ஆழத்தில் ஏதோ மாற்றம் செய்ய, இருவருமே ஒருவர் மீது மற்றவருக்கிருந்த காதலை உணர்ந்த தருணம் அது. இருவரும் எங்களின் பொது நண்பியிடம் எங்கள் காதலைச் சொல்லி அவள் கருத்தை எதிர்பார்த்திருந்த போதுதான் இருவருக்குமே மற்றவரிடம் அப்படி ஒரு எண்ணம் இருப்பதை உணர்ந்தோம். சொல்லிக்கொள்ளாமலேயே எங்கள் காதல் மலர்ந்தது. கடைசியாக இது உண்மையான காதல் என்பதற்கு எங்களின் 6 வருட திருமண வாழ்வும் ஒரு வயது மகனுமே சாட்சி.. 




என் காதல் மனைவியோடு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.


Happy Valentines Day



Saturday, February 13, 2010

கம்பராமாயணத்தில் ரெயின்-செக்

வீட்டுல இருக்குற பேனசானிக் கார்ட்லெஸ் ஃபோன் வாங்கி ரொம்ப நாளாயிடுச்சி. அது பல்லக் காட்ட ஆரம்பிச்சிருச்சி. சரி இப்போ தான் DECT 6.0ன்னு புது டெக்னாலஜியெல்லாம் வந்திருக்கே, ஒன்ன வாங்கிப் போட்றலாம்னு முடிவு செஞ்சோம். வழக்கமா எந்த மாடல் வாங்குறது அப்பிடிங்கிறத ஆராய்ஞ்சி முடிவு செய்யறது நம்ம கடமை. அந்த மாடல் ஃபோனை எங்க சீப்பா வாங்குறது அப்பிடிங்கிறத முடிவு செய்யறது நிதிஅமைச்சர் கடமை.


நானும் பல சைட்டுல தேடி கடைசியா ஒரு மாடல தங்கமணிக்கிட்ட குடுத்துட்டேன். அவங்க பங்குக்கு தேடி ஆஃபிஸ் மேக்ஸ்ல எதோ ஆஃபர் போட்டிருக்கான்னு சொன்னாங்க. சரி, அத வாங்கிப் போட்டுடலாம்னு ரெண்டரை பேரும் ஆஃபிஸ் மேக்ஸ் போனோம்.


அங்க போனா எங்க நேரம் அந்த மாடல் ஸ்டாக் இல்ல. என்ன பண்றது இப்போ அப்பிடின்னு நொந்துக்கிட்டு கிளம்பலாமா அப்பிடின்னு தங்கமணிகிட்ட கேட்டேன். அவங்க, “ஒரு நிமிசம் இரு” அப்பிடின்னு சொல்லிட்டு நேரா அந்த சேல்ஸ் கேர்ள் கிட்ட போயி


“ஐ டோண்ட் சீ திஸ் மாடல் இன் ஸ்டாக். கேன் ஐ ஹாவ் எ ரெயின் செக்?” அப்பிடின்னு கேட்டாங்க.


“ஓ. வீ ஆர் வெரி சாரி அபவ்ட் தட். ஷ்யூர். யூ கேன் ஹாவ் ஒன்” அப்பிடின்னு சொல்லிட்டு ஒரு பேப்பர் எடுத்து சர சரன்னு மாடல் பேரு ஆஃபர் போட்ட விலை எல்லாத்தயும் நோட் பண்ணி குடுத்தாங்க.


நமக்கு ஒண்ணுமே புரியல. தங்கமணிக்கிட்ட “என்னாது இது?” அப்பிடின்னு கேட்டேன்.


“ரெயின் செக்”


“அது கேட்டுச்சி. அப்பிடின்னா என்ன?”


“ஓ அதுவா. இன்னும் ஆஃபர் இருக்கு, ஆனா ஸ்டாகில்ல இல்லயா? அதுனால ஸ்டாக் வந்ததும் இதே ஆஃபருக்கு வாங்கிக்கலாம்னு சொல்லி குடுக்குறதுக்குப் பேருதான் ரெயின் செக்”


“ச்சே. நல்ல சமாச்சாரமா இருக்கே? நம்ம ஊர்லயெல்லாம் இது இல்லயே. இந்த மாரி நல்ல விசயத்தயெல்லாம் கொண்டு போக மாட்டாய்ங்க. அத விட்டுட்டு லிவிங் டுகெதர் மாதிரி தேவையில்லாத கழிசடையெல்லாம் கொண்டு போவாய்ங்க”


“அப்பிடியெல்லாம் இல்லப்பா. இது ராமாயணக் காலத்துலயே இருந்திருக்கு?”


“என்னது ராமாயணக் காலத்துலயேவா?”


“ஆமா. உனக்குத் தெரியாதா?”


“தெரியாதே. கொஞ்சம் விளக்கமா சொல்லேன்?”


கார் கிட்ட வந்துட்டோம். ஜூனியரை கார் சீட்ல கட்டிட்டு கார் முன்கதவைத் திறந்து டிரைவர் சீட்டுல உக்காந்தேன். தங்கமணி ஜூனியர் பக்கத்துல பின் சீட்டுலயே உக்காந்துக்கிட்டாங்க.


பார்க்கிங்க்ல இருந்து காரை எடுத்து ரோட்டுக்கு வந்து ட்ராஃபிக் இல்லாத அந்த ரோட்டுல 40 மைல் வேகத்துல விட்டேன்.


"சரி கதைய கன்ட்டினியூ பண்ணு"


"எங்க விட்டேன்?"


"இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. கம்பராமாயணத்துல ரெயின் செக்"


"ஓ ஓக்கே. நம்ம ராமனோட அப்பா தசரதன் இருக்காரே, அவருக்கு அந்தப் பேரு எப்பிடி வந்ததுன்னு தெரியுமா?"


"அவங்க அப்பா அம்மா வச்சிருப்பாங்க."


"லொள்ளு பண்ணாத. சொல்றதக் கேளு. முந்தி சம்பராசுரன் அப்பிடின்னு ஒரு அசுரன் இருந்தான்”


“அதாவது ஒரு திராவிடன் அப்பிடித்தான?”


“அப்பிடியும் வச்சிக்கலாம். ஆனா இப்போதைக்கு அசுரன்”


“ஓக்கே. மேல சொல்லு”


“நீ எங்க சொல்ல விடுற. குறுக்க குறுக்கக் கேள்வி கேட்டுக்கிட்டு. அவன் என்ன பண்ணான், தேவர்களோட தலைவன் இந்திரனை தோற்கடிச்சி விரட்டி விட்டுட்டு இந்திரலோகத்தைக் கைப்பத்திக்கிட்டான். இந்திரன் பூலோகத்துக்கு ஓடி வந்து தசரதன் கிட்ட ஹெல்ப் கேட்டான்”


“இந்திரன் ஹெல்ப் கேக்குற அளவுக்கு தசரதன் பெரிய ஆளா?”


“அப்பிடித்தான் போல. தசரதனும் இந்திரனுக்கு ஆதரவா சம்பராசுரனோட போருக்குப் போனார். இந்த சம்பராசுரன் பத்து தேரோட போருக்கு வந்தான். தசரதன் கடுமையான போருக்கப்புறம் அந்த அசுரனை ஜெயிச்சிட்டாரு”


“பரவாயில்லையே”


“என் கதை கேக்குற சுவாரசியத்துல நீ க்ரீன் விழுந்த்ததை கவனிக்காம நிக்கிற பாரு. பின்னாடி வர்றவன் ஹாங்க் பண்றான்”


“அய்யோ சாரி சாரி” கையைத் தூக்கி பின்னால் நின்றிருந்த காருக்கு சாரியை சிக்னலாக் குடுத்துட்டு காரை முன்னாடி விட்டேன்.


“இண்ட்ரஸ்டிங்கா இருக்கு. மேல சொல்லு”


“அப்பிடிப் பத்து தேர் கொண்ட அசுரனை வீழ்த்தினதால தான் தசரதனோட பேரு - தச ரதன் ஆச்சு”


“ஓ. அப்போ அதுக்கு முன்னாடி அவர் பேரு என்ன?”


“எனக்குத் தெரியலை. நீ எப்பிடியும் இதை ப்ளாக்ல எழுததான போற. தெரிஞ்சவங்க யாராவது சொல்வாங்க”


“அதுவும் சரிதான்.”


“இந்த போர்ல, தசரதனோட தேர்ச்சக்கரம் கழண்டு விழுக இருந்தப்போ, கைகய நாட்டு இளவரசி கைகேயி, தன் விரலை தேருக்கு அச்சாணியா குடுத்து தசரதனோட வெற்றிக்குத் துணையா இருந்தா.”


“இரு இரு. கிட்டத்தட்ட கிருஷ்ணன் -சத்யபாமாவுக்கும் இதே மாதிரி ஒரு கதை இருக்குல்ல?”


“ஆமா. வியாசர் ஒருவேளை ராமாயணத்தைப் படிச்சிட்டு அதோட இன்ஸ்பிரேஷன்ல கிருஷ்ணர் கதைய எழுதியிருப்பாரோ என்னவோ எனக்குத் தெரியலை. இப்போதைக்கு நம்ம கதைக்கு வா”


“சரி சரி சொல்லு”


“அப்பிடி தன் வெற்றிக்குத் துணையா இருந்ததுக்காக, அவளையே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு தசரதன். அதோட அவளுக்கு ரெண்டு வரத்தையும் குடுத்தாரு”


“ஹ்ம்”


“ஆனா கைகேயி, அப்போதைக்கு அந்த வரத்தை வாங்கிக்காம, ரெயின் - செக் எடுத்துக்கிட்டா. அதே ரெண்டு வரத்தை தான் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய தசரதன் முடிவு செய்யும் போது கேட்டு வாங்கி ராமனை காட்டுக்கு அனுப்பிட்டா”


“அடடா இப்பிடியா விசயம்? அப்போ கம்பராமாயணத்தைப் படிச்சித்தான் இந்த ரெயின் - செக்கை அமெரிக்காக்காரனுங்க கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு சொல்ற?”


“அப்பிடியும் சொல்லலாம். இப்போ தான் வியட்நாம் காலனி படத்தைக் காப்பியடிச்சி அவதார் படம் எடுத்திருக்காரு ஜேம்ஸ் காமரூன் அப்பிடின்னு சொல்லிட்டுத் திரியுறாங்களே?”


அதற்குள் வீடு வந்திருச்சி. ஜூனியரை சீட்டுல இருந்து இறக்கி, வீட்டுக்குள்ள தூக்கிக்கிட்டு போனேன். 

Thursday, February 11, 2010

கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள் - 3

ஸ்விங்க் பவுலிங்கையும், பவுன்சரையும் பார்த்தோம். இப்ப யார்க்கர் பாக்கலாம். 


முதல்ல யார்க்கர் அப்பிடிங்கிறது பேட்ஸ்மேனோட காலுக்கிட்ட பந்தை பிட்ச் செய்யறது. பேட்ஸ்மேன் சுதாரிச்சி பேட்டைக் கீழ கொண்டு வர்றதுக்குள்ள பால் ஸ்டம்பைத் தட்டணும். உயரமான பேட்ஸ்மேனோ இல்லை பேட்டைக் கீழ வைக்காம உயர்த்தி பிடிச்சிட்டு இருக்கிற பேட்ஸ்மேனோ இதுக்கு ஈஸியான இலக்கு. வழக்கமா பவுலர்ஸ் சரியா பேட்டிங் செய்ய மாட்டாங்க. இவங்கள டெயில் அப்பிடின்னு சொல்வாங்க. (சில நேரம் வால் ரொம்ப நேரம் ஆடுறதும் உண்டு). இவங்க எல்லாம் யாக்கருக்கு சுலபமான இலக்கு.


யார்க்கர் போடுறதுல ரொம்ப முக்கியம் பால் பிட்ச் ஆகிற இடம். கொஞ்சம் தப்பினாலும் ஃபுல்டாஸ் ஆகிடும். அதே மாதிரி பந்தை வேகமாவும் வீசணும். பேட்ஸ்மேன் சுதாரிக்கிற அளவுக்கு டைம் குடுக்கக் கூடாது. இந்த ரெண்டும் சரியா இருந்துட்டா விக்கெட் உறுதி - போல்டோ எல்.பி.டபிள்யூவோ.


கீழ இருக்கிற வீடியோல டேல் ஸ்டெயின் பிராவோவ அவுட்டாக்குறார் பாருங்க.





இந்த யார்க்கரையும் ரிவர்ஸ் ஸ்விங்கையும் கலந்து போடுறதுல அக்ரம், வக்கார் யூனிஸ் எல்லாம் பழம் தின்னு கொட்டை போட்டவங்க.


ஒரு பவுலரோட திறமை பந்து வீசுறதுல மட்டும் இல்லை. தன்னோட பந்து வீச்சு ஸ்டைலுக்கு ஏற்ப ஃபீல்ட் செட் செய்யறதும் தான். அவுட் ஸ்விங்கர் போடுற பவுலர் 2 அல்லது 3 ஸ்லிப் ஃபீல்டராவது வச்சிட்டு பவுல் பண்ணனும். இல்லைன்னா எட்ஜ் வாங்கினாக்கூட கேட்ச் பிடிக்கிறதுக்கு ஆள் இருக்க மாட்டாங்க. அதே மாதிரி கேப்டன் செட் பண்ற ஃபீல்டுக்கு பவுலிங் போடுறதும் ஒரு திறமை தான். எல்லா ஃபீல்டரையும் ஆஃப் சைட்ல நிறுத்திட்டு ஸ்ட்ரெயிட்டாவோ லெக் சைட்லயோ - நம்ம மனோஜ் பிரபாகர் மாதிரி - போட்டா போங்கு தான். 


சில புத்திசாலி பவுலர், பேட்ஸ்மேனை ஏமாத்துறதுக்கு வேற ஸ்டைல் பவுலிங்குக்கு ஃபீல்ட் செட் பண்ணிட்டு வேற மாதிரி போடுவாங்க. ரெண்டு உதாரணம் பாக்கலாம்.


1. பவுன்சர் போடுறதுக்கு சில்லி பாயிண்ட்லயோ இல்ல சில்லி மிட்-ஆன்லயோ ஒரு ஃபீல்டரைப் போடுவாங்க. எதுக்குன்னா டாப் எட்ஜ் வாங்குற பாலைக் கேட்ச் பண்றதுக்கு. அப்பிடி ஃபீல்ட் செட் பண்ணிட்டு, யார்க்கர் போடுவாங்க - டேல் ஸ்டெயின் மாதிரி பவுலர்கள். பவுன்சரை எதிர்பாத்து இருப்பாரு பேட்ஸ்மேன். ஆனா யார்க்கர் லெங்க்த்ல வந்தா? 


2. ஸ்பின் பவுலர் பேட்ஸ்மேனுக்கு ரெண்டு பக்கத்துலயும் ரெண்டு பேரை நிக்க சொல்லுவாரு - ஃபார்வர்ட் ஷார்ட் லெக் & பேக்வர்ட் ஷார்ட் லெக். பால் டர்ன் ஆகி பேட்ஸ்மேனோட பேட்ல எட்ஜ் வாங்கி கேட்ச் ஆகுறத பிடிக்கிறதுக்காக. ஆனா பவுலர் டெக்னிக்கலா டர்ன் பண்ணாம போடுவார். டர்ன் எதிர்பாத்த பேட்ஸ் மேன் மிஸ் பண்ணிடுவாரு. 


இப்போ ஸ்பின் பவுலிங் பத்தி பாப்போம். ஸ்பின் பவுலிங்க்ல நாலு டைப் இருக்கு


1. ஆஃப் ஸ்பின் - விரலால பந்தை சுழட்டி விடுறது - உ.தா. முரளிதரன்
2. லெக் ஸ்பின் - மணிக்கட்டால பந்தை சுழட்டி விடுறது - உ.தா ஷேன் வார்ன்
3. லெஃப்ட் ஆர்ம் ஆர்த்தோடாக்ஸ் - இடது கை விரல் சுழட்டல் - உ.தா டேனியல் வெட்டோரி
4. லெஃப்ட் ஆர்ம் அன் ஆர்த்தோடாக்ஸ் - இடது கை மணிக்கட்டு சுழட்டல் - உ.தா. ப்ராட் ஹாக்.



ஆஃப் ஸ்பின்
லெக் ஸ்பின்

ஆஃப் ஸ்பின் வெளயாடுறதைக் காட்டிலும் லெக் ஸ்பின் ஆடுறதுதான் கஷ்டம். அதே நேரம் லெக் ஸ்பின்னர் சரியா போடலைன்னா ரன் நிறைய குடுக்க வேண்டி இருக்கும்.

ஷேன் வார்னோயோட லெக் ஸ்பின் பவுலிங்கைப் பாருங்க.


ஆஃப் ஸ்பின்னர்ஸ்ல முரளியை அடிச்சிக்க இன்னொரு ஆள் பிறந்து தான் வரணும். ஷேன் வார்ன் பாலோட மிரர் இமேஜ் இங்க பாருங்க.




ஸ்பின் பவுலிங் போடுறதுக்கு பால் கொஞ்சம் பழசா இருக்கணும். ஏன்னா பழைய, சொரசொரப்பான பால் தான் தரையில படும்போது நல்லா தரையப் பிடிச்சி திரும்பும். அதோட பிட்ச் பழசாக ஆக விரிசல் விட ஆரம்பிச்சிடும். அந்த விரிசலும் பால் டர்ன் ஆகுறதுக்கு உதவி செய்யும்.

வழக்கமா ஆசிய நாடுகள்ல இருந்துதான் நிறைய ஸ்பின் பவுலர் வருவாங்க. அதுக்கு முக்கியமான காரணம் பிட்ச். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மாதிரி நாட்டுல எல்லாம் புல் நிறைய வளர்ந்து பிட்ச் இறுக்கமா இருக்கும். அந்த மாதிரி பிட்ச்ல எல்லாம் ஸ்பின் ஆகுறதுக்கு அவ்வளவா வாய்ப்பு இருக்காது. 


ஸ்பின் பவுலிங்க்ல முக்கியமானது ஃப்ளைட்டிங். அதாவது பால ஏர்ல டைம் குடுக்குறது. இது பேட்ஸ்மேனுக்கு ஒரு தப்பான நம்பிக்கையைக் குடுத்து இறங்கி விளையாடத் தூண்டும். அப்பிடி இறங்கி வர்ற பேட்ஸ்மேன் 50% அந்த பாலை அடிச்சி நொறுக்கினாலும் இன்னொரு 50% மிஸ் பண்ணிடுவார். 


இப்போ நீங்க ஒரு பேட்ஸ்மேன். ஸ்பின்னர் பந்து போட வர்றார். அவரு விரலை சுழட்டுறாரா இல்லை மணிக்கட்டைச் சுழட்டுறாரான்னு பாத்து - பால் ஆஃப் ஸ்பின் ஆகுமா லெக் ஸ்பின் ஆகுமான்னு கணிச்சிருவீங்க. இல்லையா? இப்ப, பவுலர் வர்ரார். விரலை சுழட்டுறாரு. நீங்க ஆஃப் ஸ்பின் ஆகப்போகுதுன்னு நினைக்கிறீங்க. ஆனா பால் லெக் ஸ்பின் ஆனா? இதைத்தான் தூஸ்ரா அப்பிடின்னு சொல்றாங்க. இந்த வித்தையையும் பாகிஸ்தான் காரங்க தான் கண்டுபிடிச்சாங்க. இதுல பெரிய ஆளு சாக்லைன் முஸ்டாக். கீழ இருக்கிற வீடியோ பாருங்க.





முரளிதரனும் தூஸ்ரால பெரிய ஆள்தான். ஆனா அவர் தூஸ்ரா ஒரு காண்ட்ரவர்சியானது அப்பிடிங்கிறதால (துரோ பண்றாருன்னு நெறைய தடவை ஆஸ்திரேலியாக்காரனுக கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்காங்க, பன்னிப்பயலுவ), அவர் வீடியோ குடுக்கலை.


அதே மாதிரி ஒரு லெக் ஸ்பின்னர் லெக் ஸ்பின் ஆக்‌ஷன்ல ஆஃப் ஸ்பின் போட்டா அதுக்குப் பேரு கூக்ளி. இதுக்கு இந்த ஃபேமஸ் வீடியோவை நான் போடலன்னா கிரிக்கெட்டாத்தா என் கண்ணைக் குத்திருவா..


இப்ப புதுசா பரபரப்பா பேசப்படுற கேரம் பால் பத்தியும், இடது கை பந்து வீச்சாளர்களோட ஸ்பின் ஸ்டைல்ஸை அடுத்த பதிவுல பாக்கலாம். இப்போதைக்கு கிரிக்கெட் கடவுளோட சின்ன வயசு வீடியோவைப் போட்டுட்டு ஜகா வாங்கிக்கிறேன்.







Monday, February 8, 2010

பிதற்றல்கள் - 2/9/2010

இட்லி வடையில் கொஞ்ச நாள் முன்பு வரை ஒரு கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது - “என்ன சார், வருசம் பிறந்து ஏழெட்டு நாள் ஆயிடுச்சி, இன்னும் முதல்வருக்கு ஒரு பாராட்டு விழாக்கூட எடுக்காம இருக்கோமே” என்று தமிழ்த்திரையுலகினர் (கோலிவுட்னு சொல்லாதீங்க தமிழ்த்திரையுலகம்னு சொல்லுங்கன்னு கமல் சொல்லியிருக்காராமே?) வருத்தப்படுவது போல. அதை யாரோ பார்த்துவிட்டார்கள். மறுபடியும் அதே நேரு உள்விளையாட்டு அரங்கம், அதே திரையுலகினர் அதே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், அதே ஐஸ் பேச்சு. அன்றைய தினம் சென்னையில் காக்காய்களே காணப்படவில்லையாமே உண்மையா??

அந்த விழாவில் அஜித் தைரியமாகவும் பரபரப்பாகவும் பேசியிருக்கிறார். அவர் பேச்சின் சாராம்சம் இதுவே - “எல்லா கூட்டங்களுக்கும் வரும்படி கட்டாயப் படுத்தி அழைக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் இல்லையென்றால் நீங்கள் (முதல்வர்) பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஏன் கூட்டம் போட வேண்டும்?”. நல்ல கேள்விதான். ரஜினி மாதிரி ஆட்கள் இதைப் பேசியிருந்தால் கன்னடன், மராட்டி, தமிழினத் துரோகி என்று சத்யராஜ், பாரதிராஜா முதலானோர் ஏசி(அவர்களுக்குப் பேசத் தெரியாது) இருப்பார்கள்.

சினிமாத் தொழிலை மற்ற தொழில்கள் போல நடத்திக் கொண்டு போயிருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. சினிமாவைப் பார்க்கும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்வது, அரசியலுக்கு வருவேன், வருவேன் என்று சொல்லி அவர்களை உசுப்பேத்துவது என்று சில நடிகர்கள் திரையில் செய்வதால் தான் பொதுப் பிரச்சனைகளில் அவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்பது ஒரு சாராரின் வாதம். சரிதான், ஆனால் அதை ஏன் கட்டாயப்படுத்துகிறார்கள்? நடிகனுக்கு விருப்பம் இல்லையென்றால் விடவேண்டியதுதானே? ரெட் கார்டு போடுவோம் என்ற மிரட்டல் எதற்கு? சரி, அப்படி வந்த நடிகனுக்கு ஒரு பிரச்சனை என்றால் நடிகர் சங்கமோ இல்லை அரசாங்கமோ பின்னால் நிற்கிறதா? இல்லையே?

அஜித் உட்பட எல்லாரும் முதல்வரை ஐஸ் மழையில் நனைய வைத்துவிட்டனர். கலைஞர் டி.வி பார்க்க வசதியிருப்பவர்கள், நயன்தாரா பிரபுதேவா ஆட்டத்தைப் பார்த்து ரசியுங்கள்.

குட்டி திரைப்படம் பார்த்தேன். தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் கூட பரவாயில்லை. இந்தப் படத்தில் ஷ்ரியா படம் முழுக்கவே தனுஷுக்கு பெரியம்மா மாதிரி இருக்கிறார். இன்னொரு நாயகனாக வருபவர் (பெயர் தெரியவில்லை) நன்றாகவே நடித்திருக்கிறார். புதுமுகம் போலத் தெரியவேயில்லை. கமர்சியலாக வெற்றி பெறுமா தெரியவில்லை ஆனால் படம் போரடிக்காமல் ஜாலியாக இருந்தது.

இதில் தனுஷுடன் பல குட்டிக் குழந்தைகள் நடித்துள்ளனர். அப்படி ஒரு காட்சியின் தங்கமணியின் கமெண்ட் - “இதுல எத்தன பேரு பின்னாடி தனுஷ் கூட ஜோடியா நடிக்கப்போறாங்களோ தெரியல”

கோவா திரைப்படமும் பார்த்தேன். எனக்குக் கலவையான அனுபவம். சில இடங்களில் சிரித்தேன். சில இடங்களில் ரசித்தேன், சில இடங்களில் கொட்டாவி விட்டேன், சில இடங்களில் ‘அடப்பாவிகளா’ என்று திட்டினேன். மொத்தத்தில் பார்க்கலாம் ரகம். முக்கியமாக Gay ரிலேஷன்ஷிப்பை தமிழில் முதல்முதலாகக் காட்டியதற்காக வெங்கட் பிரபுவைப் பாராட்டலாம்.
நான் ரசித்த இடங்கள் - பஞ்சாயத்து காட்சி, ஃப்ளாஷ் பேக் வரும்போதெல்லாம் எழுபதுகளின் ஃபீட்பேக்கோடு ஓடும் படச்சுருள் போன்ற காட்சியமைப்பு. தியானம் செய்வது போல குறட்டை விட்டு தூங்கும் பிரேம்ஜி.
பியா அழகாக இருக்கிறார். அந்த வெள்ளைக்காரப் பெண் அழகாக வெட்கப் படுகிறார். சினேகா வந்து போகிறார். சொல்லிக்கொள்ளும்படியாக வேறு ஒன்றும் இல்லை.

எங்கள் ஊரில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடும் நபரிடம் தமிழ்ப்படத்தைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறேன். திரையிட்டால் பார்த்துவிட வேண்டும். மேலே சொன்ன இரு படங்களையும் பெரிய திரையில்(40 இன்ச் பெரிய திரை இல்லை தானே) பார்க்கவில்லை.

ஜெயராம் மலையாளிகளின் இயல்பைக் காட்டிவிட்டார் - பேட்டியில் கறுப்பான தடித்த தமிழத்தி என்று தன் வீட்டு வேலைக்காரியைச் சொன்னதைச் சொல்கிறேன். நாம் தமிழர் இயக்கத்தினர் அதற்காக அவர் வீட்டைச் சூறையாடியது அவர் பேசியதை விட பெரிய தவறு. சில நேரங்களில் நாம் எடுக்கும் அதிகப்படியான நடவடிக்கை தவறு செய்தவர்களை நியாயவான்களாக்கிவிடும். காந்தி இதே காரணத்திற்காகத்தான் சவுரி-சவுரா சம்பவத்திற்குப் பிறகு ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினாரோ? ஆமாம் தமிழ்த்திரையுலகினர் இதற்கெல்லாம் ரெட் கார்டு போட மாட்டார்களா?

கடைசியாக வந்த செய்தி - இலங்கையில் சரத் பொன்சேகா கைது. அவரை(னை?!)ப் பிடரியைப் பிடித்து இழுத்துச் சென்றனராம். அய்யோ கொல்றாங்களே
கொல்றாங்களே என்று கத்தியிருப்பாரா?

எச்சரிக்கை: டீன்-ஏஜ் கொசுவத்தி சுத்த சின்ன அம்மிணி அழைத்துள்ளார். அடுத்த பதிவு அதுதான்.

Saturday, February 6, 2010

மன்னிப்பு

செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் கோரத்தாண்டவம் நடத்தியிருக்கிறது தமிழக காவல்துறை.

அந்தச் சம்பவத்தின் போது தமிழகக் காவல்துறை அதிகாரிகளின் வார்த்தைகள் அவர்கள் கொடுத்த அடிகளை விட அந்த அப்பாவி ஈழத்தமிழர்களுக்கு அதிகமான வலியைக் கொடுத்திருக்கும்.

என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா”


இப்படி அமில வார்த்தைகளை உமிழ்ந்ததற்கு அவர்கள் மேல் அமிலத்தையே ஊற்றி இருக்கலாம். 






தாக்கப்பட்டு உடற்காயத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களிடமும், இதைப் படித்து மனதால் காயப்பட்ட ஈழத்தமிழர்களிடமும், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


இந்தியத் தமிழனாய் பிறந்த என்னால் இதை மட்டுமே செய்ய முடியும். என்ன செய்ய? ஓட்டுப்பிச்சை கேட்பவர்கள் என்று இத்தனை நாள் அரசியல்வாதிகளை ஏளனம் செய்து கொண்டிருந்த நாங்கள் இப்போது அவர்களிடம் பிச்சை வாங்கி ஓட்டுப் போடும் நிலைக்கு முன்னேறி விட்டோமே? 


இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களிடம் நாங்கள் நியாயம் கேட்க முடியும்? இனியும் இந்தியத் தமிழன் தொப்புள் கொடி உறவு, எங்கள் கண்ணில் நீர் வழிந்தால் அவன் கண்ணில் உதிரம் கொட்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து போகாமல் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் கொலைகாரர்களுடன் கூட்டுச் சேர்ந்து காலம் பலவாகிவிட்டது..


அதோடு அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா இந்தியா டெஸ்ட் போட்டிகள் வேறு துவங்குகிறது. அடுத்தடுத்த மாதங்களில் ஐ.பி.எல் போட்டிகளும் துவங்குகின்றன. இடையில் பெண்ணாகரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு காசு வாங்கி பிரியாணி திங்க வேண்டும். இத்தனைக்கும் இடையில் உங்களைப் பற்றி யோசிக்க எங்களுக்கு நேரமும் இல்லை, எங்கள் இதயத்தில் மனிதமும் இல்லை.


வேதனையுடன்
ஒரு வக்கற்ற இந்தியத் தமிழன்.

பம்பரம் - கிரிக்கெட்டுக்கு எதிரா?? குடுகுடுப்பையின் எதிர்வினை

என் எழுத்துக்களை மிக விரும்பிப் படிக்கும் வாசகர்களில் 99 சதவிகிதம் பேர் குடுகுடுப்பையின் தீவிர விசிறிகள் என்று எனக்குத் தெரியும். தெரிந்தும்தான் அவ்வப்போது குடுகுடுப்பை பற்றி என் விமர்சனங்களை எழுதி வருகிறேன். என் வாசகர்களை குஷிப்படுத்துவதற்காக எழுதுபவன் அல்ல நான் என்று அவர்களுக்கே தெரியும். ஆனால் அவர்கள் மனதில் ஒரு குழப்பம் உண்டாகிறது. ’ தினம் நடமாடும் ரசிகக் குயிலகள் ’ என்ற அற்புதமான எதிர் கவுஜையை உருவாக்கிய ஒரு கவிஞனை, கவிதையை வெகுவாக சிலாகிக்கக் கூடிய முகிலன் ஏன் விமர்சிக்கிறார் என்ற குழப்பமே அது. குடுகுடுப்பை பற்றி நான் அவ்வப்போது எழுதி வரும் கட்டுரைகளைப் படித்தாலே இதற்கான விளக்கம் கிடைக்கும். நான் எப்போதும் இவ்விஷயத்தில் ஒற்றை வரி விமர்சனங்களை எழுதியதில்லை.


சமீபத்தில் பம்பரம் விடுவதைப் பற்றி கு.ஜ.மு.க தளத்தில் குடுகுடுப்பை எழுதிய ஒரு கட்டுரையைப் படித்த பம்பர ரசிகர் ஒருவர் நான் பம்பரத்துக்கு எதிராக எழுதுவதாகவும் அதைக் கண்டித்தே குடுகுடுப்பை எழுதியிருப்பதாகவும் நினைத்துக் கொண்டு என்னை அடிக்க கக்கூஸில் தேடிக் கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டு இரண்டு நாட்களாக அந்தப் பக்கம் போகாமலே இருந்தேன். ஜெ.வைப் போல வேனுக்குள்ளேயே கக்கூஸ் வைத்துக்கொள்ள இந்த ஏழைப் பதிவனால் முடியுமா?






இப்போது குடுகுடுப்பையின் கட்டுரை. ‘பம்பரம் என்பது சோழர்களின் விளையாட்டு. அதை மட்டம் தட்டுமாறு கிரிக்கெட் பற்றி முகிலன் என்ற பாண்டியர் எழுதி வருகிறார்’ என்பதே அந்தக் கட்டுரையின் சாரம். இதன் முதல் வாக்கியத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சோழர்கள் விளையாடினார்கள் என்றால் அது படுக்கை அறையில் மட்டும் தான். எல்லா விளையாட்டுகளிலும் மன்னர்களாக இருந்த பாண்டியர்களைப் பற்றி மட்டும் நாம் ஏன் எப்போதுமே மௌனம் சாதிக்கிறோம் என்பதே என்னுடைய கேள்வி. இதை நான் குடுகுடுப்பையிடம் கேட்கவில்லை. அவர் தொடர்ந்து பல மொக்கைப் பதிவுகளை எழுதி வருகிறார். பம்பர விளையாட்டின் ரசிகர்களைக் கேட்கிறேன். பம்பரம் மட்டுமே விளையாட்டு, மற்றதெல்லாம் வெறும் கூட்டு, என்ற unique-ஆன இடத்தை பம்பரத்துக்கும் அதை எழுதிய குடுகுடுப்பைக்கும் வழங்குவதை மட்டுமே எதிர்க்கிறேன். முந்தைய காலத்தில் விளையாடிய விளையாட்டுக்கள் - கில்லி தாண்டு, கிட்டிப்புல், கபடி, நொண்டி, பாண்டி, அன்னக்கல் - இந்த வரிசையில் வந்ததே பம்பரம் என்பது என் வாதம். துரதிருஷ்டவசமாக அந்த வரிசையில் வந்த பம்பரம் எனக்குப் பிடிக்கவில்லை, அதைப் பற்றி எழுதிய குடுகுடுப்பையையும் எனக்குப் பிடிக்கவில்லை. ஏன்?


இதைப் புரிந்து கொள்ள கும்மாங்குத்து போன்ற சிறப்பான விளையாட்டு வீரர்கள் ஏன் பம்பரத்தை கொண்டாடினார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்கள் எந்தக் காரணத்துக்காக பம்பரத்தைக் கொண்டாடினார்களோ அதே காரணத்தினால்தான் எனக்கு பம்பரத்தைப் பிடிக்கவில்லை. குறிப்பாக சோழர்களுக்கு பம்பரத்தைப் பிடிக்கும். காரணம், பம்பரம் விளையாட்டு கிரிக்கெட்டின் பந்துவீச்சை பந்து இல்லாமல் கிராமப்புரங்களுக்கு எடுத்துச் சென்றது. அதனால்தான் கும்மாங்குத்துவின் கல்லறையில் உள்ள ஒரே சிலை பம்பரத்துனடையதாக இருந்தது. ஆனால் எனக்கு பம்பரம் விடுவது பம்பரம் விடுவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது,  ‘பம்பரக்குத்து’ வெளிவந்து சோழநாட்டையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்த போது நான் இவ்வாறு குறிப்பிட்டேன்: “இந்த விளையாட்டைத்தான் இனிமேல் சோழ நாடு கொண்டாடப் போகிறது; ஆனால் எனக்கு இந்த விளையாட்டு பிடிக்கவில்லை. “பம்பர விளையாட்டு என்றால் இழுப்பு, சாட்டை போன்ற முறைகளில் இடம் பெற்றதைப் போல் சுத்தமான பம்பர விளையாட்டாக இருக்க வேண்டும். நகர்ப்புற ஒப்பனைகளால் அது அலங்கரிக்கப்பட்டிருக்கக் கூடாது. அதேதான் கிரிக்கெட் பந்து வீச்சுக்கும். ஏற்கனவே பம்பர விளையாட்டு கெட்டியான கோந்து மரக் குத்துகளால் உருவாக்கப்பட்டது. அதில் கொண்டு போய் கிரிக்கெட் பந்து வீச்சைக் கலந்தால் சாராயத்தில் பினாயிலைக் கலந்தது போலத்தான் இருக்கும். 2008-இல், டாஸ்மாக் பாரிலிருந்து வெளியில் டீக்கடைக்கு வந்த நான், ‘ஸ்விங் பவுலிங்’ என்ற கிரிக்கெட்டின் அருமையான வித்தை ‘பம்பரக் குத்து ’ என்ற கொடூர ரசாபாசமாக பட்டிதொட்டியெங்கும் பரவியிருப்பதைக் கண்டு மிரண்டு, ஆர்டர் செய்த டீயை ரத்து செய்து விட்டு டாஸ்மாக்குக்கே திரும்பி விட்டேன்.





இந்த இடத்தில் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் விளையாடிய விளையாட்டுக்களில் கிரிக்கெட்டை விட பம்பரம் அதிகம். பம்பரத்தை விட ஐஸ்பாய் அதிகம். இதன் பொருள் பம்பரத்தை விட ஐஸ்பாய் பெரிய விளையாட்டு என்பதல்ல. பம்பரம் வாங்க என்னிடம் காசு இல்லை என்பதே.
கும்மாங்குத்து போன்ற சோழர்கள் பம்பரத்தைக் கொண்டாடுவதற்கு மற்றொரு காரணம், பம்பரம் பற்றி எழுதிய குடுகுடுப்பை தானே ஒரு சோழனாக மாறியது.



குடுகுடுப்பைக்கு அவர் கற்ற பம்பர விளையாட்டு, கிரிக்கெட், கில்லி தாண்டு ஆகியவற்றைத் தவிர சமகாலத்து உலக விளையாட்டுடன் எந்தப் பரிச்சயமும் கிடையாது ; மேலும் அவருக்கு உலக விளையாட்டும் தெரியாது. சமகால விளையாட்டும், உலக விளையாட்டும் தெரியாமல் பம்பரம் பற்றி பதிவெழுதினால் இப்படித்தான் ஆகும்.


உதாரணமாக, கபடி விளையாட்டின் கடவுள் என்று சொல்லத்தக்க மாப்பு சொடலையை குப்பை என்று குறிப்பிட்டார் குடுகுடுப்பை. காரணம், தனக்குத் தெரிந்த விளையாட்டைத் தவிர வேறு எல்லாமே குப்பை என்ற அவரது அறியாமையும், ஆணவமும்தான். 

இவரால் குப்பை என்று சொல்லப்பட்ட சொடலையைப் பின்பற்றி அவர் வாழ்ந்த ஆஸ்திரேலியாவில் 40000 பேர் தினமும் பியர் குடிக்கின்றனர். ஆஸ்திரேலிய மக்கள் தொகை - அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் இன்ன பிற வெளிநாட்டினரைக் கழித்து விட்டால் - 32000 என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட மனித நேயம் கொண்டவர்களால் தான் நன்றாக பம்பரம் விளையாட முடியும் என்பது என் கருத்து.

கடைசியாக தன் பெயருக்குப் பின்னால் சோழன் என்று பெருமையாகப் போட்டுக் கொள்ளும் இந்த்க் குடுகுடுப்பை, சோழனா? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இவர் வாழ்ந்த ஊர், புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்தது. பின்னாளில் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு பல மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டபோது தஞ்சாவூர் மாவட்டத்தில் சேர்ந்து விட்டது. அப்படி பின்னால் சேர்ந்ததால் இவர் சோழனாகி விட முடியுமா? (அகநானூறையும் புறநானூரையும் புரட்டி இந்தத் தகவல்களைப் திரட்டித்தந்த பழமைபேசி அண்ணனுக்கும், புதுக்கோட்டை சமஸ்தானத்தைப் பற்றி எழுதிய எம்.எம்.அப்துல்லாவுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்) 


புதுக்கோட்டை நாடு பாண்டிய நாட்டிலும் சேராமல் சோழ நாட்டிலும் சேராமல் குறுநிலமாக இருந்தது என்பதற்கு இந்த சங்ககாலப் பாடலே சான்று.


“தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமில் பன்னிரு நாடென்"
என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்குத் தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனன உறுதிப்படுத்துகிறது.

ஆக, சோழனாகப் பிறக்காத ஒருவர் ரசிகர்களை இழுப்பதற்காக சோழன் என்று தன் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளலாமா? இதில் உண்மையான சோழன் “அது சரி” வேறு அவருக்கு டெக்ஸாஸ் கொண்ட சோழன் என்ற பட்டத்தை கொடுத்துள்ளார். இப்போதெல்லாம் பட்டம் கொடுக்கப்படுவதில்லை - வாங்கப் படுகிறது என்பதை இந்த சம்பவமே காட்டுகிறது.

அதெல்லாம் இருக்கட்டும். நான் ஒரு ஏழைப் பொட்டி தட்டி. என் பொட்டி தட்டலுக்கு மாதம் 2500 ரூபாய்தான் சம்பளமாகக் கிடைக்கிறது. இதில் நான் குளிக்கும்போது (மட்டும்) கட்டும் கோவணத்துக்கு 1750 ரூபாய் செலவாகிறது. பின் குளித்துவிட்டு நான் துவட்டும் துண்டுக்கு 500 ரூபாய் ஆகிறது. மீதி இருக்கும் 250 ரூபாயில் நானும் என்னுடன் இருக்கும் இரண்டு எலிக்குட்டிகளும் உண்டு உறங்க வேண்டும். ஆகையால், இனி இந்த சோழ-பாண்டிய/கிரிக்கெட்-பம்பரம் போன்ற கேள்விகளுக்கும்/கட்டுரைகளுக்கும் என் பதிலையும்/எதிர் வினைகளையும் எதிர்பார்ப்பவர்கள் எனக்கு 500 ரூபாயை மணி ஆர்டரிலோ, செக்காகவோ அனுப்பி விட்டு எதிர்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் இதைப் பற்றி இலவசமாக பேசுவதாக இல்லை.