Thursday, August 19, 2010

புரட்சி

புரட்சி - ஒரு நாட்டின் அல்லது அமைப்பின் கட்டமைப்பில் குறைந்த காலத்தில் ஏற்படும் அடிப்படை மாற்றம் புரட்சி என்றழைக்கப்படும்.

நாம் பல புரட்சிகளை கடந்த நூற்றாண்டில் சந்தித்திருக்கிறோம்.

ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, கியூபப்புரட்சி, தொழில் புரட்சி, பசுமைப் புரட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

புரட்சி வருவதற்கு முக்கிய காரணங்களாவன - வர்க்கப் பேதம், வர்க்கச் சிந்தனை, வர்க்க மூலம் (ஒரு ஃப்ளோல வந்துருச்சி விடுங்க)

டிஸ்கி: புரட்சி பற்றி எழுதினால் ஹிட் கிடைக்காது என்று வெண்ணிற இரவுகள் கார்த்தி சொன்னதால் எழுதப்படும் ஒரு சோதனை முயற்சி. இதற்கு ஹிட் கிடைக்காவிட்டல் ஹிட் கிடைக்கும் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பேன் என்ற எச்சரிக்கையுடன் முடித்துக் கொள்கிறேன்.

18 comments:

Unknown said...

வலிமையான எழுத்துக்களை எழுதியதால் கை வலிக்கிறது. யாராவது தமிழ்மணத்திலும் இண்ட்லியிலும் சேர்த்து நெகட்டிவ் ஓட்டுப் போட்டுவிட்டுப் போங்கள். நன்றி.

vasu balaji said...

வர்க்க ஃபிஸ்டுலா சேராதா:)).

? said...

1. நீண்ட காலம் புரட்சி நடக்க முடியாதா.. 2.தொழிற்புரட்சி மற்றும் பசுமை புரட்சில என்ன வர்க்க பேதம் சிந்தனை இருந்த்து என விளக்க முடியுமா..
3. புரட்சி கடந்த நூற்றாண்டில்தான் ஆரம்பித்த்தா

Unknown said...

@?
1. விக்கிபீடியால அப்பிடித்தான் போட்டிருந்தது
2. மறுபடியும் ஒரு ஃப்ளோல வந்திருச்சிங்கண்ணா
3. அப்பிடின்னு சொல்லலையே? கடந்த நூற்றாண்டில் இந்தப் புரட்சிகளையெல்லாம் பார்த்தோம்னு சொன்னேன்.

உங்களுக்கு சில கேள்விகள்

1. ”?” உங்க பேரே இதுதானா?
2. இப்பிடிப் பேரு வச்சதாலதான் நீங்க கேள்வி நிறைய கேக்கிறீங்களா? இல்லை கேள்வி கேக்கறதால உங்களூக்கு இந்தப் பேரு வச்சாங்களா?
3. யாரொ வினவு வினவுன்னு சொல்றாங்களே அது நீங்கதானா?

பிரபாகர் said...

கை வலிச்சதுன்னுதான் ரொம்ப கம்மியா எழுதியிருக்கீங்களா டினோ?

பிரபாகர்...

அது சரி(18185106603874041862) said...

நான் ஈவ்னிங் வந்து வச்சிக்கிடறேன் :)))

Raghu said...

எழுதுங்க‌ முகில‌ன். ஹிட்ஸ்லாம் பார்க்காதீங்க‌. எழுதி முடிச்ச‌துக்க‌ப்புற‌ம் ந‌ல்ல‌ ப‌திவு எழுதியிருக்கோம்னு ஒரு ச‌ந்தோஷ‌ம் உங்க‌ளுக்கு கிடைக்கும். அதுக்காக‌வாவ‌து எழுதுங்க‌

அப்ப‌டியும் ஹிட்ஸ் வேணும்னா...புர‌ட்சி ப‌த்தி எழுதிட்டு, "எந்திர‌னில் முத்த‌க்காட்சி"ன்னு ப‌திவுக்கு த‌லைப்பு வெச்சு பாருங்க‌. ஹிட்ஸ் குவியும் :))) வாழ்க‌ ப‌திவுல‌க‌ம்!

கலகலப்ரியா said...

hit thane... yaarukku evlo... oru list poattu anuppungappaa.. baseball bat konjam order pannanum... athukku nithi vasoolikkanum...

Unknown said...

இரவு 12:00 மணியிலிருந்து இன்று காலை 6:30 மணி வரை இந்தப் பதிவுக்குக் கிடைத்த ஹிட்ஸ் - 218. நான் வேறு மொக்கை எதாவது எழுதினால் கிடைக்கும் ஹிட்ஸை விட இது இருமடங்காக உள்ளது.

இவ்வளவுக்கும் நான் புரட்சி என்பதை விட வேறு விறுவிறுப்பான தலைப்பு வைக்கவில்லை. கார்த்தி சொன்னது தவறாகிவிடும் போலவே?

? said...

முதலில் என்னுடைய கேள்விக்கான தங்களது பதில் பற்றியத1. விக்கியில் போட்டதை அப்படியே எடுத்து எழுதுவது இப்படி சந்தியில் நிறுத்தி விடும் என்ற புரிதல் தங்களுக்கு இருந்திருந்தால் ? ஐ பயன்படுத்தி இருப்பீர்கள். 2. என்னோட உண்மையான பேர சொன்னாக் கூட நீங்க நம்ப போறீங்களா .. அல்லது அப்படி நம்பினாலும் அதற்கு சான்று என்ன இருக்கு... ? ஐயே பயன்படுத்த தெரியாத ஒரு சமூகத்துக்கு ? ஐ எப்படி பயன்படுத்தணும்னே சொல்லித் தர வேண்டியிருக்கு என்கிற போது எனது பெயர் ? அல்லது , அல்லது ! என எப்படி வேண்டுமானாலும் இருப்பதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை. 2. மேற்படி புரட்சியில் உள்ள வர்க்கம் என்ன என கேட்டதற்கு தவறு என ஒத்துக்கொள்வதற்கு பதிலாக புளோ மேல பழி போடற தன்ம இருக்கே எப்பா தாங்கல 3. இப்போ மல ஜலம் கழித்தா கால கழுவிட்டு வரணும் கிறத யாராவது சொன்னா அவிங்க கம்யூனிஸ்டா இல்லியான்னு ஆராய்ச்சி பண்ணிட்டுதான் கால் கழுவுவீங்களா...அப்புறம் எப்போ புரட்சி னு ஒண்ணு உலகத்துல தோன்றிச்சுனு சொன்னீங்கன்னா 3 வது கேள்வி முழுமயடயும்

ராம்ஜி_யாஹூ said...

வர்க்க பேதங்களை நீக்கி எல்லோரையும் சமமாக காலில் விழச் செய்த புரட்சியை செய்த புரட்சி தலைவி பற்றி இரு வரிகள் சேர்த்து இருக்கலாம், இந்தப் பதிவில்.

(be it is sds, kaalimuthu or nainar nagednran all r same and all should hang in the propaganda van)

க ரா said...

ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல.. பஸ்ல போட்டது எதுவும் இங்க வரல.. என்னாச்சு :)

Paleo God said...

நல்ல பதிவு நன்றி புரட்சி!

Unknown said...

அப்டேட் - 10:43 pm. இடுகை போட்டு சரியாக 22 மணிநேரம் கழித்து

ஹிட் - 503
பின்னூட்டம் 10
ஓட்டு - 13

புரட்சி நல்லாத்தான் விக்குது போலருக்கே?

தினேஷ் ராம் said...

புரட்சி- மனிதனாகப் பட்ட ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமுதம் அது தோழரண்ணே!! இல்ல இல்ல.. அண்ணே தோழர்.

அந்த அமுதத்தை மனித குலத்திற்கு வழங்குகின்ற சக்தி யாருக்கு உள்ளது என நடக்கும் களேபரங்கள் கூட நம் கண்களுக்கு புரட்சியாக தோற்றமளிக்கலாம்.

//புரட்சி - ஒரு நாட்டின் அல்லது அமைப்பின் கட்டமைப்பில் குறைந்த காலத்தில் ஏற்படும் அடிப்படை மாற்றம் புரட்சி என்றழைக்கப்படும்//

என்ன அண்ணே சொல்றீங்க?? இது தான் புரட்சியா!!

ச்சே.. பயப் புள்ளைங்க எனக்கு தப்பா சொல்லிக் கொடுத்துட்டாங்க. அதாவது 'ஒருத்தவன் சாதாரணமா பேசும் பொழுது ரஷ்யா.. மார்க்ஸ்.. கேப்பிட்டலிசம்.. என்றெல்லாம் நடு நடுவில் சேர்த்து முடிக்கிறப்ப தோழர் சேர்த்துக் கொண்டால் அவன் போராளி. இதையே சுமார் ஒரு பதினொன்று முதல் எவ்ளவோ பேர் வரை வேணுமானாலும் கூட்டமாக சேர்ந்து அவர்களுக்குள் மாறி மாறி பேசி பழகிக் கொண்டால் அது தாம்லே புரட்சி. அவர்கள் போராளிகள். அவர்களை தவிர மற்றவர்கள் எல்லாம் ஆதிக்க சக்திகள்னு அவங்களும் நம்பி, மற்றவர்களையும் நம்ப வைப்பாங்க. உனக்கெதுக்கு வம்பு.. எல்லாரையும் தோழர்னு சொல்லிட்டு போயேன்' அப்படின்னு சொன்னான்.

என்னை மாதிரி சிறு பிள்ளைகளை குழப்புவதற்கு என்றே பலர் கூட்டம் கூட்டமா கிளம்புறாங்க!! சரிங்க விடு.

ஆமா அண்ணே.. இங்க என்ன சண்டை எதுவும் பெருசா நடக்கவே இல்ல? ஆதிக்க சக்திகள் உறங்குகின்றனவா?? அப்ப இதுவே புரட்சி தான்னு சொல்லுங்க!!(பின்னாடி இருக்கு உங்களுக்கு என்று உள்ளர்த்தமோ?) ச்சே.. வாழ்க்கை நம் முன் புதிரான கேள்விக்குறியா(?) இருக்குது இல்லண்ணே!!

I like it. :-)

தினேஷ் ராம் said...
This comment has been removed by the author.
தினேஷ் ராம் said...
This comment has been removed by the author.
தினேஷ் ராம் said...
This comment has been removed by the author.