இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், பதிவர் முகிலன் தன் மகனது பிறந்த நாள் விழாவில் புகைப்படம் எடுக்க சரியான ஏற்பாடு செய்யவில்லை. இதனால் பிறந்தநாள் கேக்கை சரியாக படம் எடுக்கவில்லை. முதல் பிறந்தநாள் விழா சிறப்பாக அமைந்த போதிலும் நினைவுகளை பதிந்து வைக்க போதிய புகைப்படங்கள் இல்லை.
டிஸ்கி: விழா நடந்தப்ப இருந்து இப்போ வரைக்கும் நேர்ல பாத்தவுங்க ஃபோன்ல பேசுனவுங்க எல்லார்கிட்டயும் தங்கமணி இந்தப் புகார வாசிச்சுட்டாங்க. பதிவுலகம் மட்டும் தான் பாக்கி. அதையும் விட்டுவைப்பானேன்? அதான் இந்தப் பதிவு.