Showing posts with label எதிர் கவுஜ. Show all posts
Showing posts with label எதிர் கவுஜ. Show all posts

Thursday, January 14, 2010

வறுத்தலும் புசித்தலும்

சிவக்க சிவக்க வறுக்க வேண்டுமாம் கோழி
சொல்கிறாள் அம்மா
தொண்டை வரை நிறைந்திருந்தது
பல்லுக்கு இடையிருந்த துணுக்குகள்
உறுத்தியபடி.
மூணு துண்டுதான் அப்புறம் மீன்
வறுத்துக்கலாம்
இம்முறையும் அம்மாதான்
வாசலில் எதையோ கொத்தியபடி
கொக்கரித்துக் கொண்டிருக்கும்
சேவலைப் பார்க்கிறேன்
காலில் படபடத்தது கட்டிய கயிறு
இனிமே தயிரு தானே அண்ணே?
திசை திருப்பியது மூத்த தங்கையின் குரல்
தயிர்சோத்துல உப்பு போடாம
இருக்கக்கூடாது
மனைவியின் கவலை நாக்கில் கரித்தது
கோழி வெட்டியவனை வீட்டுக்கு அனுப்பி
எனை அடுப்பெரிக்க வைத்த
நல்லதொரு நாளில்
வறுத்துப் பொரிக்கப் பட்டது கோழி
விரால் மீனுடன்
சாப்பிட வந்தவர்களை
வழியனுப்பித் திரும்புகையில்
சேவலின்
கண்களின் திசையறிந்து மௌனமாய்
கேட்டுக்கொள்கிறேன்
இந்த சேவலை வறுத்துப் புசிப்பது
யார்??

அசல் இங்கே
நகல் 1
நகல் 2

Sunday, January 3, 2010

புட்டி பழக்க-வழக்கம்

குவாட்டர்
சோடா
மிக்ஸிங்

கலந்தே வரும்
காக்டெயில்
இத்யாதி

இத்யாதி
பற்றியெல்லாம்
பாமரனுக்கு
பாடமெடுத்தாலும்

வெறும் வயித்துல குடிக்காத
காலைல ஹேங்கோவர் வரும்

கலக்காமக் குடிக்காத
வாந்தி வந்திரும்

பார்ட்டிகளின்
பலநூறு
பாடங்களைப்
பின்பற்றியபடி...

காக்டெயில் மட்டும்
விற்கும் கடையில்
போமிக்ரேனட் மார்ட்டினி
வாங்கிக் குடித்தாலும்
பை தடவி
பேனா தேடுவதே
பிரச்சனையாய் இருக்கிறது

தொட்டில் பழக்க-வழக்கம் இங்கே