Monday, February 7, 2011

என் பேரை மாத்த நீ யாரு மேன்?

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வாழும் என்னைப் போன்றோர் பலருக்கு இருக்கும் ஒரு சொல்லவொணாத் துயரம் பெயரை உச்சரிக்கச் சிரமப்படும் வெளிநாட்டினர். ரவியை ராவி என்றும், ஹரியை ஹேரி என்றும் கூசாமல் உச்சரிப்பார்கள்.

இதில் நம் ஆட்களையும் சொல்லவேண்டும். தன் அப்பா அம்மா வைத்த ஒரு பெயரைக் கொலை செய்கிறார்களே என்ற எண்ணம் இல்லாமல் திருஞானசம்மந்தம் என்ற அருமையான பெயரை திரு என்று சுருக்கி அழைக்க வைக்கக் கூட முயற்சிக்காமல் க்ரிஸ் என்று அழைத்தாலும் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது?

என் நண்பர் ஒருவர் அவர் மகனின் விக்னேஷ் என்ற பெயரை vignesh என்று ஸ்பெல்லாமல் viknesh என்று ஸ்பெல்லியிருந்தார். ந்யூமராலஜியா என்று கேட்டதற்கு, இல்லை, இங்கெ பெயரைச் சுருக்கி அழைப்பது இவர்களின் வழக்கம். vig என்று அழைத்தால் நன்றாக இருக்காது, vik என்று அழைத்தால் பரவாயில்லை அல்லவா, அதான் என்றார். இன்னொரு குடும்பம் ஸ்ரீஹரி என்ற பெயரை பையனே ஸ்ரீஹாரி என்று சொல்லவும், ரிதன்யா என்ற பெயரைப் பெண்ணே ரிடான்யா என்று சொல்லவும் பழக்கிக் கொடுத்திருக்கின்றனர்.

நானெல்லாம் என் பெயரை சொல்லத் திணரும் போது பத்து நிமிடம் செலவழித்தாவது தினேஷ் என்று சொல்லவைத்துவிடுவேன். ஓரிருவர் உன்னை டின் என்று அழைக்கலாமா என்று கேட்கும்போதும் இல்லை தினேஷ் என்றே அழையுங்கள் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர். அவர் பெயர் விஜயஹரன். புதிதாகச் சேர்ந்த அவரது மேனேஜர் ஒரு வெள்ளைக்காரன். அவன் பெயர் ஜான். அவன் இவரது பெயரை அழைக்க சிரமப் பட்டுக் கொண்டு “ஐ ஏம் கோயிங் டு ரீனேம் யு டு ஜோ டு மை கன்வீனியன்ஸ்” என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறான். இவரும் ஒன்றும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.

அடுத்த நாள் காலை அவன் இவரிடம் வந்து “குட் மார்னிங் ஜோ” என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கவும், இவர் பதிலுக்கு “குட் மார்னிங் சுப்ரமணியம்” என்று சொல்லியிருக்கிறார். அவன் பேஸ்தடித்து “நோ நோ மை நேம் இஸ் ஜான்” என்று சொல்ல, அதற்கு இவர் “யா ஐ நோ. பட் ஐ ரீனேம்ட் இட் டு மை கன்வீனியன்ஸ்” என்று சிரிக்காமல் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு, அவன் கஷ்டப்பட்டு அவரது பெயரை ப்ராக்டீஸ் செய்து விஜயஹரன் என்றே அழைத்திருக்கிறான்.

டிஸ்கி 1: வெள்ளைக்காரனை அவன் என்றும் நம்மாளை இவர் என்றும் அழைத்தது குழப்பம் வராமலிருக்கவேயன்றி ரேஸிசம் எதுவும் இல்லை என்று அறிக.

டிஸ்கி 2: இது கால் செண்டர் போன்ற வேலை நிமித்தம் பெயர் மாற்றியே ஆகவேண்டியவர்களுக்கானது இல்லை என்றும் அறிக. 

15 comments:

MANO நாஞ்சில் மனோ said...

சரி சரி விடுங்க பாஸ்....

Chitra said...

இதில கொடுமை என்னன்னா... Americanize ஆக்கப்பட்ட தங்கள் பெயர்களையே, மற்ற இந்தியர்களிடமும் சொல்லி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, சந்தோஷப்பட்டு கொள்கிறார்களே!
whenever you have time, read:
http://konjamvettipechu.blogspot.com/2010/11/blog-post_25.html

மதுரை சரவணன் said...

பெயரில் இவ்வளவு கொடுமையா..பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

குடுகுடுப்பை said...

ஹாய் டின், ஹவ்யூ

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹை டீன்.. மாற்று கருத்து :)

அஞ்சலை (என் பேரு இல்ல) என்பதை எத்தனை வாட்டி "How to pronounce your name" என்று கேட்டுத் தெரிந்து கொண்டாலும், இறுதியாக ஒரே மாதிரி ஏஞ்சலா என்று தான் அவங்களால சொல்ல முடிகிறது..

அதனால பாவம் அவங்க பொழச்சுப் போகட்டும்ன்னு என்பெயரை அவங்களுக்கு ஏற்ற மாதிரியான உச்சரிப்புடன் நானே சொல்லிடறேன்.

அதை விடக் கொடுமை, இங்க பொறந்து வளரும் இரண்டாம் தலைமுறை (தமிழ் வம்சாவளி), பாட்டன் பெயரை பின் பெயராகக் கொண்டு அதை தவறாக உச்சரிப்பது.. ஒருத்தர், தனது பின் பெயரான சின்னப்பன் என்ற பாட்டன் பெயரை, சீனப்பேன் என்றார் என்னிடமே :)))

Anonymous said...

பெயரில் என்ன இருக்கிறது என்று சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் நமது முதல் சொத்து அது தான். நல்ல பகிர்வு நண்பரே..

கன்வீனியன்ஸ்க்கு பெயர் மாற்றியதற்கு அந்த நபர் பதிலடி குடுத்தது அருமை. பெருமைப்பட வேண்டிய விசயம் தான்.

Prathap Kumar S. said...

இங்க எம்பேரு படற பாட்டை நான் எங்கப்போய் சொல்ல...
உங்க இஷ்டம்டானு விட்டேன்...:))

நசரேயன் said...

//அஞ்சலை (என் பேரு இல்ல) என்பதை எத்தனை வாட்டி "How to pronounce your name" என்று கேட்டுத் தெரிந்து கொண்டாலும், இறுதியாக ஒரே மாதிரி ஏஞ்சலா என்று தான் அவங்களால சொல்ல முடிகிறது..//

துரைமார்கள் சொல் போச்சு கேட்கமாட்டாங்கன்னு இப்ப தெரியுதா ?

நசரேயன் said...

//வெள்ளைக்காரனை அவன் என்றும் நம்மாளை இவர் என்றும் அழைத்தது குழப்பம் வராமலிருக்கவேயன்றி ரேஸிசம் எதுவும் இல்லை //

நம்புற மாதிரி இல்ல வக்கீல் நோட்டீஸ் வருது .. மறக்காம வாங்கணும்

நசரேயன் said...

//ஹாய் டின், ஹவ்யூ

//

யோவ் இடுகைய படிச்சியரா ?

நசரேயன் said...

//இது கால் செண்டர் போன்ற வேலை நிமித்தம் பெயர் மாற்றியே ஆகவேண்டியவர்களுக்கானது இல்லை என்றும் அறிக//அறியாமப் போனா என்ன செய்ய ?

ILA (a) இளா said...

//குட் மார்னிங் சுப்ரமணியம்” என்று சொல்லியிருக்கிறார்//
அடிச்சான்யா சிக்ஸரு..

அமுதா கிருஷ்ணா said...

பெயரில் என்ன இருக்கிறது. செல்லமா கூப்பிடட்டுமே என்று இல்லாமல் விஜயஹரன் செய்தது நெத்தியடி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னாச்சு சார் ஆளே காணோம்?..

தேர்தல் பிரச்சாரமா?..
ஹி..ஹி

அன்புடன் நான் said...

அடுத்த நாள் காலை அவன் இவரிடம் வந்து “குட் மார்னிங் ஜோ” என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கவும், இவர் பதிலுக்கு “குட் மார்னிங் சுப்ரமணியம்” என்று சொல்லியிருக்கிறார். அவன் பேஸ்தடித்து “நோ நோ மை நேம் இஸ் ஜான்” என்று சொல்ல, அதற்கு இவர் “யா ஐ நோ. பட் ஐ ரீனேம்ட் இட் டு மை கன்வீனியன்ஸ்” என்று சிரிக்காமல் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு, அவன் கஷ்டப்பட்டு அவரது பெயரை ப்ராக்டீஸ் செய்து விஜயஹரன் என்றே அழைத்திருக்கிறான்.//

திரு விஜயஹரனுக்கு கம்பீரமான வணக்கம்...
பகிர்வுக்கு என் நன்றிகள்.