Wednesday, September 29, 2010

டைமண்ட்-2 (சவால் சிறுகதை)

காமினி கட்டிலில் படுத்திருந்தாள்.

முகத்தில் பொருத்தப்பட்டிருந்த மாஸ்க்கில் துளிர்த்திருந்த நீர்த்திவலைகள் அவள் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை சொல்லிக்கொண்டிருந்தன. அவள் உடல் முழுக்க வயர்கள் பொருத்தப்பட்டு மானிட்டர்கள் பீப்பிக்கொண்டிருந்தன. அவளைச் சுற்றிலும் டாக்டர்கள். தலை முழுக்க சில்வர் பெயிண்ட் அடித்தது போல இருந்த அந்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார்.

“நோ மோர் ஹோப். சொந்தக்காரங்களுக்கு சொல்லிவிட்ற வேண்டியதுதான்” விலகி நடந்தார்.

அனைவரும் அவரைப் பின் தொடர, ஒரு டாக்டர் மட்டும் நின்று காமினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். திறந்திருந்த அவள் கண்கள் அவரைப் பார்த்துக் கெஞ்சுவது போல இருந்தது. சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு விலகி நடந்தார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்

பதினான்காவது மாடியில் இருந்து விழுந்த அவள் கீழேஏஏஏ போய்க் கொண்டே இருந்தாள்.

திடுக்கென்று படுக்கையிலிருந்து எழுந்தாள். முகமெல்லாம் வேர்த்திருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மேஜை மீதிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள். நாளை செய்யப் போகும் காரியத்தை நினைத்தால் அவள் அடிவயிற்றில் ஏதோ செய்தது.

அதற்கு மேல் தூக்கம் வராமல் ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

*****************************************************************************

சிவா பேட்டிங் க்ரீஸில் இடது காலை லெக் ஸ்டம்பிலும் வலது காலை ஆஃப் ஸ்டம்பிலும் வைத்து கோணலாக நின்று கொண்டிருந்தான்.

எதிர்ப்புறம் இடது கை பவுலர் ஓவர் த விக்கெட்டில் பந்து போட ஓடி வந்து கொண்டிருந்தான். “சிவா சிவா சிவா” என்ற கோஷம் ஃபோர் லைனில் உட்கார்ந்திருந்த அவன் அணி ஆட்டக்காரர்களிடம் இருந்து பலமாக வந்து கொண்டிருந்தது.

யார்க்கர் லெங்க்த்தில் இடது புறம் வீசப்பட்ட பந்தை அல்ரெடி க்ரீஸில் டீப்பாக நின்று கொண்டிருந்த படியால் ஃபுல் டாஸாக எதிர்கொண்டு மட்டையை சுழற்றி அடித்தான். பந்து மிடில் ஆஃப் த பேட்டில் பட்டு ஃபோர்லைனைத் தாண்டி பறந்து கொண்டிருந்தது. அணியின் மற்ற வீரர்கள் எழுந்து பிட்சை நோக்கி ஓடி வந்தார்கள். இருவர் அலேக்காக சிவாவைத் தலைக்கு மேல் தூக்கி சுற்றினார்கள். அவர்களின் தோளில் உட்கார்ந்திருந்த சிவா தூரத்தில் வந்து கொண்டிருந்த காமினியைத் தெளிவாகப் பார்த்தான். மெதுவாக இறங்கி நண்பர்களை விட்டு விலகி காமினியை நோக்கி நடந்தான்.

*******************************************************************************

“என்ன காமினி? பரந்தாமன் சார் கிட்ட பேசிட்டியா?” கையில் மாட்டியிருந்த கிளவுஸைக் கழட்டிக் கொண்டே கேட்டான் சிவா.

“பேசிட்டேண்டா. ஆனா எனக்கு பயமா இருக்கு...”

“பயப்படாத காமினி. பெர்ஃபெக்ட் ப்ளான். போலீஸை ஏமாத்துறதுக்கும் ரெடி பண்ணியாச்சி. நீ இப்போ போய் பயப்பட்டா எப்பிடி?”

“நீ என்ன ஈஸியா சொல்லிட்ட. ஆனா டயமண்ட எடுத்துட்டு வரப்போறது நான் தான?”

மெதுவாக பைக்குள்ளிருந்து கையை வெளியே எடுத்து “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா

“ஹேய் என்ன இது?” என்று அவன் கையிலிருந்த துப்பாக்கியை வாங்கிப் பார்த்தாள்.

“போலிஸை ஏமாத்துற திட்டத்துல இதுக்கும் ஒரு முக்கியமான பங்கு இருக்கு”

“எல்லாம் நல்லபடியா நடந்தா சரி” காமினி ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினாள்.

“காமினி நீ கவலைப் படாம போ. நாம நினைச்ச மாதிரியே எல்லாம் நடக்கும். நான் இப்போ பசங்க கூட போறேன். மேட்ச் ஜெயிச்சதைக் கொண்டாடணும்னு நினைப்பாங்க”

“சரிடா. ஈவினிங் நாலு மணி மறந்துடாத..”

“ஓக்கே ஓக்கே” துப்பாக்கியை மறுபடி பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு நண்பர்களை நோக்கி ஓடினான் சிவா.

******************************************************************************

டிங் டாங்..

வாசலில் மணி. கதவைத் திறந்த பரந்தாமனின் முன் மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தாள் காமினி. அவள் கையில் துண்டால் சுற்றப் பட்டு ஏதோ இருந்தது.

“உள்ள வா காமினி” இரு கதவுகளையும் அகலத் திறந்தார் பரந்தாமன்.

காமினி உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்தினார்.

துண்டை விலக்கினாள் காமினி.

"காமினி... வெல்டன்... எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே..." என்று பாராட்டினார் பரந்தாமன்.

“அதை ஏன் சார் கேக்கறீங்க. கொண்டு வரதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்துருச்சி”

“எப்பிடி போலீஸை ஏமாத்தின?”

காமினி ஏதோ சொல்ல வாயைத் திறக்குமுன் டோர் பெல் மீண்டும் ஒலித்தது.

பரந்தாமனே போய் கதவைத் திறந்தார். வெளியே சிவா, பாஸ்கர், கோபி நின்றிருந்தனர்.

“வாங்கப்பா. வாங்க”

உள்ளே நுழைந்த மூவரும் காமினியைப் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர்.

“என்னடா சிரிக்கிறீங்க?” காமினி முறைத்தாள்.

“பின்ன என்ன காமினி ஒரு சின்ன மேட்டருக்குப் போய் வேர்த்து விறுவிறுத்துப் போயிட்ட?”

“உங்களுக்குச் சின்ன மேட்டர்டா. எனக்கு எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா?”

“அதெல்லாம் இருக்கட்டும்பா. எப்பிடி செஞ்சிங்க இதை?” பரந்தாமன் இடைமறித்தார்.

“நான் சொல்றேன்”

“நான் சொல்றேன்” பாஸ்கரும் சிவாவும் சண்டை போட்டனர்.

“யாராவது ஒருத்தர் சொல்லுங்கப்பா”

“நானும் பாஸ்கரும் போலிஸ் பக்கத்துல நின்னுட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போடுற மாதிரி பாவலா பண்ணினோம். அப்போ போலிஸ் பக்கத்துல வந்து என்னடா சண்டை போடுறீங்கன்னு கேட்டான்” சிவா ஆரம்பித்தான்.

“அப்போ கோபி வந்து சிவாவுக்கு சப்போர்ட் செய்யற மாதிரிப் பேசவும் சண்டை பெருசாச்சி. எதுக்கு சண்டை போடுறோம்னே சொல்லாம மூணு பேரும் மாறி மாறி பேசிட்டே இருந்தோம்” பாஸ்கர் தொடர்ந்தான்.

“நிறுத்துங்கடா மூணு பேரும் சண்டைய. முதல்ல எதுக்கு சண்டை போடுறீங்கன்னு சொல்லுங்கன்னு போலீஸ் கத்தவும், சிவா பையில இருந்து துப்பாக்கியை எடுத்து நீட்டினான்” இது கோபி.

“துப்பாக்கியைப் பாத்ததும் போலீஸ் கண்ணு பல்பு போட்டா மாதிரி பளிச்சுனு ஆயிருச்சி. என் கையில இருந்து பிடுங்கப் பார்த்தான். கொஞ்ச நேரம் போக்குக் காட்டிட்டு அவன் கையில குடுத்து பாக்க வச்சோம்”

“இந்த கேப்ல காமினி ஒரு துணியால டைமண்ட மூடி இங்க கொண்டு வந்துட்டா. போலீஸ் தான் துப்பாக்கியப் பிடுங்கிட்டுப் போயிட்டான்” பாஸ்கரின் முகத்தில் உண்மையிலேயே கவலை.

“டாக்டர் சார். இந்தக் கதையைக் கேட்டுட்டு நேரம் வேஸ்ட் பண்ணாம இந்த டைமண்டைக் கொஞ்சம் பாருங்க” காமினி பரந்தாமனை நினைவுக்குக் கொண்டுவந்தாள்.

பரந்தாமன் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த டைமண்டைப் பார்த்தார். இயல்பிலிருந்து மிகவும் மாறி இருந்தது. வழக்கமான டைமண்ட் போலவே இல்லை. மெதுவாக இரண்டு விரல்களால் வருடினார். கையை சிறிது நேரம் டைமண்டின் மீதே வைத்துக் கொண்டிருந்தார்.

திரும்பி உள்ளே போனவர் கையில் ஒரு ஊசியோடு வந்தார். சிவப்பு வண்ணத்தில் ஒரு மருந்தை அதில் ஏற்றியவர் “ஏந்தான் இந்த போலீஸ் பய இப்பிடி இருக்கானோ? ஆமா அவனுக்கு ஏன் போலிஸ்னு பேரு வந்திச்சி?”

“அவன் போலீஸ் ஆகனும்னு ரொம்ப கஷ்டப்பட்டு பிராக்டிஸ் எல்லாம் செஞ்சான் சார். கடைசியில ஒரு நாய் கடிச்சி தப்பிச்சி ஓடும்போது கீழ விழுந்து கால் ஒடிஞ்சதால போலீஸ்ல சேர முடியாமப் போயிடுச்சி. அதனால பைத்தியமாயிட்டான். தெருவுல போற ஒரு நாயை விடமாட்டான். போலீஸ் மாதிரி ஒரு விசில் வச்சி அடிச்சிக்கிட்டே இருக்கிறதால போலீஸ் போலீஸ்னு கூப்புடுறோம்” சிவா வரலாறை சொல்லி முடித்தான்.

பேசிக்கொண்டிருக்கும் போதே டைமண்டின் கழுத்துக்கீழ் ஊசியைக் குத்தி அந்த மருந்தை உள்ளே ஏற்றினார். காமினி சீராக டைமண்டின் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

“நல்ல நேரத்துல கொண்டு வந்தீங்க. இன்னும் ஒரு நாள் விட்டிருந்தா செத்தே போயிருக்கும். சின்னப் பசங்களா இருந்தாலும் பொறுப்பா தெரு நாய எல்லாம் காப்பாத்துறீங்க. பெருசானப்புறம் பெரிய சமூக சேவகர்களாவீங்க” கைகளைக் கழுவிக்கொண்டே பரந்தாமன் சொன்னார்.

நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

17 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

avvvvvvvvvv.. diamond-1 was far good..:-)))

Unknown said...

//avvvvvvvvvv.. diamond-1 was far good..:-)))//

பக்கத்துல சின்னதா கோடு போட்டாத்தான் மத்த கோடு பெருசா தெரியுது.. என்ன செய்ய??

Unknown said...

அய்யய்யோ.. முக்கியமானதை மறந்துட்டேன்..

போன கதைல போட்ட ரெண்டு டிஸ்கியும் இங்கயும் பொருந்தும். அதுனால தைரியமா கமெண்டுங்கோஓஓஓ

பிரபாகர் said...

இதோ படிக்கிறேன் தினேஷ்....

பிரபாகர்...

பிரபாகர் said...

வித்தியாசமா இருக்கு தினேஷ்... இது மாதிரி பெயராய் வைத்து யோசித்தேன்.... அது வேறு மாதிரியான வடிவத்தில் வந்தது. நிஜ கிரிக்கெட் வெச்சி யோசிச்சிப் பாருங்களேன்...

பிரபாகர்...

பனித்துளி சங்கர் said...

கதையில் புதுமையான புனைவு அருமை நண்பரே . இறுதியில் எதார்த்தத்தை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

Unknown said...

eapadinga ippadi? Kadhai nalla iruku.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கனவு கூடாது :) முதல்ல வர்றது கனவு தானே?

நானும் எழுதியிருக்கேன் :)) முடிச்சிட்டேன்.. எடிட்டிங் நடக்குது..

இது வித்தியாசமா இருந்தாலும், மொதக் கத தான் எனக்குப் பிடிச்சது..

vasu balaji said...

நம்ம கிட்டயேவா:>

Anisha Yunus said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

கிர்க்கெட்டைப் பத்தி எழுதியே ஆகணும்னு நினச்செதெல்லாம் சரி, அதுக்காக இப்படியா???ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பாஆஆஆஅ....

sakthi said...

::)))

Unknown said...

@பிரபா - படிக்கப்போறேன்னு அட்டெண்டன்ஸ் போட்டுட்டுப் படிக்கிறது நீங்கதான்..

@பனித்துளி சங்கர் - நன்றி சங்கர்.

@க்ரிஷ்_டெக் - நன்றி பாஸ்

@எல் போர்ட் - கனவுன்னு நான் சொன்னேனா? நீங்களா கனவுனு யூகிக்கிறதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது..

@வானம்பாடிகள் - உங்கக்கிட்ட முடியுமா சார்?

@சக்தி - :)))

Anonymous said...

ரெண்டு கதைலயும் டைமண்ட் டைமண்டுன்னு சொல்லிட்டு, கிட்ணிய சொல்றீங்க நாய சொல்றீங்க, அடுத்த டைமண்ட் என்னாது? எலியா?

ம.தி.சுதா said...

அடடா இதுவும் அதிரடித்திருப்பங்களாகத் தான் இருக்கிறது...

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள்.
பிளேஷ்பேக், கனவு ரெண்டும் பயன்படுத்தினாப்ல இருக்குதே? ரூல்ஸ் கூடாதுன்னலை?

பரிசல்காரன் said...

அண்ணே -

இதை எனக்கு மெயில்ல அனுப்ச்சிருக்கீங்களா?

கொஞ்சம் செக் பண்ணுங்க..

நான் கூகுளி இங்க வந்தேன். இன்னைக்கு இணைப்பும் கொடுத்துட்டேன்...

என் மெய்ல்ல வந்த மாதிரி தெரியல..

எதுக்கும் பாருங்களேன்.

(ஆனா டோண்டு வர்ரி.. நடுவர்களுக்குப் போய்டும்..!)

Abhi said...

நலலா எழுதியிருக்கீங்க! வெற்றி பெற வாழ்த்துக்கள்! நானும்எழுதியிருக்கேன் ... வைரம் உன் தேகம் ங்கற தலைப்பில்... http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html