Wednesday, November 11, 2009

எப்போது ஆகும் இப்படி என் நாடு?

நேத்திக்கு ரீப்ளேஸ்மெண்ட் டிரைவிங் லைசன்ஸ் அப்ளை பண்ண டி.எம்.விக்குப் போனேன். அங்க உள்ள போனதும் ஒரு வரிசை. அல்லாரும் அதுல போய்தான் நிக்கணுமாம். நானும் போய் நின்னேன். ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சி என் டர்ன் வரவும் அங்க இருந்த அம்மாக்கிட்ட போய் நின்னேன்.

அவுக உடனே, என்ன விசயமா வந்திருக்க தம்பின்னு கேட்டாக. நானும் யக்கா, என் டிரைவிங் லைசன்ச தொலச்சிப்புட்டேன். டூப்ளிக்கேட்டு குடுப்பியளான்னு கேட்டேன். அந்த அக்கா, ஆறு பாயிண்ட்க்கு ஐடி ப்ரூஃப் வச்சிருக்கியான்னு கேட்டாங்க. நானு என்கிட்ட இருந்த பாஸ்போர்ட்டு(3 பாயிண்டு), சோசியல் செக்யூரிட்டி கார்டு(2 பாயிண்டு) அப்புறம் பேங்க் செக் புக்(1 பாயிண்டு) எல்லாம் குடுத்தேன். அவுக வாங்கி பாத்துட்டு அல்லாஞ்சரியாத்தான் இருக்கு, இந்த அப்ளிக்கேசன் பாரத்த புல்லப் பண்ணு அப்பிடின்னு சொல்லிட்டு என்னய ஒரு போட்டா புடிச்சிக்கிட்டாக. அப்புறம் கையில ஒரு சிட்டையக் குடுத்தாக. இந்த சிட்டையில இருக்குற நம்பர கூப்புடுற வரக்கும் வெயிட்டு பண்ணு அப்பிடின்னு சொன்னாக.

வெயிட்டு பண்ணுற நேரத்துல அந்த அப்ளிக்கேசன் பாரத்த புல்லப் பண்ணுனேன். அதுக்கப்புறம் இருந்த எடந்தான் கொஞ்சம் கோக்கு மாக்கா இருந்திச்சி. சுத்தி ‘ப’ மாதிரி சேப்புல பேங்க் கவுண்டர் மாதிரி வச்சி அதுக்கு பின்னாடி எல்லாம் அக்காமாருங்களா உக்காந்துட்டு இருந்தாங்க. நடுவுல இருந்த எடத்துல நெறய சேரு போட்டு அல்லாரும் அதுல உக்காந்து இருந்தாய்ங்க. நானும் போய் அவிங்க கூட உக்காந்துக்கிட்டேன்.

அங்கன ஒரு பெரிய எலக்ட்ரானிக் போர்டுல வரிசையா நம்பரும் எந்தக் கவுண்டருக்குப் போகணும் அப்படிங்கற வெவரத்தையும் போட்டுட்டே இருந்தாங்க. ஒவ்வொருத்தருக்கும் ரெண்டுல இருந்து அஞ்சி நிமிசம் வரைக்கும் எடுத்துக்கிட்டாக. என் நம்பர் எப்ப வரும்னு சுமார் ஒரு பதினஞ்சி நிமிசம் காத்துட்டு இருந்தப்புறம் என்னய கூப்பிடாக.

அங்க ஒரு அக்கா, அசப்புல நம்ம வடிவுக்கரசி மாறி இருந்தாக. அவுக கிட்ட போயி என் அப்ளிக்கேசன குடுத்தேன். வாங்கிப் பாத்துட்டு டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கேட்டாக. நானுங்குடுத்தேன். அதையும் சரி பாத்துட்டு பன்னெண்டு டாலர் அம்பது சென்டு காசு குடுக்க சொன்னாக. குடுத்ததும், ஒரு டெம்பரரி லைசன்ஸ் குடுத்துட்டு, இன்னும் ஏழு நாளக்குள்ள ஒரிசினல் வந்துருந்தம்பி கவலப்படாம வூட்டுக்குப் போன்னு சொன்னாக. ஏன்க்கா, பாஸ்ப்போர்ட்டுக்குள்ளயோ இல்ல அப்ளீக்கேசனுக்குள்ளயோ நான் அம்பதோ நூறோ வக்கிலியே? எப்பிடி எனக்கு உடனே லைசன்சு குடுத்தீகன்னு கேக்கலாம்னு நாக்கு நுனி வரிக்கும் வந்திருச்சி. எப்பிடியோ அடக்கிக்கிட்டு வந்துப்பிட்டேன்.

ஆக வீட்டுல இருந்து கிளம்பி 3 மைல் போயி அங்க ஒரு அரை மணி நேரம் நின்னு 3 நிமிசம் கவுண்டர்ல செலவு பண்ணி, திரும்ப 3 மைல் வீட்டுக்கு வரன்னு மொத்தமா ஒரு மணிநேரம் ஆயிப்போச்சி.

இதுவே இந்தியாவா இருந்தா? மொதல்ல ஒரு ட்ரைவிங் ஸ்கூலப் பிடிக்கணும். டிரைவிங் ஸ்கூல் எதுவும் தெரியாதா, அப்ப ஆர்.டி.ஓ ஆபிஸுக்கு வெளிய நிக்கிற புரோக்கர்ல யாரையாவதுப் பிடிக்கணும்.

அவுக என்ன என்ன டாக்குமெண்டு வேணும்னு சொல்லுவாக.
1. ரேசன் கார்டு - ரேசன் கார்டு இல்லைன்னா ஐநூறு ரூவா
2. பத்தாப்பு மார்க் சீட்டு - இல்லைன்னா இருநூறு ரூவா
3. பேங்க் பாஸ் புக்கு - இல்லன்னா அம்பது ரூவா
4. அப்ளிக்கேசன் பார்முக்கு 25 ரூவா. அத ஃபில்லப் பண்ண 75 ரூவா
5. லைசன்சு இஷ்யூ பண்ண ஆபிசருக்கு இருநூறு ரூவா
6. ஆர்.டி.ஓவுக்கு இரு நூறு ரூவா
7. புரோக்கருக்கு கமிசன் இருநூறு ரூவா
ஆக சேத்து ஒரு ஆயிரத்தி ஐநூறு ரூவா குடுத்தா, ஒரு அரை மணி நேரத்துல லைசன்ச கையோட கொண்டு வந்து குடுத்துடுவாக. மேல சொன்ன மாதிரி அலைஞ்சு அப்புறம் தபால்ல லைசன்ஸ் வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டியதே இல்ல.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமான்னா யாருக்கும் புரிய மாட்டேங்குது. என்ன பண்ண சொல்றீங்க?

8 comments:

பின்னோக்கி said...

கடைசி டிவிஸ்ட் நான் எதிர் பார்க்கலைங்க :)

சங்கர் said...

//ஒரு ஆயிரத்தி ஐநூறு ரூவா குடுத்தா, ஒரு அரை மணி நேரத்துல லைசன்ச கையோட கொண்டு வந்து குடுத்துடுவாக. மேல சொன்ன மாதிரி அலைஞ்சு அப்புறம் தபால்ல லைசன்ஸ் வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டியதே இல்ல//

இன்னும் ஒரு நூறு சேர்த்து கொடுத்தா, வீட்டுக்கே கூட கொண்டுவந்து குடுப்பாங்க

Unknown said...

பின்னோக்கி,

வருகைக்கு நன்றி.

சங்கர்

சரியா சொன்னிங்க..

ரோஸ்விக் said...

நீங்க எதை சப்போர்ட் பண்ட்ரீங்கனு தெரியலையே தல ;-)

மென்தமிழ்.காம் said...

நம்ம நாடு எப்பவோ ரொம்ப முன்னேறியிருச்சு பாஸ்...

நசரேயன் said...

//சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமான்னா யாருக்கும் புரிய மாட்டேங்குது.//
ஆமா.. ஆமா

Unknown said...

வேதனையான உண்மை. :(

Unknown said...

ரோஸ்விக், மென்தமிழ், நசரேயன், மஸ்தான் வருகைக்கு நன்றி