Sunday, November 21, 2010

இப்போ இதுதான் ஃபேஷனாம்..

திருமணத்தை ஏற்றுக்கொண்டவர்கள் லிவிங் டுகேதரை எதிர்த்தே ஆக வேண்டுமா? 
லிவிங் டுகேதரை ஆதரிப்பவர்கள் எல்லாம் திருமணத்தை எதிர்ப்பவர்கள் என்ற அர்த்தமா? 
லிவிங் டுகேதரை ஏன் திருமணத்துக்கு மாற்றாகவே கருதுகிறார்கள் - இரண்டு பக்கம் நின்று பேசுபவர்களும்?


******************************************************************************************************


தனி மனிதத் தாக்குதல் என்பது என்ன?

ஒருவரின் பெயர் போட்டு அவரின் கருத்துகளுக்கு எதிர் கருத்து எழுதுவதா?

இல்லை ஒருவர் கூறிய கருத்துகளுக்கு அவர் பிறப்பும் சாதியுமே காரணம் என்று சொல்வதா?

#டவுட்டு



*******************************************************************************************************


ட்விட்டரில் வாந்தியெடுக்கும் அஜீரணக்காரர்கள்

சமீபத்தில் சில “தோழர்”களின் ட்விட்களைப் பார்க்க நேர்ந்தது. பெண்ணுரிமைக்குப் போராடும் போராளிகளான இந்த வீரர்கள் ஒரு பெண்ணை இழிசொற்களால் பகடி செய்து விளையாடுகிறார்கள். இவர்கள் காப்பாற்றும் பெண்ணுரிமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

இதில் இவர்களோடு திடீர் புளியோதரை, திடீர் லெமன் சாதம் போல திடீர் தோழரான இன்னொரு பெண்ணும் சேர்ந்து கும்மியடிக்கிறார். இந்த லட்சணத்தில் அவர் தனக்கொன்று நேர்ந்ததும் என்னைக் கையப் புடிச்சி இழுத்துட்டான் என்று ஊரெல்லாம் ஒப்பாரி வைத்தவர். இவருக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு தக்காளி சாஸ் என்று நினைத்துவிட்டார் போலும்..

யோக்கியன் வரான். சொம்ப எடுத்து ஒளிச்சி வையுங்க..



**********************************************************************************************************


பஸ்ல டிவிட்டர்ல போட்ட போஸ்டை எல்லாம் வெட்டி ப்ளாக்ல ஒட்டுறதுதான் இப்போ லேட்டஸ்ட் ஃபேஷனாமே? மேல இருக்கிறதெல்லாம் நம்ம பஸ்ஸு

8 comments:

குடுகுடுப்பை said...

என் பஸ்ஸ்லிலேயும் யாரும் ஏறுவதில்லை, நானும் பண்ணலாமான்னு யோசிச்சேன். வரும் மெல்ல

கலகலப்ரியா said...

:-)

பெசொவி said...

//தனி மனிதத் தாக்குதல் என்பது என்ன?

ஒருவரின் பெயர் போட்டு அவரின் கருத்துகளுக்கு எதிர் கருத்து எழுதுவதா?

இல்லை ஒருவர் கூறிய கருத்துகளுக்கு அவர் பிறப்பும் சாதியுமே காரணம் என்று சொல்வதா?

#டவுட்டு//

me too!

பெசொவி said...

//இதில் இவர்களோடு திடீர் புளியோதரை, திடீர் லெமன் சாதம் போல திடீர் தோழரான இன்னொரு பெண்ணும் சேர்ந்து கும்மியடிக்கிறார். இந்த லட்சணத்தில் அவர் தனக்கொன்று நேர்ந்ததும் என்னைக் கையப் புடிச்சி இழுத்துட்டான் என்று ஊரெல்லாம் ஒப்பாரி வைத்தவர். இவருக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு தக்காளி சாஸ் என்று நினைத்துவிட்டார் போலும்.//

same pinch!

சுசி said...

ஓ.. இதானா பேஷனு இப்போ.. ரைட்டு!!

vasu balaji said...

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னனமோ பஸ்ஸு பஸ்ஸுங்றீஙக,நமக்கு டவுன் பஸ்ஸ புடிக்கவே போதும் போதும்னு ஆயிடுது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///யோக்கியன் வரான். சொம்ப எடுத்து ஒளிச்சி வையுங்க..////

அல்டிமேட்....!