Monday, November 23, 2009

அறுவை - சிகிச்சையும் பதிவும்:

என் பதிவு மாதிரியே என் கைக்கு செய்த சிகிச்சையும் அறுவையாகி விட்டது. போன புதன் அன்னிக்கி “கை” சிறப்பு வைத்தியர்ட்ட போய் என்னோட கையக் காட்டுனேனா, அவர் விரல நீட்ட மடக்க சொல்லி நாலு புகைப்படம் எடுத்துக்கிட்டு, போயிட்டு ரெண்டு நாளு கழிச்சு வா. கையை அறுத்து உள்ளார அறுந்து போன அந்த தசைய தச்சி விட்டுடுரேன்னு சொல்லிட்டு அவர் பங்குக்கு புதுசா வேற ஒரு கட்டு போட்டு விட்டுட்டாரு.


கடேசியா போன வெள்ளிக்கிழமை போய் கையில அறுவை சிகிச்சை செஞ்சிட்டு வந்துட்டேன். அழகான செவிலியரோ மருத்துவரோ இல்லாததாலயும், மொத்த மூணு மணி நேரமும் மயக்கத்துலயே இருந்ததாலயும், சுவாரசியமான விசயம் எதுவும் பகிர்ந்துக்கிறதுக்கு இல்ல. கட்டப் பிரிக்கிற வரைக்கும் எவ்வளவு பெருசா கிழிச்சி விட்டாங்கன்னோ எத்தன தையல் போட்டிருக்காங்கன்னோ தெரியாது. அதுனால கட்டப் பிரிச்சப்புறம் ஒரு பதிவு போடுறேன்.


இதுக்கு நடுவுல அல்லாரும் பிடிச்ச/பிடிக்காதது போட்டுட்டாங்க. நம்ம பங்குக்கு நாமும் போடுவோம்:


அரசியல்’வியாதி’


பிடித்தவர்: மாசம் ஒரு ரூவா சம்பளம் வாங்கினாலும், மகனோட திருமணத்த நூறு கோடி செலவுல செய்யலாம்னு காட்டி, தெனக்கூலி பத்து ரூவா வாங்குற ஏழை பாளைகளோட நம்பிக்கையைக் கூட்டுனதுக்காக புரட்சித்தலைவி அம்மா செல்வி.ஜெயலலிதாவ எனக்குப் பிடிக்கும்
பிடிக்காதவர்: முதல்ல அரசியல்ல இருந்து ஓய்வு பெறுவது அப்படிங்கிறதே தப்பு. அதுல அப்பிடி ஓய்வு பெறும்போது கட்சிக்காரங்க காசு பொரட்டி குடுத்தா அதக் கட்சிக்கே நிதியா திருப்பி குடுக்குறதுங்கிறது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? அப்படிப்பட்ட அயோக்கியர் நல்லகண்ணுவ எனக்கு சத்தியமாப் பிடிக்காது.


இயக்குநர்


பிடித்தது : நாலு குத்துப் பாட்டு, நாலு சண்ட, நாலு குத்து வசனம் வச்சா போதும் தமிழ்நாட்டுல சினிமா எடுத்து ஓட விட்டுடலாம்னு நிரூபிச்சதுனால இயக்குநர் பேரரசுவ எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
பிடிக்காதது: படம் முடியும்போது கதாநாயகன் வெற்றி அடைஞ்சி, கதாநாயகி மார்புக்குள்ள மோந்து பாத்துட்டு வணக்கம் போட்டுட்டு இருக்கும்போது, பாண்டி மடத்துக்கு திரும்பிப் போற கதாநாயகன், அம்மா கையால விசம் சாப்பிட்டு செத்துப்போற கதாநாயகன்னு முடிவு வச்சி படம் பாத்துட்டு போறவங்கள கனத்த மனசோட வீட்டுக்கு அனுப்புற பாலாவ எனக்கு சுத்தமா பிடிக்காது. இதுல இவரோட நிக்காம, அமீரு, சசிக்குமாருன்னு ஒரு கூட்டத்தையே வேறக் கிளப்பி விட்டுட்டாரு.


இசை


பிடித்தது: இந்தப் படத்து பாட்டா இல்ல அந்தப் படத்து பாட்டான்னு கண்டு பிடிக்கவே முடியாத அளவுக்கு ஒரே மாதிரி லாலாலா பாட்டு தந்து அசத்துற எஸ்.ஏ.ராஜ்குமாரோட இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
பிடிக்காதது: முந்தி ஒரு பாட்ட கேட்டா யாரு பாடுனதுன்னு சரியா கண்டு பிடிச்சிடலாம். ஆனா இன்னிக்கி? ஒரே மாதிரி போயிட்டிருந்த தமிழிசைய அடுத்தக் கட்டதுக்கு எடுத்துட்டுப் போயி, புதுசு புதுசா பல பாடகர்களும், இசையமைப்பாளர்களும் பெருகி வர்றதுக்கு ஒரு காரணியாய் அமைஞ்சு போன ஏ.ஆர்.ரஹ்மான்


நடிகர்


பிடித்தது: நடிகன்னா ஒரு மேதாவித்தனம், ஒரு கர்வம், ஒரு செருக்கு இருக்கணும்னு சரியா புரிஞ்சுக்கிட்டு, பள்ளிக்கோடத்துக்கிப் போயி படிக்கலியின்னா கூட, திருமணங்கள் பல தோல்வியில் முடிகிறது. அதனால் திருமணமே தேவையில்லைன்றத மாரி உன்னத கருத்துக்கள் பல சொல்ற கமலஹாசன் எனக்கு ரொம்பவும் பிடிச்ச நடிகர்.
பிடிக்காதது: படம் ஓடலயின்னா தயாரிப்பாளர் தலையிலயோ இல்ல இயக்குநர் தலைலயோ பொறுப்ப தூக்கிப் போட்டுட்டு போவாரா, அத உட்டுட்டு நஷ்டமான விநியோகஸ்தர்களுக்கு குடுத்த காச திருப்பி குடுக்குறதுன்னு தமிழ் சினிமாவுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாப் போன ரஜினிகாந்த் ரொம்பவேப் பிடிக்காது.


நடிகை


பிடித்தது: கதை எவ்வளவு பெருசா இருந்தாலும் கவலை இல்லை, எனக்கு குடுக்குற உடை மட்டும் சின்னதாத்தான் இருக்கணும் அப்படிங்கிற மா பெரிய கொள்கை கொண்ட மச்சான் நமீதாவ எனக்குப் பிடிக்கும்
பிடிக்காதது: ஷபனா ஆஸ்மியோட ஓரினச் சேர்க்கைக் காட்சிகள்ல நடிக்கும்போது உங்களுக்கு எப்பிடி இருந்ததுன்னு கேட்கப்பட்ட ஒரு சுவாரசியமான கேள்விக்கு உங்க மனைவிக்கிட்ட போய் கேளுங்கன்னு அசிங்கமா பதில் சொன்ன நந்திதா தாஸ்ச எனக்கு சுத்தமாப் பிடிக்காது.

பாடலாசிரியர்


பிடித்தது: தமிழ் மேடையில் அழுகின்ற குழந்தைக்குப் பாலூட்டும் தாய், திரையுலகிலே எறிகின்ற எலும்புக்கு வாலாட்டும் நாய் அப்படிங்கிற ஒரு சுய விளக்கத்த தனக்குத்தானே கற்பிச்சிட்டு அதன்படி வாழ்ந்தும் வர்ற, காலத்தால் அழியாத எப்படி எப்படி சமஞ்சது எப்படிங்கற அறிவுப்பூர்வமான கேள்விப்பாடல் எழுதின வாலி.
பிடிக்காதது: பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வாய மூடிட்டு இருக்கும்போது, கலைஞரின் ஆட்சி தமிழர்களின் அமாவாசை, அதிமுகவின் ஆட்சி அதற்கு அடுத்த நாள் அப்படின்னு அதிகப் பிரசங்கியா இலங்கைத் தமிழர்களுக்குக்காகக்  குரல் கொடுத்த தாமரை.


எழுத்தாளர்


பிடித்தது: ஒரே மாதிரியான கதை வடிவத்தை, நடையை பெண்களின் சோக உணர்வைத் தூண்டி அவர்களை அழ வைக்கிற மாதிரியான பல வெற்றிக் கதைகளை எழுதி, இன்னக்கி பல வருசமா ஓடுற தொலைக்காட்சித் தொடர்களுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழுற ரமணி சந்திரன்
பிடிக்காதது: கதை, கட்டுரை எழுதுறதுகு பி.ஏ தமிழ் படிச்சிருக்க வேண்டாம் பி.டெக் மின்னணுவியல் கூடப் படிச்சிருக்கலாம். பேனா எடுக்க முடிஞ்சா எழுத்தாளன், இன்னக்கி பொட்டி தட்டத் தெரிந்த “அரை வேக்காடு”கள் எல்லாம் பதிவர்னு இருக்கக் கூடிய சூழலை உருவாக்கியதற்காக சுஜாதா


விளையாட்டு வீரர்


பிடித்தது: தன் குடும்பத்தைப் பற்றி எதோ தவறாக சொல்லிவிட்டதற்காக ஒட்டு மொத்த உலகமும் பார்ப்பதையும், பல சிறுவர்கள் தன்னை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இருப்பார்கள் அப்படிங்கிறதையெல்லாம் பத்தி கவலைப் படாம பழி வாங்குறதே முக்கியம்னு தலையால முட்டித் தள்ளின ஜிடேன்.


பிடிக்காதது: பதினாறு வயசுல வெளயாட வந்துட்டு இருபது வருசமா வெளயாடிக்கிட்டு, 12ம் வகுப்புல பரிச்சையில தவறிப்போயி அப்பா அம்மா திட்டினா, சச்சினுக்குக் கூட தான் பன்னண்டாப்பு புட்டுக்கிச்சி. இன்னிக்கு எம்புட்டு சம்பாதிக்கிராரு என்று தப்பான முன்னுதாரணமா இருக்குற சச்சின் டெண்டுல்கர்.


பதிவர்கள்


பிடித்தது: “அறிவு ஜீவிகள்” அத்தனை பேரும்
பிடிக்காதது: வெளிப்படையாக விமர்சனம் செய்யும் எவரும்

பி.கு: கஷ்டப்பட்டு ஆங்கிலமே கலக்காம எழுத முயற்சி செஞ்சிருக்கேன். பிடிச்சிருந்தா பாராட்டுங்க. கேவலமா இருந்தா நாலு வார்த்த நறுக்குன்னு கேட்டுட்டு போங்க

7 comments:

Anonymous said...

நல்ல வித்தியாசமா இருக்குங்க பிடிச்சது பிடிக்காதது. ரமணி சந்திரன் ரெண்டு கதை படிச்சேன். வித்தியாசமே இல்லை. அப்பறம் அந்தப்பக்கம் தலைவச்சு படுக்கறது இல்லை.

ரோஸ்விக் said...

நான் கரக்டா மாத்தி படிச்சுக்கிடேன்...:-)

கலகலப்ரியா said...

//மயக்கத்துலயே இருந்ததாலயும், சுவாரசியமான விசயம் எதுவும் பகிர்ந்துக்கிறதுக்கு இல்ல.//

கனவில கூடவா எதுவும் வரல... =))

ஆ.... உங்களுக்கு பிடிச்சது எல்லாம் பிடிக்காது... பிடிக்காதது எல்லாம் பிடிக்கும்னு சொல்லுறதுக்கு இவ்ளோ பில்ட் அப்-பா. அப்பப்பா....... (நமிதா மாத்திப் போட்டுட்டீங்க பாருங்க... =))...) ...

மறைமுகமா நான் அறிவுஜீவி இல்லைன்னு சொன்னதுக்கு நன்றி... அவ்வ்வ்வ்.....

ம்ம்... அசத்தல்... (எனக்கு நிஜம்மாவே கமலைப் பிடிக்கும்...)... அப்புறம் கையப் பார்த்துக்குங்க... =)

Unknown said...

சின்ன அம்மிணி, சின்ன வயசுல எங்கம்மாவும் அக்காவும் விழுந்து விழுந்து படிப்பாங்க ரமணி சந்திரனை. அப்போ இருந்தே பிடிக்காது. என்னோட க்ளாஸ்மேட் ஒருத்தர் ரமணிசந்திரன் எழுத்தைக் குப்பைன்னு சொன்னதுக்காக என் கூட பேசுரதையே நிறுத்திட்டாங்க.

Unknown said...

ரோஸ்விக் வருகைக்கு நன்றி.

Unknown said...

கலகலப்ரியா.. கனவு கூட வரலிங்க. மூச்சு விட மறந்துவிடுவேனோன்னு பயந்து ஆக்ஸிஜன் மாஸ்க் மாட்டி இருந்தாங்களாம்

நிஜம்மாவே நமீதா அப்படிங்கற நடிகையைப் பிடிக்காதுங்க..

ஒரு கையால டைப் பண்றது கஷ்டமா இருந்தாலும் பழகிக்கிறது நல்லதுதான் இல்லிங்களா?

பின்னோக்கி said...

கை விரைவில் குணமாக பிரார்த்தனைகள்.

வித்தியாசமாக பிடித்தவர்கள்/காதவர்கள் பற்றி எழுதியிருந்தது நன்றாக இருந்தது.