Thursday, October 22, 2009

பிதற்றல்கள் - 10/22/2009

ஒருவழியா வேலை ஒழிந்து ஒரு பதிவு இடுவதற்கு நேரம் கிடைத்தது.

கடந்த வாரம் அனைவரும் தீபாவளியைக் கொண்டாடி இருப்பீர்கள். பலகாரம் சாப்பிட்டு, பட்டாசு சுட்டு, சினிமா பார்த்து டாஸ்மாக் போய் என்று. நான் கல்லூரிக்காலம் தொட்டு பட்டாசு மட்டும் வெடிப்பதில்லை.

நான் பிறந்து வளர்ந்தது விருதுநகர் மாவட்டம். விருதுநகர் மாவட்டத்தில்தான் குட்டி ஜப்பான் சிவகாசி இருக்கிறது. இங்கே பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை சிறு வயது முதலே பார்த்து வந்திருக்கிறேன். சின்ன வயதிலேயே தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாக இந்த வருடம் பட்டாசு வாங்கக்கூடாது என்று நினைப்பேன் பிரசவ வைராக்கியம் போல. தீபாவளிக்கு முதல்நாள் அப்பாவை நச்சரித்து பட்டாசு வாங்கி விடுவேன்.

கல்லூரியில் படிக்கும்போது ஒரு பேச்சாளர் - பெயர் ஞாபகம் இல்லை - குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி பேச வந்தார். சிவகாசியில் அவர்கள் படும் இல்லல்களைச் சொல்லி தீபாவளிக்கு யாரும் பட்டாசு வாங்காதீர்கள் என்று வேண்டிக்கொண்டார். "பட்டாசுத் திரியில் தீயைப் பற்ற வைக்கும் முன், அந்தத் திரி ஒரு சிறு குழந்தையில் தலையில் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அதன் பின் நீங்கள் பட்டாசு வெடிக்க ஜென்மத்துக்கும் ஆசைப் படமாட்டீர்கள்" என்று அவர் சொன்னதிலிருந்து பட்டாசின் பக்கமே போக முடிவதில்லை.

இப்போது குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கேள்விப் பட்டேன். யாராவது தெரிந்தவர்கள் சொல்லவும்.

என் வாழ்க்கையில் மறக்கமுடியாத, மறக்க நினைக்கிற தீபாவளி ஒன்று உள்ளது. அது ரொம்ப பெர்சனல் என்று தங்கமணி சொல்லிவிட்டதால் நீக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

இந்த வருட தீபாவளி என் மகனுக்கு முதல் தீபாவளி. அதனால் தங்கமணி லட்டும் முறுக்கும் செய்தார். என்னாலான உதவியைச் செய்தேன் (சாப்புட்டுப் பாத்து நல்லா இருக்குன்னு சொல்றதுதான்). மகன் எந்த அளவு அனுபவித்தான் என்று தெரியவில்லை.

சமீபத்தில் வலைமனையில் மேய்ந்து கொண்டிருந்த போது பாரதி கிருஷ்ணகுமார் அவர்களது "ராமய்யாவின் குடிசை" ஆவணப்படத்தைப் பற்றி படித்தேன். ஒளிக்காட்சியைத் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. யாராவது லிங்க் இருந்தால் அனுப்புங்கள்.

பாரதி கிருஷ்ணகுமார் பா.கிருஷ்ணகுமாராக இருக்கும் போதிருந்து அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன். எங்கள் கல்லூரியில் என் துறைத் தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்ததால், மாதம் ஒரு த.மு.எ.ச பேச்சாளரை அழைத்து வருவார். அதில் அதிகம் வந்தது பா.கிருஷ்ணகுமார். இவர் மயக்கும் வகையில் பேசக்கூடிய வல்லமை படைத்தவர். பாண்டியன் கிராம வங்கியில் பணியில் இருந்தார் (இப்போதும் இருக்கிறாரா என்று தெரியவில்லை). எம்.ஏ தமிழ் படித்துவிட்டு எப்படி வங்கி வேலை என்று கேட்டால் வேடிக்கையாக, "நானாவது தமிழ் படிச்சேன். எனக்கு இந்தப் பக்கம் டெஸ்ட் ட்யூப் பிடிச்ச கை, இந்தப் பக்கம் தவளையை அறுத்த கை, ஆனா மூணு கையும் இப்போ கணக்கு போட்டுடு இருக்கு" என்று சொல்வார்.

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் த.மு.எ.ச கலை இலக்கிய இரவில் இவர் பேசிய பேச்சில் மயங்கி, "பா.கிருஷ்ணகுமார் சார் பேசறத பாத்து எனக்கும் அவர் மாதிரி பேசணும்னு ஆசையா இருக்கு. கண்டிப்பா நல்லா பேசப் பழகி, அடுத்த வருசம் இதே த.மு.எ.ச மேடையில நல்லா பேசுவேன்" என்று சொன்ன பிரபலம் நடிகை ரேவதி.

வாமனன் படம் பார்த்தேன். ஈ மெயிலில் பெரும் சுற்று சுற்றிய சால்ட்டட் காஃபியை அப்படியே உபயோகித்து இருக்கிறார்கள். படத்தின் கிளைமேக்ஸ் "Enemy of the State" படத்திலிருந்து அப்படியே உருவி இருக்கிறார்கள். மணலைக் கொட்டி அதில் உருவங்கள் வரைந்து அதன் மூலம் காதலை சொல்வது நல்ல காட்சி.

கனடா செல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. வழக்கமாக காலை 9:00 மணிக்கு புறப்பட்டு ஒரு 12:30 மணி போல ஸ்கார்பரோ அஞ்சப்பர் ரெஸ்டாரண்ட்டில் போய் மதிய உணவு உண்டுவிட்டு எக்லிங்க்டன் சாலையில் உள்ள யாழ் சந்தையில் பலசரக்கு வாங்கிக் கொண்டு 5:30 மணி போல வீட்டுக்குத் திரும்பி விடுவது வழக்கம். இந்த முறை தங்கமணியின் மாமா, அத்தை மற்றும் அவருடன் பணியாற்றும் நான்கு பேர் வேலை நிமித்தமாக கனடா-அமெரிக்கா வந்திருந்தனர். அவர்களை டொரோண்ட்டோவிலிருந்து ரோச்சஸ்டர் அழைத்து வருவதே என் கனடா விஜயத்திற்குக் காரணம்.

போனது போய் விட்டோம் யாழ் சந்தையில் எதாவது வாங்கி வரலாம் என்று போனேன். சாமான்களை எடுத்துக் கொண்டு பில் போடச் சென்றேன். $18 சொச்சம் ஆனது. கிரடிட் கார்ட் வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். டெபிட் கார்ட் மட்டும்தான் வாங்குவோம் என்றார்கள். அதுவும் வேலை செய்யவில்லை. சரி ஏ.டி.எம் சென்று எடுக்கலாம் என்று போனால் என் ஏ.டி.எம் அங்கே வேலை செய்யவில்லை. எச்.எஸ்.பி.சி வங்கியில் தானே கணக்கு வைத்திருக்கிறோம் என்று எச்.எஸ்.பி.சி போனால் அங்கே ஏ.டி.எம் வேலை செய்யவில்லை. சரி வங்கிக்குள் சென்று எடுக்கலாம் என்று போனால் அமெரிக்க கணக்குக்கு கனடாவில் பணம் எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள் - என்ன கணினி மயமாக்கலோ தெரியவில்லை -. கடைசியில் கையில் இருந்த பத்து டாலருக்கு என்ன கிடைக்குமோ அதை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

பாடம்: கனடா போனால் கனடியன் டாலர் இல்லாமல் போகாதே.

பிறகு பார்ப்போம்.

10 comments:

குடுகுடுப்பை said...

கனடா விசா இல்லாமலேயே, நான் கனடா போக இருந்தேன் நயாகராவிற்கு தப்பான மேப் எடுத்து. எப்படியோ டெட்ராய்ட் , ஒகாயோ வழியா தப்பிச்சிட்டேன்.

Unknown said...

குடுகுடுப்பை - வருகைக்கு நன்றி.. நயாகராவுக்கு மேப்க்வெஸ்ட்டில் மேப் எடுத்தவர்கள் பலர் தப்பாக இப்படி மாட்டி இருக்கிறார்கள். என் உடன் வேலை பார்த்த ஒரு அக்கட நாட்டுக்காரரிடம் பாஸ்ப்போர்ட் எடுத்துட்டு போய்யா என்று சொல்லியும் கேட்காமல் போய் (பத்திரமாக வீட்டில் வைத்திருக்கிறாராம்) மூன்று மணி நேரம் இம்மிக்ரேஷனில் நொங்கெடுத்து அனுப்பி வைத்தார்கள்.

அது சரி(18185106603874041862) said...
This comment has been removed by a blog administrator.
குடுகுடுப்பை said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//இப்போது குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கேள்விப் பட்டேன்//

குறைந்திருந்தால் சந்தோஷமே.

தலை தீபாவளி ஏன் அப்படி ஆச்சு. ரொம்ப பர்சனல்னா சொல்லவேண்டாம்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

குடுகுடுப்பை, சின்ன அம்மிணி, அது சரி, உங்களுக்கு பதில் போட்ட பின்னூட்டங்களை தங்கமணியின் உத்தரவின் பேரில் நீக்கிவிட்டேன்.

மற்றபடி தங்கள் வருகைக்கு நன்றி.

குடுகுடுப்பை said...

முகிலன் மொத்தமா நீக்கிடுங்க.கமெண்ஸ் அரிச்சுவடே இல்லாம..இதையும் சேத்து.

Sathish chelliah said...

http://www.facebook.com/profile.php?id=100001815506109

Sathish chelliah said...

Bharathi krishnakumar facebook id

http://www.facebook.com/profile.php?id=100001815506109