Thursday, February 11, 2010

கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள் - 3

ஸ்விங்க் பவுலிங்கையும், பவுன்சரையும் பார்த்தோம். இப்ப யார்க்கர் பாக்கலாம். 


முதல்ல யார்க்கர் அப்பிடிங்கிறது பேட்ஸ்மேனோட காலுக்கிட்ட பந்தை பிட்ச் செய்யறது. பேட்ஸ்மேன் சுதாரிச்சி பேட்டைக் கீழ கொண்டு வர்றதுக்குள்ள பால் ஸ்டம்பைத் தட்டணும். உயரமான பேட்ஸ்மேனோ இல்லை பேட்டைக் கீழ வைக்காம உயர்த்தி பிடிச்சிட்டு இருக்கிற பேட்ஸ்மேனோ இதுக்கு ஈஸியான இலக்கு. வழக்கமா பவுலர்ஸ் சரியா பேட்டிங் செய்ய மாட்டாங்க. இவங்கள டெயில் அப்பிடின்னு சொல்வாங்க. (சில நேரம் வால் ரொம்ப நேரம் ஆடுறதும் உண்டு). இவங்க எல்லாம் யாக்கருக்கு சுலபமான இலக்கு.


யார்க்கர் போடுறதுல ரொம்ப முக்கியம் பால் பிட்ச் ஆகிற இடம். கொஞ்சம் தப்பினாலும் ஃபுல்டாஸ் ஆகிடும். அதே மாதிரி பந்தை வேகமாவும் வீசணும். பேட்ஸ்மேன் சுதாரிக்கிற அளவுக்கு டைம் குடுக்கக் கூடாது. இந்த ரெண்டும் சரியா இருந்துட்டா விக்கெட் உறுதி - போல்டோ எல்.பி.டபிள்யூவோ.


கீழ இருக்கிற வீடியோல டேல் ஸ்டெயின் பிராவோவ அவுட்டாக்குறார் பாருங்க.

இந்த யார்க்கரையும் ரிவர்ஸ் ஸ்விங்கையும் கலந்து போடுறதுல அக்ரம், வக்கார் யூனிஸ் எல்லாம் பழம் தின்னு கொட்டை போட்டவங்க.


ஒரு பவுலரோட திறமை பந்து வீசுறதுல மட்டும் இல்லை. தன்னோட பந்து வீச்சு ஸ்டைலுக்கு ஏற்ப ஃபீல்ட் செட் செய்யறதும் தான். அவுட் ஸ்விங்கர் போடுற பவுலர் 2 அல்லது 3 ஸ்லிப் ஃபீல்டராவது வச்சிட்டு பவுல் பண்ணனும். இல்லைன்னா எட்ஜ் வாங்கினாக்கூட கேட்ச் பிடிக்கிறதுக்கு ஆள் இருக்க மாட்டாங்க. அதே மாதிரி கேப்டன் செட் பண்ற ஃபீல்டுக்கு பவுலிங் போடுறதும் ஒரு திறமை தான். எல்லா ஃபீல்டரையும் ஆஃப் சைட்ல நிறுத்திட்டு ஸ்ட்ரெயிட்டாவோ லெக் சைட்லயோ - நம்ம மனோஜ் பிரபாகர் மாதிரி - போட்டா போங்கு தான். 


சில புத்திசாலி பவுலர், பேட்ஸ்மேனை ஏமாத்துறதுக்கு வேற ஸ்டைல் பவுலிங்குக்கு ஃபீல்ட் செட் பண்ணிட்டு வேற மாதிரி போடுவாங்க. ரெண்டு உதாரணம் பாக்கலாம்.


1. பவுன்சர் போடுறதுக்கு சில்லி பாயிண்ட்லயோ இல்ல சில்லி மிட்-ஆன்லயோ ஒரு ஃபீல்டரைப் போடுவாங்க. எதுக்குன்னா டாப் எட்ஜ் வாங்குற பாலைக் கேட்ச் பண்றதுக்கு. அப்பிடி ஃபீல்ட் செட் பண்ணிட்டு, யார்க்கர் போடுவாங்க - டேல் ஸ்டெயின் மாதிரி பவுலர்கள். பவுன்சரை எதிர்பாத்து இருப்பாரு பேட்ஸ்மேன். ஆனா யார்க்கர் லெங்க்த்ல வந்தா? 


2. ஸ்பின் பவுலர் பேட்ஸ்மேனுக்கு ரெண்டு பக்கத்துலயும் ரெண்டு பேரை நிக்க சொல்லுவாரு - ஃபார்வர்ட் ஷார்ட் லெக் & பேக்வர்ட் ஷார்ட் லெக். பால் டர்ன் ஆகி பேட்ஸ்மேனோட பேட்ல எட்ஜ் வாங்கி கேட்ச் ஆகுறத பிடிக்கிறதுக்காக. ஆனா பவுலர் டெக்னிக்கலா டர்ன் பண்ணாம போடுவார். டர்ன் எதிர்பாத்த பேட்ஸ் மேன் மிஸ் பண்ணிடுவாரு. 


இப்போ ஸ்பின் பவுலிங் பத்தி பாப்போம். ஸ்பின் பவுலிங்க்ல நாலு டைப் இருக்கு


1. ஆஃப் ஸ்பின் - விரலால பந்தை சுழட்டி விடுறது - உ.தா. முரளிதரன்
2. லெக் ஸ்பின் - மணிக்கட்டால பந்தை சுழட்டி விடுறது - உ.தா ஷேன் வார்ன்
3. லெஃப்ட் ஆர்ம் ஆர்த்தோடாக்ஸ் - இடது கை விரல் சுழட்டல் - உ.தா டேனியல் வெட்டோரி
4. லெஃப்ட் ஆர்ம் அன் ஆர்த்தோடாக்ஸ் - இடது கை மணிக்கட்டு சுழட்டல் - உ.தா. ப்ராட் ஹாக்.ஆஃப் ஸ்பின்
லெக் ஸ்பின்

ஆஃப் ஸ்பின் வெளயாடுறதைக் காட்டிலும் லெக் ஸ்பின் ஆடுறதுதான் கஷ்டம். அதே நேரம் லெக் ஸ்பின்னர் சரியா போடலைன்னா ரன் நிறைய குடுக்க வேண்டி இருக்கும்.

ஷேன் வார்னோயோட லெக் ஸ்பின் பவுலிங்கைப் பாருங்க.


ஆஃப் ஸ்பின்னர்ஸ்ல முரளியை அடிச்சிக்க இன்னொரு ஆள் பிறந்து தான் வரணும். ஷேன் வார்ன் பாலோட மிரர் இமேஜ் இங்க பாருங்க.
ஸ்பின் பவுலிங் போடுறதுக்கு பால் கொஞ்சம் பழசா இருக்கணும். ஏன்னா பழைய, சொரசொரப்பான பால் தான் தரையில படும்போது நல்லா தரையப் பிடிச்சி திரும்பும். அதோட பிட்ச் பழசாக ஆக விரிசல் விட ஆரம்பிச்சிடும். அந்த விரிசலும் பால் டர்ன் ஆகுறதுக்கு உதவி செய்யும்.

வழக்கமா ஆசிய நாடுகள்ல இருந்துதான் நிறைய ஸ்பின் பவுலர் வருவாங்க. அதுக்கு முக்கியமான காரணம் பிட்ச். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மாதிரி நாட்டுல எல்லாம் புல் நிறைய வளர்ந்து பிட்ச் இறுக்கமா இருக்கும். அந்த மாதிரி பிட்ச்ல எல்லாம் ஸ்பின் ஆகுறதுக்கு அவ்வளவா வாய்ப்பு இருக்காது. 


ஸ்பின் பவுலிங்க்ல முக்கியமானது ஃப்ளைட்டிங். அதாவது பால ஏர்ல டைம் குடுக்குறது. இது பேட்ஸ்மேனுக்கு ஒரு தப்பான நம்பிக்கையைக் குடுத்து இறங்கி விளையாடத் தூண்டும். அப்பிடி இறங்கி வர்ற பேட்ஸ்மேன் 50% அந்த பாலை அடிச்சி நொறுக்கினாலும் இன்னொரு 50% மிஸ் பண்ணிடுவார். 


இப்போ நீங்க ஒரு பேட்ஸ்மேன். ஸ்பின்னர் பந்து போட வர்றார். அவரு விரலை சுழட்டுறாரா இல்லை மணிக்கட்டைச் சுழட்டுறாரான்னு பாத்து - பால் ஆஃப் ஸ்பின் ஆகுமா லெக் ஸ்பின் ஆகுமான்னு கணிச்சிருவீங்க. இல்லையா? இப்ப, பவுலர் வர்ரார். விரலை சுழட்டுறாரு. நீங்க ஆஃப் ஸ்பின் ஆகப்போகுதுன்னு நினைக்கிறீங்க. ஆனா பால் லெக் ஸ்பின் ஆனா? இதைத்தான் தூஸ்ரா அப்பிடின்னு சொல்றாங்க. இந்த வித்தையையும் பாகிஸ்தான் காரங்க தான் கண்டுபிடிச்சாங்க. இதுல பெரிய ஆளு சாக்லைன் முஸ்டாக். கீழ இருக்கிற வீடியோ பாருங்க.

முரளிதரனும் தூஸ்ரால பெரிய ஆள்தான். ஆனா அவர் தூஸ்ரா ஒரு காண்ட்ரவர்சியானது அப்பிடிங்கிறதால (துரோ பண்றாருன்னு நெறைய தடவை ஆஸ்திரேலியாக்காரனுக கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்காங்க, பன்னிப்பயலுவ), அவர் வீடியோ குடுக்கலை.


அதே மாதிரி ஒரு லெக் ஸ்பின்னர் லெக் ஸ்பின் ஆக்‌ஷன்ல ஆஃப் ஸ்பின் போட்டா அதுக்குப் பேரு கூக்ளி. இதுக்கு இந்த ஃபேமஸ் வீடியோவை நான் போடலன்னா கிரிக்கெட்டாத்தா என் கண்ணைக் குத்திருவா..


இப்ப புதுசா பரபரப்பா பேசப்படுற கேரம் பால் பத்தியும், இடது கை பந்து வீச்சாளர்களோட ஸ்பின் ஸ்டைல்ஸை அடுத்த பதிவுல பாக்கலாம். இப்போதைக்கு கிரிக்கெட் கடவுளோட சின்ன வயசு வீடியோவைப் போட்டுட்டு ஜகா வாங்கிக்கிறேன்.18 comments:

பித்தனின் வாக்கு said...

Realy good and super news to share, thanks.

கவி அழகன் said...

superb

vasu balaji said...

இம்புட்டு கஷ்டப்பட்டு ஒரு பந்தப் போட்டா ஃப்ளூக்குல ஒரு சுத்து சுத்தி அது சிக்ஸரானா என்னா பால் போட்டாண்டா. லட்டு மாதிரின்னு சவடாலா பேசிட்டு போறமே.அநியாயமா இல்லை:)). டாப் க்ளாஸ் இடுகை.

எல் கே said...

nanaba , shortlegla forward and backward nu rendu iruku, forward shortleg than normala infront of the batsman irupanga. backward koncham backla legsidela varuvagna. similar to leg slip

ராஜ நடராஜன் said...

சும்மா அடிச்சு ஆடுறீங்க!வாழ்த்துக்கள்!

க.பாலாசி said...

விளக்கங்கள் வீடியோக்கள்னு ரொம்ப மெனக்கட்டிருக்கீங்க... அருமையான இடுகை...

Anonymous said...

Great.. I really don't know the meaning of dhosra..and hookly.. Now I understand and will tell to my friends very proudly..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அசலாய் நல்ல வேட்டைதான்

வில்லன் said...

நம்ம "தல" நசரேயன் தான் வேல வெட்டி இல்லாம "கிரிகெட்டு" அது இதுன்னு காச கரி பன்னுராருன்னு ஒரே கம்ப்ளைண்டு?????? அவருக்கு எதாவது நிதி உதவி பண்ணாலாவது பிரயோஜனமா போகும்.... நெறைய டோனமேன்ட்டேல்லாம் வேற நடத்துறாரு... அதபாக்க வெளையாடுறவங்க தங்கமணிகளுக்கு எல்லாம் கட்டாய அழைப்பு வேற....கண்டிப்பா பாத்தே ஆகணும்னு!!!!! எல்லாம் கொடுமையடா சாமி.....

வில்லன் said...

// க.பாலாசி said...


விளக்கங்கள் வீடியோக்கள்னு ரொம்ப மெனக்கட்டிருக்கீங்க... அருமையான இடுகை...//
வேலையத்த நாசுவன் பூனை மைத்த (மயீர்) செரச்சானம்....... அந்த கதையா இருக்கு....

நசரேயன் said...

இன்னும் ஆட்டம் முடியலையா ?

Anonymous said...

super! I always hear these terminologies and never understood them..hopefully I'll learn them from your post.

புலவன் புலிகேசி said...

சிக்ஸர்தான் போங்க

பழமைபேசி said...

//மக்கா, நான் இன்னும் விபரமாப் படிக்கணும்.... முகிலனா கொக்கா?

Unknown said...

@பித்தனின் வாக்கு - நன்றி பித்தன்

@யாதவன் - முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி யாதவன்

@வானம்பாடிகள் - கரெக்டா சொன்னீங்க சார்.

@எல்.கே - மாத்திட்டேன் பாத்தீங்களா எல்.கே?

@ராஜ நடராஜன் - நன்றி நடராஜன்

@க.பாலாசி - நன்றிங்க

@அனானி - தாங்க்ஸ் அனானி. பேர் போட்டு சொல்லியிருந்தா இன்னும் சந்தோசப்பட்டிருப்பேனே?

@சுரேஷ் - குட்டியா இல்லாம கதை மாதிரி எழுதனும்னு முடிவு பண்ணிட்டேன்ல..

@வில்லன் - அப்பிடியா? அப்புறம் எதுக்கு அவர் ஆட்டைக்கு வரல வரலன்னு போட்டுட்டு இருக்காரு?

@வில்லன் - என்னய்யா இது? மொக்கையா எழுதுனாலும் திட்டுறீங்க. கொஞ்சம் டேட்டா கலெக்ட் பண்ணி எழுதுனாலும் திட்டுறீங்க? நீங்க நக்கீரர் பரம்பரையா? :))

@நசரேயன் - இப்பத்தான ஆரம்பிச்சிருக்கோம்?

@அனானி - நன்றி அனானி. முந்தைய அனானிக்கு சொன்னதே உங்களுக்கும்.

@புலவன் புலிகேசி - நன்றி புலிகேசி. அடுத்த டர்ரியல்ல நம்ம அறிமுகப் படுத்திருவீங்க இல்ல?

@பழமை பேசி - நன்றிங்க்ணா..

Prathap Kumar S. said...

வழக்கம்போல டாப்பு...
சச்சின் சின்ன வயசு படம் போட்டு கலக்கீட்டீங்க...

உமர் | Umar said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்

க.பாலாசி said...

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள் தலைவரே...