Monday, December 10, 2012

சில்வியா - இறுதி பாகம்

பாகம்-1 பாகம்-2 பாகம்-3
 Every detail is importantஅருணை வீட்டு வாசலில் இறக்கிவிட்டுப் போனான். சத்தம் கொடுக்காமல் கிளம்பிப் போன காரையே குழப்பத்தோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அருண்.


************************


ஃப்ரிட்ஜில் இருந்த ஹெய்னெக்கன் ஒன்றைத் திறந்து வாய்க்குள் கொஞ்சம் சரித்துக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தான். எதிரே முழங்கால் வரை நீண்ட கூந்தலுடன் குளித்துவிட்டு அன்றலர்ந்த மலர் போல நின்றிருந்த மலையாள அழகியை அழகாக வரைந்திருந்த ரவி வர்மாவின் ஓவியம் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. ரவி வர்மாவே வரைந்த ஓவியமாக இருக்காது. அதன் பிரதியாக இருக்கும். பிரதியே இவ்வளவு அற்புதமாக இருக்கிறதே ஒரிஜினல் எவ்வளவு அழகாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே பியரைக் காலி செய்து கொண்டிருந்தான்.


சட்டென்று ஒரு ஸ்பார்க் தோன்றியது. சௌந்தருக்கு ஃபோன் போட்டான்.


“சௌந்தர், சில்வியாவோட பேரண்ட்ஸ் எங்க இருக்காங்க?”


“எதுக்கு மாமா கேக்குற?”


“ஒரு சின்ன தியரி. அவங்களை ஷானோட கேலரிக்குக் கூட்டிட்டுப் போய் அந்த படத்தை எங்கயாச்சும் பார்த்திருக்காங்களான்னு கேக்கணும்”


“என்ன மாமா உளர்ற? அவங்க எங்க பார்த்திருக்கப் போறாங்க?”


“இல்லடா என்னோட தியரி ஒர்க் அவுட் ஆவுதான்னு பார்க்கத்தான். ப்ளீஸ் அவங்களைக் கூட்டிட்டு வாயேன்”


“சரி. நான் அவங்களைக் கால் பண்ணி வரச் சொல்றேன். நீயும் கூட வர்றியா?”


“ஆமா நானும் வர்றேன்”


இந்தத் தியரி ஒர்க்கவுட் ஆகுமா என்று தெரியவில்லை. ஆனாலும் எதுவுமே கிடைக்காமல் முட்டி நிற்பதற்கு இது முயற்சியாகப் பட்டது அருணுக்கு. ஒரு வேளை தான் நினைப்பது தவறோ? ஜான் தற்கொலை தான் செய்திருப்பானோ? சோஃபாவிலேயே படுத்துத் தூங்கியிருந்தான் அருண்.


**************************


அடுத்த நாள், சில்வியாவின் பெற்றோரைச் சந்திக்க காரை தானே ஓட்டிக் கொண்டு போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்தான்.


“வா மாமா. இப்பத்தான் ஜானோட அடாப்ஸி ரிப்போர்ட் வந்திச்சி. நீ நினைச்சது சரிதான். அவன் உடம்புல பாய்ஸன் ரெஸிட்யூ இருக்கு. பாய்ஸன் குடுத்துத்தான் தண்ணியில தள்ளி விட்டிருக்காங்க. நீ ஏதோ தியரின்னு இவங்களைக் கூட்டிட்டு வந்திருக்க. அதாவது ஒர்க் அவுட் ஆவுதான்னு பார்ப்போம்”


நான்கு பேரும் போலிஸ் வாகனத்திலேயே ஷானின் காலரிக்கு வந்தோம். கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களும் காலியாகி டா வின்ஸியின் லாஸ்ட் பெயிண்டிங்கும் பேக் செய்யப்பட்டு இருந்தது.


“ஷான், மே வீ சீ திஸ் பெயிண்டிங்?”


“சாரி டிடெக்டிக். ஏற்கனவே உங்கக்கிட்ட சொன்ன மாதிரி இந்த பெயிண்டிங் வித்துட்டேன்”


“ஜென்யூனிட்டி செக் ரிசல்ட் வந்துடுச்சா?”


“இன்னும் இல்லை. ஆனா வித்ததை எதுக்கு டிஸ்ப்ளே வைக்கணும்?”


“சரிதான். பட் நாங்க அதைப் பார்க்கணும். திறங்க”


ஷான் மெதுவாக படத்துக்கு வலிக்குமோ என்பது போல பாக்கேஜைத் திறந்தான். படத்தை எடுத்துக் காட்டினான்.


படத்தைப் பார்த்ததுமே சில்வியாவின் அம்மாவின் கண்களில் ஒளி. “இது எங்கம்மா வைச்சிருந்த படம். இறக்க முன்னாடி சில்வியாவுக்குக் குடுத்தாங்க. சில்வியாவும் பாட்டி நினைவுல இதை வச்சிருந்தா”


அருண் முகத்திலும் பிரகாசம். தன் தியரி ஒர்க் அவுட் ஆகியதை எண்ணி மகிழ்ந்தான்.


சௌந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. அருணின் முகத்தை ‘ஏதாவது சொல்லு மாமா’ என்பது போல பார்த்தான்


“சௌந்தர். என்ன பாக்குற. கேஸ் சால்வ்ட்”


“புரியல மாமா. விவரமா சொல்லு”


“சில்வியா வச்சிருந்த படம் விலையுயர்ந்ததுன்னு அவங்க பாட்டிக்கும் தெரியலை, அவளுக்கும் தெரியலை. ஆனா ஜான் ப்ரோடியோட எம்ப்ளாயரான ஷானுக்குப் பார்த்ததும் புரிஞ்சிட்டது. சில்வியாகிட்ட கேட்டு வாங்கி வித்துக் குடுத்தா ஷானுக்கு வெறும் கமிஷன் தான் கிடைச்சிருக்கும். அதையே திருடி வித்தா? மொத்தப் பணத்தையும் ரெண்டு பாகமா பிரிச்சிக்கலாம்னு திட்டம் போட்டிருக்காங்க இவனும் ஜானும்”


“திஸ் இஸ் ரிட்டிகுலஸ். நான் எவிடென்சியல் அக்யூசேஷன்ஸ்” பேச விடாமல் குரலை உயர்த்தினான் ஷான்.


“ஒன் மினிட் மிஸ்டர். லெட் ஹிம் ஃபினிஷ்” என்று அவனை அடக்கினான் சௌந்தர்.


“திட்டப்படி சில்வியாவைக் கொன்னு தற்கொலை மாதிரி செட்டப் செஞ்சிட்டு படத்தை எடுத்துட்டு வந்துட்டாங்க. வந்த பிறகு எதுக்காக ஜானுக்கு ஒரு பங்கு குடுக்கணும்னு யோசிச்சி அவனையும் தீர்த்துட்டான் இந்த ஷான். இப்ப 20 மில்லியனும் இவன் பாக்கெட்ல. பணம் கைக்கு வந்ததும் பராகுவேக்கு ஓடிப் போகப் போறான். ஏன் பராகுவேன்னு தெரியுமா?”


“எக்ஸ்ட்ராடிக்‌ஷன் செய்ய முடியாத நாடு பராகுவே”


“கரெக்ட். அதான் அந்த நாட்டை சூஸ் பண்ணியிருக்கான். ஒரு வேளை கொலைக் கேஸ் பின்னாடி சால்வ் ஆகி இவன் மாட்டினா கூட அங்க இருந்து எக்ஸ்ட்ராடிக்ட் செய்ய முடியாதுங்கிறதால இவன் சேஃப். அரெஸ்ட் பண்ணு சௌந்தர் இவன”


“வெயிட் வெயிட். இந்தப் படம் இவங்களோடதுதாங்கிறதுக்கு என்ன ப்ரூஃப்? நான் என்னோட சோர்ஸ் ஒருத்தர்கிட்ட இருந்து வாங்கினேங்கிறதுக்கு நான் ப்ரூஃப் வச்சிருக்கேன்” நெஞ்சை நிமிர்த்தி தைரியமாகச் சொன்னான் ஷான்.


“ம்ம்.. இதுவே எங்க ஊரா இருந்தா அள்ளிட்டுப் போய் நாலு மிதி மிதிச்சிருப்போம். சாணியோட உண்மையும் வெளிய வந்திருக்கும். அமெரிக்காவாப் போச்சி. வாரண்ட் இல்லாம கைது கூட செய்ய முடியாது” தமிழில் சௌந்தரிடம் சொன்னான்.


ஷான் ஒன்றும் புரியாது, “வாட்” என்று குரைத்தான்.


சௌந்தர், “ஹி இஸ் ரைட். வீ டோண்ட் ஹேவ் அ ப்ரூஃப்” என்று கையைப் பிசைந்தான்.


சில்வியாவின் பெற்றோரைப் பார்த்து, “இந்த பெயிண்டிங் இருக்கிற மாதிரி எதுவும் ஃபோட்டோ இருக்கா உங்க வீட்டுல?”


“தெரியலையே வீட்டுல போய் தான் பார்க்கணும்”


“சரி நீங்க வீட்டுக்குப் போய் பார்த்துட்டு சொல்லுங்க. இவனை சும்மா விடக்கூடாது” சௌந்தர் கோபத்தை காரில் காட்டினான்.


*******************************************


காலை எழுந்து கிச்சனில் இருந்த காஃபி மேக்கரில் ஒரு காஃபி ஊற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தான் அருண். சௌமியா மேக்கை வைத்துக்கொண்டு என்னவோ நோண்டிக்கொண்டிருந்தவள் இவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்


“என்ன டிடெக்டிவ் சார். கேஸ் சால்வ் பண்ணிட்டீங்களா?”


“ம்ப்ச்” உதட்டைப் பிதுக்கிவிட்டு அவளுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்து காலை டீப்பாயின் மீது போட்டான்.


“அருண், இந்த ஃபோட்டோ நினைவிருக்கா?” மேக்கை அவனை நோக்கித் திருப்பினாள். சிறுவயதில் அவள் இந்தியா வந்திருந்த போது எடுத்த படங்கள். எம்.ஜி.எம் வந்த புதிது. அங்கே இருந்த ஒரு ராட்டினத்தில் ஏறி தலை சுற்றிக் கீழே இறங்கி வாந்தியெடுத்த கையோடு கொடுத்த போஸ். கிறக்கமும், சோர்வும் கண்களில் தெரிந்தது. “இந்த ஃபோட்டோ இன்னமுமா இருக்கு?”


“நேத்து நைட் தான் பழைய ஆல்பத்துல இருந்து எடுத்து ஸ்கேன் செஞ்சிப் போட்டேன். ஃபேஸ்புக்ல ஷேர் செய்யலாம்னு”


“ஹேய் அதெல்லாம் வேண்டாம். ஆமா நாம நயகரா போன ஃபோட்டோஸ் எல்லாம் சிஸ்டத்துல ஏத்திட்டியா?”


“ஓ. எப்பவோ”


“பாக்கலாமா?”


“ம்ம்.” ஃபோட்டோஸ் இருக்கும் ஃபோல்டரை ஓப்பன் செய்து மேக்கை என் மடியில் வைத்துவிட்டு எழுந்தாள். “பாத்துட்டு இரு, நான் குளிச்சிட்டு வந்துர்றேன்”


வரிசையாக எல்லா ஃபோட்டோக்களையும் பார்த்துவிட்டு விண்டோவை மினிமைஸ் செய்தான். பேக்ரவுண்டில் இருந்த படத்தில் கன்னத்தோடு ஒட்டிக்கொண்டு இரண்டு பக்கமும் இரண்டு நாய்க்குட்டிகளை வைத்துக் கொண்டு அவைகளைப் போலவே சிரித்துக் கொண்டிருந்தாள் சௌமியா. ஃபோட்டோஷாப் வேலையெல்லாம் செய்யப்பட்டு நன்றாக இருந்தது படம். சிறிது நேரம் அதைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு மேக்கை மூடினான். டேபிளின் மீது வைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தான். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து இரண்டாவது பஃப் இழுக்கும்போது, ப்ளாஷ் அடித்தது. சிகரெட்டை அணைத்துத் தூக்கிப் போட்டுவிட்டு, உள்ளே வந்து ஃபோனை எடுத்து சௌந்தரை அழைத்தான்.


“சௌந்தர்..”


“சொல்லு மாமா. இப்பத்தான் சில்வியா அப்பா பேசினாரு. அவங்ககிட்ட ஆதாரம் எதுவுமே இல்லையாம்”


“அவங்க ஆதாரம் தேவையே இல்லை சௌந்தர். உங்க ஆஃபிஸ்லயே ஆதாரம் இருக்கு. கேஸ் சால்வ்ட். அந்த ஷானை அரெஸ்ட் பண்ண வாரண்ட் ரெடி பண்ணு”


“என்ன மாமா சொல்ற?”


நீங்கள் சொல்லுங்களேன், அருண் எப்படி கேஸை சால்வ் செய்தான் என்று?


“ஆமா சௌந்தர். சில்வியா வீட்டுல இருந்த பி.சி இப்ப உங்க ஆஃபிஸ்ல தானே இருக்கு?”


“ஆமா எவிடென்ஸ் ரூம்ல இருக்கு. அதுல என்ன இருக்கு?”


“நான் அந்த பெயிண்டிங்கை எங்கயோ பார்த்தேன்னு சொன்னேன்ல. அது அந்த கம்ப்யூட்டர் டெஸ்க்டாப் பேக்ரவுண்ட்லதான். கொலை செஞ்ச ஜானோ இல்ல ஷானோ அதுல இருந்த மத்த ஃபோட்டோஸ் எல்லாம் கண்டிப்பா அழிச்சிருப்பான். ஆனா சில்வியா டெஸ்க் டாப்ல போட்டு வச்சிருக்கிற ஃபோட்டோவை விட்டிருப்பான். நீ செக் பண்ணிட்டு சொல்லு”


அன்று மாலை சௌந்தர் வந்தான்.


“என்ன சௌந்தர் என்னாச்சுன்னு அப்டேட் பண்ணவே இல்லையே?”


“நீ சொன்ன மாதிரி டெஸ்க்டாப்ல தான் இருந்திச்சி. டிஏ கிட்ட காட்டி வாரண்ட் வாங்கி ஷானை உள்ள தூக்கிப் போட்டாச்சி. இன்னைக்கு ராத்திரி பராகுவேக்கு ஃப்ளைட் ஏறியிருப்பான் படுபாவி. நல்ல வேளையா அரெஸ்ட் பண்ணிட்டோம்”


”சூப்பர்”


“அப்புறம் எங்க சீஃப் உன்னைப் பார்க்கணும்னு சொன்னார்”


“எதுக்கு?”


“பர்சனலா தேங்க் பண்ணனும்னார். ”


(முற்றும்)4 comments:

Terror said...

//நீங்கள் சொல்லுங்களேன், அருண் எப்படி கேஸை சால்வ் செய்தான் என்று? //

செத்துபோன பெண்ணோட டேபிள் மேல ஒரு போட்டோ பிரேம் இருந்துச்சு சொல்லி இருக்கிங்க. அதில் இருந்த புகைபடம் அவங்க வீட்டில் எடுத்ததா இருக்கலாம். அதில் அந்த விலை உயர்ந்த படமும் பின்னனியில் பதிவாகி இருக்கலாம்.

அல்லது. அந்த பெண் இடது கை பழக்கமுடையவள் என்று காட்ட எம்.எஸ் வேர்டை மினிமைஸ் செய்த பொழுது டெஸ்க்டாப்பில் அந்த புகைபடத்துடன் கூடிய படம் வால் பேப்பராக இருந்து இருக்கலாம். போலீஸ் விசாரனை சம்பந்தமாக அந்த பெண் வீட்டில் பல கோனத்தில் எடுக்கபட்ட புகை படத்தில் இவை பதிவாகி இருக்கலாம்….. (என்ன ஒரு லாவகமான சிந்தனை) #துப்பாதிங்க பாஸ்… )

(Web page error. so repeating the comment. if duplication pls. ignore)

deva said...

I think, Arun might have remembered seeing the da vinci's lost painting on Silvia's desktop wallpaper background.

வெண்பூ said...

சில்வியா வீட்டில் இருந்த‌ ஃபோட்டோ ஃப்ரேம் ஃபோட்டோவிலோ அல்ல‌து ஜான் உட‌ன் அவ‌ள் இருக்கும் ஃபோட்டோவிலோ பேக்க்ர‌வுண்டில் அந்த‌ ஆர்ட் இருந்திருக்கும்

முகிலன் said...

terror, deva - your guesses are right.
venpoo - you are almost right.