Monday, September 13, 2010

திருநாவுக்கரசர்

அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் சைவக் குரவர் நால்வரில் ஒருவர். இவர் இயற்றிய தேவாரம், பன்னிரு திருமுறைகளில் நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளாக வழங்கப் படுகின்றன. அவர் எழுதிய ஒரு சிறப்பு மிக்க தேவாரப் பாடலை இங்கே காண்போம்.

“குனித்த புருவமும்”

வில் போல் வளைந்த புருவத்தையும்

“கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்”

கொவ்வைப் பழம் போல சிவந்த இதழ்களில் குவிகின்ற புன் சிரிப்பையும்,

“பனித்த சடையும்”

கங்கையைச் சுமந்த சடையையும்,

“பவழம் போல் மேனியில் பால் வெண்ணீறும்”

பவழம்போலச் சிவந்த சிவபெருமானின் மேனியில் பூசப்பட்டிருந்த பால் போன்ற வெண்மையான திருநீறையும்

“இனித்தம் உடன் எடுத்த பொற்பாதமும்” 

இனிமையுடன் எடுத்து வைத்த பொற்பாதமும்

“காணப்பெற்றால்”

ஒரு காலைத் தூக்கி நிற்கும் நடராஜராக உன்னைக் காணப் பெற்றால்

“மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே”

இந்தப் பெரிய உலகத்தில் மனிதப் பிறவியை மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டுவேனே.. அடியவர்கள் முக்தி - மறு பிறப்பின்மை - யை வேண்டுவது வழமை. ஆனால் இந்த அப்பரடிகளார், மீண்டும் மீண்டும் மனிதப் பிறவி வேண்டும் என்று வேண்டுவது அவர் நடராசரின் மீது வைத்துள்ள பக்தியைக் காட்டுகிறது.

இப்படிச் சொல்லும் அடியவர்கள், அடுத்த வரியில்...

“அடி ராக்கம்மா கையத் தட்டு.. புது ராகத்தில் மெட்டுக் கட்டு”

என்று நடராசரின் களிநடனத்துக்கு உமையாளையே கைத்தட்டி மெட்டுப் போடச் சொல்லும் வார்த்தை நடனத்தை என்னவென்று சொல்வது??

15 comments:

vasu balaji said...

அது பக்தி! இது யுக்தி!:))

Anonymous said...

நான் கூட வேற யாரோட பதிவுக்கோ வந்துட்டன்னு நினைச்சேன். கடைசில ராக்கம்மாவுக்கு கையைத்தட்டா.

Prathap Kumar S. said...

ஆகா.... நானும் ரொம்ப சீரியாசால்ல படிச்சு தொலைச்சுட்டேன்...:))

Anonymous said...

பல்பு வாங்கிட்டேனே :)))

க.பாலாசி said...

லேபிள்ல சொன்னதுதான்...

க ரா said...

ஹா ஹா.,.

மார்கண்டேயன் said...

உங்கப் பதிவப் பாத்தவொடன திருவாதவூர் போனது ஞாபகம் வந்துர்ச்சு . . .

பிறப்பே வேணாம்ன்னு சொல்ற எடத்துல . . . இன்னொரு வாய்ப்பு கேக்குறதுக்கு பெரிய தைரியம் வேணும் . . .

பகிர்ந்தமைக்கு நன்றி . . .

//மதுரை - எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துப்பருகினாலும் திகட்டாதது..

கெட்டவார்த்தை படிக்க வேண்டும்.//

நரசிம் பதிவுல நீங்க கேட்ட மதுரைய காட்டிர்க்கேன், ஆனா நீங்க பாக்காத மதுர . . . நம்ம கடையில வந்து பாருங்க . . .

நீங்க கெட்ட ரெண்டும் இருக்கு

ஹேமா said...

முகிலன்...ஆரோக்யமாய்ச் சிந்திக்கும் உங்களால் இப்படியும் சிந்திக்க முடிகிறதா !

Unknown said...

@ஹேமா

இது ஆரோக்யமா இல்லைன்னு சொல்றீங்களா? 

நசரேயன் said...

//ஆரோக்யமாய்ச் சிந்திக்கும் உங்களால்
இப்படியும் சிந்திக்க முடிகிறதா //

அது என்ன ஹேமா ?

கலகலப்ரியா said...

ம்ம்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஒன்னும் புரியல.. ஏதோ உங்க புண்ணியத்தால ராக்கம்மா பாட்டுல வந்த இந்த வரிகளுக்கு அர்த்தமும், யாரு எழுதினாங்கன்னும் தெரிஞ்சுகிட்டேன்..

அது சரி(18185106603874041862) said...

//
உமையாளையே கைத்தட்டி மெட்டுப் போடச் சொல்லும் வார்த்தை நடனத்தை என்னவென்று சொல்வது
//

இல்லாட்டியும்,சிவனோட நடனத்துக்கு முதல் ரசிகையும், பார்வையாளரும் உமையாள் தானே? இவங்க என்ன புதுசா சொல்றதுன்னேன்??

Unknown said...

Why blood?
Same blood....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்படி பாஸ்..பழைசையும் புதுசையும் இணைச்சீங்க.. ஹி..ஹி..