Saturday, January 2, 2010

அறிவிப்பு

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், பதிவர் முகிலன் தன் மகனது பிறந்த நாள் விழாவில் புகைப்படம் எடுக்க சரியான ஏற்பாடு செய்யவில்லை. இதனால் பிறந்தநாள் கேக்கை சரியாக படம் எடுக்கவில்லை. முதல் பிறந்தநாள் விழா சிறப்பாக அமைந்த போதிலும் நினைவுகளை பதிந்து வைக்க போதிய புகைப்படங்கள் இல்லை.

டிஸ்கி: விழா நடந்தப்ப இருந்து இப்போ வரைக்கும் நேர்ல பாத்தவுங்க ஃபோன்ல பேசுனவுங்க எல்லார்கிட்டயும் தங்கமணி இந்தப் புகார வாசிச்சுட்டாங்க. பதிவுலகம் மட்டும் தான் பாக்கி. அதையும் விட்டுவைப்பானேன்? அதான் இந்தப் பதிவு.

நம்ப முடியவில்லைஇஇஇஇஇஇ

ஊருக்குள்ள எத்தனையோ ரவுடிங்க சைக்கிள் செயின் சுத்திக்கினு இருக்கச்சொல்லோ நம்மளையும் ஜீப்புல ஏத்திக்கினு போறாங்கப்பா நம்ம தமிழ்மணம்.

இதுவே அவார்டு வாங்கிட்டாப்புலக் கீது.. இது போதும்பா

நான் பாலோ பண்ற பல பேரு - கலகலப்ரியா, வசந்து, கார்க்கி, நான் ஆதவன், நர்சிம், வால் பையன், செந்தழல் ரவி, குசும்பன், SURE ஷ், பழமை பேசி, பரிசல்காரன், உண்மைத்தமிழன், புல்லட் பாண்டி, விதூஷ், ஆயில்யன் - போட்டிலக் கீறாங்கோ ஒங்க ஓட்டையெல்லாம் அவங்களுக்கு குத்தனும்னு கேட்டுகிறேன்.. வர்ட்டா?

நம்ம பதிவு நானும், இந்திக்காரனும், அவனோட பிசினசும்  நகைச்சுவை, கார்ட்டூன் பிரிவுல ரெண்டாம் கட்டத்துக்குத் தேர்வு பண்ணிக்கீறாங்கோ..

டிஸ்கி: இது இடைத்தேர்தல் இல்லை. ஆதலால் பணமோ பிரியாணியோ கேட்டு யாரும் கதவைத் தட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
டிஸ்கி 2: ????!!!!!