Sunday, December 5, 2010

நானும் தமிழ்மணம் விருதுகளில்..

நான் வலைப்பதிவு ஆரம்பித்த நாள் முதலாய் என்னைப் பின் தொடர்ந்து என் ஆயிரக்கணக்கான பதிவுகளை வாசித்து ஓட்டுப்போடு பின்னூட்டம் போட்டு என்னை குஷிப்படுத்தி வந்த வாசகப் பெருமக்களே.. இப்போது மீண்டும் ஒரு முறை உங்கள் அபிமான எழுத்தாளருக்கு (நான் தாங்க) உங்கள் ஆதரவைத் தெரிவிக்க மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு.

தமிழக வலையுலக வாசகர்களுக்கு வலைப்பதிவுகளைத் திரட்டித் தரும் உன்னதப் பணியை செய்து வரும் தமிழ்மணமானது கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் விருதுகளுக்கான பரிந்துரைகளை ஏற்கத் துவங்கியுள்ளது. இந்தப் பரிந்துரைகளை வாசகர் பார்வைக்கு வைத்து ஓட்டளிக்கும் உரிமையையும் வழங்க உள்ளது. அதில் என் படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம் என்றிருக்கிறேன்.

இந்த முடிவை நான் எடுத்ததால் எனக்கு முன்னால் இருப்பது ஒரு இமாலயப் பணி. இந்த ஆண்டில் நான் எழுதிய நூற்றுக்கணக்கான இடுகைகளில் மூன்று பிரிவுகளுக்குச் சிறந்த இடுகைகளைத் தேர்ந்தெடுக்கும் சிரமத்தில் ஆழ்ந்திருக்கிறேன். நான் எழுதிய எல்லா இடுகைகளுமே ஆகச்சிறந்த படைப்புகளாக இருப்பதால் என் அன்பிற்கினிய வாசகர்களாகிய உங்களின் உதவி தேவைப்படுகிறது.

இதோ நான் என் படைப்புகளை சமர்ப்பிக்க இருக்கும் பிரிவுகளும் என் படைப்புகளும் கீழே உங்கள் பார்வைக்கு. இதில் எந்த எந்த படைப்புகளைப் பரிந்துரைக்கலாம் என்று நீங்கள் சொல்லுங்கள். அதிகம் பேர் பரிந்துரைக்கும் படைப்புகளை நானும் சமர்ப்பிக்கலாம் என்று இருக்கிறேன்.

1. நகைச்சுவை / கார்ட்டூன்.

அ. ரஜினியும் முதல்வன் பட வசனமும்
ஆ. சர்வதேச பதிவர் சங்கமம் நிகழ்ச்சி நிரல் மற்றும் அழைப்பிதழ்
இ. இந்தி, போலி டாக்டர் மற்றும் பல்புஸ்ரீ
ஈ. என்.சி.சி குடியரசு தின சிறப்புப் பதிவு
உ. செஷல்ஸ் தீவில் பல்பு (மறுபடியும் முதல்ல இருந்தா அவ்வ்வ்வ்)

2. படைப்பிலக்கியம் (கதை, கவிதை போன்றவை)

a. தற்கொலை - சற்றே நீளமான சிறுகதை
b. களவு
c. ஆயுதம்
d. யார் தீவிரவாதி
e. திரௌபதியின் அட்சயப் பாத்திரம்
f. கம்பரும் மல்டி டாஸ்கிங்கும்

3. விளையாட்டு, உடல் ஆரோக்கியம்
i) ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி மற்றும் கனிஷ்கா பாலச்சந்திரன்
ii) ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு
iii) ஹாக்கியை நேஷனல் கேம்னு எவண்டா சொன்னது? 
iv) கிரிக்கெட் தொடர்பதிவு

எதைச் சமர்ப்பிக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அவற்றுக்கு எதிராக இருக்கும் எண்களை ஒவ்வொரு பிரிவிலும் ஒரு இடுகை என எடுத்து கீழ்க்கண்டவாறு ஆ-a-iv என்பது போல பின்னூட்டத்திலோ, தனி மடலிலோ, பஸ்ஸில் கமெண்டாகவோ அளிக்கவும்.

மறுபடியும் உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி.

9 comments:

எல் கே said...

எதுவுமே சமர்ப்பிக்க வேண்டாம்னா எந்த ஆப்சன் ??

Prathap Kumar S. said...

//இப்போது மீண்டும் ஒரு முறை உங்கள் அபிமான எழுத்தாளருக்கு (நான் தாங்க) உங்கள் ஆதரவைத் தெரிவிக்க மீண்டும் //

இதற்காகவே நான் வெளிநடப்பு செய்கிறேன்...:))

ம.தி.சுதா said...

வெற்றியடைய வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

வார்த்தை said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா....!!!

Unknown said...

Congrats.

☀நான் ஆதவன்☀ said...

//உ. செஷல்ஸ் தீவில் பல்பு (மறுபடியும் முதல்ல இருந்தா அவ்வ்வ்வ்)//

செல்லாது செல்லாது... கதை,கவிதைன்னு தானே போட்டிருக்கு? புனைவு இதுல இல்லையேப்பா :)

vasu balaji said...

1 ஈ, 2 b 3 vidu joot:) வாழ்த்துகள்

அது சரி(18185106603874041862) said...

என்ன பண்றது?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பிங்கனு சொல்லுங்க?.. ஹி..ஹி

பார்த்து பொட்டு கொடுங்க பாஸ்,.. விலைவாசி தாறுமாறா ஏறிப்போச்சு...

ஹி..ஹி