Thursday, April 8, 2010

சங்கம் / மன்றம்

அப்பல்லாம் காலேஜ் காலைல 8:50க்குத் தொடங்கி மதியம் 1:35ஓட முடிஞ்சிரும். அன்னிக்கி மதியம் ஸ்பெஷல் க்ளாஸ் எதுவும் இல்லை. அதுனால அவசரம் அவசரமா மத்தியான சோத்தைக் கொட்டிக்கிட்டு வேக வேகமா சைக்கிள் மிதிச்சி கோமதி தியேட்டர் வாசல்ல நிக்கும் போதே மணி 2:30 ஆகிடுச்சி. வார நாள்ல மத்தியான காட்சிங்கிறதால கூட்டமே இல்லை. டிக்கெட் வாங்கிக்கிட்டு உள்ள போய் இருட்டுல தடவித் தடவி சேர்ல உக்காந்தா, படம் போட்டுட்டாங்க.

கொஞ்ச நேரம் விஜயையும் புதுப்பையன் சூர்யாவையும் கிண்டல்வுட்டுக்கிட்டே பாத்துக்கிட்டிருந்தோம். அப்ப வந்துச்சிங்க அந்தப் பாட்டு.. “மனம் விரும்புதே உன்னை.. உன்னை..” அந்த வரி முடிஞ்சதும்  இடுப்பை ஒரு வெட்டு வெட்டினாங்க பாருங்க.. 

அப்பவே எழுந்து போயி தியேட்டர் ஓனர்கிட்ட இன்னொரு பத்து ரூபா குடுத்துட்டு வரலாம் போல இருந்தது. பின்ன என்னங்க? குடுத்த டிக்கெட் காசெல்லாம் அந்த இடுப்பு வெட்டுக்கே சரியாப் போச்சி. மீதி படத்த ஓசியில பாக்க மனசு வரல. 

அப்ப இருந்து நாம சிம்ரன் ஃபேன் தானுங்க. சிம்ரன் நடிச்ச படம் ஒண்ணு விடாம பாத்துருவோம்ங்க. சிம்ரன் நடிச்சாங்கங்கிற ஒரே காரணத்துக்காக டைம் அப்பிடிங்கிற மொக்கைப் படத்தையெல்லாம் பொறுமையா பாத்தோம்ங்க. 

நம்ம தங்கமணிக்கு இந்த காரணத்தாலயே சிம்ரனைப் பிடிக்காதுங்க. எப்பப்பாரு நெட்டி முறிக்கிற மாதிரி ரெண்டு கையயும் தூக்கி இடுப்பை ஆட்டிக்கிட்டே ஆடுது. கேட்டா டான்ஸுங்குதுன்னு கேலி செஞ்சிட்டே இருப்பாங்க. தங்கமணியை விட்டுத் தள்ளுங்க. 

தலைவிக்கு திடுதிப்புன்னு கல்யாணம் ஆனதும் அவங்க ஃபீல்ட் அவுட்டானதும் ரொம்ப கவலையாப் போச்சி. அன்னிக்கி இருந்து நம்ம மனசுல தலைவி குடி இருந்த இடம் காலியாவே இருந்ததுங்க.

அயன் பாத்தப்போவே தோணிச்சிங்க. கண்டேன் காதலை பாத்ததுமே செஞ்சிருக்கணுமுங்க. இப்ப பையா பாத்தப்புறமும் நான் செய்யலைன்னா அப்புறம் செத்துப்போன ஷோபா, சிலுக்கு, விஜி, மோனல் ஆவியெல்லாம் நம்மளச் சும்மா வுடாதுங்க. 

முடிவு பண்ணிட்டேங்க. சிம்ரன் விட்டுட்டுப் போன இடத்தை தமன்னாவுக்குக் குடுக்கலாம்னு. அதோட மட்டும் இல்லாம ஒரு படி மேலயே போயிட்டேனுங்க. அது என்னான்னு கேக்குறீங்களா? கீழ பாருங்க.

அகில உலக தமன்னா ரசிகர் மன்றம்

சர்வதேசக் கிளை

தலைவர், செயலாளர், பொருளாளர்: இப்போதைக்கு நாம மட்டுந்தாங்க. பின்னால நம்ம மக்கள் யாராவது சேர்றதப் பொறுத்து பங்கு பிரிச்சிக்குவோமுங்க.
கண்டிப்பா கிரிக்கெட்டுக்கு தனி வலைப்பூ ஆரம்பிச்ச மாதிரி இவங்களுக்கு ஆரம்பிக்க மாட்டேங்க. இங்கயே தான் அப்பப்ப எழுதி உங்களை எல்லாம் தொல்லை பண்ணுவேனுங்க.

பின் குறிப்பு: சங்கத்துல.. ச்சீ மன்றத்துல இணைய விரும்புறவங்க எல்லாம் பின்னூட்டுங்க.

39 comments:

பிரபாகர் said...

ம்... பல்லு இருக்குறவன் பக்கோடா திங்கறான்...

(மவன் கேள்வி கேக்குற வயசுலல்ல இருக்கான்!)

வெளியில தெரியாம ஒரு மறைமுகப்பதவி இருக்கான்னேன்? ஹி..ஹி...

பிரபாகர்...

செந்தில் நாதன் Senthil Nathan said...

நானும் :-)

Vidhoosh said...

கிடக்கிறதெல்லாம் கெடக்கட்டும், கிழவியத் தூக்கி மனையிலே வையுங்கற கதையால்ல இருக்கு!!! :)) நடத்துங்க நடத்துங்க. பிரியாணி மட்டும் போட்டுறாதீங்க முகிலன் :))

சந்தனமுல்லை said...

அடங்கமாட்டீங்க போல :)))

VISA said...

இங்கயும் தமன்னாவா அட்ரா அட்ரா அட்ரா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆகா.. அண்ணே.. எனக்கும் ஒரு போஸ்ட்..ப்ளீஸ்..

Chitra said...

இவர்களும் திடீர் என்று திருமணம் கட்டிக்கிட்டு போய், உங்கள் மனதை நோகடிக்காமல் இருக்க வாழ்த்துக்கள்.
(அப்படியே கட்டினாலும் அமெரிக்காவில், உங்கள் பக்கத்து வீட்டுக்கு வரும் படி சொல்லிடுங்க)

நாடோடி said...

ச‌ங்க‌ம் \ ம‌ன்ற‌ம் க‌ளை க‌ட்டிரும்...... வாழ்த்துக்க‌ள்..

க.பாலாசி said...

//மீதி படத்த ஓசியில பாக்க மனசு வரல. //

ஆகா.... வித்அவுட்த்தான் இத்தன கதையா.....

உங்க வீட்டுக்காரம்மாகிட்ட இன்னுமா அடிவாங்காம இருக்கீங்க.... :-))

தமன்னாதான் உலகமே எனும் போது ‘அகில உலகம்’ என்பது எதற்கு.... பிழையை திருத்தவும்....

எல் கே said...

ithai padicha mrs ugilan edutta adirdai nadavadikayin kaaranamaga mugilan ippoluthu hospitalil irukirar

malar said...

இது ரொம்ப ஓவரா தெரியல்ல.....

ரோஸ்விக் said...

ஆஹா, நமக்கு போட்டி சங்கம் ஆரம்பிக்கிறாங்களே! :-)

vasu balaji said...

நாள பின்ன இதான் ஜக்கம்மான்னு லவட்டுற ப்ளான் இருக்கா.:))

Unknown said...

//ம்... பல்லு இருக்குறவன் பக்கோடா திங்கறான்...

(மவன் கேள்வி கேக்குற வயசுலல்ல இருக்கான்!)//

அதுனால என்னண்ணே? ராகுல் காந்தியெல்லாம் யூத் காங்கிரஸ் தலைவரா இருக்கும்போது..

//வெளியில தெரியாம ஒரு மறைமுகப்பதவி இருக்கான்னேன்? ஹி..ஹி...

பிரபாகர்//

மறைமுகப் பதவியா? தொண்டன் தான் மறைமுகமா வேலை செய்வான். :))

Unknown said...

//செந்தில் நாதன் said...
நானும் :-)//

சேந்துக்குங்க செந்தில் நாதன்

Unknown said...

//Vidhoosh(விதூஷ்) said...
கிடக்கிறதெல்லாம் கெடக்கட்டும், கிழவியத் தூக்கி மனையிலே வையுங்கற கதையால்ல இருக்கு!!! :)) நடத்துங்க நடத்துங்க. பிரியாணி மட்டும் போட்டுறாதீங்க முகிலன் :))//

ச்சே பிரியாணியெல்லாம் சாப்டா தலைவிக்கு வெயிட் போட்ரும்.

Unknown said...

//சந்தனமுல்லை said...
அடங்கமாட்டீங்க போல :)))
//

அதெப்படி

Unknown said...

//VISA said...
இங்கயும் தமன்னாவா அட்ரா அட்ரா அட்ரா//

எங்கெங்கும் தமன்னா தமன்னா..

Unknown said...

//பட்டாபட்டி.. said...
ஆகா.. அண்ணே.. எனக்கும் ஒரு போஸ்ட்..ப்ளீஸ்.//

சிங்கை கிளைத் தலைவர் பதவி காலியாத்தான் இருக்கு

Unknown said...

//Chitra said...
இவர்களும் திடீர் என்று திருமணம் கட்டிக்கிட்டு போய், உங்கள் மனதை நோகடிக்காமல் இருக்க வாழ்த்துக்கள்.
(அப்படியே கட்டினாலும் அமெரிக்காவில், உங்கள் பக்கத்து வீட்டுக்கு வரும் படி சொல்லிடுங்க)//

எங்கெங்க எல்லா நடிகைகளும் அமெரிக்கா வந்தா நியூ ஜெர்சியிலயே இல்ல கலிஃபோர்னியாவுலயோ தான் குடியேறுறாங்க.. :((

Unknown said...

//நாடோடி said...
ச‌ங்க‌ம் \ ம‌ன்ற‌ம் க‌ளை க‌ட்டிரும்...... வாழ்த்துக்க‌ள்.//

நன்றி நாடோடி

Unknown said...

//க.பாலாசி said...
//மீதி படத்த ஓசியில பாக்க மனசு வரல. //

ஆகா.... வித்அவுட்த்தான் இத்தன கதையா.....

உங்க வீட்டுக்காரம்மாகிட்ட இன்னுமா அடிவாங்காம இருக்கீங்க.... :-))

தமன்னாதான் உலகமே எனும் போது ‘அகில உலகம்’ என்பது எதற்கு.... பிழையை திருத்தவும்.//

நீங்களே சொன்ன பிறகு திருத்தாம இருக்க முடியுமா?

Unknown said...

//LK said...
ithai padicha mrs ugilan edutta adirdai nadavadikayin kaaranamaga mugilan ippoluthu hospitalil irukirar//

இது தவறான செய்தி...

Unknown said...

/malar said...
இது ரொம்ப ஓவரா தெரியல்ல...//

ஹி ஹி ஹி ஹி

Unknown said...

//ரோஸ்விக் said...
ஆஹா, நமக்கு போட்டி சங்கம் ஆரம்பிக்கிறாங்களே! :-)//

சங்கம்னு வந்தப்புறம் போட்டி இல்லைன்னா எப்பூடி?

Unknown said...

//வானம்பாடிகள் said...
நாள பின்ன இதான் ஜக்கம்மான்னு லவட்டுற ப்ளான் இருக்கா.:)//

சேச்சே அப்பிடியெல்லாம் செய்ய மாட்டோம்.

வேணும்னா தாய்க்கழகத்துல இருந்து பிரிஞ்சி தமன்னா முன்னேற்றக் கழகம்னு ஒன்னு ஆரம்பிக்கலாம்.. :))

கலகலப்ரியா said...

ஸ்ஸ்ஸ்ஸபா... (பின்னூட்டமிட்டதால சங்கத்தில சேர்த்து சந்தாப்பணம் அனுப்பிடாதீங்கப்பு... எஸ்கேப்பு..)

Unknown said...

/கலகலப்ரியா said...
ஸ்ஸ்ஸ்ஸபா... (பின்னூட்டமிட்டதால சங்கத்தில சேர்த்து சந்தாப்பணம் அனுப்பிடாதீங்கப்பு... எஸ்கேப்பு..)//

சந்தாப்பணம் அனுப்ப மாட்டோம்.. கேப்போம்

வில்லன் said...

/அப்பவே எழுந்து போயி தியேட்டர் ஓனர்கிட்ட இன்னொரு பத்து ரூபா குடுத்துட்டு வரலாம் போல இருந்தது. //

எதுக்கு??? "இடுப்ப" ஆட்டினது சிம்ரனா இல்ல தியேட்டர் ஓனரா?

வில்லன் said...

/நம்ம தங்கமணிக்கு இந்த காரணத்தாலயே சிம்ரனைப் பிடிக்காதுங்க. எப்பப்பாரு நெட்டி முறிக்கிற மாதிரி ரெண்டு கையயும் தூக்கி இடுப்பை ஆட்டிக்கிட்டே ஆடுது. //

விடுங்க "பாஸு" பல்லு வழியும் தலைவலியும் தனக்கு வந்தா தான் தெரியும்.... அடுத்தவங்க கண்ணுக்கு கொரங்கு மாதிரி தெரியும்.....ஆனா நமக்கு மகாராணி மாதிரி தெரியும்.... அதுக்காக எல்லாம் நம்ம "டேஸ்டை" மாத்திக்க முடியுமா.....நம்ம நசறேயனுக்கு காந்திமதி புடிக்கும்... அதுக்காக அவரு "சிம்ரன்" நல்லா இல்ல (கம்பு குச்சிக்கு சேலை கட்டினாப்புல இருக்கா...) காந்திமதிதான் (திம்சு கட்டை மாதிரி இருக்கான்னு) "சூப்பர்னு" சொன்ன உலகம் ஏதுகுதா....இல்லையே அது மாதிரிதான் இதுவும்.....

கலகலப்ரியா said...

///அப்பவே எழுந்து போயி தியேட்டர் ஓனர்கிட்ட இன்னொரு பத்து ரூபா குடுத்துட்டு வரலாம் போல இருந்தது. //

எதுக்கு??? "இடுப்ப" ஆட்டினது சிம்ரனா இல்ல தியேட்டர் ஓனரா? //

=)))))

வில்லன் said...

//தலைவர், செயலாளர், பொருளாளர்: இப்போதைக்கு நாம மட்டுந்தாங்க. பின்னால நம்ம மக்கள் யாராவது சேர்றதப் பொறுத்து பங்கு பிரிச்சிக்குவோமுங்க.//

ஹலோ இப்படி எல்லாம் ஏமாத்தாதிங்க....."வில்லன்" சொந்த ஊரானா தூத்துக்குடில தமன்னாவுக்கு தனி ரசிகர் மன்றமே ஆரம்பிச்சாச்சு....கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணியாச்சு......வேணும்னா தினமலர் நியூஸ் பாருங்க....

http://cinema.dinamalar.com/tamil-news/1957/cinema/Kollywood/Actress-Tamanna-condemns-Paal-abhishegam.htm

வில்லன் said...

//ம்... பல்லு இருக்குறவன் பக்கோடா திங்கறான்...

(மவன் கேள்வி கேக்குற வயசுலல்ல இருக்கான்!)

வெளியில தெரியாம ஒரு மறைமுகப்பதவி இருக்கான்னேன்? ஹி..ஹி...

பிரபாகர்... //

முயன்றால் முடியாதது ஒன்னும் இல்லை ...... கஜினி முகமது போல 12 மொறை இல்ல மேலேயே படையெடுத்து பாருங்க தல...

மறைமுகப்பதவி இருக்கு ராத்திரி மட்டும் பண்ணுற தமன்னா போஸ்டர் ஓட்டுற நோட்டீஸ் ஓட்டும் வேலை காலியா இருக்கு..... வரிங்களா....

வில்லன் said...

///முகிலன் said...


//LK said...
ithai padicha mrs mugilan edutta adirdai nadavadikayin kaaranamaga mugilan ippoluthu hospitalil irukirar//

இது தவறான செய்தி...///


முகிலன் அவசரமா ஆஸ்பத்திரி அட்ரெஸ் குடுங்க "ப்ரெட்டும் " பாலும் "ஹோர்லிக்சும்" அனுப்பி வைக்குறோம்....ஐயோ பாவம் ஒத்தேல எப்பிடி கஷ்டபடுரின்களோ.....கேக்கவே பரிதாபம இருக்கு.... ஒடம்ப பாத்துக்குங்க....

வில்லன் said...

///முகிலன் said...

//LK said...
ithai padicha mrs mugilan edutta adirdai nadavadikayin kaaranamaga mugilan ippoluthu hospitalil irukirar//

இது தவறான செய்தி...///

அப்படி இருந்த முகிலன்
இப்படி ஆயிட்டாரு!!!!!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
This comment has been removed by the author.
எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
This comment has been removed by the author.
எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
This comment has been removed by the author.
செந்தில்குமார் said...

என் மனம் கவர்ந்த பெண்களில் சிம்ரனும் ஒருவர்

ஆனால் கடைசி பரீச்சைக்கு முன்னடியெல்லாம் போய் பாக்கல
அவரே எங்கல் ஊருக்கு வந்தார்

நீங்கள் சொல்வதை பார்த்தால் சங்கம் வைத்து (தமிழ்)தமன்னாவை வளர்த்துவிடுவிர்கள் போல முகிலன்