முன் குறிப்பு: இது சினிமா விமர்சனமல்ல. சினிமா பார்த்த அனுபவம். சினிமா விமர்சனத்தை எதிர்பார்த்து வந்தவர்கள், வேறு பல நல்ல விமர்சகர்களின் தளங்களை நாடவும்.. :))
ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி டிக்கெட் புக்கியிருந்தேன். அக்டோபர் ஒன்னாம் தேதி மூணு ஷோ. மதியம் 1:00 மணி, மாலை 4:30, இரவு 8:10. மதியமும் மாலையும் ஆணு புடுங்குற, ஆணி புடுங்கி முடிஞ்சி வீட்டுக்கு வர வேலையிருக்கும்ங்கிறதால இரவு 8:10 ஷோவுக்கு தான் புக் செஞ்சிருந்தேன்.
ஆஃபீஸ்ல இருந்து 4:15 மணிக்குக் கிளம்பி வீட்டுக்கு வந்துடனும். வந்துட்டு சினிமா பாக்கும்போடு கொறிக்க ஹெல்தியா எதாவது - சுண்டல்கடலை பெஸ்ட் சாய்ஸ் - செஞ்சி எடுத்து வச்சிக்கணும். முகிலனுக்கு சாப்பாடு - பேபி ஃபுட் -, குடிக்க தண்ணி இதெல்லாம் ரெடி செஞ்சிரனும். இதையெல்லாம் நீயா செஞ்சாத்தான் நான் சினிமாவுக்கு வருவேன் - இது தங்கமணி மிரட்டல். நம்ம பங்குக்கு 6:30க்கெல்லாம் சாப்டுட்டு 7:30 மணிக்குள்ள தியேட்டர்ல இருக்கணும் இப்பிடியெல்லாம் திட்டம் போட்டுட்டு ஆஃபீஸுக்குக் கிளம்பி போயாச்சி.
கை பொட்டியத் தட்டிக்கிட்டு இருந்தாலும் மனசெல்லாம் எந்திரன் ஓடிக்கிட்டே இருந்தது. எந்த விமர்சனத்தையும் - தல கிரியோடது தவிர - படிக்கலை. எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது மதியம் மூணு மணி வரைக்கும்.
சரியா மூணு மணிக்கு ஒரு ஃபோன் கால். Userகிட்ட இருந்து. ஒரு அப்ளிக்கேஷன் புட்டுக்குச்சி. என்னான்னு பாருன்னு. நானும் அதை வழக்கம்போல நம்ம டீம்ல இருக்கிற ஒருத்தருக்கு அசைன் பண்ணிட்டு என்ன நடக்குதுங்கிறதை நகத்தைக் கடிச்சிட்டுப் பாக்க ஆரம்பிச்சேன். பிரச்சனை என்னான்னு கண்டுபிடிச்சாச்சி, ஆனா அதை சால்வ் செய்யறது எங்க கைல இல்லை. மேனேஜ்மெண்ட்தான் செய்யணும். ஆனா டைரக்டரும், சி.ஐ.ஓவும் அன்னைக்கிப் பாத்தா லீவ் போடணும்? இதுக்கு நடுவுல பிரச்சனை என்னான்னு கண்டுபிடிச்ச சாஃப்ட்வேர் எஞ்சினியர் 4:00 மணியானதும் வீட்டுக்குக் கிளம்பிட்டாங்க. கடைசியில லீவ்ல போன டைரக்டரை செல்ஃபோன்ல பிடிச்சி, பிரச்சனைய விளக்கி இப்பிடித்தான்யா தீக்கணும்னு சொல்லி.. எல்லாம் முடிஞ்சிரும்ங்கிற நிலைமை வரும்போது மணி பாத்தா 4:45. சரி இன்னும் ஒரு கால் மணி நேரத்துல அப்ளிகேஷனை ரீ-ஸ்டார்ட் பண்ணிரலாம்னு நினைச்சா, கடைசியில ஒரு முட்டுக்கட்டை விழுந்திருச்சி. டைரக்டர், இதை இப்போ ரிசால்வ் செய்ய முடியாது. திங்கட்கிழமை பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு. ஆனா பிசினஸ் விட மாட்டேங்கிறாங்க. இன்னைக்கே தீர்க்கணும்னு என்னை மிரட்டறாங்க. எனக்குன்னா மணி 5:00 ஆயிடுச்சேன்னு ஒரே கவலை. அப்புறம் பிசினஸையும் டைரக்டரையும் கோத்து விட்டு அவனுங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டு ஒரு வழியா நீ இன்னைக்கி ஆணியே புடுங்க வேணாம்னு என் கிட்ட சொல்லும்போது மணி 5:45.
அவசரம் அவசரமா வீட்டுக்கு வந்தா, நம்ம தங்கமணி நிலைமையப் புரிஞ்சிக்கிட்டு அவங்களே சுண்டல் கடலையை வேக வச்சிருந்தாங்க. முகிலனுக்கும் ஷார்ட் டிஃபன் குடுத்துக்கிட்டு இருந்தாங்க. நம்ம சைட்ல அந்த சுண்டலுக்கு தாளிச்சிக் கொட்டி கலந்துட்டு, நைட் டின்னருக்கு நூடுல்ஸ் செஞ்சி எல்லாரும் சாப்டுட்டு , பேசின மாதிரியே 7:00 மணிக்கு கிளம்பியாச்சி. போற வழில ஃப்ரண்டையும் அவர் மனைவியையும் பிக்-அப் செஞ்சி தியேட்டருக்குப் போய் ரீச் ஆவும்போது மணி 7:25.
தியேட்டர்ல மேல என்ன என்ன படம் ஓடுதுன்னு எழுதி லைட் போட்டு வச்சிருப்பாங்க. அதுல எந்திரன் பாத்ததுமே மனசுல ஒரு பெருமிதம். தமிழ்ப்படத்தையும் ஒரு ஆங்கிலப்படம் போடுற தியேட்டர்ல போட்டு மேலயே எழுதியும் வச்சிருக்காங்கன்னு. நான் பெற்ற பெருமிதம் பெருக இவ்வையகம்.
தியேட்டருக்கு வெளிய இருந்து நம்மாளுங்க நிக்கிறதைப் பாத்ததும் பக்னு ஆயிருச்சி.(அந்த ஃபோட்டோல பாருங்க. ஒரு வரிசை தெரியுதா?) நல்ல சீட் கிடைக்காதா? முன்னாடி உக்காந்துதான் பாக்கணுமோன்னு. எதுக்கும் இருக்கட்டும்னு தங்கமணிக்கிட்ட ஒரு அப்ளிகேஷன் - அப்பிடி ஒரு வேளை நல்ல சீட்ல உக்காந்து பாக்க முடியலைன்னா ஞாயிற்றுக்கிழமை இன்னொரு தடவை வரணும் - போட்டு வச்சிட்டேன்.
தியேட்டருக்குள்ள நுழைஞ்சி (ஏற்கனவே ஆன்லைன புக் செஞ்சியிருந்ததால) அங்க இருந்த கயாஸ்க் (Kiosk) போய் டிக்கெட்டைப் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்திடலாம்னு போனா எனக்கு முன்னாடி ஒருத்தர் - 17 டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு இருந்தாரு. முதல்லயே மத்தவங்களை எல்லாம் க்யூல (மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் - எந்திரன் ஓடுறது ஸ்க்ரீன் 1. அதுக்குள்ள போறதுக்கான க்யூ) நிக்க சொல்லிட்டு நானும் நாலு டிக்கெட்டையும் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு க்யூல போய் சேந்துக்கிட்டேன்.
அந்த தியேட்டர்ல இருந்தவங்கள்ல முக்கால்வாசி பேரை நான் ராச்செஸ்டர்ல பாத்ததில்லை. இவ்வளவு பேரு இங்க இருக்காங்களான்னு எனக்கு ஒரே ஆச்சரியம். ஆமா நாம வீட்ட விட்டு வெளிய போறதேயில்ல. நாலு எடத்துக்குப் போய் வந்தாதான மனுசங்களைப் பாக்க முடியும்னு கொமட்டுல தங்கமணி குத்தவும், ஆமால்லன்னு நினைவுக்கு வந்தது.
7:40க்கெல்லாம் தியேட்டர் உள்ள விட ஆரம்பிச்சிட்டாங்க. அதிசயமா நம்ம மக்கள் வரிசையாவே தியேட்டர் உள்ள போனாங்க. வரிசையா போற கிரவுட்ல ஒரு பகுதி.
தியேட்டருக்குள்ள நுழைஞ்சதும் என்னோட அதியசத்துல விழுந்தது மண்ணு. உள்ள வந்தவங்க ஜஸ்ட் சாம்பிள். ரெண்டு பேரா உள்ள வந்தவங்க நல்லதா ஒரு ரோல இந்தக் கடைசியில ஒருத்தர் அந்தக் கடைசியில ஒருத்தர்னு உக்காந்துக்கிட்டாங்க. என்னாங்கனு கேட்டா, நடுவுல இருக்கிற சீட்டுக்கெல்லாம் அவங்க ஃப்ரண்ட்ஸ் & ஃபேமிலி வராங்களாம். இதுதான் ரிசர்வ் பண்றதா? கொடுமையேன்னு, சைட்ல இருந்த நாலு பேர் சீட்ல உக்காந்தோம்.
படம் போடுற வரைக்கும் எதேதோ படங்களோட ட்ரெயிலர் ஓடிட்டு இருந்தது. மக்கள் பொறுமையில்லாம கத்திக்கிட்டே இருந்தாங்க. நாமும் நம்ம பங்குக்கு விசில் போட்டோம். (சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளம்பரம் பாத்ததுல இருந்து முகிலன் விசில் போடுறார் - அப்பிடின்னா சும்மா ஒரு விரல் இல்லைன்னா ரெண்டு விரலை வாயிக்குள்ள வச்சி உஃப் உஃப்னு ஊதுவார்) நான் விசிலடிக்கிறதைப் பாத்துட்டு முகிலனும் விசில் போட்டார்.
ஆப்பரேட்டர், படத்தப் போடுய்யா...
ஆப்பரேட்டருக்குத் தமிழ் தெரியுமா?
இப்பிடியெல்லாம் கத்திக்கிட்டே இருந்தாங்க. சரியா 8:10க்கு படம் போட ஆரம்பிக்க முன்னாடி, மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணாம சைலண்டா இருந்து படம் பாருங்கன்னு ஸ்லைட் போடவும் தியேட்டரே சத்தத்துல அதிர்ந்திச்சி.
படம் ஆரம்பிச்சி, புதிய மனிதா பாட்டுப் போடவும் முகிலனுக்கு கண்ணு ரெண்டும் பிரைட் ஆகிடுச்சி. ஆஹா நாம கேட்ட பாட்டுடானு. டைட்டில் போடும்போது ரஜினி, சுஜாதா, ரஹ்மான், ஷங்கர் இவங்களுக்கு பெரிய கைத்தட்டல். பாட்டப்போ எல்லாம் ஜாலியா பாத்த முகிலன் ரோபோவைக் காட்டினதும் பயப்பட ஆரம்பிச்சிட்டாரு. (ஏற்கனவே டிவியில வர்ற மஹிந்த்ரா மினி ட்ரக் விளம்பரத்துல அந்த மினி ட்ரக் ரோபோவா மாறுரதைப் பாத்தே பயந்தவரு). என் மடியில இருந்து அவங்கம்மா மடிக்கு ஷிஃப்ட் ஆயிட்டாரு. அப்புறம் கொஞ்ச நேரத்துல இறங்கி நம்ம ஃப்ரண்ட்கிட்ட போய் உக்காந்துக்கிட்டாரு.
மேல இருக்கிற ஃபோட்டோ காதல் அணுக்கள் பாட்டு ஓடும்போது எடுத்தது. சிட்டி ரோபோ செய்யற சாகசங்களுக்கு தியேட்டர் கைத்தட்டும்போதெல்லாம் கை தட்டினாரு. ஆனா அதே ஸ்கின் இல்லாத மெட்டல் ரோபோவா வரும்போதெல்லாம் பயப்படறதை நிறுத்தல. அதிலயும் டேனி டென்சொங்பாவோட ரோபோஸைப் பாத்து ரொம்பவே பயந்தாரு. குறிப்பா சிட்டி ஃபயர்ல இருந்து ஆளுங்களைக் காப்பாத்தும்போது அம்மாவைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு முகத்தைத் திருப்பிக்கிட்டாரு.
இண்டர்மிஷன்னு போட்டும் இண்டர்வல் விடல - ஹாலிவுட் படம் மாதிரி. அதுனாலயோ என்னவோ கிளிமாஞ்சாரோ பாட்டுக்கு கொஞ்சம் பேர் வெளிநடப்பு செஞ்சிட்டாங்க. முகிலனும் பொறுமை இழந்து வெளிய போகணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டாரு, பாவம் தங்கமணிதான் வெளிய கூட்டிட்டுப் போனாங்க. (என்ன ஒரு ஆணாதிக்கம்?) அதுக்கப்புறம் ஒரே உள்ளே வெளியே தான்.
கடைசி அரை மணி நேரம் எல்லாரையும் கட்டிப் போட்டுடுச்சி. ரஜினி அதகளம். நான் பின்னாடி போய் நின்னுக்கிட்டே பாத்தேன் - முகிலன் புண்ணியம். அரிமா அரிமா - முகிலனோட ஃபேவரைட் பாட்டு போடவும், முகிலன் டான்ஸ் ஆடினாரு. இருட்டா இருந்ததால படமோ வீடியோவோ எடுக்க முடியலை. படம் முடியவும் ஒருத்தர் சத்தமா - “தலைவா உனக்கு இன்னும் வயசாவலை”னு சொல்லவும் இன்னும் சிலர் கைத்தட்டுனாங்க. (அந்த இன்னும் சிலர்ல நான் இல்லைன்னா நீங்க நம்பவா போறீங்க).
மொத்தத்துல எந்திரன் சினிமா இல்லை. எக்ஸ்பீரியன்ஸ். DOT.
ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி டிக்கெட் புக்கியிருந்தேன். அக்டோபர் ஒன்னாம் தேதி மூணு ஷோ. மதியம் 1:00 மணி, மாலை 4:30, இரவு 8:10. மதியமும் மாலையும் ஆணு புடுங்குற, ஆணி புடுங்கி முடிஞ்சி வீட்டுக்கு வர வேலையிருக்கும்ங்கிறதால இரவு 8:10 ஷோவுக்கு தான் புக் செஞ்சிருந்தேன்.
ஆஃபீஸ்ல இருந்து 4:15 மணிக்குக் கிளம்பி வீட்டுக்கு வந்துடனும். வந்துட்டு சினிமா பாக்கும்போடு கொறிக்க ஹெல்தியா எதாவது - சுண்டல்கடலை பெஸ்ட் சாய்ஸ் - செஞ்சி எடுத்து வச்சிக்கணும். முகிலனுக்கு சாப்பாடு - பேபி ஃபுட் -, குடிக்க தண்ணி இதெல்லாம் ரெடி செஞ்சிரனும். இதையெல்லாம் நீயா செஞ்சாத்தான் நான் சினிமாவுக்கு வருவேன் - இது தங்கமணி மிரட்டல். நம்ம பங்குக்கு 6:30க்கெல்லாம் சாப்டுட்டு 7:30 மணிக்குள்ள தியேட்டர்ல இருக்கணும் இப்பிடியெல்லாம் திட்டம் போட்டுட்டு ஆஃபீஸுக்குக் கிளம்பி போயாச்சி.
கை பொட்டியத் தட்டிக்கிட்டு இருந்தாலும் மனசெல்லாம் எந்திரன் ஓடிக்கிட்டே இருந்தது. எந்த விமர்சனத்தையும் - தல கிரியோடது தவிர - படிக்கலை. எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது மதியம் மூணு மணி வரைக்கும்.
அவசரம் அவசரமா வீட்டுக்கு வந்தா, நம்ம தங்கமணி நிலைமையப் புரிஞ்சிக்கிட்டு அவங்களே சுண்டல் கடலையை வேக வச்சிருந்தாங்க. முகிலனுக்கும் ஷார்ட் டிஃபன் குடுத்துக்கிட்டு இருந்தாங்க. நம்ம சைட்ல அந்த சுண்டலுக்கு தாளிச்சிக் கொட்டி கலந்துட்டு, நைட் டின்னருக்கு நூடுல்ஸ் செஞ்சி எல்லாரும் சாப்டுட்டு , பேசின மாதிரியே 7:00 மணிக்கு கிளம்பியாச்சி. போற வழில ஃப்ரண்டையும் அவர் மனைவியையும் பிக்-அப் செஞ்சி தியேட்டருக்குப் போய் ரீச் ஆவும்போது மணி 7:25.
தியேட்டர்ல மேல என்ன என்ன படம் ஓடுதுன்னு எழுதி லைட் போட்டு வச்சிருப்பாங்க. அதுல எந்திரன் பாத்ததுமே மனசுல ஒரு பெருமிதம். தமிழ்ப்படத்தையும் ஒரு ஆங்கிலப்படம் போடுற தியேட்டர்ல போட்டு மேலயே எழுதியும் வச்சிருக்காங்கன்னு. நான் பெற்ற பெருமிதம் பெருக இவ்வையகம்.
தியேட்டருக்கு வெளிய இருந்து நம்மாளுங்க நிக்கிறதைப் பாத்ததும் பக்னு ஆயிருச்சி.(அந்த ஃபோட்டோல பாருங்க. ஒரு வரிசை தெரியுதா?) நல்ல சீட் கிடைக்காதா? முன்னாடி உக்காந்துதான் பாக்கணுமோன்னு. எதுக்கும் இருக்கட்டும்னு தங்கமணிக்கிட்ட ஒரு அப்ளிகேஷன் - அப்பிடி ஒரு வேளை நல்ல சீட்ல உக்காந்து பாக்க முடியலைன்னா ஞாயிற்றுக்கிழமை இன்னொரு தடவை வரணும் - போட்டு வச்சிட்டேன்.
தியேட்டருக்குள்ள நுழைஞ்சி (ஏற்கனவே ஆன்லைன புக் செஞ்சியிருந்ததால) அங்க இருந்த கயாஸ்க் (Kiosk) போய் டிக்கெட்டைப் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்திடலாம்னு போனா எனக்கு முன்னாடி ஒருத்தர் - 17 டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு இருந்தாரு. முதல்லயே மத்தவங்களை எல்லாம் க்யூல (மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் - எந்திரன் ஓடுறது ஸ்க்ரீன் 1. அதுக்குள்ள போறதுக்கான க்யூ) நிக்க சொல்லிட்டு நானும் நாலு டிக்கெட்டையும் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு க்யூல போய் சேந்துக்கிட்டேன்.
அந்த தியேட்டர்ல இருந்தவங்கள்ல முக்கால்வாசி பேரை நான் ராச்செஸ்டர்ல பாத்ததில்லை. இவ்வளவு பேரு இங்க இருக்காங்களான்னு எனக்கு ஒரே ஆச்சரியம். ஆமா நாம வீட்ட விட்டு வெளிய போறதேயில்ல. நாலு எடத்துக்குப் போய் வந்தாதான மனுசங்களைப் பாக்க முடியும்னு கொமட்டுல தங்கமணி குத்தவும், ஆமால்லன்னு நினைவுக்கு வந்தது.
7:40க்கெல்லாம் தியேட்டர் உள்ள விட ஆரம்பிச்சிட்டாங்க. அதிசயமா நம்ம மக்கள் வரிசையாவே தியேட்டர் உள்ள போனாங்க. வரிசையா போற கிரவுட்ல ஒரு பகுதி.
தியேட்டருக்குள்ள நுழைஞ்சதும் என்னோட அதியசத்துல விழுந்தது மண்ணு. உள்ள வந்தவங்க ஜஸ்ட் சாம்பிள். ரெண்டு பேரா உள்ள வந்தவங்க நல்லதா ஒரு ரோல இந்தக் கடைசியில ஒருத்தர் அந்தக் கடைசியில ஒருத்தர்னு உக்காந்துக்கிட்டாங்க. என்னாங்கனு கேட்டா, நடுவுல இருக்கிற சீட்டுக்கெல்லாம் அவங்க ஃப்ரண்ட்ஸ் & ஃபேமிலி வராங்களாம். இதுதான் ரிசர்வ் பண்றதா? கொடுமையேன்னு, சைட்ல இருந்த நாலு பேர் சீட்ல உக்காந்தோம்.
படம் போடுற வரைக்கும் எதேதோ படங்களோட ட்ரெயிலர் ஓடிட்டு இருந்தது. மக்கள் பொறுமையில்லாம கத்திக்கிட்டே இருந்தாங்க. நாமும் நம்ம பங்குக்கு விசில் போட்டோம். (சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளம்பரம் பாத்ததுல இருந்து முகிலன் விசில் போடுறார் - அப்பிடின்னா சும்மா ஒரு விரல் இல்லைன்னா ரெண்டு விரலை வாயிக்குள்ள வச்சி உஃப் உஃப்னு ஊதுவார்) நான் விசிலடிக்கிறதைப் பாத்துட்டு முகிலனும் விசில் போட்டார்.
ஆப்பரேட்டர், படத்தப் போடுய்யா...
ஆப்பரேட்டருக்குத் தமிழ் தெரியுமா?
இப்பிடியெல்லாம் கத்திக்கிட்டே இருந்தாங்க. சரியா 8:10க்கு படம் போட ஆரம்பிக்க முன்னாடி, மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணாம சைலண்டா இருந்து படம் பாருங்கன்னு ஸ்லைட் போடவும் தியேட்டரே சத்தத்துல அதிர்ந்திச்சி.
படம் ஆரம்பிச்சி, புதிய மனிதா பாட்டுப் போடவும் முகிலனுக்கு கண்ணு ரெண்டும் பிரைட் ஆகிடுச்சி. ஆஹா நாம கேட்ட பாட்டுடானு. டைட்டில் போடும்போது ரஜினி, சுஜாதா, ரஹ்மான், ஷங்கர் இவங்களுக்கு பெரிய கைத்தட்டல். பாட்டப்போ எல்லாம் ஜாலியா பாத்த முகிலன் ரோபோவைக் காட்டினதும் பயப்பட ஆரம்பிச்சிட்டாரு. (ஏற்கனவே டிவியில வர்ற மஹிந்த்ரா மினி ட்ரக் விளம்பரத்துல அந்த மினி ட்ரக் ரோபோவா மாறுரதைப் பாத்தே பயந்தவரு). என் மடியில இருந்து அவங்கம்மா மடிக்கு ஷிஃப்ட் ஆயிட்டாரு. அப்புறம் கொஞ்ச நேரத்துல இறங்கி நம்ம ஃப்ரண்ட்கிட்ட போய் உக்காந்துக்கிட்டாரு.
மேல இருக்கிற ஃபோட்டோ காதல் அணுக்கள் பாட்டு ஓடும்போது எடுத்தது. சிட்டி ரோபோ செய்யற சாகசங்களுக்கு தியேட்டர் கைத்தட்டும்போதெல்லாம் கை தட்டினாரு. ஆனா அதே ஸ்கின் இல்லாத மெட்டல் ரோபோவா வரும்போதெல்லாம் பயப்படறதை நிறுத்தல. அதிலயும் டேனி டென்சொங்பாவோட ரோபோஸைப் பாத்து ரொம்பவே பயந்தாரு. குறிப்பா சிட்டி ஃபயர்ல இருந்து ஆளுங்களைக் காப்பாத்தும்போது அம்மாவைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு முகத்தைத் திருப்பிக்கிட்டாரு.
இண்டர்மிஷன்னு போட்டும் இண்டர்வல் விடல - ஹாலிவுட் படம் மாதிரி. அதுனாலயோ என்னவோ கிளிமாஞ்சாரோ பாட்டுக்கு கொஞ்சம் பேர் வெளிநடப்பு செஞ்சிட்டாங்க. முகிலனும் பொறுமை இழந்து வெளிய போகணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டாரு, பாவம் தங்கமணிதான் வெளிய கூட்டிட்டுப் போனாங்க. (என்ன ஒரு ஆணாதிக்கம்?) அதுக்கப்புறம் ஒரே உள்ளே வெளியே தான்.
கடைசி அரை மணி நேரம் எல்லாரையும் கட்டிப் போட்டுடுச்சி. ரஜினி அதகளம். நான் பின்னாடி போய் நின்னுக்கிட்டே பாத்தேன் - முகிலன் புண்ணியம். அரிமா அரிமா - முகிலனோட ஃபேவரைட் பாட்டு போடவும், முகிலன் டான்ஸ் ஆடினாரு. இருட்டா இருந்ததால படமோ வீடியோவோ எடுக்க முடியலை. படம் முடியவும் ஒருத்தர் சத்தமா - “தலைவா உனக்கு இன்னும் வயசாவலை”னு சொல்லவும் இன்னும் சிலர் கைத்தட்டுனாங்க. (அந்த இன்னும் சிலர்ல நான் இல்லைன்னா நீங்க நம்பவா போறீங்க).
மொத்தத்துல எந்திரன் சினிமா இல்லை. எக்ஸ்பீரியன்ஸ். DOT.
21 comments:
நீங்க சொன்னத வச்சு நாங்களும் இன்னிக்குப் போறோம்.. இடுகைய படிக்கல.. வந்து படிச்சுக்கறேன்..
சுருக்கமா, எக்ஸ்பீரியன்ஸ் எப்படி? குட் ஆர் பேட்?
ஆளாளுக்கு கதையப்பத்தியே சொல்லாம எழுதறதப்பார்த்தா அப்படின்னு ஒன்னு இல்லையோ #டவுட்டு:))
@எல் போர்ட் - சந்தனா, குட் எக்ஸ்பீரியன்ஸ்தான். ஷங்கர் + ரஜினி = நோ லாஜிக். இதை மட்டும் மனசுல வச்சிக்கிட்டு பாருங்க. சவால் சிறுகதை மாதிரி கண்ணுல விளக்கெண்ணை விட்டுட்டு பாக்காதீங்க.
ஆல் த பெஸ்ட்.
@வானம்பாடிகள்
சார். கதை பெருசா ஒன்னுமில்லை. ஒன் லைனர்தான். ஆனா ஸ்க்ரீன்ப்ளே அட்டகாசம். அதுதான் எக்ஸ்பீரியென்ஸ்.
ம்ம்... இங்கயும் ஒரு ரைட்டு...
இப்படியும் விமர்சனம் எழுதலாமோ ?
இங்க ஒரு இருபது முப்பது பசங்க எந்திரம் ப்டம் பிரிண்ட் பண்ண டீசர்ட்லாம் ஆடர் பண்ணி போட்டுகிட்டு நேத்திக்கு ஒரே அதகளம்....
// சவால் சிறுகதை மாதிரி கண்ணுல விளக்கெண்ணை விட்டுட்டு பாக்காதீங்க.//
விட்டுடறேன்.. ஐ மீன் விட்டுப் பாக்கறத விட்டுடறேன்னு சொன்னேன்.. :))
//ஷங்கர் + ரஜினி = நோ லாஜிக்.//
நோ லாஜிக் x 2 :)) தெரியும்.. ஆனா, படம் பார்க்கறப்ப அத பீல் பண்ணிடாத மாதிரி வேகமா இருக்கும்ன்னு நினைக்கறேன்..
@dhinesh
kodutha kaasu climaxuke sariya poiduchu.. nalaiku mng en review varum.. ippathan theaterla irunthu vanthen
அருமை முகிலன் நான் மீண்டும் நாளை போவதாக இருக்கிறேன் பார்ப்பதற்கு முதல் நாளில் இருந்தே தூங்கவில்லை
என்னதான் ரஜினி ரசிகராய் இருந்தாலும் ஜூனியரை கூட்டிப் போய் பயமுறுத்தி இருக்கிறீர்களே, தலைவரை பிடிக்காமல் போய் விட்டால்
Mudhalla padhivukku thanks
Ennadhu... kadhal anukaluku velia ponangala? Ivangaluku oru mayeee.... poda vendiyadhudhan.
Padatha purakanikka sonnadhungala makkal purakanichutanga.
Andha villan siripuku eadhuvum inai illai.
இன்னும் பார்க்கல தினேஷ்... இரண்டு நாட்களில் பார்த்துவிடுவேன்...
பிரபாகர்...
நானும் பாத்துட்டேன்.. அதுவும் முதல் நாளே. பாட்டுக்கும் க்ளைமேக்ஸுக்குமே கொடுத்த காசு செரிச்சுப்போச்சு :-))
//சரியா மூணு மணிக்கு ஒரு ஃபோன் கால். Userகிட்ட இருந்து. ஒரு அப்ளிக்கேஷன் புட்டுக்குச்சி. என்னான்னு பாருன்னு.//
எனக்கும் இந்த சனி ஞாயிறு வேலை வைத்து மொத்தமா டேமேஜ் பண்ணிடாங்க... ச்சே! கடுப்பாகுது.
Padam super
என்னப்பா இது எங்கூர் தேவலாம் போலயே.. டிக்கெட் எடுக்கையிலேயே
எந்த சீட் வேணுமின்னு க்ளிக் செய்து செலட்க் செய்துக்கறமே..
குட்டிப்பையன் எஞ்சாய் செய்ததும் பயந்ததும் எல்லாம் நல்லா கவனிச்சிருக்கீங்க படத்தைப் பார்கிறதை விட குழந்தையைத்தான் பாத்திருப்பீங்க போல.. நல்ல விசயம்.. அவன் படிக்கும்போது மகிழ்வான்.
Thanks for sharing boss.
நல்லாயிருக்கு படம் பாத்த கதை! அதுவும் லிட்டில் பாத்தது க்யூட்!
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
அருமையான அனுபவம்.
2 வயது பிள்ளையை 3 மணி நேர தமிழ் சினிமாவுக்கு கூட்டிச்சென்று ரோபோவை காட்டி பயமுறுத்தி தமிழ்நாட்டில் பால் ஊத்தி அலகு குத்தும் எங்கள் சக கண்மணிகளுக்கு நான் ஒன்றும் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
சான்சே இல்ல தல...
ரொம்ப அருமையா விவரிச்சு இருக்கேங்க...நானும் எந்திரனை US ல தான் பார்த்தேன்.. San-Diego to LA போற வழியில ஒரு ஊரு..பேரு சரியா ஞாபகம் இல்லை...அந்த தியேட்டர்ரும் கிட்ட தட்ட இதே மாதிரி தான் இருந்திச்சு..Relaince தியேட்டர் என்று ஞாபகம்....நீங்க இந்த பதிவுல எழுதி இருக்கிறதை நானும் அனுபவிச்சேன்...தெரியாத ஊருல நம்ம தமிழ் படம்..அதுவும் தலைவர் படம்.....வெள்ளைக்காரன் ஸ்பீக்கர் மீரா குமார் மாதிரி ""கீப் quite" ""கீப் quite" ன்னு அன்பா சொல்ல.. நம்ம மக்கள் அதை மதிக்காம தலைவரை பார்த்த சத்தம் போட...செம அனுபவம் பாஸ் அது.... அதே மாதிரி ஒரு அனுபவம் உங்களோடது.....
Post a Comment