Saturday, August 28, 2010

கிரைம் டெஸ்ட் - கடைசி பாகம்

வாசலில் யாரோ பெல் அடித்தார்கள். போய்ப் பார்த்த செல்வா திரும்பி வந்து, “அருண் அந்த டிரிங்க் ஸ்பெசிமென் கொஞ்சம் குடுக்குறீங்களா? லேப்ல இருந்து ஆள் வந்திருக்காங்க”

அருண் எடுத்துக் கொடுக்க அதை வாங்கிக்கொண்டு போய்த் திரும்பினான் செல்வா. “இப்ப சொல்லுங்க அருண். இது சூசைடாவும் இருக்கலாம் இல்லையா?”

“இருக்காது செல்வா”

“இல்லை அருண். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நீத்தாவுக்கு ஏற்கனவே டிப்ரஷன் இருக்கு. இப்போ சர்வேஷ் வேற கல்யாணம் செஞ்சிக்கப் போறான்னு மனசுடைஞ்சி சூசைட் செஞ்சிருக்கலாமே? லாஜிக் இருக்கே?”

“சரி செல்வா. நான் உங்க போக்குலயே கேக்குறேன். அப்பிடின்னா எதுக்கு கேஸைத் திறந்து விட்டு சாகணும்? விஷம், தூக்கு, துப்பாக்கினு பல ஆப்ஷன் இருக்கும்போது?”

“இன்ஷுரன்ஸ்?”

“இன்ஷூரன்ஸா? இன்ஷூரன்ஸ் பணம் வந்து நீத்தாவே அதை அனுபவிக்கப் போறாங்களா? இந்த லாஜிக் எல்லாம் வீட்டைக் கொளுத்திட்டு ஆக்ஸிடெண்டுன்னு சொல்ற இடத்துல தான் வொர்க் அவுட் ஆகும் செல்வா. அதோட உங்க போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் டிப்ரஷனுக்கு எடுத்துக்கிற டேப்ளட் ஓவர் டோஸானதாலும், ஆல்கஹால் மிக்ஸ் ஆனதாலும் அதிகப்படியான தூக்கத்துக்கு ஆழ்த்தப்பட்டிருக்கிறதா சொல்லுது. அப்போ 11 மணிக்கு அவங்களே எழுந்து அந்த பைப்பத் திறந்து விட்டுட்டு மறுபடி தூங்கிட்டாங்களா?”

செல்வா தோல்வியை ஒத்துக் கொண்டது அவன் தலையைத் தொங்கப் போட்டதில் தெரிந்தது. “அப்போ என்னதான் சொல்ல வர்றீங்க அருண்?”

“ஓக்கே. என்னோட கெஸ்ஸைச் சொல்லிடறேன்”

சோஃபாவில் சம்மணம் போட்டு உக்கார்ந்து கொண்டு, “சர்வேஷை முந்தின நாள் ஈவினிங் கிரவுண்ட்ல போய் நீத்தா மீட் செஞ்சிருக்கணும். அங்க சர்வேஷோட சண்டை போட்டிருக்கணும். பயந்து போன சர்வேஷ் நீத்தாவைத் தீத்துட முடிவு செஞ்சி அவகிட்ட நைச்சியமாப் பேசி அவ வீட்டுக்கு வந்திருக்கணும். வந்த எடத்துல அவனோட ஸ்பெஷல் காக்டெயிலை மிக்ஸ் செஞ்சி அதுல அவளோட தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துருக்கணும். அடுத்த நாள் அவன் பேட்டிங் செஞ்சிக்கிட்டு இருக்கிற நேரத்துல யாரையோ வச்சி எப்பிடியோ இந்த பைப்பைத் திறந்து விட ஏற்பாடு செஞ்சிருக்கணும். அந்த யாரோ எப்பிடியோ தான் இங்க நாம சால்வ் பண்ணனும். செஞ்சிட்டா சர்வேஷை வளைச்சிடலாம்”

“ம்ம்.. நீங்க சொல்ற லாஜிக் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஆதாரம் எதுவுமே இல்லாம.. இப்ப சர்வேஷ் ஈவிங்க் வந்து இங்க ட்ரிங்க் குடிச்சிட்டுப் போயிருந்ததை நிரூபிச்சாக் கூட அவன்தான் இந்தக் கொலையை செஞ்சான்னு நாம ப்ரூவ் பண்ண முடியாதே?”

“கரெக்ட் செல்வா. கண்ணு முன்னாடி கொலைகாரன் இருக்கான். ஆனா அவனை அரெஸ்ட் செய்ய முடியலை”

“ஸீ அருண். ஐ யம் நாட் கோயிங் டு க்ளெய்ம் நீத்தாஸ் பாடி அண்டில் யு சால்வ் த கேஸ்” ப்ரீத்தா ஆணித்தரமாகச் சொன்னாள்.

அருண் பரிதாபமாக அவளைப் பார்த்து, “ஐ வில் ட்ரை மை பெஸ்ட்” என்று சொன்னான்.

“இப்போ நாம வெளிய போய் ஏதாவது சாப்டுட்டு வருவோம். அதுக்குள்ள லேப் ரிசல்ட்ஸ் வந்துடும்.” செல்வா சொன்ன யோசனை சரியாகப் படவே மற்ற இருவரும் கிளம்பினர்.

**************************************

டிவியில் இன்னமும் நீத்தாவின் மரணச் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. மாடலிங் உலகின் முக்கியப் புள்ளிகள் அனைவரையும் ஓடிப் பிடித்து இரங்கல் செய்தி வாங்கிக் கொண்டிருந்தார்கள் மைக் ஏந்திய நிருபர்கள். அதில் சர்வேஷையும் கேட்டுக் கொண்டிருந்தார் ஒரு வட இந்திய நிருபர்.

“இந்தச் செய்தி உண்மையிலேயே ஒரு பெரும் அதிர்ச்சிச் செய்தி. நல்ல நண்பர் அவர். அவரது பிரிவு மாடலிங் உலகத்துக்கு ஒரு பெரும் இழப்பு” என்று சம்பிரதாயமாகப் பேசிக்கொண்டிருந்தான் சர்வேஷ்.

“நீங்கள் அவரை கடைசியாகப் பார்த்தது எப்போது?”

“ம்ம்.. ஒரு மாதமிருக்கும். ஒரு ப்ராடக்ட் லாஞ்சின் போது அவர் ரேம்ப் வாக்கிங்கிற்காக வந்திருந்தார். அப்போது சந்தித்தோம்”

அருண் டிவியிலிருந்து பார்வையைத் திருப்பி “மீன் வலையில் சிக்குகிறது. இப்போது டி.வியில் அவனே சொல்லியிருக்கிறான். பார்த்து ஒரு மாதமாகிறது என்று. ஆனால் நேற்று முன் தினம் இங்கே வந்ததற்கு அந்த ட்ரிங்க் ஆதாரம் இருக்கிறது”. ப்ரீத்தாவும் செல்வாவும் ஆமோதித்தார்கள்.

மூவரும் இப்போது நீத்தாவின் படுக்கையறையில் இருந்த 60 இன்ச் எல்.சி.டி டிவியில் என்.டி.டி.வி சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ப்ரீத்தா நீத்தா இறந்து கிடந்த அந்த பெட்டில் அமர்ந்து கால் மடக்கி கைகளால் சுற்றிக் கட்டிக் கொண்டு முழங்கால்களின் மேல் முகவாயைப் பதித்து அமர்ந்திருந்தாள். அருண் அந்தக் கட்டிலுக்கு அருகில் தரையில் அமர்ந்து கட்டிலில் முதுகு சாய்த்திருந்தான். செல்வா கட்டிலின் இன்னொரு பக்கம் ஓரமாக அமர்ந்து பக்கவாட்டில் டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

செல்வாவின் செல்பேசி ஒலித்தது. எடுத்து பேசினான். அவன் முகம் மலர்ந்தது. அருணுக்கு எதோ நல்ல சேதி என்று புரிந்தது. செல்வாவே சொல்லட்டும் என்று அமைதியாயிருந்தான்.

“அருண். குட் நியூஸ். லேப் ரிசல்ட்ஸ் வந்துடுச்சி. நீங்க கெஸ் பண்ணினது சரி. நீத்தா குடிச்ச டிரிங்க்ல தான் அந்த டிப்ரஷன் டேப்லெட்ஸ் மிக்ஸ் ஆகியிருக்கு. அதே மாதிரி அது மார்ட்டினி, மார்கரிட்டா மிக்ஸ்ட் காக்டெயில் தான்”

அருண் எதிர்பார்த்த செய்திதான் என்பதால் அவன் முகம் பெரிதாக சந்தோசத்தைப் பிரதிபலிக்கவில்லை. ப்ரீத்தா அரைகுறையாகப் புரிந்தாலும் கட்டிலில் இருந்து துள்ளிக் குதித்து இறங்கி செல்வாவைக் கட்டிப் பிடித்து அவன் கன்னத்தில் ஒரு முத்தத்தைப் பதித்தாள்.

“கூல் கூல்” என்று அவளை விலக்கிச் சிரித்தான் செல்வா. “த கேஸ் இஸ்ண்ட் சால்வ்ட் யெட்”

அப்போது தரையில் இருந்த அந்த ரோபோ பொம்மை இயங்கத் தொடங்கியது. மெதுவாக கால்களையும் கைகளையும் அசைத்து முன்னேறியது. மூன்றடி நடந்ததும் சட்டென்று நின்றது.

அதிர்ச்சியில் துள்ளி எழுந்தான் அருண். மூவரும் அந்த பொம்மையையே பார்த்துக் கொண்டு பேச்சு வராமல் நின்றிருந்தார்கள். வாசல் மணி ஒலித்தது.

“ஐ ல் கெட் இட்” என்று ஓடினான் செல்வா.

அருண் அந்த பொம்மையின் அருகில் மண்டியிட்டு அதைத் தொடாமல் ஆராய்ந்தான். அது ஒரு ரிமோட் கண்ட்ரோல்ட் பொம்மை என்பதை அதன் முதுகுப்புறத்தில் இருந்த ஏரியல் காட்டிக் கொடுத்தது. அது ஒரு புத்தம் புதிய பொம்மை. அதன் விலைப்பட்டியல் கூட அப்படியே இருந்தது. அதைத் தவிர அதில் வேறு விவரம் இல்லை.

வாசலுக்குப் போன செல்வா திரும்ப உள்ளே வந்தான். “FEDEX டெலிவரி பாய். அந்தப் பார்சலைத் திரும்ப கொண்டு வந்தான். நீத்தா இறந்ததைச் சொன்னதும் திரும்பிப் போய்விட்டான். அனுப்பியவருக்கே அந்த பார்சல் திரும்பி விடும்”

“செல்வா. கெட் தட் டெலிவரி பாய். ஹி இஸ் த கய்” அருண் உச்சக் குரலில் கத்தினான். செல்வா அடுத்த நொடி வாசலை நோக்கி ஓடினான்.

ப்ரீத்தா ஒன்றும் புரியாமல் கையை நீட்டி கத்திக் கொண்டிருக்கும் அருணையும் ஓடிக் கொண்டிருக்கும் செல்வாவையும் மாறி மாறி பார்த்தாள். அருணும் செல்வாவின் பின்னாலேயே நிதானமாக அதே சமயம் வேகமாக நடையை எட்டிப் போட்டான். ப்ரீத்தா அவனைத் தொடர்ந்தாள்.

இருவரும் வாசலை நெருங்குவதற்கும் அருண் அந்த டெலிவரி பாயோடு வருவதற்கும் சரியாக இருந்தது. வாசலில் இருந்த செக்யூரிட்டிகளும் தபதப வென ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

செல்வா அந்த டெலிவரி பாயின் சட்டைக் காலரை கொத்தாகப் பிடித்து கிட்டத்தட்ட இழுத்து வந்து கொண்டிருந்தான். அந்த ஆளின் கண்ணில் பயமும், அதிர்ச்சியும் அறியாமையும் சடுகுடு ஆடிக்கொண்டிருந்தன. “க்யோன் சாப்.. சோட்தோ முஜே சாப்” என்று கத்திக் கொண்டே இருந்தான்.

“செல்வா. அவனை விடுங்க. அவன் மேல தப்பு இல்லை. அவன் கைல இருக்கிற பார்சல் தான் தப்பு”

“என்ன சொல்றீங்க அருண்” செல்வாவின் கை அந்த ஆளின் காலரை தன்னிச்சையாக ரிலீஸ் செய்தது.

“யெஸ். ஐ வில் ப்ரூவ் இட்” என்று சொல்லிக் கொண்டே அந்த பார்சலை எடுத்து ப்ரீத்தாவிடம் கொடுத்தான்.

“ப்ரீத்தா. வெயிட் ஹியர். மீ அண்ட் செல்வா வில் கோ இன்சைட் அண்ட் ஐ வில் கிவ் யூ எ சிக்னல். சிக்னல் கிடைத்ததும் நீங்கள் நீத்தாவின் படுக்கையறையின் ஜன்னலுக்கு அருகில் இந்தப் பார்சலோடு வாருங்கள். ஓக்கே” என்று சொல்லிவிட்டு செல்வாவை இழுத்துக் கொண்டு நீத்தாவின் படுக்கையறைக்குள் நுழைந்தான்.

ப்ரீத்தா ஒன்றும் புரியாமல் அந்தப் பார்சலோடு நின்றிருந்தாள்.

உள்ளே போன அருண், செல்வாவைப் பார்த்து, “செல்வா, அந்த ரோபோ பொம்மையையே பாருங்க” என்று சொல்லிவிட்டு இரண்டு விரல்களை வாய்க்குள் நுழைத்து ஒரு விசிலைப் பிறப்பித்தான்.

ஜன்னல் பக்கம் ப்ரீத்தா வரவும் அந்த ரோபோ பொம்மை நகர ஆரம்பித்தது. மறுபடி ஒரு விசில் கொடுக்கவும் ப்ரீத்தா வாசலுக்குத் திரும்பினாள். ரோபோ நின்று போனது.

செல்வா புரியாமல் அருணின் முகத்தைப் பார்த்தான். அருண் அவனது குழப்பத்தை சில விநாடிகள் ரசித்துவிட்டு, “செல்வா. சர்வேஷ் இஸ் இண்டலிஜெண்ட்”

“இருக்கட்டும் அருண். எனக்கு ஒண்ணும் புரியலை. கொஞ்சம் எக்ஸ்பிளெயின் பண்ணுங்க”

“ஓக்கே” தரையில் ஒரு இடத்தைக் காட்டினான். “ரோபோ முதல்ல இந்த இடத்துல தான் இருந்தது. அது இருக்கிற இடத்துல இருந்து அந்த கேஸ் பைபோட குழாய்க்கு எவ்வளவு தூரம்னு பாருங்க. ஒரு மூணு அடி இருக்குமா?”

“இருக்கும்” செல்வாவுக்கு இன்னும் குழப்பம் தீரவில்லை.

“இப்போ நாம வெளிய போகலாம்” அருணை குழப்பத்துடனே பின் தொடர்ந்தான் செல்வா.

வெளியே வந்து ப்ரீத்தாவின் கையில் இருந்த அந்தப் பார்சலை வாங்கிப் பிரித்துக் கொண்டே, “இப்போ என்னோட கெஸ் ரைட்னா. உள்ள அந்த ரோபோவோட ரிமோட் கண்ட்ரோல் இருக்கும் பாருங்க”. பிரித்து முடிக்க அந்த ரோபோவின் ரிமோட் கண்ட்ரோல் முன்னால் நகர்த்தும் ஜாய் ஸ்டிக்கின் மேல் ஒரு பேக்கிங் டேப் சுற்றப்பட்டு அது அழுந்திய நிலையிலேயே வைக்கப்பட்டு இருந்தது.

செல்வா ஆச்சரியம் நிரம்பிய கண்களோடு அருணைப் பார்த்தான்.

அருண் பைக்குள் இருந்து ஒரு ஜிப்லாக் பை எடுத்து அந்த ரிமோட்டை அதற்குள் வைத்து பத்திரப் படுத்தினான். அதை ஹாலில் வைத்து விட்டு, மறுபடியும் பெட்ரூமுக்குள் நுழைந்தான். இருவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

கையில் ஒரு மெல்லிய க்ளவுஸை மாட்டிய அருண், அந்த ரோபோ பொம்மையைக் கையில் எடுத்து தரையில் இருந்த அந்த கேஸ் குழாயின் திறப்பானில் முட்டி நிற்குமாறு வைத்தான்.

பின் வெளியே போய் அந்த ரிமோட்டை எடுத்துக் கொண்டு உள்ளே நுழையவும் அந்த ரோபோ குழாயின் திறப்பானை தள்ளிக் கொண்டு முன்னால் நகர்ந்தது. கேஸ் திறக்கப்படவும் எல்.பி.ஜியின் வாசம் நாசியைத் துளைத்தது. செல்வா ஓடிச் சென்று அந்தக் குழாயை மூடினான்.

செல்வாவுக்கும் தெளிவானது.

“இப்போ அந்த A-7ல இருக்கிற பார்சலைப் பற்றியும் விசாரியுங்க. அதையும் சர்வேஷ் தான் அனுப்பி இருக்கணும். அது அவங்க எதிர்பார்க்காத பார்சலா இருக்கும்”

வெளியே வரவும் அந்த FEDEX டெலிவரி பாயே அந்தத் தகவலையும் உறுதி செய்தான். A-7ல் இருந்து அவர்களின் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு அந்த பார்சல் யார் அனுப்பியது என்றே தெரியாததால் பிரிக்காமல் வைத்திருப்பதாகவும் அதை திரும்பி வாங்கிக் கொள்ளும்படியும் சொன்னதாகச் சொன்னான்.

அனுப்பியவர் அட்ரஸ் யார் என்று பார்த்ததில் யாரோ ஒருவருடைய பெயர் போட்டிருந்தது. “இது போலி அட்ரஸாகத்தான் இருக்கும்” அருண் ஆணித்தரமாகச் சொன்னான். பேமெண்ட் மோட் பார்க்க கிரெடிட் கார்டால் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும் அருண் செல்வாவைப் பார்க்க, செல்வா, கேஸ் க்ளோஸ்ட் என்று பெரிதாகச் சிரித்தான்.

ப்ரீத்தா மறுபடி அருணைக் கட்டிப் பிடித்து இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.

அருண் அவளை விலக்கி செல்வாவைப் பார்த்துச் சொன்னான், “என்ன எனக்கு ஒரே வருத்தம், இந்தியாவின் ஒரு சிறந்த பேட்ஸ்மெனை இனி மைதானத்தில் பார்க்க முடியாது என்பதுதான்” என்று சொல்ல செல்வாவும் ப்ரீத்தாவும் சிரித்தார்கள்.

(அப்பாடா.. ஒரு வழியா முடிஞ்சது)

22 comments:

Unknown said...

தொடர்ந்து ஆதரவு அளித்து உற்சாகப் படுத்திய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

இந்தக் கதையில் நீங்கள் காணும் லாஜிக் ஓட்டைகளை தாராளமாக விளக்கலாம். முடிந்தால் விளக்க முயற்சிக்கப்படும். இல்லையேல் அதை அடைக்கும் பொறுப்பு உங்களுக்கே அளிக்கப்படும்.

கதையின் போக்கை வெளியிட்டு விடுவேனோ என்ற பயத்திலேயே மற்ற மூன்று பாகங்களுக்கும் வந்த பின்னுட்டங்களுக்குப் பதில் சொல்லவில்லை. இந்த பாகத்திற்கு வரும் பின்னூட்டங்களை மொத்தக் கதைக்குமாக எடுத்துக் கொண்டு பதில் சொல்வேன். :))

Unknown said...

எல்லாத்தியும் மொத்தமா இன்னொரு தடவ படிச்சிட்டு அப்புறம் வர்றேன் ..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. இவ்வளவு பெரிய கதைய ஒரே நடையில எழுதினதுக்கே ஒரு பெரிய சபாஷ் சொல்லனும்..

சரி, மாத்திர கலக்கிக் கொடுத்து, நீத்தா தூங்க ஆரம்பிச்சதுமே சர்வேஷ் கேஸ் திறந்துவிட்டுட்டு (க்ளவுஸோட தான்) வெளியேறி இருக்கலாமே.. அதான் வந்துட்டுப்போனதையே யாரும் பார்க்கலையே..

அப்புறம், முக்கியமா, அந்த ட்ரிங்க் கோப்பைகள ஏன் அங்கயே விட்டுட்டுப் போகனும்? குறைந்தபட்சம், சின்க்ல கொட்டிக் கழுவிவச்சிட்டுப் போலாமே?

அந்த மாத்திரைகளயே இன்னும் கொஞ்சம் ஓவர்டோசாக்கியிருந்தா நேராவே போயிருப்பாங்களே? டாக்டர புடிச்சு உள்ள தள்ளியிருக்கலாம் :)))எதுக்கு கேஸ் அதுஇதுன்னு?

ஏ 4 வீட்டுக்கு எதுக்கு இன்னொரு பார்சல்?

அருண் அடிக்கடி சிகரெட் பிடிக்கறாப்ல.. குறைக்கலாமே.. (மொறைக்காதீங்க..)

இப்போதைக்கு இது மட்டுந்தான்.. வேறயேதும் நினைவுக்கு வந்தா மறக்காம கேப்பேன்.. :))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
This comment has been removed by the author.
Unknown said...

//ம்ம்.. இவ்வளவு பெரிய கதைய ஒரே நடையில எழுதினதுக்கே ஒரு பெரிய சபாஷ் சொல்லனும்..
//
நன்றி


//சரி, மாத்திர கலக்கிக் கொடுத்து, நீத்தா தூங்க ஆரம்பிச்சதுமே சர்வேஷ் கேஸ் திறந்துவிட்டுட்டு (க்ளவுஸோட தான்) வெளியேறி இருக்கலாமே.. அதான் வந்துட்டுப்போனதையே யாரும் பார்க்கலையே..
//
இதைக் கொலைன்னு யாராவது (ப்ரீத்தா) சந்தேகப்பட்டா முதல் டவுட்டு சர்வேஷ் மேலதான் விழும். கொலை நடந்த நேரத்துல என்ன செஞ்சிட்டிருந்தங்கிறதுக்கு ஒரு அலிபி செட் பண்ணனும். ஒரு இண்டர்நேஷனல் மேட்ச்ல பேட்டிங் செஞ்சிட்டு இருக்கிறதை விட ஸ்ட்ராங்கான அலிபி செட் பண்ண முடியுமா? நாடே பாத்துட்டு இருக்குமே?//அப்புறம், முக்கியமா, அந்த ட்ரிங்க் கோப்பைகள ஏன் அங்கயே விட்டுட்டுப் போகனும்? குறைந்தபட்சம், சின்க்ல கொட்டிக் கழுவிவச்சிட்டுப் போலாமே?
//

கொலைகாரர்கள் இந்த மாதிரி ஒன்னு ரெண்டு மிஸ்டேக் விட்டுட்டுப் போவாங்க. அப்பிடி விட்டாத்தான் கேஸை சால்வ் பண்ண முடியும்.

//
அந்த மாத்திரைகளயே இன்னும் கொஞ்சம் ஓவர்டோசாக்கியிருந்தா நேராவே போயிருப்பாங்களே? டாக்டர புடிச்சு உள்ள தள்ளியிருக்கலாம் :)))எதுக்கு கேஸ் அதுஇதுன்னு?
//
மறுபடியும் முதல் கேள்விக்கான பதில்தான்.

//ஏ 4 வீட்டுக்கு எதுக்கு இன்னொரு பார்சல்?
//
இந்தக் கேள்விக்கும் உங்க அடுத்த கேள்விக்கும் ஒரே பதில்தான். அதுனால அங்கயே சொல்றேன்.

//
அருண் அடிக்கடி சிகரெட் பிடிக்கறாப்ல.. குறைக்கலாமே.. (மொறைக்காதீங்க..)
//
விட்டா அன்புமணிக்கிட்ட சொல்லி லெட்டர் போடச் சொல்லுவீங்க போலருக்கே?

//
இப்போதைக்கு இது மட்டுந்தான்.. வேறயேதும் நினைவுக்கு வந்தா மறக்காம கேப்பேன்.. :))//
//

கேளுங்க கேளுங்க

Unknown said...

ஏன் அந்தக் கேள்விய டெலிட்டிட்டீங்க?

ஓக்கே. எனிவே பதில் சொல்ல வேண்டியது என் கடமை.

ரிமோட் கண்ட்ரோலுக்குனு ஒரு ரேஞ்ச் இருக்கும். அந்த ரேஞ்ச்சுக்குள்ள வரும்போது தான் ரோபோ நடக்கும். அந்த ரேஞ்ச் தாண்டிப் போயிட்டா நடக்காது. இந்த ரோபோவை ஹாலில் இருந்து கூட இயக்க முடியாது. பெட்ரூம் ஜன்னலுக்குப் பக்கத்தில் வந்தால் தான் ரேஞ்ச் கிடைக்கும். ஒரு வேளை பி-7க்கு மட்டும் அனுப்பியிருந்தால் அவன் நேராக வாசலுக்கே வந்துவிட்டால்? அதனால்தான் ஏ-4க்கு. அங்கு போய்விட்டு இங்கோ, இல்லை இங்கு வந்துவிட்டு அங்கோ போகும்போது பெட்ரூம் ஜன்னல் வழியாகத்தான் போகவேண்டுமென்பதால்.

vasu balaji said...

ஒரு கேஸ்பைப் கண்ட்ரோல் ரோபோ ப்ரெஸ்பண்ணா திறக்கற அளவிருக்குமா. அந்த அளவு ப்ரெஷர் குடுக்கணும்னா ரோபோ பொம்மை ரொம்ப வெயிட்டா இருக்கணுமே.#டவுட்

மொத்தத்தில கதை சூப்பர்ப்:)

நான் எந்திரண்டான்னு சவுண்ட் விட்டுகிட்டே நகர்ந்துச்சின்னு போட்டிருக்கலாம்#டமாசு

அருண் கண்டு பிடிச்சி சொல்லாம விட்ட தகவல்:

எவ்வளவு போராடியும் ரஜனின்னு சொல்ல முகிலன் புர்ச்சி செய்வதால் ரோபோ பொம்மை வாங்கி அதை ரஜனின்னு சொல்லி ஏமாத்தி மல்லுகட்டினப்ப எழுதின கதை.

தினேசுக்கு ரொம்ப பிடிச்ச கிரிக்கட், எந்திரன் எல்லாம் இருக்கறதால அந்த மார்கரிட்டா மார்ட்டினி ட்ரிங்சும் ஃபேவரிட்டோ#அருணுக்கு டவுட்

Anonymous said...

நல்லாத்தான் இருக்கு. நான் ரொம்ப யோசிக்கலை. இது நசர் எழுதினதுன்னாவாச்சும் ஸ்பெல்லிங் மிஸ்டிக் கண்டுபிடிக்க்லாம் :)

பெசொவி said...

நான் கூட முதல்ல ப்ரீத்தாதான் காரணமோன்னு நினைச்சேன்.
நல்ல நடை. நல்லா இருக்கு.

Unknown said...

crime mannan dinesh vaazhga

Unknown said...

//ஒரு கேஸ்பைப் கண்ட்ரோல் ரோபோ ப்ரெஸ்பண்ணா திறக்கற அளவிருக்குமா. அந்த அளவு ப்ரெஷர் குடுக்கணும்னா ரோபோ பொம்மை ரொம்ப வெயிட்டா இருக்கணுமே.#டவுட்//

அப்படிப் பட்ட கேஸ் டேப்களை அமெரிக்காவில் பார்த்திருக்கிறேன்.

அலைகள் பாலா said...

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். படிக்க இன்ரஸ்டிங்கா இருக்கு.

இவ்வளவு பிளான் போட்டவர் கிரெடிட் கார்ட்ல வாங்கிட்டாரா? அதுக்கு பதிலா கொரியர சேஸ் பண்ணி கண்டுபிடிக்குற மாதிரி வச்சுருக்கலாம்.
(ஏதோ நம்ம லெவல்க்கு நான் சொல்றேன் பிரதர்)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல பொறுமை.. நன்றி முகிலன்.. ரெண்டாவத டெலீட் பண்ணக் காரணம், எனக்கு புரிஞ்சிட்டதால :)

ப்ளான் ரொம்பக் கச்சிதமாவும் மிஸ்டேக் ரொம்ப பெருசாவும் இருக்கு.. பொருந்தல.. அதனால தான் கேட்டேன் :))

Paleo God said...

என்னது 4 பார்ட் தொடர் கதை நீங்க மட்டும் எழுதினீங்களா? என்ன கொடுமை முகிலன் இது?

a said...

//
இல்லையேல் அதை அடைக்கும் பொறுப்பு உங்களுக்கே அளிக்கப்படும்.
//
ஹா ஹா ஹா........

க ரா said...

எல்லாத்தயும் விடுங்க.. இவ்வளவ்வு மேட்டர் பன்னிட்டு அந்த ஆளு அவரோட கிரிட் காடுல்லதான் பே பன்னிருப்பானா... :) என்னவோ போங்க கதை நல்லா இருந்த்தது :)

பிரபாகர் said...

நீங்கள் சொன்னது போல் இந்தியா ஒரு சிறந்த ஓப்பனரை இழந்ததில் வருத்தம்தான்...(மானசீகமாய் விளையாடியதைப் பார்த்தோமில்ல...) ரோபோ மூலம் கேஸ் பைப்... நம்புவதில் கொஞ்சம் சிரமமாய்த்தான் இருக்கிறது, ஆனாலும் அருமையான ஐடியா... மொத்தத்தில் இது ஒரு ஹை ஃபை கலக்கல் க்ரைம். இதுபோல் அடிக்கடி தாருங்கள் தினேஷ்!

பிரபாகர்...

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//என்னது 4 பார்ட் தொடர் கதை நீங்க மட்டும் எழுதினீங்களா? என்ன கொடுமை முகிலன் இது?//

ம்கும். கொள்ளைக்கு போனாலும் கூட்டு ஆகாது:))))))

Ramesh said...

கதையை முடிப்பதற்காக அல்லது அந்த நேர சுவாரஷ்யத்திற்காக சில ஓட்டைகள் இருந்தாலும்...அதெல்லாம்.. குறைன்னு சொல்ல வேனாம்..ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்...தொடர்ந்து எழுதுங்க..கதை மிகவும் அருமை...

Unknown said...

//.. அப்படிப் பட்ட கேஸ் டேப்களை அமெரிக்காவில் பார்த்திருக்கிறேன். ..//

ஆனா கதை டெல்லியில் தானே நடக்குது..??(சும்மா விளையாட்டுக்கு..!!)

விறுவிறுப்புக்கு குறைவில்லைங்க..(சில லாஜிக் ஓட்டைகளை டீல்ல விட்டுடலாம்..)

Chitra said...

சார், சார், முகிலன் சார், அடுத்த தொடர்கதை எப்போ சார்?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எங்க சொல்றதுன்னு தெரியல.. அதனால இங்க சொல்லிட்டு ஓடிடறேன்.. ஒரு மணிக்கு ஷோ :)

//இந்தக் கதையில் நீங்கள் காணும் லாஜிக் ஓட்டைகளை தாராளமாக விளக்கலாம்.//

இது போன்று லாஜிக் குறை சுட்டிக்காட்டுதல்களை வரவேற்பவர் நீங்கள் என்ற புரிதலின் அடிப்படையில் இங்க இருந்து தொடங்குச்சு.. அது தான் அங்கயும் தொடர்ந்துச்சு.. மற்றபடி, விளக்கெண்ணெய் விட்டு எல்லாம் படிக்கரதில்ல.. சாயந்திரம் வீடு வந்து லேப் டாப் பார்க்கவே கண்ணும் தலையும் வலிக்குது.. அந்தளவுக்கு தேடி எப்படி பார்க்க?