ஒவ்வொரு மாசமும் பதிவுலகத்துல சூடா எதைப் பத்தியாவது விவாதம் செஞ்சிக்கிட்டு இருக்கணும்ங்கிற நேத்திக்கடனுக்கு இந்த மாசம் லிவிங் டுகெதர். ஜீப்புல எல்லாம் ஏறி பிரபல பதிவர் ஆனதுக்கப்புறம் நாமும் இதைப் பத்தி ஏதாவது கருத்து சொல்லலைன்னா எப்புடி?
லிவிங் டுகெதர் என்பது என்ன?
ஆணும் பெண்ணும் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை (வீட்டில் பார்த்த பெண்/பையன்) வரும் வரை தங்கள் உடற்பசியைத் தீர்த்துக் கொள்ள சேர்ந்து வாழ்கிறோம் என்ற பெயரில் கூத்தடிப்பதா?
இல்லை. இந்த எண்ணத்துடன் செய்வதற்குப் பெயர் ஸ்லீப்பிங் டுகெதர்.
ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்கின்றனர். பழகியதில் இருவருக்கும் ஒத்த அலைவரிசை இருப்பதாகத் தோன்றுகிறது. தனக்கொரு சிறந்த கம்பானியனாக இருப்பார் என்று ஒருவர் மற்றொருவரைப் பற்றி நினைக்கிறார். ஒத்த அலைவரிசையோடு இருப்பவர்கள் சேர்ந்து வாழலாமே? உனக்கென்று நான் எனக்கென்று நீ என்றிருக்கலாமே? என்று முடிவு செய்து ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பிக்கின்றனர். இங்கே முக்கியமான விடயம் கம்பானியன்ஷிப். செக்ஸ் என்பது அதில் பை ப்ராடக்ட் தான். அதற்குத் திருமணம் செய்து கொள்ளலாமே என்று கேட்கலாம். திருமணம் என்பது கமிட்மெண்ட். நம் ரசனை மாறிக் கொண்டே இருக்கிறது. இன்று நமக்குப் பிடித்தது சில ஆண்டுகள் கழித்துப் பிடிக்காமல் போய்விடலாம். இன்று ஒத்தக்கருத்து உடையவர்கள் பின்னாளில் மாற்றுக் கருத்துடையவர்களாகிவிடலாம். அப்போது பிரிய இந்தத் திருமணம் என்ற கமிட்மெண்ட் தடையாயிருக்கலாம் என்ற எண்ணம் உடையவர்கள் லிவிங் டுகெதரைத் தேர்ந்தெடுப்பார்கள். லிவிங் டுகெதராய் இருப்பவர்கள் சிறிது நாட்களில் திருமணமும் செய்து கொள்வார்கள். இப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் நீண்ட நாட்கள் விவாகரத்து செய்யாமல் வாழ்கிறார்கள்.
பொதுவாக இந்த லிவிங் டுகெதர் மேலை நாடுகளில் பிரசித்தம். அங்கே குழந்தைகளுக்கு 13 வயதிலிருந்து செக்ஸ் கல்வி கற்றுத் தரப்படுகிறது. பாதுகாப்பான முறையில் செக்ஸ் வைத்துக்கொள்ளவும், காதல் தோல்விகளைக் கையாள மனதளவில் குழந்தைகளைத் தயார்ப்படுத்தும் மனநல வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. அந்தச் சூழலில் இன்னொருவருடன் வாழத் துவங்குமுன் எதிர்காலத்தைப் பற்றி சரியான ஒப்பந்தத்துக்கு வந்த பின்பே முடிவெடுக்கிறார்கள்.
அதே போல அங்கே your children and my children are playing with our children என்பது சகஜம். அதை குழந்தைகளும் ஏற்றுக் கொள்ள அவர்கள் தயார்ப்படுத்தப்படுகின்றனர். இப்படி தயார்ப்படுத்தப்படும் குழந்தைகளுக்கு ஸ்டெப் ஃபாதர்/ஸ்டெப் மதரோடு வசிப்பது பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்த அளவுக்கு குழந்தை வளர்ப்பும் பக்குவமும் நம் நாட்டில் வந்துவிட்டதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அப்படியிருக்கும்போது லிவிங் டுகெதர் என்ற கலாச்சாரம் அப்படி வாழ்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்றால் கண்டிப்பாக ஏற்படுத்தும். ஆனால் இந்த பாதிப்பை லிவிங் டுகெதர் மட்டுமில்லை. திருமணத்துக்குப் பிறகு விவாகரத்து பெறுபவதும் ஏற்படுத்தும்.
நான் அமெரிக்கா வந்த புதிதில் ஒரு நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது குழந்தை இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி பேச்சு வந்தது. அப்போது அவர், “எப்பிடி இன்னொருத்தன் பிள்ளையைக் கொஞ்சுறது? என்னால எல்லாம் அப்பிடி இருக்க முடியாது” என்று சொன்னார். “ஏங்க தெருவுல போகும்போது எதாவது குழந்தையை நீங்க கொஞ்சுறதில்லையா? உங்க அக்கா, அண்ணன் பிள்ளைகளைக் கொஞ்சுறதில்லையா? அது மாதிரிதான்” என்று சொன்ன போது அவரால் என் வாதத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
நம் நாட்டில் இருக்கும் ஆண்களில் பெரும்பாலானவர்கள் இந்த நண்பரைப் போன்ற மனநிலையில் இருப்பதால் இந்த லிவிங் டுகெதர் கலாச்சாரம் பெண்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு சாரார் நினைக்கின்றனர்.
ஆனால் அப்படிப் புரிதலும் பக்குவமும் இருக்கும் இரண்டு பேர் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் தப்பா? அதை தப்பு என்றும் அவர்களை விபச்சாரம் செய்கிறவர்கள் என்றும் அழைப்பவர்களுக்கும் காதலர் தினம் கொண்டாடியவர்களை அடித்து விரட்டும் “கலாச்சார காவல்க் காட்டு மிராண்டி”களுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை.
லிவிங் டுகெதரை எதிர்ப்பவர்களுக்கு ஒரு கேள்வி, திருமணம் நடந்த பின் மனமுறிவு வந்து கணவனும் மனைவியும் பிரியக் கூடாதா? அப்படிப் பிரிந்தவர்கள் வேறு திருமணம் செய்துகொள்ளக் கூடாதா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற “புனித” கலாச்சாரம் அங்கே அடிபட்டுப் போகிறதே? இதையும் விபச்சாரம் என்று அழைப்பீர்களா?
98 comments:
அப்போ லிவிங்டுகெதர் சரின்னு சொல்லவர்றீங்களா முகிலன்?
Such a nice understanding and explanation, I agree 100% with you. People who are simply opposing should open their narrow mind and come up with constructive argument.
I was so annoyed by lot of negative posts on this topic, and I felt these people are dragging us back 100 yrs. I almost deleted my google reader tamil blogs list, but decided against it after reading this post.
Thanks :)
திருமணம் நடந்த பின் மனமுறிவு வந்து கணவனும் மனைவியும் பிரியக் கூடாதா? அப்படிப் பிரிந்தவர்கள் வேறு திருமணம் செய்துகொள்ளக் கூடாதா//
உண்மையிலேயே நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க முகிலன்..
எதோ பிரச்சினையில ஓடுது இந்த விஷயம்னு நினைக்கிறேன். எனக்கு அது தெரியாம போச்சு. நிற்க.
எல்லாவற்றிலும் மேல்நாட்டை பின்பற்றி இதையும் பின்பற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இதை ஒரு வழிமுறையாகவே மாற்றுவது நம் கலாச்சாரத்துக்கு சரியாக வரும் என நினைக்கவில்லை (அடுத்த 25 ஆண்டுகளுக்கு :) )
நீங்க சொன்னா மாதிரி ”your children and my children are playing with our children ” டிவோர்ஸ் பண்ணவங்க அல்லது ரெண்டு விடோயர்ஸ் திருமணம் செஞ்சு அவங்களுக்கு இன்னோரு குழந்தை பிறந்தாலும் வரும். Its not a joke ne more. பொண்ணும் பையனும் அமெரிக்கால லிவிங் டுகெதரோ, ரிஜிஸ்டர் பண்ணிட்டு ஒன்னா இருந்தாலோ இங்க வர வச்சி அவங்களுக்கு புடிச்சிருந்திச்சி, அதுங்க விருப்பத்த இல்லைன்னு சொல்ல நாம யாருன்னு சொல்ல முடியும். பக்கத்து வீட்டுல நடந்துட்டாதான் ‘கலாச்சாரம்’ கவனம் வரும்.
தமிழ்க் கலாச்சாரம் என்னப்பா?
ஒருவனுக்கு ஒருத்தி.
அப்டின்னா என்னப்பா?
அது வந்து ஒருத்தனுக்கு மேல ஒருத்தி எவனையும் நினைச்சிரப்படாது. *ஆமாம். ஒருத்திதான். ஒருத்தன்னு சொல்ல நாம என்ன கேனையா?*
சரி நீ லவ் பண்ணியிருக்கியா.
ப்ச். ஒருத்தி மேல உசுரா இருந்தேன். எங்க வீட்ல ஒத்துக்கல.
அச்சோ! அப்புறம் கலியாணம் பண்ணாமலா இருக்க. வேணாம் வேணாம்னு சொன்னேன். எங்கம்மா டீக்குடிப்பேன்னு கலாட்டா பண்ணி கட்டி வச்சிட்டாங்க.
சரி! ஒரு நாதாரி ஒரு பொண்ண கற்பழிச்சிட்டான். அவளை விரும்பி ஒருத்தன் கலியாணம் பண்ணியிருக்காம்பா. கேட்டா, அவளுக்கு தெரியாம நடந்த விபத்து. எனக்கு அவள புடிச்சிருக்குன்னு சொல்றாம்பா. அப்படின்னா அவன் ஒருத்திக்கும் ஒருத்தனுக்கும் பொறந்திருக்க மாட்டாம்பா. சரி. இடுகைல போட்டு கலாச்சாரத்துக்கு எதிரான சீரழிவுன்னு கிழிச்சி ஒட்டின போலருக்கு. பின்ன! அதெப்ப்டி விடுறது? சுப்ரீம் கோர்ட் அது ஃபண்டமெண்டல் ரைட்னு சொல்லிருக்கானேப்பா. அப்ப வாயேன். அது தப்புன்னு ஒரு ரிட் போடலாம். போய்யாங். இடுகைய போட்டமா. ஓட்டு தேத்தினமா. பின்னூட்டத்துல பார்த்து சந்தோஷபட்டமான்னு இல்லாம கோர்ட்டு கேசுன்னு. இதுக்கெல்லாம் செலவு பண்ணா எம்புள்ள குட்டிய எவன் பார்ப்பான். சரிப்பா அப்ப கலாச்சாரம்? அது கெடக்கு கழுத. வர்ட்டா..
நாஞ்சில் பிரதாப்™ said...
அப்போ லிவிங்டுகெதர் சரின்னு சொல்லவர்றீங்களா முகிலன்?
திருமணம் தவறுன்னு லிவிங் டுகெதர் பண்றவனோ, லிவிங் டுகெதர் தவறு திருமண ஆதரவாளர்கள் முழங்கலாம். ஆனால் அப்படி வாழ்வது அவனவன் உரிமை. இதிலே தவறு,சரி என்பது அந்த இரண்டு மனங்களுக்கு மட்டுமே சொந்தம்.
ஆனால் அப்படிப் புரிதலும் பக்குவமும் இருக்கும் இரண்டு பேர் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் தப்பா? அதை தப்பு என்றும் அவர்களை விபச்சாரம் செய்கிறவர்கள் என்றும் அழைப்பவர்களுக்கும் காதலர் தினம் கொண்டாடியவர்களை அடித்து விரட்டும் “கலாச்சார காவல்க் காட்டு மிராண்டி”களுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை.
//
காட்டுமிராண்டி என்பது தனி மனித தாக்குதல், விபச்சாரம் விபச்சாரி போன்று கலாச்சாரத்துடன் தாக்குதல் நடத்தக்கற்றுக்கொள்ளுங்கள்.
வீட்ல பிரியாணி வாசம் கமகமக்குது பாஸ்!நான் அப்புறமா வாரேன்.
பல் இருக்கவன் பக்கடா திங்கான்
//வீட்ல பிரியாணி வாசம் கமகமக்குது
பாஸ்!//
மிச்சம் மீதி இருந்தா அணிப்பி வையுங்க
// I almost deleted my google reader tamil blogs list, but decided against it after reading this post.//
இதையே வாசகர் கடிதமா போடலாம் முகிலரு
//காட்டுமிராண்டி என்பது தனி மனித தாக்குதல், விபச்சாரம் விபச்சாரி போன்று கலாச்சாரத்துடன் தாக்குதல்
நடத்தக்கற்றுக்கொள்ளுங்கள்.//
வகுப்பு எடுப்பீங்களா?
//சரி நீ லவ் பண்ணியிருக்கியா. //
திருப்பி பண்ண ஆள் இல்லையே என்ன செய்ய ?
***விங் டுகெதரை எதிர்ப்பவர்களுக்கு ஒரு கேள்வி, திருமணம் நடந்த பின் மனமுறிவு வந்து கணவனும் மனைவியும் பிரியக் கூடாதா?***
இப்போ நீங்க 1 கோடி வச்சிருக்கீங்க. நீங்க டைவோர்ஸ் செய்தால் 0.5 core உங்க மனைவிக்குக் கொடுக்கனும். அவ்ளோ ஈஸியா நீங்க அவங்கள தூக்கி எறிய முடியாது.
ஆனா ஒருத்தரோட லிவிங் டுகெதெர்னா, கீப் மாதிரித்தான். நீங்க ஒரு பைசா செலவு இல்லாமல் தூக்கி எறியலாம். Even after several years if you are together. There is no commitment there. There is a HUGE DIFFERENCE lot of people overlook here! A rich guy would opt for living together because he can "buy" woman cheap and throw them away easily and find another one!
இப்படியே மன்மதலீலைகள் மாதிரி ஊர் மேயலாம். ஒரு பேச்சுக்கு சொல்றேன்.
லிவிங்டுகெதெர் எவ்ளோ தூரத்துக்கு பெரிய முன்னேற்றமோ, அதே போல் அதை அப்யூஸ் பண்னவும் செய்யலாம்.
We follow traffic rules because we will have to pay fine if you dont. Human beings are ANIMALS. THey will lute even in burning house. I dont have to tell you how everything is abused in India.
So, when you open up in an Indian settings I only see a real F*** UP!
It wont work as intended
//அவளுக்கு தெரியாம நடந்த விபத்து. எனக்கு அவள புடிச்சிருக்குன்னு சொல்றாம்பா. //
பாக்கியராஜும் சொல்லி இருக்காரு
//F*** UP!//
என்ன வருண் இது.. புள்ளி வச்சி கோலம் போடுறீங்க
//இடுகைய போட்டமா. ஓட்டு தேத்தினமா. பின்னூட்டத்துல பார்த்து சந்தோஷபட்டமான்னு இல்லாம கோர்ட்டு கேசுன்னு.//
எதையும் தேத்த முடியலைன்னா இடுகையாவது தேத்துங்க
பாலா அண்ணே வரியா வரியா படிச்சா கவுஜ மாதிரியே இருக்கு
//வந்துட்டிங்க, தட்டவோ திட்டவோ முடிவும் பண்ணிட்டிங்க.//
ஏன் கும்மி அடிக்க முடியாதோ ?
***நசரேயன் said...
//F*** UP!//
என்ன வருண் இது.. புள்ளி வச்சி கோலம் போடுறீங்க
November 17, 2010 3:21 PM ***
அட ஏங்க நீங்க வேற, அல்ரெடி ஜந்து அது இதுனு திட்டிட்டு அலைறாங்க. இதை ஸ்பெல் பண்ணினால் இன்னும் ஏதாவது புதுசாச் சொல்லி திட்டுவாங்க! :)
Actually there is a mistake in another place. lute should read as loot!
ஆங்கிலத்திலும் தமிழிலும் மாத்தி மாத்தி டைப் பண்ணி எதை எப்படி ஸ்பெல் பண்றதுனே தெரியாமல் போயிடுச்சு! :(
தளபதி உஷாரா இருந்துக்கிடும். நீர்பாட்டுக்கு நொங்கு, முத்தயியல்னு கலாச்சாரத்துக்கு எதிரா எழுதினீரோ டிஸ்கி போட்டு ஃபார் யு.எஸ். ரீடர்ஸ் ஒன்லின்னு போட்ரும். இல்லையோ அங்கனயே இருந்துக்கிடும். இங்கிட்டு வந்தீரோ கலாச்சார அருவாக்கு தப்ப மாட்டீரு..கச்சக்தான்.
//இங்கிட்டு வந்தீரோ கலாச்சார அருவாக்கு தப்ப மாட்டீரு..கச்சக்தான்.
//
எழுத்து கலச்சாரமுன்னு ஒண்ணு இருக்கா .. இப்படித்தான் எழுதனுமுன்னு அளவுகோல் இல்ல நெம்புகோல் இல்ல செம்பு கோல் ?
//ஆங்கிலத்திலும் தமிழிலும் மாத்தி மாத்தி டைப் பண்ணி எதை எப்படி ஸ்பெல் பண்றதுனே தெரியாமல் போயிடுச்சு!//
பச்சை தமிழனுக்கு அழகே இதுதான்
//யு.எஸ். ரீடர்ஸ் ஒன்லின்னு போட்ரும். //
வெள்ளையம்மாவுக்கு என் கதை பிடிக்குமா ?
அருமையான புரிதலோட எழுதியிருக்கும் பதிவு முகிலன்...
குடுகுடுப்பையார் பின்னூட்டம் இன்னும் ஸ்மார்ட்..
இன்னும் சில் வருடங்களா ல் இதுவே பழகி போய் விடும். அதுவே பாஷனாகி விடும்.எதோ அட்ஜஸ்ட் பண்ணிக்க் வேண்டியது தான் .வாழ்க்கை அவரவர் மனதை பொறுத்தது
//பிரபல பதிவர் ஆனதுக்கப்புறம் நாமும் இதைப் பத்தி ஏதாவது கருத்து சொல்லலைன்னா எப்புடி?//
அதான?
நடுநிலையா புரிந்துகொண்ட..மற்றவர்களையும் சிந்திக்க வைக்கிற பதிவு.சொன்ன விதம்தான் எனக்குப் பிடிச்சிருக்கு முகிலன் !
கலாசார மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். அமெரிக்காவில் நடப்பவை இந்தியாவிற்கு வர குறைந்தது 20 வருடமாவது ஆகும்.
Ungalukku marriage aacha?
agiyum vera yaaru kudavaachu LIVING TOGETHER-a?
enakku therinchu thappu panra dogs ellame ippadi thaan thaan panradhai niyayapadutthi sollum.
neenga eppadi-nu neengale mudivu pannikkonga
லிவிங் டுகெதரை எதிர்ப்பவர்களுக்கு ஒரு கேள்வி, திருமணம் நடந்த பின் மனமுறிவு வந்து கணவனும் மனைவியும் பிரியக் கூடாதா? அப்படிப் பிரிந்தவர்கள் வேறு திருமணம் செய்துகொள்ளக் கூடாதா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற “புனித” கலாச்சாரம் அங்கே அடிபட்டுப் போகிறதே? இதையும் விபச்சாரம் என்று அழைப்பீர்களா//
mela sonnadhukkum indha katturaikkum ennaya sammandham?
edhai edhoda ilukkureenga?
thittinaalum umakku arivu varaadhe athaane prachanai :(
/கலாசார மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். அமெரிக்காவில் நடப்பவை இந்தியாவிற்கு வர குறைந்தது 20 வருடமாவது ஆகும். //
What the heck? அமெரிக்கான்னா எல்லாமே சரின்னு அர்த்தமா? இதெல்லாம் காலையிலேயே பார்க்க வேண்டி இருக்கு. கொடுமை.
//பொதுவாக இந்த லிவிங் டுகெதர் மேலை நாடுகளில் பிரசித்தம். அங்கே குழந்தைகளுக்கு 13 வயதிலிருந்து செக்ஸ் கல்வி கற்றுத் தரப்படுகிறது. பாதுகாப்பான முறையில் செக்ஸ் வைத்துக்கொள்ளவும், காதல் தோல்விகளைக் கையாள மனதளவில் குழந்தைகளைத் தயார்ப்படுத்தும் மனநல வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. அந்தச் சூழலில் இன்னொருவருடன் வாழத் துவங்குமுன் எதிர்காலத்தைப் பற்றி சரியான ஒப்பந்தத்துக்கு வந்த பின்பே முடிவெடுக்கிறார்கள்.//
ரொம்ப தப்பு. பாதுகாப்பான செக்ஸ் முறை சொல்லிக் கொடுத்தாலும் வெளி நாடுகளில் சின்ன வயதிலேயே கருவுண்டாகி, கருக்கலைப்புக்குப் போகிறார்கள். Teenage pregnancy is one of the biggest issue in western countries.
காதல் தோல்விகளை கையாள / அதுக்கு இதுக்கு என்று மன நல வகுப்புக்கள் இருக்கின்றன. ஆனால்,
இவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இவர்களைப் பார்ப்பதே டிப்ரெஸ்சிங். நான் பார்த்த அளவில் டிசாஸ்டர் நடந்த இடங்களுக்கு போகிறவர்களைத் தவிர, கவுண்டர் ஓப்பின் பண்ணிட்டு உக்காந்து பேசறேன் பேர்வழி என்று குட்டையை குழப்பும் இவர்களைப் பார்ப்பதற்கு அறையைப் பூட்டி விட்டு ஓ என்று அழுது தீர்க்கலாம். யோகா போ, நீச்சலுக்குப் போ, பாட்மின்டன் விளையாடு என்று சொல்லாமல் எடுத்த உடனேயே அன்டி டிப்ரெசன்ட் மாத்திரை கொடுப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஒரு சிலர் திறமையானவர்கள். ஆனால், அவர்களை பார்ப்பதற்கு முதல் நீங்க ஏதாவது பாங்கை கொள்ளை அடிக்க வேண்டி இருக்கும்.
(இங்கே மன நல மருத்துவர்களுடன் சேவை செய்த அனுபவத்தில் சொல்கிறேன். )
ரொம்ப அருவருப்பான விடயம். எங்கள் கலாசாரத்தையே பெரிய பருப்பு மாதிரி நிறைய பேர் கேவலப்படுத்துவது. இப்ப அது தான் ட்ரென்டு போல. பழையவற்றை எதிர்ப்பதெல்லாம் தான் உங்கள் எல்லோரையும் இன்டலென்சுவல்ஸ் என்று காட்டும் என்று நீங்கள் நினைத்தால், அந்தோ பரிதாபம். அமெரிக்கா போனாலும், கிணற்று தவளை கிணற்று தவளை தான்.
உங்களிடம் இதை எதிர்பார்க்கவே இல்லை தினேஷ் அண்ணா. அது சரியிடமும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அதிகமாகவே உங்கள் இருவரிலும் எனக்கு கோவம் வருகிறது. சின்னப் பெண்ணின் கோவம் என்ன செய்ய முடியும்? அதுவும் மதிப்பு வைத்திருப்பவர்கள் இப்படி எழுதினால். சை என்று விடுகிறது.
கலாசாரம் என்பது ஒரு வகை ஒழுக்கம். விருந்தோம்பலும் எங்கள் கலாசாரத்தில் ஒரு பகுதி தான். திருமணம் மட்டும் கலாசாரம் இல்லை. பெரியவர்களை மதிக்க வேண்டும் / வேண்டியவர்களுக்கு உதவ வேண்டும் / மற்றவன் முதுகில் குத்த கூடாது என்று நிறைய விடயங்களை கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் மயிர் எடுத்த தமிழ் கலாசாரம் சொல்லித்தான் கொடுக்கிறது. அதை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு திருமணத்தை மட்டுமே பிடித்து வைத்துக்கு கொண்டு ஏன் தான் ஆடுகிறார்களோ தெரியவில்லை.
அந்த காலத்தில் இப்ப மாதிரி ஸ்ரெஸ் இல்லை. எவனை கவுத்திட்டு / எவன் மேல் ஏறி மிதிச்சு நாங்க முன்னேறலாம் என்று கனவிலும் அரிக்கும் டென்ஷனில்லை. அதனால திருமணம் வாழ்க்கையில் இப்படி இப்படி இருப்பது வேண்டும் என்று சொல்லி வைச்சிருந்தாங்க. அந்த காலத்தில் அது சரியாக இருந்திருக்கலாம். என்ன தான் பேசி வைத்து கட்டி வைக்கும் திருமணம் என்றாலும், தெரிஞ்சவங்களுக்கு கட்டி வைப்பது தான் நடக்கும். இப்ப மாதிரி பக்கத்து வீட்டான் முகம் தெரியாத வாழ்க்கையை அவர்கள் வாழவில்லையே. ஊரையே தெரிந்தல்லவா வைத்திருந்தார்கள்.
பாசம் என்றால் கிலோ எத்தனை விலை என்று கேட்பதில்லை அந்த காலத்தில். ஊரார் பிள்ளையையே ஊட்டி வளர்க்கும் அளவுக்கு பெரிய மனது இருந்ததே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவனை பக்கத்துவீட்டில் 25 வருஷமாக இருக்கறவர்களையே தெரியாமல் இருக்கிறவன் சொல்ல வந்திட்டான்.
இடையே போன நூற்றாண்டில் எல்லாவற்றையுமே இரண்டு தலைமுறை குழப்பி வைத்ததற்கு முன்னோர்கள் எழுதி வைத்தை குறை சொல்லலாமா? உங்கள் அப்பா அம்மா, தாத்தா பாட்டியை அல்லவா நடுத் தெருவில் கட்டி வைத்து உதைக்க வேண்டும். நாளைக்கு இப்படி எல்லாம் எங்களை குழப்பி விட்டீர்களே என்று உங்களை கட்டி வைத்து நாங்கள் உதைக்க வேண்டி இருக்கும். அதை விட்டுவிட்டு அடுத்ததலை முறையை குழப்பலாமா?
ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது வரவேற்கப் படவேண்டியது. பிடித்த நேரத்தில் பிடித்தவனுடன் போகலாம் / வாழலாம் என்று தாந்தோன்றித்தனமாக இருப்பது தான் சுதந்திரம்/நாகரிகம்/புரட்சி/புடலங்காய் என்று நினைத்து நீங்க எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. அதற்காக மோசமான கணவனையோ மனைவியையோ காலம் முழுதும் சகித்துக்கொண்டிருக்கவேண்டும் என்றில்லை. பிரிந்து போய் வேறு வாழ்க்கை தேடிக்கொள்ளலாம்.
ஆனால், இந்த புரட்சிகரமான (புடலங்காய்) எண்ணம் உடைய ஆண்களில் எத்தனை பேருக்கு விதவையோ / விவாகரத்து பெற்ற பெண்ணையோ திருமணம் செய்ய மனம் இருந்தது. என்னதான் இருந்தாலும் புது பெண் தானே பொண்டாட்டியாக தேவைப்படும். நீங்கள் கலாசாரம் பற்றி பேசுகிறீர்களா?
அந்த காலத்தில் நளாயினி இப்படி செய்தாளாலம் என்று எழுதி வைத்த ஆணுக்கும் இந்த இதெல்லாம் தான் பெண் சுதந்திரம் என்று எழுதி கிழிக்கும் உங்களுக்கும் (ஆண்கள்) பெரிய வித்தியாசம் இல்லை. பிறகு எப்படி கலாசாரத்தைப் பற்றி எழுதும் அருகதை உங்களுக்கு இருக்கு.
காதலர் தினத்தன்று பெண்களை இழுத்து அடித்தது காட்டு மிராண்டித்தனம். உங்கள் தலைமுறை ஆட்கள் தான் செய்கிறார்கள். அப்ப கூட உங்கள் முன் கை நீட்டிக்காட்டாலம் போகிறோம். தவறு அன்று ஒழுக்கத்தைப் பற்றி எழுதி வைத்தவன் பேரில் இல்லை என்ற தெளிவான விளக்கம் எங்களிடம் இருக்கிறது.
அதை விடுத்து இடையே குழப்பிய *(@*&@)!) (பிடித்த வார்த்தையை நீங்களே போட்ட்டுக்கொள்ளுங்கள்) செருப்பால் அடிக்காமல், நல்லுரைகளை எழுதி வைத்த மூதாதையரை கேவலப்படுத்துகிறீகளே.
என்ன நியாயம். ?
லிவிங் டுகெதர் பற்றி பிறகு சொல்கிறேன். நேரம் போயிட்டு. வகுப்புக்குப் போகவேணும்.
///தமிழ்க் கலாச்சாரம் என்னப்பா?
ஒருவனுக்கு ஒருத்தி///.
வானம்பாடி ஐயா
ஒருவனுக்கு ஒருத்திகுறது
கலாச்சாரம் கிடையாது.
அது நம்ம பண்பாடு ஐயா
பண்பாடு!!!!!!
//நாஞ்சில் பிரதாப்™ said...
அப்போ லிவிங்டுகெதர் சரின்னு சொல்லவர்றீங்களா முகிலன்//
லிவிங் டுகெதருக்கான முழு அர்த்தமும் புரிதலும் பக்குவமும் இருந்தா அது தப்பில்லை பிரதாப்..
//James Arputha Raj said...
Such a nice understanding and explanation, I agree 100% with you. People who are simply opposing should open their narrow mind and come up with constructive argument.
I was so annoyed by lot of negative posts on this topic, and I felt these people are dragging us back 100 yrs. I almost deleted my google reader tamil blogs list, but decided against it after reading this post.
Thanks :)//
Thank you James.
In fact, I took the "Sleeping together" from your comment on Vasanth's post. Thank you again.
//தேனம்மை லெக்ஷ்மணன் said...
திருமணம் நடந்த பின் மனமுறிவு வந்து கணவனும் மனைவியும் பிரியக் கூடாதா? அப்படிப் பிரிந்தவர்கள் வேறு திருமணம் செய்துகொள்ளக் கூடாதா//
உண்மையிலேயே நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க முகிலன்.//
வாங்க தேனம்மையக்கா.. என்னைப்பொறுத்த வரைக்கும் லிவிங் டுகெதருக்கும் திருமணத்துக்குப் பின்னான வாழ்க்கைக்கும் திருமணம்+டிவோர்ஸ் என்ற சடங்கு மட்டுமே வித்தியாசம். இது புரியாமல் லிவிங் டுகெதரை ஆதரிப்பதும் தவறு, எதிர்ப்பதும் தவறு.
//பின்னோக்கி said...
எதோ பிரச்சினையில ஓடுது இந்த விஷயம்னு நினைக்கிறேன். எனக்கு அது தெரியாம போச்சு. நிற்க.
எல்லாவற்றிலும் மேல்நாட்டை பின்பற்றி இதையும் பின்பற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இதை ஒரு வழிமுறையாகவே மாற்றுவது நம் கலாச்சாரத்துக்கு சரியாக வரும் என நினைக்கவில்லை (அடுத்த 25 ஆண்டுகளுக்கு :) )//
நன்றி பின்னோக்கி. இதை ஒரு வழிமுறையாக ஆக்குங்கள் எனவோ, இனிமேல் திருமணங்களே வேண்டாம் லிவிங் டுகெதரே போதும் என்பதாகவோ இந்த இடுகையில் நான் சொல்ல வரவில்லை.
எப்படி திருமணம் செய்துகொண்டு ஒரு ஆண்/பெண்ணுடன் வாழ்க்கையை நடத்த உரிமையிருக்கிறதோ அதே போன்ற உரிமை லிவிங் டுகெதரை பின்பற்றுபவர்களுக்கும் இருக்கிறது. அதை விபச்சாரம் என்று சொல்வது காட்டுமிராண்டித்தனம்.
@ வானம்பாடிகள் சார்,
கொஞ்சம் நீளமா எழுதி தனி இடுகையாவே போட்டிருக்கலாமே??
//குடுகுடுப்பை said...
நாஞ்சில் பிரதாப்™ said...
அப்போ லிவிங்டுகெதர் சரின்னு சொல்லவர்றீங்களா முகிலன்?
திருமணம் தவறுன்னு லிவிங் டுகெதர் பண்றவனோ, லிவிங் டுகெதர் தவறு திருமண ஆதரவாளர்கள் முழங்கலாம். ஆனால் அப்படி வாழ்வது அவனவன் உரிமை. இதிலே தவறு,சரி என்பது அந்த இரண்டு மனங்களுக்கு மட்டுமே சொந்தம்//
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொல்றீங்க தலை. இதுக்குத்தான் பொதுச்செயலாளர் வேணுங்கிறது.
//குடுகுடுப்பை said...
காட்டுமிராண்டி என்பது தனி மனித தாக்குதல், விபச்சாரம் விபச்சாரி போன்று கலாச்சாரத்துடன் தாக்குதல் நடத்தக்கற்றுக்கொள்ளுங்கள்
//
அய்யய்யோ இத்தனை நாளும் தமிழ்க் கலாச்சாரத்தை தெரிஞ்சிக்காமலே இருந்துட்டேனே?
//ராஜ நடராஜன் said...
வீட்ல பிரியாணி வாசம் கமகமக்குது பாஸ்!நான் அப்புறமா வாரேன்//
வாங்க வந்து உங்க ரெண்டு பைசாவையும் சொல்லிட்டுப் போங்க. :)
@நசரேயன்.
ரொம்ப நாளா ஆளையே காணோம். வந்து இங்கயும் கும்மியா?
//வருண் said...
***விங் டுகெதரை எதிர்ப்பவர்களுக்கு ஒரு கேள்வி, திருமணம் நடந்த பின் மனமுறிவு வந்து கணவனும் மனைவியும் பிரியக் கூடாதா?***
இப்போ நீங்க 1 கோடி வச்சிருக்கீங்க. நீங்க டைவோர்ஸ் செய்தால் 0.5 core உங்க மனைவிக்குக் கொடுக்கனும். அவ்ளோ ஈஸியா நீங்க அவங்கள தூக்கி எறிய முடியாது.
//
ஆக கணவனோ மனைவியோ திருமணம் என்ற பந்தம்/கமிட்மெண்டுக்குள் வந்துவிட்டால் என்ன மனமுறிவு இருந்தாலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒரே வீட்டிலேயே வாழ வேண்டுமா?
அப்படி வாழப் பிடிக்காமல் இருவரும் இயைந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தால் அரைக்கோடியை தர வேண்டிய அவசியமில்லை வருண். கணவனின் மீது குற்றம் சுமத்தி விவாகரத்துப் பெறும் பட்சத்தில் தான் கணவன் தன் சொத்தில் பாதியை மனைவிக்கு விட்டுத்தர வேண்டும்.
//
ஆனா ஒருத்தரோட லிவிங் டுகெதெர்னா, கீப் மாதிரித்தான். நீங்க ஒரு பைசா செலவு இல்லாமல் தூக்கி எறியலாம். Even after several years if you are together. There is no commitment there. There is a HUGE DIFFERENCE lot of people overlook here! A rich guy would opt for living together because he can "buy" woman cheap and throw them away easily and find another one!
இப்படியே மன்மதலீலைகள் மாதிரி ஊர் மேயலாம். ஒரு பேச்சுக்கு சொல்றேன்.
//
லிவிங் டுகெதரைப் பற்றிய இந்தப் புரிதலோடு நீங்கள் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அது விபச்சாரமாகத் தான் தெரியும். :))
//லிவிங்டுகெதெர் எவ்ளோ தூரத்துக்கு பெரிய முன்னேற்றமோ, அதே போல் அதை அப்யூஸ் பண்னவும் செய்யலாம்.
//
எதைத் தான் அப்யூஸ் செய்ய முடியாது வருண்?
//
We follow traffic rules because we will have to pay fine if you dont. Human beings are ANIMALS. THey will lute even in burning house. I dont have to tell you how everything is abused in India.
So, when you open up in an Indian settings I only see a real F*** UP!
It wont work as intended//
மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றால் இந்தியா மாதிரி மோசமான ஆண்கள் நிறைந்த நாட்டில் லிவிங் டுகெதர் கலாச்சாரம் பரவினால் அந்தப் பன்றிகள் அதை அப்யூஸ் செய்யும், அந்த லிவிங் டுகெதரின் ப்யூர் இண்டென்ஷன் கெட்டுப் போய்விடும். சரியா?
இதை 1000% ஒத்துக் கொள்கிறேன்.
@கலகலப்ரியா
நன்றி ப்ரியா.
//நிலாமதி said...
இன்னும் சில் வருடங்களா ல் இதுவே பழகி போய் விடும். அதுவே பாஷனாகி விடும்.எதோ அட்ஜஸ்ட் பண்ணிக்க் வேண்டியது தான் .வாழ்க்கை அவரவர் மனதை பொறுத்தது//
அப்போடு வேறு ஒரு முறை புகுத்தப்படும். இதே ஆட்கள் லிவிங் டுகெதர் செய்து கொண்டே அதைத் திட்டி பதிவெழுதுவார்கள்.
//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
//பிரபல பதிவர் ஆனதுக்கப்புறம் நாமும் இதைப் பத்தி ஏதாவது கருத்து சொல்லலைன்னா எப்புடி?//
அதான?//
இவ்வளவுதானா ? எல்லா எடத்துலயும் போட்டாச்சுனு என் இடுகையைக் கடந்து போயிட்டீங்களா?
//ஹேமா said...
நடுநிலையா புரிந்துகொண்ட..மற்றவர்களையும் சிந்திக்க வைக்கிற பதிவு.சொன்ன விதம்தான் எனக்குப் பிடிச்சிருக்கு முகிலன் !//
நன்றி ஹேமா.
//DrPKandaswamyPhD said...
கலாசார மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். அமெரிக்காவில் நடப்பவை இந்தியாவிற்கு வர குறைந்தது 20 வருடமாவது ஆகும்.//
நன்றி டாக்டர்.
//tamil said...
Ungalukku marriage aacha?
agiyum vera yaaru kudavaachu LIVING TOGETHER-a?
//
எனக்குத் திருமணம் ஆன பின்பு நான் வேறு யாருடன் லிவிங் டுகெதராக இருக்க முடியும். என் மனைவியுடன் தான்.
லிவிங் டுகெதரைப் பற்றிய உங்கள் புரிதல் என்னைப் புல்லரிக்கச் செய்கிறது. உங்களப் போன்ற ஆட்கள் இருக்கும் வரை விளங்கிடும்.
//enakku therinchu thappu panra dogs ellame ippadi thaan thaan panradhai niyayapadutthi sollum.
neenga eppadi-nu neengale mudivu pannikkonga//
பயங்கரமான கண்டுபிடிப்பு. நோபல் கமிட்டிக்கு அனுப்பி வச்சிங்களா?
//ஆனா ஒருத்தரோட லிவிங் டுகெதெர்னா, கீப் மாதிரித்தான். நீங்க ஒரு பைசா செலவு இல்லாமல் தூக்கி எறியலாம். Even after several years if you are together. There is no commitment there. There is a HUGE DIFFERENCE lot of people overlook here! A rich guy would opt for living together because he can "buy" woman cheap and throw them away easily and find another one!//
வருண்,
இதெல்லாம் இந்தியாவில் நடக்கும்.
நியூஸி நாட்டுச் சட்டப்படி ரெண்டு வருசம் ஒன்னா வாழ்ந்துட்டால் அவுங்க கணவன் மனைவியாத்தான் மதிக்கப்படுறாங்க. விட்டுட்டுப்போணுமுன்னா பாதிப் பங்கு கொடுத்தாகணும்.
//tamil said...
லிவிங் டுகெதரை எதிர்ப்பவர்களுக்கு ஒரு கேள்வி, திருமணம் நடந்த பின் மனமுறிவு வந்து கணவனும் மனைவியும் பிரியக் கூடாதா? அப்படிப் பிரிந்தவர்கள் வேறு திருமணம் செய்துகொள்ளக் கூடாதா? ஒருவனுக்கு ஒருத்தி என்ற “புனித” கலாச்சாரம் அங்கே அடிபட்டுப் போகிறதே? இதையும் விபச்சாரம் என்று அழைப்பீர்களா//
mela sonnadhukkum indha katturaikkum ennaya sammandham?
edhai edhoda ilukkureenga?
thittinaalum umakku arivu varaadhe athaane prachanai :(//
லிவிங் டுகெதரை விபச்சாரம் என்று ஏன் சொல்கிறீர்கள். இன்றைக்கு ஒருத்(தி)தனோடு வாழ்ந்துவிட்டு நாளைக்கு இன்னொருத்(தி)தனோடு வாழ்வதால் தானே?
அதைத்தானே விவாகரத்துப் பெற்றவர்களும் செய்கிறார்கள்?
தமிழ்னு பேர் வச்சிக்கிட்டு தமிழ்ல எழுதினதையே விளக்க வைக்கிறாய்ங்கப்பா.
//அனாமிகா துவாரகன் said...
/கலாசார மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். அமெரிக்காவில் நடப்பவை இந்தியாவிற்கு வர குறைந்தது 20 வருடமாவது ஆகும். //
What the heck? அமெரிக்கான்னா எல்லாமே சரின்னு அர்த்தமா? இதெல்லாம் காலையிலேயே பார்க்க வேண்டி இருக்கு. கொடுமை//
அனாமிகா நம்ம நாட்டுக்கு நம்ம கலாச்சாரம்னா அமெரிக்காவுக்கு அவங்க கலாச்சாரம். என் கலாச்சாரம் சரி உன் கலாச்சாரம் தப்புனு சொல்றது இங்க வேண்டாமே?
நம்ம நாடு மாதிரி சூடான நாட்டுல தண்ணியடிக்கிறது தப்பு/தேவையற்றதா இருக்கலாம். குளிர் நாட்டுல தண்ணி உள்ள போகலைன்னா விறைச்சி செத்துடுவானே? அவன் கிட்ட போய் இப்பிடி டெய்லி தண்ணியடிக்கிறியே இது நல்ல கலாச்சாரமான்னு கேப்பீங்களா?
//ரொம்ப தப்பு. பாதுகாப்பான செக்ஸ் முறை சொல்லிக் கொடுத்தாலும் வெளி நாடுகளில் சின்ன வயதிலேயே கருவுண்டாகி, கருக்கலைப்புக்குப் போகிறார்கள். Teenage pregnancy is one of the biggest issue in western countries.
//
டீனேஜ் ப்ரெக்னன்ஸி மேலை நாடுகளில் மட்டுமல்ல தெற்காசிய நாடுகளிலும் - குறிப்பாக கேரளத்திலும் - கூட பிரச்சனைதான். எல்லாருக்கும் ஒரே ஆசிரியர்தான் சொல்லிக் கொடுக்கிறார். அத்தனை பேருமா 100/100 வாங்குகிறார்கள்? ஃபெயிலாகிற மாணவர்களும் இருக்கிறார்கள் தானே? அதற்காக ஆசிரியர் தப்பு என்று சொல்லிவிட முடியுமா? குழந்தைகளுக்கு 13வது வயதில் இருந்து செக்ஸ் கல்வி அவசியம்.
//
காதல் தோல்விகளை கையாள / அதுக்கு இதுக்கு என்று மன நல வகுப்புக்கள் இருக்கின்றன. ஆனால்,
இவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இவர்களைப் பார்ப்பதே டிப்ரெஸ்சிங். நான் பார்த்த அளவில் டிசாஸ்டர் நடந்த இடங்களுக்கு போகிறவர்களைத் தவிர, கவுண்டர் ஓப்பின் பண்ணிட்டு உக்காந்து பேசறேன் பேர்வழி என்று குட்டையை குழப்பும் இவர்களைப் பார்ப்பதற்கு அறையைப் பூட்டி விட்டு ஓ என்று அழுது தீர்க்கலாம். யோகா போ, நீச்சலுக்குப் போ, பாட்மின்டன் விளையாடு என்று சொல்லாமல் எடுத்த உடனேயே அன்டி டிப்ரெசன்ட் மாத்திரை கொடுப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஒரு சிலர் திறமையானவர்கள். ஆனால், அவர்களை பார்ப்பதற்கு முதல் நீங்க ஏதாவது பாங்கை கொள்ளை அடிக்க வேண்டி இருக்கும்.
(இங்கே மன நல மருத்துவர்களுடன் சேவை செய்த அனுபவத்தில் சொல்கிறேன். )//
நீங்கள் கவுன்சலிங் பற்றி சொல்கிறீர்கள். நான் பள்ளியில் எடுக்கப்படும் சைக்காலஜி வகுப்புகள் பற்றி சொல்கிறேன். டேட்டிங், லவ், ப்ரேக்-அப் பற்றியெல்லாம் அழகாக சொல்லிக் கொடுக்கிறார்கள்.
அமெரிக்கன் செய்யறதெல்லாம் சரி என்கிற மாதிரி சொல்றதை தான் பிழை என்று சொன்னேன். அவனவன் கலாசாரம் அவன் அவனுக்கு சரி. அதை நான் இல்லை என்று சொல்லவே இல்லையே? உங்க உங்க கலாசாரத்தை கண்மூடித்தனமாக எதிர்க்காதீர்க என்று தானே சொல்கிறேன்
அனாமிகா..
நான் எங்கேயும் இந்திய/தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலமாகவோ தப்பு என்றோ சொல்லவில்லை.
நம் கலாச்சாரம் உயர்ந்தது என்று சொல்லி மற்றவன் கலாச்சாரத்தை தாழ்த்திப் பேசுபவர்களைத்தான் சாடுகிறேன்.
உண்மையான தமிழ்க் கலாச்சாரத்தில் திருமணம் என்ற ஒன்றே இல்லை. கந்தர்வத் திருமணம் தான். மனம் ஒன்றிப் போனால் இணைந்து வாழ்கிறார்கள்.
இடையில் குழப்பியவர்கள் தான் எல்லாம். இப்போது நான் சாடுவதும் இந்த இடையில் குழப்புபவர்களைத்தான்.
இதுதான் கலாச்சாரம் என்று தப்பாகப் புரிந்து கொண்டு அதற்கு நான் காவலன் என்று பேண்ட் போடும் பெண்களை அடிப்பது, டிஸ்கோவுக்குப் போகும் பெண்களை அசிங்கப்படுத்துவது என்று திரியும் கலாச்சாரக் காவலர்களைத்தான்.
நான் என்ன எழுதியுள்ளேன் என்று புரிந்துதான் இந்தப் பின்னூட்டத்தை எழுதினீர்களா என்று தெரியவில்லை..
சைகாலஜி வகுப்பில் அவங்க ட்ரை பண்ணுறாங்க, அதையே நல்ல விதமாக எழுதி வைச்சாங்க இங்க. அது மட்டும் கண்ணில தெரியுதில்லையே.
சாதி மதம் இரண்டும் என்னை வெறுப்பேற்றுபவை. மத்தவன் பழய புண்ணை நோண்டாமல், அதை ஆற விடப் பார்க்கிறான். நாங்க தான் சீழ் வழிந்தாலும் குத்தி குதறிகொண்டிருக்கிறோம்.
அரோக்கியமான மாற்றங்க அவசியம். அதற்காக அக்கரை தான் எப்போதுமே பச்சையாக இருக்க வேண்டியதில்லை.
புரிகிறது. புரிந்து தான் சொல்கிறேன். இரவில் முட்டை / ஊசி கொடுக்கக்கூடாது என்று சொன்னதற்கு காரணம், அந்த காலத்தில் தெரு விளக்குகள் இல்லை, அதனால் முட்டை விழுந்து உடைய சந்தர்ப்பம் இருக்குறது / ஊசி விழுந்தால் யார் காலிலும் குத்துவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.
அதை இப்பவும் ஃபொலோ பண்ணுவேன் என்று சொன்னால் அது முட்டாள் தனம். ஆதற்காக அப்ப எந்த மாதிரி நேரத்தில் அப்படியானவற்றை பிரக்டிஸ் பண்ணினார்கள் என்று தெரியாமல் (தெரிந்து கொள்ள இஷ்டமில்லாமல்) இன்றைய புத்திசாலிகள் கேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. Hope you get what I am trying to say here. கறுப்பு இல்லாவிட்டால் வெள்ளை என்ற மன நிலை மாறும் வரை தமிழனுக்கு விமோர்சனமில்லை.
முகிலன்,
கட்டுரைக்கு நன்றி! சொல்ல வந்ததெல்லாம் மறந்து போச்சு. ரொம்ப மூர்க்கமா தாக்கிக்கிறாங்களே! கவலையாக இருக்கிறது, இது போன்ற பசுந்தோல் போர்த்தி இன்னும் எத்தனை பாவப்பட்டவர்களை... நடு வீட்டில் ”நாண்டு கொண்டு” சாக தானும் ஒரு காரணமாக இருப்பார்கள் என்று தெரியவில்லை. மனசாட்சி உடைய மனிதர்கள் யாரும் சற்றே சிந்திப்பார்கள், தற்கொலைக்கு தானும் ஒரு காரணமாக இருந்தால். அது சட்டப்படி கூட தவறு என்று நினைக்கிறேன். Keep up spirit, bud!
Living/Marriage என்றாலே sex மட்டும்தான் என்ற எண்ணம் கொண்ட மூடர்கள், இதைப் பற்றி விமர்சிக்க அருகதையற்றவர்கள். ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் செக்ஸ் மட்டுமே இல்லை. வாழுதல் என்பதில் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், வரவு செலவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போல பல விஷயங்கள் இருக்கின்றன. திருமணமே செக்ஸ் மட்டும்தான் என்று நினைக்கிற இவர்களுக்கு என்னத்தைச் சொல்லிப் புரிய வைப்பது?
எந்த ஒரு விஷயத்தை விமர்சிக்கும் முன்னர் அந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு விமரிசிக்க வேண்டும்.
குறைகுடம் இப்பிடித்தான் குதிக்கும்.
தமிழர் கலாச்சாரத்தில் இடையில் திணிக்கப்பட்ட திருமணம்/தாலி/மெட்டி/ஒருத்திக்கு ஒருவன் என்கிற சடங்கு/சம்பிரதாயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் மனித உணர்வுகளுக்குக் கொடுக்க மறுக்கிறீர்கள்?
//Thekkikattan|தெகா said...
முகிலன்,
கட்டுரைக்கு நன்றி! சொல்ல வந்ததெல்லாம் மறந்து போச்சு. ரொம்ப மூர்க்கமா தாக்கிக்கிறாங்களே! கவலையாக இருக்கிறது, இது போன்ற பசுந்தோல் போர்த்தி இன்னும் எத்தனை பாவப்பட்டவர்களை... நடு வீட்டில் ”நாண்டு கொண்டு” சாக தானும் ஒரு காரணமாக இருப்பார்கள் என்று தெரியவில்லை. மனசாட்சி உடைய மனிதர்கள் யாரும் சற்றே சிந்திப்பார்கள், தற்கொலைக்கு தானும் ஒரு காரணமாக இருந்தால். அது சட்டப்படி கூட தவறு என்று நினைக்கிறேன். //
ம்ம் ... நல்ல புள்ளன்னு காண்பிச்சுக்கிது ஒரு பக்கம்... அப்டின்னு நினைச்சுக்கிறது ஒரு பக்கம்... ரொம்ப ஈஸியா... கை நீட்டி தப்புன்னு சொல்லிடுறோம்.. சில பார்த்தா பட்டவர்த்தனமா தெரியுது... சில அனுபவங்கள் சொல்லிக் கொடுக்கலாம்... காத்திருப்பதைத் தவிர வழியில்லை.... பசுத்தோல்... நல்லாருக்கு ...
>> Kavithayini said...
Living/Marriage என்றாலே sex மட்டும்தான் என்ற எண்ணம் கொண்ட மூடர்கள், இதைப் பற்றி விமர்சிக்க அருகதையற்றவர்கள். ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் செக்ஸ் மட்டுமே இல்லை. வாழுதல் என்பதில் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், வரவு செலவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போல பல விஷயங்கள் இருக்கின்றன. திருமணமே செக்ஸ் மட்டும்தான் என்று நினைக்கிற இவர்களுக்கு என்னத்தைச் சொல்லிப் புரிய வைப்பது?
எந்த ஒரு விஷயத்தை விமர்சிக்கும் முன்னர் அந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு விமரிசிக்க வேண்டும்.
குறைகுடம் இப்பிடித்தான் குதிக்கும்.
தமிழர் கலாச்சாரத்தில் இடையில் திணிக்கப்பட்ட திருமணம்/தாலி/மெட்டி/ஒருத்திக்கு ஒருவன் என்கிற சடங்கு/சம்பிரதாயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் மனித உணர்வுகளுக்குக் கொடுக்க மறுக்கிறீர்கள்?>>
AIIIYOOOOOO... I SIMPLY LOVE IT... SUPERBNGA....
கலாசார புனிதர்கள் யோசிக்க வேண்டிய விசயம் :)
//பல் இருக்கவன் பக்கடா திங்கான்//
:-))
நீங்க எல்லாரும் பேசிக்கிட்டு இருக்குற விடயம்
கலாச்சாரம் கிடையாது கிடையாது கிடையாது.
ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை புரிஞ்சிக்க
தெரியாத நீங்க எல்லாரும் வியாக்கியானம் பேச
வந்துட்டிங்க. கேட்டா வார்த்த எதுவா இருந்தா
என்னானு கேபிங்க.
அண்ணே இந்த நசரேயனை கொஞ்சம் பார்சல் செய்து இந்தப் பக்கம் அனுப்பி வைக்க முடியுமா?
ஹாலிவுட் பாலா செய்து கொண்டுருந்த வேலையை செய்துகிட்டுருக்கார்,
சிரித்து மாளமுடியல.
தமிழ்மணத்தில் இணைக்கும் முன்னரேயே வாசித்தேன். ஒரு பட்டிக்காட்டானாக, அதிகம் படித்திராதவனாக, வரம்புகளுக்குள் வாழ்க்கையை வைத்திருத்தல் அவசியம் என்று கருதுபவனாக, இந்த இடுகையை நான் கிஞ்சித்தும் ஏற்கவில்லை. உங்கள் கருத்து உங்களுக்கு; I disagree
அனாமிகா துவாரகன்!ஆட்டத்தை அடிச்சாடுங்க.நான் பெவிலியனில் உட்கார்ந்துகிட்டு விசில் அடிக்கிறேன்.
//பல் இருக்கவன் பக்கடா திங்கான்//
நசரு!பொறாமை!இல்ல?
பார்சல் எதுல அணிப்பறது?
சரியாகச் சொன்னீர்கள் முகிலன். சட்டப்படி சரியா தவறா என்று மட்டுமே பார்க்க வேண்டும். இந்த கலாச்சாரக் கூமுட்டையான்டிகள் தினமும் ஒன்று பேசுவார்கள். லிவிங் டுகதெர் 30 வருடங்களுக்கும் மேலாகவே இந்தியாவில் இருக்கிறது. இந்த கலாச்சாரக் காவலர்கள் அவர்கள் வீட்டில் மட்டும் கலாச்சாரம் பார்த்தால் மட்டுமே போதுமானது (முடிந்தால்). இந்த லட்சனத்தில் அந்த பதிவில் ஒருவர் "ஏதும் முடியாத" பெரிசுகளை லிவிங் டுகெதெரில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்று புலம்பியிருக்கிறார். பாவம் என்ன பிரச்சினையோ.
சொந்த விருப்பு வெறுப்பு சட்டத்துக்கு புறம்பாக இல்லாத பட்சத்தில் கூப்பாடு போடும் கலாச்சாரப் பாதுகாவலர்கள் கண்டிக்கப் பட வேன்டியவர்கள்.
||"ஏதும் முடியாத" பெரிசுகளை லிவிங் டுகெதெரில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்று புலம்பியிருக்கிறார். பாவம் என்ன பிரச்சினையோ.||
அவ்ளோதாங்க... அதுக்கு மேல யோசிக்க முடியாது...
வாழ்க்கையே அதுதான் அவங்களுக்கு...
வக்கிரம்..
ம்ம்.. நான் வக்கிரம்னு சொன்னது.. மேல போட்ட பின்னூட்டத்தின் தொடர்ச்சி...
சேட்டைக்காரன் has left a new comment on the post "லிவிங் டுகெதர் - ஏதோ என்னால முடிஞ்சது":
தமிழ்மணத்தில் இணைக்கும் முன்னரேயே வாசித்தேன். ஒரு பட்டிக்காட்டானாக, அதிகம் படித்திராதவனாக, வரம்புகளுக்குள் வாழ்க்கையை வைத்திருத்தல் அவசியம் என்று கருதுபவனாக, இந்த இடுகையை நான் கிஞ்சித்தும் ஏற்கவில்லை. உங்கள் கருத்து உங்களுக்கு; I disagree
//
நீங்கள் மறுப்பது உங்கள் உரிமை, முற்றிலும் சரியானது, ஆனால் வாழும் யாரோ ஒருவன் உங்கள் ஊரில் இருந்தால் அவனை விபச்சாரம் செய்கிறான் என்பதும் அவன் வீட்டுக்குள் சென்று வாந்தி எடுப்பதும் தான் தவறு என்கிறேன்.இன்னும் ஒருபடி மேலே போனால் திருமணத்தின் நன்மைகளாக நீங்கள் கருதுபவைகளை எடுத்துரைக்கலாம், ஏற்றுக்கொள்ளாவிட்டால் நம் எல்லை அத்தோடு முடிந்தது.
//வாழ்க்கையே அதுதான் அவங்களுக்கு...// உண்மைதான் கலகலப்ரியா. தன்னுடைய அரிப்பையும் வக்கிரத்தையும் நேர்மையற்ற நிலையையும் கலாச்சாரம் என்ற பெயரில் வெளிப் படுத்துகிறார்கள். அவரவருக்கு சரி என்ற பட்சத்தில் அவர்களுடைய சுதந்திரத்தில் தலையிட இவர்கள் யார்? அவர்களின் கலாச்சார அளவுகோல்களை வைத்து அவர்களை மட்டுமே அளந்து கொண்டால் போதுமானது.
குடுகுடு,
//திருமணத்தின் நன்மைகளாக நீங்கள் கருதுபவைகளை எடுத்துரைக்கலாம்// அதுவே தவறுதான் குடுகுடுப்பை. ஆனால் சொந்தங்கள் அப்படி செய்யலாம், அதுவும் அனுமதி கேட்டு விட்டு.
***மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றால் இந்தியா மாதிரி மோசமான ஆண்கள் நிறைந்த நாட்டில் லிவிங் டுகெதர் கலாச்சாரம் பரவினால் அந்தப் பன்றிகள் அதை அப்யூஸ் செய்யும், அந்த லிவிங் டுகெதரின் ப்யூர் இண்டென்ஷன் கெட்டுப் போய்விடும். சரியா?
இதை 1000% ஒத்துக் கொள்கிறேன்.***
I am not sure whether you agree with me as I am not for 1000% here and I am not going to call my relatives as PIGS for following something what they are familiar with and used to.
I dont know about your relatives back in India but mine will be your so called "PIGS" list. I love them too! :)
**Blogger அமர பாரதி said...
சரியாகச் சொன்னீர்கள் முகிலன். சட்டப்படி சரியா தவறா என்று மட்டுமே பார்க்க வேண்டும். இந்த கலாச்சாரக் கூமுட்டையான்டிகள் தினமும் ஒன்று பேசுவார்கள்.***
You are saying the so called liberals are consistent in there views, ALWAYS???
Give me a break!
They are inconsistent too if you watch them carefully for a while! :)
//I am not sure whether you agree with me as I am not for 1000% here and I am not going to call my relatives as PIGS for following something what they are familiar with and used to.
I dont know about your relatives back in India but mine will be your so called "PIGS" list. I love them too! :)//
I think you understood me calling the ones who take advantage of women as PIGS...
Continued...
If they don't like it, it is perfectly OK and they should keep it themselves and themselves only. If they think that the whole dogma is wrong let them not do it. They should be stopped there otherwise things will happen like what happened in Karnataka (The girls were attacked by goons from Ram Sena because of alchohol consumption).
Varun,
Whether they are consistent or not is not an issue here. My stand is that they do not have any rights to interfere in others personal life in the name of "கலாச்சாரம்". There ends the matter. Also, living tohether is not new to India. I has been there atleast for last 25 years. I came to know about this about 12 years ago, when I was taking to a female from Hyderabad.
(a typo corrected and re-submitted)
***அமர பாரதி said...
Varun,
Whether they are consistent or not is not an issue here. My stand is that they do not have any rights to interfere in others personal life in the name of "கலாச்சாரம்". There ends the matter.***
Agreed.
Neither do we have any rights to interfere with personal life or lifestyle of conservatives who wants to go with arranged marriage and sex-after-marriage and what they believe as best for them.
However, people are going to say, what they believe as the best for them in the name of freedom of expression. I dont think anybody can force you or any liberal to do an arranged marriage when you want to live with someone and find your life partner and MARRY her or NOT as long as you are not violating the law. But people will express what they think as right or wrong. You can ignore them or counter argue with them.
"Living together" is disgusting to someone. Some other liberals prefer "open marriage". That would be disgusting to some liberals who says living together is fine. Here, the "liberal" becomes "conservative" as the liberal finds "open marriage" is disgusting! It goes on like that :)
***முகிலன் said...
//I am not sure whether you agree with me as I am not for 1000% here and I am not going to call my relatives as PIGS for following something what they are familiar with and used to.
I dont know about your relatives back in India but mine will be your so called "PIGS" list. I love them too! :)//
I think you understood me calling the ones who take advantage of women as PIGS...
November 18, 2010 9:47 AM***
mukilan,
Liberals who lived together and married do abuse their partner in the west and there is lot of domestic violence. Let us not make the liberals look perfect people. We know the reality. What happens later or not?
Let me ask you this, Can we easily differentiate a "girl friend" from a "prostitute" if you take them to a lodge for privacy. What is the situation in India today? Are we really ready? Because prostitution is illegal and living together is allowed. How can a law-man differentiate these two scenarios in India. Can we or not?
//நீங்கள் மறுப்பது உங்கள் உரிமை, முற்றிலும் சரியானது, ஆனால் வாழும் யாரோ ஒருவன் உங்கள் ஊரில் இருந்தால் அவனை விபச்சாரம் செய்கிறான் என்பதும் அவன் வீட்டுக்குள் சென்று வாந்தி எடுப்பதும் தான் தவறு என்கிறேன்.//
இன்னும் ஒருபடி மேலே போனால் திருமணத்தின் நன்மைகளாக நீங்கள் கருதுபவைகளை எடுத்துரைக்கலாம், ஏற்றுக்கொள்ளாவிட்டால் நம் எல்லை அத்தோடு முடிந்தது//
குடுகுடுப்பை, முகிலன் என்னை அறிவார். அவரது கருத்துக்களை நான் ஏற்கவில்லை என்று சொல்வதோடு எனது கடமை முடிந்து விட்டது. அவரது இடுகைக்கு மாற்றுக்கருத்து தெரிவித்து விவாதம் செய்ய விரும்பவில்லை. இந்த விபசாரம், வாந்தி என்று என்னென்னவோ சொல்லியிருக்கிறீர்கள். அவை என்ன??
இதற்குப் பின்னணியில் வேறு இடுகைகள், வேறு அரசியல் இருந்தால் அதில் தலையிட நான் விரும்பவில்லை.
நான் திருமணத்தைப் பற்றி என்ன கருதுகிறேன் என்பதற்கு, எனது முந்தைய பின்னூட்டமே சான்று என்று புரிந்து கொள்க! நன்றி!!
I could not sleep well for the past 2 days.. thinking thinking and thinking.. :)
You did a good job.. I am stable till now about this.. What I wrote in thekaa's post applies here too..
This is something I was thinking yesterday night.. In the past, the marriages were not as arranged as they appear to be today or yesterday mukilan.. people lived as closed community, and they inter married among themselves.. they knew the guy since childhood.. they married their cousins.. of course it was consanguity and would lead to adverse consequences with regard to medical diseases.. may not be a better way of breeding with regard to nature.. but they did not marry someone so blindly as people in west would think of.. Not all arranged marriages resulted in the girl seeing the guy for the first time on the day of marriage and marrying someone whom she did not like at all.. Of course there were exceptions.. A girl who fell in love with other caste guy would not be allowed to choose her life.. there were parental pressures with regard to money, caste this and that.. But not everyone was choosing a life out of compulsion..
solla marandhutten.. welcome mukilan ammaa.. neengalum jothiyila seekkiram aikkiyamaaganum..
//நீங்கள் மறுப்பது உங்கள் உரிமை, முற்றிலும் சரியானது, ஆனால் வாழும் யாரோ ஒருவன் உங்கள் ஊரில் இருந்தால் அவனை விபச்சாரம் செய்கிறான் என்பதும் அவன் வீட்டுக்குள் சென்று வாந்தி எடுப்பதும் தான் தவறு என்கிறேன்.//
இன்னும் ஒருபடி மேலே போனால் திருமணத்தின் நன்மைகளாக நீங்கள் கருதுபவைகளை எடுத்துரைக்கலாம், ஏற்றுக்கொள்ளாவிட்டால் நம் எல்லை அத்தோடு முடிந்தது//
குடுகுடுப்பை, முகிலன் என்னை அறிவார். அவரது கருத்துக்களை நான் ஏற்கவில்லை என்று சொல்வதோடு எனது கடமை முடிந்து விட்டது. அவரது இடுகைக்கு மாற்றுக்கருத்து தெரிவித்து விவாதம் செய்ய விரும்பவில்லை. இந்த விபசாரம், வாந்தி என்று என்னென்னவோ சொல்லியிருக்கிறீர்கள். அவை என்ன??
இதற்குப் பின்னணியில் வேறு இடுகைகள், வேறு அரசியல் இருந்தால் அதில் தலையிட நான் விரும்பவில்லை.
நான் திருமணத்தைப் பற்றி என்ன கருதுகிறேன் என்பதற்கு, எனது முந்தைய பின்னூட்டமே சான்று என்று புரிந்து கொள்க! நன்றி!!
மன்னிக்கவும் சேட்டைக்காரன் உங்கள் கமெண்டுக்கு பதிலாக அதனை சேர்த்திருக்கவேண்டாம்தான் என்னையும் மீறி ஏனோ அதனை சுற்றியே மனம் செல்கிறது. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
சேட்டைக்காரன்.. ||உங்கள் கருத்து உங்களுக்கு; I disagree||
குடுகுடுப்பை..||மன்னிக்கவும் சேட்டைக்காரன் உங்கள் கமெண்டுக்கு பதிலாக அதனை சேர்த்திருக்கவேண்டாம்தான் என்னையும் மீறி ஏனோ அதனை சுற்றியே மனம் செல்கிறது. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.||
______________
HATS OFF TO YA BOTH...
:)
முகிலன்,
இங்க வாசிப்பவர்கள் திருமணம் கட்டி/இணைந்து வாழ்ந்து/எப்படியோ இருந்து குழந்தைகள் பெற்றுக் கொண்டு ஆயிரம் காலத்து பயிரை வளர்ப்பதற்கு முன் உதவும் ஒரு உரையாடல்...
இங்கே சம்பந்தமாக படுவதால் விடுகிறேன்... பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் இடைவெளி: What if...
//
அனாமிகா துவாரகன் said...
ரொம்ப அருவருப்பான விடயம். எங்கள் கலாசாரத்தையே பெரிய பருப்பு மாதிரி நிறைய பேர் கேவலப்படுத்துவது. இப்ப அது தான் ட்ரென்டு போல. பழையவற்றை எதிர்ப்பதெல்லாம் தான் உங்கள் எல்லோரையும் இன்டலென்சுவல்ஸ் என்று காட்டும் என்று நீங்கள் நினைத்தால், அந்தோ பரிதாபம். அமெரிக்கா போனாலும், கிணற்று தவளை கிணற்று தவளை தான்.
உங்களிடம் இதை எதிர்பார்க்கவே இல்லை தினேஷ் அண்ணா. அது சரியிடமும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அதிகமாகவே உங்கள் இருவரிலும் எனக்கு கோவம் வருகிறது. சின்னப் பெண்ணின் கோவம் என்ன செய்ய முடியும்? அதுவும் மதிப்பு வைத்திருப்பவர்கள் இப்படி எழுதினால். சை என்று விடுகிறது.
//
அனாமிகா,
நீங்கள் என்னை குறித்தும் சொல்லியிருப்பதால் இந்த பதில்.
முதலில் கலாச்சாரம் என்பது ஒழுக்கமல்ல. அது அன்றைய காலகட்டத்தின் வாழ்க்கை முறை. எந்த கலாச்சாரமும் வீட்டுக்கு வந்தவனை அடித்து துரத்த சொல்லவில்லை. அம்மா, அப்பாவை மதிக்காதே என்று சொல்லவில்லை. அதனால் விருந்தோம்பியது தமிழ் கலாச்சாரம் என்பது விகடன் படிப்பது போல இருக்கிறது.
கலாச்சாரத்தை பற்றி ஒன்றுமில்லை. ஆனால், அது புனிதமான கலாச்சாரம், நான் சொல்லும் கலாச்சாரத்தை பின்பற்றாதவர்கள் விபச்சாரிகள் என்று சொல்லிய சொறி நாய்களை பற்றி தான் என் இடுகை. இது உங்களை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்க. என் நோக்கம் அதுவல்ல.
எந்த கலாச்சாரமும் புனித கலாச்சாரம் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.So, I stand by what I said.
மொதல்லா கலாச்சாராம் என்பது திருமணத்தை மட்டும் குறிப்பது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்....உலகத்துல எந்த மூளையிளையாவது போய் உக்காந்துகிட்டு அது நொட்டை,இது நொட்டை ன்னு குறை சொல்லுறத நிறுத்துங்க....
//கலாசாரம் என்பது ஒரு வகை ஒழுக்கம். விருந்தோம்பலும் எங்கள் கலாசாரத்தில் ஒரு பகுதி தான். திருமணம் மட்டும் கலாசாரம் இல்லை. பெரியவர்களை மதிக்க வேண்டும் / வேண்டியவர்களுக்கு உதவ வேண்டும் / மற்றவன் முதுகில் குத்த கூடாது என்று நிறைய விடயங்களை கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் மயிர் எடுத்த தமிழ் கலாசாரம் சொல்லித்தான் கொடுக்கிறது. அதை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு திருமணத்தை மட்டுமே பிடித்து வைத்துக்கு கொண்டு ஏன் தான் ஆடுகிறார்களோ தெரியவில்லை.//
இது ஒன்னுக்கு உங்களால பதில் uruppadiyaa சொல்ல முடியுமா.... (லிவிங் togetherukku செம்பு தூக்கும் எல்லாரும்) .....
ம்ஹும்ம் இது ஆவறதில்ல..
2310ல வந்து இதுக்கு ஆதாரத்தோட தமிழ்ல பதில் சொல்ல முடியும்.
Get ready Folks Dot
There was some fatal errors in the response and so I am fixing them and giving it again,
***துளசி கோபால் said...
//ஆனா ஒருத்தரோட லிவிங் டுகெதெர்னா, கீப் மாதிரித்தான். நீங்க ஒரு பைசா செலவு இல்லாமல் தூக்கி எறியலாம். Even after several years if you are together. There is no commitment there. There is a HUGE DIFFERENCE lot of people overlook here! A rich guy would opt for living together because he can "buy" woman cheap and throw them away easily and find another one!//
வருண்,
இதெல்லாம் இந்தியாவில் நடக்கும்.
நியூஸி நாட்டுச் சட்டப்படி ரெண்டு வருசம் ஒன்னா வாழ்ந்துட்டால் அவுங்க கணவன் மனைவியாத்தான் மதிக்கப்படுறாங்க. விட்டுட்டுப்போணுமுன்னா பாதிப் பங்கு கொடுத்தாகணும்.***
Teacher!
நியூசிலாந்துபோல, கரப்சன் இல்லாமல் சட்டம் ஒழுங்கு (least corrupted nation in the world) நன்றாக கடைப்பிடிக்கும் நிலையில் இந்தியா (one of the MOST corrupted nations) இன்று இருந்தால், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
I am just thinking how practical it is in our settings. Since you would agree with me that the law and order in India is very bad, I am with you on this! :)
All I am saying is we are not ready yet for such big changes. With the current law and order situation this change would only make a worse India! :)
கலாச்சாரம்னாலே எல்லோரும் பாஞ்சு வராங்க... வேறென்னத்த சொல்றது?
Post a Comment