Thursday, June 10, 2010

சென்னையில் ஒரு மழைக்காலம்

இந்த விடுமுறையில் இந்தியா வருகை கோடை காலத்தில் இருக்கிறதே எப்படி இருக்குமோ என்று எண்ணி பயந்து கொண்டே வந்தேன். மதுரைக்குப் போனால் மழை, பெங்களூர் போனால் மழை, சென்னைக்கு வந்தால் மழை என்று வானம் குளிர்ந்து போயிருந்தது.

என்ன செய்வது ஔவையே சொல்லிவிட்டாரே -

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் 
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - 
தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு 
எல்லார்க்கும் பெய்யும் மழை

என் பொருட்டு, எஞ்சாய் சென்னை.

இந்த முறை சென்னையில் புதிய தலைமுறை இதழைப் பார்க்க நேர்ந்தது. அந்த இதழின் அமைப்பும் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களும் நான் இந்தியாவில் வசிக்கும்போது இப்படி ஒரு இதழ் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது. அதில் ஒரு தமிழறிஞரின் பேட்டி (ஏய், அந்தப் பேட்டி மாதிரி இல்லப்பா..) இடம்பெற்றிருந்தது. அவரைப் பற்றிய அறிமுகத்தில் அவர் ஒரு தமிழறிஞர் என்றும், இலக்குவனார் அவர்களின் புதல்வர் என்றும், ஆங்கிலப் புலமை பெற்றவர் என்றும், அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் புரஃபெசர் என்றும் சொல்லிவிட்டு அவர் பெயர் என்ன என்பதைச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அவர் யார் என்பதை கூகுள் செய்து கண்டுபிடிக்க வேண்டும் போல. புதிய தலைமுறை?

இந்த முறை சென்னையில் ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிய வாய்ப்புக் கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது. ராயல் என்ஃபீல்டின் மாச்சிஸ்மோ கம்பீரமாகத்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கார் ஓட்டுவது போல. பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சாலையில் புல்லட்டில் சுற்றியது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி. கிண்டியிலிருந்து பாதி ஃப்ரீஸ் ஆன நிலையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு நானும் என் மைத்துனனும் கோயம்பேட்டுக்குப் போனோம். அங்கே கே.பி.என் பஸ் நிறுத்துமிடத்திற்கு அருகில் இறங்கிய போது அந்த தண்ணீர் வெதுவெதுப்பாக மாறியிருந்தது. சென்னை வெயில்?

நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசையாக இருந்த பறக்கும் ரயில் பயணத்தையும் இந்த முறை நிறைவேற்றினேன். கஸ்தூரிபா நகர் நிலையத்திலிருந்து பூங்கா வரை சென்று செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே இரண்டு முக்கிய பிரபலப் பதிவர்களைச் சந்தித்தேன். (அதைப் பற்றி பின்னால்). திரும்பி வரும்போது கோட்டூர்புரம் நிலையத்திலிருந்து கஸ்தூரிபா நகர் நிலையம் வரும் வழியில் ஒரு சாக்கடை (அடையார் கால்வாய்??) ஓடுகிறது. அதன் கரையில் ஐந்தாறு புள்ளிமான்களைப் பார்த்தேன். சல்மான் கான்கள் வேட்டையாடுகிறார்கள், அழிந்துவரும் இனம் என்று கூப்பாடு போடுகிறார்கள். அந்தச் சாக்கடைத் தண்ணீரைக் குடித்து அருகில் உள்ள குப்பையை மேய்ந்து வரும் இந்த மான்களை யார் காப்பாற்றுவது?

ஹோட்டல் சவேராவில் உள்ள மால்குடி ரெஸ்ட்டாரண்டில் ஒரு இரவு உணவு அருந்தினோம். 12 பேர் போயிருந்தோம். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று நான்கு ஸ்டைலிலும் மெனு (நன்றாகப் படியுங்கள் மெனு மட்டும்) வைத்திருக்கிறார்கள். மற்றபடி எல்லா ஸ்டைலும் ஒரே மாதிரிதான் இருந்தது. பெரிய பிழை எதுவும் இல்லை என்றாலும் சாப்பாடு ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால் கடைசியில் வந்தது பாருங்கள் பில் - கிட்டத்தட்ட Rs.12,000/- ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டலுக்கு இந்த பில் தொகை டூ மச். அந்தச் சாப்பாட்டுத் தரத்திற்கு இந்த பில் தொகை த்ரீ மச். விலைவாசி?

ரிச்சி ஸ்ட்ரீட் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றேன். அதே போலத்தான் இருக்கிறது. என்ன இப்போது லேப்டாப்கள், ஆப்பிள் ஐபாடுகள், வி கன்சோல்கள் என்று எல்லாமே கிடைக்கிறது. அமெரிக்காவில் பழுதடைந்த என் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்கில் உள்ள டேட்டாவை பாதுகாப்பாக வெளியே எடுக்க அமெரிக்காவில் $1200/- கேட்டார்கள். இங்கே ரூ.1200/- க்கு முடித்துவிடலாம். கொடுத்திருக்கிறேன். வந்தபின் எவ்வளவானது என்று சொல்கிறேன். உழைப்புக்குக் கூலி?

புதிதாகக் கட்டியெழுப்பியிருக்கும் ஸ்கை வாக் மாலுக்குப் போய் அங்கே இருந்த பி.வி.ஆர் சினிமாவில் “சிங்கம்” படம் பார்த்தேன். தியேட்டருக்குள் நுழையும் முன்பு பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது. ஆடி-3இல் சிங்கம் என்று எங்கள் டிக்கெட் சொன்னது. தியேட்டர் அருகில் இருந்த திரையில் பார்த்தால் ஆடி-1ல் சிங்கம். குழப்பத்துடன் அருகில் சென்ற உடன் நல்ல வேளை ஆடி-1ல் நுழையவில்லை என்று எண்ணிக் கொண்டேன். அங்கே ஓடிக்கொண்டிருந்தது “பெண் சிங்கம்” (ஆணாதிக்கவாதி என்று கம்பு தூக்கிக்கொண்டு வந்துவிடாதீர்கள்). சும்மா சொல்லக் கூடாது. தியேட்டர் நல்ல வசதி. எச் வரிசையில் அமர்ந்திருந்த போதிலும் கழுத்து வலிக்காமல் பார்க்க முடிந்தது. சீட்டும் நல்ல சாய்மானத்தோடு வசதியாக இருந்தது. இடைவேளையில் என் இன்னொரு மைத்துனன் ஒரு ஆனியன் ரிங், ஒரு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், மூன்று ஐஸ்க்ரீம் வாங்கினான். என் பர்ஸில் இருந்த நூறு ரூபாயை எடுத்து நான் கொடுக்கட்டுமா என்று கேட்டேன். இருக்கட்டும் பாவா என்று காசைக் கொடுத்துவிட்டு என் கையில் பில்லைக்கொடுத்தான். ரூ.347/- நூறு ரூபாயை வைத்து குடும்பத்துக்கு ஒன்றுமே வாங்க முடியாதா என்று கேட்டேன். சிரிப்பை மட்டுமே அவனால் பதிலாகத் தரமுடிந்தது. மறுபடியும் விலைவாசி.

இன்னும் நான்கு நாட்கள் சென்னையில் தான். பார்க்க வேண்டிய இடங்கள் பல இருக்கின்றன. அவற்றை பற்றி பிறகு.

37 comments:

Raghu said...

சென்னையை ஒரு ர‌வுண்டு அடிக்க‌றீங்க‌ போல‌ :)

ராஜ் ப‌வ‌னில் (க‌வ‌ர்ன‌ர் மாளிகை) இருக்கும் மான்க‌ள்தான் இப்ப‌டி அடிக்க‌டி வெளியே வ‌ந்துடும். மொத்த‌மா இந்தியாவில் 1000 மான்க‌ள் அள‌வுக்கு வ‌ந்த‌ப்புற‌ம்தான் அர‌சாங்க‌ம் 'காப்பாத்துங்க‌ காப்பாத்துங்க‌'ன்னு க‌த்த‌ ஆர‌ம்பிப்பாங்க‌ பாருங்க‌

நசரேயன் said...

விருது நகர்ல எல்லாம் எப்ப மழை வரும் ?

vasu balaji said...

/ நசரேயன் said...
விருது நகர்ல எல்லாம் எப்ப மழை வரும் ?/

ஆங்கில பாட சிடில மலையாள படம் கலக்குற ஊர்ல மழை வேற பெய்யுமோ?

vasu balaji said...

ம்ம். பறக்கும் ரயில் ஸ்டேஷன்ல எவ்வளவு ஷாப்ஸ் வைக்கலாம். ஒரு பயலும் வரமாட்டான். அப்புறம் ரயிலில்ல பொட்டியில்லன்னா என்ன பண்ண? சிந்திரிபேட்ட, பீச்சு, தில்லக்கேணின்னா அல்லக்கைங்க, கஞ்சாகருப்பு பயம். மைலாப்பூர், பெசண்ட்நகர், இந்திராநகர்லாம் எவ்ளோ வருமானம் வரும்.

மால்குடி ரெஸ்டாரண்ட்//

கேபிளார் கிட்ட ஒரு வார்த்த கேட்டிருக்கக் கூடாது:))

Mahi_Granny said...

முகில் வந்ததால் மழை வந்தது. சென்னையும் குளிர்ந்தது . சென்னை டூர் நன்றாக இருக்கு.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என் பர்ஸில் இருந்த நூறு ரூபாயை எடுத்து நான் கொடுக்கட்டுமா என்று கேட்டேன். இருக்கட்டும் பாவா என்று காசைக் கொடுத்துவிட்டு என் கையில் பில்லைக்கொடுத்தான். ரூ.347/- //


நச் வரிகள்...
என்ன சார் விலைவாசி பயங்கரமா ஏறியிருக்கு போல...!!

Anonymous said...

//என்று நான்கு ஸ்டைலிலும் மெனு (நன்றாகப் படியுங்கள் மெனு மட்டும்)//

இங்கெல்லாம் இண்டியன் சாப்பாட்டுக்கடைக்கு போனா கேட்பாங்க. மைல்ட் , மீடியம் , ஹாட் னு. ஆனா எல்லாமே ஒரே அளவு காரம்தான் இருக்கும். அது மாதிரி போலிருக்கு. :)

அன்புடன் அருணா said...

அவ்வையாரே சொல்லிட்டாரா நீங்க நல்லவங்கன்னு!!!

INNOVATOR said...

//அமெரிக்காவில் $1200/- கேட்டார்கள். இங்கே ரூ.1200/- க்கு முடித்துவிடலாம் //

இங்கு அத்தியாவசிய பொருள்கள் விலை அதிகம் ஆனால் மென் பொருள்களின் விலையோ மிக மிக குறைவு. இது இந்த நாட்டின் சாப கேடு

INNOVATOR said...

சார் என்னோட ப்ளோக்ல புது பதிவு போட்டுருக்கேன் வந்து பாத்துட்டு மறக்காம என்னோட ப்ளோக்ல கமெண்ட் போடுங்க

Paleo God said...

//நூறு ரூபாயை வைத்து குடும்பத்துக்கு ஒன்றுமே வாங்க முடியாதா என்று கேட்டேன். //

ஓஓ வாங்கலாமே 4 புதுப்பட டிவிடிக்கள்.
100கிலோ அரிசி.
பத்து பத்து ரூபா நோட்டுகள்
:))

Ganesan said...

நல்லா எழுதுறீங்க பாஸ்

மாதேவி said...

"மறுபடியும் விலைவாசி"...
இங்கும் குறைச்சலில்லை.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//சென்னையில் ஒரு மழைக்காலம்//

அது ஒரு கனாக்காலம்.. நிலாக்காலம்..

//தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல்//

அங்கிட்டு போயி என்ன உளருனீங்க??

CS. Mohan Kumar said...

கலக்கல். உங்க கூட சேர்ந்து சென்னை சுத்துன மாதிரி இருக்கு

பிரபாகர் said...

ம்... நல்லா அனுபவிச்சிருக்கீங்க! இருந்தும் ரெண்டு பேரும் பாக்காம போயிட்டோம்... திரும்ப எப்போ சந்திப்போமோ? அனுபவங்களை எழுதிக் கலக்குங்க!

பிரபாகர்...

அமுதா கிருஷ்ணா said...

அருமையாய் இருக்கு இந்த பதிவு..

Deepan Mahendran said...

நல்ல பதிவு...
//ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று நான்கு ஸ்டைலிலும் மெனு (நன்றாகப் படியுங்கள் மெனு மட்டும்) வைத்திருக்கிறார்கள்//
நம்பிட்டேன்.., ஆனா பில் அமௌன்ட் ??? எங்கயோ இடிக்குதே...!!!
:)

Chitra said...

......மதுரைக்குப் போனால் மழை, பெங்களூர் போனால் மழை, சென்னைக்கு வந்தால் மழை என்று வானம் குளிர்ந்து போயிருந்தது.

......கிண்டியிலிருந்து பாதி ஃப்ரீஸ் ஆன நிலையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு நானும் என் மைத்துனனும் கோயம்பேட்டுக்குப் போனோம். அங்கே கே.பி.என் பஸ் நிறுத்துமிடத்திற்கு அருகில் இறங்கிய போது அந்த தண்ணீர் வெதுவெதுப்பாக மாறியிருந்தது. சென்னை வெயில்?


........ கேள்வியும் நீங்களே..... பதிலும் நீங்களே....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

Enjoy your India trip! :-)

VISA said...

சூப்பர் டிரிப்

க.பாலாசி said...

ஒவ்வொரு பத்தி முடிவிலயும் போட்டிருக்கிற கேள்விக்குறி எப்பவுமே நம்மளச்சுத்தி உள்ளதுதாங்க...பதில்தான் கிடையாது... விலைவாசியப்பத்தி சொல்லவாவேணும்... இன்னும் நாலுநாள் இருக்குல்ல.. பாருங்க...

Vidhya Chandrasekaran said...

PVR மட்டுமில்லை சென்னையின் முக்கால்வாசி தியேட்டர்களில் பெப்சி கோக் வகையறாக்கள் 45 ரூபாய். பாப்கார்ன் 30 ரூபாயிலிருந்து. டிக்கட் விலைக்கு வந்துடுது:(

ஈரோடு கதிர் said...

(அதைப் பற்றி பின்னால்).

ஒன்னு பிரபாவோட ஆசான்..

இன்னொன்னு!!!!????

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு சார்.

லீவ நல்லா என்ஜாய் பண்ணுங்க.

அ.முத்து பிரகாஷ் said...

"என் பொருட்டு, எஞ்சாய் சென்னை"
முகிலன் , தஞ்சாவூருக்கு எப்போ வர்றீங்க !

பா.ராஜாராம் said...

:-) :-)

அரவிந்தன் said...

திரு.இலக்குவனார் அவர்களின் மகன் பேராசிரியர் மறைமலை அவர்கள்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

அரவிந்தன் said...
This comment has been removed by the author.
Sanjai Gandhi said...

செம்ம ரைடு போல.. எஞ்சாய்..:)

எல்லாமே காஸ்ட்லியான இடங்களா பார்த்து பார்த்துப் போய்ட்டு விலைவாசியான்னு கேட்டா எப்டி பாஸ்? சாப்பிடுவதற்கெல்லாம் எதுக்கு 3 ஸ்டார் ஹோட்டல்? நீங்க சொன்ன மெனுவோட எவ்வளவோ உயர்தர ரெஸ்டாரண்ட்ஸ் இருக்கே.. அங்கே போயிருந்தா இதுல பாதிக்கும் கம்மியா தான் பில் வந்திருக்கும்.. இங்கே விலைகள் பொருட்களின் தரத்துக்கு இல்லை.. ப்ராண்டிற்கு தான்.. :)

Sanjai Gandhi said...

//நூறு ரூபாயை வைத்து குடும்பத்துக்கு ஒன்றுமே வாங்க முடியாதா என்று கேட்டேன். //

கோவை வாங்க பாஸ்.. நல்ல மெஸ்ஸில் மிக அருமையான அன்லிமிடட் மீல்ஸ் 4 பேர் சாப்டலாம்.. மீல்ஸ் 25 ரூபாய் தான்.

Unknown said...

'மெட்ராஸ சுத்திப் பாக்க போறேன்' னு பாடினீங்களா!

Unknown said...

'மெட்ராஸ சுத்திப் பாக்க போறேன்' னு பாடினீங்களா!

Unknown said...

'மெட்ராஸ சுத்திப் பாக்க போறேன்' னு பாடினீங்களா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட நானும் இதே மாதிரி எல்லா ஊருக்கும் போய் வெயிலைக் குறைச்சு..மழை வரும்படி செய்துட்டிருக்கிறதா 10 நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. :)

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு:)!

Veera said...

கஸ்தூரிபாய் நகர் கால்வாய் அருகே திரியும் புள்ளி மான்களை, நானும் அடிக்கடி கவனித்திருக்கிறேன். பாவம், நதியில் நீராடி வாழ்ந்த தலைமுறையாக இருந்திருக்கும். இப்போது இருக்கும் வெறும் கால்வாயில் வெறும் முகம் மட்டுமே காணலாம். அதனால்தான் என்னவோ அந்த மான்கள் துள்ளுவதே இல்லை. :)

அப்பாதுரை said...

எங்கே இருக்கிறது ஸ்கை வாக் கட்டிடம்?
மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது... புல்லட் எல்லாம் இல்லையா இப்போது? மாச்சீஸ் என்று ஏதோ தீப்பெட்டி அட்டை போல் பெயர் சொல்றீர்களே?