Friday, April 16, 2010

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்!

எண்பது வயதுக்கு மேற்பட்ட தனியொரு மூதாட்டியால் என்ன செய்துவிட முடியும்?

தீவிரவாதத்தைத் தூண்டிவிடுவாரா?

தன் கணவரின் மர்மமான மரணத்திற்கு ஒரு இனத்தையே பழிவாங்கிவிடுவாரா?

தேர்தலில் போட்டியிட்டு எம்.பி., எம்.எல்.ஏ ஆகிவிடுவாரா?

இவர் வருகையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடுமா?

மாநகரப் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடுமா?

போங்கய்யா நீங்களும் உங்க இறையாண்மையும்..

*********************

லீனா மணிமேகலை - நான் அவர் எழுதிய உலகின் அழகிய முதல் பெண் புத்தகம் படிக்கவில்லை. அந்த சர்ச்சைக்குரிய இரண்டு கவிதைகளை மட்டும் படித்தேன்.

அந்தக் கவிதைகளோடு எனக்கிருந்த கருத்து வேறுபாடு பற்றி இங்கே கதைக்க வரவில்லை.

ஒரு படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தை நேற்று முளைத்த ஒரு அமைப்பின் பெயரால் முடக்கிவிட முனையும் போது, சக படைப்பாளர்களாய் அந்த அடக்குறைக்கு எதிராக நம் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.

அதற்காக ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு மேடையில் அந்தக் கவிதை குறித்தான விமர்சனங்களையும் விவாதங்களையும் எந்த முறையில் எடுத்து வைத்திருந்தாலும், அது அந்த மேடையின் நோக்கத்தை சிதைப்பதாகவே அமையும்.

ஒரு கருத்துக்காக குரல் கொடுக்கும் போது மக்கள் உங்கள் பக்கம் நிற்க வேண்டுமானால், அந்தக் கருத்து நியாயமானதாகவும் இருக்க வேண்டும், நீங்கள் குரல் கொடுக்கும் முறை மக்கள் முகம் சுளிக்குமளவுக்கு இல்லாமலும் இருத்தல் வேண்டும். இந்த இரண்டில் எதாவது ஒன்று இல்லாவிடினும் உங்கள் உழைப்பு வீண்.

மக்களைப் பின்னால் திரட்ட இயலாத எந்த ஒரு அமைப்பின் போராட்டமும் வீண் தான். இது அவர்களுக்குப் புரியாதா என்ன? இருந்தும் அப்படித்தான் இருப்பேன் என்றால் தீவிரவாதி முத்திரையைக் குத்தி விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் உங்கள் எதிரிகள்.

37 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மீ த பஸ்ட்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

1.. பிரபாகரனின் தாயார் பற்றிதானே சார்..

இதைய விட கொடுமைய பார்க்க முடியாது சார்.. மூட்டி வலி சிகிச்சைக்கா வந்தவங்களை, திருப்பி அனுப்பிட்டு, யாருகிட்ட நல்ல பேர வாங்கப்போறானுக இந்த பன்னாடை பயலுக...சே.

பிரபாகர் said...

லீனா விஷயத்தில் நடந்தது ரொம்பவும் அநியாயம்தான் தினேஷ்!

முதல் மேட்டர் புரியல, அது பத்தி எதுவும் படிக்கில! செய்திள சரிவர படிக்காததாலயா? என்னது?

(பட்டாபட்டி எழுதிட்டாரு... புரிஞ்சிடுச்சி... சானி மேட்டர் சூப்பர் பட்டா!)

பிரபாகர்...

ஈரோடு கதிர் said...

//இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்! //

அதே!

குடுகுடுப்பை said...

இத்தாமைஇயலாமைஇறையாமை

Anonymous said...

/// இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் ///

மக்கள் மேல் வாஞ்சை இல்லாமல் சகலத்துக்கும் அவர்களையே குறை சொல்லும் யாருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் தார்மீகக் கோபம் கொள்ள உரிமை கிடையாது.

அவரவர் நாசமாய்ப் போக வேண்டுமெனில் போய்க் கொள்ளுங்கள்.

என் நாட்டையும் நாட்டு மக்களையும் நாசமாய் போகச்சொல்லும் யாரும் எனது நாட்டின் /மக்களின் நண்பனில்லை.

Unknown said...

//.. போங்கய்யா நீங்களும் உங்க இறையாண்மையும் ..//

இவனுகள திருத்த முடியாதுங்க..

Anonymous said...

பிரபாகரன் தாயார் - என்ன கொடுமை இது ?

http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_16.htmlஎன்ன சொல்வது, கருணாநிதியை .................. அடத்..தூ........... என்பதை தவிர.

sathishsangkavi.blogspot.com said...

//இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்//

சரியாச் சொன்னீங்க நண்பரே....

வலைப்பதிவில் பதிந்து பின்னுட்டம் மட்டுமே நம்மால் இடமுடியும்.....

க.பாலாசி said...

காலையில தினத்தந்தியிலத்தான் அந்த நியூஸ பார்க்க முடிந்தது. என் மனசுல இருந்த கொதிப்பு நீங்க சொன்னதுதான்.

சிகிச்சைக்காக வரும் ஒருவருக்கு என்நாட்டுக்கு வர உனக்கு அனுமதியில்லை என்று நானே சொன்னதுபோல் உணர்ந்தேன். தலையில் அடித்துக்கொளவதைத்தவிர வேறொன்றும் தோன்றவில்லை...

Anonymous said...

அத்தனைக்கும் ரிப்பீட்டு.

vasu balaji said...

கடைசி சாதனை நீண்டு கொண்டே போகிறது. விசா கொடுத்த விளக்கெண்ணெய்க்கு தெரியாதா? மசிரு உரிமை அமைப்பில் இது வராதா?அல் கொய்தா உறுப்பினரின் அத்தை வேண்டுமானால் வரலாம். பாகிஸ்தானியருக்கு அபூர்வ ரணகிச்சை. சென்னை மருத்துவர் சாதனை என்று போடலாம். ஓட்டு தேத்தலாம். டமிலன் டிவி பொட்டிக்கு போடுவான். வந்தாரை வாழ வைக்கும் டமில் நாடு.

நாடோடி said...

ம‌னிதாபிமான‌ம் செத்து போச்சி..... இறையாண்மை என்ப‌து இர‌ண்டு குடும்ப‌ங்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌தா.... இல்லை ம‌க்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌தா?.... உங்க‌ளுக்கு வேண்டும் என்றால் குப்பையில் போடுவீர்க‌ள்.. வேண்டாம் என்றால் தூக்கி பிடிப்பீர்க‌ள்...

பனித்துளி சங்கர் said...

/////ஒரு படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தை நேற்று முளைத்த ஒரு அமைப்பின் பெயரால் முடக்கிவிட முனையும் போது, சக படைப்பாளர்களாய் அந்த அடக்குறைக்கு எதிராக நம் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது./////////


சரியாக சொன்னீர்கள் நண்பரே . நமது ஆடைகளை ரசிக்கும் உரிமை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு இருக்கிறது . ஆனால் நாம் இப்படிப்பட்ட ஆடைதான் உடுத்தவேண்டும் என்று கட்டளை இடுவதார்க்கு எவருக்கும் உரிமை இல்லை . சினிமாவில் சொன்னால் காசு கொடுத்து ரசிக்கிறான் . அதையே காகிதத்தில் சொன்னால் . காட்டுமிராண்டி போல் கத்துகிறார்கள் .

ஜெய்லானி said...

படிக்கும்போதே ரத்தம் கொதிக்குது. இதை விட தமிழனுக்கு அவமானம் எதுவும் இருக்கா ?. இதுல வேற தமிழின தலைவர் ஆட்சி !!!

கலகலப்ரியா said...

good one mukilan..!!!

anony congress a?

கலகலப்ரியா said...

antha anonyum intha anonyum onnaa..? mukilan anony comment eduthu vida mudiyuma parungalen..?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@Anonymous said...
மக்கள் மேல் வாஞ்சை இல்லாமல் சகலத்துக்கும் அவர்களையே குறை சொல்லும் யாருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் தார்மீகக் கோபம் கொள்ள உரிமை கிடையாது.

அவரவர் நாசமாய்ப் போக வேண்டுமெனில் போய்க் கொள்ளுங்கள்.

என் நாட்டையும் நாட்டு மக்களையும் நாசமாய் போகச்சொல்லும் யாரும் எனது நாட்டின் /மக்களின் நண்பனில்லை.
//

காங்கிரஸின், பேர் இல்லா சொம்பு தூக்கி அவர்களே..

பேரே இல்லாம, வந்து, உங்க நாட்ட பற்றி சொல்லகூடாது என கூறுவது.....
( முகிலன் சார் ப்ளாக் கொஞ்சம் டீசண்ட் என்பதால்.. நான் சொல்ல வந்த வார்த்தைகளை போடவில்லை..)

நாட்டு மக்கள் எங்களுக்கு கேவலமாக உள்ளது..80 வயசு மூதாட்டி, என்ன பண்ணிடும்?..
ஏய்யா.. மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லையா...

முகிலன் சார் சொன்னது சரிதான்.. சரிதான்..

மீறி ஏதாவது பேசவேண்டும் என்றால், என்னுடை ப்ளாக்கு வாருங்கள்.. பேசிக்கிழிக்கலாம்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலகலப்ரியா said...

antha anonyum intha anonyum onnaa..? mukilan anony comment eduthu vida mudiyuma parungalen..?
//

no need madam...
பேரே இல்லாம வந்து Comments போட்டு, நாட்டுப்பற்றை, பறைசாற்றிக்கொள்ளும் பன்^$%$#களுக்கு, பதில் சொல்ல நாங்கள் இருக்கிறோம்..

Anonymous said...

பிரபாகரனின் தாயார் பற்றி ஏன் இப்படி கொதிக்கிறீர்கள்?
இந்த கொடிய பிரபாகரன் தனது யுத்த வெறிக்காக பிள்ளைகளை பறித்து கொண்டு சென்றததினால் எவ்வளவு தாய்மார்கள் தற்கொலை செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

கலகலப்ரியா said...

ஆமாம் ஐயா... பெயர்தெரியாத....... பிரபாகரன் வீட்டில வெங்காயம் உரிக்கிறதுக்கு ஆள் போதலைன்னு புள்ளைங்களை புடிச்சுக் கொண்டு போனாங்க... அதுக்கு புள்ளைங்களோட அம்மாமார் தூக்கு போட்டுட்டாங்க... ஏன் பிரபாகரனோட அம்மாவ திருப்பி அனுப்பிச்சீங்க... அங்கயே தூக்கில போட்டிருக்கலாமே.... முதல்ல தொப்பியை எடுத்துட்டு பேசலாமே...

Unknown said...

//ஆமாம் ஐயா... பெயர்தெரியாத....... பிரபாகரன் வீட்டில வெங்காயம் உரிக்கிறதுக்கு ஆள் போதலைன்னு புள்ளைங்களை புடிச்சுக் கொண்டு போனாங்க... அதுக்கு புள்ளைங்களோட அம்மாமார் தூக்கு போட்டுட்டாங்க... ஏன் பிரபாகரனோட அம்மாவ திருப்பி அனுப்பிச்சீங்க... அங்கயே தூக்கில போட்டிருக்கலாமே.... முதல்ல தொப்பியை எடுத்துட்டு பேசலாமே..//

அது தொப்பி இல்லை ப்ரியா முகமூடி..

அனானி கமெண்ட்ஸ் போட முடியாதபடி செஞ்சிட்டேன்...

பழமைபேசி said...

வருத்தமா இருக்கு!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Anonymous said...

பிரபாகரனின் தாயார் பற்றி ஏன் இப்படி கொதிக்கிறீர்கள்?
இந்த கொடிய பிரபாகரன் தனது யுத்த வெறிக்காக பிள்ளைகளை பறித்து கொண்டு சென்றததினால் எவ்வளவு தாய்மார்கள் தற்கொலை செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
//

இப்ப என்ன சொல்லவருகிறாய் அனானி..?
அந்த தாயாருக்கு, மருத்துவ உதவி பண்ணாவிட்டால், சமூக நிலமை வந்துவிடுமென்றா?....

கலகலப்ரியா said...

நன்றி முகிலன்... மன்னிக்கனும்... பொறுக்க முடியல...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@அனானி..

முதல்ல,நேர் வழியில் வந்து கமென்ஸ் போடுங்கள்..

ரத்ததிற்க்கு, ரத்தம் என்பது தீர்வாகாது..

புலவன் புலிகேசி said...

இது நம்ம கையாலாகாத்தனம் தல

ராஜ நடராஜன் said...

முன்னாடி கவிஞர் தாமரை!இப்ப நீங்களா?

எழுத்துல புலம்பறத தவிர வேறு வழி தெரியல.நாமதான் கட்சி,குளம்,குட்டைன்னு ஆயிரம் பிரிவுகளா அடிச்சிக்கிறோமுன்னா இழப்புக்கள் பலவற்றை சந்தித்த தமிழர்கள் ஏதாவது ஒரு புள்ளியில் ஒற்றுமையா சிந்திக்கிறாங்களான்னா அங்கேயும் ஓட்டை.

ஆட்டுவிப்பவனுக்கே இங்கே கொண்டாட்டம்:(

ரோஸ்விக் said...

பாவம்ணே பிரபாகரன் குடும்பத்திடம் டிவி இல்ல. ஐயோ அம்மா என்னை காப்பாத்துங்கன்னு கத்தி 2 நிமிஷத்திற்கு ஒரு தடவை போட்டுக்காட்ட...

எல்லாம் கெட்ட வார்த்தைகளா வருது. என்ன கமெண்ட்டு போடுறதுன்னு தெரியல.

மனிதாபிமானம் இல்லாத இறையாண்மை என்ன மயித்துக்குன்னு தெரியல. வேணாம் பொம்பளைப் புள்ளைக வர்ற இடம்னு நான் பொத்திக்கிட்டு போயிடுறேன்.

அந்த அம்மாவை பிரபாகரன் ஆத்தாவாப் பாக்காதீங்கடா நாயிங்களா... பாவம் ஒரு வயசான அம்மா...

சட்டம் கூட தூக்குமேடையில கடைசி ஆசை என்னான்னு கேட்டு நிறைவேத்துது... ஆனா உங்க சர்வாதிகாரம்?? த்தூ

vasan said...

பேய்க‌ள் அர‌சாள‌,
பிண‌ம் தின்னும் சாத்திர‌ங்க‌ள்.
காசுக்கு ஓட்டுப் போட்ட‌
கூலிகளுக்கு, ம‌கான்க‌ளா
வ‌ருவார்க‌ள் ம‌ந்திரியாய்?
`எதை கேட்கிறாயோ
அதுவே கிடைக்கிற‌து`.
ம‌ற‌ந்த‌து,
மரும‌க‌ன் சிகிச்சைக்கு
அன்று, த‌னி விமான‌ம்,
அர‌சு(ம‌க்க‌ள்)பண‌த்தில்.
ம‌றுத்த‌து
ம‌த்தியை ம‌கிழ்விக்க‌.
ம‌க்க‌ளே மாத்தி யோசியுங்க‌ள்.

க.பாலாசி said...

//Anonymous said...

போடா புண்ணாக்கு.....

Unknown said...

நானும் சேர்ந்து அழிந்தாலும் பரவாயில்லை...எவனாச்சும் வந்து குண்டு போடுங்கடா.

தீபன் said...

எல்லாருடய கோபமும் வருத்தமும் புரிகின்றது, உங்கள்; ஏன் என் இயலாமையை கூட உணர்கிறேன். எதுவுமே வேண்டாம், சிந்தியுங்கள் அடுத்து நடப்பதை பற்றி சிந்தியுங்கள், சீர்திருத்தங்கள் நடந்தேறும்...

தமிழகத்தில் தற்காலிகமாய் வதியும் ஈழன்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

என்னால சாபமெல்லாம் கொடுக்க முடியாது.. ஆனா உங்க கோபம் பிடிச்சிருக்கு முகிலன்..

ரெண்டாவதுக்கு கருத்துச் சொல்ல பயமாயிருக்குது (உங்களப் பாத்து இல்ல) :))

Thamira said...

நன்று.

? said...

//...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.

சூரியன் said...

//எண்பது வயதுக்கு மேற்பட்ட தனியொரு மூதாட்டியால் என்ன செய்துவிட முடியும்?

தீவிரவாதத்தைத் தூண்டிவிடுவாரா?

தன் கணவரின் மர்மமான மரணத்திற்கு ஒரு இனத்தையே பழிவாங்கிவிடுவாரா?//

ஏன் எல்லாத்தையும் நெகட்டிவாகவே பாக்குறீங்க?