Tuesday, June 8, 2010

கனவு தேசம் - 5

இதுவரை பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4


இன்ஸ்யூரன்ஷுக்கு அடுத்தபடியாக படிக்க அல்லது வேலை பார்க்க வந்த அனைவருக்கும் அமெரிக்காவில் கட்டாயத் தேவை சோசியல் செக்யூரிட்டி எண். பேங்கில் அக்கவுண்ட் ஆரம்பிப்பதில் ஆரம்பித்து வருமான வரி கட்டுவது வரை இந்த எண் தேவை.

ஒருவருடைய பொருளாதார செயல்பாடுகள் அனைத்தும் இந்த எஸ்.எஸ்.என்-னோடு சேர்த்து ஆவணப்படுத்தப் படும். மேலும் அவர் செய்யும் குற்றங்கள் - ட்ராஃபிக் டிக்கெட்ஸ், ஃபைன் கட்டியது போன்றவை - கூட இந்த எஸ்.எஸ்.என்-னோடு கோர்க்கப்பட்டிருக்கும். ஆக அவரது எஸ்.எஸ்.என் - ஐ சொன்னால் உங்கள் வரலாறையே எடுத்துவிடலாம்.

வழக்கமாக அமெரிக்கா வருபவர்களை வந்த உடன் எஸ்.எஸ்.என் விண்ணப்பிக்கச் சொல்லுவார்கள். ஆனால் நீங்கள் உடனே விண்ணப்பிக்கப் போனால் உங்கள் அமெரிக்க வருகை எஸ்.எஸ்.என் அலுவலக டேட்டா பேஸில் ஏறியிருக்காது. அதனால் அவர்கள் தபால் மூலம் யூ.எஸ்.சி.ஐ.எஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்கள் வருகையை சரிபார்க்கச் சொல்வார்கள். யூ.எஸ்.சி.ஐ.எஸ் பதில் அனுப்பிய ஒரு வாரத்திற்குள் உங்கள் எஸ்.எஸ்.என் வீட்டுக்கு வந்து சேரும். மொத்தமாக எஸ்.எஸ்.என் வந்து சேர 3 முதல் 6 வாரம் வரை ஆகிவிடும்.

அதனால் நான் என் நண்பர்களுக்கு தரும் ஆலோசனை என்னவென்றால், அமெரிக்காவில் வந்திறங்கி ஒரு வாரம் கழித்துப் போய் எஸ்.எஸ்.என் விண்ணப்பித்தால் டேட்டா பேஸ் அப்டேட் ஆகியிருக்கும். உங்களுக்கு ஒரே வாரத்தில் எஸ்.எஸ்.என் வந்துவிடும். 1 முதல் 4 வாரம் வரை மிச்சம்.

எஸ்.எஸ்.என் வந்த பிறகே உங்களால் டிரைவிங் லைசன்சு கூட விண்ணப்பிக்க முடியும்.

எஸ்.எஸ்.என் பற்றி இன்னும் விளக்கமாகப் பின்னால் சொல்கிறேன். இப்போது டிரைவிங்க் லைசன்சு பற்றி பார்ப்போம்.

ஓவர்சீஸ் லைசன்ஸ் - இப்படி ஒரு பொருள் எங்கும் இல்லை, குறிப்பாக இந்தியாவில். இண்டர்நேஷனல் டிரைவர்ஸ் பெர்மிட்(ஐ.டி.பி) என்று ஒன்று உள்ளது. ஆனால் அது தனியாக ஒரு ஆவணம் இல்லை. அதுவும் உங்களின் இந்திய லைசன்ஸும் சேர்ந்தால்தான் அதற்கு மரியாதை. ஐ.டி.பி உங்களுக்கு கார் ஓட்ட லைசன்ஸ் இருக்கிறது என்பதை உலகில் உள்ள பல மொழிகளில் விளக்கியிருப்பார்கள். ஆக உங்கள் இந்திய லைசன்ஸ் இல்லாமல் ஐ.டி.பி மட்டும் வைத்து ஓட்ட முடியாது.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் விதிகள் வேறுபடும். உதாரணத்திற்கு நியூ ஜெர்சி மாகாணத்தில் உங்கள் இந்திய லைசன்ஸைக் கொடுத்து ஒரு எழுத்துத் தேர்வை பாஸ் செய்தால் போதும் நியூ ஜெர்சி லைசன்ஸ் பெற்று விடலாம். நீங்கள் ஓட்டிக் காட்டத் தேவை இல்லை. நியூ யார்க் மாகாணத்தில் அமெரிக்கா வந்து 3 மாதங்கள் உங்களின் இந்திய டிரைவிங் லைசன்ஸை வைத்தே ஓட்டலாம், அந்த லைசன்ஸ் ஆங்கிலத்தில் இருந்தால் ஐ.டி.பி தேவையே இல்லை. ஆனால் 3 மாதங்களுக்கு மேல் டூரிஸ்ட் விசா தவிர வேறு ஏதாவது விசாவில் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக நியூ யார்க் லைசென்ஸ் எடுத்தேத் தீரவேண்டும்.

நியூ யார்க் மாகாணத்தில் லைசன்ஸ் எடுக்க முதலில் எழுத்துத் தேர்வு ஒன்றை பாஸ் செய்ய வேண்டும். அதைப் பாஸ் செய்த உடன் லேர்னர்ஸ் பெர்மிட் கிடைக்கும் (நம் ஊர் எல்.எல்.ஆர் போல). அதன் பின் ஒரு ஐந்து மணி நேர வகுப்பறைப் படிப்பு - எதாவது ஒரு டிரைவிங் ஸ்கூலில் சொல்லித் தருவார்கள் - முடிக்க வேண்டும். அதன் பின்னரே டிரைவிங் தேர்வுக்குச் செல்ல முடியும்.

டிரைவிங் தேர்வும் மாகாணத்துக்கு மாகாணம் மாறும். நியூ யார்க்கில் வழக்கமான டிராஃபிக் உள்ள தெருக்களிலேயே ஒட்டச் சொல்வார்கள். பேரலல் பார்க்கிங் (parallel parking), 3 பாயிண்ட் டர்ன் ஆகியவற்றைச் செய்யச் சொல்வார்கள். நீங்கள் இந்தியாவில் ஓட்டி பழக்கம் இருந்தாலும் டிரைவிங் டெஸ்டுக்கு முன் ஒரு 2 மணி நேரமாவது ஒரு டிரைவிங் ஸ்கூலின் பயிற்சியாளரிடம் பயிற்சி எடுப்பது நல்லது.

பல பெண்கள் தங்கள் கணவரை ஓட்டச் சொல்லிக்கொடுக்கச் சொல்வார்கள். அதில் என்ன சிக்கல் என்றால், கணவர்கள் தொழில்முறை பயிற்சியாளர்கள் இல்லை. அதோடு அவர்களின் சொந்தக் காரிலேயே பயிற்றுவிக்கும்போது எங்காவது இடித்து விடுமோ என்ற பயம் கணவர்களுக்கு இருக்கும். அதனால் மனைவிகள் தப்பு செய்யும்போது கோபம் வரலாம். அவர்கள் கோபத்தில் ஏதாவது கத்திவிட்டால் மனைவிகளுக்கு பதட்டம் வந்து மேலும் தவறிழைக்கலாம். அதனால் அடிப்படைப் பயிற்சியை ஒரு டிரைவிங் ஸ்கூலின் தொழில்முறை பயிற்றுவிப்பாளரிடம் பயின்ற பின்னர் அதிக பரிச்சயம் செய்துகொள்ள உங்கள் கணவரோடு செல்லலாம். அதோடு டிரைவிங் ஸ்கூலின் காரில் பயிற்றுவிப்பாளரின் பக்கமும் ஒரு ப்ரேக் இருக்கும் என்பதால் விபத்தைப் பற்றி கவலைப் படாமல் பழகலாம்.

அடுத்தது கார் வாங்குவது. அமெரிக்காவில் பெரிய நகரங்களைத் தவிர மற்ற நகரங்களில் வசிப்பவர்கள் கார் இல்லாமல் இருக்க முடியாது. அப்படி இருக்க முடியாத நிலையை கார் தயாரிப்பு நிறுவனங்களே ஏற்படுத்திவிடுகின்றன. உதாரணத்திற்கு நான் வசிக்கும் ராச்செஸ்டர் நகரில் ஒரு காலத்தில் சப்-வே எனப்படும் பாதாள ரயில் வசதி இருந்ததாம். அந்த வசதியினால் மக்கள் பலர் கார் வாங்காமலே இருந்து வந்தனர். ஃபோர்ட் நிறுவனம் அந்த பாதாள ரயில் நிறுவனத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து வாங்கி இரண்டு வருடங்களில் அதை மூடிவிட்டார்களாம். எது எப்படியோ கார் இல்லாமல் இருந்தால் எந்த இடத்துக்குப் போவதற்கும் யாரையாவது எதிர்பார்த்தே இருக்க வேண்டிய நிலை தவிர்க்கமுடியாதது.

பழைய கார் வாங்கும்போது அமெரிக்கக் கார்கள் - ஃபோர்ட், ஜி.எம், க்ரைஸ்லர் போன்ற - வாங்குவதாக இருந்தால், 100,000 மைல்களுக்கு மேல் கார் போயிருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்தக் கார்கள் 100,000 மைல்களுக்கு மேல் பல பிரச்சனைகளைத் தரும். ஜப்பானியக் கார்களான ஹோண்டா, டொயாட்டா போன்ற கார்கள் வாங்கினால் தைரியமாக வாங்கலாம். அவை 200,000 மைல்கள் வரை பிரச்சனை இல்லாமல் போகக் கூடியவை.

பழைய கார்களை தேர்ட் பார்ட்டி என்று சொல்லக் கூடிய காரின் சொந்தக்காரர்களிடம் நேரடியாக வாங்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இப்படிப் பட்ட பரிமாற்றத்தை as-is என்று அழைப்பார்கள். அதாவது காரை நீங்கள் வாங்கும்போது கார் எப்படி இருக்கிறதோ அந்த நிலையிலேயே பெற்றுக் கொள்கிறேன் என்ற ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்து போட்டிருப்பீர்கள். அதனால் அதன் பின்னர் வரும் எல்லாப் பிரச்சனைகளையும் நீங்களே ஏற்றுக் கொண்டாக வேண்டும். எந்தச் சட்டமும் உங்களுக்கு உதவாது. பல நேரங்களில் காரை ட்ரயல் பார்த்து, பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு அடுத்த தெரு வருவதற்குள் கார் நின்று போன கொடுமையையெல்லாம் பார்த்திருக்கிறேன்.

அதனால் தேர்ட் பார்ட்டியிடம் கார் வாங்கும்போது விற்பனை செய்பவரின் செலவிலேயே ஒரு வொர்க் ஷாப்பிற்கு சென்று பரிசோதனை செய்துவிடுவது நல்லது. $100 டாலருக்குள் காரில் உள்ள அத்தனை குறைகளையும் காட்டித் தரும். அவற்றைக் களைந்து தர விற்பவர் தயாராக இருந்தால் மட்டுமே காரை நீங்கள் வாங்கலாம்.

கார் டீலரிடமே பழைய கார் வாங்குவது பாதுகாப்பானது. சில நேரங்களில் வாரண்டியும் கிடைக்கும். ஆனால் கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும்.

புது காராக வாங்குவதும் சாதாரண விசயம் இல்லை. அது ஒரு கலை என்றே சொல்லலாம். முதலில் எந்தக் கார் வாங்குவது என்பதை முடிவு செய்துவிட்டு அந்தக் காரைப் பற்றிய முழு விவரங்களையும் - காரின் பல மாடல்கள், அவற்றின் அடிப்படை வசதிகள், அதிகப்படியான வசதிகள் ஆகியவற்றை - தெரிந்து கொண்ட பின்னே கார் டீலரிடம் செல்ல வேண்டும். அங்கே போகும் போது உங்கள் பட்ஜெட் என்ன என்பதை நீங்கள் அவர்களிடம் சொல்லி விடக்கூடாது. அதே நேரத்தில் உங்களின் கார் வாங்கும் ஆர்வத்தையும் அவர்களிடம் வெளிக்காட்டிவிடக் கூடாது. இந்த உணர்வுகளை அந்த விற்பனைப் பிரதிநிதி கண்டுபிடித்துவிட்டால் டிஸ்கவுண்ட் அதிகம் கொடுக்க மாட்டார்.

ஒரு காரின் குறைந்த பட்ச விற்பனை விலை ஒன்று வைத்திருப்பார்கள். அதன் மேல் எவ்வளவு வந்தாலும் அவர்களுக்கு அதிகப்படி லாபம் தான். உதாரணமாக ஒரு காரின் விலை $24,000/- என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் குறைந்த பட்ச விற்பனை விலை 20,000/- என்றிருக்கும். ஆகவே அவர் காரின் விலை சொல்லும்போது குறைத்துக் கேட்க வேண்டும். நீங்கள் 21,000/- என்று கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அவர் உடனே “நான் போய் மேனேஜரிடம் பேசிவிட்டு வருகிறேன்” என்று உள்ளே போவார். அவரிடம் எதையாவது பேசிவிட்டு திரும்பி வந்து, 21,000/- கொடுக்க முடியாது 23,500/- என்றால் கொடுக்கலாம் என்று சொல்வார். நீங்கள் இல்லை என்று தயங்கினால் “நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன், 22,000/- என்று கேட்போம். அவர் 23,000/-க்கு வருவார். என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பார். நீங்கள் ஒத்துக்கொண்டுவிட்டால் போச்சு. 23,000/-க்கு உங்கள் தலையில் காரைக் கட்டி விடுவார்கள். சில நேரங்களில் நீங்கள் காரை இன்றே வாங்கிக் கொள்வதாக இருந்தால் 22,500/-க்குக் கொடுக்கிறேன் என்று “இறங்கி” வருவார்கள். ஒத்துக் கொள்ளாதீர்கள். எப்போது போன அன்றே காரை வாங்கும் எண்ணத்தை வைத்துக் கொள்ளாதீர்கள்.

மனைவியிடம் பேசிவிட்டு வருகிறேன், நண்பர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்று எதாவது காரணத்தை வைத்து திரும்பி விடுங்கள். மற்ற டீலர்களிடமும் விசாரித்துவிட்டு எது நல்ல டீல் என்று பார்த்து முடிவு செய்யுங்கள். சில நேரம் ஒரு டீலரிடம் சர்வீஸ் நன்றாக இருக்கும். இன்னொரு டீலரிடம் நல்ல டீல் இருக்கும். சர்வீஸ் நன்றாக இருக்கும் டீலரிடம் மற்ற டீலரிடம் இருக்கும் டீல் அல்லது ஆஃபரைச் சொல்லி அதையே இங்கேயும் தரச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் வாக்-அவுட் செய்யப் போவதாக மிரட்டலாம். பணத்தைக் குறைக்க தயக்கம் காட்டினால் வேறு அதிகப்படி வசதிகளில் ஏதாவது ஒன்றைக் கேளுங்கள். சமயோசிதமாக நடந்து கொள்வதன் மூலம் நல்ல விலைக்கு புதுக் கார்கள் வாங்கிவிடலாம்.

நீங்கள் காரில் அதிகம் ஊர் சுற்றாதவராக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை காரை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவராக இருந்தால் உங்களுக்கு லீசிங் (leasing) என்ற ஒரு வழி இருக்கிறது. அதாவது காரை விலைக்கு வாங்காமல் வாடகைக்கு எடுப்பது போல. இதில் வழக்கமாக மூன்று வருடம் - 36,000 மைல் என்ற ஒப்பந்தம் போடுவார்கள். 36,000 மைல்களுக்கு மேல் போனால் மைலுக்கு இவ்வளவு என்று பணம் அதிகமாகக் கட்ட வேண்டியிருக்கும். மூன்று வருடங்களுக்குப் பிறகு அந்தக் காரை திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு கார் லீஸ் செய்து அல்லது வாங்கிக் கொள்ளலாம்.

Leasing Vs Buying
=================
காரை வாங்கினால் நீங்கள் மாதா மாதம் கட்டும் பணத்திற்கு உங்களுக்கு ஒரு சொத்து (கார்) இருக்கிறது. அதுவே உங்களின் பணத்திற்கான ரிட்டர்ன். லீசிங்கில் நீங்கள் கட்டும் பணம் வாடகையைப் போன்றது. அதனால் அதற்கு ரிட்டர்ன் இல்லை.
காரை வாங்கும்போது நீங்கள் காரின் மொத்த விலைக்கும் வரி கட்ட வேண்டும். காரை லீஸ் செய்யும்போது லீஸ் காலத்துக்கான தேய்மானத் தொகை (depreciation amount)க்கு மட்டும் வரி கட்டினால் போதும். அதோடு மாத ஈ.எம்.ஐ கார் வாங்குவதில் லீசை விட அதிகமாக இருக்கும். வழக்கமாக புது காருக்கு முதல் மூன்று வருடங்களுக்கு மட்டுமே வாரண்டி இருக்கும். அதற்கு மேல் ஃபேக்டரி வாரண்டி இல்லாமல் மற்ற வாரண்டி வாங்க வேண்டியிருக்கும். லீசில் அந்த பிரச்சனை இல்லை. மூன்று வருடங்களில் அந்தக் காரை நீங்கள் திருப்பிக் கொடுத்துவிடுவீர்கள். லீசில் எடுத்த காரையே மூன்று வருடங்களுக்குப் பிறகு நீங்களே வாங்கிக் கொள்ளும் ஒரு வழிமுறையும் இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட எண்ணத்துடன் நீங்கள் காரை லீஸ் செய்வதால் உங்களுக்குச் சில ஆயிரங்கள் நஷ்டம் ஏற்படலாம். ஆகவே மூன்று வருடங்களுக்குப் பிறகு வேறு கார் வாங்கும் பழக்கம் உடையவராக இருந்தால் மட்டுமே நீங்கள் லீஸ் ஆப்ஷனுக்குச் செல்லுங்கள்.

அடுத்த பகுதியில் விசா எக்ஸ்டென்ஷன், க்ரீன் கார்ட் ஆகிய விவரங்களைப் பார்ப்போம்.

15 comments:

Paleo God said...

நல்லது தொடருங்கள்!

--
அப்படியே லிமோஸினுக்கு எவ்வளவு வாடகைன்னும் சொல்லி இருக்கலாம் :-)

நாஞ்சில் மைந்தன் said...

தினேஷ், நியூ ஜெர்சி மாகாணத்தில் இப்பொதெல்லாம் இந்திய லைசன்சு காட்டி நியூ ஜெர்சி லைசன்ஸ் வாங்க முடிவதில்லை என கேள்விப்பட்டேன்...

vasu balaji said...

/நியூ யார்க் மாகாணத்தில் லைசன்ஸ் எடுக்க முதலில் எழுத்துத் தேர்வு ஒன்றை பாஸ் செய்ய வேண்டும்.//

அது தமிழ்ல இருந்தா தளபதிக்கு கண்டிப்பா லைசன்ஸ் கிடைச்சிருக்காது:))

/பழைய கார் வாங்கும்போது அமெரிக்கக் கார்கள் - ஃபோர்ட், ஜி.எம், க்ரைஸ்லர் போன்ற - வாங்குவதாக இருந்தால், 100,000 மைல்களுக்கு மேல் கார் போயிருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்தக் கார்கள் 100,000 மைல்களுக்கு மேல் பல பிரச்சனைகளைத் தரும்./

அப்ப தலைவர் வண்டிக்கு பேரீச்சம்பழம்தானா:))

கோச்சுக்காதீங்க பாஸ். பத்து நாளா கண்டதையும் படிச்சி எதப்பாத்தாலும் உள்குத்தாவே தெரியுது:))))

பிரபாகர் said...

அனுபவத்துல தெரிஞ்சி இருக்கவேண்டியத படிச்சி தெரிஞ்சிக்கிறேன்...

நிறைய தெளிவான தகவல்கள்...

பிரபாகர்...

Chitra said...

Rochester? Cool!

Detailed information on various issues. Useful post.

Anonymous said...

நான் ட்ரைவிங் ஸ்கூலில் போய்தான் கார் ஓட்டக்கற்றுக்கொண்டேன். உண்மையிலேயே அதுதான் பயனுள்ளது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல முயற்சி, நட்சத்திர வாரம் அசத்தலாக போய்கொண்டிருக்கிறது

நசரேயன் said...

//கோச்சுக்காதீங்க பாஸ். பத்து நாளா கண்டதையும் படிச்சி எதப்பாத்தாலும் உள்குத்தாவே தெரியுது:))))//

நான் எழுதி வச்சி இருக்கிற கரெக்ட்டர் வானம்பாடிகள் வெளி வராம இருக்கிறதற்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்.

நசரேயன் said...

//தினேஷ், நியூ ஜெர்சி மாகாணத்தில் இப்பொதெல்லாம் இந்திய லைசன்சு காட்டி நியூ ஜெர்சி லைசன்ஸ் வாங்க முடிவதில்லை என கேள்விப்பட்டேன்...//

உண்மை

vasu balaji said...

/நசரேயன் said...
//கோச்சுக்காதீங்க பாஸ். பத்து நாளா கண்டதையும் படிச்சி எதப்பாத்தாலும் உள்குத்தாவே தெரியுது:))))//

நான் எழுதி வச்சி இருக்கிற கரெக்ட்டர் வானம்பாடிகள் வெளி வராம இருக்கிறதற்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்/

வானம்பாடிகளை பறக்கவிடாமல் அடைத்து வைத்திருக்கும் நசரேயாதிக்கத்தை எதிர்க்கிறேன்:)))

ராஜ நடராஜன் said...

பாஸ்!இப்ப நீங்க பாஸ்!வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

//நான் எழுதி வச்சி இருக்கிற கரெக்ட்டர் வானம்பாடிகள் வெளி வராம இருக்கிறதற்கு காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்//

நசேர்!கரக்ட்டரா இல்ல கேரக்டரா?புரியறமாதிரிதான் சொல்றது.

சுசி said...

தட்டு :))))

ஹேமா said...

கார் பழகுவது வாங்குவது பற்றிய தெளிவான பார்வை.நன்றி முகிலன்.

எறும்பு said...

தினேஷ் அண்ணே ரெண்டு சிக்னல் தள்ளிதான் நானும் ஒரு பிரபல பதிவரும் இருந்தோம். சொல்லிருந்தா வந்து பாத்ருபோம். மறுபடியும் நாங்க போய் பதிவர் ஐயாவ பார்த்தோம்.